வெள்ளாடு வளர்ப்பு-1

சுய தொழில்கள் பற்றிய பதிவுகள் ஆரம்பித்த நாளிலிருந்து அனேக நண்பர்கள் ஆடு வளர்ப்பு பற்றி பதிவு போடும்படி மிகவும் ஆவலுடன் கேட்ட வண்ணமிருந்தனர். அவர்களுக்காக இதோ வெள்ளாடு வளர்ப்பு பற்றியப் பதிவு.
நாட்டுக்கோழிக் கறி, ஆட்டுக் கறி இவையிரண்டுக்குமான கிராக்கி என்றும் குறைவதேயில்லை. மளமளவென்று ஏறி வரும் இவற்றின் விலை, அப்படியிருந்தும் சந்தையில் இவற்றுக்கான தட்டுப்பாடு ஆகியவையே இவற்றின் தேவைக்கான சாட்சி. அந்த வகையில் விவசாயிகளுக்கு அதிகளவில் கைகொடுத்து வருவது ஆடு வளர்ப்புதான்.கொஞ்சம் சிரமமான தொழில் என்றாலும் செல்வம் கொழிக்கும் தொழில் இது. சொந்த இடம், கால்நடைத் தீவனம் உற்பத்தி செய்ய வசதி வாய்ப்புகள் உள்ளவர்களுக்கு ஏற்ற தொழில் இது. நன்கு திட்டமிடல், நோய் தடுப்பு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தினால் இது ஒரு லாபகரமான தொழில் தான்.

வெள்ளாடு வளர்ப்பு

வெள்ளாடு “ஏழைகளின் பசு” என்று அழைக்கப்படுகிறது. இது மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத் தொகுப்பின் முக்கிய அங்கம் ஆகும். மேட்டுப்பாங்கான, நிலங்களில் பசுக்களையும், எருமைகளையும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு ஆடுவளர்ப்பு உகந்தது. ஆடு வளர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொண்டு நல்ல லாபம் பெறலாம்.

யார் தொடங்கலாம்?

 • நிலமற்ற மற்றும் குறுநில விவசாயிகள்.
 • மானாவரி மேய்ச்சல் நிலங்கள் உள்ள இடங்கள்

நன்மைகள்

 • ஆடு வளர்ப்பு அனைத்துச் சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப் பராமரிப்பு தேவையில்லை. சிறிய இடம் மற்றும் எளிய கொட்டகை போதுமானது.
 • குறைந்த முதலீடு மற்றும் உடனடி வருவாய்
 • வெள்ளாட்டிலிருந்து பால் மற்றும் கறி ஆகிய இரண்டிலிருந்தும் வருமானம் கிடைக்கிறது.
 • ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கின்றது. அனைத்து விதமான மக்களும் உண்ணக் கூடிய இறைச்சி.
 • அதிகமான குட்டிகளை ஈனும் விகிதம். ஒவ்வொரு முறையும் சராசரியாக 2-3 குட்டிகளை ஈனுகிறது
 • நல்ல எரு கிடைக்கிறது.
 • வருடம்முழுவதும்வேலை

வெள்ளாட்டு இனங்கள்

சிறந்த இந்திய இனங்கள்

ஜம்நாபாரி – எட்டாவா மாநிலம், உ.பி

பீட்டல் – பஞ்சாப்

பார்பரி – உ.பி.யின் மதுரா மற்றும் ஆக்ரா பகுதிகள்

தெல்லிச்சேரி மற்றும் மலபாரி – வடகேரளா

சுர்தி – குஜராத்

காஷ்மீரி – ஜம்மு காஷ்மீர்

வங்காள ஆடு – மேற்கு வங்காளம்

இந்திய சூழலுக்கு ஏற்ற அயல்நாட்டு இனங்கள்

அங்கோரா, ஆல்பைன், சேனன், டோகன் பர்க், ஆங்ளோ நுபியன்

வெள்ளாடு இனங்களை தேர்வு செய்தல்
ஜமுனாபாரி.
 • நல்ல உயரமானவை
 • காதுகள் மிக நீளமனவை
 • ரொமானிய மூக்கமைப்பு கொண்டவை.
 • கிடா 65-85  கிலோ பெட்டை – 45-60 கிலோ.
 • பெரும்பாலான ஆடுகள் ஒரு குட்டியே மட்டும் ஈனும்
 • 6 மாத குட்டிகளின் எடை 15 கிலோ.
 • தினம் 2- 2.5 லிட்டர் பால் கொடுக்கும் திறன்
தலைச்சேரி / மலபாரி

 • வெள்ளை , பழுப்பு மற்றும் கருப்பு நிறங்கள்
 • 2-3 குட்டிகளை போடும் திறன்
 • கிடா – 40-50 கிலோ பெட்டை – 30 கிலோ.
போயர்

 • இறைச்சிக்காக உலகம் முழுவதும் வளர்க்கப்படுகிறது.
 • வேகமான வளர்ச்சி திறன் கொண்டவை.
 • கிடா – 110-135 கிலோ பெட்டை – 90-100 கிலோ.
 • குட்டிகள் 90 நாட்களில் 20-30 கிலோ இருக்கும்
வெள்ளாடுகளை தேர்வு செய்தல்
பெட்டை ஆடுகள்

 • 2-3 குட்டிகள் ஈனும் திறன்
 • 6-9 மாதங்களில் பருவமடையும் தன்மை

கிடாக்கள்

 • தோற்றத்தில் உயரமாகவும், நெஞ்சு பாகம் அகன்றதாகவும், உடல் பாகம் நீண்டதாகவும் இருக்கவேண்டும்
 • 9-12 மாதங்களில் பருவமடையும் தன்மை
 • நல்ல எடையுள்ள குட்டிகளை 6 மாத வயதில் தேர்வு செய்யவேண்டும்
 • 2-3 குட்டிகளை ஈனும் பெட்டையாட்டிலிருந்து
தீவனப் பாரமரிப்பு
 • வெள்ளாடு மேய்ச்சல் மற்றும் அடர்தீவனம் கொண்டு பராமரித்தால் அதிக பட்சம் வளர்ச்சி கிடைக்கும்.
 • கொளுக்கட்டை புல் , ஸ்டைலோ மற்றும் கோ ரகத் தீவன பயிர்களை அளிக்கலாம்.
 • தீவன மர இலைகளான அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா போன்றவற்றை வயல் ஓரங்களில் வளர்த்து அளிக்கலாம்.
 • ஒரு ஏக்கரில் வளரும் தீவன மரம் மற்றும் தீவனப் பயிர்களை கொண்டு 15-30 ஆடுகள் வரை வளர்க்கலாம்.
 • அடர் தீவனம் கீழ்கண்டவாறு தயாரிக்கலாம்.
 
