கால அளவுகள் இத்தனை துல்லியமானவையா !!!

பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே நம் முன்னோர்கள் பயன்படுத்திவந்தகால அளவுகள் இத்தனை துல்லியமானவையா !!! நம்மை வியப்பில் ஆழ்த்தும் கணக்கதிகாரசெய்யுள்கள­்.. Continue reading

ஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் அபாயங்கள்..!


இன்றைய காலத்தில் மார்டன் என்ற பெயரில் ஆல்கஹால் பருகுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை ஆண்கள் தான் அதிக அளவில் ஆல்கஹால் அருந்திக்கொண்டிருந்தனர். தற்போது பெண்களும் குடிக்க ஆரம்பித்துவிட்டனர். சொல்லப்போனால் ஆண்களை விட பெண்களே அதிகம் குடிக்கின்றனர். Continue reading

இருமல், ஜலதோஷமா இயற்கை மருந்து:-


 

இஞ்சி வேர்

இயற்கை மருத்துவத்தில் சிறந்தது இஞ்சி. இதன் சாறு தொண்டை வலிக்கு சிறந்தது. இஞ்சியை இரண்டு அங்குலம் நன்கு சுத்தம் செய்து இஞ்சிக்கு தகுந்தாற் போல தண்ணீர்விட்டு கொதிக்க வைத்து இஞ்சித் துண்டுகளை அம்மியில் வைத்து விழுதாக அரைத்து கொதிக்கும் சுடுதண்ணீரில் போட்டு ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து பானம் தயாரித்து வடிகட்டி பருகலாம் சுவை சேர்க்க விரும்பினால் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து கொள்ளலாம். நோய்தொற்று இருப்பின் ஜலதோஷம் நீங்கும் வரை ஒரு நாட்களுக்கு மூன்று வேளை இந்த தேநீரை பருகினால் தொண்டை வலி எளிதில் குணமாகும். Continue reading

சீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகை

சீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும்.

வட இந்தியாவில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது
குமின் என்ற வார்த்தையே அராபிய வார்த்தையாக கூறப்படுகிறது. சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து உபயோகிக்கப் பட்ட வரலாறு சான்று சிரியாவில் இருந்து கிடைத்துள்ளது. Continue reading

வட்டியில்லா ‘இஸ்லாமிய ஷரியத்’ வங்கி:

 

 

நாட்டில் முதன்முதலாக வட்டியில்லா ‘இஸ்லாமிய ஷரியத்’ வங்கி: கேரளாவில் ரிசர்வ் வங்கி திறக்க அனுமதி

மும்பை, ஆக.18-

வட்டிக்கு பணம் தருவதையும் வட்டிக்கு பணம் வாங்குவதையும் இஸ்லாமிய சட்டமான ‘ஷரியத்’ பாவப்பட்ட செயலாக விலக்கி வைத்து தடை செய்துள்ளது.

இதையும் மீறி, காலப்போக்குக்கு ஏற்ப சிலர் பண கொடுக்கல்-வாங்கலில் வட்டியை அனுமதித்து வருகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. Continue reading

வயிற்றைப் பாழாக்கும் ஆண்ட்டி-பயாடிக் மாத்திரைகள்..!!


நோயிலிருந்து காக்கும் ஆண்ட்டி-பயாட்டிக் மருந்துகளே வயிற்று உபாதைகளுக்கு காரணமாக அமையும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது சக்தி வாய்ந்த ஆண்ட்டி பயாடிக்குகள் மட்டுமல்லாது சாதாரண ஆண்ட்டி-பயாடிக்குகளும் கூட வயிற்றில் உள்ள உணவுச் செரிமான அடிக்குழாயில் உள்ள நுண்ணுயிரிகளின் சமச்சீர் நிலையைக் குலைத்து விடுகின்றன என்றும் அதுவே எதிர்பாராத ஆரோக்கிய கேடுகளுக்கும் இட்டுச் செல்கிறது என்றும் அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது. நேஷனல் அகாடமி ஆஃப் சயன்சஸ் இது குறித்து ஆய்வு செய்து விவரங்களை வெளியிட்டுள்ளது. Continue reading

முல்லா கதை பொதிகளும் கழுதைகளும் !!

“அதோ முல்லா வருகிறார்” என்று தேனீர்க்கடையில் கடுமையான தத்துவ விவாதம் நடந்து கொண்டிருந்தபோது ஒருவர் கூவினார்.

“அவரிடம் ஓர் கடினமான கேள்வியைக் கேட்போம்” என்றார் ஒருவர்.

“ஆனால் அவருக்குக் கழுதைகளை விட்டால் வேறு எதுவும் தெரியாது” என்றார் மற்றொருவர். Continue reading

சுவாரசியமான முல்லா குட்டி கதைகள் !

ஒரு தடவை அறவொழுக்கத்தை நேசிக்கும் பிரபலமான தத்துவவாதி ஒருவர் முல்லா வசிக்கும் ஊரை கடந்து செல்ல வேண்டியிருந்தது. அப்போது சாப்பாட்டு நேரமாகையால் அவர் முல்லாவிடம் நல்ல உணவு விடுதி எங்குள்ளது என்று கேட்டார். முல்லா அதற்கு பதில் சொன்னவுடன், தத்துவவாதி போகும் போது பேச ஆள் கிடைத்தால் நல்லது என்ற எண்ணத்தில் முல்லாவையும் தன்னுடன் சாப்பிட வருமாறு அழைத்தார். Continue reading

சுவாரசியமான முல்லா கதை சிரிப்பதற்கும் சிந்திப்பதற்கும் !!


