முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு-27(நிறைவுப் பகுதி)

கலைச் சொல் அகராதி

அல்லாஹ்

அகிலங்கள் அனைத்தையும் மற்றும் அதிலுள்ளவை அனைத்தையும் படைத்து பரிபாலிப்பவனாகவும் வணங்குவதற்கும் வழிபடுவதற்கும் தகுதியானவனாகவும் இருக்கும் ஒரே இறைவனைக் குறிக்கும் சொல்.

அன்சாரி

மக்காவைத் துறந்து மதீனாவில் குடியேறிய முஸ்லிம்களை ஆதரித்து எல்லா விதத்திலும் உதவி ஒத்தாசை புரிந்த மதீனா முஸ்லிம்கள்.

அலை

‘அலைஹிஸ்ஸலாம்’ என்பதன் சுருக்கம், அவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்!

அர்ஷ்

ஏழு வானங்களுக்கு மேல் அல்லாஹ் தனக்கென படைத்த மாபெரும் இருக்கைக்கு ‘அர்ஷ்’ என்று சொல்லப்படும். இதை மனித அறிவால் யூகிக்கவும் முடியாது அறிந்து கொள்ளவும் முடியாது.

அமானிதம்

மக்காவில் தங்களது பொருள்களை மக்கள் நபியவர்களிடம் பத்திரப்படுத்தி வைப்பர். இதையே ‘அமானிதம்’ என்று சொல்லப்படுகிறது.

அல் பைத்துல் முகத்தஸ்

ஃபலஸ்தீனத்தில் குதுஸ் எனும் நகரில் உள்ள பள்ளிவாசலை ‘அல்மஸ்ஜிதுல் அக்ஸா’ அல்லது ‘அல்பைத்துல் முகத்தஸ்’ என்று சொல்லப்படும்.

அத்தர்

வாசனை திராவியம்.

அபூ

தந்தை.

அதான்

ஐங்காலத் தொழுகைக்காக அழைக்கப்படும் அழைப்பு.

இஹ்ராம்

ஹஜ் மற்றும் உம்ரா செய்வதற்காக தயாராகும் நிலையும் அப்போது அணியப்படும் தைக்கப்படாத ஆடையும்.

இப்னு

மகன்.

இப்லீஸ்

‘இப்லீஸ்’ ஷைத்தான்களின் தலைவன்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம், நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம்.

ஈமான்

அல்லாஹ்வையும் அவன் கூறிய அனைத்தையும் நம்பிக்கை கொள்வது.

உம்ரா

உபரியாக கஅபாவை தரிசனம் செய்யும் ஓர் செயல்.

ஊகியா

சுமார் 38.5 கிராம்எடையுள்ள ஓர் அளவு.

கஅபா

அல்லாஹ்வை வணங்குவதற்காக முதன் முதலில் மக்காவில் கட்டப்பட்ட இல்லம்.

கனீமத்

போரில் கிடைக்கும் வெற்றிப் பொருள்.

கபீலா

கோத்திரம்.

கலீஃபா

இஸ்லாமிய ஆட்சித் தலைவர்.

கப்ர்

இறந்தவரை அடக்கம் செய்யப்படும் குழிக்கு ‘கப்ர்’ என்று சொல்லப்படும்.

காஃபிர்

அல்லாஹ்வை மறுப்பவன்.

கிப்லா

கஅபா உள்ள திசை.

குர்பானி

அல்லாஹ்வின் பெயரால் அறுக்கப்படும் பிராணி.

சூரா

சூரா என்பதற்கு அத்தியாயம் என்று பொருள். குர்ஆனின் அத்தியாயங்களை இப்படி குறிப்பிடுவர்.

தக்பீர்

‘அல்லா{ஹ அக்பர்’ அல்லாஹ் மிகப் பெரியவன் என்று கூறுவது.

தவாஃப்

‘கஅபா’வை ஏழுமுறை சுற்றுவது.