குட்டி தீவனம்
வளரும் ஆட்டு தீவனம்
பால் கொடுக்கும் ஆட்டு தீவனம்
சினை ஆட்டு தீவனம்
மக்காசோளம்
37
15
52
35
பருப்பு வகைகள்
15
37
புண்ணாக்கு
25
10
8
20
கோதுமை தவிடு
20
35
37
42
தாது உப்பு
2.5
2
2
2
உப்பு
0.5
1
1
1
மொத்தம்
100
100
100
100
 • குட்டிகளுக்கு தினம் 50-100 கிராம் வரை அடர் தீவனம் 10 வாரங்களுக்கு அளிக்க வேண்டும்
 • வளரும் ஆடுகளுக்கு தினம் 100-150 கிராம் வரை அடர் தீவனம் 3-10 மாதங்களுக்கு கொடுக்க வேண்டும்
 • சினை ஆடுகளுக்கு தினம் 200 கிராம் அடர்தீவனம் கொடுக்க வேண்டும்
 • தினம் ஒரு கிலோ பால் கொடுக்கும் ஆடுகளுக்கு 300 கிராம் வரை அடர்தீவனம் கொடுக்கலாம்.
 • அதிகம் தாமிர சத்து உள்ள வெள்ளாடுகளுக்கான தாது உப்பு கட்டிகள் கொட்டிலில் தொங்கவிட வேண்டும்
இனபெருக்கப் பாரமரிப்பு.
 • இலாபகரமாக இருக்க ஆடுகள் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈன வேண்டும்
 • வேகமாக வளரும் தன்மை மற்றும் அதிக எடை கொண்ட ஆடுகளை இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்
 • பெட்டை ஆடுகளை 1 வருட வயதில் இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்
 • குட்டி போட்ட 3 மாதத்திற்கு பிறகு இனச்சேர்க்கை செய்யவேண்டும். அப்போது தான் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈனும்
 • சினை பருவ காலம் 18-21 நாட்கள் இடைவெளியில் வரும். அது 24-72 மணி காலம் நீடிக்கும்.
 • சினை பருவ காலத்தில் பெட்டை ஆடுகள் வலி இருக்க மாதிரி ஓங்கி கத்தும். மேலும் வாலை ஆட்டி கொண்டிருக்கும். இனப்பெருக்க உறுப்புகள் சிறிது வீங்கியும் சிவந்தும் காணப்படும். இனப்பெருக்க உறுப்பிலிருந்து திரவம் ஒழுகவதால் வாலை சுற்றி ஈரமாகவும் அழுக்காகவும் காணப்படும்.சில ஆடுகள் தீனி திங்காமலும் சிறுநீர் அடிக்கடி கழித்து கொண்டு இருக்கும். சில சமயங்களில் மற்ற ஆடுகள் மீது ஏறும் அல்லது ஏற அனுமதிக்கும்
 • சினை பருவ அறிகுறிகள் தென்பட்ட 12-18 மணி நேரத்தில் கிடாவுடன் சேர்க்கவேண்டும்.
 • சில ஆடுகளில் சினைபருவ காலம் 2-3 நாட்கள் இருக்கும் எனவே அவற்றை இரண்டாவது தடவையாக 1 நாட்கள் கழித்து மீண்டும் கிடாவுடன் சேர்க்கவேண்டும்
 • சினை காலம் 145-150 நாட்கள்.
குடற் புழு நீக்கம்
 • ஒல்லியான மற்றும் பொலிவற்ற தோற்ற கொண்ட ஆடுகளில் குடற் புழு தாக்கம் இருக்கும். எனவே அந்த ஆடுகளை இனபெருக்கத்திற்கு முன் குடற் புழு நீக்கம் செய்யவேண்டும்.
 • சினை ஆடுகளை முதல் 2 மாத சினையில் குடற்புழு நீக்க செய்தால் கரு சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு.
 • சினை ஆடுகளை குட்டி போடுவதற்கு 2-3 வாரத்திற்கு முன் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
 • குட்டிகள் பிறந்த 30 நாட்களிலும் பிறகு 60 நாளிலும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்
 • கொட்டகை பாரமரிப்பு
 • 1.ஆழ்கூள முறை
 • தரையில் 6 செ.மீ. உயரத்திற்கு கடலைப்பொட்டு, மரத்தூள் மற்றும் நெல் உமி ஆகியவற்றை இட்டு வளர்க்கலாம்.
 • இரண்டு வாரத்திற்கு ஒரு முறை புது கூளம் போடவேண்டும்.
 • இம்முறையில் உண்ணி மற்றும் பேன் தாக்கம் இல்லாமல் கவனித்துக் கொள்ளவேண்டும்
 • ஆடு ஒன்றுக்கு 15 சதுர அடி இடம் தேவைப்படும்

2.உயர் மட்ட தரை முறை

 • தரையிலிருந்து 3-4 அடி உயரத்தில் மர பலகை அல்லது கம்பி வலைகளை கொண்டு அமைக்கலாம்
 • ஒட்டுண்ணி தொல்லைகள் மிகவும் குறைவாக இருக்கும்

    

வளர்ப்பு முறைகள்

1.மேய்ச்சலுடன் கூடிய கொட்டகை முறை.

 • மேய்ச்சல் நிலங்கள் குறைவாக உள்ள இடங்களில் மேய்ச்சலுக்கு பிறகு கொட்டகையில் வைத்து பசுந்தீவனங்களையும், அடர் தீவனைத்தையும் அளிக்கலாம்.

2.கொட்டகை முறை.

 • வெள்ளாடுகளை நாள் முழுவதும் கொட்டகைக்கு உள்ளேயே அடைத்து தீவனம் அளித்து வளர்க்கப்படுகிறது.
 • கொட்டகையை ஆழ்கூளம் அல்லது உயர் மட்ட தரை முறையினால் அமைக்கலாம்
வெள்ளாடு காப்பீடு திட்டம்
 • நான்கு மாதம் வயது முதல் வெள்ளாடுகளை பொது காப்பீடு நிறுவனங்கள் மூலம் காப்பீடு செய்யலாம்.
 • விபத்து மற்றும் நோயினால் இறந்தால் காப்பீடு தொகையை கோரலாம்.

