சதுரகிரி மலை


சதுரகிரி மலையில் இருக்கும் அரிய விருட்சங்கள் மற்றும் மூலிகைகளின் பட்டியலை நேற்றைய பதிவில் பார்த்தோம். இனி வரும் நாட்களில் குறிப்பிட்ட சில அரிய மூலிகைகள் மலையின் எந்தப் பகுதியில் இருக்கிறது என்பதையும், அவற்றின் தன்மை மற்றும் மகத்துவத்தினைப் பற்றி பார்ப்போம்.

மிகவும் ரகசியமாய் பாதுகாக்கப்படுகிற சதுரகிரியின் தகவல்களை நான் பொதுவில் வைப்பதினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி சில நண்பர்கள் தங்களின் ஆதங்கத்தினை தெரிவித்திருந்தனர். நான் தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஒரு கருத்தினையே அந்த நண்பர்களுக்கு பதிலாக வைத்திட விரும்புகிறேன். குருவருளால் மட்டுமே எதுவும் சாத்தியமாகும். நற்சிந்தனையும்,குருவருளும் வாய்க்கப் பட்டவர்களுக்கு மட்டுமே சித்தர் பெருமக்களால் சபிக்கப் பட்ட இந்த ரகசியங்கள் கைகூடும்.

வாருங்கள் மூலிகைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

முண்டகவிருட்சம்

சதுரகிரி மகாலிங்க மூர்த்தியின் சன்னிதிக்கு வடதிசையில் ஒரு நாளிகை தூரம் நடக்க முண்டகவனம் என்னும் ஒரு வனம் இருக்கிறது. அந்த வனத்தின் வட மேற்கு மூலையில் இந்த முண்டக விருட்சங்கள் வளர்ந்திருக்கும். தோற்றத்தில் ஆல விருட்சம் போல் இருந்தாலும், இதன் இலைகள் சிறியதாகவும் காய்கள் கலத்திக்காய் போலவும் இருக்கும். இந்த மரத்தை தட்டினால் பால்வருமாம்.

அந்தப் பாலை தினமும் அரைக்காற் படியாக முப்பது நாளைக்கு சாப்பிட மூர்ச்சை ஆகுமாம். அப்போது ஒருவர் அருகில் இருந்து பசுப்பலை நன்கு காய்ச்சி தேன்விட்டு கலந்து ஒருகரண்டி வீதம் அடிக்கடி மூர்ச்சையானவருக்கு பருகத் தர வேண்டுமாம் அப்படி தொடர்ந்து பருக மூர்ச்சை தெளியுமாம். மூர்ச்சை தெளிந்து ஒருவாரத்தில் காயசித்தி உண்டாகி விடுமாம்.உடல் தங்கநிறமாகுமாம், மலஜலம் பேதிக்குமாம்.

அழுகண்ணி

மேலே சொன்ன முண்டகவிருட்சத்திற்க்கு பக்கத்தில் வட்டப்பாறை ஒன்று இருக்கிறதாம், அதன் மேற்குப் பகுதியில் கசிவுத்தரையும் அதில் நெரி கற்களும் நிறைந்த ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்தில் அழுகண்ணி என்ற மூலிகைகள் வளர்ந்திருக்கும். அதன் இலை பலாச்சுளை போல் இருக்கும். பூமஞ்சள் நிறமாகவும் காய் செந்தட்டிக்காய் போலவும் இருக்கும். இதை சாப நிவர்த்தி செய்து பிடுங்கி அதன் வேரை சூரணித்து பசு நெய்யுடன் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் நரை, திரை, மூப்பு, பிணி இன்றி நெடுங்காலம் வாழலாமாம்.

தொழுகண்ணி

மேலே சொன்ன அழுகண்ணி மூலிகை இருக்கும் இடத்திற்கு மேல் புறமாக தொழுகண்ணி என்னும் மூலிகை இருக்கிறது, அதன் இலை அலரி இலை போலிருக்கும், பூ வெண்மை நிறமாகவும் , தூர் கறுப்பு நிறமாகவும் இருக்கும், இது சூரியனை நோக்கியபடி இருக்கும். இந்த குறிப்புகளைக் கொண்டு இதனை தேடி அறிந்து, இலையில் கொஞ்சமும், முன்னர் கூறிய அழுகண்ணி இலையில் கொஞ்சமும் சம அளவில் எடுத்து சூரணித்து அந்த சூரனத்தில் திரிகடிப் பிரமாணம் எடுத்து பசும் பாலில் போட்டு அருந்தினால் காயசித்தி உண்டாகுமாம்.

2 thoughts on “சதுரகிரி மலை

 1. உமது மடல் அனைத்தும் அருமை… மிக்க நன்றி…!!!!

  நான் உமது ரசிகன் ஆகிவிட்டேன்…

  மிக்க நன்றி…!!!!

  2013/8/29 “Kulasai – குலசை”

  > **
  > Engr.Sulthan posted: ” சதுரகிரி மலையில் இருக்கும் அரிய விருட்சங்கள்
  > மற்றும் மூலிகைகளின் பட்டியலை நேற்றைய பதிவில் பார்த்தோம். இனி வரும்
  > நாட்களில் குறிப்பிட்ட சில அரிய மூலிகைகள் மலையின் எந்தப் பகுதியில்
  > இருக்கிறது என்பதையும், அவற்றின் தன்மை மற்றும் மகத்துவத்தினைப் பற்றி
  > பார்ப்ப”

  • நன்றி. தொடர்ந்து படியுங்கள்.விரைவில் பதிவுகள் ஆயிரத்தை தொடவுள்ளன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s