அலங்கார மீன் வளர்ப்பு / வண்ண மீன் வளர்ப்பு

எமது 500 வது பதிவினை இங்கு தருவதில்

பெருமை கொள்கிறோம்.

அலங்கார மீன்கள் வளர்ப்பு

சுய தொழில்கள் வரிசையில் இனி பல வகையான மீன்கள் வளர்ப்பு பற்றிய சில பதிவுகளை தொடர்ச்சியாக காணலாம். இத் தொழில்களும் நல்ல லாபம் தரக் கூடிய தொழில்கள் தான். போதிய இட வசதியும், இத் தொழில் செய்ய ஆர்வமும் உள்ளவர்கள் தொடங்குவதற்கேற்ற தொழில் இது. சைவப் பிரியர்கள் கொஞ்சம் முகம் சுளிக்கலாம். சாப்பிடும் உணவாக கருதாமல் இதையும் ஒரு தொழிலாக மனதில் கொண்டு படிக்கலாமே!

Continue reading

கர்ப்பப்பை பலமாக…. சில உணவுகள்

அக்காலத்தில் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டால் கர்ப்பப்பை பலம் பெறுவதற்காக உழுத்தங்களி கொடுப்பது வழக்கமாக இருந்தது. அது மட்டுமின்றி வயது வந்த உடனேயே முட்டையையும், நல்லெண்ணெயையும் தினமும் வெறும் வயிற்றில் குடிக்கச் செய்வர். இந்தக் களியில் வெல்லம், உளுந்து, நல்லெண்ணெய் சேருவதால் இரும்புச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து தாதுக்கள் என்று எல்லாம் கிடைத்து கர்ப்பப் பை பலமாக அமையும்.

இதை எப்படி செய்வது? (உழுத்தங்களி)

அரை கப் உழுந்தை வாணலியில் வறுத்து அதோடு அரை கப் அரிசி சேர்த்து மாவாகத் திரித்து சலித்துக்கொள்ளவும். 2 கப் உடைத்த கருப்பட்டி வெல்லத்தோடு தண்ணீர் 2 கப் விட்டு சூடாக்கவும், வெல்லம் கரைந்ததும் வடிகட்டி அழுக்கு, மண்நீக்கி, வாணலியைக் கழுவி மறுபடியும் அதிலேயே வெல்லக் கரைசலை ஊற்றவும். அதோடு 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துச் சூடாக்கவும். கரைசல் கொதிக்கும்போது மாவை மத்தியில் கொட்டிக் கிளறி, ஒரு கரண்டியை அதில் குத்தி மூடி வைக்கவும். குறைந்த தணலில் 7_லிருந்து 10_நிமிடங்கள் வரை வேக விடவும்.

பிறகு அடுப்பிலிருந்து இறக்கி நன்றாகக் கிளறிவிடவும் சிறிது ஆறியதும் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கலந்து உருண்டைகளாக உருட்டி சாப்பிடக் கொடுக்கவும்.

சூப் குடியுங்கள் 

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு கப் சூப் பகலிலும், இரவிலும் குடித்தால் மலச்சிக்கல் இல்லாமல், அஜீரணம் இல்லாமல் உண்ட உணவு நன்கு செரித்து ஆரோக்கியமாக இருக்க இயலும்.

பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு சாலட் அல்லது தயிர்ப் பச்சடி சேர்த்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் 11 மணிக்கு உண்ணலாம்.

காய்கறிகள், பழங்கள் விதவிதமாக உண்ணவும். உதாரணத்திற்கு காலை டிபனுடன் 2 துண்டு கொய்யா, ஓர் ஆரஞ்சு சாத்துக்குடி உண்ணலாம். மதிய உணவுடன் வாழைப்பழம், மாலையில் ஆப்பிள்… காய்கறிகளைப் பொரியலாகச் செய்யும்போது ஒரே வகை காய்க்குப் பதிலாக இரண்டு அல்லது மூன்று வகை காய்களைச் சேர்த்துச் செய்யலாம். முடிந்தவரை 3 வகை பழங்கள், 4 வகை காய்கறிகள், தினமொரு கீரை என்று கிடைக்குமாறு உணவில் மாற்றங்கள் செய்யவும்.

பால், தயிர் குறிப்பிட்டபடி அளவு தவறாமல் உண்ணவும்.

பாதாம், கிஸ்மிஸ், பேரீச்சை போன்றவை உங்கள் பட்ஜெட்டில் முடியுமானால் சேர்க்கலாம். ஆனால் கீரை சேர்த்துக் கொண்டாலே இரும்புச்சத்து கிடைத்துவிடும்.

அடை சாப்பிடுங்கள்

முழு தானியங்கள், பயறு, பருப்பு வகைகள் கலந்த டிபனாகத் தயாரிக்கலாம். அடை, தோசை, விதவிதமான இட்லியுடன் பலவகை சட்னி, சாம்பார் போன்றவை.

சோயாவில் முழுப் புரதம் உள்ளதால் தங்களுக்குப் பிடித்தமானபடி சிறிதளவு ஏதாவது ஒரு உணவுடன் சேர்க்கவும். (சைவமாக உள்ளவர்கள் முக்கியமாக இதைக் கடைப்பிடிக்கவும்)

உப்பு, ஊறுகாய், காரத்தைக் குறைக்கவும். ஃப்ரஷ் பழங்கள், காய்கறி ஜுஸ் சாப்பிடலாம்.

ஓரளவு நன்றாகக் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்யவும். நன்றாக நடக்கவும். இதனால் பலவித பிரச்னைகளைத் தவிர்க்க இயலும்.

வீண் வாக்குவாதங்கள், விவாதங்கள் தவிர்த்து நேரம் கிடக்கும்போது நல்ல பாட்டுக்கள், ஸ்லோகங்கள் கேட்கலாம். மனது நிம்மதியுடன் இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

இனி கர்ப்பிணிகளுக்கான ஒரு சில சத்தான, ருசியான உணவு வகைகள்:

தோடம்பழ சர்பத்

கமலாப்பழம் என்னும் தோடம்பழத்தின் சாறு அரை லிட்டருக்கு சீனி ஒரு கிலோ போட்டு பாகுபதத்தில் காய்ச்சி, இறக்கும்போது சிறிது குங்குமப் பூ சேர்த்து கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு சாப்பிடலாம். உஷ்ணத்தினால் உண்டான பேதி, அதிகமான பித்தம், கிறுகிறுப்பு, சுவையின்மை இவை நீங்கும். அதிலும் கருவுற்ற முதல் மூன்று மாதங்களுக்கு இது மிகவும் பயனளிக்கக்கூடிய ஒன்று.

பூசணிக்காய் சர்பத்

வெள்ளைப் பூசணிக்காயைத் தோல், விதை நீக்கி பிசைந்து மெல்லிய துணி அல்லது மாவுச் சல்லடையில் வடிகட்டி எடுத்து ஒரு லிட்டர். 50 கிராம் இஞ்சியைத் தோல் சீவி இடித்துப் பிழிந்து சாறெடுத்துச் சிறிது நேரம் வைத்திருந்து, அடியில் தங்கியுள்ள வெண்மை நிறமான சத்தை நீக்கிவிட்டு மேலாக எடுத்து பூசணி சாறுடன் கலந்து அதை அரை லிட்டராகக் காய்ச்சி மேலாக ஒரு கிலோ சீனி சேர்த்துத் தேன் போல வரும்போது இறக்கி தினமும் இருவேளை 2 டீஸ்பூன், அரை டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க, கர்ப்பிணிப் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், கருப்பைக் கோளாறுகள், கைகால் எரிச்சல், நீர்ச்சுருக்கு குணமாகும்.

முருங்கைக்காய் சூப்

தேவையான பொருட்கள்: முருங்கைக்காய்_3, வெங்காயம்_1, தக்காளி_1, பயத்தம் பருப்பு_லு டேபிள் ஸ்பூன், பூண்டு_1 பல், மிளகு, சீரகப் பொடி_சிறிதளவு, பால்_அரை கப், மக்காச் சோளமாவு _1 டேபிள் ஸ்பூன், உப்பு_தேவையான அளவு, சர்க்கரை சிறிதளவு.

செய்முறை: முருங்கைக்காய்களைப் பெரிய துண்டங்களாக அரிந்து பிரஷர்குக்கரில் ஆவியில் வேக வைக்கவும். வெந்தபின் அதில் உள்ள சதைப் பற்றை வழித்து எடுத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, இரண்டையும் மிகப் பொடியாக அரியவும், பயத்தம் பருப்பில் தண்ணீர் ஊற்றி, பூண்டு, அரிந்த வெங்காயம், தக்காளி சேர்க்கவும். கரகரப்பாகப் பொடித்த மிளகு, சீரகப் பொடியை ஒரு சிறு துணியில் மூட்டை போல கட்டி பருப்பினுள் போட்டு குக்கரில் வேகவைக்கவும்.

வெந்தபின் துணிமூட்டையை எடுத்து எறிந்துவிட்டு, பருப்பு ஆறியபின் முருங்கைக்காய் விழுதுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்தபின் வடிகட்டி தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும். அரை கப் பாலுடன் 1 டேபிள் ஸ்பூன் மக்காச் சோள மாவைக் கரைத்து அதையும் சூப்புடன் சேர்த்து ருசிக்கேற்ப உப்பு, சிறிது சர்க்கரை சேர்த்து சூடாக்கவும். (கொதிக்கவிடக்கூடாது) கலந்துவிட்டுக் கொண்டே சூப் நன்கு சூடானதும் சூப் கிண்ணங்களில் ஊற்றி பரிமாறலாம்)

பாலக் சூப்

(டெல்லி பாலக் கிடைத்தால் அதிக ருசி. இதன் நுனி கூர்மையாக இல்லாமல் அரை வட்ட வடிவில் அமைந்திருக்கும்)

இரண்டு கட்டு பாலக் கீரையை ஆய்ந்து, கழுவிக் கொள்ளவும். ஒரு வெங்காயத்தைப் பொடியாக அரியவும். பிரஷர் பானில் _ ஒரு டீஸ்பூன் வெண்ணெய் விட்டுச் சூடாக்கி, வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதங்கியதும் கீரையைச் சேர்க்கவும். (அரிய வேண்டாம்) கீரை சுருங்கியதும் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு ஒரு முழு பச்சை மிளகாய், கால் அங்குலத் துண்டு இஞ்சி சேர்த்து மூடி, வெயிட் வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

ஆறிய பின் மூடியைத் திறந்து மிளகாய், இஞ்சித் துண்டு இரண்டையும் எடுத்து விடவும். (நெடி அதிகமாக இருந்தால் சூப் நன்றாக இருக்காது) கீரையை வேகவைத்த தண்ணீரோடு அப்படியே மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி தகுந்த உப்பு சேர்க்கவும். ஒருதம்ளர் பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் மக்காச்சோள மாவைக் கரைத்து சூப்பில் ஊற்றி நன்றாகச் சூடாக்கவும். கொதிக்க விடக்கூடாது. சுடச்சுட கிண்ணங்களில் ஊற்றிப் பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள் மேலே சிறிது கடைந்த பாலேடு (ஃப்ரெஷ் க்ரீம்) மற்றும் துருவிய சீஸ் சேர்க்கலாம்.

நன்றி – சிநேகிதி

தாய்ப்பாலை சேமித்து வைப்பது எப்படி?

 

Dr . ஜெயசிறீ கனகராஜ்
சந்திப்பு – S.கிருஸ்ணகுமாரி

குழந்தை பிறந்ததுமே தாய்க்கு முதன் முதலில் வரக்கூடிய பாலை சீம்பால் (Colostrum) என்கிறோம். இதன் அருமை பலருக்குப் புரிவதில்லை. இந்த சீம்பாலைக் குழந்தைக்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும். காரணம் பாப்பாவுக்கான நோயெதிர்ப்பு சக்தி இதிலிருந்துதான் அதிகப்படியாகக் கிடைக்கிறது. அதனால் தவறாமல் சீம்பால் கொடுங்கள்!

தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் திருப்தியே தனிதான்!

தாய்ப்பால் கொடுப்பதால் தாய் ஒரு விதமான திருப்தியை உணர முடியும். அதைக் கொடுப்பதன் மூலம் தாயின் மன அழுத்த நிலை பெருமளவு குறைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு மார்புப் புற்று நோயிலிருந்து இயற்கையான பாதுகாப்பும் கிடைக்கிறது.

பாப்பா தாயிடமிருந்து பாலை உறிஞ்சிக் குடிக்கும்போது அந்தச் செயலானது தாயின் மூளையிலிருந்து ளிஜ்ஹ்tஷீநீவீஸீ என்கிற ஒரு ஸ்பெஷல் ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. இதுதான் தாயின் மார்பகத்தின் மீது செயல்பட்டு பால் சுரக்கவே செய்கிறது! மேலும் இந்த ஹார்மோன் அம்மாவின் கர்ப்பப்பையின் மீதும் செயல்பட்டு அதை இயல்பாகச் சுருங்கச் செய்யவும் உதவுகிறது.

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளின் இறப்பு விகிதம் மிகவும் குறைகிறது என்கிறது இன்னொரு ஆராய்ச்சி.

சில குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே டயாபடீஸ் நோய் வந்து, அவர்களை வாழ்நாள் முழுவதும் அவஸ்தைப்பட வித்திட்டு விடுகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் இந்த Juvenile Diabetes வருவது வெகுவாகக் குறைவதாகவும் தெரிகிறது.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தை அதிபுத்திசாலியாக இருக்கும் வாய்ப்புகளும் அதிகம் என்றும் ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

எப்பொழுதெல்லாம் தாய்ப்பால் கொடுக்கக்கூடாது? 

அம்மாவுக்கு சளி, ஜுரம் பிடித்து அதற்கான மருந்தை அவர் சாப்பிட்டு வந்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம். அதில் தவறெதுவும் இல்லை. காரணம், இன்று இதற்காக வரக்கூடிய பல மருந்துகள் பாதுகாப்பானவைகயாகவே இருக்கின்றன. ஆனால், தாய் எந்த மருந்து சாப்பிடுவதாக இருந்தாலும் (அது கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவர் பலமுறை பயன்படுத்திப் பழகிய மருந்தாக இருந்தாலும் கூட) டாக்டரின் ஆலோசனை பெற்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்த முதல் சில நாட்களில் மார்பகக் காம்பில் (நிப்புள்) அம்மாவுக்குப் புண் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் வலி ஏற்பட்டு சிலர் குழந்தைக்குப் பால் கொடுப்பதைத் தற்காலிகமாக நிறுத்திவிடுகிறார்கள். இப்படிச் செய்வது தவறு. தொடர்ந்து பால் கொடுக்கத் தவறினால் அம்மாவுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அதுவும் பெரிய அவஸ்தையாகிவிடும். இதனால் தாய்க்கு ஜுரம் கூட வரும். அதை கவனிக்காவிட்டால் அங்கு சீழ் உருவாகிவிடும் அபாயமும் உள்ளது.

இப்படி நீங்கள் விஷயத்தை சீழ் வரை எடுத்துச் சென்றால் அதற்கான ட்ரீட்மெண்ட் கொடுக்க, ஒரு சின்ன அறுவை சிகிச்சையேகூட செய்ய வேண்டி வந்துவிடலாம். அதனால் விஷயத்தை சீழ்வரை எடுத்துச் செல்லாமல் ஜாக்கிரதையாக செயல்படுங்கள். ஆனால் இந்த நிலையிலும்கூட அம்மா, பாப்பாவுக்கு இன்னொரு மார்பகத்தில் தொடர்ந்து பால் கொடுத்து வரலாம்.

இப்படிப் பால் கட்டிக்கொண்ட சமயங்களில் மார்பகத்தில் சுடூநீர் ஒத்தடம் கொடுத்து, கட்டிக்கொண்ட பாலைப் பீய்ச்சி எடுக்கவேண்டும். குழந்தைக்கு சரியான நேர இடைவெளிவிட்டு ஒவ்வொரு தரமும் பால் கொடுக்க வேண்டும். இப்படி பால் கொடுக்கும் நேர இடைவெளி அதிகமாகும் சமயங்களிலும் கூட சில சமயம் அம்மாவுக்குப் பால் கட்டிக் கொள்ளும் வாய்ப்புள்ளது.

அதேசமயம் புண்ணாகிவிட்ட நிப்புளை என்னதான் செய்வது? அந்த அவஸ்தைக்கு விடிவுதான் என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது…

பாப்பாவுக்கு பால் கொடுக்காத நேரங்களில் நிப்புளில் வேஸலின் போன்ற க்ரீமைத் தடவி (டாக்டரிடம் ஆலோசனை பெற்ற பிறகு) வரலாம். பால் கொடுக்கும் சமயத்தில் மார்பகத்தை தண்ணீர் மற்றும் மைல்டான சோப்பு கொண்டு சுத்தம் செய்த பிறகு பாப்பாவுக்குப் பால் கொடுக்கலாம்.

குறைப் பிரசவத்தால் பிறந்த குழந்தைக்கு எப்படி பாலூட்டுவது?

ஒரு சில நேரங்களில் குழந்தை சரியாகப் பாலைக் குடிக்கத் தெரியாமல் திணறலாம். அல்லது நிப்புள் புண்ணாகிவிட்டது போன்ற சில சங்கடமான நேரங்களில் அம்மாவும் குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாமல் போகலாம். இந்த மாதிரியான நேரங்களில் என்ன செய்வது?

மேலும் சில சமயங்களில் குழந்தை ஃப்ரீ _ மெச்சூராக அதாவது, டெலிவரிக்கான தேதிக்கு வெகுநாட்கள் முன்பாகவே பிறக்கும் என்று சொல்லி இருக்கிறேன். அந்தக் குழந்தைகளை தாயிடம் உடனே கொடுத்துவிடாமல் பெரும்பாலும் இன்குபேட்டர் பெட்டியில் வைத்துதான் பராமரிப்போம். இன்னும் சில குழந்தைகள் பிறக்கும் போதே உதடு பிளந்தது போன்ற (CLEFT LIP) நிலையில் பிறக்கலாம். இப்படி சில பிரச்னைகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கிடைக்கச் செய்ய இதோ ஒரு வழியிருக்கு..

இதுபோன்ற சமயங்களில் பாப்பாவுக்கு Expressed Milk கொடுக்கலாம்.

இது ஒன்றும் பெரிய விஷயமில்லை… தாய்ப்பாலைத் தாயிடமிருந்து வேறு வழிகளில் எடுத்துச் சேகரித்துக் கொடுப்பதுதான்.

இதை எப்படிச் செய்வது?

தாயின் மார்பகத்திலிருந்து பாலை ஒரு சுத்தமான பாத்திரத்தில் பீய்ச்சி எடுத்து பாப்பாவுக்குக் கொடுக்கலாம். அல்லது பாலை எடுப்பதற்கென்றே இன்று மார்க்கெட்டில் விற்கக் கூடிய பிரெஸ்ட் பம்புகள் வாங்கி அதைப் பயன்படுத்தியும் பாலைச் சேகரிக்கலாம்.

இந்த பிரெஸ்ட் பம்புகள் நாமே இயக்கக்கூடிய வகையிலும், பாட்டரியால் இயங்கக் கூடியதாகவும் இருவகையாகக் கிடைக்கின்றன. இப்படி எடுக்கப்படும் பாலை மூடிபோட்டு பத்திரப்படுத்தி வைத்துக் குழந்தைக்கு அவ்வப்போது கொடுத்துவரலாம்.

இந்தப் பாலை ஃப்ரிட்ஜில் (ஃப்ரீசரில் அல்ல..) 24_48 மணிநேரம் வரைக்கும் பத்திரப்படுத்தி பாப்பாவுக்குக் கொடுக்கலாம்.

இன்று தாய்ப்பாலை ஃப்ரீசரில் சுமார் மூன்று மாதங்கள் வரைக்கும் கூட ஃப்ரீஸ் செய்து வைத்து, அதன் தன்மை மாறாமல் பாப்பாவுக்குக் கொடுத்து வருகின்றனர்.

ஃப்ரிட்ஜிலோ ஃப்ரீசரிலோ வைத்து பத்திரப்படுத்திய பாலைப் பாப்பாவுக்கு எப்படி சூடுபடுத்திக் கொடுப்பது?

சேமிக்கப்பட்ட பாலை நேரடியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்க வைக்கக் கூடாது. அகலமான ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து அதை லேசாக சூடுபடுத்தி, பால் இருக்கும் பாத்திரத்தை அதற்குள் வைத்து பதமாக சூடுபடுத்தி பாப்பாவுக்குக் கொடுக்கவேண்டும். அந்த சூட்டையும் விரல்விட்டெல்லாம் பார்க்கக்கூடாது.

ஃப்ரீஸ் செய்த பாலை முதலில் ஐஸ்கட்டி நிலையிலிருந்து கரையவிட்டுப் பிறகு மேற்கூறிய முறையிலேயே சூடுபடுத்திக் கொடுத்தால் போதும்.

பாலூட்டும் அம்மா எல்லாவற்றையும் சாப்பிடலாமா?

குழந்தை பிறப்பதற்கு முன் குழந்தைக்கு ஆகாது என்று சொல்லி ‘அதை சாப்பிடக் கூடாது… இதை சாப்பிடக் கூடாது’ என்று வீட்டுப் பெரியவர்கள் தடை விதிப்பது வழக்கம். குழந்தை பிறக்கும் வரையில்தான் இந்தக் கட்டுப்பாடெல்லாம் என்று நீங்கள் நினைத்தால்.. அதுதான் தவறு! குழந்தை பிறந்த பிறகுதான் இந்தக் கட்டுப்பாடுகள் இன்றுமே அதிகமாகும்..

அம்மா இளநீர் சாப்பிட்டாலோ அல்லது எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ் குடித்தாலோ குழந்தைக்கு சளி இருமல் வர வாய்ப்புள்ளது என்பார்கள். பேரீச்சம் பழம் போன்ற சில விஷயங்கள் சாப்பிட்டால் பேதியாகும் என்பார்கள். இதெல்லாம் உண்மை இல்லை.

அம்மா சாப்பிடும் எந்த விதமான உணவுமே பாப்பாவுக்கு நேரிடையாக. அதாவது, அதே உணவாகச் செல்வதில்லை. அந்த உணவெல்லாம் தாயின் உடலில் செரித்து கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து மற்றும் புரதச்சத்தாகப் பிரிந்து, பிறகு உடலால் கிரகிப்படுகிறது. இந்தச் சத்துக்கள்தான் பாப்பாவுக்குப் பாலாகக் கிடைக்கிறதே ஓழிய பாலிலிருந்து அவ்வளவு சுலபமாக எல்லாம் நோய்த் தொற்று ஏற்பட்டுவிடாது.

அம்மாவுக்கு சில சமயம் ஏதாவது நோய் தாக்கும்போது அது பாப்பாவுக்கும் பரவுவதற்குக் காரணம், இருவரும் எந்நேரமும் ஒன்றாகவே ஒரே அறையில் இருப்பதுதான்! மற்றபடி வேறொன்றும் இல்லை.

நன்றி குமுதம் சிநேகிதி

நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு..

