பயனுள்ள சில வைத்திய குறிப்புகள்

இயற்கை முறையில் பயனுள்ள சில வைத்திய குறிப்புகள்

* உணவுக்கு பின்பு தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்.

* துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

* 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கிண்ணம் நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

* காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

* தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

* அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

* கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

* பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.
குலசை.A.சாமி

முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா?

null

பச்சைப் பயறை வாங்கி வந்து அதனை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு ஆறவிடுங்கள். சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும்.

இதனைத்தான் முளை கட்டிய பயறு என்கிறோம். பொதுவாக பயறுக்கும், முளை கட்டிய பயறுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. என்னவென்றால், அதில் உள்ள சத்துக்கள்தான்.எந்த தானியத்தையும் முளை வந்த பிறகு அதனை உண்பது உடலுக்கு அதிக சக்திகளைக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மிக முக்கிய இடம் வகிப்பது பயறுதான்.

100 கிராம் முளை கட்டிய பயறில்,
30 கலோரிகள்
3 கிராம் புரதச்சத்து
6 கிராம் கார்போஹைட்ரேட்
2 கிராம் நார்ச்சத்து உள்ளது.

அதிக உடல் உழைப்பும், உடல் பலமும் தேவைப்படுபவர்கள் இந்த முளை கட்டியப் பயறை உணவில் எடுத்துக் கொள்ளலாம். இது உடலுக்கு குளுமையைக் கொடுப்பதால் கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கும் செய்து கொடுக்கலாம்.
தகவல்:குலசை.ஆ.சாமி

ஆமணக்கு


கை வடிவ மடல்களை மாற்றடுக்கில் கொண்ட வெண் பூச்சுடைய செடி. உள்ளீடற்ற கட்டையினையும் முள்ளுள்ள மூன்று விதைகளைக் கொண்ட வெடிக்கக் கூடிய காய்களையும் உடையது. இதன் விதை கொட்டைமுத்து எனப்பெறும். தமிழகமெங்கும் விளைவிக்கப்படுகிறது. இலை, எண்ணெய் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

இலை வீக்கம் கட்டி ஆகியவற்றைக் கரைக்கக் கூடியது. ஆமணக்கு நெய் மலமிளக்கும், தாது வெப்பு அகற்றும்.

1. இலையை நெய்தடவி அனலில் வாட்டி மார்பகத்தில் வைத்துக் கட்டிவரப் பால் சுரப்பு மிகும்.

2. இலையைப் பொடியாய் அரிந்து ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்துக் கட்டி வர மூலக்கடுப்பு, கீல்வாதம், வாத வீக்கம் ஆகியவை தீரும்.

3. ஆமணக்குத் துளிரை விளக்கெண்ணெயில் வதக்கித் தொப்புளில் வைத்துக் கட்ட வெப்ப வயிற்று வலி தீரும்.

4. ஆமணக்கு இலையுடன் சமனளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து 30 கிராம் காலை மட்டும் மூன்று நாள் கொடுத்து நான்காம் நாள் பேதிக்குச் சாப்பிடக் காமாலை தீரும்.

5. 30 மி.லி. விளக்கெண்ணெயுடன் சிறிது பசும்பால் கலந்தோ இஞ்சிச் சாறு கலந்தோ கொடுக்க நான்கைந்து முறை பேதியாகும். பசியின்மை, வயிற்றுவலி, சிறுநீர்ப்பாதை அழற்சி, வெட்டை, நீர்க்கடுப்பு, மாதவிடாய்க் கோளாறுகள், இரைப்பிருமல், பாண்டு, ஆறாத கட்டிகள், தொண்டை அழற்சி, மூட்டுவலி ஆகியவை தீரும்.

6. கண் வலியின் போதும் கண்ணில் மண், தூசி விழுந்த போதும் ஓரிருதுளி விளக்கெண்ணெய் விட வலி நீங்கும்.

7. தோல் நீக்கிய விதையை மெழுகு போல் அரைத்துப் பற்றுப்போட ஆறாத புண்கள் ஆறும், கட்டிகள் பழுத்து உடையும். மூட்டுவலி, கணுச்சூலை ஆகியவற்றில் தோன்றும் வீக்கம் குறையும்.

8. வேரை அரைத்துப் பற்றுபோட பல்வலி நீங்கும்
தகவல்:குலசை.A.சாமி

அகத்திக் கீரை


அகத்தி (Sesbania grandiflora (L) poiret;papilionoideae), வெற்றிலைக்கொடிகள் படர்வதற்காக தமிழமெங்கும் பரவலாக வளர்க்கப்படும் சிறு மரம்.கீரை,பூ,வேர்,பிஞ்சு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

வாரம் ஒருமுறை கீரை அல்லது பூவை சமைத்து உண்டால் வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம்,மலச்சிக்கல்,டீ,காஃபி சாப்பிடுவதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.

