Health Benefits of Pomegranate Juice~



1)Fights Breast Cancer
Studies in Israel show that pomegranate juice destroys breast cancer cells while leaving healthy cells alone. It may also prevent breastcancer cells from forming.

2) Lung Cancer Prevention
Studies in mice show that pomegranate juice may inhibit the development of lung cancer.

3) Slows Prostate Cancer
It slowed the growth of prostate cancer in mice.

4) Keeps PSA Levels Stable
In a study of 50 men who had undergone treatment for prostate cancer, 8 ounces of pomegranate juice per day kept PSA levels stable, reducing the need for further treatment

5) Protects the Neonatal Brain
Studies show that maternal consumption of pomegranate juice may protect the neonatal brain from damage after injury.

6) Prevention of Osteoarthritis
Several studies indicate that pomegranate juice may prevent cartilage deterioration.

7) Protects the Arteries
It prevents plaque from building up in the arteries and may reverse previous plaque buildup.

8,Alzheimer’s Disease Prevention It may prevent and slow Alzheimer’s disease. In one study, mice bred to develop Alzheimer’s disease were given pomegranate juice. They accumulated significantly less amyloid plaque than control mice andthey performed mental tasks better.

9)Lowers Cholesterol
It lowers LDL (bad cholesterol) and raises HDL (good cholesterol).

10) Lowers Blood Pressure
One study showed that drinking 1.7 ounces of pomegranate juice per day lowered systolic blood pressure by asmuch as 5 percent.

11) Dental Protection
Research suggests that drinking pomegranate juice may be a natural way to prevent dental plaque.

Advertisements

உண்ணவும் பருகவும் இஸ்லாம் சொல்லும் வழிமுறை

அல்லாஹ்வின் பெயரைக் கூறு! உன் வலது கையால் சாப்பிடு! உனக்கு முன்னால் உள்ள பகுதியிலிருந்து சாப்பிடு! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் இன்னு அபூ ஸலமா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ.

நபி (ஸல்) அவர்கள் தட்டை சுத்தமாக்கிக்கொள்ளும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். உங்களின் எந்த உணவில் பரக்கத் உள்ளது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். (எனவே) சுத்தமாக வழித்துச் சாப்பிடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ.
சாப்பிடும் போது கீழே விழும் பொருளை சுத்தம் செய்து உண்ண வேண்டும் என்பதையும், தட்டிலோ, விரல்களிலோ ஒட்டியிருக்கும் உணவை வீணாக்காமல் தட்டை வழித்தும், விரலை சூப்பியும் சுத்தமாகச் சாப்பிட வேண்டும் என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து அறிய முடிகிறது.
சாப்பிட்ட பின்…

நபி (ஸல்) அவர்கள் முன்னாலிருந்த சாப்பாட்டு தட்டு எடுக்கப்படுமானால்… “அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கkரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி ஃகைர முவத்தயின் வலா முஸ்தக்னன் அன்ஹு ரப்புனா” என்று கூறுவார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி.
(துஆவின் பொருள்: தூய்மையான ஏராளமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. இறைவா! நீ உணவின்பால் தேவையுடையவன் அல்ல உன்னை யாரும் விட்டுவிட முடியாது)
ஒரு அடியான் உணவை சாப்பிடும்போது அந்த உணவுக்காக அவனைப் புகழ்வதையும், நீரைப் பருகும்போது அந்த நீருக்காக அவனை புகழ்வதையும் அல்லாஹ் பொருந்திக்கொள்கிறான் என்பதும் நபிமொழி. அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ, நஸயீ.