மெனோபாஸ் ஸ்பெஷல் கைடு 

அத்தனை நாட்களும் சின்னஞ்சிறுமியாக சுற்றித் திரிந்தவள் வயதுக்கு வந்து விட்டால் என்னவெல்லாம் செய்கிறீர்கள்? பெற்றவர்கள் மட்டுமில்லாமல் மொத்த உறவுக் கூட்டமும் ‘எப்போ? எப்போ?னு காத்திருந்தோம்’ என்று கொண்டாடுகிறதே. நாட்டுக்கோழி முட்டையும் உளுந்தங்களியும் கொடுத்துப் பார்த்துப் பார்த்துக் கவனிக்கிறீர்களே. ‘இனியும் ஒரு இட்லி ரெண்டு இட்லினு சாப்பிட்டுட்டிருந்தே.. பாத்துக்கோ. வாய்க்குள்ள குச்சிய விட்டாவது நாலு இட்லியத் திணிச்சிடுவேன்’ என்று கண்டிக்கிறீர்களே. இதில் ஒரு பங்கையாவது நீங்கள் மாதவிலக்கு நிற்கும் நிலையை அடையும்போது செய்கிறீர்களா?

‘ஐயய்ய.. இதையெல்லாம் பத்திப் பேசுவாங்களா?’ என்று நினைக்கிறீர்கள். ‘இந்த மனோபாவம்தான் முதல் தவறு’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

‘‘எல்லாம் ஹார்மோன் பண்ணுகிற வேலை’’ என்கிறார் ஹார்மோன் சிறப்பு மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால்.

‘‘ஒரு பெண்ணின் வாழ்க்கையில் வயதுக்கு வருவதும், டீன் ஏஜும் கல்யாணமும் குழந்தை பிறப்பும் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம்தான் மெனோபாஸ் எனப்படுகிற இந்த மாதவிலக்கு நிற்கும் காலகட்டமும். ஆனால், காலம்காலமாக, ‘இது அசிங்கம். இதைப் பற்றிப் பேசக் கூடாது’ என்றே போதிக்கப்பட்டுள்ளதால் பெண்களாகிய நாம் இழப்பது எத்தனை அதிகம்?’’ என்கிறார் மகப்பேறு நிபுணர் தமிழிசை.

‘‘இதுவும் ஒரு பருவம்தான். இது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் ஏற்படக் கூடியது. டென்ஷனற்ற, நிம்மதியான மெனோபாஸ்தான் இந்த வயதில் இருக்கிற எல்லாப் பெண்களின் தேவை’’ என்கிறார் மனநல நிபுணர் பாரதி விஸ்வேஸ்வரன். ‘‘வலிகளை கவனிக்கிறீர்களா?’’ என்று கேட்கிறார் எலும்பு சிறப்பு நிபுணர் சௌந்தரபாண்டியன். ‘‘இதயமும் முக்கியமானது. மறந்துடாதீங்க’’ என்று எச்சரிக்கிறார் இதய நோய் சிறப்பு மருத்துவர் ஆஷா குருமூர்த்தி. ‘‘கேன்சருக்கான சிறப்பு கவனமும் தேவை’’ என்கிறார் கேன்சர் சிறப்பு நிபுணர் செல்வி ராதாகிருஷ்ணா. ‘‘உணவு விஷயத்தில் நீங்கள் எப்படி?’’ என்று கேட்கிறார் நியூட்ரிஷியன் ஜோத்ஸ்னா ரஜ்ஜா.

‘‘தாம்பத்திய வாழ்க்கை இனி அவ்வளவுதான் என்று நினைக்க வேண்டாம்’’ என்று வழிநடத்துகிறார் செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.. இத்தனை பேரின் துணையுடன் இந்த சிறப்புப் புத்தகமே இருக்க, உங்களுக்கு நிம்மதிக்கா குறைச்சல்? வாருங்கள்.. வாழ்க்கையைச் சந்தோஷமாக எதிர்கொள்ளலாம்.

ஹார்மோன் குறைஞ்சு போச்சு! 

‘‘‘இனி எல்லாம் சுகமே’ என்று மெனோபாஸை சந்தோஷமாக வரவேற்பார்கள் சிலர். ‘அடடா.. நம்மளோட இளமை ஓடிப் போயிடுச்சே’ என்று வருந்துவார்கள் பலர். வருந்தும் படியான விஷயமில்லை இது’’ என்கிறார் டாக்டர் ஜெயஸ்ரீ கோபால்.

ஓவரி எனப்படும் சினைப் பையில் முட்டை உற்பத்தி நிற்கும் பருவமான மெனோபாஸ், பொதுவாக 45 வயதுக்குமேல்52 வயதுக்குள் ஏற்படும்.

ஓவரியின் செயல்பாட்டுத் திறன் சுருங்கி அங்கிருந்து வரவேண்டிய, மாத சுழற்சிக்குத் தேவையான அத்தனை ஹார்மோன்களும் குறைந்து, சமயத்தில் தீர்ந்தும் போவதால் மாதவிலக்கு ஆவதில்லை. அவ்வளவுதானே தவிர, ‘போச்சுடா.. இனிமேல் நம் வாழ்க்கை அவ்வளவுதான் போல’ என்று பயப்படுமளவுக்கு ஒன்றுமேயில்லை.

வெளிநாட்டுப் பெண்கள் மெனோபாஸ§க்குக் கூடுதல் கவனம் தருவார்கள். அதிலும் ‘ஹார்மோன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபி‘ எனப்படுகிற ஹெச்.ஆர்.டி|க்குப் பயங்கர மரியாதை. உடலில் குறையும் ஹார்மோனை வெளியிலிருந்து தத்தெடுப்பதுதான் ஹெச்.ஆர்.டி.!

‘இது எதற்கு என்றால், ஹார்மோன் களின் உற்பத்தி குறைந்தோ, தீர்ந்தோ போவதால், மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. முக்கியமாக, ஹாட் ஃப்ளஷ் எனப்படுகிற வெப்ப ஊற்றுப் பிரச்னையால் எண்பது சதவிகிதம் பேர் பாதிக்கப்படுவார்கள்.

உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை உடல் முழுக்க வெப்பம் பரவுவதுபோல ஒரு உணர்வு தோன்றுவ தைத்தான் ஹாட் ஃப்ளஷ் என்கிறோம். வியர்வை ஊற்றாகப் பெருகும். ஐந்து முதல் பத்து நிமிடங்களில் இந்த உணர்வு மறைந்து உடல் நார்மலாகிவிடும். சிலருக்கு ஒரு நாளைக்கு ஒன்று முதல் பதினைந்து முறை கூட இது போல ஏற்படலாம்.

சிலர் சாதாரணமான வேலைகூட செய்ய முடியாத அளவுக்குப் பாதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு இந்த ஹெச்.ஆர்.டி. ஒரு வரப்பிரசாதம். இதில், ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், டாக்டரின் ஆலோசனை இல்லாமல் நீங்களாகவே இதற்கான மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது. அது கேன்சர் போன்ற மிகப் பெரிய பிரச்னைகளில் கொண்டுபோய் விடக்கூடும். ஜாக்கிரதை.

ஹாட் ஃப்ளஷ் ஏற்பட்டதும் உடனடியாக காற்றோட்டமான இடத்துக்குச் செல்லுங்கள். மெல்லிய பருத்தி ஆடைகளையே அணியுங்கள். காற்றோட்டமில்லாத இடத்தில் குளிக்கும்போது, மசாலாப் பொருட்களைச் சேர்க்கும்போது என்று ஹாட் ஃப்ளஷ் எப்போதெல்லாம் ஏற்படுகிறது என்பது தெரிந்தால், அவற்றைத் தவிர்க்கலாம். பெரும்பாலும் ஒரே மாதிரியான சூழலில்தான் இது வருகிறது. சிகிச்சை மூலம் இதைக் கட்டுப் படுத்தலாமே தவிர, முன்பே கண்டறிந்து தவிர்க்க முடியாது.

டென்ஷன்.. டென்ஷன்.. 

ஆனந்தியின் நாற்பத்தெட் டாவது பிறந்தநாள் முடிந்து சில மாதங்கள் ஆகியிருந்தன. ஒருநாள் காலை பெரும் எரிச்சலும் குழப்பமுமாய் விடிந்தது ஆனந்திக்கு.

‘‘அம்மா.. ப்ரஷ் எங்கேனு தெரியல. கொஞ்சம் தேடிக்குடேன்’’ என்றான் நரேன். வழக்கமாக அவன் கேட்பதுதான். இவள் தேடித் தருவதுதான். ஆனாலும், அன்று ஏனோ அநியாயத்துக்கு எரிச்சல் வந்தது ஆனந்திக்கு. ‘‘வயசு என்னாகுது? இன்னும் ப்ரஷ்ஷை நான்தான் தேடித் தரணுமா? ஒனக்கா தேடிக்கத் துப்பில்ல? ஒன் பொண்டாட்டி மகாராணி என்ன செய்றா? அவள்ட்ட கேளு’’ என்று எகிற, நரேனின் மனைவியும் அங்கு வர…

நிலைமை என்னவாகியிருக்கும் என்பதைவிளக்கவும் வேண்டுமா?

மெனோபாஸால்தான் இந்தப் பிரச்னை என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். விளக்கமாகப் பார்ப்போம்.

பெரிமெனோபாஸ், மெனோபாஸ், போஸ்ட் மெனோபாஸ் என்று மூன்று நிலைகள் இதில் உண்டு.

பெரிமெனோபாஸ் 

நாற்பத்தெட்டு வயதில் மெனோபாஸ் ஆகப்போகிறதெனில், நாற்பத்தைந்து வயதிலேயே அதற்கான அறிகுறிகள் ஆரம்பித்துவிடும். இதுதான் பெரிமெனோபாஸ். சிடுசிடுவென்று விழுவது, அல்ப காரியங்களுக்கு எல்லாம் மூட் அவுட் ஆவது, ஹாட் ஃப்ளஷ், மூட்டு வலி, கைகால் உளைச்சல் இவையெல்லாமேதான் இதன் அறிகுறிகள். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக உடல் குழம்ப ஆரம்பிக்கும். வயதுக்கு வந்த புதிதில், என்னென்ன அறிகுறிகள் இருந்தனவோ அவையெல்லாம் இப்போது மீண்டும் ‘உள்ளேன் அம்மா..’ என்று தலை காட்டும். சரியாக இருபத்தெட்டு நாட்களில் வந்துகொண்டிருந்த மாத விடாய் சில மாதங்கள் கழித்தெல்லாம் திடீரென்று வந்து டென்ஷன் பண்ணுவது, மிக அதிகமான ரத்தப் போக்கு, ஸ்பாட்டிங் எனப்படுகிற திட்டுத் திட்டாகப் படுவது என்று எல்லாம் நடக்கும். காரணம் என்ன தெரியுமா? வயதுக்கு வந்த காலத்தில் திடீரென்று அதிகரித்த ஹார்மோன்களால் உடல் குழம்பிப் போய் தடுமாறி, சில காலம் கழித்து நார்மலானது இல்லையா? அதேபோலத்தான் இப்போதும் ஹார்மோன் குறைவதால் உடல் குழம்பிப் போகும். அதே நேரம், மேலே குறிப்பிட்ட எல்லாப் பிரச்னைகளுக்கும் தகுந்த நிவாரணமுண்டு.

(ஒழுங்கற்ற மாதவிலக்கும் திட்டுத்திட்டாகப் படிவதும் சகஜம்தான் என்றாலும், இவை கேன்சருக்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம். கவனம் தேவை.)

இந்த இடைப்பட்ட காலம் ஒவ்வொரு வரையும் படுத்துகிற பாடு இருக்கிறதே.. அது இந்தஅளவு என்றில்லை.

முதலாவது மனரீதி யான பிரச்னைகள். ‘ஓஹோ.. இனி நான் அவ்வளவுதான் போல’ என்கிற தன்னிரக்கம் எழுபது சதவிகிதத்தினருக்கு ஏற்படும். வேலையிலிருந்து ஓய்வுபெறுகிற ஒரு ஆண், ‘நாளையிலருந்து நான் இந்த ஆபீஸ§க்கு வரமாட்டேன்ல..’ என்கிற ஒரு கனத்த இதயத்தோடு வீட்டுக்குப் போவதற்கு இதை ஒப்பிடலாம். சிலர், ரொம்பவே பயந்து போவார்கள். ‘இனி நான் தாம்பத்திய வாழ்க்கைக்கே லாயக்கில்லை. எதற்குமே உபயோகமில்லாதவள். முன்னைப்போல் அழகாக இருக்க முடியாது. வயதாகத் துவங்கி விட்டது. தோலெல்லாம் சுருங்கும். யாரும் மதிக்க மாட்டார்கள்’ என்றெல்லாம் பல எண்ணங்கள் மனதைப் பாடாய்ப் படுத்தும்.

ஏற்கெனவே இதுமாதிரி இருக்கும்போது உடல் வேறு பல அசௌகரியங் களைச் சுமந்துவந்து நோகடிக்கும். இரண்டும் கலந்த இந்த நேரத்தில்தான் முக்கால்வாசி வீடுகளில் மகனுக்குக் கல்யாணம் செய்துவைப்பார்கள். ஏற்கெனவே, ‘நாம எதுக்கும் உபயோகமில்ல போல’ என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்களின் எண்ணத்தை உறுதி செய்வதுபோல, புதிதாக வருகிற மருமகள் பல விஷயங்களையும் கையில் எடுப்பாள்.

இந்த நேரத்தில் அந்தத் தாய்க்குத் தேவைப் படுவதெல்லாம் குடும்ப உறுப்பினர்களின் அக்கறை யும் ஆறுதலும் சரியான சிகிச்சையும்தான். ஆனால், பெரும்பாலான வீடுகளில் அது அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அந்தக் காலத்தில் புகுந்த வீடு போகிற மகளிடம் தாய், ‘எங்கியாவது வெளியில போனா, உன் மாமியார் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ’ என்பார். காரணம் இதுதான். ‘நான் உபயோகமில்லாதவள் போல’ என்ற எண்ணம் மாறி, ‘பரவால்லியே.. மருமக நம்மள மதிக்கிறாளே..’ என்கிற சந்தோஷம் ஏற்படும் அந்தத் தாய்க்கு.

‘‘இதற்கு என்னிடம் வந்த ஒரு நோயாளியே உதாரணம்…ÕÕ என்கிறார் டாக்டர். தமிழிசை.

‘‘ஒரு அம்மா, பெரிமெனோபாஸ் நிலையில் என்னிடம் வந்தார். அவருக்கு அதோடுகூட, பிபி, சர்க்கரை, கொழுப்பு, கைவலி என்று ஏகப் பட்ட பிரச்னைகள். ‘அது முடியல.. இது முடியல’ என்று சொல்பவர், திடீரென்று ÔÔஆனாக் கூட டாக்டர்.. சில நேரம்தான் இதெல்லாம். மத்தபடி சமாளிச்சிடுவேன். என் மருமக தங்கம் டாக்டர். என்னை ராஜாத்தி மாதிரி கவனிச்சுக்கிறா!Õ’ என்றார்.

உண்மையில் அவருக்கிருந்த பிரச்னைகள் எக்கச்சக்கம். மருமகளின் அன்பான பேச்சும் கவனிப்பும் மட்டுமே அந்த அம்மாவின் எல்லாக் கஷ்டங்களிலிருந்தும் விடுவித்து இருக்கிறது என்பது என்னை ஆச்சரியப் படுத்தியது’’ என்கிறார் தமிழிசை.

மெனோபாஸ் 

இது, மாதவிலக்கு முற்றிலுமாக நின்றுபோன காலகட்டம். இப்போது, பெண்ணுறுப்பை வழவழப்பாக வைத்திருக்கிற திரவத்தின் சுரப்புக் குறையும். அந்த இடத்தில் இன்ஃபெக்ஷன் ஆகும். சிலருக்கு வெள்ளைப் படுதல் இருக்கும். அரிக்கும்.

இவையெல்லாவற்றுக்குமே தீர்வுண்டு. திரவத்தின் சுரப்புக் குறைவதால்தான் இந்தப் பிரச்னைகள். இதற்கு என்று க்ரீம்கள், ஜெல்கள் கிடைக்கின்றன. இன்ஃபெக்ஷன் ஏற்பட்டாலும் சரிசெய்ய முடியும். மெனோபாஸ§க்குப் பிறகு ஏற்படுகிற வெள்ளைப்படுதல் அபாயகரமானது. இதையும் உடனே கவனித்தால் குணமாக்கிவிடலாம்.

போஸ்ட் மெனோபாஸ் 

இது ஒருவகையில் நிம்மதியான காலகட்டம். ஆரம்பத்தில் கவலைப்பட்டவர்கள்கூட, ‘அப்பாடா.. இத்தனை வருஷ அவஸ்தை இனி இல்லை’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். இந்த நிலையில் ஒரு விஷயத்தில் கவனம் தேவை.

முற்றிலுமாக மாதவிலக்கு நின்றபிறகு, ஆறு மாதமோ ஒரு வருடமோ கழித்து ரத்தப்போக்கு இருந்தாலோ, சின்னதாகத் திட்டுக்கள் இருந்தாலோ, அது ஆரோக்கிய சீர்கேட்டுக்கான (கேன்சராகவும் இருக்கலாம்!) அலாரம். உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

அடி இறங்குதலும் இந்தச் சமயத்தில் பலருக்கு ஏற்படும். கர்ப்பப்பை லூஸாகி இறங்கிவிடும். சிலருக்குப் பெண்ணுறுப்பு வழியே வெளியே வரைகூட வந்துவிடும். இப்படி ஆகிவிட்டால், சர்ஜரி செய்து பையை வெளியே எடுப்பதுதான் தீர்வு.

ஆரம்ப கட்டம் எனில், வளையம் போடுவது போன்ற சிகிச்சைகள் உண்டு. சிறுநீர் கழிக்கும்போது விட்டுவிட்டுக் கழிப்பது இதற்குச் சிறந்த சிகிச்சை.

அக்கறை காட்டுங்களேன்.. 

அவர் சினிமாத் துறையில் மிகவும் பிரபலமான புள்ளி. அவர் மனைவியை பண்புக்கும், பணிவுக்கும் உதாரணமாகச் சொல்வார்கள். அந்தத் தம்பதியின் அந்நியோன்னியம் அவ்வளவு பிரபலம். எங்கு சென்றாலும் எத்தனை நேரமானாலும் வீட்டுக்கு வந்து மனைவி கையால் மட்டுமே சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். நல்ல தம்பதி என்ற வார்த்தைக்கு அர்த்தமாக விளங்கிய அவர்களின் வாழ்க்கையில் அந்த அம்மாவின் நாற்பத்தைந்தாவது வயதில் ஒரு வில்லி உள்ளே நுழைந்தாள், மெனோபாஸ் வடிவத்தில்.

மெனோபாஸின் எதிரொலிப்பான எரிச்சல், கோபம், ஆங்காரம்.. அதெல்லாம் அந்த அம்மாவையும் விட்டுவைக்கவில்லை. அதுவரை சாதுவாகவே அவரைப் பார்த்துப் பழக்கப்பட்ட அத்தனை பேரும், எதற்கெடுத்தாலும் கத்தி, அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி, வீட்டை ரணகளப்படுத்திய அவரின் புதிய முகத்தைக் கண்டு மிரண்டனர்.

‘அம்மாவுக்கு என்னமோ ஆயிடுச்சு’ என்று எல்லோருமே விலகினார்கள். அதிலும் பாசமான கணவன் என்று புகழப்பட்ட அவரது கணவரும் அவரை விட்டு விலகியதுதான் கொடுமை.

இந்த மாறுபட்ட நடவடிக்கைகள் வெறும் ஆறேழு மாதங்களில் மறைந்துவிட்டது. ஆனால், அதற்குள் அந்தப் பெண்மணியின் கணவர் இன்னொரு பெண்ணை மணந்து, இவர்களது சந்தோஷ சாம்ராஜ்யமே குப்புறக் கவிழ்ந்து, பிறரது கேலிக்கு உள்ளானதுதான் சோகம்.

‘‘குடும்பத்தினரின் அக்கறை கொஞ்சம் அதிகமாக அப்போது அந்தப் பெண்மணியின்மீது விழுந்திருந்தால், இந்த அசம்பாவிதம் நடந்திருக்குமா?! மெனோபாஸில் காலெடுத்து வைக்கப்போகும் நிலையிலுள்ள பெண்களைக் கொண்ட ஒவ்வொரு குடும்பத்தினரும் யோசிக்க வேண்டிய விஷயம் இது’’ என்கிறார் மனநல நிபுணர் பாரதி விஸ்வேஸ்வரன்.

‘‘இப்படிப்பட்டவர்களைக் குடும்பத்தோடுதான் வரச்சொல்கிறோம். எங்களது முதல் கவுன்சிலிங் குடும்பத்தாருக்குத்தான்’’ என்கிறவர், இந்த நேரத்தில் மனதில் ஏற்படும் புதுவித உணர்வுகள், மாற்றங்கள், அதனால் உண்டாகும் பிரச்னைகள் பற்றியும் விவரிக் கிறார்.

‘‘மனதில் ஏற்படும் மாற்றங்கள் என்பதைவிடவும் குழப்பங்கள் என்பதுதான் சரியாக இருக்கும்.. எவ்வளவு தெளிவான ஆட்களையும் கொஞ்சம் அசைத்துப் பார்த்துவிடும் காலகட்டம் அது. பெரும்பாலான பெண்கள், அந்த நிலையை அடையும்வரை அதனைப் பற்றித் தெளிவாக ஏதும் தெரியாமல் இருக்கின்றனர். அதுதான் முதல் பிரச்னையே. முன்பே தெரிந்து, தெளிந்து இருந்தால் தலைவலி, பல்வலியைப் போல இந்தக் குழப்பங்களையும் மிகச் சுலபமாகக் கடந்துவிடலாம்.

யாரையும் பிடிக்காது. எரிச்சலும் சிடுசிடுப்பும் கோபமும் அளவுக்கு அதிகமாகத் தலைகாட்டும். எப்பொழுதும் படுத்துக்கொண்டே இருக்க வேண்டும்போல சோம்பலாக இருக்கும். மனதும் சோர்ந்துபோய், சாப்பிட, டி.வி. பார்க்க, அலங்காரம் செய்ய என எந்த விஷயங்களிலும் ஈடுபாடு இருக்காது. அதுவரை வெகு விருப்பமாக செய்துவந்த வேலைகள்மீதுகூட வெறுப்பு வரும். இதனால் தலைவலி, தலை பாரமாக இருப்பது போன்ற உணர்வுகள் தோன்றும். மறதி அதிகமாகும். தூக்கம் வராது. எடை கூடும். அடிக்கடி மார்பு படபடப்பு வந்துபோகும். ஒரு காரணமும் இல்லாமல் வெடித்து அழத் தோன்றும்.

இவை எல்லாவற்றுக்கும் மூல காரணம் அவர்கள் மனதில் உள்ள பயம்தான். பெண்கள் உடல் தோற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்கள்.

ஒரு கதை சொல்வார்கள். ஒரு அம்மாவுக்குக் கை நடுங்கிக்கொண்டே இருந்ததாம். எத்தனையோ மருத்துவர்களிடம் அழைத்துப் போயும் குணமாக்க முடியவில்லை. கடைசியாக ஒரு டாக்டரிடம் போனபோது அவர், ‘வயசாகுதில்லையா.. அப்படித்தான் இருக்கும்’ என்றாராம். உடனே சட்டென்று கை நடுக்கம் காணாமல் போய்விட்டதாம்!