பணம்கொட்டும்ஜமுனாபாரிஆடுவளர்ப்பு

ஆட்டின்விலைரூ.50 ஆயிரம்

பாலமேடு: பணம்கொட்டும்ஜமுனாபாரிஆடுவளர்ப்பில்மதுரைவிவசாயிகள்ஆர்வமாகஉள்ளனர். 80 கிலோஎடையுள்ளஆட்டின்அதிகபட்சவிலை 50 ஆயிரம்ரூபாய்வரைவிற்கப்படுகிறது. பாகிஸ்தானைபூர்வீகமாககொண்டஜமுனாபாரிஆட்டின்காதின்நீளம்ஒருஅடி; 10 இஞ்ச்அகலம். அழகானதோற்றம்கொண்டது. ஆண், ஆடுகள்ஐந்தடிஉயரமும், பெண், ஆடுகள்நான்கடிஉயரமும்சராசரியாகவளரக்கூடியது. வளர்ந்தஆட்டின்எடை 80 கிலோஇருக்கும். ஆட்டின்கறி, மிருதுவாகவும், அதிகசுவையுடன்இருப்பதால்மாமிசபிரியர்களுக்குஜமுனாபாரிவரப்பிரசாதகமாககருதப்படுகிறது. ஜமுனாபிரியாணி: முன்னணிஅசைவஉணவகங்களில்வான்கோழிபிரியாணிக்குதனிமவுசுஉண்டு. இவ்வரிசையில்ஜமுனாபாரியும்இடம்பிடித்துள்ளது. முன்னணிஅசைவஉணவகங்களில்ஜமுனாபாரிமாமிசவகைகளும்இடம்பெறுகிறது. ஒருகிலோதனிக்கறி 500 ரூபாய்வரைவிற்கப்படுகிறது. கறியைவிலைக்குவாங்குவதைவிடஆட்டுக்குட்டிகளைவிவசாயிகளிடம்கொடுத்துவளர்ப்போருக்குஅதிகலாபம்கிடைக்கிறது. மதுரையில்அலங்காநல்லூர், பாலமேடுபகுதியில்ஜமுனாபாரிஆடுவளர்ப்பில்விவசாயிகள்அதிகஆர்வம்காட்டுகின்றனர்ஏற்றுமதிக்குஉகந்தது:ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தைவான்மற்றும்அரேபியநாடுகளுக்குபதப்படுத்தப்பட்டஜமுனாஆட்டுக்கறிஏற்றுமதிசெய்யப்படுகிறது. மதுரையில்வளர்க்கப்படும்ஆடுகள், சென்னைசைதாப்பேட்டைக்குகொண்டுசெல்லப்படுகிறது. அங்குஆட்டின்கறியைபதப்படுத்திடின்களில்அடைத்துஏற்றுமதிசெய்கின்றனர். பண்டிகைகாலங்களில்கறியும், பாலும்முக்கியபங்குவகிக்கிறது. பாலில்அதிகபுரதச்சத்துஇருப்பதால்குழந்தைகளுக்குநன்குகாய்ச்சியபாலைகொடுத்துவந்தால், குழந்தைஆரோக்கியமாகவும், நோய்எதிர்ப்புசக்திமிக்கதாகவும்வளரும்எனவிவசாயிகள்கூறுகின்றனர். ஈத்துக்குமூன்றுகுட்டி: பாலமேட்டைசேர்ந்தஜமுனாபாரிபண்ணைமேலாளர்பட்டுராஜன், ஆடுவளர்க்கும்ராஜேந்திரன் (45) கூறும்போது, “”ஜமுனாபாரிஆடுகள்ராஜஸ்தானில்அதிகளவுவளர்கிறது. அதிகஉஷ்ணத்தைதாங்கும்திறன்கொண்டது. இதனால், இதில்நோய்எதிர்ப்புஅதிகம். கறியும், பாலும்வாரம்தோறும்சாப்பிட்டுவந்தால்உடல்சூட்டைகுறைத்துஆரோக்கியத்தைவளர்க்கும். ஒருஈத்துக்குமூன்றுகுட்டிகள்வரைஈனும். 25 நாள்குட்டிஒன்றின்விலை 6,000 ரூபாய். கருவுற்றஆட்டின்விலை 20 ஆயிரம்ரூபாய். பாசிப்பயறு, துவரை, உளுந்துதூசிமற்றும்கடலைபுண்ணாக்குஉணவாகவைக்கப்படுகிறது. வியாபாரநோக்கமின்றிசொந்தஉபயோகத்துக்காகவளர்க்கிறோம்,'” என்றனர். விவரங்களுக்குபட்டுராஜன்  மொபைலில் (97866 90370) தொடர்புகொள்ளலாம்.

ஆண்டுக்குஇரண்டுஈத்துஈத்துக்குஇரண்டுகுட்டிகள்

 

