வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு சமர்ப்பணம்…

 


IMG_1196398329942தினார்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கிக் கிடக்கும் மீன் குஞ்சுகள் நாங்கள்……

பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு
குதூகளிக்க முடியாமல் தங்களின் வாழ்த்துக்களை மனம் முழுக்க சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிட்டு கொஞ்சி மகிழ நேரில் இல்லாத காற்றலைகள் நாங்கள்……


இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் தன் பெற்றக்குழந்தையை நெஞ்சுருகக் கட்டித்தழுவ முடியாதொரு துர்பாக்கியசாலிகள் நாங்கள்…

கம்ப்யூட்டர் , ஸ்கைப். போனிலும் சொந்த பந்தங்களின் குரல் கேட்டு கேட்டு எங்கள் பாசம் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது… தொலைதூர பாசம் செய்தே/காட்டியே தொலைந்து போனவர்கள் நாங்கள்…

நான் இங்கே நல்லா இருக்கேன். என்று எப்போதும் சொல்லும் இயற்கை நிலை குரலுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்…

வியர்வையில் நாங்கள் வேலை செய்து துவண்டாலும் விடுமுறையில் ஊருக்கு போகும் முன் சென்ட் வாசனை திரவியங்கள் வாங்க மறப்பதில்லை நாங்கள்…(எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க…)

உனக்கென்ன! விமானப்பயணம், வெளிநாட்டு ராஜ வாழ்க்கை என்று ஊருக்கு போனதும் உள்ளூர் வாசிகள் எங்களை பார்த்து விடும் பெருமூச்சு வளைகுடா நாட்டின் அரபி நாட்டு வெப்பத்தை விட சற்று அதிகமாகவே சுடுகிறது! (இவர்கள் பேச்சி)

வெளிநாட்டு மூட்டை பூஜ்ஜி கடியை விட இவர்கள் கடியைதான் தாங்க முடியவில்லை

கம்ப்யிட்டர்க்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள்,
நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை ஆனால் நாங்களும்
களைத்துத்தான் போகிறோம்…

எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள்…
வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள் நாங்கள்…
திரைகடலோடி திரவியம் தேடும் திசைமாறிய பறவைகள் நாங்கள்…

ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதப்பட்டோம் எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு செய்திருக்கின்றோம்…இப்போதுதான் புரியத்துவங்கியது சேர்ந்தே நரைக்கவும் துவங்கியது…

நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை! வாலிபத்தை!!
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது , நஷ்ட்டஈடு கிடைக்காத நஷ்ட்டம் இது…

, அப்பாவின் அன்பு, குழந்தையின் மழலை, நண்பர்களுடன் அரட்டை இப்படி வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்கி தவிக்கும் எங்கள் நாக்கு

இங்க உள்ள பர்கர், பீசா, சன்விஜ், சாப்பிட்டு சாபிட்டு எங்கள் நக்கும் செத்து போச்சி பசி கொடுமைக்காக சாப்பிடுக்றோம்.

ஏதோ எங்கள் உடம்பில் கொஞ்சம் ஓட்டி கொண்டு இருக்கும் ரெத்தத்தை கூட மூட்டை பூச்சி குடித்து விடுகிறது .

எத்தனையோ இழந்தோம்…..
எல்லாவற்றையும் இழந்த நாங்கள் இன்னும் இங்கே ஏன் இருக்கின்றோம்…

இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதாலா?
இல்லை…. இழப்பிலும் சுகம் கண்டுகொண்டதாலா?”

சொந்த மண்ணில் சொந்தங்களோடு சோறு திண்பவன்
……யாரடா ? இருந்தால் அவனே சொர்க்கம் கண்டவனடா!

உங்கள் விரல் தொடும் தூரத்தில் நான் இல்லை என்றாலும் !’ உங்கள் மனம் தொடும் தூரத்தில் நான் இருப்பேன் !

நீங்கள் இருப்பது தொலைவில் தான் ஆனால் என் இதயம் மட்டும் உங்களுடன் பேசிக்கொண்டிருகின்றது!

நன்றி.சிந்திங்க 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s