அப்படித்தான்.. மாதவிலக்கை ‘இன்னும் இளமையாக இருக்கிறோம்’ என்பதற்கான சான்றாக எடுத்துக் கொள்கிறவர்களை மெனோபாஸ் பயமுறுத்துகிறது. தோற்றத்தில் உடனே முதுமை வந்து ஒட்டிக்கொள்ளுமோ.. அழகு குறைந்து விடுமோ.. கணவர் விலகிடுவாரோ.. இனி தாம்பத்திய வாழ்க்கைக்கு நாம் லாயக்கில்லையோ.. போன்ற பயங்கள் சூழ்ந்துகொள்கின்றன (உண்மையில் இவையெல்லாமே தேவையற்ற பயம்தான்!).

அந்தக் காலகட்டத்தில் பிள்ளைகளும் திருமணம், மேல்படிப்பு என்று பெற் றோரைப் பிரிந்திருப்பார்கள். வெளிஉலகத்தோடு அதிக தொடர்பு இல்லாத, பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபாடு இல்லாத, சதா குழந்தைகளையே நினைத்துக் கொண்டிருக்கும் அம்மாக்களுக்கு இந்த வெறுமையை அவ்வளவு சுலபத்தில் ஜீரணித்துக் கொள்ள முடியாது.

தவிர, கணவருக்கும் வீட்டில் இருக்கும் வயதான பெரியவர் களுக்கும் உடல்நலக் குறைபாடுகள் வரும். இல்லத்தரசி என்ற முறையில் அதை கவனித்தாக வேண்டிய பொறுப்பும் இவர்களுடையதாகத்தான் இருக்கும்.

இவை எல்லாவற்றுக்கும் பணம் தேவைப்படும். எல்லாமே பெரிய அளவில் செலவு வைக்கும் சமாச்சாரங்கள். அதைச் சரிக்கட்ட வேண்டிய கடமையும் அழுத்தும். ஆக, உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கிடைக்காததோடு, கூடுதல் பொறுப்புகளும் சேர மன அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் தங்களுடைய பிரச்னைகளைக் குடும்பத்தினரோடு பகிர்ந்துகொள்ள முடியாமலே போய்விடுகிறது.

இவை தாண்டி கணவரின் அனுசரணை இருந்தாலே மெனோபாஸைச் சுலபமாக எதிர்கொள்ளலாம். ‘அனுசரணையான கணவர் அமையப் பெறாதவர்கள், கணவனை இழந்த, திருமணமாகாத, விவாகரத்தான பெண்கள், தாமதமாகக் குழந்தை பெற்றதால் டீன்|ஏஜ் பிள்ளைகளைக் கொண்ட அம்மாக்கள் ஆகியோர் இதுபோன்ற மன உளைச்சலுக்கு மிக மிக அதிக அளவில் ஆளாகின்றனர்’ என்கிறது உலக அளவில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரம்.

நம் ஊரில், பிரச்னையோடேயே வாழ்வதுதான் அம்மாக்கள் செய்கிற பெரிய தவறு. மன உளைச்சலை போக்க மாத்திரைகள் உள்ளன. மருத்துவரின் அனுமதியோடு எடுத்துக்கொள்ளலாம். மெடிடேஷனும் அதிகாலை நடைப்பயிற்சியும் சுலபமான நிவாரணிகள்.

மெனோபாஸில் பல கஷ்டங்கள் இருந்தாலும் அவை எல்லாமே தீர்வுள்ள பிரச்னைகள்தான். அதற்குப் பிறகான வாழ்க்கை நிம்மதியானது. மாதாந்திரத் தொல்லை இல்லை. கோயில், விசேஷங்களுக்கு நிம்மதியாகப் போய் வரலாம். குழந்தை உண்டாகுமோ என்ற பயமின்றி தைரியமாக தாம்பத்தியத்தில் ஈடுபடலாம். மீண்டும் வளர்ந்த குழந்தையாக வாழ்வை அனுபவிக்கலாம்.

இயற்கை தந்த வரம்! 

ஆயிரம் திரை கண்டு இன்றும் சளைக்காமல் நடிப்புலகில் ஓடிக்கொண்டிருக்கும் மனோரமா வுக்கு வயது அறுபதுக்கும் மேல். உடலையும் மனதையும் துவளச்செய்யும் மெனோபாஸ் பருவத்தைத் தான் கடந்துவந்த விதத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறார் ஆச்சி.

‘‘பத்து வயசா இருக்கும்போதே மெனோபாஸ்னா என்னனு தெரிஞ்சுக்கிட்டேன். அந்தளவுக்கு என் கண்ணு முன்னால கஷ்டப்பட்டாங்க எங்கம்மா. அம்மாக்கு எந்நேரமும் அனல்ல குளிச்சு முறுக்குச் சுடற வேலை. வேலை பாத்துட்டிருக்கும்போதே திடுதிப்புனு காலோட தீட்டுப் போகும். அவங்க கட்டியிருக்கற 18 முழம் புடவை மொத்தமா நனஞ்சு தொப்பலாயிடும். ஒரு நாளைக்கு நாலஞ்சு புடவை மாத்துவாங்க. நான்தான் தொவைப்பேன்.

அம்மா படற வேதனையைப் பார்த்து எனக்கு நெஞ்சு வலிக்கும். அம்மா கஷ்டப்பட்டாத்தான் எங்க வயித்துக்கு சோறு. ஆனா, ‘சேர்ந்தாப்பல அரை மணி நேரம் உக்கார முடியாதபடிக்கு கைகாலெல்லாம் விட்டுப் போகுதும்மா’னு அழுதுட்டே போய் படுத்துடுவாங்க. ஒரு வருஷம் வரைக்கும் இந்த அவஸ்தை தொடர்ந்துச்சு. அம்மாவுக்கு நான், எனக்கு அம்மா, வேற துணை இல்லேங்கறதால தன் உடம்புக்கு என்னங்கறதை எங்கிட்ட விளக்கமாச் சொன்னாங்க. அப்பலேர்ந்தே என் அடி மனசுல இந்த வயச நெனச்சு சன்னமா ஒரு பயம் ஒட்டிக்கிட்டே இருந்துச்சு.

நாற்பத்தஞ்சாவது வயசுல அந்தக் கட்டம் எனக்கு வந்துச்சு. இந்த விஷயத்துல ‘அம்மா மாதிரிதான் பொண்ணுக் கும்’னு பலபேர் சொன்னதால பயம் கூடிடுச்சு. மகமாயி தயவால எனக்கு அவ்வளவு சோதனை வரலை.

அந்த ரெண்டு வருஷமும் அடிக்கடி மூளையே குழம்பிப் போற மாதிரி ஆகிடும். திடீர்னு உடம்பு முழுக்க அனலடிக்கும். குப்புனு வேர்க்கும். அதை வெளில காட்டிக்காம, காத்தாட உக்காந்து உடம்பு பழைய நிலைமைக்கு வந்ததும் வேலையைப் பார்ப்பேன். இப்படில்லாம் ஆகும்னு தெரிஞ்சிருந்ததால தன்னால சரியாகிடும்னு நானே என்னை சமாதானப்படுத்திக்கு வேன்.

எப்போ வரும்னு தெரியாம, திடீர் திடீர்னு விலக்காகும் பாருங்க. அதுலதான் ரொம்பவும் அவஸ்தைப்பட்டுட்டேன். அப்படித்தான் ‘வருவான் வடிவேலன்’ படத்துக்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போனப்போ விலக்காயிட்டேன். எல்லாரும் காத்திருக்காங்க. நான் தயங்கினா பல பேர் பொழப்பு கெட்டுடும். கடைசியா ஆத்தாமேல பாரத்தைப் போட்டுட்டு, ‘இது பொம்பள பொறப்புக்கு நீ ஏற்படுத்தின நியதி.. இதுல என் தப்பு ஒண்ணுமில்லை. தாயேÕனு கண்ணீரோட வேண்டிக்கிட்டு பிரகாரத்துக்குள்ள நுழைஞ்சு நடிச்சேன். அந்த ஒரு நாள் முழுக்கப் பச்சைத் தண்ணி பல்லுல படாம பார்த்துக் கிட்டேன். அதுதான் ஆத்தாக்கு என்னால செய்யமுடிஞ்சது.

இத்தனை அவஸ்தைப்பட்டதனாலயோ என்னமோ அப்புறமா அந்த மாதாந்தரத் தொல்லையிலிருந்து கிடைச்ச.. விடுதலை, பிரசவ வேதனையை மறக்கடிச்சு குழந்தை முகம் பாக்கிற மாதிரி அத்தனை சுகமா இருக்கு. ஒருவேளை.. இளமை போய்டுச்சேனு சங்கடப்படக்கூடாதுனுதான் இயற்கை இத்தனை கஷ்டங்களைத் தருதோ, என்னவோ..” என்கிறார் கவித்துவமாக.

இன்னும் நான்இளமைதான்ÕÕ 

சிரித்த முகம் எழுத்தாளர் அனுராதா ரமணனுக்கு. வரும் ஜூனில் ஐம்பத்தேழு வயதைத் தாண்டுகிற அனுராதா, தான் கடந்து வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறார்.

‘‘அப்போ எனக்கு முப்பத்தேழு வயசு. எழுத்தாளரா ரொம்பப் புகழோட இருந்த நேரம். மீட்டிங், விழானு எங்கேயாவது போய்ட்டே இருப்பேன். அப்போதான் அந்தப் பிரச்னை ஆரம்பிச்சது. பதினஞ்சு நாள், இருபது நாளுக்கு ஒருமுறை விலக்காகிடுவேன். உடம்பே கரைஞ்சுபோற மாதிரி ரொம்பக் கஷ்டப்பட்டேன்.

டாக்டர்ட்ட போனப்போ ஸ்கேன் பண்ணிப் பாத்துட்டு, ‘யூட்ரஸ்ல சின்ன கட்டி இருக்கு. யூட்ரஸையே எடுக்கணும்’ னுட்டாங்க. எனக்கு சர்ஜரி பண்ணின டாக்டர் கனகவல்லி, ‘உனக்கு முப்பத்தேழு வயசுதானே ஆகுது. ஓவரிஸை எடுக்க வேணாம். அதைஎடுத்துட்டா, ரொமான்டிக்கான உணர்வுகள் செத்துப் போய்டும்’னு சொன்னாங்க. அதுக்கு எங்கம்மா, ‘அதனால என்ன டாக்டர்? அவ புருஷன்தான் உயிரோட இல்லையே’னு சொல்லவும் டாக்டர், ‘அப்படிச் சொல்லாதீங்கம்மா. உணர்வுகள் வேற. கல்யாணம், புருஷன்ங்கிறதெல்லாம் வேற. அதிலயும் அவ எழுதுறவ. ஒரு லவ்ஸ்டோரி எழுதணும்னாக்கூட இந்த உணர்வுகள் வேணும்’னு சொல்லிட்டாங்க. நல்லவேளையா, கால் உடைஞ்சு ஆஸ்டியோபொராஸிஸ் வந்து நான் கஷ்டப்பட்டப்போ, அந்த ஓவரீஸ்தான் என்னைக் காப்பாத்துச்சு. அதுலருந்து சுரக்குற ஹார்மோன்களால தான் என் உடம்புக்கு இன்னிக்கு வரைக்கும் கால்சியம் கிடைச்சிட்டிருக்கு.

யூட்ரஸ் எடுத்ததுக்கப்புறமா, நாற்பத்தோரு வயசுல எனக்கும் மெனோபாஸ் வந்தது. திடீர்னு தலைக்குள்ள என்னவோ கொதிக்கிற மாதிரி இருக்கும். சட் சட்னு கோபம் வரும். பிபி|தான் அதிகமாகிடுச்சு போலனு டாக்டர்ட்ட போனா, பிபி நார்மலா இருக்கும். அப்போதான், டாக்டர், ‘இது மெனோபாஸ். உங்க விஷயத்துல மாதவிலக்கு இருக்காதே தவிர, மத்த எல்லாக் குழப்பங்களும் இருக்கும்’னாங்க. இப்போ யோசிச்சுப் பாத்தா, ‘நான்தானா அப் படி எரிச்சல் பட்டேன்’னு ஆச்சரியமா இருக்கு. அது ஒருமாதிரி, ‘நம்மள நாமே இழந்துடற’ நிலைமை. மத்தவங்களுக்கு அந்த நேரத்துல ஆறுதல் சொல்ல, வீட்டுக்காரர் இருப்பாங்க. என் விஷயத்துல வீட்டுக்காரனும் நானே. வீட்டுக்காரியும் நானே. என்னை நானேதான் தேத்திக்கணும்.

சின்ன வயசுல இருந்தே எனக்கு ஒரு புத்தி. எதுக்காகவும் ரொம்ப நேரம் அழவோ வருத்தப்படவோ மாட்டேன். கொஞ்ச நேரம் மனசு விட்டு அழுதிட்டு விட்டுடுவேன்.

அப்படிப்பட்ட நானே அந்த நேரத்துல ‘நானுறங்கும் நாள் வேண்டும்.. சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்.. என் கண்ணில் நீர் வேண்டும்.. சுகமாக அழ வேண்டும்’னு ஒரு சினிமா பாட்டுல வருமே அது மாதிரி, எனக்குனு யாருமே இல்லையேனு ரொம்பத் தவிச்சுப் போய்ட்டேன். அந்த நேரம் என் தங்கை என்கூடவே ஆறுதலா இருந்தா.

இப்போ பாருங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நேத்து பெய்த மழையில ஒரு பையனும் பொண்ணும் வீட்டுக்குத் தெரியாம வந்திருக்குங்க போல.. ஸ்கூட்டர்ல நனைஞ்சுட்டு, என் வீட்டு வழியா போச்சுங்க. எனக்கு அதுங்கள பாக்க ஆசையா இருந்தது. என்னோட உணர்வுகள நல்லபடியா வெச்சிருக்கிற கடவுளுக்கு நன்றி சொன்னேன்.

என் உடலுக்குத்தான் வயசாச்சே தவிர, மனசு இன் னும் இளமைத்துள்ளலோட தான் இருக்கு’’

சந்தோஷத்தை மீட்க முடியும்.. 

வசுமதிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஏன் தன் கணவரின் புத்தி இப்படிப் போனது? இத்தனை வருடங்களாகத் தன்னைத் தவிர வேறொரு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காத மனிதர் திடீரென்று வேலைக்காரியிடம் போய் இப்படி நடந்து கொள்வார் என்பதை வசுமதி நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. முதலில் வேலைக்காரியின் மீதுதான் சந்தேகம் வந்தது. ஆனால், கணவரிடம் கேட்டபோது அவர் அதை மறுக்காததும் வேலைக்காரியின் முகம் பார்க்கக் கூசியதும் உண்மையை டமாரம் அடித்தன. கூசிப் போனார் வசுமதி. நல்லவேளையாகத் தன்னைக் காப்பாற்றிக் கொண்டுவிட்ட வேலைக்காரி, ‘இனிமே ஒன் சங்காத்தமே வாணாம்மா.. நாங்க வயித்துக்கு இல்லேன்னாலும் ஈனப் பொழப்புப் பொழக்கிறவங்க இல்லÕ என்று தூற்றி வாரிப் பேசியது மனதை என்னவோ செய்தது. ‘தன் கணவன் இப்படியா?Õ என்று குறுகிப் போய் இருந்தவளை மேலும் குறுக்கின கணவனின் வார்த்தைகள்.

‘‘வசு.. என்னை மன்னிச்சிடும்மா.. ஒரேடியா எல்லாத்தையும் சொல்லிடுறேன்’’ என்று ஆரம்பித்தபோதுகூட இப்படியான விஷயங்கள் அவர் வாயிலிருந்து வரும் என்று எதிர்பார்த்திருக்க வில்லை.

‘‘நான்.. ரெண்டு மூணு தடவ சிவப்பு விளக்குப் பகுதிக்குக்கூடப் போய்ட்டு வந்தேன் வசு..’’ என்று அவர் சொல்லி முடித்தபோது வசுமதிக்குத் தான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோமா என்கிற சந்தேகம் வந்தது. ஆத்திரம், அழுகை, கோபம் எல்லாம் முடிந்து யோசித்துப் பார்த்தபோது ‘இது சாதாரணமாக விடக்கூடிய விஷயமில்லை’ என்பது புரிந்தது.

‘‘உடனடியாக என்னிடம் வந்தார்கள்’’ என்று தொடங்கினார் டாக்டர் நாராயண ரெட்டி.

‘‘ ‘இவருக்கு கவுன்சிலிங் பண்ணுங்க டாக்டர்’ என்றுதான் அந்த அம்மா கேட்டார்கள். ஆனால், கவுன்சிலிங் தேவைப்பட்டது அந்த அம்மாவுக்குத்தான். மெனோபாஸை அடைந்திருந்த அவருக்கு தாம்பத்திய உறவு பெரும் வலி தரும் விஷயமாக மாறிவிட்டது. காரணம்.. பெண்ணுறுப்பை வழவழப்பாக வைத்திருக்கிற திரவம் சுரக்காமல் போனதுதான். பயத்தில் அந்த அம்மா தன் கணவரை நெருங்கவே விடவில்லை. அதன் விளைவுதான் இது. குறைந்தபட்சம் தன் கணவருடன் இந்தப் பிரச்னைகளை அவர் பகிர்ந்து கொண்டிருந் தால்கூட, அவருக்குப் புரிந்திருக்கும். இவர் காரணமே சொல்லாமல் நெருங்கவும் விடாமல் முரண்டு பிடிக்கவும் தான் இப்படி ஒரு தவறைச் செய்திருக்கிறார்.

தான் மாதவிலக்கு நிற்கிற நிலையில் இருப்பதைச் சொன் னால், எங்கே தன்னைக் கணவருக்குப் பிடிக்காமல் போய்விடுமோ என்கிற பயம் தான் பகிர்ந்து கொள்ளாததற்குக் காரணம். பிறகு, அவர்கள் இருவருக்குமே கவுன்சிலிங் செய்து, ஹெச்.ஆர்.டி. (ஹார்மோன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபி) பற்றிச் சொல்லி, சிகிச்சையும் எடுத்த பிறகு இப்போது சந்தோஷமாக இருக்கிறார்கள்’’ என்றார்.

ÔÔஇந்தச் சமயத்தில் தாம்பத்தியம் தொடர்பான என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன?ÕÕ என்று கேட்டோம்.

ÔÔமனரீதியான, உடல்ரீதியான என்று இரண்டு வித பிரச்னைகள் ஏற்படும். மனரீதியாக, செக்ஸ் மேல் ஒரு வெறுப்பு ஏற்படும். சிலருக்கு நார்மலாக இருந்த காலகட்டத்திலேயே செக்ஸ் மேல் பெரிய ஆர்வம் இருந்திருக்காது. அதற்கு அவருடைய கணவர்தான் முக்கியக் காரணம். ‘ஃபோர்ப்ளே’ எனப்படுகிற தாம்பத்தியத்துக்கு முந்தின விளையாட்டுக்கள் பற்றியெல்லாம் தெரியாமல் தாம்பத்திய சுகம் பற்றிய உணர்வே இல்லாமல் இத்தனை காலமும் அதை ஒரு சுமையாகவும் வலியாகவும் பயம் தரக்கூடிய நிகழ்வாகவுமே நினைத்தவர்கள் இப்போது மிகப் பெரிய விடுதலையை அடைந்து விட்டதாகவே நினைப்பார்கள். ‘இனி, கணவரிடம் சொல்வதற்கு ஒரு சாக்குக் கிடைத்து விட்டது’ என்று சந்தோஷப்படுவார்கள். இவர்கள் தாம்பத்தியத்தை மன ரீதியான சந்தோஷமாகவே உணரவே முடியாமல் போனவர்கள். இவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து இனியும்கூட சந்தோஷத்தை உணரச் செய்ய முடியும்.

இன்னொரு விதத்தினர், மனதில் ஆர்வமிருந்தாலும் பல வருடங்களாகி விட்டதால் ஒரே மாதிரியான விதத்தில் தாம்பத்தி யம் இருப்பதால் போரடித்துப் போய் சுவாரஸ்யம் காட்ட மாட்டார்கள். வருடம் ஒருமுறை வெளியூருக்குப் போவது, விதம்விதமான ஃபோர்ப்ளேயில் ஈடுபடுவது, உறவுக்கான பொசிஷன்களை மாற்றுவது போன்றவை இவர்களை கடைசி வரைக்கும் சந்தோஷமான தாம்பத்திய வாழ்க்கையில் வைத்திருக்கும்.

இனி, உடல்ரீதியான பிரச்னை களைப் பார்க்கலாம். முதலாவது, வெஜைனிஸ்மஸ்.

பெண்ணுறுப்பு வறண்டு போனதால் தாம்பத்தியத்தின்போது திடீரென்று பயங்கர வலி இருந்திருக் கும் இவர்களுக்கு. இரண்டாவது முறை அப்படி வலித்து விடுமோ என்கிற பயத்தில் பெண்ணுறுப்பின் சதையைக் கையால் இறுக்கப் பிடித்துக் கொள்வார்கள் இவர்கள். இதனால், உறவு சாத்தியமற்றுப் போய் விடும். கை வலி, கால் வலி என்றால் மருத்துவரிடம் போகிறவர்கள் இதற்கும் முதலிலேயே மருத்துவரிடம் போயிருந்தால் மருந்து கொடுத்திருப்பார். சரியாகியிருக்கும்.

இரண்டாவது, ஆர்காஸ்மிக் டிஸ்ஃபங்ஷன் எனப்படுகிற பெண் உச்ச நிலையை அடையாதிருக்கும் பிரச்னை. இது பொதுவாக நிறையப் பெண்களுக்கு ஏற்படுவது. இவர்களுக்கு ஹெச்.ஆர்.டி. தர வேண்டும். கூடவே பெண்ணுறுப்புப் பகுதியில் செயற்கையான வழவழப்புத் தன்மையைத் தருகிற ஜெல் தடவ வேண்டும். சிலர், தாங்களாகவே விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெயைத் தடவுவார்கள். இது ரொம்பத் தப்பு. ஏற்கனவே இருக்கிற பிரச்னை போதாதென்று புதிதாக இன்ஃபெக்ஷனை ஏற்படுத்தி விடும் இந்த சுய மருத்துவம்.

மூன்றாவது, உடல்நலமில்லாததால் ஏற்படுகிற ஈடுபாட்டின்மை. ஏற்கெனவே, உடல் வலி, மூட்டு வலி என்று சிரமப்படுகிறவர்களுக்கு மனதில் ஆர்வம் இருந்தாலும் வலிகளால் உடலில் ஆர்வம் இருக்காது. இப்படியே ஈடுபடாமல் விடும்போது பெண்ணுறுப்பு சுருங்கிப் போகும். பிறகு, நினைத்தால்கூட தாம்பத்தியத்தில் ஈடுபடவே முடியாமல் போகலாம். இந்த நிலைவரை விடாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும்.

மெனோபாஸ் என்பதைப் பல பெண்கள் தாம்பத்தியத்துக்கான முற்றுப்புள்ளி என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது தவறு. இது குழந்தைப் பிறப்புக்கான முற்றுப் புள்ளிதானே தவிர, தாம்பத்தியத்துக்கானதல்ல.சொல்லப் போனால், மெனோபாஸ§க்குப் பிறகுமுன்னைவிடவும் அதிகமாக தாம்பத்திய சந்தோஷத்தை அனுபவிக்கிறவர்களும் உண்டு. வாக் போவது,யோகா செய்வது, சரிவிகித உணவு சாப்பிடுவது, எந்த வலியையும் அலட்சியம் செய்யாமல் உடனடியாக உடலுக்கு முக்கியத்துவம் தருவது, முழு உடல் பரிசோதனைகளைச் செய்வது இவற்றைத் தொடர்ந்து செய்தாலே கடைசி வரையிலும் இயல்பான சந்தோஷமான தாம்பத்தியம் எல்லாருக்குமே சாத்தியம்தான்ÕÕ என்றார் டாக்டர் நாராயணரெட்டி.