வான்கோழி, காடை, வென்பன்றி, முயல்கறிக்கோழிஎனஇறைச்சிக்காகபலவகைகால்நடைகளைவளர்த்தாலும்நாட்டுக்கோழிக்கறி, ஆட்டுக்கறிஇவையிரண்டுக்குமானகிராக்கிஎன்றும்குறைவதேயில்லை. மளமளவென்றுஏறிவரும்இவற்றின்விலை, அப்படியிருந்தும்சந்தையில்இவற்றுக்கானதட்டுப்பாடுஆகியவையேஇவற்றின்தேவைக்கானசாட்சி. அந்தவகையில்விவசாயிகளுக்குஅதிகளவில்கைகொடுத்துவருவதுஆடுவளர்ப்புதான்.
ஏறத்தாழநம்ஊர்வெள்ளாடுகளைப்போன்றதோற்றம். ஆனால், உயரம்மட்டும்கொஞ்சம்குறைவு. முழுவெள்ளைமற்றும்முழுகருப்புஎனஇரண்டுநிறங்களில்இருக்கும்இந்தஆடுகளின்காது, கண், கால்என்றுசிலஇடங்களில்மட்டும்கருப்புஅல்லதுவெள்ளைநிறத்தில்பரஸ்பரம்மாறிஇருக்கின்றன.
ஆடுகளைக்கொட்டிலிருந்துமேய்ச்சலுக்காகத்திறந்துவிட்டசுந்தர்ராஜன். “பெங்கால்கருப்புன்றவகைஆட்டுக்கும், ஆஸ்டின்வெள்ளைன்றஆட்டுக்குமானகலப்பினவகைஇது. நம்மஊருசெம்மறிஆட்டைவளர்க்கறமாதிரிமேயவிட்டும்வளர்க்கலாம். வெள்ளாடுமாதிரிகொட்டில்லஅடைச்சு, தீவனம்கொடுத்தும்வளர்க்கலாம். ஆக, எல்லாவகையிலும்செளரியமானதுஇந்தஆடு. பெரும்பாலும்இதைஅழகுக்காகத்தான்வளர்க்கறாங்க. நானும்அப்படித்தான்வாங்கிட்டுவந்தேன். நாலுவருஷத்துக்குமுன்னஒருதடவைசந்தைக்குப்போயிருந்தப்ப, ஒருவியாபாரிஇந்தஆட்டைகொண்டுவந்திருந்தார். பாக்கறதுக்குநல்லஜாதிநாய்க்குட்டிமாதிரிஇருந்துச்சு. சரிபேத்திவிளையாடறதுக்குஆகட்டுமேனுஐநூறு  ரூபாய்க்குவாங்கினேன். ஆனா, நாளடைவுலஇதையேபெரியஅளவுலவளர்க்கஆரம்பிச்சிட்டேன்என்றுபெருமிதத்தோடுஒருஆட்டுக்குட்டியைத்தடவிக்கொடுத்தார்.
தற்போது 57 வயதாகும்சுந்தராஜன், கோவையில்பத்துஆண்டுகாலம்வழக்கறிஞராகப்பணியாற்றியவர். கோர்ட்டையும், கோப்புகளையும்பார்த்துப்பார்த்துஒருகட்டத்தில்அலுத்துப்போகவேசட்டப்பணிக்குமொத்தமாக, முழுக்குப்போட்டுவிட்டுசொந்தஊருக்குத்திரும்பி, மனைவியோடுகைகோத்துமுழுநேரவிவசாயத்தில்இறங்கிவிட்டார்.
அந்தஆட்டைப்பிடிச்சுக்கிட்டுவந்தப்போஅதுஎன்னரகம்னெல்லாம்எனக்குத்தெரியாது. ஆனா, வீட்டுலஎல்லாத்துக்கும்எனக்குத்தெரியாது. ஆனா, வீட்டுலஎல்லாத்துக்கும்பிடிச்சுப்போயிடுச்சு. அந்தசமயத்துலவீட்டுக்குவந்தசொந்தக்காரர்ஒருத்தர்தான்இதோடரகத்தைச்சொல்லி, கேரளாவுலஇருந்துஇதுக்குஜோடியாஒருகிடாக்குட்டியைவாங்கிட்டுவந்துகொடுத்தார். அந்தரெண்டுஆடுதான்இன்னிக்குநாப்பதுஆடுகளாபெருகியிருக்கு. இதுக்காகநான்தனியாகொட்டகையெல்லாம்அமைக்கல. ஏற்கெனவே  காலியாகிடந்தகறிக்கோழிக்கொட்டகைக்குஉள்ளேயேதான்வளர்த்துக்கிட்டுஇருக்கேன்.
அதிகபட்சம்ரெண்டரைஅடிஉயரம்தான்இதுங்கவளருதங்க. தீவனம், தண்ணியெல்லாம்குறைவாத்தான்எடுத்துக்குதுங்க. நோய்எதிர்ப்புச்சக்திநல்லாவேஇருக்கறதால, பெருசாஎந்தநோயுமேவர்றதில்லை. பூச்சிமருந்துகூடகொடு்குறதில்லைனாபார்த்துக்கோங்க. காலையில்ஒவ்வொருஆட்டுக்கும்கால்கிலோமக்காச்சோளத்தைக்கொடுத்து. தண்ணியையும்வெச்சுடுவோம். சாயங்காலம்மூணுமணிவாக்குலமேய்ச்சலுக்குஅனுப்புவோம். ஆறரைமணிக்குப்பிறகுதிரும்பவும்அடைச்சுடுவோம்.
எந்தஇலை, தழையையும்கழிக்கிறதில்லை. தென்னைஓலை, தேக்குஇலைனுவிட்டுவெக்காமசாப்பிட்டுட்டு, ‘கண்டதைத்தின்றால்குண்டன்ஆவான்ன்றமாதிரிகொழுகொழுனுஆயிடும். மேய்ச்சலுக்காகவேதட்டை, கொள்ளு, கம்புனுமாத்திமாத்திபயிர்பண்ணிடுவோம். மேய்ச்சல்முடிஞ்சதும்ஒருதண்ணிபாய்ச்சுனோம்னாமறுதழைவுவந்துடும். ஆடுகளோடஎருதான்அதுக்குஉரம்என்றுசுந்தரராஜன்நிறுத்த, தொடர்ந்தார்செண்பகவல்லி.
ஆடுகளுக்குனுஎயும்வெளியிலவாங்குறதில்ல. இயற்கைமுறையில்நாங்களேஉற்பத்திபண்றமக்காச்சோளம், சவுண்டல்தான்தீவனம். வழக்கமாஆடுகரெண்டுவருஷத்துக்குமூணுதடவைகுட்டிஈனும். இந்தஆடுக, வருஷத்துக்கேரெண்டுதடவைஈனுதுங்க. அஞ்சுமாசத்துலேயேபருவத்துக்குவந்துடுது. ஒவ்வொருஈத்துக்கும்ரெண்டுகுட்டிங்களைஈனுது. தென்னந்தோப்புவெச்சுருக்கவங்களுக்குகளைஎடுக்குறதுக்குஇந்தவகைஆடுகள்வரப்பிரசாதம்னேசொல்லலாம். அந்தளவுக்குஎல்லாச்செடிகளையும்பிடுங்கிச்சாப்பிட்டுடுதுக. நம்மசீதோஷ்ணநிலைக்குநல்லாதாங்கிவளருதுங்கஇந்தஆடுகஎன்றுதன்பங்குக்குகலப்பினஆடுகளின்பெருமையைச்சொன்னார்.
நிறைவாகவருமானம்பற்றியபேசியசுந்தராஜன், “கிடைக்கிறகுட்டிகளில்சராசரியாபாதிஅளவுக்குகிடாக்குட்டிகளும்இருக்கு. நான்இந்தஆடுகளைப்பெருக்கணும்னுநினைச்சுவளர்க்கறதாலபெரியளவுலவிற்பனைசெய்யலை. கிடாக்குட்டிகளைமட்டும்ஏழுமாசம்வளர்த்துவித்துடுவேன். ஏழுமாசத்துலஇருபதுகிலோவரைஎடைவந்துடும். உயிர்எடைக்குகிலோ 125 ரூபாய்னுஎடுத்துக்கறாங்க. இதுவரைக்கும்இப்படிஅஞ்சாறுகிடாக்களைகறிக்காகவித்துருக்கேன். வளப்புக்காகஏழுஜோடியைவித்துருக்கேன். இதெல்லாம்கழிச்சதுபோக, கையிலநாப்பதுஆடுகஇருக்கு. கசாப்புக்கடைக்காரங்கதேடிவந்துவிலைக்குகேட்டுக்கிட்டுஇருக்காங்க. இனிமேதான்விற்பனையைத்தொடங்கணும். எப்படிஇருந்தாலும்பத்துபெட்டை, ஒருகிடாவாங்கிவிட்டோம்னாவருஷத்துக்குநாப்பதுகுட்டிகண்டிப்பாகிடைக்கும்என்றார் .

