உடலில் குரோமியம் உப்பு குறைந்தால்….!


நமது உடம்பில் மூளையை தலைமை செயலகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இதயமே நமது உடம்பின் தலைமை செயலகம் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள். இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிறது.

இதயத்தை பாதுகாக்க, தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். இதில் இஞ்சியும், பாதாம் பருப்பும் மிக முக்கியமானவை. நம் உடலில் குரோமியம் என்ற தாது உப்பின் அளவு குறைந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கும் பணி தாறுமாறாகி விடுகிறது. இதனால் சர்க்கரை எரிக்கப்படுவது குறைந்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. Continue reading

எப்போதும் உற்சாகமாக திகழ்வதற்கு சில எளிய வழிகள்!

வாரம் இரு முறை நன்றாக உடம்பு மற்றும் தலையில் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்து நன்றாக ஊறிய பின்னர் சீயக்காய் போட்டுக் குளிப்பதன் மூலம் உடலில் வலி, சோர்வு நீங்கி, உற்சாகம் பிறக்கும். குளியல் அறையில் கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றி கதவை இரண்டு நிமிடம் மூடிவிடுங்கள், பின்னர் குளிக்க செல்லுங்கள். நன்றாக வியர்த்து, உடலில் உள்ள கழிவுகள் தோல் வழியாக வெளியேறும். தினமும் சூரிய வெளிச்சம் படும்படியாக 15 நிமிடங்கள் நில்லுங்கள். இது மனதை ஒரு நிலைப்படுத்தும். சருமத்தில் வைட்டமின் டி சத்தும் ஊடுருவும். Continue reading

வீடு வாங்குவதற்கு சேமிப்பது எப்படி?

நடுத்தர மக்களின் வாழ்நாள் சாதனையே சொந்த வீடு வாங்குவதுதான். ஆனால் அது ஒன்றும் அவ்வளவு எளிமையான காரியம் கிடையாது. மேலும், யாரும் மொத்த பணத்தையும் கையில் வைத்துக்கொண்டு வீடு வாங்கமுடியாது. அப்படி வாங்குபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பெரும்பாலானவர்கள் கடன் வாங்கித்தான் வீடு வாங்குகிறார்கள். Continue reading

நகரும் பிரம்மாண்டம்!


கப்பல் என்றாலே பிரம்மாண்டம்தான். அதிலும் உலக மகா பிரம்மாண்ட கப்பல் எது தெரியுமா? ஒயாசிஸ் ஆஃப் தி சீஸ். ஃபின்லாந்தில் வடிவமைக்கப்பட்ட இந்தக் கப்பல் ராயல் கரீபியன் இண்டர்நேஷனல் நிறுவனத்துக்குச் சொந்தமானது. 2009ஆம் ஆண்டில் அதிகாரபூர்வ பயணத்தைத் தொடங்கியது. இந்தக் கப்பல் பற்றிய தகவல்கள் அனைத்தும் ஆச்சரியம் தருகின்றன.

#எடை 2 லட்சத்து 25 ஆயிரம் டன்.

#கப்பலுக்குள் 150 மைல் நீளத்திற்கு பைப்புகளை பயன்படுத்தியுள்ளனர். Continue reading

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு.!


 

சர்க்கரைவள்ளி கிழங்கு உலகின் மிக சத்தான உணவுகள் ஒன்றாகும். சர்க்கரை வள்ளி கிழங்கில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் குறிப்பிடத்தக்கது.. ஆராய்ச்சி மூலம் சர்க்கரை வள்ளி கிழங்கில் ஆக்ஸிஜனேற்ற நிறமியாகிய பூநீலம் ஏராளமாக உள்ளது என்று நிருபிக்கப்பட்டுள்ளது. இது புற்றுநோயை தடுக்கும் குணம் கொண்டது.. Continue reading

மாதுளை பயன்படுத்தும் விதம்


1. 15 கிராம் அளவு மாதுளம் பிஞ்சை எடுத்து அரைத்து 200 மிலி மோரில் மூன்று வேளை வீதம் பருகிவர பேதி இரத்தப்பேதி நிற்கும்.

2. பழச்சாற்றை தேவைக்கேற்ப பருகிவர பாண்டு நீங்கி உடற்பலம் தரும். Continue reading

முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு-16

“நஜ்து“ போர் (ஹிஜ் 4, ரபீவுல் ஆகிர் (அ) ஜுமாதா அல்ஊலா)

சண்டையும், உயிர்ப் பலியுமின்றி நழீர் போல் முஸ்லிம்களுக்குக் கிடைத்த வெற்றி முஸ்லிம்களின் வலிமையை மீண்டும் மதீனாவில் நிலைநாட்டியது. நயவஞ்சகர்கள் தங்களது சூழ்ச்சிகளை வெளிப்படுத்துவதைக் கைவிட்டனர். அதனால் முஸ்லிம்களுக்கு உள்நாட்டுக் குழப்பம் குறைந்தது. ஆகவே, இப்போது மதீனாவிற்கு வெளியில் விஷமம் செய்து வந்த கிராம அரபிகளின் அக்கிரமத்தை அடக்க நபி (ஸல்) அவர்கள் நடவடிக்கை எடுத்தார்கள். இந்த கிராம அரபிகள்தான் உஹுத் போருக்குப் பின் முஸ்லிம்களுக்கு பெரும் இன்னல்கள் விளைவித்து வந்தனர். அழைப்புப் பணிக்காக அனுப்பப்படும் குழுக்களை வஞ்சகமாகக் கொன்று குவித்தனர். இவ்வாறு செய்து வந்த இவர்களுக்கு, அடுத்தபடியாக மதீனாவில் தாக்குதல் நடத்தும் அளவுக்குத் துணிவும் பிறந்தது. Continue reading