இதயத்துக்கு இதமானது எது? 

‘‘‘இந்த உலகத்தில் அம்மாவின் இதயத்தை விட இனிமையானது எதுவுமே இல்லை’ என்பார்கள். அம்மாதான் மொத்தக் குடும்பத்தையும் பாதுகாப்பவர். அவருடைய இதயம் ஆரோக்கியமாக இருந்தால்தான் குடும்பம் சந்தோஷமாக இருக்கும்.

இந்த அம்மாக்கள்தான் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறார்கள் என்றால்.. பிள்ளைகள் அவர்களை அப்படியே விட்டு விடக்கூடாது. தன்னுடைய உடம்புக்கு ஏதேனும் வந்தால் வற்புறுத்தி, வலியுறுத்தி மிரட்டியாவது மருத்துவரிடம் அழைத்துப் போகும் அம்மாவை அதே முறையில் ரெகுலர் செக்கப்புகளுக்கு அழைத்துச் செல் வது ஒவ்வொரு பிள்ளையின் கடமை’’ என்கிறார் டாக்டர் ஆஷா குருமூர்த்தி.

‘‘மாதவிலக்கு ஏற்படும் காலகட்டங்களில் பெண் களாகிய நாம் கிட்டத்தட்ட எல்லாவிதமான இதய நோய்களிலிருந்தும் பாதுகாக்கப் படுகிறோம். அந்த வகையில் மெனோபாஸ் சற்று சிக்கலான பருவம்தான்.

சரியாக, மெனோபாஸை அடைந்ததும் இதயநோய் ஏற்பட ஆணுக்கு இருக்கிற அதே அளவு ரிஸ்க்.. சமயத்தில் ஆணை விடவும் இரண்டு மடங்கு ரிஸ்க் நமக்கு இருக்கிறது. திடீரென்று ஹார்மோன்கள் சுரக்காமல் போவதுதான் இதன் காரணம்ÕÕ என்கிறார் டாக்டர் ஆஷா.

‘‘நம் உடலில் சுரக்கின்ற விசேஷ ஹார்மோன்கள்தான் நம்மை ஆணை விடவும் வலிமை மிக்கவர்களாக வைத்திருக்கின்றன. அவர்களை விடவும் வலி தாங்குகிறோம். வீடு, அலுவலகம் என்று இரண்டையும் அநாயாச மாகக் கையாளுகிறோம். ஆனால், இதிலும் ஒரு விநோதம் இருக்கிறது. இயற்கையாக இந்த ஹார்மோன்கள் சுரக்கும்போது அவை இதயநோயைத் தள்ளி வைக்கின்றன. செயற்கை யாக இவை தரப்படும்போது இவையே இதயநோயை வரவைக்கின்றன.

கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.கர்ப்பத் தடைக்கு,மாதவிலக்கைத் தள்ளிப்போடுவதற்கு என்று ஹார்மோன் மாத்திரை எடுத்துக் கொள்கிறவர்களுக்கு இதய நோய்க்கான வாய்ப்பு அதிகம்.

மாதவிலக்கு வரும் காலத்தில் இந்த விஷயங்களில் கவனம் தேவை. சும்மா எதற்கெடுத்தாலும் மாதவிலக்கைத் தள்ளிப்போட ஹார்மோன் மாத்திரை சாப்பிடக் கூடாது. அதேபோல, கர்ப்பத் தடைக்கும் மாத்திரை தவிர்த்து மற்ற வழிகளை முயற்சிக்கலாம்.

மெனோபாஸ் சமயத்தில்தான் முன்பு எடுத்த ஹார்மோன் மாத்திரைகளின் தாக்கம் தெரியும். அப்படியெனில், ‘மெனோபாஸ§க் குப் பிறகு, ஹார்மோன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபி’ எடுப்பதும் இதயத்துக்கு ஆபத்தை விளைவிக்குமா?’ என்றொரு கேள்வி உங்களுக்கு எழும்.

இல்லவே இல்லை. ஹெச். ஆர்.டி. இதய நோயைத் தள்ளிப் போடும்.
‘என்னங்க.. டாக்டர் குழப்புறீங்களே..’ என்கிறீர்களா? முன்பு எடுத்தது ஏற்கெனவே இருக்கிற ஹார் மோனுடன் கூடுதலாக. இப்போது எடுப்பது இல்லாத ஹார்மோனை ஈடுசெய்ய.
ஹார்மோன் இல்லாததால்தான் இதயநோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. ஈடுசெய்வதால் அந்த வாய்ப்புக் குறைகிறது. வெளி நாட்டவர்கள் மெனோபாஸ் நிலையில் பதறியடித்துப் போய் ஹெச்.ஆர்.டி. சிகிச்சைக்கு ஓடுவது இளமைத் தோற்றம் தர மட்டுமல்ல. இதயநோயைத் துரத்தவும்தான்.

இதயநோயைத் துரத்த வேறு என்னவெல்லாம் செய்யலாம்? 

தினம் தினம் கண்டிப்பாக 15 நிமிடமாவது நடக்க வேண்டும். வெளியில் போய் நடக்க சங்கடமெனில் வீட்டிலேயே ‘ட்ரெட் மில்’ வாங்கி வைத்து நடக்கலாம். சாப்பாட்டு முறையையே மாற்ற வேண்டும். ‘முன்னே சாப்பிட்ட அதே அளவுதான் இப்பவும் சாப்பிடுறேன். திடீர்னு ஏன் குண்டானேன்?Õ என்பார்கள் சிலர். முன்பு செரித்த அளவுக்கு இப்போது செரிப்பதில்லை என்பதுதான் காரணம்.

சுலபமாக செரிக்கக்கூடிய பச்சைக் காய்கறிகள், பழங்களை உணவில் சேர்க்க வேண்டும். ஃபாஸ்ட் ஃபுட் கடைகளுக்குப் போவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் மூழ்கடிக்கப்பட்டு, பொரித்தெடுக் கப்பட்ட ஐட்டங்களை மறக்க வேண்டும்.

அப்புறம்.. மிக முக்கியமானது டென்ஷனுக்கு பை சொல்ல வேண்டும். இந்தச் சமயத்தில் சின்ன விஷயத்துக்கெல்லாம் பெரிதாகக் கோபம் வரும். பிபி எகிறும். இதைக் கட்டுப்படுத்த, யோகா, மெடிட்டேஷன் செய்ய லாம். இவை மனதுக்கு அமைதி தருகின்றன. எக்கச்சக்கமாகத் துடிக்கிற இதயத்தை ‘கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோப்பாÕ என்று கட்டுப்படுத்துகின்றன இவை.

‘சரி.. இதயத்தில் பிரச்னை ஏற்பட்டால்தான் என்ன? இப்போதெல்லாம் பைபாஸ் சர்ஜரி என்பது மிகச் சாதாரண விஷயமாகி விட்டதே’ என்கிறீர்களா?

அது ஆண்களுக்கு. இயல்பாகவே அவர்களுக்கு பைபாஸ் செய்யப்படுகிற ரத்த நாளம் பலமாக இருக்கிறது. பெண்களுக்கு இது ரொம்ப வீக். இதனால், பைபாஸ் ஆண்களுக்கு ரொம்பச் சாதாரணமாகி விட்டாலும் பெண்களைப் பொறுத்தவரையில் அது இன்னமும் சற்று சீரியஸ் ரகம்தான். வரும்முன் காப்பது எப்போதுமே நல்லது. அதிலும், பெண்களின் இதய விஷயத்தில் ரொம்ப ரொம்ப நல்லது’’ என்கிறார் டாக்டர் ஆஷா.

வரும்முன் காப்போம்! 

‘‘மாதவிலக்கு முற்றிலும் நின்றுபோன பிறகு திடீரென்று ஒரு வருடம் கழித்து ரத்தப்போக்கு இருந்தால், அது கேன்சர் முற்றிய நிலையாக இருப்பதற்கான வாய்ப்பு மிக அதிகம். அதனால்தான் மெனோபாஸ் நிலையில் சில பரிசோதனைகளை செய்ய வேண்டியது அவசியம்’’ என்கிறார் டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா.

மேமோக்ராஃபி, வெஜினல் அல்ட்ராசவுண்ட் எனப்படுகிற பிறப்புறுப்பில் ஸ்கேன் செய்வது, பாப்ஸ்மெர் டெஸ்ட்.. இந்த மூன்றும் அத்தியாவசியப் பரிசோதனைகள். ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

மேமோக்ராஃபி, மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா என்று பார்ப்பதற்கான பரிசோதனை. வருஷா வருஷம் ஒரே சென்டரில் இதைச் செய்ய வேண்டியதும் ஒவ்வொரு வருடத்துக்கான ரிசல்ட்டுகளையும் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டியதும் அவசியம்.

இது தவிர, மார்பகங்களில் கட்டி இருக்கிறதா என்று பார்க்கிற சுய பரிசோதனையையும் தவறாமல் மாதாமாதம் மேற்கொள்ள வேண்டும்.

இரண்டாவது பரிசோதனை வெஜினல் அல்ட்ராசவுண்ட். இது எதற்கு பயன்படுகிறது என்று பார்க்கலாம்.

கர்ப்பப்பையின் உள்ளே இருக்கிற எண்டோமெட்ரியம்தான் மாதவிலக்காக வெளிப்படுகிறது. மெனோபாஸ§க்குப் பிறகு இந்த எண்டோமெட்ரியம் வளர்வதில்லை. மாதவிலக்கும் ஆவதில்லை. இது நார்மல்.

சிலருக்கு, மெனோபாஸ§க்குப் பிறகும் இந்த எண்டோமெட்ரியத்தின் வளர்ச்சி இருக்கும். ஆனால், மாதவிலக்கு ஏற்படாது. இப்படி வளர்ச்சியடைகிற எண்டோமெட்ரியம், எண்டோமெட்ரியல் கேன்சராக மாறுவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம்.

இந்த வளர்ச்சியை டக்கென்று காட்டிக் கொடுத்து விடும் வெஜினல் அல்ட்ராசவுண்ட்.

இந்த வளர்ச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் எண்டோமெட்ரியத்திலிருந்து கொஞ்சம் வெட்டி எடுத்து பயாப்ஸிக்கு அனுப்புவார்கள்.. கேன்சராக இருக்குமோ என்று பார்க்க. கேன்சராக இல்லாவிட்டாலும்கூட, இதை அகற்றி விடுவதும் தொடர்ந்து சிகிச்சை எடுப்பதும் அவசிய மானது.

அடுத்தது பாப்ஸ்மெர் டெஸ்ட். 

இதில் பிரமாதமான விஷயம் என்ன தெரியுமா? கேன்சரை மிக மிக ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவுவதுதான். இதனால் கேன்சரை முற்றிலும் குணப்படுத்துவதும் சுலபம். முப்பதாவது வயதிலிருந்தே இந்த டெஸ்ட்டை செய்து பார்க்க வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் இந்த மெனோபாஸ் நிலையிலாவது செய்வது மிக மிக அவசியம்.

இன்னொரு முக்கியமான விஷயம்.. ஹெச்.ஆர்.டி. எடுக்கிறவர்கள் கேன்சர் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு கேன்சர் வருவதற்கான சாத்தியம் உண்டு. அதற்காக, ஹெச்.ஆர்.டி. எடுக்கவே கூடாது என்று அர்த்தமில்லை. நம் ஊரில் ஒரு வழக்கம் இருக்கிறது. ஐம்பது வயதில் எடுக்கிற ஹெச்.ஆர்.டி. மாத்திரைகளை அடுத்த ஐந்து வருடங்களுக்கு டாக்டரின் ஆலோசனையின்றி சாப்பிடுவார் கள். இதுதான் தவறு. ஆறு மாதங்களுக்கொருமுறை டாக்டரை சந்தித்து அவர் அனுமதியுடன் எடுத்தால் ஒரு பிரச்னையு மில்லை.

கூடாகும் எலும்பு! 

மெனோபாஸ் பருவத்தில் அடியெடுத்து வைக்கும் பெரிமெனோபாஸ் நிலையில் இருப்பவர்கள் கண்டிப்பாக ‘ஆஸ்டியோபொராஸிஸ்’ பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

‘‘நமது உடலில் இரும்புபோல உறுதியாக இருக்கும் எலும்புகள் உறுதியிழந்து பேப்பர் சுருள் போல மாற ஆரம்பிப்பதுதான் ஆஸ்டியோபொராஸிஸ்’’ என்கிறார் டாக்டர். சௌந்தரபாண்டியன்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கொஞ்சம் அழுத்தமாகக் கையூன்றி எழுந்தாலே மணிக்கட்டு எலும்புகள் முறிந்துவிட வாய்ப்பு உண்டு. அவ்வளவு ஏன்? ஆட்டோவில் சென்றால் அதன் குலுக்கலிலேயே இடுப்பு எலும்பும் முதுகெலும்பும் முறிந்துவிடலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஆண்களுக்கும் வரும் என்றாலும் இது பெண்களைத்தான் அதிகமாகக் குறிவைத்துத் தாக்குகிறது. அதிலும் குறிப்பாக, மெனோபாஸ் நிலையை அடைந்துவிட்ட நால்வரில் ஒருவர் இந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆஸ்டியோபொரோஸிஸ் பற்றி இங்கே விரிவாக விளக்குகிறார் டாக்டர் சௌந்தர பாண்டியன்.

‘‘நம் உடல் எலும்பு தேனடை மாதிரியான ஒரு அமைப்பில் இருக்கிறது. புரோட்டினால் ஆன தேனடை என்று சொல்லலாம். தேனீக்கள் தேனடையின் ஒவ்வொரு இடைவெளியிலும் தேனை சேகரித்து வைப்பதுபோல நம் உடம்பில் சேர்கிற மொத்த கால்சியமும் இந்த புரோட்டீன் தேனடையின் இடைவெளியில்தான் சேகரித்து வைக்கப்படுகிறது. அங்கு கால்சியம் சேர்ந்திருக்கும்போது எலும்பு உறுதியாக இருக்கும். அந்த கால்சியம் நம் உடம்பின் தேவைக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் கலக்கும்போது எலும்பில் இருக்கும் கால்சியம் மெதுமெதுவாகக் குறைந்து உள்ளே வெறும் கூடாக எலும்பு மாறிப் போகிறது.. அதனால்தான் சின்ன அதிர்வு என்றால்கூட அத்தனை பாதிப்பு.

இந்த ஆஸ்டியோபொரோஸிஸ் இளமையில் வருவதில்லை. காரணம், குழந்தை வளரும்போது அதன் எலும்பில் கால்சியம் அதிகமாக சேர்த்து வைக்கப்பட்டிருக்கும். அப்போது உடல் தேவைக்காக கால்சியம் ரத்தத்தில் கலந்தாலும், நாம் சாப்பிடும் உணவின் மூலம் திரும்பவும் எலும்புகளை அடைந்து அதன் உறுதியை ஈடுகட்டிவிடும். முப்பத்தைந்து வயதிற்குப் பிறகுதான் பிரச்னைகள் ஆரம்பிக்கின்றன.

ஏனென்றால், அதன்பிறகுதான் நாம் உணவாக எடுத்துகொள்ளும் கால்சியத்தின் அளவு மெதுவாகக் குறைகிறது. இன்னொரு பக்கம் கால்சியத்தை எலும்பில் சேர்த்து வைக்க உதவும் ஹார்மோன்களின் சுரப்பும் குறைய ஆரம்பிக்கிறது. அதனால் இந்தப் பிரச்னை இன்னும் கொஞ்சம் பெரிதாகிறது. வயதானவர்கள் கூன் போட்டு நடப்பது இதனால்தான். முதுகுத்தண்டு எலும்புகள் வலுவிழந்து கொஞ்சம் கொஞ்ச மாக நுனியிலிருந்து நொறுங்கிக் கொண்டே வருகின்றன.

மெனோபாஸான பெண்களுக்கு இந்த நோய் அதிகமாக வரும். வயதாக ஆக இந்த நோய் தாக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும். அதிலும் சில பெண்களுக்கு ஏற்கெனவே எலும்பு மென்மையாக இருக்கும். எலும்பு தன் எடையை இழக்கும்போது இன்னும் மென்மையாகி வலுவிழந்து விடும்.

அதற்காக, ஒல்லியாக இருக்கும் பெண்களுக்கு இந்த ஆபத்து இன்னும் அதிகம் என்று அர்த்தமல்ல. ஒல்லி எலும்பு உள்ளவர்கள், பார்க்க பருமனாகவும் இருக்கலாம். உடல் தோற்றத்தை வைத்து கணிக்க முடியாது. எக்ஸ்ரேயின் மூலம்தான் கண்டுபிடிக்க முடியும்.

ஆஸ்டியோபொராஸிஸ் தாக்குதலுக்கு உள்ளாக சந்தர்ப்பம் இருக்கும் அடுத்த ரகத்தினர், அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப் பையுடன் ஓவரியையும் எடுத்த இளம் பெண்கள். பொதுவாக, கர்ப்பப்பை நீக்கும்போது ஓவரியை எடுக்க மாட்டார்கள். காரணம், ஓவரியிலிருந்து தான் பெண்களின் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் இரண்டும் சுரக்கின்றன. ஓவரியை எடுப்பதன் மூலம் அந்த ஹார்மோன்களின் சுரப்பு தடுக்கப்படுகிறது.

இயல்பாகவே இந்த ஹார்மோன்கள் குறைவாகச் சுரக்கும் பெண்களும்கூட (மாதவிலக்கு மூன்று மாதம் ஆறுமாதம் என்று விட்டுவிட்டு வரும் பெண்கள்) இந்த நோயின் பிடிக்குச் சுலபமாக ஆளாகிறார்கள். பாட்டியோ, அம்மாவோ இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், உணவில் தேவையான கால்சியம் சேர்க்காதவர்கள், வெயிலுக்கே முகம் காட்டாதவர்கள், சாதாரண உடற் பயிற்சிகூட இல்லாமல் சும்மாவே உட்கார்ந்திருப்பவர்கள் போன்றவர்களுக்கும் இந்த ரிஸ்க் உண்டு.

இந்த நோய் தாக்குவது பெரும்பாலும் மெனோபாஸ§க்கு பிறகுதான் என்பதால், எலும்பு முறிவு ஏற்பட்டால் அந்த வயதில் எலும்புகள் திரும்ப ஒன்று சேர்வது கடினம். இளம் வயதில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுக்கையில் இருப்பவர்களைவிட, இவர்கள் இன்னும் சீக்கிரமே படுக்கையைவிட்டு எழுந்து நடமாட முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், நோயின் தீவிரம் அதிகமாகும். எந்த அளவுக்கு உடல் ஆக்டிவாக இருக்கிறதோ அந்தளவுக்கு ஆஸ்டியோபொரோஸிஸின் தாக்கத்தைக் குறைக்க முடியும்.

இதை வர விடாமல் தடுக்க, கால்சியம், புரோட்டீன் கலந்த உணவுகளைத் தினமும் உணவில் சேர்க்க வேண்டும். மெனோபாஸான பெண்ணுக்கு ஒரு நாளைக்கு 1500 மி.லி கிராம் கால்சியம் தேவை.

விட்டமின் டி ரொம்ப ரொம்ப முக்கியம். இதற்கு தினமும் மாலை நேரத்தில் வெயில் உடம்பில் படுமாறு ஒரு வாக் போய் வாருங்கள்.

உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் உடலும் எலும்பும் வலுவேறும். சைக்கிள் ஓட்டுவது, பாட்மிட்டன், டென்னிஸ் போன்ற விளை யாட்டுக்களும் எலும்பின் அடர்த்திக்கு உரம் சேர்க்கும். கால்சிடோனின் என்ற ஹார்மோன் எலும்பின் அடர்த்திக்கு உதவுகிறது. இது ஊசியாகவும் மூக்கினால் உறிஞ்சக்கூடிய வகையில் மருந்தாகவும் கிடைக்கிறது.

எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி ஆஸ்டியோபொரோஸிஸ் வந்தேவிட்டால், கால்சியம், புரோட்டீன் நிறைந்த சாப்பாடு, உடற்பயிற்சி, மாலை வெயில் என்று அனைத்து விஷயங்களையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். கால்சியம் பற்றாக்குறை ஏற்படும் என்ற சூழ்நிலையில் கால்சியம் மாத்திரைகளையும் விட்டமின் டி மாத்திரைகளையும் மருத்துவரின் ஆலோசனையோடு சாப்பிடலாம்.

இதுதவிர, ஈஸ்ட்ரோஜென் ரீப்ளேஸ்மெண்ட் தெரபியையும் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கவென்றே இருக்கிற சிறப்பு மருந்துகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த நோய் வருவதற்கு முன்பே கண்டுபிடிக்க முடியாதா என்று கேட்டால், முடியும். செலவு கம்மியான சுலபமான விஷயம் இது. எக்ஸ்ரே மூலம் எலும்பின் அமைப்பு எப்படி இருக்கிறது என்று எலும்பு நோய் சிகிச்சை நிபுணரால் ஓரளவு கண்டுபிடிக்க முடியும். அதில் கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் டெக்ஸா (DEXA) எனப்படுகிற ஒருவகை சிறப்பு டெஸ்ட் செய்து தெரிந்து கொள்ளலாம்.

அல்ட்ரா சவுண்டு, சி.டி.ஸ்கேன் போன்றவற்றாலும் இந்த நோயை கண்டுபிடிக்க முடியும். இந்தப் பரிசோதனை முறைகள் வலியோ பக்க விளைவுகளோ இல்லாதவை.எதிர்காலத்தில் ஆஸ்டியோ பொரோஸிஸ் தாக்கும் வாய்ப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை துல்லியமாககணித்துச் சொல்பவை.

மெனோபாஸ§க்குப் பிறகு இவற்றை வருடம் ஒருமுறை செய்து வந்தால் ‘ஆஸ்டியோபொராஸிஸா அப்படினா?!’ என்று கேட்கலாம்..”

உணவே மருந்து! 

கால்சியம் இல்லாததால் என்னென்ன பிரச்னைகள் என்று பார்த்தோம்.

‘‘சரியான உணவுப் பழக்கம் இருந்தாலே எந்தப் பிரச்னையும் வராமல் பாதுகாக்க முடியும்’’ என்கிறார் நியூட்ரிஷியன் ஜோத்ஸ்னா ரஜ்ஜா.

‘பெரிமெனோ பாஸ்’ சமயத்தில் இருந்தே தினமும் உணவில் 600 மில்லிலிட்டர் தயிர் சேர்த்து வர வேண்டும். பாலை விடவும் தயிரில்தான் அதிக கால்சியம் இருக்கிறது. கொழுப்புச் சத்து நீக்கப்பட்ட பாலால் ஆன தயிர்தான் சேர்க்க வேண்டும். அல்லது, தயிரில் உள்ள கொழுப்பு, எலும்பின் மேல் எடையாகச் சேரத் தொடங்கி வேறு பிரச்னைகளில் கொண்டு போய் விட்டுவிடும். தயிருடன் பாலும் ஒருநாளுக்கு 300 மில்லி சேர்க்க வேண்டும். இதோடுகூட, சீஸ், பனீர், பால்கோவா, நெல்லிக்காய் போன்றவையும் சாப்பிடலாம்.