தொடர்புக்கு
சுந்தர்ராஜன்
அலைபேசி: 93675-33111

7 மாதம் 40 ஆயிரம் கொட்டிக் கொடுக்கும் கொடி ஆடுகள்

கொடி ஆடுகளை பற்றி சரோஜா கூறுவதுதாவது ஆடு வளர்த்தே வீடு கட்டியிரக்கேன். பொண்ணுங்களைப் படிக்க வெச்சு, கட்டிக் கொடுத்திருக்கேன். ஒரு கஷ்டமும் இல்லாம குடும்பத்தை ஒட்டிக்கிட்டிருக்கேன். இந்த ஆடுகளுக்காக நான் எந்தச் செலவையும் செய்யுறதில்ல என்று சரோஜா அவர்கள் பேசத் தொடங்கினார்.

நம்பிக்கையான கொடி ஆடுகள்  :  
“நம்ம பாரம்பர்ய ரசமான கொடி ஆடுகளையும், கன்னி ஆடுகளையும்தான் நான் வளர்த்துகிட்டிருக்கென். கொடி ஆட்டுக்குக்காலும், கொம்பும் நல்ல நீளமா இருக்கும். 15 மாச வயசுல மூணடி உயரத்துக்கு வளர்ந்து, பார்க்கவே கம்பீரமா இருக்கும். அதுல கரும்போறை, செம்போறைனு ரெண்டு வகை இருக்கு. கருப்பு உடம்புல வெள்ளைப் புள்ளிகளும், வெள்ளை உடம்புல கருப்புப் புள்ளிகளும் இருந்தா கரும்போறை. சிவப்பு உடம்புல வெள்ளைப் புள்ளிகளும், வெள்ளை உடம்புல, சிவப்புப் புள்ளிகளும் இருந்தா செம்போறை. இப்ப என்கிட்ட கரும்போறை மட்டும்தான் இருக்குது.

ஏழு மாதத்துக்கு ஒரு ஈத்து : கொடி ஆடுகள் முதல் தடவை சினை பிடிக்க 10-12 மாசம் ஆகும். அதுக்குப் பிறகு, ஏழு மாசத்துக்கு ஒரு தடவை குட்டி ஈனும். அஞ்சு மாசம் சினைக்காலம். குட்டி போட்ட ரெண்டு மாசத்துலயே திரும்பவும் சினை பிடிச்சுடும். ஒரு ஈத்துக்கு ரெண்டுல இருந்து, நாலு குட்டி வரை போடும். சராசரியா ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டிங்க கிடைச்சுக்கிட்டே இருக்கும். மூணு மாசம் வரைக்கும் குட்டிகளுக்கு தாராமா பால் கொடுத்து அதுவே பராமரிச்சுடும். அதனால புட்டிப்பால் எல்லாம் தர வேண்டியதில்ல, போதுமான அளவுக்கு தாய்ப்பால் குடிக்கறதால குட்டிக நல்ல ஆரோக்கியத் தோட வளரும்.
ஏழு மாதத்தில் விற்பனை : கொடி ஆட்டுல ஏழு மாசத்துலயே ஒரு பெட்டை ஆடு பதினஞ்சு கிலோ எடை வரைக்கும் வந்துடும். கிடா, இருபது கிலோ எடைக்கு வந்துடும். அந்த சமயத்துல விற்பனை செய்தா ஒரு பெட்டை அடு 2,250 ரூபாய், கிடா 3,000  ரூபாய்னு விலை (குறைந்தபட்சம்) போகும்” 
கைகொடுக்கும் கன்னி ஆடு : “ கன்னி ஆடு கொஞ்சம் குட்டையா, உடம்பு குறுகலா, திகாத்திரமா இருக்கும். கொம்பு நடுத்தரமா இருக்கும். கொம்பு நடுத்தரமா இருக்கும். இதுல பால்கன்னி, செங்கன்னினு ரெண்டு வகை இருக்குது. கண் ஒரத்துலயும் கொம்பிலிருந்து வாய் வரைக்கும் ரெண்டு சிவப்பு கோடு இருக்கும். அதேபோல, காது ஒரத்துலயும், கால்கள்லயும் சிவப்பு கோடுக இருக்கும். இது, செங்கன்னி. இந்தக் கோடெல்லாம் வெள்ளையா இருந்தா பால் கன்னி.
கன்னி ஆடுக முதல் தடவை மட்டும் 8-10 மாச வயசுல சினை பிடிக்கும். அதுக்குப் பிறகு ஏழு மாசத்துக்கு ஒரு தடவை குட்டி போடும். ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டி வரை போடும். இந்த இனத்துலயும் தாயே மூணு மாசம் வரைக்கும் பால் கொடுத்துப் பரமாரிச்சுடும். அதனால் புட்டிப்பால் தேவையே இருக்காது. கன்னி ஆடுகளைப் பொறுத்தவரை ஏழு மாச வயசுல ஒரு பெட்டை 10 கிலோ எடையும், கிடா 15 கிலோஎடையும் இருக்கும். பெட்டை 1,500 ரூபாய், கிடா 2,250 ரூபாய்னு விலை போகம்.
ஏழு மாசத்துக்கொரு தடவை 40 ஆயிரம் : ரெண்டு வகையிலயும் கலந்துகட்டி மொத்தம் 10 பெரிய ஆடுங்க என்கிட்ட இருக்குது கணக்குப் பாத்தா ஏழு மாசத்துக்கு ஒரு தடவை இதுங்கல்லாம் குட்டி போட்டுக்கிட்டே இருக்கும். ஈத்துக்கு 10 பெரிய ஆடுங்க மூலமா, 20 குட்டிங்க கிடைச்சுடும். அந்தக் குட்டிகளையெல்லாம் ஏழு மாசம் வரைக்கும் வளர்த்து, அதுக்குப் பிறகு விலைக்குக்  கொடுத்துடுவேன். இதன் மூலமா எப்படிப் பார்த்தாலும் 40 ஆயிரம் ரூபாய்க்குக் குறையா வருமானம் கிடைச்சுக்கிட்டே இருக்கும். இப்படி நான் விலைக்குக் கொடுக்குற சமயத்துல, புதுசா 20 குட்டி ஆடுங்க வந்துடும் மொத்தத்தையும் சேர்த்து பராமரிக்க ஆரம்பிச்சா ஒரு தடவை ஆடுகளை வித்துக்கிட்டே இருக்கறதை ஒரு வழக்கமாகவே வெச்சுருக்கேன். இது எனக்கு ரொம்பவே வசதியா இருக்கு.
எப்பவுமே 10 தாய் ஆடுகளும், 20 இளம் ஆடுகளும் இருக்குற மாதிரி வெச்சுகிடடு, மத்ததைக் கழிச்சுடுவேன், 10 தாய் ஆட்டுக்கு ஒரு பெரிய கிடா போதும். 

