உளூவா கஞ்சி

எங்கள் ஊரில் இதனை நிறைமாத கர்பிணிகளுக்கு செய்து கொடுப்பார்கள், வாயு கலைத்து சுகப்பிரசவம் ஆகும் என்று சொல்வார்கள்.

அதிகம் வாயுத் தொல்லை உள்ளவர்கள் இதனை செய்து சாப்பிட்டால் வாயுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

உடல் வலி, உடல் சோர்வு உள்ளவர்கள் இந்த கஞ்சியினை செய்து குடிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

அரிசி – 100 கிராம்
முழு பூண்டு – 5 பெரியது
வெந்தயம் – 1 தேக்கரண்டி
கருபட்டி – 200 கிராம் (கருபட்டியினை தூள் செய்யவும்)
தேங்காய் – 1 (ஒரு முழு தேங்காயில் தண்ணீர் சேர்த்து இரண்டு முறை பால் எடுக்கவும்)
முட்டை – 1

செய்முறை:

1. முதலில் அரிசியினை சுத்தமாக அலசி அதில் தோல் எடுத்த முழு பூண்டு, வெந்தயம் தண்ணீர் சேர்த்து குழைய வேக வைத்து எடுக்கவும்.

2. ஆறிய பிறகு மத்தால் கடைந்தோ அல்லது மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

3. தேங்காய் பாலில் கருபட்டி சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.

4. ஒரு பாத்திரத்தில் மிக்ஸியில் அரைத்த கலவையினை ஊற்றி சூடு செய்யவும், இதனுடன் தேங்காய் பால் கருபட்டி கலவையினை சேர்க்கவும். சிம்மிலே வேக வைக்கவும்

5. நன்றாக கொதிவரும் பொழுது முட்டையினை உடைத்து ஊற்றவும். 5 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.

சூடான சுவையான ஆரோக்கியமான உளூவா கஞ்சி ரெடி இதனை அப்படியே கஞ்சாகவும் குடிக்கலாம் அல்லது இடியாப்பம், ஆப்பம்வுடனும் சேர்ந்து சாப்பிட சுவையாக இருக்கும்
இந்த கஞ்சியின் செய்முறையினை நமக்காக பகிர்ந்தவர் 35வருடம் சமையல் அனுபவும் உள்ள
ஜீபு நிஷா காயல்பட்டிணம்

(ஆரோக்கிய புதன்…. (புதிய பகுதி)
இன்ஷா அல்லாஹ் இனி வரும் ஓவ்வொரு புதன் கிழமைகளில் ஆரோகியமான நமதூர் உணவுகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புகளை வெளியிடலாம் என்று நினைத்திருக்கிறோம்.. உங்களின் ஆதவரவுடன்.. )

— with Faiza Eniniya Illam.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s