எள் நிறையச் சேர்க்கலாம். வெள்ளை, கறுப்பு இரண்டு எள்ளிலுமே கால்சியம், மெக்னீசியம், இரும்புச் சத்துக்கள் உள்ளன. கறுப்பு, வெள்ளை எள் இரண்டையும் சம அளவு கலந்து பொடி செய்து தினமும் மதிய, இரவு உணவின்போது ஒரு டீஸ்பூன் சேர்த்து வந்தால் ஹார்மோன்களால் உடல் இழக்கிற சத்துக்களை இது ஈடு செய்யும்.

ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, கொழுப்புச் சத்து இருக்கிறவர்களும் எள் சாப்பிடலாம். இதில் இருப்பது ஈ.எஸ்.ஏ. எனப்படுகிற எஸன்ஷியல் ஃபேட்டி ஆசிட்தான்.

பச்சைக் காய்கறிகளும் பழங்களும் எக்கச்சக்கம் சேர்க்க வேண்டும். அளவோடு சோயா சேர்க்கலாம். இது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் குறைவை ஈடுசெய்யும். கைக்குத்தல் அரிசி மற்றும் முழு கோதுமை மாவாலான உணவைச் சாப்பிடுங்கள்.

பூசணி,வெள்ளரி, தர்பூசணி போன்றவற்றின் விதைகளையும் உணவில் சேர்க்க வேண்டும். விட்டமின் ஈ இருக்கிற டானிக்கு கள், மீன் சேர்க்க வேண்டும்.

வெற்றிலை, பாக்கு போடுவதின் மூலம் சுலபமாக கால்சியம் கிடைக்கும்.

அடுத்தது வாக்கிங்! தொண்ணூறு சதவிகித வியாதிகளை அண்டவே விடுவதில்லை வாக்கிங்! ‘நானெல்லாம் வீட்டிலேயே அங்கயும் இங்கயுமா நடந்துட்டேதான் இருக்கேன்..’ என்று சொல்கிறவரா நீங்கள்? ஒரு நிமிஷம் ப்ளீஸ்.. ஒரு நாளுக்கு எட்டாயிரம் முதல் பத்தாயிரம் அடிகள் மிக வேகமாக நடப்பதுதான் சரியான பயிற்சி. இப்போது யோசியுங்கள்.. வீட்டுக்குள் நீங்கள் எத்தனை அடிகள் நடக்கிறீர்கள்? நடக்க ஆரம்பியுங்கள். சந்தோஷ மாக, அமைதியாக, சிரித்த முகத்துடன் மெனோபாஸை வரவேற்கும் உற்சாகத்தை அந்த நடையும் நீங்கள் சாப்பிடுகிற உணவும் தரும்.

நன்றி அவள்விகடன்

பிரசவத்தின் மூன்று முக்கிய கட்டங்கள்

மருத்துவர் ஜெயசிறீ கஜராஜ் :

நான் சுமார் நாற்பது மணி நேரம் பிரசவ வலியால் அவஸ்தைப்பட்டேன்…’ ‘ச்சே… உனக்கு அவ்ளோதானா… நான் அம்பத்திரண்டு மணி நேரம்…’ இப்படி, தங்கள் பிரசவ அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளும் பெண்கள் நிறைய. பிரசவ வலி என்பது நாற்பது ஐம்பது மணி நேரமெல்லாம் வரும் விஷயமல்ல. லேசாக எடுக்கும் வலி அல்லது பிரசவ வலி போல் தோன்றக்கூடிய பொய் வலிகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால் மட்டும்தான், மேலே சொன்ன ஐம்பது மணி நேர அவஸ்தை எல்லாம் சாத்தியம்..

True Labour Pain – அதாவது உண்மையான பிரசவ வலியை நாங்கள் கணக்கெடுக்கும் விதம் வேறு. கர்ப்பப்பையின் வாய்ப்பகுதிக்கு Cervix (சர்விக்ஸ்) என்று பெயர். இந்த சர்விக்ஸ் மூன்று சென்டிமீட்டர் அளவுக்கு விரிவடையும்போதுதான் நாங்கள் அதை பிரசவம் தொடங்கிவிட்டதாக கணக்கில் எடுத்துக்கொள்வோம் (Active Labour).

பிரசவத்தை எதிர்கொள்ள அதை நாங்கள் மூன்று முக்கிய கட்டங்களாகப் பிரித்துக் கொள்வோம்.

முதல்கட்டம்: உண்மையான பிரசவ வலி தொடங்கி சர்விக்ஸ் பத்து சென்டிமீட்டர் (முழுவதுமாக விரிவடையும் கட்டம்) அளவுக்கு விரிவடையும் வரையுள்ள கட்டம்தான் முதல்.

இரண்டாம் கட்டம்: சர்விக்ஸ் முழுவதுமாக விரிவடைந்து அதன் வழியே குழந்தை முழுவதுமாக வெளிவருவது வரையிலான பகுதியை இரண்டாம் கட்டம் என்கிறோம்.

மூன்றாம் கட்டம்: குழந்தை வெளி வந்ததோடு விஷயம் முடிவடைவதில்லை. அம்மா உடலிலிருந்து நஞ்சுக் கொடி முழுவதுமாக வெளியேறுவதுதான் அதிமுக்கியம். இப்படி நஞ்சு வெளிவருவது வரையான பகுதியை மூன்றாவது கட்டமாகப் பிரித்துக் கொள்வோம்.

இந்த மூன்று கட்டங்களையும் கவனமாகக் கண்காணிக்க ‘பார்ட்டோகிராம்’ என்கிற ஒரு ரெகார்டை நாங்கள் வைத்திருப்போம். ரெக்கார்டு என்றால் பெரிதாக நினைத்துவிடாதீர்கள். அது வெறும் பேப்பர்தான். என்றாலும், இதுதான் பிரசவத்தின்போது மிக முக்கியமான விஷயமாகக் கருதப்படுகிறது. அதில் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்கள் தொடங்கி, அவர் எப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், எப்போது வலி தொடங்கியது, அனுமதிக்கப்பட்ட போது குழந்தையின் நிலை எப்படி இருந்தது, அதன்பிறகு குழந்தை வெளிவர எந்தெந்தக் கட்டங்களை கடந்துள்ளது போன்ற எல்லா தகவல்களையும் அதில் எழுதி வைத்திருப்போம். இன்னும் சில தகவல்களை கிராப் படமாகப் போட்டும் கண்காணிப்போம்.

எதற்கு இந்த பார்ட்டோகிராம் என்றால், சிலருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே பிரசவமாகலாம். இன்னும் சிலருக்கு சில மணிநேரம் கழித்தும் பிரசவமாகலாம். பேஷண்ட் ஒருவராக இருந்தாலும் அவரை வந்து பார்க்கும் மருத்துவர்கள், நர்ஸ் ஆகியோர் அவ்வப்போது டியூட்டி மாறிக் கொண்டே இருப்பார்கள். அப்படி மாறி மாறி வருபவர்களுக்கு, சம்பந்தப்பட்ட பெண் பற்றிய தகவல்கள் உடனே தெரியத்தான் இந்த பார்ட்டோகிராம் பயன்படுகிறது. அதுதவிர பிரசவத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் அம்மா, குழந்தை என்ற இருவரைப் பற்றிய அத்தனை தகவல்களும் சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு ஒரு பார்வையிலேயே கிடைத்துவிடுவதால் இது மிகப் பயனுள்ள விஷயமாகக் கருதப்படுகிறது.

பிரசவ வலி என்பது, ஏதோ வலி எடுத்தது… உடனே குழந்தை பிறந்தது என்பது போன்ற சாதாரண விஷயமில்லை.. லேசான வலியில் தொடங்கி, அது மெதுமெதுவாய் அதிகரித்து, கடைசியாக சஸ்பென்ஸை உடைப்பதுபோல குழந்தை ரிலீஸ் ஆகும் சந்தோஷ தருணம் அது. சில மணி நேர அவஸ்தைக்குப் பிறகுதான் குழந்தை வெளிவரும். வெளி வரவேண்டும். இந்த வலி மெதுமெதுவாய் அதிகரிக்கவும் ஒரு குறிப்பிட்ட வரைமுறை இருக்கிறது. முதல் பிரசவத்துக்கு ஒரு வகையாகவும் அதன்பிறகு வரும் பிரசவங்களுக்கு வெறுவிதமாகவும் இது அமையும்.

பிரசவ வலி எடுக்கும்போது கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி, அதாவது சர்விக்ஸின் நீளம் வழக்கத்தை விடவும் குறையத் தொடங்கும். இப்படி அதன் நீளம் குறையும்போதே அது மெதுவாகத் திறக்கவும் தொடங்கும். சர்விக்ஸின் இந்த இரண்டு செயல்பாடுகளுமே உண்மையான பிரசவ வலி ஏற்பட்டால் மட்டுமே ஒரே சமயத்தில் நிகழும்.

முதல் பிரசவத்தின்போது மணிக்கு ஒரு சென்டிமீட்டர் அளவுக்கு சர்விக்ஸ் விரிவடையத் தொடங்கும். அதுவே இரண்டாம், மூன்றாம் பிரசவங்களின் போது மணிக்கு 1.5_2 சென்டிமீட்டர் அளவுக்கு திறக்கும். இப்படி ஆவதுதான் நார்மல். இப்படி ஆனால்தான் பிரசவம் இயல்பாக நடந்துகொண்டிருப்பதாகவும் நாங்கள் கொள்வோம்.

ஏன், முதல் பிரசவத்துக்கு ஒரு சென்டி மீட்டராகவும் இரண்டாம், மூன்றாம் பிரசவத்துக்கு சற்றே அதிகப்படியாகவும் சர்விக்ஸ் விரிவடைகிறது என்று கேட்கிறீர்களா? முதல் பிரசவத்தின்போது சர்விக்ஸ் சற்றே இறுக்கமாக இருக்கும். காரணம், அதற்கு இது புது அனுபவமில்லையா… அதனால்தான். அதன்பிறகு அது சற்றே மிருதுவாகி விடுவதால்தான் அதற்கடுத்த பிரசவங்களின்போது அதனால், சற்றே அதிகப்படியாக விரிவடைய முடிகிறது.

கர்ப்பப்பை சரியானபடி இறுக்கமடைந்தால் (Contraction) மட்டும்தான் சர்விக்ஸ் இப்படி விரிவடைய முடியும். கர்ப்பப்பை சரியாக இறுக்கமடைகிறது என்று எப்படிச் சொல்வோம் என்று கேட்டால், அதற்கும் ஒரு கணக்கு இருக்கிறது. பத்து நிமிடங்களுக்கு மூன்று முறையாவது இறுக்கமடைந்தால்தான் கர்ப்பப்பை நார்மலாகச் செயல்படுகிறது என்று நாங்கள் கணக்கில் கொள்வோம். சாதாரணமாகவே இயற்கையாக வரவேண்டிய விஷயம் இது. இது சரியானபடி நடக்கிறதா என்று, நாங்கள் உண்மையான பிரசவவலி தொடங்கியதிலிருந்து நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை கர்ப்பப்பைக்குள் கைவிட்டுப் பரிசோதிப்போம். சர்விக்ஸ் 5_6 சென்டிமீட்டர் அளவுக்கு விரிவடையத் தொடங்கியதுமே, இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தரமாக உள்புற பரிசோதனைகள் செய்வோம்.

இப்படி கையை உள்புறமாக விட்டுப் பரிசோதிக்கும்போது, வெளிப்புறமாக செய்யப்படும் பரிசோதனையைவிட பல கூடுதல் தகவல்கள் நமக்குக் கிடைக்கும். அதன்மூலம் சர்விக்ஸ் எந்த அளவுக்கு விரிவடைகிறது மற்றும் குழந்தையின் தலை எந்த அளவுக்கு தாயின் இடுப்பெலும்புப் பகுதியில் இறங்கியிருக்கிறது போன்ற தகவல்கள் நமக்குக் கிடைக்கிறது. இந்த சமயத்தில் தாயின் வயிற்றை வெளிப்புறமாகத் தொட்டுப் பார்த்தால், குழந்தையின் தலை இன்னும் தாயின் வயிற்றுக்குள் எந்தளவுக்கு உள்ளது என்கிற விஷயமும் தெரியவரும். இதையெல்லாம் தொடர்ந்து கண்காணித்து, எல்லாமே இயல்பாக நடந்தேறினால், இந்த சமயத்தில், இத்தனை மணி நேரத்துக்குள் பிரசவமாகிவிடும் என்று எங்களால் ஓரளவுக்கு முடிவு செய்ய முடியும்.

எல்லாமே இயல்பாகவே நடந்தாலும் சிலருக்கு நேரத்தோடு பனிக்குடம் உடையாமல் தாமதப்பட்டுக்கொண்டே இருக்கும். ஒரு குறிப்பிட்ட கட்டம் வரைக்கும் காத்திருந்து பார்ப்போம். அது தானாகவே உடையாமல் போனால், நாங்களாகவே அதை செயற்கையாக உடையச் செய்துவிடுவோம். இதை மருத்துவரீதியாக Artificial Rupture of Membranes என்போம். இப்படி பனிக்குடம் உடைந்தால்தான் குழந்தை வேகமாகப் பிரசவமாகும்.

பனிக்குடம் உடையும்போது அதிலுள்ள நீர் வெளிவரும். அதை ‘Liquor Amni’ என்று மருத்துவரீதியாக அழைக்கிறோம். இந்த நீர் நார்மலாகத் தண்ணீர் போல எந்தவித நிறமும் இன்றி இருக்கும். இப்படித்தான் இருக்கவும் வேண்டும். ஆனால், சில சமயம் இந்த நீர் பச்சை, மஞ்சள் கலந்த ஒரு நிறமாக வெளிவரும். இது சாதாரணமான விஷயமல்ல… தாயின் வயிற்றுக்குள்ளேயே குழந்தை மலம் கழித்துவிட்டால், இப்படி பனிக்குட நீர் நிறம் மாறி வரும். தாயின் வயிற்றில் இருக்கும்போது குழந்தையின் உடலிலிருந்து இப்படி வெளியேறும் மலத்துக்கு ‘Meconium’ என்று பெயர். குழந்தை இப்படி தாயின் உடலுக்குள்ளேயே மலம் கழிப்பதன் மூலம் ‘நான் உள்ளே சவுகரியமாக இல்லை. சீக்கிரமே வெளியேற வேண்டும்’ என்று நமக்கு உணர்த்துவதாகத்தான் இதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அவசரமான இந்த நிலைமையில் தாயின் சர்விக்ஸ் எந்த அளவுக்கு விரிவடைகிறது என்று பார்ப்போம். 1_2 சென்டிமீட்டர் அளவுக்கு விரிவடைந்த நிலையிலேயே குழந்தை கர்ப்பப்பைக்குள் மலம் கழித்திருந்தால், தாமதிக்காமல் சிசரியன் செய்யத் தயாராகிவிடுவோம். அதுவே எட்டு சென்டிமீட்டர் அளவுக்கு சர்விக்ஸ் விரிவடைந்துக் கொண்டிருக்கும் நிலையில், நார்மல் டெலிவிரிக்காக சிறிது நேரம் பொறுத்திருந்து பார்ப்போம்.

பிரசவத்தின்போது அதிமுக்கியமான விஷயம், பாப்பாவின் தலை சரியானபடி இறங்கி வருவதுதான். இதுதான் பிரசவத்தை நார்மல் என்று கூட முடிவு செய்கிறது. பாப்பாவின் தலை உடனடியாக இல்லாமல் மெதுமெதுவாக அம்மாவின் வஜைனாவில் இறங்கி வரும். இயல்பாகவே பாப்பாவின் தலையிலுள்ள எலும்புகள் கொஞ்சம் விலகிய நிலையில்தான் இருக்கும். வஜைனாவில் இறங்கும் பாப்பாவின் தலைப்பகுதி, அங்கே சற்று இறுக்கப்படும்.

அப்போது பாப்பாவின் தலைப் பகுதியின் எலும்புகள் இறுக்கமாக ஃபிட் ஆகும். இந்த விஷயம் நார்மலாக நடந்தால்தான் பாப்பாவால் நார்மலாக வெளிவர முடியும். வெளிவந்த பிறகு பாப்பாவின் தலைப் பகுதி எலும்புகள் வழக்கம்போலவே அதே விலகிய நிலைக்கு வந்துவிடும்.

இந்த விஷயங்கள் நடந்துகொண்டிருக்கும்போதே CTG (Cardio Tocograph, இதற்கு Electronic Foetal Heart Monitoring என்று இன்னொரு பெயரும் உண்டு) என்கிற ஒரு கருவி வைத்து பாப்பாவின் இதயத் துடிப்பு, அம்மாவின் கர்ப்பப்பை இறுக்கமடைவது போன்ற விஷயங்களைக் கண்காணிப்போம். பெரியவர்களாகிய நம்முடைய இதயத்தின் இயக்கத்தைக் கண்காணிக்க ணி.சி.நி. கருவி பயன்படுவதுபோல, பாப்பாவின் இதயத் துடிப்பைப் பிரசவத்தின்போது கண்காணிக்க இந்தக் கருவி பயன்படுகிறது. இப்படிக் கண்காணிக்கப்படும்போது பாப்பாவின் இதயத்துடிப்பு குறைந்தால் (இது எல்லா குழந்தைகளுக்கும் நிகழ்வதில்லை. பிரச்னைக்குரிய சில பாப்பாக்களுக்கு மட்டுமே இப்படி ஆகலாம்.) அடுத்த கட்ட முடிவுகள் எடுக்க நாங்கள் தயாராகிவிடுவோம். பிரச்னைக்குரிய டெலிவிரி என்றால் அம்மாவுக்கு வலி தொடங்கியதிலிருந்தே சிஜிநி கொண்டு இருவரின் நிலையையும் தொடர்ந்து கண்காணிப்போம். பெரிய ரிஸ்கில்லாத பாப்பா என்றால், அரை மணிக்கு ஒரு தரம் சிஜிநி வைத்து கண்காணிப்போம்.

நன்றி – குமுதம்

கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க…..

இன்றைய பெண்கள் கருவுறும்போதே குழந்தையோடு சில கேள்விகளையும் சேர்த்தே சுமக்கிறார்கள். அவற்றுள் முக்கியமானது, ‘அபார்ஷன் அபாயம்’ குறித்த அவர்களின் சந்தேகங்கள். அவற்றைப் போக்கும் விதமாக இங்கே தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் அரசு மகப்பேறு மருத்துவரான திருமதி. சி.பரிமளா, ‘அபார்ஷன் என்பது நன்மை தீமை இரண்டும் சமவிகிதத்தில் சேர்ந்து செய்யப்பட்ட கலவை’ என்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து…

அபார்ஷன் என்றால் என்ன?

ஒரு பெண் தாயாகும் விஷயம் மிக அற்புதமானது. பலவித கனவுகளுடன் தனது கருவை, தாயானவள் நேசிக்கத் தொடங்குகிறாள். ஆனால் விதிவசத்தால் எல்லா பெண்களாலுமே குழந்தையைப் பெற்றெடுக்க முடிவதில்லை. சிலரால், சில காரணங்களால் கருவைச் சுமக்க முடியாமல் போகிறது. அந்தக் கருவானது குழந்தையாக முழு உருவத்தை அடையும் முன்பே, அதாவது 28 வாரங்களுக்குள் தானாகவோ அல்லது மருத்துவ முறையிலோ தாயை விட்டுப் பிரியும் நிகழ்வைத்தான் ‘அபார்ஷன்’ என்கிறோம்.

அபார்ஷனை வகைப்படுத்த முடியுமா?

முடியும். அபார்ஷனை மருத்துவ முறையில் மூன்று விதமாக வகைப்படுத்தலாம். அவை…

1. தானாக ஆகும் அபார்ஷன் (Spontaneous)
2. எம்.டி.பி. (Medical Termination Pregnancy)
3. செப்டிக் அபார்ஷன்

தானாக ஆகும் Spontaneous அபார்ஷனில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றாய் பார்ப்போம்…

பொய்த்தோற்ற அபார்ஷன் (Therater abortion):

உண்மையில் இது அபார்ஷன் இல்லை. ஆனால் அபார்ஷன் போன்று தோற்றமளிக்கும். திடீரென்று ரத்தப்போக்கு இருக்கும். ஆனால் அபார்ஷன் நடந்திருக்காது. காரணம், கருப்பை வாய் (Cervics) மூடி இருப்பதுதான். இதுபோன்ற சமயங்களில் மகப்பேறு மருத்துவரிடம் காட்டி, தேவையான ஓய்வு எடுக்க வேண்டும். பிறகு சரியாகிவிடும்.

தவிர்க்க இயலாத அபார்ஷன் (Inevitable Abortion):

இந்த வகையில் கருவானது திடீரென்று கருப்பையின் வாய் திறந்து வெளியேறலாம். ரத்தப்போக்கு இருக்கும். இத்தகைய சூழலில் கருவகத்தை முழுவதும் சுத்தப்படுத்தப்பட வேண்டும். தேர்ந்த மகப்பேறு மருத்துவரை அணுகுவது நல்லது.

அரைகுறை அபார்ஷன் (Incomplete Abortion) :

கருவானது முழுவதுமாக வெளிவராமல் அரைகுறையாக மட்டுமே வெளியேறும். மீதம் கருப்பையிலேயே தங்கிவிடும். இந்நிலையில் கரு முழுவதும் வந்துவிட்டதாக தவறாக நினைத்து அப்படியே விட்டுவிடுவது மிகவும் ஆபத்தானது. மகப்பேறு மருத்துவரிடம் சென்று, கருவகத்தை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் முழுவதுமாக வெளிவராத கருவின் பிசிறுகள் தங்கி, இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு நிலைமை சிக்கலடையும்.

முழுமையான அபார்ஷன் (Complete Abortion):

இம்முறையில் கருவானது கருவகத்தை விட்டு முற்றிலுமாக வெளிவந்துவிடும். இப்படி முழுவதும் வந்தால், தனியாக மீண்டும் சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் அப்படி முழுவதும் வெளிவந்துவிட்டதா என்பதை மகப்பேறு மருத்துவரிடம் சென்று சோதனை செய்து பார்த்துக்கொள்வது நல்லது.

அடிக்கடி ஏற்படும் அபார்ஷன் (Habitual Abortion):

இது பெரும்பாலும் கரு உருவான மூன்றாவது மாதத்திலிருந்து ஆறாவது மாதத்துக்குள்தான் ஏற்படும். இதுபோன்று பெண்களுக்கு அடிக்கடி அபார்ஷன் ஏற்பட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

1. கரு, கருப்பையில் சரியான முறையில் தங்காததால்.
2. கரு, சரியான வளர்ச்சி பெறாததால்.
3. கருப்பையின் வாய் திறந்திருந்தால்.

இதுபோன்று ஏற்பட சாத்தியக்கூறுகள் அதிகம்.

அடுத்து வி.ஜி.றி. எனப்படும் Medical Termination of Pregnancy பற்றிப் பார்ப்போமா?