அகத்தி மரப்பட்டை மற்றும் வேர் கொண்டு தயாரிக்கப்படும் குடிநீர் சுரம்,தாகம்,கைகால் எரிச்சல்,மார்பு எரிச்சல்,உள்ளங்கால்,கை எரிச்சல்,நீர்க்கடுப்பு ஆகியவற்றை குணமாக்கும்.

இலைச்சாற்றுடன் நல்லெண்ணெய்,கஸ்தூரி மஞ்சள்,சாம்பிராணி,கிச்சிலிக் கிழங்கு,விளாமிச்சம் வேர் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும் அகத்தித் தைலத்தை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்து வர பித்தம் தணிந்து தலைவலி தீரும்,கண்கள் குளிர்ச்சி பெறும்.

தகவல்:குலசை A.சாமி

ஈரலை பலப்படுத்த…. மணலிக் கீரை


ஈரலை பலப்படுத்த…. மணலிக் கீரை பூண்டு இனத்தைச் சேர்ந்தது. இது தென்னிந்தியா முழுவதும் பரவிக் காணப்படும். மேலும் பஞ்சாப், சிந்து போன்ற இடங்களிலும் பரவிக் கிடக்கிறது.

மணலிக் கீரை சமையலுக்கு உகந்த கீரைகளுள் ஒன்று.

இதனை மணல்கீரை, நாவமல்லிக்கீரை என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

Tamil – Manali Keerai

Malayalam – Manalik kira

Sanskrit – Valuka

Telugu – Isuka dasari kura

Botanical Name – Gisekia pharnaceoides

இதன் இலை தண்டு அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. நம் முன்னோர்களின் மருத்துவக் கீரைகளில் மணலிக் கீரையும் இடம்பெற்றுள்ளது.

வயிற்றுப் பூச்சி நீங்க:

வயிற்றில் கிருமிகள் இருந்தால் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளையும் இவை உறிஞ்சி விடுவதால், உடல் பலவீனமடைந்து காணப்படுவார்கள். பெரும்பாலும் சிறு குழந்தைகள் தான் இந்த வயிற்றுப் பூச்சியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மேலும் வயிற்றுப்புண், குடல்புண், அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்படுவதற்கு இவை காரணமாகின்றன. இந்த வயிற்றுப் பூச்சிகளுக்கு மருந்துகள் சாப்பிட்டாலும் முழுமையாக ஒழிந்துவிடாது. இவை முற்றிலும் அறவே நீக்க மணலிக் கீரையை பாசிப்பருப்பு சேர்த்து கலந்து கூட்டு வைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சி நீங்கும்.

மார்புச்சளி போக்க:

சளியின் அபகாரம் அதிகரித்து அது மார்பு பகுதியில் சேர்ந்து சளி கட்டிக்கொள்வதால் தொடர்ந்து இருமல், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பாகிறது. இந்த மார்புச் சளியை போக்க, மணலிக்கீரையை நன்கு நீர்விட்டு அலசி பின் அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி நீங்கும். அல்லது மணலிக் கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி நீங்கும்.

மலச்சிக்கல் நீங்க:

பொதுவாக கீரைகள் அனைத்துமே மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக மணலிக் கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி வாரம் இருமுறை பாசிப்பருப்பு கலந்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

ஞாபக சக்தியைத் தூண்ட:

ஞாபக மறதி மனிதன் வாழ்வை சீரழிக்கும் நோய். ஞாபக மறதிக்கு பித்த அதிகரிப்பே காரணம். மேலும் மூளைக்கு தேவையான சத்துக்கள் குறைவதால் ஞாபக மறதி உண்டாகும். இக்குறையை நீக்க மணலிக் கீரை மசியல் செய்து சாப்பிடுவது நல்லது.

குடலில் உள்ள தட்டைப் புழுக்கள் நீங்க:

மணலிக் கீரையின் சமூலத்தை நீர்விட்டு அரைத்து 70 கிராம் அளவாக எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் மூன்று நாள் அருந்தி விட்டு மறுபடியும் நான்கு நாள் இடைவெளிவிட்டு மூன்று நாட்கள் அருந்தி வந்தால் குடலில் உள்ள தட்டைப் புழுக்கள் நீங்கும்.

பைத்தியம் மாற:

மூளை பாதிப்புள்ள குழந்தைகளுக்கு மணலிக் கீரையை மசியல் செய்து கொடுத்தால் மூளை நரம்புகள் நன்கு பலம் பெறும். இதனால் பைத்தியம் குணமாக வாய்ப்புண்டு.

ஈரல் பலப்பட:

ஈரல் பாதிக்கப்பட்டாலே உடலின் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும். இரத்தம் சீர்கெடும். கண்பார்வை கோளாறுகள் உண்டாகும். ஈரலைப் பலப்படுத்த மணலிக்கீரை கசாயம் செய்து அருந்தி வரவேண்டும்.

