முட்டை குழம்பு (muttai kuzhambu)

தேவையானவை:

முட்டை – 2
வெங்காயம் – 1 பெரியது
தக்காளி – 1
சோம்பு – 1 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
தனியா தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு

தாளிக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

 • வெங்காயம் மற்றும் தக்காளியை சிறியதாக கட் செய்து கொள்ளவும்.
 • மிக்ஸி ஜாரில் நறுக்கிய வெங்காயம், சோம்பு மற்றும் கசகசா சேர்த்து நைசாக அரைக்கவும்.
 • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்து அரைத்து வைத்த வெங்காய கலவையை நன்றாக வதக்கிய பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
 • அதனுடன் மசாலா தூள் வகைகள் மற்றும் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
 • குழம்பு நன்கு கொதி வந்து வாசம் வந்தவுடன் முட்டையை உடைத்து ஊற்றவும். இப்போது கிளற வேண்டாம்.
 • மூன்று நிமிடங்கள் கழித்து முட்டையை திருப்பி போட்டு வேக விடவும்.
 • முட்டை சிறிது நேரத்தில் வெந்த பின்பு பரிமாறலாம்.
 • சுவையான, எளிமையான முட்டை குழம்பு தயார்.
 • இது சப்பாத்தி, பூரி மற்றும் சாதம் ஆகியவற்றுக்கு அருமையாக இருக்கும்.
குறிப்பு:
 • முட்டையை உடைத்து ஊற்றிய பின்பு கிளற கூடாது. முட்டை ஒரு சைடு வெந்த பின்பு திருப்பி மட்டும் விட்டாலே போதும்.
 • இது போல் சோம்பு, கசகசா சேர்த்து அரைத்து செய்யும் போது குழம்பு மிகவும் நன்றாக இருக்கும்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s