ஒரு பெண்ணுக்கு மருத்துவ முறையில் அபார்ஷன் செய்வதைத்தான் வி.ஜி.றி. என்கிறோம். சில_பல காரணங்களால் தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தையின் உடலுறுப்புகள் சரியாக வேலை செய்யாமல், சமயத்தில் சரிப்படுத்த முடியாத நிலையில் காணப்படும். இதுபோன்ற சூழலிலும், அம்மா சாப்பிட்ட மருந்துகளால் கருவான குழந்தைக்கு கிட்னி, மூளை, இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்ட சூழலிலும், வி.ஜி.றி. சிபாரிசு செய்யப்படுகிறது. இன்னும் சில நேரங்களிலும் இந்த முறையில் அபார்ஷன் செய்யப்படுகிறது. அவை…

1. மரபணுக்கள் தொடர்பான நோயால் குழந்தை தாக்கப்பட்டிருக்கும்போது…
2. பிளசண்டாவில் ஏற்படும் பிரச்னைகளால்…
3. பனிக்குடத்தில் தண்ணீர் அதிகப்பட்டு விடும்போது…
4. ஒன்றுக்கு மேற்பட்ட சிக்கலான கருக்கள் வளரும்போது…
5. வைரல் இன்பெக்க்ஷன்களால் தாய் தாக்கப்படும்போது…
6. மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால் தாய் பீடிக்கப்படும்போது…
7. மனஅழுத்த நோய்களால் தாய் அவதியுறும்போது…

செப்டிக் அபார்ஷன் 

சுகாதாரமின்மையால் ஏற்படுவதுதான் இந்த செப்டிக் அபார்ஷன். உதாரணமாக திருமணமாகும் முன்பே தவறான பழக்க வழக்கங்களால் கர்ப்பமாகிவிடும் சில பெண்கள், மருத்துவரிடம் செல்ல பயந்து சமயத்தில் எருக்கங்குச்சியை கருக்கலைக்க பயன்படுத்துவார்கள். இதுபோன்ற சுகாதாரமில்லாத கருப்பை சுத்தப்படுத்தும் செயல்களால் உண்டாவதுதான் இந்த செப்டிக் அபார்ஷன். இப்பழக்கம் கிராமங்களில மிக அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் இது மிகவும் ஆபத்தான ஒன்று. இதனால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்புகள் நிறைய.

1. கருக்குழாய் அடைப்பால் திருமணத்திற்குப் பின்பு குழந்தையில்லாமை,
2. கருப்பையில் ஓட்டை உண்டாகுதல்,
3. உதிரப்போக்கு ஏற்பட்டு இரத்தம் உறையாத தன்மை உண்டாகுதல் போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

அபார்ஷன் ஏற்பட பொதுவான காரணங்கள் என்னென்ன?

1. கருப்பையில் கரு சரியாக உருவாகாத பட்சத்தில் அபார்ஷன் தானாகவே ஏற்பட்டு விடும்.
2. கருப்பையின் பொசிஷன் சில பெண்களுக்கு ஏடாகூடமாக அமைந்திருப்பதால் அபார்ஷன் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
3. இரட்டைக் கருப்பை இருப்பதனாலும் அபார்ஷன் அவசியம்ஏற்பட்டு விடுகிறது.
4. கருப்பையில் ஃபைபிராய்டு கட்டிகள் தோன்றுவதால் அபார்ஷன் வலியுறுத்தப்படுகிறது.
5. தொற்று நோய்களால் பாதிக்கப்படும்போது அபார்ஷன் கட்டாயமாகிறது.
6. சில குறிப்பிட்ட நோய்களுக்கு (கேன்சர், இதய பாதிப்பு) எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட அபார்ஷனை அதிகப்படுத்துகின்றன.
7. மனநலக் கோளாறுகள் அபார்ஷனில் கொண்டுபோய் விட்டு விடுகின்றன.
8. நாகரிக மோகத்தால் பெண்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும், புகையிலை போன்ற போதை வஸ்துகளை எடுத்துக் கொள்வதும் அபார்ஷனை வலிந்து அழைக்கும் காரணிகள்.

அபார்ஷன் அபாயத்தைத் தவிர்ப்பது எப்படி?

1. கர்ப்பம் என்று உறுதியான உடனேயே கணவன்_மனைவி இருவரும் தாம்பத்ய உறவை நிறுத்திவிட வேண்டும். இதன் மூலம் கரு பாதிப்படையாமல் இருக்கும்.
2. அதிக களைப்பு தரக்கூடிய பணிகளைப் பார்க்காதிருத்தல் நல்லது. கூடவே நல்ல தூக்கமும், ஓய்வும் தேவை.
3. கூடிய மட்டும் நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மீறி நோய் தாக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சுய வைத்தியம் கூடாது.
4. குறைந்தது கர்ப்பம் தரித்த மூன்று மாதத்திற்காவது பயணங்களைத் தவிர்ப்பது நலம்.
5. நல்ல ஊட்டச்சத்து மிகுந்த, போஷாக்கான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
6. உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
7. முதல் மூன்று மாதங்களில் அபார்ஷன் ஆபத்து அதிகமென்பதால் எடை அதிகமான பொருட்களைத் தூக்குதல் கூடாது. வீணாக உடலை வருத்திக்கொள்ளக் கூடாது. குறிப்பாக, மன இறுக்கமின்றி காணப்பட வேண்டும்.

இந்த வழிமுறைகளை விழிப்புணர்ச்சியோடு தாய்மார்கள் ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே போதும், அபார்ஷனை முடிந்தவரை தடுத்து விடலாம். முன்னெச்சரிக்கை ஒன்றுதான் எப்போதும் நம்மை இன்னல்களிலிருந்து காப்பாற்றும். கர்ப்பகால மகளிருக்கும் அதுதான் முக்கிய தேவையாக இருக்கிறது

நன்றி குமுதம்

நோய் தீர்க்கும் ஒரு விசேஷ குளியல்

இந்த வெந்நீர் குளியல் மாதவிலக்கு பிசச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களையும் எளிமையான முறையில் தீர்க்கிறது.
டீன் ஏஜ் பெண்களாகட்டும்… நடுத்தர வயதுப் பெண்களாகட்டும்.. வயது வித்தியாசமில்லாமல் பல பெண்களையும் தொல்லைபடுத்திக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் மாதவிலக்கு பிரச்னை!

அதிலும் சில பெண்களுக்கு அந்த மூன்று நாட்களின் போது இடுப்பும் வயிறும் அப்படியே விட்டுப் போவது போல் வலிக்கும். பல பெண்கள் துடித்துப் போவார்கள். இதற்காக வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக் கொள்வார்கள்.

இந்த மாத்திரைகள் வலியைக் குறைத்து வேறுபல புதிய நோய்களை நமக்குத் தந்து கொண்டிருக்கும்.

இந்த இடுப்புக் குளியல், மாதவிலக்கு நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் பல பிரச்னைகளைச் சரி செய்கிறது. அது மட்டுமல்ல, பெண்கள் வயதுக்கு வரத் தாமதமாவது, வெள்ளைப்படுதல், அல்சர், மற்றும் மலச்சிக்கல், இடுப்பு எலும்புக்கட்டு வலி, ஏன்… உடலுறவு தொடர்பான சில குறைகளை நீக்குவது என்று பல பிரச்னைகளுக்கும் இக்குளியல் மிக உபயோகமாக இருக்கிறது!

இடுப்புக் குளியல் என்றால் என்னவோ ஏதோ என்று நினைத்துவிட வேண்டாம். நமது உடம்பில் இடுப்புப் பகுதி தண்ணீரில் அமிழ்ந்து இருக்கும்படி உட்கார்ந்து இருந்து, குறிப்பிட்ட சில பகுதிகளை அழுத்தம் கொடுத்து, நமக்கு நாமே மசாஜ் செய்து கொள்வதுதான் இடுப்புக் குளியல்!

இயற்கை மருத்துவம் செய்யும் பல டாக்டர்கள் இந்த முறையை சிபாரிசு செய்கிறார்கள்.

இடுப்புக் குளியலை எப்படி வீட்டிலேயே செய்வது என்று வாசகிகளுக்குப் புரியும் விதமாக எடுத்துச் சொல்கிறார் இயற்கை மருத்துவரான டாக்டர். மங்கை.

‘‘இடுப்புக் குளியலை வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம். வீட்டில் பாத்டப் உள்ளவர்கள் அதை உபயோகித்து இந்த இடுப்புக் குளியலை எடுத்துக் கொள்ளலாம். இல்லாதவர்கள், நீள அகலம் அதிகமான, பெரிய பிளாஸ்டிக் டப் ஒன்றைக் கூட இதற்குப் பயன்படுத்தலாம். ‘அதையெல்லாம் வாங்குவதற்கு முந்நூறு நானூறு ரூபாய்க்கும் மேல செலவாகுமே…’ என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் மேலே சொன்ன பிரச்னைகளுக்காக ஊசிகள், மருந்துகள், டெஸ்டுகள் என்று ஒவ்வொரு தரமும் ஆயிரக்கணக்கில் மருத்துவமனைகளில் செலவழிக்கும் போது, இந்தச் செலவு மிகச் சிறிய செலவுதான்.

தவிர, ஒருமுறை வாங்கி வைத்துவிட்டால் அதைப் பல மாதங்கள், ஏன் வருடங்கள்கூட உபயோகிக்க முடியும். வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் கூட உபயோகிக்க முடியும்!

இடுப்புக் குளியலை குளிர்ந்த நீர் சாதாரணத் தண்ணீர், வெந்நீர் என்று மூன்று விதமான நீரைக் கொண்டு செய்யலாம். ஒவ்வொரு வகை நீர் உபயோகித்து குளிக்கும்போதும் ஒவ்வொரு வகை எஃபெக்ட் கிடைக்கும்.

பொதுவாகவே இதை வெறும் வயிற்றுடன், அதிகாலை மற்றும் மாலையில் செய்வதே நல்லது. முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம்… இடுப்புக் குளியலில் எந்தவிதமான பின்விளைவுகளும் கிடையாது என்பதுதான்!

குளிர்ந்த நீர் இடுப்புக் குளியல்

உங்களுடைய தலையும் பாதமும் மட்டும் வெளியே இருக்கும்படி, பாத்டப்பில் அல்லது பிளாஸ்டிக் டப்பில் அல்லது தொட்டியில் அமர்ந்து கொள்ளுங்கள். உயரம் அதிகமான தொட்டி அல்லது டப்களில், டப்பின் உட்புறம் ஒரு சிறு ஸ்டூல் போட்டு, அதில் உங்கள் உட்காரும் பாகத்தை (Back) வைத்துக் கொண்டால் குளிப்பதற்கு சுலபமாக இருக்கும். பாதங்களை, டப்புக்கு வெளியே மற்றொரு ஸ்டூலில் வைத்துக் கொள் ளுங்கள். முதலில் உங்களது மார்பகங்களுக்குக் கீழே இருந்து, தொடைகள் வரை வரும்படி குளிர்ந்த நீரை ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர், நீரில் அமிழ்ந்தபடி உங்கள் அடி வயிற்றுப் பகுதியை சின்னச் சின்ன வட்டங்களாக, மென்மையாக தேய்த்துவிட வேண்டும். சிறிது நேரத்தில் வேகத்தை சற்றே அதிகப் படுத்தித் தேயுங்கள். இதனால், அந்தப் பகுதிகளில் இரத்த ஓட்டம் சீராகும்.

இப்படி தேய்க்கும்போது அடிவயிற்றுப் பகுதி மட்டுமல்ல… பிறப்புறுப்பின் பகுதிகளையும், தொடையின் ஆரம்பப் பகுதிகளையும் நன்றாகத் தேய்த்து விடுங்கள்.

இந்தவகை இடுப்புக் குளியல் வெள்ளைப் படுதல், அல்சர், மலச்சிக்கல், போன்ற பிரச்னைகளுக்கு நல்ல தீர்வைக் கொடுக்கும்.

வெந்நீர் இடுப்புக் குளியல்

இந்தக் குளியலில், உடல் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரின் சூடு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த வகைக் குளியலில் தொப்புளில் இருந்து தொடைகள்வரை நீரை ஊற்றிக் கொள்ளுங்கள். மற்றபடி, அமரும் முறை, தேய்த்து விடுதல் எல்லாமே முன்னர் சொன்னது போலத்தான்.

மாதவிஇலக்கின் போது அதிகமான இரத்தப்போக்கு உள்ளவர்கள், மாதவிலக்குக் கோளாறு உள்ளவர்கள், தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் இந்தக் குளியலை மேற்கொள்ளலாம். பெண்கள் வயதுக்கு வருவது தாமதமாதல், மாதவிஇலக்கின்போது வலி அதிகம் இருத்தல் போன்ற பிரச்னைகளுக்கும் இந்த வகைக் குளியல் நல்ல பலனைத் தரும்.

சாதாரண நீர் இடுப்புக் குளியலுக்கும் இதே முறைதான்.

ஒரு விஷயத்தை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.. குளிர்ந்த நீர் இடுப்புக் குளியலுக்குப் பின்னர் வெந்நீரில், ஒருமுறை சாதாரணக் குளியல் குளித்து விடுங்கள். அதேபோல, வெந்நீர் அல்லது சாதாரண நீர் இடுப்புக் குளியலுக்குப் பின்னர் குளிர்ந்த நீரில், வெறுமனே சாதாரணக் குளியல் குளிக்க வேண்டும்.

இடுப்புக் குளியலுக்குப் பின், பப்பாளி, மாதுளை மற்றும் பப்பாளி விதைகள் போன்றவற்றை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

பத்து வயது முதலே பெண்கள் இக்குளியலை மேற்கொள்ளலாம். எந்தெந்த நேரங்களில் இந்த இடுப்புக் குளியல் குளிக்கக் கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

மாதவிஇலக்கின் போதும், கர்ப்பக் காலத்தின் போதும் இடுப்புக் குளியலை மேற்கொள்ளக் கூடாது. அதேபோல இதயம் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்களும் இடுப்புக் குளியலைத் தவிர்க்க வேண்டும்.

இக்குளியலுக்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளலாம் என்பதும், வெந்நீரின் வெப்பம் எவ்வளவு இருக்கலாம் என்பதும் தனிப்பட்ட ஒவ்வொருவரின் நிலமையைப் பொறுத்து மாறும். அதனால், முதல்முறை இடுப்புக் குளியல் செய்யும்போது மட்டும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று செய்யுங்கள்!’’

மு. சாமுண்டீஸ்வரி
நன்றி – குமுதம்

வலியில்லாத பிரசவம்!

மருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும், பிரசவ வேதனை என்பது தவிர்க்கமுடியாத வலியாக இருந்துவந்தது. அந்த நிலைமை மெல்ல மாறிவருகிறது. வலியே இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ளும் வசதி அமெரிக்கா போன்ற  மேலைநாடுகளைத் தொடர்ந்து இன்று நம் நாட்டிலும் சாத்யமாகி உள்ளது. எப்போது பரவலாகும் என்பதுதான் கேள்விக்குறி.

பிரசவ நேரத்தில், கர்ப்பப்பை சுருங்கும் போது, அந்த மாற்றம் பற்றிய தகவல் தண்டு வடத்தில் உள்ள நரம்புகள் வழியாக பயணம் செய்து, மூளையை எட்டும்போது நாம் அந்த வலியை உணர்கிறோம். இந்த வேதனை எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

1. குழந்தையின் எடை.
2. கருவறையில் குழந்தையின் நிலை.
3. இடுப்பு எலும்பின் தன்மைகள்.
4. சுருங்கும் தன்மையின் வலிமை.
5. முன் அனுபவம் மற்றும் எதிர்பார்ப்பு –

என்ற ஐந்து காரணங்களின் அடிப்படையில் வலியின் அளவு மாறுபடும். எவ்வளவு வலி இருக்கும் என்பதை முன்பே அறிந்து கூறமுடியாது. சிலர் பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவில் வலியை உணர்கிறார் கள். சிலர் தியானம், மூச்சுப் பயிற்சி, வென்னீர் குளியல், மசாஜ், நர்ஸ் கவனிப்பு, நிற்பது, நடப்பது, அமர்வது போன்ற நிலைமாற்றம்.. என்று மருத்துவ முறை அல்லாத பழக்கங்கள் மூலம் வலியை குறைக்க முயல்கின்றனர். பலர், எந்த முறையையும் பின்பற்ற முடியாத அளவுக்கு வலியால் திணறுகிறார்கள்.

இப்படி சொல்லி விளங்க வைக்க முடியாத வலியை, மாயமாக மறைய வைத்து, குழந்தை பிறப்பதை அனுபவித்து மகிழ வைக்கும் ஒரு உபாயம்தான் ‘எபிடியூரல் டெலிவரி’ என்பது! இதில் அமெரிக்காவில் பிரபலமான டாக்டர் பேக்ரே ரிடம் பேசியபோது இந்த முறை பற்றி விளக்கினார்..

‘எபிடியூரல் டெலிவரி’ என்பது, தண்டுவடத்தில் ஊசி மூலம் ஒரு மருந்தை உட்செலுத்தி பிரசவ வலியை முற்றிலுமாக அகற்றி, குழந்தை பிறப்பை சுகமான அனுபவமாக மாற்றக்கூடிய ஒரு மருத்துவ முறையாகும்.

நன்கு பயிற்சி பெற்ற மயக்க மருந்து நிபுணரால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அதைப் பற்றி தெளிவாக விளக்கப்படும். ஒப்புதல் அளித்தால் மட்டுமே எபிடியூரல் கொடுக்கப்படுகிறது. 4 செ.மீ. இடைவெளியில் ஒழுங்கான பிரசவத்துக்குரிய அறிகுறிகள் தென்பட்டாலன்றி இது கொடுக்கப்படுவது இல்லை. வலியும் தொடங்கியிருக்க வேண்டும்.

எபிடியூரல் கொடுக்கும்போது, பக்க விளைவாக ரத்த அழுத்தம் குறையும் வாய்ப்பு உள்ளதால், ரத்தக்குழாய் வழியாக திரவங்கள் செலுத்தப்படும். 5 நிமிடத்துக்கு ஒருமுறை டாக்டரின் நேரடி கண்காணிப்பு அவசியமாகிறது. குழந்தையின் இதயத் துடிப் பும் மானிட்டரில் கண்காணிக்கப்படும்.

ஒருக்களித்து படுத்தவாக்கில் அல்லது படுக்கை நுனியில் குனிந்து உட்கார்ந்த வாக்கில் தண்டுவடத்தின் மத்தியில் எபிடியூரல் பொருத்தப்படும். முதுகை ஆன்ட்டிசெப்டிக் திரவத்தால் சுத்தம் செய்து குறிப்பிட்ட இடத்தில் ஊசியை குத்துவார் கள். ஊசி வழியே எபிடியூரல் கதீட்டர் என்கிற சன்னமான, மிருதுவான பிளாஸ்டிக் குழாய் நுழைக்கப்படும். ஊசியை எடுத்து விட்டு, அந்த குழாயை முதுகின் மேல் டேப் போட்டு ஒட்டி விடுவார்கள். இதன் பிறகு சோதனைக்காக மிகக்குறைந்த அளவு மருந்து கொடுக்கப்பட்டு, பக்க விளைவு ஏற்படுகிறதா என பார்க்கப்படும். பிறகு, தேவையான மருந்து கொடுத்து ஆசுவாசப்படுத்துவார்கள்.

எபிடியூரல் பொருத்தியபின், எழுந்து நடமாட முடியாது. கால்கள் கனம் தெரியாத அளவுக்கு மரத்துப் போகும். திரும்பி படுக்கலாம். செயற்கை முறையில் சிறுநீர் வெளியேற்ற வழி செய்யப்படும். எளிதான பிரசவத்துக்கு இது மேலும் துணை புரிகிறது. எபிடியூரல் வேலை செய்ய ஆரம்பித்த வுடன் ஒவ்வொரு முறை கருவறை சுருங்கி, விரிந்து, குழந்தை இறங்கி வருவதை உணரும்போது வலியே தெரியாது!

குழந்தை பிறந்தவுடன் எபிடியூரல் மருந்து கொடுப்பது நிறுத்தப்படும். மயக்க மருந்து நிபுணரால் கதீட்டர் அகற்றப்படும். ஓரிரு மணி நேரத்தில் மருந்தின் வீரியம் குறைந்து உடல் சகஜ நிலைக்கு திரும்பி விடுகிறது.

ஏதாவது அவசர நிலையால் சிசேரியன் செய்ய நேர்ந்தால், இதே முறையில் மயங்கவைக்கும்போது குழந்தையை எடுப்பதை எந்த வலியும் இல்லாமல், ஆனால் சுயநினைவுடன் உணர முடியும். இதற்கான மனப் பக்குவத்தை டாக்டர் அவருக்கு முன்பே ஏற்படுத்தி விடுகிறார்.

இருந்தாலும், எபிடியூரல் பற்றி மாறுபட்ட கருத்து கொண்ட அமெரிக்கப் பெண் களும் இருக்கிறார்கள். அவர்களின் சந்தேகங்கள் குறித்து மயக்க மருந்து நிபுணர் கேட்டர் பாலுடன் பேசினோம். இவர் இந்தியாவில் பிறந்து, மருத்துவம் பயின்று, 20 வருடமாக அமெரிக்காவில் பம்பரமாக சுழன்று பணிபுரிந்து வருகிறார்.

”இங்கே பெரும்பாலான பெண்கள் எபிடியூரல் டெலிவரியை வரவேற்கிறார்கள். முதல் பிரசவத்தில் எபிடியூரல் பற்றி உணர்ந்தவர்கள் இரண்டாவது பிரசவத்துக்கு இயற்கை முறை பற்றி யோசிப்பதுகூட இல்லை!‘‘ என்றார் டாக்டர் பால். பக்க விளைவுகள் பற்றி கேட்டோம்.

”எந்த சிகிச்சை முறையிலும் பக்க விளைவு கள் தவிர்க்க முடியாதது. இதில் 2% வரை யிலேயே தலைவலி, முதுகுவலி போன்ற விளைவுகள் உண்டாகிறது. இந்தியாவில் பின் விளைவுகளை மட்டும் கணக்கிலிட்டு சிகிச்சையையே ஒதுக்கி விடும் போக்கு அதிகம். எபிடியூரல் டெலிவரியை பொருத்த வரை நன்கு பயிற்சி பெற்ற டாக்டர், மயக்க மருந்து நிபுணர் ஆகியோரைக் கொண்டு செயல் படுத்தினால் கண்டிப்பாக முழு பயனையும் அடையலாம்.‘‘

தண்டுவடத்தில் ஊசி குத்துவதால் வலி அதிகமாக இருக்குமே? இதற்கான (மயக்க) மருந்துகள் சுலபமாக கிடைக்கிறதா?

”பிரசவ வலியை ஒப்பிடும்போது, முதுகில் ஊசி குத்தும் வலி பெரிதல்ல. இதற்கு பயன்படுத்தக்கூடிய மார்பின், டெமரால் போன்ற மருந்துகள் எளிதாக கிடைக்கக் கூடியவை.‘‘

எபிடியூரல் அனெஸ்தீஸியா’ மூலம், வலி இல்லாமல் குழந்தை பெற்றுக் கொண்ட மிசஸ் டோனி சொன்னார்…

”பிரசவத்தின்போது கணவர் கண்டிப்பாக உடன் இருக்க வேண்டும் என்பதால், அதுவே தைரியமும் நம்பிக்கையும் அளிக்கிறது. எபிடியூரல் பற்றி தெளிவாக, பொறுமையாக எடுத்துக் கூறி, சிலருக்கு ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை சொல்லி முழு ஒப்புதல் பெற்ற பின்பே செய்கிறார்கள். விடியோ கேசட் மூலம் விளக்குவதால் நன்கு விளங்குகிறது. வலியே இல்லாமல் குழந்தை பெற்றுக் கொண்டது இனிய அனுபவம்தான்!”