மணலிக் கீரையை குடிநீரில் கொடுக்க மார்புச் சளி, வயிற்றுப்புண் நீங்கும்.

மணலிக்கீரை கிடைக்கும் காலங்களில் வாங்கி உண்டு அதன் முழு மருத்துவப் பயனை பெறுங்கள்.
தகவல்:குலசை.A.சாமி

மூளைக்கு வலுவூட்டும் பலாக்காய்


பலாக்காயை பிஞ்சாகத்தான் சமையலில் பயன்படுத்த வேண்டும். இது குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய காய் ஆகும். சூட்டை அகற்றி பித்தத்தைத் தணிக்கவல்லது.
இந்தக் காய் பலத்தையும் வீரிய புஷ்டியையும் தரும். மூளைக்கு வலுவை தரும். பெண்கள் இதை சாப்பிட்டு வந்தால் பால் நன்றாக சுரக்கும். ஆனால் வாத சிலேட்டுமங்களை வளர்க்கும் தன்மையும், அஜீரணத்தை அதிகப்படுத்தும் தன்மையும் இதனுடைய மைனஸ் பாயிண்டுகள் ஆகும்.

குன்மம், அஜீரணம், பலவீனம் ஆகியவை உள்ளவர் களும், நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சற்றுத் தேறியவர் களும் பலாக்காய் உண்ணக்கூடாது.

பலாக்காயின் தீமையைப் போக்க, காயை நன்றாக வேக வைத்து நீரை வடித்துவிடவும். கடுகும், காரமும் சேர்த்து சமைக்கவும். கூடவே சிறிது புளிப்பும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மிளகாய் வற்றலோ, பச்சை மிளகாயோ சேர்த்துக் கொள்ளல் நலம். இப்படி சமைப்பது பலாக்காயின் தீமைக்கு மாற்றாக அமையும். அதனுடைய தீமைகளை நீக்கி முழு பலனையும் பெறலாம்.
தகவல்:குலசை.A.சாமி

ரத்த ஓட்டத்தை சீராக்கும் மல்பெர்ரி பழம்


மல்பெர்ரி பழம் சுவையுடன் கூடிய சத்து மிகுந்த பழம். மல்பெர்ரி பழங்கள் ஆல்பா மரத்திலிருந்து கிடைக்கிறது. ஊட்டச்சத்துகளை அதிகம் கொண்டிருக்கும் இந்த பழத்தின் இலைகள் பட்டு புழுக்களுக்கு உணவாக பயன்படுகிறது. திராட்சை போன்று காணப்படும் மல்பெர்ரி பழம் பளபளப்பான ஒளி பச்சை நிறத்திலும், சிவப்பு, வெள்ளை நிறத்திலும் இருக்கிறது.

ஆண்டியாக்ஸிடண்ட்ஸ்

மல்பெர்ரி பழங்கள், இலைகள், தண்டுகள் என அனைத்திலும் ஆண்டியாக்ஸிடண்ட்ஸ் சக்தியை மூல ஆதாரமாக கொண்டு செயல்படுகிறது.. குறிப்பாக ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருளான ரெஸ்வெராட்ரலினை அதிக அளவு பெற்றிருக்கிறது. மல்பெர்ரியை ஆராய்ச்சி செய்த பல்கலைக்கழகமான டெக்சாஸ் சுகாதார அறிவியல் மையம் மல்பெர்ரியில் உள்ள ரெஸ்வெராட்ரலின் நோய்யெதிர்ப்பு சக்திக்கு பெரிதும் உதவுகிறது என தெரியபடுத்தி உள்ளனர்.

நோய் எதிர்ப்பு

மல்பெர்ரி பழங்களில் இரத்த விழுங்கணுக்களினுள் செயல்படுத்த பயன்படும் ஆல்கலாய்டுகளை கொண்டிருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோயை தடுக்கும் பழம் என கருதுகின்றனர். ஏனெனில் மல்பெர்ரி பழத்தில் ரெஸ்வெராட்ரலின் ஃபைட்டோநியூண்ட்ரியண்ட்டின் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது.

இரத்த சர்க்கரைக்கு துணைபுரிகிறது.

மல்பெர்ரி பழம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இரத்தஅழுத்தத்தை குறைத்து, இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை சீராக இயக்குகிறது. இரத்தகட்டிகள், பக்கவாதம், போன்றவற்றிக்கு விரோதமாக செயல்பட்டு அவற்றை அழிக்கிறது. உலர்ந்த மல்பெர்ரி பழத்தில் புரதம், வைட்டமின் சி மற்றும் கே, நார்சத்து போன்றவை அதிகமாக உள்ளது. இது உடல்நலத்தை காக்கும் சிறந்த உணவாகும்.
குலசை.A.சாமி

அலர்ஜி அறிகுறிகள்


அலர்ஜி இருப்பவர்களுக்கு சில உணவுகள் ஆகாது. அலர்ஜி தரும் உணவுகளை கண்டுபிடிப்பது எப்படி, அவற்றில் இருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?