பராமரிப்பு என்பதே இல்லை : பராமரிப்புனு பார்த்தா பெருசா எதுவுமே இல்ல. பகல்ல பக்கத்துல ஆத்தோரத்துல மேய்ச்சுகிட்டு வந்து ராத்திரியில கட்டிப்போட்டுடுவேன். பனிக் காலத்துலகூட எந்தப்பிரச்னையும் வந்ததில்ல. பரண் இல்ல தரையிலதான் படுத்துக் கிடக்குது. பேன், உண்ணி தொந்தரவுகள் இல்ல. ஒருமுறைக் கூட ஒட்டுண்ணி நீக்கம் செஞ்சதில்ல. குடற்புழு நீக்கம்கூட செஞ்சத்தில்ல. மேய்ச்சலுக்கு போகும்போது குட்டைகள்ல தேங்கி கிடக்குற தண்ணீரைதான் இந்த ஆடுகள் குடிக்குது. இதுக்குனு தனியா காட்டகைக்குள்ள தண்ணீர் தொட்டி வைக்கல

தீவன சாகுபடி முக்கியம்
30 அடி நீளம், 10 அடி அகலத்துல கொட்டகை அமைச்சு நாலு பக்கமும். வலை அமைச்சு அதை ரெண்டு பகதியா பிரிச்சு, ஒரு பகுதியா பிரிச்சு, ஒரு பகுதியில பெரிய ஆடுகளையும், இன்னொர பகுதியில குட்டி ஆடுகளையும் வெச்சுக்கலாம். கொட்டகையில் தண்ணீர்த் தொட்டி கண்டிப்பா இருக்கணும். பத்து பெட்டை ஆடுகளுக்கு ஒரு கிடா போதும். கிடாக்களை அதிகளவுல வெச்சுக்கக் கூடாது. ஒண்ணோட ஒண்ணு முடடிக்கும். அதைவிட தீவன உற்பத்தி ரொம்ப முக்கியம். அதை ஏக்கர் அளவுல சூபதபுல், அகத்தி, கிளரிசீடியா, மலர்பேரி, சங்குப் புஷ்பம், முயல்மசால், வேலிமசால், வேம்பு, கொருக்காப்புளி மாதிரியான பசுந்தீவனங்களை சாகுபடி செஞ்சுக்கணும். வேற அடர்தீவனம், கலப்புத் தீவனமெல்லாம் தேவையேயில்லை.
குட்டிகள் பிறந்து மூணாவது மாசத்துல, தாய்ப்பால் குடிக்குற காலத்துலயே அரை கிலோ பசுந்தீவனம் கொடுக்க அரம்பிச்சுடணும். நாலாவது மாசம் தினம் ஒன்றரைக் கிலோவும், அஞ்சாவது மாசத்தல 3 கிலோவும் கொடுக்கணும். அதுக்கப்பறம் வளர்ச்சியைப் பொறுத்து அளவைக் கூட்டிக்கலாம். எட்டு மாச வயசுல ஒவ்வொரு ஆட்டுக்கும் தினம் 5 கிலோ தீவனமும், அதுக்கப்பறம் 7 கிலோவும் கிடைக்குற மாதிரி பாத்துக்கணும். ரெண்டு வகையான ஆடுகளுமே, உயிர் எடைக்கு ஒரு கிலோ 150 ரூபாய்னு விலை போகுது. 
கொடி ஆடுகளைக் காப்பாற்றுங்கள்
“இந்த மாதிரியான ஆடுகதான் ஏழை விவசாயிகளுக்கு வருமானத்தைத் தரக்கூடியது நம்ம சூழலுக்கு ஏத்ததும்கூட ஆனா, இந்த வகை ஆடெல்லாம் இப்போ குறைஞ்சுகிட்டே வருதுங்கறதுதான் வேதனையான விஷயம். இதையெல்லாம் பாதுகாக்குறதுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கணும். இதன் மூலமா நம்ம மக்களளோட பொருளாதார நிலைமையையும் சரிஞ்சுடாம காப்பாத்த முடியும்” 
தொடர்புக்கு
சரோஜா
(உறவினரின் அலைபேசி) 98376-63517
ஆதிநாராயணன் 98656-13616
செளந்தரபாண்டியன் 94431-84974


கொட்டிக்கொடுக்கும் கொட்டில்

 
 
ராஜ் டேனியல் (அலைபேசி 0451 2421057) பயிற்றுனர் ஆடு வளர்ப்பு பற்றி கூறுகையில் கால்நடை வளர்ப்பு என்பது இந்தக் காலத்தில் மிகவும் கடினமாகிக் கொண்டே வருகிறது. வெள்ளாடு உள்ளிட்டவைகளை கொட்டில் முறை ஆடு வளர்ப்பு மூலம் வளர்ப்பது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. ஆடுகளை வெளி இடங்களில் வளர்க்காமல், ஒரே இடத்திலேயே வைத்து வளர்ப்பது தான் கொட்டில் முறை.

