இதயத்தின் காவலன் பீன்ஸ்


நமது உடலை நோய் தாக்குவதற்கு முக்கிய காரணமாக அமைவது என்ன? உதாரணமாக காய்ச்சல் என வைத்துக்கொள்வோம். காய்ச்சல் ஏற்பட என்ன காரணம். வைரஸ் கிருமிகள் நமது உடலை தாக்கும் அவற்றை எதிர்க்க போதிய அளவு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் நமது உடலுக்குள் வைரஸ் எளிதில் நுழைந்து விடுகிறது. அவற்றை தவிர்க்க போதுமான அளவு சத்துகள் தேவை.

இதில் ஏதேனும் ஒரு சத்துகள் குறைந்தாலும் உடலை நோய் தாக்க ஆரம்பிக்கும். நமது உடலை சீராக இயங்கச் செய்ய இதயத்தின் பங்கு மிக முக்கியமானது. இதயத்தை பாதுகாக்கும் காய்கறிகளில் நாம் பார்க்கபோவது பீன்ஸ்.

பீன்ஸை குழம்பில் போட்டு சாப்பிடுவதை விட பொரியல் செய்து சாப்பிடுவதே மிகச்சிறந்தது-. வேகவைத்த காய்கறிகளை தான் மனிதன் உடல் எளிதில் ஜீரணிக்கும். அப்படி ஜீரணமாவதால் தான் உடலுக்கு அனைத்து சத்துகளும் கிடைக்கும். பீன்ஸ்சில் உள்ள இரும்பு, கால்சியம், மக்னீசீயம், மாங்கனீசு, மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துகளை கொண்டுள்ளது.

இருதய படபடப்பு, மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீன்ஸை உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்து உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய படபடப்பை நீக்கி உடலை பாதுகாத்துக்கொள்ளும். கொழுப்பின் அளவு ரத்தத்தில் அதிகம் உள்ளவர்கள் பீன்ஸை பொரியலை செய்து தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் பீன்ஸில் உள்ள லெசித்தின் எனும் நார்ப்பொருள் இருதய டானிக்காக செயல்படுவதோடு ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து ரத்தத்தை சுத்தமாக்கும்.

மேலும் ரத்தகுழாய்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை நீக்கி இருதய அடைப்பு மற்றும் இருதய சம்பந்தமான நோயிலிருந்து உடலை பாதுகாக்கலாம். மேலும் நீரிழிவால் அவதிபடுபவர்கள் உணவில் அடிக்கடி பீன்ஸை எடுத்துக்கொள்வதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுபடுத்தப்படும். இதனால் நோயின் தாக்கம் குறையும்.

Leave a comment