அறிகுறிகள்

* உணவை வாயில் வைத்தவுடன் கூசும். முகச்சுளிப்பு கூட ஏற்படும்.

* சாப்பிட்ட பின் நாக்கில் வெடிப்பு ஏற்படலாம், உடலில் அரிப்பு, சிறு கொப்புளங்கள் தோன்றலாம்.

* குரல்வளையில் ஒருவித மாற்றங்களை உணரலாம். வாந்தி ஏற்படும்.

* அடிவயிற்று வலி வரலாம். மூச்சுவிடுவதில் தகராறு, பெருமூச்சு விடுதல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

* சிலருக்கு நினைவு இழப்பும் நிகழ்வதுண்டு.

* சில உணவுகள் சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களில் ஒத்துக்கொள்ளாமல் வேலையைக் காட்ட ஆரம்பித்து விடும். சில உணவுகள் 2 மணி நேரத்திற்குள்ளாக பின்விளைவை உண்டாக்கும்.

* அமெரிக்காவில் 30-ல் ஒருவருக்கு அலர்ஜி இருக்கிறது. பெற்றோருக்கு அலர்ஜி இருந்தால் குழந்தைக்கு அலர்ஜி ஏற்பட 75 சதவீதம் வாய்ப்பு உள்ளது.

* அலர்ஜி ஏற்பட்டால் குடல், சுவாசம், தோல், ரத்தசெல்கள் ஆகியவற்றைப் பாதிக்கும். நோய்த்தடுப்பு மண்டலமும் அலர்ஜியால் பாதிப்புக்குள்ளாகலாம்.

* வேர்க்கடலை, பட்டாணிக்கடலை போன்ற பருப்பு வகைகள்தான் அதிக அலர்ஜியைத் தரக்கூடியவை. இவை இம்யுனோகுளோபின் என்ற ரசாயனத்தைச் சுரந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கச் செய்யும்.

* முட்டை, பால், வேர்க்கடலை, சோயா மொச்சை, கோதுமை, முந்திரிக் கொட்டை, பாதாம்பருப்பு, மீன், நத்தை வகை போன்ற 9 வகை உணவுப் பொருட்கள் 90 சதவீதம் அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளாக நிபுணர்கள் பட்டியலிட்டு உள்ளார்கள். இவற்றில் வேர்க்கடலை, மீன், நத்தை, கொட்டை உணவு வகைகளில் அலர்ஜி ஏற்பட்டால் அது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும். மற்ற உணவுகள் தற்காலிகமாக ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

தடுப்பது எப்படி?

* அலர்ஜியை தடுக்க சிறந்த வழி, அறிகுறிகளை அறிந்துகொண்டு அந்த வகை உணவுகளை உறுதியாகத் தவிர்த்து விடுவதுதான்.

* வெளியில் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் புதிய உணவு வகைகளை சாப்பிட வேண்டாம். வறுக்கப்பட்ட உணவுகள், வேகவைக்காமல் மேற்புறம் மாவு சேர்க்கப்பட்ட உணவுகள், சுவையை அதிகப்படுத்தப் பயன்படும் சூப், குழம்புகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். சாப்பிட்டபின் பழவகைகளை உண்ண வேண்டாம்.

* அலர்ஜி உடையவர்களுக்காக தனியாகத் தயாரிக்கப்படும் அலர்ஜியற்ற உணவு, உணவுப் பொருட்களை உண்ணலாம்.

* நண்பர்கள், விருந்தினர் வீடுகளில் விருந்தோம்பல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் உங்களுக்கான உணவில் தவிர்க்க வேண்டியவை பற்றி கூறிவிடுங்கள். நீங்களாகவே தயார் செய்து எடுத்துச் சென்ற குழம்பை பயன்படுத்துவதும் சிறந்த வழிமுறை தான்.

* பாலிதீன் பேப்பர் மற்றும் பிராணிகளின் ரோமம், தோலால் செய்யப்பட்ட பைகளில் உணவை பொட்டலம் கட்டிப் பயன்படுத்தக்கூடாது. அது ரசாயன மாற்றம் அடைந்து அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

