தேங்காய் எண்ணெய் மருத்துவ ஆய்வு

இரு மருத்துவ ஆய்வுகள்

பிலிப்பைன்ஸின் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் நடைபெற்ற ஆய்வுகளின் படி, தேங்காய் எண்ணெய், நியுமோனியா உள்ள குழந்தைகளுக்கு துரிதமாக சுவாசத்தை சீராக்கியது.

40 அதி-பருமனான பெண்களை வைத்து நடத்திய ஆய்வில், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொண்டதால் பக்க விளைளவுகளின்றி, உடல் எடை குறைந்திருக்கின்றது.

Continue reading

Advertisements

உம்ரா-ஹஜ் விளக்கம் -3

இஹ்ராம் கட்ட வேண்டிய காலம்
துல்ஹஜ் மாதம் எட்டாம் நாளிலிருந்து தான் ஹஜ்ஜின் கிரியைகள் துவங்குகின்றன. என்றாலும், அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம்.

“ஹஜ் என்பது (அனைவராலும்) அறியப்பட்ட சில மாதங்களாகும்.” (அல்குர்ஆன் 2:197)  Continue reading

ஹஜ் -உமரா விளக்கம் -2


இஹ்ராம் கட்டுவது
ஒருவர் தொழ நாடினால் அவர் ‘அல்லாஹ் அக்பர்’ என்று தக்பீர் கூறவேண்டும். இதனைத் தொடர்ந்து தனது கைகளை நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும். ஆரம்பமாக கூறுகின்ற இந்த தக்பீர், ‘தஹ்ரீமா’ என்று குறிப்பிடப்படுகின்றது. ‘தஹ்ரீமா’ என்றால், தடுத்தல், விலக்குதல் என்பது பொருளாகும். அதாவது தொழுகையைத் துவக்குவதற்கு முன்னால் அனுமதிக்கப்பட்டிருந்த உண்ணுதல், பருகுதல், பேசுதல் போன்ற காரியங்கள் இந்த தக்பீர் மூலம் விலக்கப்படுவதால் அது தஹ்ரீமா எனப்படுகின்றது. Continue reading

உம்ரா – ஹஜ் விளக்க தொடர்-1


ஹஜ்ஜின் சிறப்புகள் 
ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள். அல்குர்ஆன் 2:196
(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலகமக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. Continue reading

தந்த ரோகம் – பல்பொடி


அனைத்து விதமான பல் சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கும் ஒரு சித்த மருத்துவ அனுபவ முறை பல்பொடி செய்முறை .

1 – சுக்கு
2 – காசுக்கட்டி
3 – கடுக்காய்
4 – இந்துப்பு  Continue reading

அக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்!


வெயில் காலங்களில் தாக்கும் நோய்களில் ஒன்றுதான் அக்கி நோய் ஆகும்.இதுவும் அம்மை நோயினைப் போன்று வைரஸ் கிருமிகளால் வருவதுதான்.

ஆனால் அக்கிநோய் என்பது புதிதாக வருவதல்ல அம்மை நோய் முன்பு தாக்கியவர்களிடம்தான்இந்நோய் வருகின்றது.அம்மை நோய் வந்து போன பிறகு இந்த வைரஸ் கிருமிகள் முழுமையாக நீங்கி விடுவதில்லை. Continue reading

உளுந்து – மருத்துவப் பயன்கள்


நோயின் பாதிப்பு நீங்க:

கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும். Continue reading

இத்தி


ஆல் இலை வடிவில் சிறிய இலைகளை உடைய மரம். சாறு பால் வடிவில் இருக்கும். இச்சி என்றும் அழைக்கப்படும். தமிழகமெங்கும் வளர்க்கப்படுகிறது.
மரப்பட்டை, பிஞ்சு காய் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

மலமிளக்கல் தாதுப் பெருக்கம் ஆகியவை இதன் மருத்துவப் பயன்கள். Continue reading

சித்த மருத்துவக் குறிப்புகள்


1.நெஞ்சு சளி:
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2.தலைவலி:
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். Continue reading

மஞ்சள் பால்

இயற்கையை மீறி எதுவும் நடக்காது’; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்’ -இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் பேசப்படும் வழக்கு மொழிகள்.

*விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும். Continue reading

கண்ணொளி தரும் பொன்னாங் கண்ணித் தைலம்!