தல்பியா

ஹஜ் அல்லது உம்ரா செல்பவர்கள் இஹ்ராம் அணிந்த பின் கூறும் விசேஷமான பிரார்த்தனைக்கு ‘தல்பியா’ என்று கூறப்படும்.

தஸ்பீஹ்

‘சுப்ஹானல்லாஹ்’ அல்லாஹ் மிகத்தூய்மையானவன்.

தஹ்லீல்

‘லாஇலாஹஇல்லல்லாஹ்’ அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.

தஷஹ்ஹுத்

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி கூறுவது.

திர்ஹம்

‘திர்ஹம்’ என்பது 3.62 கிராம் அளவுள்ள தங்க நாணயம்.

தியத்

‘தியத்’ என்றால் கொலை குற்றத்திற்காக கொலை செய்யப்பட்டவரின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் தொகைக்கு சொல்லப்படும்.

துஆ

பிரார்த்தனை.

மஹர்

மணமகன் மணமகளுக்கு கொடுக்க வேண்டிய திருமணக் கொடை.

மிஃராஜ்

‘மிஃராஜ்’ என்பது நபி (ஸல்) அவர்கள் சென்ற வானுலகப் பயணத்தைக் குறிக்கும்.

மின்ஜனீக்

‘மின்ஜனீக்’ என்பது அக்காலத்திய போர் கருவி.

முஸ்லிம்

அல்லாஹ்விற்கும் அவனது மார்க்கத்திற்கு மட்டும் கட்டுப்பட்டவர்.

முஃமின்

அல்லாஹ்வையும் அவன் கூறிய அனைத்தையும் முழுமையாக நம்பிக்கை கொண்டவர்.

முஷ்ரிக்

அல்லாஹ்விற்கு இணை வைப்பவர்.

முனாஃபிக்

உள்ளத்தில் இறைநிராகரிப்பை வைத்துக்கொண்டு இறை நம்பிக்கையை வெளிப்படுத்துபவர்.

முத்

மதீனாவில் வழக்கத்தில் இருந்து வந்தசுமார் 796 கிராம் 68 மில்லி கிராம் எடை கொண்ட ஓர் அளவு.

பனூ

ஒருவரின் குடும்பத்தார்கள், வழி வந்தவர்கள்.

ஃபித்யா

‘ஃபித்யா’ என்றால் கைதியை விடுவிப்பதற்காக வழங்கப்படும் தொகை.

பைத்துல் மஃமூர்

இது ஏழாவது வானத்தில் மலக்குகள் அல்லாஹ்வை வணங்குவதற்காக அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட இறை இல்லமாகும்.

பைஅத்

இஸ்லாமிய உடன்படிக்கையும் ஒப்பந்தமும்.

ரழி

‘ரழியல்லாஹு அன்ஹு’ (அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக!.)

ரஹ்

‘ரஹ்மத்துல்லாஹி அலைஹி’ (அல்லாஹ்வின் அருள் அவர்கள்மீது உண்டாகட்டும்!)

ரம்ல்

கஅபாவை தவாஃப் செய்யும்போது முதல் மூன்று சுற்றில் ராணுவ அணிவகுப்பைப் போன்று செல்வது.

ரசூல்

தூதர்.

ரஜ்ம்

திருமணம் செய்த ஆண் அல்லது பெண் விபசாரம் செய்துவிட்டால் அவர்களை கல் எறிந்து கொல்வது.

நபி

அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்.

நிய்யத்

ஒரு செயலைச் செய்வதற்கு உறுதி வைத்தல்.

நுபுவ்வத்

‘நபித்துவம்’ இறைத்தூதராக்கப்படுத்தல்.

வஹ்யி

‘இறைச்செய்தி’ அல்லாஹ் அவனது தூதர்களுக்கு அறிவிப்பது.

வலிமா

‘வலிமா’ என்பது திருமணமாகி கணவனும் மனைவியும் இணைந்த பிறகு கொடுக்கும் விருந்திற்குப் பெயராகும்.

ஷஹீத்

இஸ்லாமியப் போரில் அல்லாஹ்விற்காக உயிர் நீத்தவர்.

