நாம் தூக்கி எறியும் குப்பைகளின் மதிப்பு

தரமான பாலிதீன் பைகளில் இருந்து பிளாஸ்டிக் ஹோஸ்,பிளாஸ்டிக் டப்பாக்கள் தயாரிக்கிறார்கள். அதாவது சின்டெக்ஸ் தொட்டி போன்றவை தொடங்கி பைப்புகள் வரை தயாரிக்கிறார்கள். நாம் தூக்கி போடும் பாலிதீன் பைகளை இது போன்ற பொருட்கள் தயாரிக்க வாங்கிக் கொள்கிறார்கள். ஆக..பாலிதீன் பைகளை சேர்த்து வைத்தால் கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள் Continue reading

கீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு.

 

நமது நாட்டின் தாவர செல்வங்களை நாம் சிறப்பாக உபயோகப்படுத்தா விட்டாலும் மற்ற நாடுகள் அறிந்து சிறப்பாக உபயோகப்படுத்துகின்றனர். இயற்கையை பாதுகாப்பதில் வெட்டிவேர் என்றால் நமது உடலை பாதுகாப்பதில் முருங்கையை கூறலாம். முருங்கையின் தாயாகம் இந்தியாதான் என்றாலும் இன்று ஆப்பிரிக்க நாடுகளில் இதன் பயன்பாடு மிக அதிகம். Continue reading

கூலி வேலைக்கு நடுவே குஷியான வருமானம்

மனிதனின் ஆரம்பக்காலப் பொருளாதாரமே, ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள்தான். இவற்றைப் பெருக்கித்தான் காலகாலமாக தங்களின் பொருளாதாரத்தை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கின்றனர் கிராமப் புற மக்கள். இதை உணர்ந்தே கால்நடைகள்தான் கிராமப்புறப் பொருளாதாரத்தின் காவலன் என்று நீண்ட நெடுங்காலமாக விவசாயப் பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனை சொல்லி வருகின்றனர். இது, நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளனர் கோயம்புத்தூர் மாவட்டம், சுல்தான்பேட்டை அடுத்துள்ள நகரகளந்தை பகுதியில் வசிக்கும் வேலுச்சாமி- செல்லம்மாள் தம்பதி! சொந்தமாக நிலம் ஏதும் இல்லாத வயது முதிர்ந்த இந்தத் தம்பதியர், தனியார் ஒருவரின் தென்னந்தோப்பில் தங்கி, கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையிலும் தளர்ந்து விடாமல் ஆடு, கோழி, புறா ஆகியவற்றை வளர்த்து தன்னிறைவான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். Continue reading

அள்ளிக் கொடுக்கும் ஆட்டுப்பண்ணை!

ஆசை இருக்கு அரசாள.. அதிர்ஷ்டம் இருக்கு ஆடு மேய்க்க என்று கிண்டலாகச் சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு அரசாள்வதைவிட… இது மேல் என்று சொல்லும் அளவுக்கு மரியாதைக்குரிய மற்றும் லாபம் கொழிக்கும் தொழிலாக மாறிவிட்டது ஆடு மேய்த்தல். Continue reading

நேரம் மிச்சமாகும் நெட் பேங்கிங்


விளம்பரங்கள் பார்க்கிறோமே… கரண்ட் பில் கட்டலன்னு அப்பா மகனை திட்டுவாரு.. மகன் கையில செல்போன் வச்சு விளையாடிட்டு இருக்கிறாப்ல காட்சி வரும். அப்பா திட்டி முடிக்கிறதுக்குள்ள மகன் சொல்வாரு… கரண்ட் பில் கட்டியாச்சுன்னு…. இந்த நூற்றாண்டுல எல்லாத்துக்கும் ஒரு விலை உண்டு. நேரத்தை தவிர… Continue reading

தேங்காய் சிக்கன் குழம்பு


என்னென்ன தேவை?
சிக்கன்- 1 கிலோ(உப்பு மிளகாய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.)
பெரிய வெங்காயம்-5 நறுக்கியது
தக்காளி-2 நறுக்கியது
உப்பு தேவையான அளவு Continue reading