உணவை குறைகூறக் கூடாது விருந்துக்கு செல்லும்போது குறைகள் இருந்தால் அதை சகித்துக்கொள்ள வேண்டும். அதை வெளிப்படுத்தும்போது விருந்தளித்தவர் மனது கஷ்டப்படலாம்.
பிடிக்காத உணவு வைக்கப்படும் நேரத்தில் அதை உண்ணாமல் ஒதுக்குவது தவறல்ல. நபி (ஸல்) அவர்கள் முன்னே உடும்பு (சமைத்து) வைக்கப்பட்டபோது அதை அவர்கள் சாப்பிடவில்லை. இதைக் கண்ட காலித் இப்னு வலித் (ரலி) இது ஹராமா? என்று கேட்டார்.
அதற்கு நபியவர்கள் “இல்லை” (இது) என் குடும்பத்தில் நான் காணாத உணவாகும். அதனால் என் மனம் விரும்பவில்லை என்று கூறியவுடன், காலித் இப்னு வலித் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் பார்த்துக்கொண்டிருக்க, தன்னருகே அதை இழுத்துக்கொண்டு உண்ண ஆரம்பித்தார்கள். அறிவிப்பவர்: காலித் இப்னு வலீத் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

முஅத்தா. நின்றுகொண்டு நீர் அருந்தக் கூடாது நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு குடிப்பதை தடை செய்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), அபூஸயீத் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத்.
தண்ணீரில் மூச்சுவிடவோ, ஊதவோ கூடாது. குடிக்கும் பாத்திரத்தில் மூச்சுவிடுவதையும் ஊதுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா.
உங்களில் எவரும் இடதுகையால் குடிக்கவோ, சாப்பிடவோ வேண்டாம். ஏனெனில், சைத்தான்தான் இடது கையால் குடிக்கிறான், சாப்பிடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்கள்: முஸ்லிம் முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ.

முஸ்லிமல்லாதவர்களின் பாத்திரங்கள் முஸ்லிமல்லாதவர்களின் வீட்டிற்கு விருந்திற்கு செல்லும் போது அவர்களின் பாத்திரங்களில் உண்ணலாமா? என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்களோடு நாங்கள் போரிலிருந்த சமயம் இணை வைப்போரின் பாத்திரங்கள் கிடைத்தன. அதைத்தான் (உண்பதற்கும், பருகுவதற்கும்) நாங்கள் உபயோகித்தோம். அது விஷயமாக நபி (ஸல்) அவர்களால் நாங்கள் குறை கூறப்படவில்லை. அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) நூல்: அபூதாவூத்.

முஸ்லிமல்லாதவர்களின் பாத்திரங்களில் சாப்பிடுவதும், அதில் சமைப்பதும் நபி (ஸல்) அவர்களால் தடுக்கப்படவில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. என்றாலும் தூய்மையான உணவு சமைக்கப்பட்ட பாத்திரங்களையே சாதாரணமாக பயன்படுத்தலாம்.
பன்றி இறைச்சி போன்றவை சமைக்கப் பயன்படும் பாத்திரங்கள், மது அருந்தப் பயன்படும் குவளைகள் ஆகிய பாத்திரங்களில் உணவு தரப்படுமானால், அதை நன்றாகக் கழுவிய பின் உண்ணலாம், பருகலாம். இதைப் பின்வரும ஹதீஸிலிருந்து விளங்கலாம்.

அபூஸல்பா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் வேதமுடையோரின் அருகில் வசிக்கிறோம். அவர்கள் தங்களின் சமையல் பாத்திரங்களில் பன்றி இறைச்சியை சமைக்கிறார்கள்.
அவர்களின் பாத்திரங்களில் மது அருந்துகிறார்கள் (அந்தப் பாத்திரங்களை நாங்கள் பயன்படுத்தலாமா?) என்று கேட்டார். அவர்களின் பாத்திரங்கள் அல்லாத (வேறு) பாத்திரங்கள் கிடைத்தால் அதில் உண்ணுங்கள், குடியுங்கள். அவர்களிடம் மட்டுமே பெற்றுக்கொண்டால் தண்ணீரால் கழுவிவிட்டு பின்பு உண்ணுங்கள், பருகுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஷலபா (ரலி) நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ.