ஸஹாபி

நபியவர்களின் முன்னிலையில் இஸ்லாமை ஏற்று முஸ்லிமான நிலையிலேயே மரணித்தவர்.

ஸல்

‘ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்’ அல்லாஹ் அவருக்கு விசேஷ அருளையும் ஈடேற்றத்தையும் வழங்குவானாக!

ஸலாம்

‘அஸ்ஸலாமு அலைக்கும்’ உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! என்று முகமன் கூறுவது.

ஸயீ

ஸஃபா, மர்வா இரு மலைகளுக்கு இடையில் ஏழுமுறை ஓடுவதற்கு ‘ஸயீ’ என்று சொல்லப்படும்.

ஸலாத்துல் கவ்ஃப்

அச்சம் மிகுந்த நேரத்தில் சுருக்கித் தொழுவதற்கு ‘ஸலாத்துல் கவ்ஃப்’ என்று சொல்லப்படும்.

ஸுப்ஹ், ளுஹ்ர், அஸ்ர், மஃரிப், இஷா

முஸ்லிம்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய ஐங்காலத் தொழுகைகள்

ஹரம்

புனித கஅபாவை சுற்றியுள்ள குறிப்பிட்ட பகுதி.

ஹஜ்

கஅபாவை தரிசிப்பதும் மற்றுமுள்ள செயல்களும். (இது உடற்சுகமும் பொருள் வசதியுமுள்ள முஸ்லிம்களுக்கு வாழ்க்கையில் ஒரு முறை கடமையாகும்.)

ஹதீஸ்

நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம்.

ஹலால்

அல்லாஹ் அனுமதித்தவற்றிற்கு ‘ஹலால்’ என்று சொல்லப்படும்.

ஹராம்

அல்லாஹ்வால் தடை செய்யப்பட்டவற்றிற்கு ‘ஹராம்’ என்று சொல்லப்படும்.

ஹர்ரா

‘ஹர்ரா’ என்றால் விவசாயக் களம் அங்குதான் மதீனாவில் வாழும் முஸ்லிம்கள் தங்களது அறுவடைகளைக் காய வைப்பார்கள்.

ஹஜருல் அஸ்வத்

‘ஹஜருல் அஸ்வத்’ என்பது ஒரு கல். இது சொர்க்கத்திலிருந்து வரவழைக்கப்பட்டதாய் நபிமொழிகள் கூறகின்றன.

ஹிஜ்ரா

இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்ற முடியாத ஊரிலிருந்து வெளியேறி அதற்கு ஏற்றமான ஊரில் குடியேறுவது.

ஜனாஸா

மரணித்தவரின் உடல்.

ஜகாத்

முஸ்லிம் செல்வந்தர்கள் மீது விதிக்கப்பட்ட மார்க்க வரி.

ஜின்

‘ஜின்கள்’ என்பவை மனிதக் கண்களுக்குப் புலப்படாத, இறைவனின் படைப்புகளில் ஒன்று. மனிதனுக்கு இருப்பதைப் போன்றே அவற்றுக்கும் சுய தேர்வுரிமை உள்ளது. அவற்றுள்ளும் முஸ்லிம், காஃபிர் என்ற வாழ்க்கை முறைகள் உள்ளன.

ஜிஸ்யா

இஸ்லாமிய நாட்டில் முஸ்லிமல்லாதவருடைய உயிர், பொருள், கண்ணியம் பாதுகாக்கப்படுவதற்கு அவர் செலுத்தவேண்டிய வரி.

ஜிஹாத்

இறை திருப்தியைப் பெறுகின்ற ஒரே நோக்கத்துடன் சத்தியத்தை நிலைநாட்டி அசத்தியத்தை எதிர்த்து, அல்லாஹ்வின் வரம்புகளுக்கு உட்பட்டுப் போர் புரிதல். சொல்லாலும் செயலாலும் உண்மை முஸ்லிமாக வாழ முயற்சித்தல்.

ஜுமுஆ

வெள்ளிக்கிழமை மதியம் தொழும் தொழுகையை ‘ஜுமுஆ’ என்று சொல்லப்படும்.