டிப்ஸ்:பூச்சிகளிடமிருந்து விடுதலை

1

எங்கே பார்த்தாலும் பூச்சிகள் கூட்டமா? ஒரு வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி, அறையின் ஒரு ஓரத்தில் வைத்து விடுங்கள். பூச்சிகள் காணாமல் போகும்.
கொசுவர்த்தி, மேட் என எதற்குமே அஞ்சாமல் கொசுக்களின் ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறக்கிறதா? மண்ணெண்ணெய் அல்லது பேகானில் அகர்பத்திகளை நனைத்து ஏற்றி வைத்தால் பிரச்சினை தீரும்.
சர்க்கரை டப்பாவினுள் இரண்டு, மூன்று கிராம்புகளைப் போட்டு வையுங்கள். எறும்புகள் அண்டாது.
ரவையை மெல்லிய துணியில் கொட்டிப் பரப்பி, அரை மணி நேரம் கழித்து சலித்து எடுங்கள். புழுக்கள் எல்லாம் துணியோடு ஒட்டிக் கொண்டு போய் விடும்.
காய்ந்த புதினா இலைகளை அரிசிக்குள் போட்டு வைக்க, பூச்சிகள் வராது. சாதமும் வாசனையாக இருக்கும்.
பருப்பு வைத்துள்ள டப்பாவில் சிறிய துண்டு பெருங்காயம் போட்டு வைக்க, வண்டு வராது.
காய்கறிகளை நறுக்கிப் போடும் தண்ணீரில் சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு வைக்க, பூச்சி, புழு இருந்தால் மேலே மிதந்து வந்து விடும்.

பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்க..

1.

பெண்கள் எப்பொழுதும் தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நேரம் ஒதுக்குவதேயில்லை. குடும்பம், உறவுகள் போன்றவற்றை பாதுகாப்பதிலேயே அவர்களின் நேரம் கரைந்து விடுகிறது. குடும்பத்தை கவனிக்கக் கூடாது என்று கூற வரவில்லை. தங்களுக்காகவும் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.

* கண்டிப்பாக காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. இரவு உணவுக்கும் காலை உணவிற்கும் இடையில் 12 மணிநேர இடைவெளி இருக்கிறது. சாப்பிடாமல் இருப்பது உடலுக்கும் மனதிற்கும் சோர்வைத் தரும். சாப்பிட நேரம் இல்லையென்றால் குறைந்தபட்சம் பாதாம் போன்ற பருப்புகளையும், வாழைப்பழத்தையுமாவது சாப்பிட வேண்டும்.

* வயிறு மற்றும் இடுப்புச் சதையைக் குறைக்க முயற்சிப்பது நல்லது. கை, கால் போன்ற பகுதிகளில் இருக்கும் கொழுப்புகள் நம் உடம்பில் சரியான இரத்த சர்க்கரை இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றன. மாறாக வயிறு மற்றும் இடுப்புப்பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பானது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்.

சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது என்பதற்காக சாப்பிடாமல், பசித்தால் மட்டுமே சாப்பிடுவது என்ற பழக்கத்தை கடைபிடிப்பது நல்லது. வறுப்பது, பொரிப்பது போன்றவற்றை விட்டுவிட்டு, வேக வைத்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது நல்ல பலனைக் கொடுக்கும்.

* அதிகப்படியாக ஈஸ்ட் சேர்த்த உணவுகளை சாப்பிடுவது நல்லதல்ல. இவற்றை அதிகமாக சாப்பிடுவதால் உற்சாகமின்மை ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உற்சாகமும் மகிழ்ச்சியும் நம்மிடமே இருக்க வேண்டுமென்றால் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள், வினிகர் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

* மெனோபாஸ் காலத்தை நெருங்கும்போது முகத்தில் வெயிலினால் ஏற்படும் தாக்குதல்கள் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் ஈஸ்ட்ரோஜனும் நம்முடைய உதவிக்கு வராது. அதனால் கண்டிப்பாக சூரிய ஒளிக்கதிர்களிலிருந்து பாதுகாக்கும் க்ரீம்களைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

* இந்தியாவில் உள்ள பெண்களில் பெரும்பாலானவர்கள் இரும்புச் சத்து குறைபாடு உடையவர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் தினமும் கீரை, உலர்ந்த திராட்சை, வெல்லம் போன்றவற்றை சாப்பிடுவதால் இந்த குறைபாட்டை நீக்க முடியும், அல்லது இரும்புச் சத்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.

* ஹை ஹீல்ஸ் செருப்புகளை தொடர்ந்து உபயோகிப்பது முதுகு வலி, முட்டி வலி போன்ற பிரச்சினைகளைக் கொடுக்கும். வாரத்தில் இரண்டு நாட்களாவது கோலாப்பூரி செருப்புகள் போன்ற தட்டையான அடிப்பாகத்தைக் கொண்ட செருப்புகளை உபயோகிப்பது கால்கள் மூச்சுவிடுவதற்கு வழிவகுக்கும்.

