உலகின் உயர்ந்த சிறுவன்

1

உ.பி.யில் உலகின் உயர்ந்த சிறுவன்– வயது

5 – உயரம் 5.7 அடி: கின்னஸ் சாதனை படைத்தார்

மீரட்: உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த சஞ்சய் சிங் – சுவேத்லனா என்ற தம்பதியின் மகன் கரண் சிங். அபரிமிதமாக வளர்ச்சியடைந்து வரும் கரண்சிங், 5 வயதிலேயே 5.7 அடி உயரத்தை எட்டியுள்ளார். இது குறித்து அவருடைய தந்தை சஞ்சய் கூறுகையில், என் மகன் கரண் சிங்கை பள்ளியில் சேர்த்தோம். அவனை கண்டு மற்ற குழந்தைகளெல்லாம் அலறியடித்து ஓடினார்கள். பின்னாளில், கரணுடன் நன்றாக பழகினார்கள். இப்போது அவனுக்கு ஏராளமான நண்பர்கள் உள்ளனர். என்றார். உயரத்தில், கரணுடைய அம்மா சுவேத்லனாவும் சளைத்தவர் அல்ல. 7.2 அடி உயரம் உள்ள அவர், கடந்த 2012 வரை, இந்தியாவின் உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனையை, தன் வசம் வைத்திருந்தார். அதன் பின்னர், இந்த சாதனையை மேற்கு வங்கத்தை சேர்ந்த, 8.2 அடி உயரம் கொண்ட சித்திகா பர்வீன், என்பவர் வசப்படுத்திக் கொண்டார்.

2007ல் திருமணத்தின்போது, 6.6 அடி உயரமாக சுவேத்லனா இருந்தார். 25 வயதிலும் அவர் வளர்ந்து வருவதற்கு, அதிகமான வளர்ச்சி ஹார்மோன்களே காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். உயரம் மட்டுமின்றி, அம்மா சுவேத்லனாவுக்கும், மகன் கரண் சிங்குக்கும் கேட்கும் திறன் அசாதாரணமாக உள்ளது.

தினகரன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s