“பொன் ஆம் காண் நீ” அதாவது நம் உடலை பொன்னைப் போல ஆக்கும் தன்மையுடைய மூலிகை என்பதால் இதனை பொன்னாம்காணி என்று அழைத்தனர். காலப் போக்கில் மருவி பொன்னாங்கண்ணி ஆயிற்று. சாதாரணமாக வயல் வரப்புகளின் ஓரம், வேலிகளின் ஓரம் வளர்ந்து கிடக்கும். இது ஒரு படரும் செடியாகும். இதன் இலை, தண்டு, வேர் என எல்லா பாகங்களும் சித்த மருத்துவத்தில் அரு மருந்தாக பயன்படுகிறது. Continue reading

சுவையான… ஓட்ஸ் கஞ்சி..!

டயட்டை மேற்கொள்பவர்களுக்கு ஓட்ஸ் மிகவும் நல்ல உணவு. அதிலும் ஓட்ஸை வெறும் பாலுடன் சேர்த்து கலந்து, சாப்பிடுவதை விட, அதில் சிறிது பழங்களையும் சேர்த்து, காலையில் அலுவலகத்திற்கு செல்லும் முன் சாப்பிட்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

அந்த வகையில் இங்கு ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் ஓட்ஸ் கொண்டு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும் கஞ்சியை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, காலையில் செய்து நாளை ஆரோக்கியமாக தொடங்குங்கள்.

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் – 1/2 கப்
கோதுமை ரவை – 1/4 கப்
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
பால் – 1 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
ஆப்பிள் – 1 கப் (நறுக்கியது)
வாழைப்பழம் – 1 கப் (நறுக்கியது)
சர்க்கரை – 1 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், ஓட்ஸ் சேர்த்து 3-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வறுக்க வேண்டும்.

பின்னர் கோதுமை ரவையை சேர்த்து மீண்டும் 2 நிமிடம் வறுக்க வேண்டும்.

பின்பு அதில் பால் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி வைத்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

விசிலானது போனதும், மூடியைத் திறந்து அதில் ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறிவிட வேண்டும்.

இறுதியில் அதனை ஒரு பௌலில் போட்டு, நறுக்கிய ஆப்பிள் மற்றும் வாழைப்பழம் சேர்த்து பிரட்டி பரிமாறினால், சூப்பரான ஓட்ஸ் கஞ்சி ரெடி!!!

பயன் தரும் பச்சிலை அருகம்புல்!


நம்மில் பலர் அருகம் புல்லை பூஜையறையில் வைத்து பயன்படுத்துவதுண்டு ஆனால் அருகம்புல்லின் மருத்துவப்பெருமை தெரிந்தவர்கள் நம்மில் எத்தனை பேர் உள்ளனர். நமது உடலில் ஊட்டச்சத்து பெருகவேண்டும் என்பதற்காக ஹார்லிக்ஸ் ஓவல்டின் போன்ற பல வகையான பானங்களை சாப்பிடுகிறோம். ஆனால் அருகம்புல்லே அற்புதமான ஊட்டச்சத்து மூலிகை என்பது நம்மில் பலருக்க தெரிந்திருக்காது.  Continue reading

பல்சொத்தையை தடுக்கும் உணவுகள்!


பொதுவாக பற்களுக்கு வரும் பிரச்சனைகளில் அனைவருக்கும் வருவது சொத்தைப்பற்கள் தான். இதற்கு எந்த ஒரு வயதும் இல்லை. சிறு குழந்தைகளிலிருந் து, பெரியவர்கள் வரை இந்த பிரச் சனைக்கு பெரிதும் ஆளாவார்கள். இவ்வாறு சொத்தைப்பற்கள் வரு வதற்கு பல காரணங்கள் இருக்கி ன்றன. அதில் முக்கியமானது என்னவென்றால் அதிகளவில் இனிப்புகளை சாப்பிடுவது. Continue reading

இயற்கைக்கு மாறுவது எப்படி?

இயற்கைக்கு மாறுவது எப்படி?நிறைய நண்பர்கள் ஆர்கானிக் பொருட்களை பயன்படுத்த தொடங்க எத்தனிப்பது மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் இயற்கைக்கு எப்படி மாறுவது என்று மீண்டும் அவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டியுள்ளது. ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்பட்டு, மண்ணும், நமது உடலும் பாழான பிறகே நாம் இயற்கை விவசாயம், இயற்கை வழி விளைந்த (ஆர்கானிக்) பொருட்கள் மீது ஆர்வம் காட்டி வருகிறோம். Continue reading