* தினசரி வாழ்க்கையில் சுலபமான யோகாசனங்களை நடைமுறைப்படுத்தலாம். கீழே விழுந்த பொருட்களை எடுப்பதற்கு முதுகை வளைத்து நன்றாக குனிந்து எடுக்கலாம். உட்காரும்போது நன்றாக சம்மணமிட்டு உட்காரலாம். ஐம்பதுகளில் இருந்தாலும் இதைச் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

* அதிகப்படியான புரதச்சத்து புற்றுநோயை உண்டாக்கும். புரதச்சத்தானது நம்முடைய உணவில் 20 சதவீதத்திற்கு மேல் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் இந்தியர்கள், குறிப்பாக சைவ பிரியர்கள் இந்த 20 சதவீதத்தைக்கூட முழுமையாக சாப்பிடுவதில்லை. இதனால்தான் நம்முடைய உணவு நிபுணர்கள் அதிகப்படியான புரத சத்துள்ள உணவை சாப்பிட வலியுறுத்துகின்றனர்.

* பெண்களில் 80 சதவீதத்தினர் சரியான அளவிலான உள்ளாடைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தவறான அளவிலான உள்ளாடைகளை உபயோகிப்பதால் மார்பு பகுதியில் கட்டிகள், வலி போன்றவை ஏற்படும். மேலும் முதுகுவலி, தோள்வலி, சோர்வு, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவையும் ஏற்படும். அதனால் சிரமம் பார்க்காமல் சரியான அளவு உள்ளாடையை தேர்ந்தெடுத்து அணிவது நல்லது.

* பெண்களுக்கு சோயா மிகவும் நல்லது. அதிகப்படியாக அருந்தப்படும் பசும்பால், எருமைப்பால் போன்றவை கொழுப்புச்சத்தை அதிகரித்துவிடும். இதற்கு பதிலாக சோயா பாலிலிருந்து கிடைக்கும் கால்சியம் மிகவும் நல்லது. மேலும் சோயாவில் புரதச்சத்து உள்ளது. இதை உட்கொண்டால் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவும் அதிகரிக்கும்.

மூட்டுவலிக்குரிய மருத்துவக் குறிப்புக்கள்:-

1
ஒருவருக்கு முதுமை வந்துவிட்டால் அங்கே மூட்டு வலியும் சேர்ந்து ஆரம்பித்த விடுகின்றது.

இது உடம்பில் இடுப்புமூட்டு, கால்மூட்டு, தோள்பட்டை, கழுத்துப் போன்ற பகுதிகளில் இந்த வலியை உணர முடியும்.

இந்த மூட்டு வலிக்கு முதன்மைக் காரணமாக முதுமை இருந்தாலும் உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது, அதிக குளிர்ச்சி மற்றும் வெப்பநிலை, அதிக நேரம் நடத்தல் அல்லது அதிக நிறை கொண்ட பொருட்களைபத் தூக்குதல், அதிகமாக உடற்பயிற்ச்சி செய்தல், அல்லது எந்தவித உடற்பயிற்சியும் செய்யாமல் இருப்பது நீண்ட நாட்களாக உடல் நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பது, எலும்பு மூட்டுக்களில் ரத்தம் உறைந்து போய் காணப்படுவது ஆகியவையும் பிற காரணங்களாக அமைகின்றன.

மருத்துவக் குறிப்புக்கள்.

கரட், பீட்ரூட் ஆகியவற்றை பச்சையாக உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

காய்கறிச் சூப் அசைவ சூப் அடிக்கடி சாப்பிடுங்கள்.

எந்த வாழைப்பழமாக இருந்தாலும் அதை தினமும் சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.

கல்சியம் அதிகம் உள்ள பால் சார்ந்த பொருட்கள் மற்றும் மீன் உணவை அடிக்கடி எடுத்துக் கொள்ளங்கள்.

நடைப்பயிற்சி அவசியமான ஒன்றுதான் ஆனால் அது அளவோடுதான் இருக்க வேண்டும். அதேபோல் அளவான உடற்பயிற்சி செய்வதும் நன்மை தரும்.

காரம் நிறைந்த எண்ணெய்யில் வறுத்த உணவுகள், போப்பி, பால் சாப்பிடுவதை முடிந்தளவு தவிருங்கள்.

உடல் நலத்தைக் காக்க அக்கறை எடுப்பது போல உங்கள் மனதையும் சுகமாய் வைத்திருக்க முயன்றிடுங்கள்.

அதாவது, மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். தேவையில்லாமல் டென்ஷன் ஆகவேண்டாம்.

இவற்றை பின்பற்றிக் கொண்டு வந்தால் உங்களுக்கு வர எட்டிப்பார்க்கும் மூட்டுவலி தானாக மறைந்துவிடும்

முகப்பரு தழும்புகளைப் போக்க இயற்கை வழிகள்!

1

முகப்பரு வருவது இயற்கை, அதனால் ஏற்படும் தழும்புகளும் இயற்கை. அது என்னதான் மேக்-அப் போட்டாலும் போகாத தழும்புகள் என்பது ஏறக்குறைய மருத்துவ உண்மை! ஆனால் சில இயற்கை வழிமுறைகள் உள்ளன.

