விவசாயிகளுக்கான தொழில்நுட்ப சாதனம்?!

விவசாயிகள் மின்சார தட்டுபாடு, காலநிலை மாற்றம், பருவம் தவறி பெய்யும் மழை, விலைச்சலுக்கெற்ப விலைநிர்ணயம் இன்மை மற்றும் இடைதரகர்கள் போன்ற பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
அவற்றில் இயற்கை சார்ந்த விடயங்களை பொருத்தவரை ஒன்றும் செய்ய இயலாத நிலை தான். ஆனால் இயற்கை அல்லாத சில இன்னல்களை களைய அரசாங்கமும் மற்றவர்களும் முன்வரவேண்டும். அதில் குறிப்பிடும்படியான பிரதான பிரச்சனையாக மின்தட்டுபாடு உள்ளது.

விவசாயிகள் தங்கள் பாசன குழாய்கள் செயல்பட தினசரி மைல்கள் கடந்து நடக்க வேண்டியுள்ளது. சில மணி நேர நடை பயணத்தில் அவர்கள் விவசாய நிலத்தை அடைந்தவுடன் மின்சார வெட்டு, தட்டுபாடு போன்ற காரணங்களால் பாசன குழாய்களை இயக்க வைக்கமுடியாமல் அவதிபடுகின்றனர். மின்சாரம் எப்போது வரும் எப்போது போகும் என்று சொல்ல முடியாத நிலை உள்ளதால், சதா சர்வகாலமும் விளை நிலங்களில் காத்து கிடக்க வேண்டியுள்ளது. இந்த பிரச்சனையை போக்க ஒரு சிறந்த வழியை கண்டறிந்துள்ளது ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த ரியல் டெக் சிஸ்டம் என்ற நிறுவனம்.

இந்நிறுவனம் தயாரித்துள்ள ரியல் டெக் மொபைல் ஸ்டார்டர் கண்ட்ரொலர் என்ற சாதனம் விவசாயிகள் இந்த சவாலை தீர்க்க உதவுகிறது. இந்த சாதனம் எப்படி வேலை செய்கிறது என்பதை கீழே காணலாம்.

ஒரு SIM Card னுடன் கூடிய Realtech சாதனம் பாசன குழாய்களுக்கான மொட்டார் அறையில் பொறுத்தப்படும். இச்சாதனத்திலுள்ள SIM Card குறிப்பிட்ட எண் கொண்ட விவசாயியின் கைபேசியில் இருந்து வரும் Missed call ஐ பொறுத்து இயங்கும் வகையில் நிறுவப்பட்டிருக்கும்.

விவசாயி Realtech சாதனம் பொருத்தப்பட்ட சாதனத்திலுள்ள சிம் கார்ட்டுக்கு ஒரு தவறிய அழைப்பு (missed call) செய்யும் போது, அது மின் விநியோக நேரம் அந்த இடத்தில் உள்ளதா இல்லையா என்றும் தெரிவித்து விடும், ஒருவேளை இருக்கும் பட்சத்தில் இரண்டாவது தவறிய அழைப்பு (missed call) செய்யும் போது பாசன குழாய்களுக்கான மொட்டாரை இயக்க செய்கிறது. இந்த நிகழ்வை குறிப்பிட்ட விவசாயியின் கைபேசிக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கவும் செய்கிறது. (மொட்டர் இயங்க ஆரம்பித்த நேரம் குறிப்பிட்ட எஸ்எம்எஸ் ல் அனுப்பப்படுகிறது)

இதே போல் முன்றாவது தவறிய அழைப்பின் மூலம் மொட்டர் நிறுத்தப்பட்டு அது குறித்த தகவல் தெரிவிக்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு குறுந்தகவல்கள் (SMS) அனுப்பப்படும் போது அவர்களின் தாய்மொழியில் அனுப்பப்படும் வசதியும் உண்டு. அவை பொரும்பாலும் picture message ஆக உள்ளது. இந்த சாதனம் இப்பொழுது 7 மொழிகளில் இவ்வாறு வேலை செய்கிறது. இச்சாதனத்தை விவசாயி அல்லது அவர் குடும்பத்தார் அல்லாத வேறொருவர் இயக்காமல் இருக்க, ஐந்து கைபேசி எண்களை பதித்து வைக்கப்படுகிறது. இந்த எண்களை கொண்டே சாதனத்தை இயங்க வைக்க முடியும் மேலும் மற்ற எண்களிலிருந்து அழைப்பு வருவது தடைச்செய்யப்படுகிறது.
இச்சாதனத்தின் பயன்கள் :-

1. மின்சாரம் வந்தவுடன் விவசாயியின் கைபேசிக்கு “மிஸ்டு கால்” மற்றும் மும்முனை/இரு முனை குறித்த குறுந்தகவல் வந்து விடும்.

2. தோட்டத்தில் எவறேனும் மோட்டாரை நேரடியாக இயக்கினால் அல்லது நிறுத்தினால் விவசாயியின் கைபேசிக்கு குறுந்தகவல் வந்து விடும்.

3. மின்சாரம் தடைபட்டு வந்தவுடன் மோட்டார் தானாகவே இயங்க வைக்கவும் முடியும்

4. மோட்டார் குறிபிட்ட நேரம் மட்டும் ஓடி விட்டு தானாகவே நின்று விடும் படியும் செய்ய முடியும்.

5. மும்முனை மின்சாரம் உள்ளதா அல்லது இரு முனை மின்சாரம் உள்ளதா என்று குறுந்தகவல் மூலம் அறிந்து கொள்ளலாம்.

6. கிணற்றில் அல்லது ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் தீர்ந்தவுடன் மோட்டாரை நிறுத்தி விட்டு குறுந்தகவல் மூலம் தெரியப்படுத்தும்.

இச்சாதனம் மூன்று மாதிரிகளில் உள்ளன அவற்றின் விலை ரூபாய் 4500 முதல் 6500 ரூபாய் வரையிலுள்ளது. இதை இயக்கவதற்க்கான செலவு என்பது, தவறிய அழைப்பு (missed call) செய்ய விவசாயி குறைந்தபட்ச தொகையை தனது கைபேசியில் வைத்திருக்க வேண்டும். மேலும் இச்சாதனத்திலிருந்து எஸ்எம்எஸ் தகவல் விவசாயிக்கு அனுப்ப தேவையானது தொகை மட்டும் தான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s