நான் படித்த முல்லா கதை ஒன்னு.. முல்லா ஒருமுறை பக்கத்து வீட்டுக்காரரிடம் ஒரு பானை இரவல் வாங்கினாராம். பல நாட்கள் வரை முல்லா பானையை திருப்பி தராததால், பக்கத்து வீட்டுக்காரர் வந்து பானையை திருப்பி கேட்டார். அதற்கு முல்லா “அடடே…, உங்களிடம் வாங்கிய பானையை திருப்பி கொடுக்காமல் இருந்ததிலும் ஒரு லாபம் இருக்கின்றது. அந்த பானை ஒரு குட்டி போட்டு இருக்கின்றது, “என்று சொல்லி அதனுடன் ஒரு சிறிய பானையும் கொடுத்தார். பக்கத்து வீட்டுக்காரர் மகிழ்ச்சியில் இரண்டு பானையும் வாங்கிசென்றார். Continue reading

கடல் குதிரை


கர்ப்பம் தரித்து குழந்தை பெறுகின்ற ஒரே ஒரு ஆண் வர்க்கம்!
இந்த உலகத்திலேயே ஆண் வர்க்கத்தை பொறுத்த வரை கர்ப்பம் தரித்து குழந்தை பெறுகின்ற ஒரே ஒரு உயிரினம் கடல் குதிரைதான்.

கடல் குதிரைகளிடையே உடல் உறவு என்பது கிடையாது. பரஸ்பரம் சீண்டிக் கொள்கின்றன. Continue reading

*படர்தாமரை போக:


 

அறுகம்புல்லும், மஞ்சளும் சம அளவு எடுத்து அதை நன்கு அரைத்து படர்தாமரையில் பூச படிப்படியாக படர்தாமரை மறையும்.

* பல் ஈறு, வீக்கம், வலி போக: Continue reading

மீன்

மீன்

கர்ப்பக் காலத்தில் வாரம் இரண்டு முறையேனும் மீன் உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள் மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள் என்கிறது ஒரு ஆராய்ச்சி. Continue reading

உடலை வலுவாக்கும் மூங்கில் நெல் (Bamboo Rice)

மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும். இந்த பூவிலிருந்து வரும் காய்களை நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். முற்றி காய்ந்த பின் அவை தானாகவே உதிர்கின்றன. பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்கள் இந்த நெல்லினை வேக வைத்து உண்பதால் அவர்களின் உடல் வலிமையாக உள்ளது. 40 வருடங்கள் முற்றிய மூங்கில்கள் பூத்து காய்த்த பின், அதோடு காய்ந்து விடும். Continue reading

தேங்காயின் சத்துப் பட்டியல்! ! ! !

இத்தனை வித்தைகள் தேங்காயில் உண்டா? தேங்காயின் சத்துப் பட்டியல்! ! ! !

தேங்காய் சேர்க்காத குழம்பு வகைகள் தமிழகத்தில் குறைவு. அதில் இருந்தே தேங்காயின் பெருமையை புரிந்து கொள்ளலாம். தென்னை மரத்தின் கனிதான் தேங்காய் என்றாலும் அது பருப்பு வகையோடு பிரித்து அறியப்படுகிறது. இதில் அடங்கிய சத்துக்களின் விவரத்தை அறியலாம்…

* தேங்காயில் பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிக ஆற்றல் வழங்கக்கூடியது. வைட்டமின்கள், தாதுக்கள் மிகுதியாக கிடைப்பதால் முழு உணவாகவே தேங்காயைச் சாப்பிடலாம். Continue reading

பழைய சாதத்தில் பலம் இருக்கு

Day after day we will have to leave the water boils in the old Chad B 6, B 12 more U.S. doctors say I should be.

 முதல் நாள் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டு மறுநாள் நாம் சாப்பிடும் இந்த பழைய சாத்தில் தான் பி6 பி12 அதிகமாக இருக்கிது என் கூறுகின்றனர்  அமெரிக்க மருத்துவர்கள். குறிப்பாக நமது உடலின் சிறுகுடலுக்கு நன்மை செய்யும் ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ் அதிகமாகி நமது உணவுப்  பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்.பொதுவாக கிராமத்தில் கஞ்சி சாப்பிடும்போது கஞ்சியுடன் வெங்காயம் சேர்த்து சாப்பிடுவது தான் வழக்கம். சிறிய வெங்காயத்தை சேர்த்து  சாப்பிடும்போது நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதால் வைரஸ் காய்ச்சல் என எந்த ஒரு காய்ச்சலும் நம்மை அணுகாது. பழைய சாதத்தில் என்ன பயன்  இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.

இரவு வேளையில் தண்ணீர் ஊற்றி வைப்பதால் சாதத்தில் அதிகளவு நல்ல பாக்டீரியாக்கள் உருவாகுகிறது. இதனை காலை வேளை உணவாக  எடுத்துக்கொள்வதால் உடல் லேசாகவும் அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. மேலும் உடல் சூட்டை தணிப்பதோடு குடல்புண், வயிற்றுவலி,  போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.. இந்த பணியோடு நின்றுவிடாமல் நார்ச்சத்து, மலச்சிக்கல், பிரச்சனைகளை தீர்த்து உடலை சீராக இயங்கச்  செய்கிறது..

உடலை சோர்விலிருந்து மீட்டு சுறுசுறுப்பாக இயங்கச்செய்யும். அதற்காக சூடாக தயாரித்த சாதத்தில் தண்ணீரை ஊற்றி சாப்பிடக்கூடாது. முதல் நாள்  இரவு மீந்த சோற்றை எடுத்து நல்ல தண்ணீர் ஊற்றி முடிவிட வேண்டும். மறுநாள் சாப்பிடும் முன் சாதத்தை நன்கு பிழிந்து மோர் சேர்த்து வெங்காய்  வைத்து சாப்பிடலாம்.