வெங்காய குழம்பு / vengaya kuzhambu

தேவையானவை:
சின்ன வெங்காயம் – 10
புளி – 1 எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு

வறுத்து அரைக்க:
தனியா – 2 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2

தாளிக்க:
நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 1

செய்முறை:

  • முதலில் அரைக்க வேண்டிய பொருட்களை வெறும் வாணலியில் தனி தனியாக வறுத்து நன்கு பொடித்து கொள்ளவும்.
  • வெங்காயத்தை இரண்டாகவும், புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக தாளித்து கொள்ளவும்.
  • பின்னர் சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கி கொள்ளவும்.
  • அதனுடன் வறுத்து அரைத்த பொடி, மஞ்சள் தூள் மற்றும் புளி தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • குழம்பு வாசனை வந்து சற்று திக்கான பதத்திற்கு வந்தவுடன் பரிமாறலாம்.
  • ருசியான வெங்காய குழம்பு ரெடி.
  • இதனை சாதத்துடன் அப்பளம், வடாம் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குறிப்பு:
  • வெந்தயம் சேர்த்தால் தான் குழம்பு ருசி கூடும்.
  • இதற்கு தக்காளி சேர்க்க வேண்டாம். தக்காளி, குழம்பின் ருசியை மாற்றி விடும்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s