உடல்வலியைப் போக்கும் உணவுகள்அடிக்கடி உடல்வலி என்பவர்களின் உடலில் கால்சியச்சத்தும், செம்புசத்தும் குறைவாக இருக்கின்றன. இதனால்தான் உடல்வலி! கால்சியம் சத்து நிறைந்துள்ள பால், தயிர், கேழ்வரகு, வெங்காயம் போன்றவற்றை உணவில் நன்கு சேர்த்து வரவேண்டும். இத்துடன் செம்பு சத்து நிறைந்துள்ள உணவுகளையும் மதியம், இரவு சாப்பிடும்போது சேர்த்துக் கொள்ளவும். ஒரு செம்பு நிறையத் தண்ணீரை இரவில் வைத்து மூடி வைக்கவும். காலையில் எழுந்ததும் இந்தத் தண்ணீரை அருந்தவும். வீட்டில் எப்போதும் செம்புப் பாத்திரத்திலேயே குடிதண்ணீர் இருக்கட்டும். கைக்குத்தல் அரிசி, சம்பா ரவை, மீன், பாதரசம் பருப்பு, நண்டு, ஈரல், ஷெல்பிஷ், பீன்ஸ் போன்ற உணவுகளில் செம்புச்சத்து தாராளமாக இருக்கிறது. அசைவ உணவுக்காரர்கள் வாரம் ஒரு நாள் ஆட்டு ஈரல் சேர்த்துக் கொள்ளலாம்.

சைவ உணவுக்காரர்கள் இரண்டுவேளை பாசிப்பருப்புக் கூட்டுச் சேர்த்து வந்தால் போதும். போதிய அளவு செம்புச் சத்து உடலுக்குக் கிடைத்துவிடும். இதனால் உடல்வலி குறையும். தினமும் ஒருவேளை ஏதேனும் கீரை சேர்த்து வந்தால் இரும்புச்சத்தும் உடலுக்குக் கிடைத்துவிடும். இரும்புச்சத்தை ஹீமோகுளோபினாக செம்புதான் மாற்றுகிறது. இதனால் ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது.

இரவு நேரத்தில் செம்பு, இரும்புச்சத்து உள்ள உணவுகளைச் சாப்பிட்டதும் உடல்வலி உள்ளவர்கள் உடனே உறங்கிவிடுவதற்கு உண்மையான காரணம் இரும்புச்சத்தை செம்பு சத்து ஹீமோகுளோபினாக மாற்றியதுதான்.

செம்புச் சத்துள்ள உணவுகள் உடலில் புற்றுநோய்க் காரணிகள் உருவாகாமலும் தடுக்கின்றன.

மாம்பழ சீசனில் இரவு உணவிற்குப்பிறகு எந்த வயதுக்காரராக இருந்தாலும் சரி மாம்பழம் ஒன்று சாப்பிட்டதும் அன்று இரவு உடல்வலி, மனக்கவலை முதலியவற்றை மறந்து உடனே தூக்கிவிடுவார். காரணம், மாம்பழத்தில் தாராளமாக உள்ள இரும்புச்சத்துதான். இரத்தத்தை தூய்மையாக்கி உடல் உறுப்புகளை இது புதுப்பிக்கிறது. தசையின் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை வழங்குவதுடன் கார்பன்டை ஆக்ஸைடையும் வெளியேற்றிவிடுகிறது. இதனால் ஆக்ஸிஜன் கிடைக்கும் திசுக்கள் உடல்இறுக்கம், நோய்கள் முதலியவற்றிலிருந்து விடுதலை பெறுகின்றன. மேலும் தசைகள் உறுதியாகவும், உடல் மற்றும் மனம் சோம்பலின்றியும் இருக்கின்றன. மாம்பழமோ அல்லது இரும்புச்சத்து உள்ள வேறு உணவையோ சாப்பிட்டவர்கள் உடல்வலி குணமாகி புத்துணர்வுடன் தொடர்ந்து வாழமுடியும்.

இரும்புச்சத்து கிடைக்க தினமும் கீரை ஓர் எளிய வழி. ஆப்பிள், மீன், சோயா மொச்சை, அரிசி, காராமணி, டர்னிப் கீரை, பேரீச்சம்பழம், மாட்டுக்கறி போன்ற உணவுகளில் உடல்வலியைப் போக்கும் இரும்புச்சத்து போதிய அளவில் உள்ளன.

உடல்வலி குணமாவதற்காக ஆப்பிள், மீன், சோயா மொச்சை என்று தினமும் உணவில் இடம்பெற்றால் இந்த உணவுகள் முதலில் இரத்த சோகையைக் குணமாக்கும். இரண்டாவது உடலையும் பளபளப்பாக்கி இளமையான தோற்றத்தையும் ஏற்படுத்தித்தரும். இதயநோய்களும், புற்றுநோய்களும் இந்த மூன்று உணவுகளால் தடுக்கப்படுவதால் வாழ்நாளும் இயல்பாக நீடிக்கும். தினமும் சாப்பிடும் இட்லியிலும், சாதத்திலும் மீனிற்கு இணையான இரும்புச்சத்து இருப்பதால் இந்த இரண்டையும் தவறாமல் சாப்பிடவும். கோதுமையில் இரும்புச்சத்து குறைவாக இருக்கிறது. கோதுமை சாப்பிடும்போது பாசிப்பருப்பு கூட்டையும் தொட்டுக்கொள்ளப் பயன்படுத்தினால் இட்லியில் கிடைப்பது போல இரும்புச்சத்து கிடைக்கும். உடல்வலியைப் போக்கும் செம்புச்சத்தும் பாசிப்பருப்பில் இருக்கிறது.

உடல்வலியைப் போக்கும் மேற்கண்ட 23 உணவுகளும் மனதையும் உற்சாகமாக்கும். இதனால் சுறுசுறுப்புடனும் வாழமுடியும்.

இதயவலி உள்ளவர்கள் இரவு உணவிற்குப் பிறகு பிறகு மாதுளம் பழம் சாப்பிடலாம். இது, நெஞ்சுவலியை சரி செய்துவிடும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s