கொட்டில் முறையில் வளர்க்கும் போது அலைச்சல் இல்லாததால் சீக்கிரம் உடல் பெருக்கும். தீவனத் தேவை குறையும்.
கொட்டில் முறையில் ஆடுகளை வளர்க்க விரும்புறவங்க, முதல்ல ரெண்டு ஏக்கர் அளவுக்காவது தண்ணீர் வசதியுள்ள தோட்டத்தைத் தயார்படுத்திக்கணும். அகத்தி, சூபாபுல், வேலி மசால் இதையெல்லாம் வேலியா நடலாம். கம்பி வேலி அமைச்சாலும் ரொம்ப நல்லது. ஒரு ஏக்கர் அளவுல பசுந்தீவனங்களை கட்டாயம் பயிர் பண்ணனும். மீதி இடங்களை ஆடு வளர்ப்புக்குத் தயார் பண்ணிக்கலாம். பசுந்தீவனம் வளர்க்கற இடம், ஆடுகள் இருக்கற இடம் ரெண்டுக்கும் நடுவுலயும் வேலி அமைக்கணும்.
20 பெட்டை, ஒரு கிடா கொண்ட கூட்டத்தை ஒரு யூனிட்டுன்னு சொல்வோம். வளர்ந்த ஒரு பெட்டை ஆட்டுக்கு, பதினைந்து சதுர அடி இடம் தேவை. கிடா, சினை ஆடு, குட்டிப் போட்ட ஆடுகளுக்கு இருபது சதுர அடி தேவைப்படும். ஆக, ஒரு யூனிட்டுக்கு 20 வளர்ந்த பெட்டைகள், 1 கிடா, பத்து பதினைந்து குட்டிகள்ன்னு கணக்குப் போட்டா.. சுமாரா 650 சதுர அடியில செவ்வக வடிவமான கொட்டில் தேவைப்படும். வளர்ற குட்டிகளை வைக்கறதுக்கு 200 சதுர அடியில தனியா ரெண்டு கொட்டில், நோய் தாக்கின ஆடுகளுக்குன்னு 200 சதுர அடியில இரண்டு கொட்டில்களும் கட்டாயம் தேவைப்படும். மொத்தமா 1,450 சதுர அடி (3.32 சென்ட்) வேணும்.

தரையிலிருந்து உயரமாக பெரிய கொட்டில் மட்டும் தரையிலிருந்து 5 அடி உயரத்தில் இருக்குற மாதிரி பாத்துக்கணும். ஆடுங்க ஏறும் போது சறுக்காம இருக்குறதுக்கு மரத்துலயே படிகள் வைக்கலாம். கொட்டிலை உயரமா அமைக்கறதுக்கு கான்கிரீட் தூண், இல்லைன்னா பனை மரத்தைப் பயன்படுத்தலாம். உயரம் கம்மியா இருந்தா, ஆடுகளோட கழிவுல இருந்து வெளிய வர்ற வாயுக்களால ஆடுகளுக்கு மூச்சுத்திணறல் வரும். சுத்தம் செய்யுறதுக்கும் கஷ்டமாப் போயிடும்.  சின்னச்சின்ன கொட்டில்களை தரையிலயே வெச்சுக்கலாம். எத்தனை யூனிட் அமைச்சாலும் நாலு பக்கமும் முப்பதடி இடைவெளி விட்டு, கட்டாயம் வேலி இருக்கணும். இந்த இடைவெளியில் தினமும் காலை நேரத்துல வெயில் படுற மாதிரி, ஆடுகளை மேய விடலாம். நோய், நொடிகள் வரும் போது அவற்றைக் கவனித்து உரிய மருந்துகளைக் கொடுக்கவேண்டும்.
கொட்டிலுக்குக் கூரையா தென்னை, பனை ஓலைகளை வெச்சா, குளிர்ச்சியா இருக்கும். ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்டா, வெப்பம் அதிகமா இருக்கும். எல்லாக் கொட்டில்களுக்குமே பக்கவாட்டு அடைப்புக்கு மூங்கில் தப்பைகளையே பயன்படுத்தலாம். அடிப்பாகத்துக்கு, சாதாரண மரப்பலகையே போதுமானது. வரிசையா மரப்பலகைகளை சீரான இடைவெளி விட்டு இணைச்சு ஆணி அடிக்கணும். பலகைகளோட இருந்தாத்தான் வளையாம இருக்கும் பலகைகளை சேக்குறதுக்கு முன்னாடி குரூட் ஆயில்ல ஊறவெச்சுட்டா.. சிறுநீர், கழிவுகளால பலகைக்கு பாதிப்பு வராது. ஊறவும் செய்யாது. இடைவெளி வழியாக் கழிவுகள் கீழே விழுந்திடும். அதனால கழிவுகளை சேகரிக்கிறதுக்கு சுலபமாயிடும்.