இந்தியாவிலும் மருத்துவ சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கும் வேளையில் ‘எபிடியூரல் அனெஸ்தீஸியா’ மட்டும் ஏன் பரவலாகவில்லை என்று ஈரோடு மகப்பேறு மருத்துவர் சிறீமதி முருகேசன், மயக்க மருந்து நிபுணர் சித்ரா சௌந்தர் ராஜன் ஆகியோரிடம் கேட்டபோது…

டாக்டர் ஸ்ரீமதி:  எபிடியூரல் அனெஸ்தீஸியா மூலம் வலி இல்லாத பிரசவம் என்பது, நம் நாட்டில் சமீபத்தில்தான் கண்டு கொள்ளப் பட்டுள்ளது. பரவலாக நடைமுறைப்படுத்த இயலாமைக்கு காரணம், பயிற்சி பெற்ற மயக்க மருந்து நிபுணர்கள் போதிய அளவு இல்லாத குறைதான். பிரசவ நேரம் முழுவதும் அவர்கள் உடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஸ்டிரைல் செய்யப்பட்ட, படுசுத்தமான பிரசவ அறை, மானிட்டர், ஆபரேஷன் தியேட்டர் என்று அனைத்தும் முழுமையாக உள்ள ஒரு மருத்துவமனையில்தான் இதுபோன்ற முறைகள் சாத்யமாகும். இங்கே வலி எடுத்த பின்பு தான் எங்களிடம் வருகிறார்கள். அந்த நேரத்தில் இது தேவைப்படுவதில்லை.

டாக்டர் சித்ரா:  கர்ப்பிணிகள் கடைசி நேரத்திலோ அல்லது காலங்கடந்த நிலையிலோ வரும்போது அவசரமாக தாயையும், குழந்தையையும் காப்பாற்ற வேண்டிய முயற்சி மட்டுமே செய்ய முடிகிறது. தினம் 50 பிரசவ கேஸ் வருகிறது. முழுநேரப் பணியில் தகுதியான மயக்க மருந்து நிபுணர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் இருந்தால்தான் இந்த முறை இங்கே பரவலாக முடியும். அந்த அளவுக்கு வசதிகள் எல்லா ஆஸ்பத்திரிகளிலும் உடனே வந்துவிடாது.

– பவள சங்கரி
நன்றி குமுதம்

நிஜ பிரசவவலியைத் தெரிந்து கொள்வது எப்படி?

 

கர்ப்பகாலத்தின்போது இரும்புச் சத்து மாத்திரைகள் சாப்பிட்டால் குழந்தை கறுப்பாய் பிறக்கும் என்று சில வீடுகளில் சொல்வார்கள். எங்கே குழந்தை கறுப்பாகப் பிறந்துவிடுமோ என்று பயந்தே பெரும்பாலான பெண்கள் இதனால் இரும்புச் சத்து மாத்திரைகள் சாப்பிடுவதைத் தவிர்த்து விடுகிறார்கள். இது ரொம்பவும் தவறு. நம்மூர்ப் பெண்களுக்கு – அனீமியா – என்று அழைக்கப்படும் ரத்தசோகை நோய் மிகவும் பரவலாக இருக்கிறது. இது இரும்புச் சத்து குறைவால் ஏற்படுகிறது. வேறு பல வளர்ந்த நாடுகளில் உள்ள பெண்களுக்கு இந்த நோய் ஏற்படுவதில்லை. காரணம் அவர்கள் தங்கள் உணவில் போதிய அளவு இரும்புச் சத்து இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்கின்றனர். அப்படியே சத்துக் குறைவு இருந்தால் அதற்கான மாத்திரைகள் சாப்பிட்டு அதை உடனடியாக சரி செய்து கொள்கின்றனர்.

எதனால் இந்த இரும்புச் சத்து தேவை என்பதைப் பார்ப்போம்.. நம் உடலில் இரும்புச் சத்து குறையும் போது ரத்தத்தில் ஹீமோகுளோபின் என்கிற ஒரு பொருள் குறைந்துவிடுகிறது. இந்த ஹீமோகுளோபின்தான் பிராணவாயுவை உடலில் எல்லா பகுதிகளுக்கும் சமமாக எடுத்துச் செல்வதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இதன் அளவு ஒருவருக்கு குறையும்போது உடலின் பல்வேறு பாகங்களுக்கு பிராணவாயு சரிவர கிடைக்காமல் போகிறது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்படலாம். சில சந்தர்ப்பங்களில் Heart failier கூட ஆகலாம்.

இரும்புச் சத்து குறைபாடு உள்ள சாதாரண பெண்களுக்கே இப்படியென்றால் கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கோ ஹீமோகுளோபின் அளவு குறைவதோடு உடலில் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து அவருடைய உடம்பு பலவீனமடைவதோடு உள்ளிருக்கும் குழந்தையும் பலவீனமடைகிறது. மேலும் மேற்சொன்ன மூச்சுத்திணறல் பிரச்னைகளும் ஏற்படும். அதனால் இரும்புச் சத்து குறைவாக உள்ள எல்லாப் பெண்களுமே உணவில் போதிய அளவு இரும்புச் சத்து இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

மருத்துவரின் ஆலோசனை பெற்று இரும்புச் சத்து மாத்திரைகளை சாப்பிட்டு வரலாம். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் என்றால் ரத்தசோகை இருக்கிறதோ இல்லையோ.. அவர்கள் பேறு காலம் முழுவதுக்குமே இரும்புச் சத்து மாத்திரைகளைக் கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
குழந்தை கறுப்பாகப் பிறந்துவிடுமோ என்று இந்த விஷயத்தில் பயப்பட வேண்டிய அவசியம் ஏதுமில்லை. குழந்தை எந்த நிறத்தில் பிறக்கும் என்பது மரபு வழியாக தீர்மானிக்கப்படுகிறது. சாதாரண இரும்புச் சத்து மாத்திரை சாப்பிடுவதால் எல்லாம் சிவப்பாகப் பிறக்கவேண்டிய குழந்தை தடாலடியாகக் கறுப்பாக மாறிவிடாது. கர்ப்பகாலத்தின் போது மாம்பழம் போன்ற வேறு பல விஷயங்களை சாப்பிட்டாலும் குழந்தை கறுப்பாகிவிடும் என்ற நம்பிக்கையிலும் உண்மை இல்லை. அதேபோல குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்ற நம்பிக்கையும் பொய்.

சிலர் இரும்புச் சத்து மாத்திரைகளைப் பேறு காலத்தின் ஆரம்பத்தில் தொடர்ந்து சாப்பிட்டு வந்து எட்டாவது மாதம் போல நிறுத்தி விடுகிறார்கள். கேட்டால் – இதுக்கு மேல மாத்திரை கொடுத்தா குழந்தையோட சைஸ் பெரிசாகி, சிசேரியன் பண்ணி எடுக்க வேண்டியதாகிவிடும்…- என்கிறார்கள். இந்த நம்பிக்கையும் தவறுதான். இவர்கள் முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளவேண்டும். நாம் எடுத்துக் கொள்வது எந்த உணவாகவோ மாத்திரையாகவோ இருந்தாலும் அதில் தனக்குத் தேவையான சத்துக்களை மட்டுமே நம்முடைய உடல் உறிஞ்சுக் கொள்ளும். மீதமுள்ளவை வேறு பல வழிகளில் உடலிலிருந்து வெளியேற்றப் பட்டுவிடும். அதனால் இதில் பயப்பட ஒன்றுமில்லை.

பிரசவத்தின்போது பெண்களுக்கு ரத்த இழப்பு அதிகமாக ஏற்படும். நோர்மல் பிரசவத்தின் போது 500 மில்லி அளவு (அல்லது அதற்கு மேலும்) சிசேரியனின் போது 1000 மில்லி அளவு வரைக்கும் (அல்லது அதற்கு மேலும்) ஒரு பெண்ணுக்கு இரத்த இழப்பு ஏற்படலாம். இது நார்மலான ஒரு விஷயம். இந்த இழப்பை ஈடுசெய்யவும், குழந்தை பிறந்ததும் அதற்கு பாலூட்டவும் தாய்க்கு இரும்புச் சத்து அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. பேறுகாலத்தின்போது தாய் தொடர்ந்து சாப்பிட்டு வந்த இரும்புச் சத்து மாத்திரைகள்தான் இந்த நேரங்களில் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.

கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு இரும்புச் சத்து எவ்வளவு அவசியம் என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்…

ஓ.கே. இனி பிரசவத்துக்கு நம்மை எவ்வாறெல்லாம் தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது பற்றி பார்ப்போம்…

36 வாரங்கள் ஆனதும் தாய் பிரசவத்துக்குத் தயாராகிவிடவேண்டும். முதலில் பிரசவத்துக்கு மனதளவில் தாய் தன்னைத்தானே தயார்படுத்திக் கொள்ளவேண்டும். இதில் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மருத்துவருக்கு முக்கிய பங்குண்டு. – எந்த சந்தர்ப்பத்திலும் உனக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்..- என்று ஒவ்வொரு கட்டத்திலும் அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கைக் கொடுக்க இவர்கள் தவறக்கூடாது. இதுவே பாதி பிரச்னையைத் தீர்த்துவிடும்.

சிலர் வேலை காரணமாக தங்கள் குடும்பங்களைவிட்டு வெகுதூரத்தில் செட்டிலாகி இருப்பார்கள். இவர்களுடைய தாயோ அல்லது மாமியாரோ பிரசவத்தின் போதுதான் ஊருக்கே வரமுடியும் என்கிற நிலையில் இருக்கலாம். இப்படி அத்தனை உதவி இல்லாத பெண்களுக்கு உதவுவதற்காகவே சில மருத்துவர்கள் Prenatal வகுப்புகளை நடத்தி வருகின்றனர். பிரசவம் பற்றிய பயத்தைப் போக்குவது தொடங்கி அதற்கு எப்படியெல்லாம் நம்மைத் தயார் படுத்திக் கொள்வது மற்றும் பிரசவத்தை சுலபமாக்க சில பிரத்தியேக பயிற்சிகளைக் கற்றுக் கொடுப்பது என்று இந்த வகுப்புகள் மிக உபயோகமாக இருக்கும். இதுபற்றி நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். வீட்டில் பெரியவர்களின் உதவி இல்லாதவர்கள் இந்த Prenatal வகுப்புகளுக்குத் தொடர்ந்து சென்று வந்தால் பிரசவத்தை positive ஆக எதிர்கொள்ளலாம்.

மழை பெய்வதும், குழந்தை பிறப்பதும் எப்போது என்பது மகேசனுக்கு மட்டுமே தெரியும் என்பார்கள்! உண்மைதான். தாய்க்கு எப்போது பிரசவ வலி ஏற்படும் என்று சொல்வது மிகக் கடினம்! அதனால் பிரசவத்துக்கு தேவையான மெட்டர்னிட்டி பையை கர்ப்பமான பெண்கள் முன்கூட்டியே ரெடி செய்து கொள்ளவேண்டும். அதில் தனக்கான நைட்டி, சோப்பு சீப்பு முதலிய அத்தனை விஷயங்களையும், குழந்தைக்கு ஏற்கனவே வாங்கி வைத்த நாப்கின்கள் முதலானவற்றையும் எடுத்து வைத்திருக்க வேண்டும். இந்தப் பையைத் தாய் தயார் செய்வதற்கு முன்னரே ஒரு மினி ஷொப்பிங் சென்று வருவது நல்லது. அப்போதுதான் குழந்தைக்கான சோப்பு, எண்ணெய், ஷாம்பு, சொக்ஸ், உடைகள், கொசுவலை ஆகியவற்றைப் பார்த்துப் பார்த்து தேர்வு செய்து வாங்க முடியும். பிரசவத்துக்குப் பிறகு சில மாதங்கள் வரைக்கும் தாய் வெளியே செல்ல முடியாது என்பதால்தான் முன்பாகவே இதுபோல ஷாப்பிங் சென்று வரவேண்டும் என்கிறேன். என்ன இருந்தாலும் தாய் தன் பட்டுக்குட்டிக்காக பார்த்துப் பார்த்து தேர்வு செய்யும் பொருள்களைப் போல மற்றவர்கள் (அது கணவராகவே இருந்தாலும்…) வாங்கி வரும் பொருட்கள் இருக்காதில்லையா..

36 வாரங்களானதும் மருத்துவர், தாய்க்கு பிரசவவலிக்கான அறிகுறிகள் என்னென்ன, எதுபோன்ற வலியெடுத்தால் உடனே தன்னைத் தொடர்பு கொள்ளவேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் தெளிவாக சொல்லிக்கொடுப்பார். முதல் பிரசவத்தை எதிர்கொள்ளும் பெண்களுக்கு (ஏன் சில சமயங்களில் ஏற்கனவே பிரசவமானவர்களுக்கும் கூட) நிஜ பிரசவவலி எதுவென்று சரியாக சொல்லத்தெரியாது. பிரசவத்துக்கு முன் வரக்கூடிய சில இயல்பான வலிகளை (இதை ஆங்கிலத்தில் false Pain என்போம்) பிரசவ வலி என்று நினைத்துப் பதறிப்போய் மருத்துவமனைக்கு அரக்கப்பரக்க வந்துவிடுவார்கள். பிரசவவலி எது என்பது சரியாகத் தெரியாததால் அந்தப் பெண்களுக்கும் அவஸ்தை. அவருடன் வரும் பிறருக்கும், ஏன், மருத்துவருக்கும் அவஸ்தைதான்.

அப்போ நிஜ வலியை எப்படித்தான் கண்டு பிடிப்பது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதற்குப் பிரசவலி போலவே தெரியக்கூடிய வலிகள் – False Pain – பற்றி முதலில் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இதில் இரண்டு வகையுண்டு. பேறுகாலம் நெருங்கும் சமயத்தில் குழந்தையின் பின் தலை, தாயின் இடுப்பு எலும்பில் பொதியும். முதல் பிரசவத்தை எதிர் கொள்பவர்களுக்கு இது 34-35 வாரத்துக்குள் நிகழும். மற்றவர்களுக்கு பிரசவவலி எடுக்கும் சமயத்தில் இது பெரும்பாலும் நிகழலாம். இப்படி இடுப்பு எலும்பில் குழந்தையின் தலை பொதியும் போது வலி ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Head fitting Pain என்போம். முதல் பிரசவத்தை எதிர்கொள்ளும் பெண், இதுதான் பிரசவ வலியோ என்று நினைத்து பயந்துவிடுவார். இது ஒரு வகை false Pain.

இரண்டாம் வகை வலி, பிரசவத்துக்கான நாள் நெருங்க நெருங்க வரலாம். இந்த வகை வலி இடைவெளி விட்டுவிட்டு வரும். இதில் சில நொடி வலிக்குப் பிறகு சாதரணமாகி விடுவார்கள். இதை Practice Contraction என்போம். அதாவது, பிரசவத்துக்கு தன்னைத் தயார் படுத்திக் கொள்ள நம்முடைய கர்ப்பப்பை Practice செய்கிறது என்போம். பேறு காலம் நெருங்கத் தொடங்கியதுமே கர்ப்பமடைந்த பெண்களுக்கு கர்ப்பப்பை இப்படி அடிக்கடி சுருங்கி விரியத் தொடங்கும். அந்த சமயத்தில், பீரியட்ஸின்போது ஏற்படும் வலி போன்றதொரு வலி ஏற்படுவதாக சொல்வார்கள். ஆனால் இதுவும் false Pain தான்.

இதுபோன்ற வலி வரும்போது சம்பந்தப்பட்ட பெண் பதட்டப்படாமல் அமைதியாக தன்னைத்தானே 2-3 மணி நேரத்துக்குக் கண்காணித்துக் கொள்ளவேண்டும். எத்தனை நேர இடைவெளி விட்டு வலி வருகிறது என்பதைப் பார்க்கவேண்டும். நிஜப் பிரசவ வலி ஏற்படும் சமயத்தில் இரண்டு வலிகளுக்கு இடையேயான நேர அளவு குறையத் தொடங்கும். அதேபோல நேரம் ஆக ஆக வலி அதிகரித்துக் கொண்டே போகும். கர்ப்பமுற்ற பெண் தன்னைத்தானே அமைதியாகக் கண்காணிக்கும்போதுதான் இது தெரியும்.

ஜி. கிருஷ்ணகுமாரி
நன்றி – குமுதம்

மார்பகப் புற்றுநோய்

ஆக்கம்: டாக்டர்.சியாமளா சுந்தரலிங்கம்
தமிழாக்கம்: சி.ஆர்.ஜோசப்

மார்பகப்புற்றுநோயால் பீடிக்கப்பட்ட 50 வயதுத் தமிழ்ப்பெண் ஒருவர் எனது ஆதரவு கோரி என்னை அண்டினார். அவர் முன்பு எதுவித நோயாலும் பீடிக்கப்படாது சுகதேகியாக இருந்தார். அவருக்குப் புற்றுநோய் என்று கூறியதும் அதிர்ச்சி அடைந்தார். இதனால் எமது சìத்தில் உள்ள எத்தனையோ பெண்கள் தங்களைக் கிரமமான மார்பகப் பரிசோதனைக்கு அல்லது மார்பகஆய்வுக்கு (Mammogram) உட்படுத்தாமை எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது.

மேலைத்தேசங்களில் உள்ள அநேகத் தமிழ்ப் பெண்கள் 50 வயதை எய்துகிறதினால் தங்களைத் தேசீகத் திரையிடல் நெறிக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் ஆகின்றார்கள். இதனால் இவர்கள் 3 வருடங்களுக்கு ஒருமுறை மார்பக ஆய்வுப் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும். இது மார்ப்புப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை அறிந்து சிகிச்சை முறைகளைக் கைக்கொள்ள உதவும். 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கூச்சமடையாது இதில் ஈடுபட வேண்டும். சாதாரண வினாவிடைகள் கீழ்தரப்பட்டுள்ளன.

இது என்ன?

மார்புத்திசுக்களில் உண்டாகும் ஓர் அபாய வளர்ச்சியே மார்புப்புற்றுநோய்.

இது யாருக்கு உண்டாகிறது?

ஐக்கிய இராச்சியத்தில் 12ல் ஒருவர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். முதன்மையாக இது முதுபெண்களின் நோயாக இருந்தபோதிலும், இது எல்லா வயதினரையும் தாக்கக்கூடும். மார்ப்புப்புற்றுநோயால் தாக்கப்படுபவரில் 1% மானவர்கள் ஆண்கள். ஒரு குடும்பத்தில் ஒருவரோ அல்லது பலரோ இந்த நோய்க்கு ஆளாகியிருந்தால் இது மற்றோருக்குப் பரவும் அபாயம் அதிகமாகும். பிள்ளைகள் இல்லாதிருந்தாலோ, முதற்பிள்ளை பிந்திப் பிறந்தாலோ, அல்லது முலைåட்டாதிருந்தாலோ இந்த நோய் உண்டாவதற்குச் சாதகமாயிருக்கும். சுரப்புகள் மாற்றுச் சிகிச்சை பெற்றாலும் சிலவருடங்களின் பின் இந்த நோய் உண்டாகும் அபாயத்தை அதிகரிக்கும். புகைப்பிடித்தல், நீடியகாலம் மார்பகத்தில் கொப்பளங்கள் காணப்படுவதினாலும் இந்த நோய் உண்டாகலாம்.

அறிகுறிகள் என்ன?

அதிக பெண்களுக்கு மார்பகத்தில் கடினமான கல் போன்ற நோவில்லாத கட்டிகள் காணப்படலாம். மார்ப்புப்பகுதியில் தோல் பள்ளம் விழுந்து உள் இழுபடுவது போல் காணப்படலாம். முலைக்காம்பில் இரத்தக்கறையுடைய வெளியேற்றம் காணப்படுதலும் எச்சரிக்கை அறிகுறிகளாகும். மார்பகத்தில் நோவு, குறிப்பாக மாதவிடாயின் போது உண்டாவது கவலைகுரியதல்ல. பெண்கள் தங்கள் மார்பகங்களைப் பரிசீலித்து இவ்வித மாற்றங்கள் இருப்பின் பொது வைத்தியரின் (G.P) ஆலோசனை விரைவில் பெற வேண்டும்.

எனது வைத்தியர் என்ன செய்வார்?

அவர் உம்மை வினாவி உமது மார்பகங்களைப் பரிசோதிப்பார். அறிகுறிகள் தோன்றுமாயின் உம்மை மார்பாய்வு (Mammogram) என்னும் ஓ கதிரியக்கப் பரிசோதனைக்கு அல்லது வைத்தியசாலை மார்புச்சிகிச்சை நிபுணரிடம் அனுப்புவார்.

எவ்வித சிகிச்சை முறைக்கு நான் உட்படுத்தப்படுவேன்?

வைத்தியசாலை ஆலோசகர் உமக்கு புற்றுநோய் உண்டா என்று அறிய உமது மார்பகத்திசுவின் ஓர் மாதிரியயை எடுப்பார். இதைச் செய்வதற்கு உம்மை வெளிநோயாளியாகவோ அல்லது உடனுக்குடன் அறுவைச்சிகிச்சைக்கு உட்படுத்தவோ கூடும். கட்டியை அல்லது மார்பகத்தின் ஒரு பகுதியை அகற்றுதல் மார்புப்புற்றுநோயின் சிகிச்சை முறையாகும். நோய் பரவியிருக்கிறதா,என அறிய அவர்கள் கமக்கட்டில் சில சுரப்பிகளையும் அகற்றலாம். அறவைசிகிச்சைக்கு முதல் மார்பு ஓ கதிர் பரிசோதனையும் இரத்தப் பரிசோதனையும் செய்வது வழக்கம். இவற்றின் ìலம் நோய் சுவாசப்பைக்களுக்கு அல்லது ஈரலுக்குப் பரவியுள்ளதா என்பதையும் அறியலாம்.

அறுவைச் சிகிச்சையின் பின் நீர் கதிரியக்க (Radio Therapy) முறைக்கு அனுப்பப்படுவீர். இது அதிக வலுவுள்ள X கதிராக மார்பகத்தில் செலுத்தப்படுதலால் அங்குள்ள மீதமான நோய்க்கலங்களை அகற்கிறது. உமக்கு Tamosxcifen எனும் வில்லைகளும் தரப்படலாம். சில மார்புப் புற்றுநோய் இனங்கள் Oestrogen சுரப்பைக்காவக் கூடிய உள்வாங்கிகளைக் கொண்டவையாகும். இந்த வில்லைகள் உள்வாங்கிகளை அடைத்து புற்றுநோய் கலங்கள் பிரிவதை தடுக்கின்றன. நோயின் வகையையும் பரவுதலையும் பொறுத்து சில பெண்களுக்கு Chemothreapy போன்ற வேறுவகை மருந்து வகைகளும் தேவைப்படும். மார்புப்புற்றுநோய் உடைய பெண்கள் ஆரம்ப சிகிச்சைமுதல் பலவருடங்களுக்கு கிரமமான இடைவெளியில் அவதானிக்கப்படுவார்கள்.

சந்தர்ப்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்? 

என்ன வயதினராய் இருந்தாலும் உமது மார்பகங்களை நீர் கிரமமாக சுய-பரிசோதனை செய்தல் இன்றியமையாததாகும். கட்டிகள் தோல் மாற்றங்கள் முலைக்காம்புக் கசிவு என்பன ஒர் வைத்தியரால் பரிசோதிக்கப்பட வேண்டியவையாகும். உமது குடும்பத்தில் மிக நெருங்கிய தாய் சகோதரி யாருக்காவது மார்புப் புற்று நோயின் அறிகுறிகள் கணப்பட்டால் அதை வைத்தியருக்கு அறிவிக்க வேண்டும் நீர் பிள்ளைகள் உடைய இளம் பெண்ணாக இருந்தால் உமது பிள்ளைக்குத் தாய்பாலூட்ட தெண்டிக்க வேண்டும். ஆது பிள்ளைக்கு போசனையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதோடு உமக்கும் காப்பரணாக அமைந்து எதிர் காலத்தில் இவ்நோய் வராதிருக்க உதவும்.