வெந்தயம்! முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகளை ஒழித்துக் கட்ட சிறந்த மருந்தாகும். வெந்தயத்தை அரைத்து பேஸ்டாக தயாரித்து முகத்தில் மாஸ்க் போல நீவி தடவவேண்டும்.

அல்லது மெந்தய விதைகளை நன்றாக கொதிக்கவிட்டு, பிறகு அரைத்து கூலான இடத்தில் வைக்கவும். இதனை தழும்புகள் மீது தடவி 15 அல்லது 20 நிமிடம் உலர விடவும். பிறகு ஜில் தண்ணீரில் முகத்தை அலம்பவும்.

எலுமிச்சை சாறை எடுத்துக்கொள்ளவும், பஞ்சை அதில் நனைத்து பருக்கள் தழும்புகள் மீது தடவவும். சிறிது நேரம் கழித்து மிதமான கொதிநீரில் முகத்தை அலம்பவும். எலுமிச்சை கரும்புள்ளிகளை போக்கவும் சிறந்த மருந்தாகும்.

சந்தனம் மற்றும் பன்னீரைக் கலந்து பேஸ்ட் போன்று செய்து முகத்தில் மாஸ்க்காக தடவிக்கொள்ளலாம். ஒரு மணிநேரம் கழித்து பிறகு அலம்பவும்.

ஆலிவ் எண்ணெயை ரெகுலராக முகத்தில் தடவி வந்தால் ஏற்கனவே உள்ள பருத் தழும்புகள் மறைவதோடு பருக்கள் உருவக்கத்தையே தடுத்தாலும் தடுத்து விடும்.

வெள்ளரிப்பிஞ்சு முகத்தை மென்மையாக வைக்க உதவும் மற்றொரு இயற்கைப் பொருளாகும். இதனையும் ரெகுலராக பயன்படுத்தலாம்.

க‌ண்‌ணீரு‌ம் ‌கிரு‌மி நா‌சி‌னிதா‌ன்

1
பொதுவாக நமது உட‌ல் உறு‌ப்புகளை பல வ‌ழிக‌ளி‌ல் நா‌ம் சு‌த்த‌ம் செ‌ய்‌கிறோ‌ம். கு‌ளி‌ப்பதா‌ல் உட‌ல் சு‌த்த‌ப்படு‌கிறது. ஆனா‌ல் க‌ண்களை சு‌த்த‌ம் செ‌ய்வது எது த‌ெ‌ரியுமா? நமது க‌ண்‌ணீ‌ர்தா‌ன்.

ந‌ம்முடைய க‌ண்க‌ள் எ‌ப்போது‌ம் ஈர‌ப்பதமாகவே இரு‌க்கு‌ம் வகை‌யி‌ல், க‌ண்க‌ளி‌ன் மே‌ற்பர‌ப்‌பி‌ல் ‌நீர் சுர‌ப்‌பிக‌ள் உ‌ள்ளன. இ‌ந்த சுர‌ப்‌பிக‌ளி‌ல் இரு‌ந்து வெ‌ளியேறு‌ம் ‌நீ‌ர், நா‌ம் க‌ண்களை இமை‌க்கு‌ம் போது க‌ண்களை ஈரமா‌க்‌கு‌கி‌ன்றன.

அதே சமய‌ம், அ‌திகமான து‌க்க‌ம், இ‌ன்ப‌ம் போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு நா‌ம் ஆளாகு‌ம் போது இ‌ந்த சுர‌ப்‌பிக‌ள் பா‌தி‌ப்பு‌க்கு உ‌ள்ளா‌கி‌ன்றன. இத‌ன் காரணமாக, வழ‌க்க‌த்தை ‌விட அ‌திகமாக ‌நீ‌ர் உ‌ற்ப‌த்‌தியா‌கிறது. அதுதா‌ன் க‌ண்‌ணீராகு‌ம்.

ஆனா‌ல், இ‌ந்த க‌ண்‌ணீ‌ர் அ‌வ்வளவு சாதாரணமான ஒரு ‌விஷயம‌ல்ல. க‌ண்‌ணீ‌ரி‌ல் ‌கிரு‌மி நா‌சி‌னிக‌ள் உ‌ள்ளன. இவைதா‌ன் க‌ண்களை எ‌ப்போது‌ம் தூ‌ய்மையாக வை‌த்து‌க் கொ‌ள்ள உதவு‌கி‌ன்றன.

அதுபோல, காய‌ம்ப‌ட்ட கு‌ழ‌ந்தை‌யி‌ல் ‌அழு‌ம் குழ‌ந்தை‌க்கு காய‌ம் எ‌ளி‌தி‌ல் ஆறு‌ம் ‌விநோதமு‌ம் ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

அ‌திக சூடாக டீ குடி‌ப்பதை‌த் த‌விரு‌ங்க‌ள்

2

சில பான‌ங்களை சூடாக‌க் குடி‌த்தா‌‌ல்தா‌ன் குடி‌த்த மா‌தி‌ரி இரு‌க்கு‌ம். ஆனா‌ல் பலரு‌ம் அ‌திக சூடாக தே‌நீ‌ர் குடி‌ப்பா‌ர்க‌ள். அ‌ப்படி‌க் குடி‌ப்பது பல ‌பிர‌ச்‌சினைகளை ஏ‌ற்படு‌த்து‌ம் எ‌ன்‌கிறது ‌சில ஆ‌ய்வுக‌ள்.