ஆதார நூல்கள்

1) அல்குர்ஆன்

2) இத்ஹாஃபுல் வரா – உமர் இப்னு முஹம்மது (இறப்பு 885)

3) அல்இஹ்ஸான் பி தர்தீபீ ஸஹீஹ் அபூ ஹாதம் இப்னு ஹிப்பான் ( 270 – 354) –

இப்னு ஹிப்பான்

4) இக்பாருல் கிராம் பி அக்பால் மஸ்ஜிதில் ஹராம் – அஹ்மது இப்னு முஹம்மது (இறப்பு 1066)

5) அல் அதபுல் முஃப்ரத் – இமாம் புகாரி ( 194 – 256)

6) அல் இஸ்தீஆப் – யூஸுஃப் இப்னு அப்துல் பர் ( 368 – 463)

7) அஸதுல் காபா – இஜ்ஜுத்தீன் இப்னு அல் அஸீர் ( 555 – 630)

8) அல் இஸாபா – இப்னு ஹஜர் ( 773 – 852)

9) அல் அஸ்னாம் -அபுல் முன்திர் ஷாம் (இறப்பு 204)

10) அன்ஸாபுல் அஷ்ராஃப் – அஹ்மது இப்னு யஹ்யா (இறப்பு 279)

11) அல்பிதாயா வந்நிஹாயா – இப்னு கஸீர் (இறப்பு 774)

12) தாரீக் அர்ழுல் குர்ஆன் (உருது) – ஸய்ம்த் ஸுலைமான் நத்வி (இறப்பு 1373)

13) தாரீகுல் உமம் வல் முலூக் – முஹம்மது இப்னு ஜரீர் தபரி ( 224 – 310)

14) தாரீக் இப்னு கல்தூன் – அப்துர் ரஹ்மான் இப்னு முஹம்மது (இறப்பு 808)

15) அத்தாரீகுஸ்ஸகீர் – இமாம் புகாரி ( 194 – 256)

16) தாரீக் உமர் இப்னு அல்கத்தாப் – இப்னு அல் ஜவ்ஜி (இறப்பு 597)

17) தாரீக் அல் யஃகூபி – அஹ்மது இப்னு அபூ யஃகூப் (இறப்பு 292)

18) துஹ்ஃபதுல் அஹ்வதி – அப்துர் ரஹ்மான் முபாரக்பூர் (இறப்பு 1353)

19) தஃப்ஸீர் அத்தபரீ – இப்னு ஜரீர் தபரி ( 224 – 310)

20) தஃப்ஸீர் அல்குர்துபி – முஹம்மது இப்னு அஹ்மது (இறப்பு 671)

21) தஃப்ஸீர் இப்னு கஸீர் – இஸ்மாயீல் இப்னு உமர் (இறப்பு 774)

22) தல்கீஹ் ஃபுஹூமி அஹ்லில் அஸர் – இப்னுல் ஜவ்ஜீ (இறப்பு 597)

23) தஹ்தீப் – இப்னு அஸாகிர் (மரணம் 571)

24) ஜாமிஃ அத்திர்மிதி – அபூ ஈஸா முஹம்மது ( 209 – 279)

25) ஜம்ஹரது அன்ஸாபில் அரப் – இப்னு ஹஜ்ம் ( 384 – 456)

26) ஜம்ஹரதுந்நஸப் – அபுல் முன்திர் ஷாம் (இறப்பு 204)

27) குலாஸதுஸ் ஸியர் – அஹ்மது தபரி (இறப்பு 674)

28) திராஸாத் ஃபி தாரீகில் அரப் – கலாநிதி அப்துல் அஜீஸ் ஸாலிம்

29) அத்துர்ருல் மன்ஸுர் – ஜலாலுத்தீன் ஸுயூதி (இறப்பு 911)

30) தலாயிலுந் நுபுவ்வஹ் – இஸ்மாயீல் இப்னு முஹம்மது ( 457 – 535)

31) தலாயிலுந் நுபுவ்வஹ் – அபூ நயீம் ( 336 – 430)