நபி (ஸல்) அவர்களையும் மற்றும் நால்வரையும் ஒரு மனிதர் விருந்துக்கு அழைத்தார். அவர்களுடன் இன்னொரு மனிதரும் பின்தொடர்ந்து வந்தார். வீட்டுவாசலை நபி (ஸல்) அடைந்ததும், விருந்துக்கு அழைத்தவரிடம், “இவர் எங்களைத் தொடர்ந்து வந்துவிட்டார்.
நீர் விரும்பினால் இவருக்கு அனுமதியளிக்கலாம். நீர் விரும்பாவிட்டால் இவர் திரும்பிச் சென்றுவிடுவார்” என்று கூறினார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே நான் அவருக்கு அனுமதியளிக்கிறேன்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி) நூல்கள்: புகாரி முஸ்லிம்.

சருமத்தைக் காக்க சில சித்த மருந்துகள்!


சித்த மருத்துவம் –

நம்முடைய சருமத்தை மூன்று வகையாக பிரிக்கலாம். சாதாரண சருமம், எண்ணைப் பசை சருமம், வறண்ட சருமம். இதில் சாதாரண சருமம் உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பு இருக்காது. ஆனால் மற்ற இரண்டு சருமம் உள்ளவர்கள் சருமத்தை அதிக பாதுகாப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.  Continue reading

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை

காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள்.

எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது. 
மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய்,  Continue reading

தமிழ்நாடு சாதிகள் பட்டியல்.


தமிழ்நாடு சாதிகள் பட்டியல்.
(தலை சுத்துது’யா சாமி!)

தமிழர் நாம் சாதியாகப் பிரிந்து நின்று கொண்டு அடுத்தவர்களைக் குறை சொல்லுவது அர்த்தமற்றது. ‘ஒன்றே குலம்’ எனத் தமிழர் நாம் தமிழால் ஒன்றுபட வேண்டும். Continue reading

கொழுப்பை குறைக்கும் உணவுகள்:-

திடீரென்று எடை கூடுகிறதா? களைப்பாக இருக்கிறதா? ஜலதோஷம் அடிக்கடி ஏற்படுகிறதா? குறிப்பாக பெண்களுக்கு முடி கொட்டுகிறதா? அப்படி எனில் உங்கள் இரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகரித்து வருகிறது என்று அர்த்தம். உடனடியாக இரத்த பரிசோதனை செய்து கொலஸ்டிரால் அளவைப் பாருங்கள். Continue reading

மூலிகைகளும், தீரும் நோய்களும்


நமது முன்னோர்களெல்லாம் மூலிகைகளை கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்க விளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம். தீராத வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தி மூலிகைக்கு இருக்கிறது. ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாமே! Continue reading

சதுரகிரி மலை


சதுரகிரி மலையில் இருக்கும் அரிய விருட்சங்கள் மற்றும் மூலிகைகளின் பட்டியலை நேற்றைய பதிவில் பார்த்தோம். இனி வரும் நாட்களில் குறிப்பிட்ட சில அரிய மூலிகைகள் மலையின் எந்தப் பகுதியில் இருக்கிறது என்பதையும், அவற்றின் தன்மை மற்றும் மகத்துவத்தினைப் பற்றி பார்ப்போம். Continue reading

கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்?


கறிவேப்பிலையை எண்ணெயுடன் சேர்த்து (Lipophilic) சாப்பிடும்போது அதன் வேதிப்பொருட்கள் முழுமையாக உடலைச் சென்றடையும். கறிவேப்பிலையைத் தாளிதம் செய்யும்போது மிக லேசாக எண்ணெயில் வதக்க வேண்டும். இல்லை எனில் இதில் உள்ள பீட்டா கரோட்டின் ஆவியாகி பலன் இல்லாமல் போய்விடும். Continue reading

பெப்பர் சிக்கன்


பெப்பர் சிக்கன் செய்யும் முறை

தேவையான பொருட்கள்

சிக்கன் – அரைக் கிலோ
மிளகு – ஒரு தேக்கரண்டி
வெங்காயம் – 2
தக்காளி – 3
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
பட்டை – 1
ஏலக்காய் – 2
கிராம்பு – 3
பட்ட மிளகாய் – 2
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி Continue reading