சிம்பிள் வெஜ் ரைஸ் (simple veg rice)

தேவையான பொருட்கள்:

அரிசி – ஒன்றரை கப்
காரட் – 1
உருளை கிழங்கு – 1
வெங்காயம் – 1
தக்காளி – பாதி
தயிர் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – ஒரு பின்ச்

அரைக்க:
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 3 பல்
கசகசா – 1/4 டீஸ்பூன்
சோம்பு – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
பட்டை – 1
லவங்கம் – 2
சின்ன வெங்காயம் – 2


தாளிக்க:
எண்ணெய் – 3 டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்

செய்முறை:

 
  • முதலில் அரிசியை களைந்து அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • காரட், உருளை கிழங்கு, வெங்காயம், தக்காளி இவற்றை நடுத்தர அளவில் கட் செய்து கொள்ளவும்.
  • அரைக்க வேண்டிய சாமான்களை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  • ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து அரைத்த மசாலாவை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின்பு அதில் வெங்காயம், தக்காளி, காய்கறிகள் என ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும். 
  • அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் தயிர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கிய பின்னர் ஊற வைத்த அரிசி சேர்த்து தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
  • சாதம் வெந்தவுடன் திறந்து சூடாக பரிமாறவும்.
  • சுவையான மற்றும் சிம்பிள் வெஜ் ரைஸ் தயார்.
  • இந்த முறையில் அரைத்து செய்யும் பொழுது சுவையும், மணமும் அருமையாக இருக்கும்..
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s