32) தலாயிலுந் நுபுவ்வஹ் – பைஹகி ( 384 – 458)

33) ரஹ்மதுல் லில்ஆலமீன் – முஹம்மது ஸுலைமான் மன்சூர்பூர் (1930)

34) ரஸூலே அக்ரம் கி ஸயாஸி ஜின்தகி (உருது) – கலாநிதி முஹம்மது ஹமீதுல்லாஹ் பேஸ்

35) அர்ரவ்ழ் – அபுல் காஸிம் அப்துர்ரஹ்மான் ( 508 – 581)

36) ஜாதுல் மஆது – இப்னுல் கய்” ( 691 – 751)

37) ஸபாயிக் அத்தஹப் – முஹம்மது அமீன் (இறப்பு 1346)

38) ஸிஃப்ர் அத்தக்வீன் – (யூத வேதத்தின் ஒரு பகுதி)

39) ஸுனன் அபூதாவூத் ஸுலைமான் ஸிஜஸ்தானி ( 202 – 275)

40) அஸ்ஸுனனுல் – குப்ரா பைஹகி ( 384 – 458)

41) ஸுனன் இப்னு மாஜா – முஹம்மது இப்னு யஜீத் கஜ்வீனி ( 209 – 273)

42) ஸுனன் அந்நஸாயீ – அஹ்மது இப்னு ஷுஐப் ( 215 – 303)

43) அஸ்ஸீரா அல்ஹல்பிய்யா – அலீ இப்னு புர்ஹானுத்தீன் ( 975 – 1044)

44) அஸ்ஸீரத்துந் நபவிய்யா – அபூ ஹாதிம் இப்னு ப்பான் (இறப்பு 354)

45) அஸ்ஸீரத்துந் நபவிய்யா – அபூ முஹம்மது அப்துல் மலிக் (இறப்பு 213)

46) ஷர்ஹுஸ்ஸுன்னா – ஹுஸைன் அல்பகவி ( 436 – 516)

47) ஷர்ஹ் ஸஹீஹ் முஸ்லிம் – நவவி (இறப்பு 676)

48) ஷர்ஹுல் மவாஹிப் – முஹம்மது இப்னு அப்துல் பாகி (இறப்பு 1122)

49) அஷ்ஷிஃபா – காழி இயாழ் ( 446 – 546)

50) ஷமாயில் அத்திர்மிதி – அபூ ஈஸா முஹம்மது ( 209 – 279)

51) ஸஹீஹுல் புகாரி – இமாம் புகாரி ( 194 – 256)

52) ஸஹீஹ் முஸ்லிம் – முஸ்லிம் இப்னு அல் ஹஜ்ஜாஜ் ( 206 – 261)

53) ஸஹீஃபது ஹப்கூக் – யூத வேதத்தின் ஒரு பகுதி)

54) அத்தபகாத் அல் குப்ரா – முஹம்மது இப்னு ஸஅத் ( 168 – 230)

55) அல்ம்க்துல் ஃபரீத் – அஹ்மது உந்த்லுஸி ( 246 – 328)

56) அவ்னுல் மஃபூத் ஷர்ஹ் ஸுனன் அபூதாவூத் – ஷம்ஸுல் ஹக் ( 1274 – 1329)

57) ஃபத்ஹுல் பாரி – இப்னு ஹஜர் ( 773 – 852)

58) ஃபத்ஹுல் கதீர் – அஷ்ஷவ்கானி (இறப்பு 1250)

59) கலாம்துல் ஜுமான் – அஹ்மது இப்னு அலீ (இறப்பு 821)

60) கல்பு ஜஜீரதில் அரப் – ஃபுஆத் ஹம்ஜா (இறப்பு 1352)

61) அல்காமில் ஃபி அத்தாரீக் – இஜ்ஜுத்தீன் இப்னு அல் அஸீர் ( 555 – 630)

62) கன்ஜுல் உம்மால் – அலாவுத்தீன் (இறப்பு 975)