நீர் 50 வயதை அடையும் போது தேசீக மார்பகத்திரையில் நெரியால் நடாத்தப்படும் மார்பக ஆய்வு பரிசோதனைக்கு 3வருடங்களுக் ஒரு முறை உம்மை உள்படுத்த வேண்டும். நீர் அழைக்கப்படாவிட்டால் அதை உமது பொது வைத்தியரின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

நன்றி: வடலி சஞ்சிகை

ஆரோக்கியமான கர்ப்பகாலம்

 

ஆக்கம்:  டாக்டர் சியாமளா சுந்தரலிங்கம்
தமிழாக்கம்: டாக்கர் நிலானி நக்கீரன்

ஒரு பெண் தாய்மை அடையும் போது, அவள் தன்னை மட்டுமல்ல அந்தக்குடும்பத்தையே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துகிறாள். கருவுற்ற காலம் தொடக்கம் ஆரோக்கியமாக இருந்தால்தான், தாய்க்கு மட்டுமல்ல வளரும் குழந்தைக்கும் நல்ல ஆரம்பமாய் அமையும். பிரச்சைனைகள் இல்லாமல் கற்பகாலமும் பிரசவமும் அமையும் என்று யாராலுமே உறுதியளிக்க முடியாது. ஆனால் ஆரோக்கியமான வழிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இப்பிரச்சனைகளைத்தடுக்கலாம்.

கற்பகலாம் ஆரோக்கியமாய் அமைய பத்து வழிகள்.

(இவை துண்டு பிரசுரத்தில் இருந்து சேர்க்கப்ட்ட தகவல்கள் )

1. சமவீத உணவை உட்கொள்ளல்:

பாண், தானிய வகைகள், பழவகைகள், காய்கறி வகைகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை உண்ண வேண்டும்.

2. போலிக் அமிலம் மாத்திரைகள்:

நீங்கள் கற்பம் தரிக்க தீர்மானிக்கும் போதிலிருந்து கற்பம் தரித்து பன்னிரண்டாவது வாரம் வரை தினமும் 400 அப மாத்திரையைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். முதுகெலும்பில் ஏற்படும் குறைபாட்டைத் தடுக்க போலிக்கமிலம் உதவுவதால் சுகாதார அமைப்புக்களில் இதைச் சிபார்சு செய்து வருகிறார்கள். கீரை வகைகள், புறோக்கோழி, தானியங்கள் சேர்க்கப்பட்ட பாண், தானியங்கள் மற்றும் மாமையிற் போன்ற உணவுகள் போலிக் அமிலம் நிறைந்தவையாகும்.

3. தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள்:

மென்மையான பதப்படுத்தப்படாத பாற்கட்டிகள்(ஸீஸ்), நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சி, அவிக்கப்படத முட்டை போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் லிஸ்டீயா, சால்மனெல்லா போன்ற கிருமிகளால் பரவும் நோய்களைத் தடுக்கலாம். விற்றமின் ஏ மாத்திரைகள் மற்றும் ஈரல் போன்ற விற்றமின் ஏ நிறைந்த உணவுப்பொருட்களை தவிர்ப்பதன் மூலம் குழத்தைக்கு பிறப்பில் ஏற்படும் குநைபாடுகளைத் தடுக்கலாம்.

4. ஓய்வுக்காக நேரம் ஒதுக்குங்கள்:

சிறிது நேரமேனும் ஓய்வு எடுக்காமல் வேலை செய்யின் குறைமாதப்பிரசவமாக வாய்ப்பிருக்கிறது. ஆகவே கற்பிணிகள் ஓய்வு எடுப்பது அவசியமாகும். தியானம், யோகாசனம் போன்றவை உங்களுக்கும், உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் சிறந்ததாகும். தினமும் எளிய உடற்பயிற்கிகளைச் செய்வதன் மூலம் உற்சாகமாக இருப்பதுடன் இலகுவில் பிரவசமாகவும் உதவும். (சிலருக்கு தவிர்க்க முடியாத சில காரணங்களால் உடற்பயிற்சியைத் தவிர்க்கும்படி மருத்துவர் ஆலோசனை கூறி இருப்பின் தவிர்க்கலாம்.)

5. தவிர்க்கவேண்டிய மருந்துகள்:

கற்பகாலத்தின் போது மருத்துவரின் ஆலோசனையின்றிக் கடைகளிலே வாங்கி மருந்துகள் ஏதும் உட்கொள்ளக் கூடாது. நீங்கள் நீண்டகால மருந்து உபயோகிப்பவராயின் கற்பம் தரித்துவிட்டதாகத் தெரிந்தவுடனேயே மருத்துவரின் ஆலோசனையைப் பொறுவது மிகவும் அவசியம். போதை மருந்துகளுக்கு அடிமையாய் இருப்பவராயின் உங்கள் குழந்தையையும் அம்மருந்துக்கு அடிமையாக்குவது மட்டுமல்ல அக்குழந்தையின் இறப்புக்கும் காரணமாகிவிடுவீர்கள். எனவே அப்பழக்கம் இருப்பவர்கள் நிறுத்தவேண்டும்.

6. மருத்துவரை உடனே அணுகவேண்டிய நிலைகள்:

உங்கள் உடல்நலனைப்பற்றி ஏதேனும் சந்தேகம் ஏற்படினும், யோனிமடல் வழியே குருதி அல்லது நீர் கசிதல், கை கால் முகம் வீக்கம், பார்வையில் ஏதேனும் மாற்றம் அல்லது அதிக ஒளி வீசுவது போன்ற உணர்வு, வயிற்றுவலி அல்லது தலைவலி முதலிய அறிகுறிகள் காணப்படின் உடனே மருத்துவரை அணுகவும்.

7. டோக்சோ பிளாஸ்மோசிஸ்

இது ஒரு ஒட்டுண்ணியால் ஏற்படும் நோய். இந்நோய் கற்பகாலங்களில் ஏற்படின் குழந்தைக்குப் பலவகை உடற்கோளாறுகளை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, தோட்ட வேலைகள் செய்யும்போது புனையின் எச்சம் கைகளில் படாமல் இருக்க கை உறைகளை அணியுங்கள். நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சியினை உண்ணாதீர்கள்.

8. பரிசோதனை நேரம்:

கற்பகாலத்தின்போது மருத்துவரும் தாதியும் சில பரிசோதனைகள் செய்வதற்காக உங்களை அழைப்பார்கள். இதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்க்காதீர்கள். இப்பரிசோதைனைகள் செய்வதன் மூலம் உங்கள் உடலிலும் உங்கள் குழந்தைக்கு ஏற்படக்கூடிய பல பிர்சனைளக் முற்கூட்டியே கண்டறிந்து நிவர்த்ர்தி செய்ய வாய்ப்பிருக்கின்றது.

9. மது அருந்துவதைக் குறைக்க வேண்டும்:

அதிக அளவில் மது அருந்தினால் குழந்தையின் மூளை பாதிக்கப்படும். அதனால் ஒன்று அல்லது இரண்டு அலகளவே (யுனிட்) அனுமதிக்கப்பட்டுள்ளது. (ஒரு யுனிட் என்பது அரை பயின்ட் பீயர் அல்லது ஒரு திராட்சைரசக் கிண்ணம்(வயின்) அளவு என அளவிடப்படும்.

10. புகை பிடித்தலை தவிர்த்தல்:

எமது கலாசாரத்திற்கு அப்பாற்பட்டதாயினும் மேலைநாடுகளில் வாழ்ந்து வரும் நாம் இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். கற்பம் தரிக்க வேண்டும் என தீர்மானிக்கும் போதே புகை பிடிப்பதை நிறுத்திவிடுவது நன்று. இல்லையேல் குறைப்பது மிகவும் அவசியம். புகைபிடித்தலினால் குழந்தைக்கு ஆபத்து மட்டுமன்றி குறைமாதப்பிரசவம் ஆகவும் வாய்ப்பிருக்கின்றது.

மேலும் சில துணுக்குகள்:

1. நீங்கள் எங்கு செல்வதானாலும் உங்கள் கைப்பைக்குள் கற்பகால கையேட்டை எடுத்து செல்ல மறவாதீர்கள். இது ஏதும் பிரச்சனைகள் வந்தால் எந்த ஒரு மருத்துவரும் உங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

2. முதல் மூன்று மாதங்கள் வரை அதிகாலையில் வாந்தி வருவது வளக்கமான ஒரு அறிகுறியாகும். வாட்டிய பாண், கிரக்கர் பிஸ்கட், உலர் தானிய வகைகள்(சீரியல்) போன்ற உணவுகளைக் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக உட்கொண்டால் வாந்தி குறையும். உணவுகளை சிறிய அளவில் அடிக்கடி உண்ணுவதாலும் பொரித்த உணவுப் பதார்த்தங்களை தவிர்ப்பதாலும் வாந்தியைக் கட்டுப்படுத்தலாம்.

3. நீங்கள் கற்பம் தரித்த நாள் முதல் உங்கள் குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை உங்களுக்கு மருத்துவச் செலவும் பல் வைத்தியச் செலவும் இலவசமாக அளிக்கப்படும் என்பதை ஞாபகத்தில் வைத்து அதைப் பயனபடுத்தலாம்.

4. சிறு வயதில் ருபெல்லா தடுப்புசி போடப்படாமல் இருப்பின் நீங்கள் கற்பமாக வேண்டும் என தீர்மானிக்கும் முன்னே உங்கள் மருத்துவரை அணு;கி தடுப்புசியைப் பெற்றுவிட்டு கற்பமாவது அவசியம்.

5. கற்பகாலத்தின் போது அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருடன் தொடர்பு ஏற்படின் உடனடியாக மருத்துவரை அணுகி உங்கள் உடலில் அந்த நோயை எதிர்க்க, எதிர்ப்பு சக்தி இருக்கிறதா? என்பதை இரத்தப் பரிசோதனை செய்து அறிய வேண்டும்.

ஆணின் பங்கு என்ன?ஒரு குழந்தையை உருவாக்க ஆணின் பங்கும் அவசியம் என்பது மறுக்க முடியாத உண்மை. இது முழுமை பெற ஆண்களும் பின்வருவனவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.

1. நல்ல ஆரோக்கியமான உணவு
2. புகைபிடிப்பதைத் தவிர்த்தல் – புகை பிடிப்பின் ஆரோக்கியமான அணுக்கள் உருவாகாது.
3. மது அருந்துவதில் அளவைக் குறைத்தல்
4. இறக்கமான உள்ளாடைகள், அதிக வெப்பமான நீரில் குளித்தல், சில மருந்து வகைகளைத் தவிர்த்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

நன்றி: வடலி சஞ்சிகை-UK

 

மிகுந்த பயனுள்ள சமையல் குறிப்புகள் :

வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.

அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.

கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.

தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.

வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.

பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.

பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி – தேவையான அளவு எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக ஊறிப் பக்குவப்படும். தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.

தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது.

எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.

ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் காணலாம்.

இட்லியை குக்கரில் வேகவிடும்போது குக்கர் தண்ணீரில் கொத்துமல்லி தழை, எலுமிச்சம்பழத் தோல் இவற்றைப் போட்டால் இட்லி வாசனையாக இருக்கும்.

பெருங்காயம் கல்போல் இருந்தால் உடைப்பது கஷ்டம். இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து தனித்தனியாகப் போட்டுவிட்டால் ஆறியவுடன் டப்பியில் போட்டுக் கொள்ளலாம்.

இட்லிக்கு உளுந்தைக் குறைத்து, கெட்டியாக அரைத்து வார்க்கும்போது சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கொண்டால், இட்லி மிருதுவாக இருக்கும். இரண்டு தினங்களுக்குக் கெடாமல் இருக்கும். பிரயாணங்களுக்கு உகந்தது.
காய்கறிகளில் சில காய்கள் கசப்பு சுவையுள்ளவை. அவற்றை நறுக்கி அரிசி களைந்த நீரில் சற்று நேரம் போட்டு வைத்தால் கசப்பு நீங்கிவிடும்.

காபி, தேனீர் போன்ற பானங்கள் சுவையும் மணமும் கொண்டதாக இருக்க, அவ்வப்போது புதிதாக இறக்கிய டிகாஷனையே பயன்படுத்த வேண்டும்.

கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.

காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.

மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.

பால் வைக்கும் பாத்திரம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான் பால் கெடாமல் இருக்கும். பாலுடன் இரண்டொரு நெல் மணிகளைப் போட்டு வைத்தால், காலையில் கறந்த பால் இரவு வரை கெடாமல் இருக்கும்.

சமையலறையில் வைத்திருக்கும் உப்பில் குளிர் காலத்தில் ஈரக்கசிவு ஏற்படும். அப்படி ஆகாமல் இருக்க, சிறிது அரிசியைக் கலந்து வைக்கவும்.

 

காளான் பிரட் சான்விட்ச்

காலை உணவானது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில், சீக்கிரம் செய்யும் வகையில் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். அதற்கு சான்விட் தான் மிகவும் சிறந்தது. அதனால் இன்று நாம் பார்க்க இருப்பது காளான் பிரட் சான்விட்ச்.

அதற்கு முன், பிரட்டானது கோதுமை அல்லது மற்ற தானியங்களால் செய்யப்பட்டது ஆகும். ஆகவே அது டையட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது. ஆனால் வெள்ளை பிரட்டானது மைதாவால் செய்யப்பட்டது. இது உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல.

சரி.. சரி இனி காளான் பிரட் சான்விட்ச் செய்வது எப்படி ? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :-

காளான் – 200 கிராம்,
கோதுமை பிரட் – 4,

வெங்காயம் – 2,
பூண்டு – 4 பல்,
இஞ்சி – சிறிதளவு,

மசாலாத் தூள் – கால் ஸ்பூன்,
பச்சை மிளகாய் – சிறிதளவு,

கொத்துமல்லித்தழை – சிறிதளவு,
வெண்ணைய் – 100 கிராம்.

செய்முறை:-

 • காளான்களைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • காளான், வெங்காயம், மிளகாய், கொத்துமல்லித் தழைகளை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
 • வெங்காயம், இஞ்சி, பூண்டை மிக்சியில் லேசாக அரைத்துக் கொள்ளவும்.
 • வாணலியில் வெண்ணைய் போட்டு, லேசாக அரைத்து வைத்துள்ள வெங்காயம், பூண்டு விழுதை வதக்கிக் கொண்டு, அதனுடன் காளான், பச்சை மிளகாய்,மசாலாத் தூள் போட்டு வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.
 • கிரேவியாக வந்ததும் கொத்துமல்லித் தழைகளை போட்டு இறக்கி விடவும்.
 • இந்த கிரேவியை இரண்டு கோதுமை பிரட் துண்டுகளுக்கு இடையில் வைத்து பரிமாறவும்.
 • சுவையான, சத்தான காளான் சான்விட்ச் ரெடி. ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.

இட்லி மஞ்சூரியன்

தமிழர்களின் அற்புதமான உணவு இட்லி. இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். 

இட்லி மீந்தால் உப்புமா கிண்டவோ, வேறு என்ன செய்யலாம் என்றோ யோசிக்க வேண்டாம். இட்லியை கொண்டு செய்யப்படும் ஒரு உணவு தான் இட்லி மஞ்சூரியன். வாங்க சுடச்சுட இட்லி மஞ்சூரியன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்:-

 • இட்லி – 6
 • மைதா மாவு – 1 டேபிள்ஸ்பூன்
 • கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன்
 • கார்ன் ப்ளோர் – 1 டேபிள்ஸ்பூன்
 • இஞ்சி – 1 துண்டு
 • பச்சை மிளகாய் – 5
 • பூண்டு – 5 பல்
 • முந்திரி – 10
 • டொமேட்டொசாஸ் – 1 ஸ்பூன்
 • உப்பு – தேவையான அளவு
 • எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:-

 • இட்லியை விரல் நீளத் துண்டுகளாக கட் செய்து வைத்துக்கொள்ளவும்.
 • ஒரு பேசினில் மைதா மாவு, கார்ன் ப்ளவர், கடலை மாவு மூன்றையும் எடுத்துக் கொள்ளவும்.
 • இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், முந்திரி அரைத்து மாவில் சேர்க்கவும்.
 • டொமேட்டோ சாஸ், உப்பு சேர்த்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
 • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் இட்லித்துண்ட்களை கலவையில் முக்கி எண்ணெயில் போட்டு எடுக்கவும்.
 • சுடச்சுட இட்லி மஞ்சூரியன் தயார்.
 • பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவியும் பரிமாறலாம். இட்லியை பொரிக்காது வதக்கியும் போடலாம்.

இட்லி மாவில் போதுமான அளவு உளுந்து இல்லையென்றால் இட்லி கெட்டியாக இருக்கும். அதுபோன்ற நேரங்களில் ஒரு கரண்டி நெய் அல்லது ஒரு கரண்டி நல்லெண்ணெயை சேர்த்து நன்கு கலந்து பிறகு ஊற்றுங்கள். இட்லி மிருதுவாக இருக்கும்.

Thanks : Image from en-iniyaillam.

சுவாரஸ்யமான 25 கிச்சன் டிப்ஸ்

இன்று நாம் பார்க்க இருப்பது சுவாரஸ்யமான 25 கிச்சன் /சமையல் டிப்ஸ். 

 1. கட்லெட் செய்வதற்கு பிரெட் தூள் இல்லையா? பிரெட் ஸ்லைஸை தவாவில் புரட்டி எடுத்து, மிக்ஸியில் உதிர்த்து உபயோகிக்கலாம். கொஞ்சம் ஓட்ஸ் சேர்த்தால் கட்லெட்டின் சுவை கூடும்.
 2. பக்கோடா செய்ய கடலை மாவுக்கு பதில் கடலைப்பருப்பைப் பயன்படுத்தலாம். கடலைப்பருப்பை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகாய் கலந்து, பக்கோடா செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
 3. பூசணி அல்வா செய்யும் போது, பூசணியைத் துருவி சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, பிறகு செய்தால் அல்வா பொலபொலவென அருமையாக வரும்.
 4. சாம்பார் பொடிக்கு அரைக்கும்போது, ஒரு கப் புழுங்கலரிசி சேர்த்து அரைக்கலாம். இந்தப் பொடியைக் கொண்டு சமைக்கும் போது, சாம்பார் குழைவாகவும் கெட்டியாகவும் வரும். பருப்பு அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது.
 5. துவரம் பருப்பை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து வைத்துக்கொண்டால் சமைக்கும்போது பருப்பு சீக்கிரம் வெந்துவிடும். கேஸ் மிச்சமாகும்.
 6. பலகாரம் செய்ய எண்ணெய் காய வைக்கும் போது, முதலில் கொய்யா இலையைப் போட்டு எடுத்துவிட்டு, பிறகு முறுக்கு, வடை, அதிரசம் போன்ற பலகாரங்களைச் செய்தால் எண்ணெய் பொங்கி வழியாது.
 7. சிறிதளவு சர்க்கரை தூவி வைத்தால் மிக்சர் நமத்துப் போகாமல் இருக்கும்.
 8. மளிகைக் கடையில் ‘தையல் இலை’ என்ற பெயரில் விற்கப்படும் மந்தார இலையை பானையில் போட்டு, அதன் மேல் புளியை வைத்தால் நெடுநாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.
 9. சர்க்கரையில் 5 கிராம்புகள் போட்டு வைத்தால் எறும்பு வராது… நீர்த்தும் போகாது.
 10. உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும் போது, நறுக்கிய வில்லைகளின் மேல் சிறிது பயத்தம் மாவு தூவிவிட்டுப் பொரித்தால் சுவை பிரமாதமாக இருக்கும்.
 11. வெங்காயத்தை வெறும் வாணலியில் சிறிது வதக்கிவிட்டு, பிறகு எண்ணெயில் வதக்கினால் சீக்கிரம் சிவந்து வதங்கிவிடும்.
 12. சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது அரிசியில் சிறிது நெய் கலந்து வேக வைத்தால் சுவையும் மணமும் கூடும்.
 13. குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை விட்டு, அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் அப்போது பறித்தது போல ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
 14. ஆம்லெட் செய்யும் போது சிறிது வெண்ணெயையும் முட்டையில் நன்றாகக் கலக்கி செய்து பாருங்கள்… டேஸ்ட்டாக இருக்கும்.
 15. பச்சரிசியை வெந்நீரில் நனைத்து ஆப்பத்துக்கு அரைத்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
 16. இரண்டு டம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை தட்டினால், உளுந்து வடை சுவையாக இருக்கும்.
 17. பால் அல்லது கஞ்சி ஆறினால் மேலே ஏடு படியும். லேசாக தண்ணீர் தெளித்து வைத்தால் ஏடு படியாது.
 18. தோசை மாவு புளித்துப் போனால், அதில் அதிக அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். சிறிது நேரம் கழித்து தண்ணீர் மேலே நிற்கும். அதை வடித்துவிட்டு தோசை ஊற்றினால் சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.
 19. நீங்கள் வதக்கிச் செய்திருக்கும் காய்கறியில் ஒரே எண்ணெய் மயமா? கவலையே வேண்டாம். கொஞ்சம் கொள்ளு மாவைத் தூவினால் போதும். கொள்ளுக்கு எண்ணெயை உறிஞ்சும் தன்மை உண்டு.
 20. பிரெட் பக்கோடா செய்வதற்கு முன் வெட்டி வைத்திருக்கும் பிரெட் ஸ்லைஸ்களை பாலில் முக்கி எடுத்த பிறகு பக்கோடா மாவில் போடுங்கள். அட்டகாசமான சுவை கிடைக்கும்.
 21. கமலா ஆரஞ்சு பழத் தோல்களை எறிந்து விடாமல் பத்திரப்படுத்தி வையுங்கள். தேநீர் தயாரிக்கும் போது அந்தத் தோலை துளியூண்டு கிள்ளி, தேயிலையுடன் சேர்த்து டிகாஷன் தயாரித்தால் மணம் தூக்கலாக இருக்கும்.
 22. கேஸ் ஸ்டவ்வை சமையல் முடித்து, ஆறியபின், சுத்தமாகத் துடைத்து, நியூஸ் பேப்பரால் துடைக்க “பளிச் பளிச்”
  தான்!
 23. வாழைப்பழங்கள் வெளிபடுத்தும் வாயுக்கள் பிற பழங்களை விரைவாக பழுக்கவைத்துவிடும், ஆதலால் வாழைப்பழங்களை தனியே வைப்பது உகந்தது.
 24. ஆம்லெட் செய்ய முட்டையை அடிக்கும்போது அதோடு சிறிதளவு பால் அல்லது சோள மாவு சேர்த்தால் ஆமலேட் பெரியதாகவும், மிருதுவாகவும், சுவை மிகுந்ததாகவும் இருக்கும்.
 25. கொத்தமல்லி மற்றும் புதினா நீண்ட காலத்திற்கு வாடாமல் இருக்க, அவற்றை அலுமினியம் ப்ஹாயிலில் (Aluminium Foil) சுற்றி குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.