புற்றுநோய் வராமல் தடுக்கும் கீரை


உணவுப்பாதையிலும், பெருங்குடலிலும் புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்திபடைத்தவை பசலைக்கீரையும், பீட்ரூட் கீரையும்! கீரைகளில் பீட்டாகரோட்டீன் என்னும் நோய் நச்சுமுறிவு மருந்து இருக்கிறது. இவைதாம் ஆரோக்கியமான திசுக்களைப் பாதுகாத்து மரபணுக்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கின்றன.

ஆனால், பசலையிலும், பீட்ரூட் கீரையிலும் இவற்றுடன் லுட்டைன், ஜியாக்ஸ்ஆன்த்தின் என்னும் இரு அரிய சத்துகள் உள்ளன. இவை கண்களின் பார்வைத் திறனை கூர்மைப்படுத்தும் என்பது பலர் அறிந்தது. இத்துடன் பீட்டா கரோட்டீனைவிட ஐந்துமடங்கு அதிகமாக இந்த இரு சத்துகளும் இரத்தத்தில் உறிஞ்சப்படுகின்றன.

யுனிவர்சிட்டி ஆப் உட்டா (UTAH) மெடிகல் பள்ளி ஆய்வாளர்கள் லுட்டைன் சத்து நிரம்பிய உணவுகளைச் தாராளமாகச் சாப்பிட்டு வருகிறவர்களிடம் பெருங்குடல்புற்றுநோய் வரும் அபாயம் மிகவும் குறைவாக இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதே போல ஜியாக்ஸ்ஆன்த்தின் சத்துள்ள உணவுகளை ஏராளமாகச் சாப்பிட்டு வரும் மனிதர்களின் உணவுப்பாதையில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

குழந்தை பிறக்கும்போதே ஊனம் வேறு பிறவிக்குறைபாடு என எதுவும் இன்றி ஆரோக்கியமாகப் பிறக்க ஃபோலிக் அமிலம் தாராளமாக உள்ள உணவுகள் தேவை.

தற்போது ஃபோலிக் அமிலம் புற்றுநோயையும் குணப்படுத்த வல்லவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லெட்டூஸ் கீரையிலும் அமராந்த் என்ற வாடாமல்லிகை கீரை (பசுமையான இலைகள் மட்டும் முற்றியது அல்ல)யிலும் தாராளமாக உள்ள ஃபோலிக் அமிலம் நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுப்பதை டச்சுப் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. ஹார்வார்டு பல்கலைக்கழகமே இந்த ஃபோலிக் அமிலம் பெருங்குடலில் புற்றுநோய் தாக்காமல் பாதுகாக்கிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளது. குறைந்தபட்சம் லெட்டூஸ் கீரையையாவது பயன்படுத்துங்கள்.

பெருங்குடல் புற்றுநோய் தாக்காமல் பாதுகாப்பதில் கால்சியம் என்ற தாதுஉப்பின் பங்கு அதிகம் என்று விஸ்கான்சின் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. காலிஃபிளவர், டர்னிப் கீரை போன்றவற்றை அடிக்கடி உண்பதால் கால்சியம் நன்கு கிடைப்பதுடன் எலும்பு மண்டலம் உறுதியாகிறது. இத்துடன் புற்றுநோய் தாக்காமல் பெருங்குடல் ஆரோக்கியமாக இருக்கிறது. தங்கள் உணவில் கால்சியம் சத்து குறைவாக இருந்தவர்களிடம் பெருங்குடலில் புற்றுநோய் தாக்குவதற்கான அறிகுறிகள் இருந்ததை விஸ்கான்சின் பல்கலைக்ழகம் கண்டுபிடித்தது. காலிஃபிளவரைப்போல முட்டைக்கோஸும் கீரை வகையைச் சேர்ந்ததே. புற்றுநோய்க்கழலைகள் வளராமல் அவற்றைத் தடுத்து அழிப்பதில் முட்டைக்கோஸ் முதலிடத்தில் இருக்கிறது.
இன்டோல்ஸ், ஐசோதியோசைட்ஸ் என்ற இரு பொருள்கள் கோசுக்கீரைகளிலும், முட்டைக்கோஸிலும், தாராளமாக உள்ளன. இன்டோல்ஸ், பெண்களுக்கு மார்பகத்தில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. அங்கே புற்றுநோய்க் கழலைகள் இருந்தால் அவற்றை உடைத்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

ஐசோதியோசைட்ஸ், ஆண்களுக்கு இதே வகையில் செயல்பட்டு புற்றுநோய்க்கழலைகளை உடைத்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

எனவே, மற்ற கீரைகளை பயன்படுத்துவதுடன் மேற்கண்ட ஏழுவகைக் கீரையையும் அவ்வப்போது தவறவிடாது உணவில் சேர்த்து வாருங்கள். முடி கொட்டுவது, இரத்தசோகை போன்றவற்றையும் கீரைகளில் தாராளமாக உள்ள இரும்புச்சத்து குணப்படுத்துகிறது.

கீரையை அதிக அளவு சாப்பிட்டால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாக வாய்ப்பு உண்டு. எனவே, வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டுமே அளவுடன், பருப்பும் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் ஆரோக்கியமாக வாழலாம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s