சாலை மீன் (குழம்பு)


தேவையான பொருட்கள்:

சாலைமீன் – 20

தேங்காய் -1

தக்காளி – 3

சிறு வெங்காயம் – 10

வெதயம் -3 டீ ஸ்பூன்

கடுகு – 2 டீ ஸ்பூன்

பூண்டு – 6 பல்

பச்சை மிளகாய் -2

கருவேப்பிலை, மல்லி இலை – 1 கொத்து

புளி – பெரிய சைஸ் எழுமிச்சை அளவு

காயல் மசாலாத்தூள் – 5 ஸ்பூன்

எண்ணெய் – 5 ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

1.தேங்காயைத் துருவி பால் பிழிந்து கெட்டியாக எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பிழிந்தெடுத்த பூவை மீண்டும் தண்ணீர் விட்டு இரண்டாவது முறையாக பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். முதல் பாலில் புளி சேர்த்து ஊற வைக்கவும்.

2. சுத்தம் செய்து வைத்த மீனில் காயல் மசாலாத்தூள், கைகளால் நசுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், சிறிதளவு வெந்தயம், நறுக்கிய பூண்டு, மல்லி இலை ஆகியவற்றை சேர்த்து அவற்றுடன் தேங்காய் பாலில் பிசைந்த புளிக் கலவையை ஊற்றவும்.

3.மீதமுள்ள இரண்டாது பாலை அதில் சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்த பின் தீயை சுருக்கி வைத்து வேறொரு கடாயில் எண்னெய் ஊற்றி காய்ந்த பின் கடுகு போட்டு பொறிய விடவும். பொறிந்து வெடித்த கடுகுடன் நறுக்கிய பூண்டு, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும். அதன் பின் சிறு வெங்காயம் சேர்த்து பொன் நிறத்தில் வரும் போது கருவேப்பிலை போட்டு இந்த தாளிப்பை கொதித்துக் கொண்டிருக்கும் மீன் குழம்பு மீது ஊற்றி இறக்கி வைக்கவும்.

கமகமக்கும் மணத்தோடு காரம், புளி சுவையோடு காயல் மீன் குழம்பு தயார். இதை சோற்றுடன் சேர்த்து ஏதேனும் ஒரு காய்கறியுடன் உண்ணலாம்.

-ராபியா ரபீக்.
Kayal Sardines Fish Curry
Ingredients
Sardines fish 20 Pcs
Coconut 1
Tomato 3
Mustard 2 Tspn
Shallots 10 Pcs
Fenugreek 3 Tspn
Garlic 6 Cloves
Green Chilies 2 Pcs
Curry Leaves 1 small bunch
Coriander (Cilantro) Leaves 1 Bunch
Tamarind 1 big lemon size
Kayal Masala Powder 5 Tbspn
Oil 5 Tbspn
Salt To taste

Directions
1. Extract coconut milk and keep aside the first extraction. Add water to the squeezed coconut and extract again the milk.
2. Add the tamarind to first extraction and keep aside
3. Add Kayal masala, hand mashed tomato, green chilies, little fenugreek; little chopped garlic and finely chopped coriander to the cleaned fish.
4. Add now the tamarind and coconut mix
5. Add the second coconut extract to the above and boil
6. After it boiled well reduce the flame and simmer for some time.
7. While it is simmering add oil in a fry pan and tamper mustard, reminder of garlic and fenugreek. Add the chopped shallots and sauté until it become golden brown then add the curry leaves.
8. Add these tampered ingredients to the simmering fish and remove the fish from fire.
9. Now your mouth watering aromatic Kayal fish curry is ready.

Kayalpatnam samayal

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s