‌மிகவு‌ம் சூடாக டீ குடி‌ப்பதா‌ல் உணவு‌க் குழா‌ய் ‌பு‌ற்றுநோ‌ய் வரு‌ம் ஆப‌த்து அ‌திகமாக இரு‌க்‌கிறது எ‌ன்று இ‌ந்‌திய மரு‌த்துவ ‌நிபுண‌ர்க‌ள் மே‌ற்கொ‌ண்ட ஆ‌ய்‌வி‌ல் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வா‌ய் முத‌ல் இரை‌ப்பை வரை உ‌ள்ள உணவு‌க் குழா‌ய் ‌மிகவு‌ம் ‌மிருதுவானது. கு‌றி‌ப்‌பி‌ட்ட அள‌வி‌ல்தா‌ன் சூ‌ட்டை அது தா‌ங்க‌க் கூடியதாக உ‌ள்ளது. சூடு அ‌திகமானா‌ல் அத‌ன் சுவ‌ர் அ‌ரி‌க்க‌த் துவ‌ங்‌கி‌விடு‌ம்.

அ‌திகமான சூ‌ட்டுட‌ன் டீ குடி‌க்கு‌ம் போது உணவு‌க் குழா‌ய் சுவ‌ர்க‌ள் வெகுவாக பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு ‌திசு‌க்க‌ள் பல‌வீன‌ம் அடை‌கிறது.

இதனா‌ல் சுவ‌ர்‌ப்பகு‌தி‌யி‌ல் உணவு‌க்குழா‌ய் பு‌ற்றுநோ‌ய் க‌ட்டி ஏற‌ப்டு‌ம் ஆப‌த்து ஏ‌ற்படு‌ம் எ‌ன்று ஆ‌ய்‌வி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த ஆப‌த்து சூடாக டீ‌ குடி‌ப்பவ‌ர்களு‌க்கு ம‌ட்டுமே, கா‌பி போ‌ன்றவை குடி‌ப்பவ‌ர்களு‌க்கு அ‌ல்ல எ‌ன்‌கிறது ஆ‌ய்வு.

நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு மரு‌ந்துகளை குறை‌க்கவு‌ம்

1
அ‌ந்த மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ன்றா‌ல் உடனடியாக நோ‌ய் குணமா‌கி‌விடு‌ம் எ‌ன்று கூற‌ப்படு‌ம் மரு‌த்துவ‌ர்க‌‌ளிட‌ம் செ‌ன்றா‌ல், அவ‌ர்க‌ள் கொடு‌க்கு‌ம் முத‌ல் மரு‌ந்து நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌‌த்து மரு‌ந்தாக‌த்தா‌ன் இரு‌க்கு‌ம்.

எ‌ந்த நோயு‌ம் உடலு‌க்கு‌ள் வர ‌விடாம‌ல் செ‌ய்யு‌ம் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு‌ச் ச‌க்‌தி ஒ‌வ்வொரு உட‌லி‌லு‌ம் உ‌ள்ளது. அ‌ப்படியே வ‌ந்தாலு‌ம், அதனை எ‌தி‌ர்‌த்து ‌விர‌ட்டு‌ம் ஆ‌ற்றலு‌ம் உ‌ண்டு.

‌இ‌ந்த ச‌க்‌தி உடலு‌க்கு உட‌ல் மாறுபடு‌ம். ஒரு ‌சிலரு‌க்கு நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி குறைவாக இரு‌ப்‌பி‌‌ன் அவ‌ர்களு‌க்கு ஆ‌ன்டி பயாடி‌க் என‌ப்படு‌ம் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி மரு‌ந்துக‌ள் தேவை‌ப்படு‌ம்.

எ‌னினு‌ம், அடி‌க்கடி நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி மரு‌ந்துகளை சா‌ப்‌பிடுவது நமது உட‌லி‌ன் இய‌ல்பு‌த் த‌ன்மையையே பா‌தி‌த்து‌விடு‌ம்.

நோ‌ய் உடனடியாக குணமா‌கி‌வி‌ட்டா‌ல் போது‌ம் எ‌ன்று நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி மரு‌ந்துகளை வா‌ங்‌கி சா‌ப்‌பிடுவது‌ம் தவறாகு‌ம். எனவே நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி மரு‌ந்துகளை குறை‌ப்பது ந‌ல்லது.