சுத்தம் சுகம் தரும் !
தினமும் காலையில கொட்டிலை சுத்தம் செய்யணும். ஒவ்வொரு கொட்டிலையும் சுத்தி சிமெண்ட் வாய்க்கால் எடுத்து ஒரு தொட்டிக் கட்டணும். ஆடுகளோட சிறுநீர், கொட்டிலைக் கழுவுற தண்ணியெல்லாம் அதன் மூலமா சேகரிச்சு தீவனப்பயிருக்கு உரமா உபயோகப்படுத்தலாம். கிடாவை தனியான தடுப்புல நீளமான கயித்துல கட்டி வைக்கணும். தீவனங்களை தரையில் போடாம பக்கவாட்டு மூங்கில்களில் கட்டி வெச்சுட்டா, தேவைப்படும் போது ஆடுங்க சாப்பிட்டுக்கும்.இந்தக் கொட்டில் அமைப்பு ரொம்பவும் செலவு கம்மியான முறை.
நாமக்கல் மாவட்டம், காளி செட்டிபட்டியில் கொட்டில் முறையில் தலைச்சேரி ஆடுகளை வளர்த்து வரும் ரகுநாதன் (அலைபேசி : 94426 25504) அதைப்பற்றிச் சொல்கிறார்.
“பத்து வருசமா ஆடு வளர்த்தாலும் மூன்றரை வருசமாத்தான் கொட்டில் அமைச்சு நல்ல முறையில வளக்க ஆரம்பிச்சிருக்கேன். நல்ல லாபம் கிடைக்குது. எண்ணூறு சதுர அடியில் தரையிலேயே சிமென்ட் போட்டக் கொட்டில் அமைச்சிருக்கேன். பக்க வாட்டுல கம்பி வலை போட்டிருக்கேன். மேல உயரமா ஆஸ்பெஸ்டாஸ் கூரையும் போட்டிருக்கேன். தனியே குட்டிகளுக்கு ஒரு அறை இருக்கு. என்கிட்ட இருக்கிற வளர்ந்த ஆடுகள் நாற்பதுக்கும், குட்டிகள் இருபதுக்கும் இதுவே போதுமானதாத்தான் இருக்கு. பசுந்தீவனமா வேலிமசால், கோ3 புல்லெல்லாம் தோட்டத்துலேயே வளர்த்திருக்கேன். அதோட சேத்துக் காய்ந்த தீவனத்துக்காக கடலைக் கொடி கொடுக்குறேன்.
தினமும் அடர் தீவனமும் கொடுத்தா நல்லா வளரும். மேய்ச்சல் முறையில்  வளர்க்கிறவ்பொ ஆறு மாசத்துக்கு பத்து, பதினோரு கிலோ வரை தான் எடை வரும். ஆனா, கொட்டில் முறையில் ஆறு மாசத்துக்குள்ள இருபது கிலோ வரை வந்துடும். நல்ல விலை கிடைக்கும். கிலோ 120 ரூபாய்ன்னு விலை வெச்சி ஆட்டைக் கொடுத்துடுவேன்.
குறைந்தபட்ச லாபமே குஷியானது தான்
ஒவ்வொரு பெட்டையும் எட்டு மாசத்துக்கு ஒரு தடவை குறைந்தபட்சம் ரெண்டு குட்டி போடும். அந்தக் குட்டிக்கு அடுத்த எட்டு மாதத்தில் குட்டி போட ஆரம்பித்துவிடும். சரியாக கருத்தரிக்காத ஆடுகள், குட்டி ஈனாத ஆடுகளை உடனடியாக கழித்து விடவேண்டும். தேவைக்கு அதிகமான கிடாக்களையும் கழிக்க வேண்டியது அவசியம். சரியான முறையில் மருத்துவம் மற்றும் அடர்தீவனங்கள் மேற்பட்ட ஆடுகளை விற்பனை செய்ய முடியும். குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய்க்கு விற்றாலே 8 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கும். இருபது ஆடுகள் மற்றும் அதன் மூலம் குட்டிகள் ஆகியவற்றை வைத்து 40 மாதங்களில் கிடைக்கும் லாபக்கணக்கு இது. ஆண்டுக்கு கணக்கிட்டால், 2 லட்ச ரூபாய்க்கு மேல் வரும்படி கிடைக்கும். இளங்குட்டிகள் 200 எண்ணிக்கையில் நம்மிடம் இருக்குமாறு பராமரிக்கலாம்.
தரையிலிருந்து உயரமாக அமைக்கப்பட்ட மூங்கிலால் ஆன கொட்டில் போடுவதற்கு 50 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கும். தரையிலேயே ஆஸ்பெஸ்டாஸ் கூரையுடன் அமைத்தால் 75 ஆயிரம் ரூபாய் செலவாகும். கொட்டில் அமைக்கும் பொருட்களைகப் பொறுத்து விலை வித்தியாசப்படும்.
அடர்தீவன தயாரிப்பு !
மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய தானியங்கள் 40 சதவிகிதம் கடலை, எள், தேங்காய், சூரியகாந்தி, பருத்தி மற்றும் சோயா ஆகிய புண்ணாக்குகள் 25 சதவிகிதம். அரிசி மற்றும் கோதுமை தவிடு 30 சதவிகிதம். தாது உப்பு 2 சதவிகிதம். உப்பு 2 சதவிகிதம். ஊட்டச்சத்து கலவை 1 சதவிகிதம் இந்த அளவில் எடுத்துக் கொண்டு மாவாக அரைத்து, தண்ணீரில் பிசைந்து தினமும் குறிப்பிட்ட விகிதத்தில் கொடுக்கவேண்டும். கர்ப்பிணி ஆடுகளுக்கு கொஞ்சம் அதிகப்படியாகக் கொடுக்கலாம். மேற்சொன்ன பொருட்களில் விலைக் குறைவாக கிடைப்பவற்றை கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்துக் கொண்டு, மற்றவற்றை குறைத்து சதவிகித அளவைப் பராமரிக்கலாம். அடர் தீவனம் கொடுக்கவேண்டும் என்பது கட்டாயமல்ல. கொடுத்தால் ஆடுகளின் எடை சீக்கிரமே அதிகரித்து கூடுதல் லாபத்துக்கு வழிவகுக்கும்.

கொட்டில் முறை ஆடு வளர்ப்புக்கான செலவு – வரவுக் கணக்கு (முதல் 40 மாதங்களுக்கானது)
விவரம்
செலவு வரவு
நிலையான செலவு கொட்டில்கள் அமைக்க (சராசரி)
60,000  
பெட்டை ஆடுகள் 20
24,000  
கிடா 1
2,000  
நடைமுறைச் செலவுகள் தீவனம் (நாமே உற்பத்தி செய்வது)
10,000  
இன்சூரன்ஸ்
10,000  
மருத்துவச் செலவு
10,000  
அடர் தீவனம்
30,000  
இதரச் செலவுகள்
4,000  
800 ஆடுகள் விற்பனை மூலம் (குறைந்தபட்சம்)
  8,00,000
கழிவு விற்பனை முகாம்
 
50,000
மொத்தம்
1,50,000
8,50,000
நிகர லாபம்
 
7,00,000


நாளை, தொடர்ந்து செம்மறி ஆ்டு வளர்ப்பு பற்றியும், வெள்ளாடு வளர்ப்புப் பற்றிய மேலதிக விவரங்கள், தமிழ் நாடு வேளாண்மை கழகம் வெளியிட்ட அறிக்கை போன்றவற்றை இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறேன்.

தகவல்கள் இணையங்களிலிருந்து திரட்டியவை
Engr.Sulthan

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s