இனிப்பு அடை / குழிப்பணியாரம்


காயல்பட்டிணத்தில் மிகவும் பிரபலமான இனிப்பு வகையில் இதுவும் ஒன்று. எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யமாட்டோம் என்றாலும் குடும்பத்தில் இருப்பவர்கள் வெளியூர்களில் , வெளிநாட்டில் வேலை செய்தால் அவர்களுக்கு இதனை 15-20 அடை போல் செய்து கொடுத்துவிடுவோம். இந்த அடையினை ஃப்ரிஜில் வைத்து 10 நாள் வரை சாப்பிடலாம். காலை பசியாருக்கு ( டிபன்) பதிலும் அசருக்கு (மாலையில் ) பண்டமாகவும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு குழிப்பணியாரம் போல் செய்து கொடுத்தால் விரும்ப்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

ரவை – 2 கப் ( 500 கிராம்)

தேங்காய் பால் – 2 கப் (400மிலி)

மைதாமாவு – 3 -5 மேசைக்கரண்டி

முட்டை – 2

சீனி – 1 கப் அ 1 1/2 கப்

நெய்- தேவையான அளவு

செய்முறை:

ரவையுடன் தேங்காய்பால், மைதா சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊறவுக்கவும்.

சீனியினை மிக்ஸூயில் பொடித்து வைக்கவும்.

பிறகு 1 மணி நேரம் கழித்து பொடித்த சீனியினை கலந்து மீண்டும் ஒரு 1 மணி நேரம் ஊர வைக்கவும்.

அடை சூடும் 5 நிமிடம் முன்பு முட்டையினை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவும். ஏலக்காய் பொடி தூவி நன்றாக கல்ந்து வைக்கவும்.

பின்பு அடை சுடும் சட்டியில் 1 கரண்டி நெய் ஊற்றி அது காய்ந்த பின்பு ஒரு குழிக்கரண்டி மாவு எடுத்து ஊற்றவும். சுற்றி வரை தேவைக்கு நெய் ஊற்றவும். மீதமான தணலில் வைக்கவும். இரு புறமும் கோல்டன் ப்ரவுன் ஆன நிலையில் எடுக்கவும்.

இந்த மாவினை குழிபணியாரம் சட்டியிலும் சுட்டு எடுக்கலாம். சுவையான இனிப்பு அடை, இனிப்பு குழிப்பணியாரமும் ரெடி.

ஃபாயிஷாகாதர்

Kayalpatnam samayal

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s