63) அல்லிஸான் – இப்னு மன்ளுர் அல் அன்ஸா ( 630 – 711)

64) மஜ்மஃ அல் ஜவாயித் அல் ஹைஸமி (இறப்பு 807)

65) முஹாழராத் தாரீக் அல் உமமுல் இஸ்லாமிய்யா – முஹம்மது இப்னு ஹஃபீஃபி ( 1289 – 1345)

66) முக்தஸர் ஸீரதிர் ரஸூல் – அப்துல்லாஹ் இப்னு முஹம்மது (இறப்பு 1242)

67) மதாக் அத்தன்ஜீல் – அப்துல்லாஹ் நஸஃபி (இறப்பு 701)

68) முரூஜ் அல் தஹப் – அலி இப்னு ஹுஸைன் மஸ்வூதி (இறப்பு 346)

69) அல் முஸ்தத்ரகுல் – முஹம்மது இப்னு அப்துல்லாஹ் ஹாகிம் ( 321 – 405)

70) முஸ்னத் அஹ்மத் – அஹ்மது இப்னு முஹம்மது இப்னு ஹம்பல் ( 164 – 241)

71) முஸ்னத் அல் பஜ்ஜார் – அபூபக்ர் அஹ்மது அல் பஜ்ஜார் (இறப்பு 292)

72) முஸ்னத் கலீஃபா – கலீஃபா இப்னு கய்யாத் (இறப்பு 240)

73) முஸ்னத் அத்தாரமி – அபூ முஹம்மது அப்துல்லாஹ் ( 181 – 255)

74) முஸ்னத் அபூதாவூத் அத்தயாலிஸி – அபூதாவூத் ஸுலைமான் இப்னு தாவூத் (இறப்பு 204)

75) முஸ்னத் அபூ யஃலா – அபூ யஃலா அஹ்மது இப்னு அலீ ( 210 – 307)

76) மிஷ்காதுல் மஸாபீஹ் – வலியுத்தீன் முஹம்மது இப்னு அப்துல்லாஹ் ( 700களில்)

77) முஸன்னஃப் இப்னு அபீ ஷய்பா – அபூபக்ர் அப்துல்லாஹ் இப்னு முஹம்மது (இறப்பு 235)

78) முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக் – அபூபக்ர் அப்துர்ரஜ்ஜாக் ( 126 – 211)

79) அல் மஆஃப் – இப்னு குதைபா ( 213 – 276)

80) அல் முஃஜம் அல் அவ்ஸத் – ஸுலைமான் தபரானி ( 260 – 360)

81) அல் முஃஜம் அஸ்ஸகீர் – ஸுலைமான் தபரானி ( 260 – 360)

82) முஃஜம் அல் புல்தான் – யாகூத் ஹமவி (இறப்பு 626)

83) மகாஜீ அல் வாகிதி – முஹம்மது இப்னு உமர் இப்னு வாகித் (இறப்பு 207)

84) அல் முனம்மக் ஃபி அக்பாரில் குறைஷ் – முஹம்மது ஹபீப் (இறப்பு 245)

85) அல் மவாப் அல் லதுன்னிய்யா – ஷிஹாபுத்தீன் அஹ்மது கஸ்தலானி (இறப்பு 923)

86) முவத்தா மாலிக் – மாலிக் இப்னு அனஸ் ( 93 – 169)

87) நதாயிஜுல் அஃப்ஹாம் மஹ்மூது பாஷா

88) நஸபு குறைஷ் – அபூ அப்தில்லாஹ் அல் முஸ்அப் ( 156 – 236)

89) நஸபு மஅத் வல் யமன் அல் கபீர் – அபுல் முன்திர் ஷாம் (இறப்பு 204)

90) நிஹாயதுல் அரிப் – அபுல் அப்பாஸ் அஹ்மது (இறப்பு 821)

91) வஃபாவுல் வஃபா – நூருத்தீன் அலீ இப்னு அஹ்மது ( 844 – 911)

92) அல் யமன் இபரத்தாரீக் – அஹ்மது ஹுஸைன் ஷரஃபுத்தீன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s