தாம்பூலப்பையில் இவரது வாழ்க்கை


திருமண சம்பிரதாயங்களில் முக்கியமானது தாம்பூலம் தருவது.  என்னதான் சிறிய பட்ஜெட் திருமணம் என்றாலும், வெற்றிலை, பாக்கு, பழம்,  முடிந்தால் தேங்காய் வைத்த தாம்பூலப்பை கட்டாயம் வழங்கப்படும். வசதியானவர்கள் என்றால் அதையே இன்னும் ஆடம்பரப்படுத்திக் கொடுப்பார்கள். 

முன்பெல்லாம் மஞ்சள் நிற துணிப்பைதான் தாம்பூலப்பையின் அடையாளம். இன்று வெல்வெட், சணல், ஜரிகை வைத்த துணி, அட்டை என அவரவர்  விருப்பத்துக்கும் வசதிக்கும் ஏற்றபடி, எதில் வேண்டுமானாலும் தாம்பூலப்பை தருகிறார்கள். சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த இந்திராணி, விதம்  விதமான தாம்பூலப்பைகள் தைப்பதில் நிபுணி.

‘‘பேப்பர் பை தயாரிக்கிறதுலதான் தொடங்கினேன். சுற்றுச்சூழலுக்கு நல்லதுங்கிறதால அதுக்கு நல்ல வரவேற்பு. அதுலயே தாம்பூலப் பை  பண்ணித்தரச் சொல்லி முதல் ஆர்டர் வந்தது. அதைப் பார்த்தவங்க, வேற வேற மெட்டீரியல்ல, வேற வேற டிசைன்ல தாம்பூலப்பை கேட்க  ஆரம்பிக்க, அப்படியே என் பிசினஸ் பெரிசானது. குடும்பம் நொடிச்சுப் போய், வாழ்க்கை என்னவாகப் போகுதோங்கிற நிலைமையில இருந்த என்னை,  இன்னிக்கு இந்த பிசினஸ்தான் கை தூக்கி விட்டு, வாழற துக்கான தைரியத்தையும் கொடுத்திருக்கு…’’ – நிறைந்த மனதுடன் சொல்கிறார் இந்திராணி.

இது இப்படித்தான்…

மூலப்பொருள்கள்

தையல் மெஷின், நான் வோவன் மெட்டீரியல் எனப்படுகிற அஸ்தர், கண்ணாடி மாதிரியான மெல்லிய துணி, வெல்வெட், நெட் மெட்டீரியல், ஃபேன்சி  திரெட், நைலான் கயிறு, ஃபேன்சி டிசைன் டேப், ஜரிகை டேப், நூல், சீலிங் மெஷின், ஊசி, அலங்கார மணிகள், பிளாஸ்டிக் கைப்பிடிகள்…

எங்கே வாங்கலாம்? முதலீடு?

சென்னையில் பாரிமுனையில் எல்லாம் கிடைக்கும். ஃபேன்சி திரெட், நைலான் கயிறு, டிசைன் டேப், ஜரிகை டேப், அலங்கார மணிகள்  வகையறாக்களை ஃபேன்சி ஸ்டோர்களிலும் வாங்கலாம். வெல்வெட், நெட், துணி வகைகளை துணிக்கடைகளில் வாங்கலாம். அஸ்தர் மீட்டர் 25  ரூபாய்க்கும், ஃபேன்சி துணி மீட்டர் 40 ரூபாய்க்கும், வெல்வெட் மெட்டீரியல் மீட்டர் 60 முதல் 80 ரூபாய்க்கும் கிடைக்கும். ஒரு மீட்டர் அஸ்தரிலும்,  வெல்வெட்டிலும் தலா 10 பைகளும், ஃபேன்சி துணியில் 30 முதல் 40 பைகளும் (அட்சதை பை) தைக்கலாம். தையல் மெஷினுக்கான முதலீடு தனி.  சீலிங் மெஷின் 750 ரூபாய்க்குக் கிடைக்கும். மெஷினுக்கான மூலதனம் தவிர்த்து 1000 ரூபாய் முதலீடு இருந்தால் போதுமானது.

எத்தனை வகை?

சாதாரண தாம்பூலப்பை மாடல், சுருக்குப்பை மாடல், தையலே இல்லாமல் அப்படியே அழுத்தி ஒட்டக்கூடியது, அடி அகலமானது, அட்சதை பை  (அட்சதைக்கான அரிசியை ஒரு குட்டிப்பையில் வைத்துக் கொடுப்பதுதான் லேட்டஸ்ட் டிரெண்ட். அரிசி வீணாகாது. அதிலுள்ள மஞ்சள் கையில்  ஒட்டாது. அட்சதை தூவிவிட்டு, அந்தப் பையை நாமே வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்), ரிட்டர்ன் கிஃப்ட் பை என ஏகப்பட்ட மாடல்கள் உள்ளன.  இன்னும் கற்பனைக்கேற்றபடி விருப்பமான அளவுகளிலும் மாடல்களிலும் பண்ணலாம்.

மார்க்கெட்டிங்?

நண்பர்கள், தெரிந்தவர்கள் என கல்யாணம் நடக்கும் வீடுகளில் பேசி, தாம்பூலப்பைகளுக்கு மட்டும் ஆர்டர் பிடிக்கலாம். கல்யாண கான்டிராக்டர்களிடம்  பேசி வைத்துக் கொண்டால், தொடர்ந்து ஆர்டர் வரும். காஸ்ட்லியான, டிசைனர் பைகள் என்றால், பெரிய கடைகளிலும், திருமண அன்பளிப்புகள்  விற்கிற கடைகளிலும் சப்ளை செய்யலாம்.

வருமானம்?

அட்சதை பையை 2 ரூபாய்க்கும், சாதாரண தாம்பூலப்பையை 10 முதல் 12 ரூபாய்க்கும், சுருக்குப்பை மாடலை 25 ரூபாய்க்கும் கொடுக்கலாம். 30  முதல் 40 சதவிகித லாபம் நிச்சயம்.

பயிற்சி?

2 நாள் பயிற்சியில் 8 மாடல் கற்றுக்கொள்ளக் கட்டணம் 750 ரூபாய். (தொடர்புக்கு: 99415 10919)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s