ஹஜ்ஜின் ஒழுங்குமுறை

 

ஹஜ் கடமையாக்கப்பட்டவர்களும் அதன் சிறப்புகளும்

IMG_760743902739727 ”உம்ராவானது, மறு உம்ரா வரையிலான பாவங்களின் பரிகாரமாகும். பாவங்கள் கலக்காத ஹஜ்ஜுடைய கூலி சுவர்க்கத்தைத் தவிர வேறில்லை!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

728 ”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! பெண்கள் மீது ஜிஹாத் உண்டா?” என்று நான் கேட்டதற்கு, ”ஆம்! நீ பெண்கள் மீது ஜிஹாத் உண்டு. போர் இல்லை. அது ஹஜ் மற்றும் உம்ரா ஆகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், இப்னு மாஜா

இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு இப்னு மாஜாவின் வாசகம் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் புகாரீயில் உள்ளது.

729 நபி(ஸல்) அவர்களிடம் ஒரு நாட்டுப் புறத்தார் வந்து, ”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனக்கு உம்ராவைப் பற்றிக் கூறுங்கள். அது கடமையா?” என்று கேட்டதற்கு, இல்லை! நீ உம்ரா செய்தால் உனக்குச் சிறப்பு என்று கூறினார்கள் என, ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், திர்மிதீ

இதில் மவ்கூஃப் எனும் தரம் மேலோங்கியள்ளது. இப்னு அதீ உடைய மற்றோர் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்றோர் அறிவிப்பின்படி ஜாபிர்(ரலி) வாயிலாக, ‘ஹஜ் மற்றும் உம்ரா கடமைகள் என்று மர்ஃபூஃ எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

730 ”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ஸபீல் என்றால் என்ன? (எதைக் குறிக்கும்?)” என்று பதிலளித்தார்கள் என, அனஸ்(ரலி) அறிவிக்கிறார். தாரகுத்னீ

இது ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் உள்ளது இன்னும் முர்ஸல் எனும் தரமே இதில் மேலோங்கியள்ளது.

731 இப்னு உமர்(ரலி) வாயிலாக திர்மிதீயில் இடம் பெறும் ஹதீஸ் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

732 (மதீனாவிற்கு அருகில் உள்ள) ரவ்ஹா எனும் இடத்தில் நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணக் கூட்டத்தைச் சந்தித்த போது, ”நீங்கள் யார்?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், ”நீங்கள் யார்?” என்று கேட்டனர். ”நான் அல்லாஹ்வின் தூதர்” என்று நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். அப்போது ஒரு பெண் பிள்ளையை நபி(ஸல்) அவர்களின் பால் கொண்டு வந்து, ”இதற்கு ஹஜ் இருக்கிறதா?” என்று கேட்டார். ”ஆமாம்! அதன் கூலி உனக்காகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

733 ஃப்ழ்ல் இப்னு அப்பாஸ் சவாரியில் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது கஸ்அம் கோத்திரத்திலிருந்து ஒரு பெண்மணி வந்தார். உடனே ஃபழ்ல் அந்தப் பெண்ணைப் பார்த்தார். அந்தப் பெண்ணும் அவரைப் பார்க்கலானாள். நபி(ஸல்) அவர்கள் ஃபழ்ல் உடைய முகத்தை வேறு திசையில் திருப்பலானார்கள். அப்போது, ”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அடியார்கள் மீது ஹஜ் அல்லாஹ்வின் கடமையாக உள்ளது. என்னுடைய தந்தை மிகவும் வயோதிகராம் விட்டார். அவரால் வாகனத்தில் அமர முடியாது. (எனவே) அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?” என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ”ஆம்! (செய்யலாம்) என்றார்கள். இது ஹஜ்ஜத்துல்வதாவில் நிகழ்ந்தது” என்று இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

இங்கு புகாரியின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

734 ஜுஹைனா கோத்திரத்திலிருந்து ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ”(அல்லாஹ்வின் தூதர் அவர்களே!) என்னுடைய தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார். ஆனால் ஹஜ் செய்யாமலேயே இறந்துவிட்டார். அவருக்காக நான் ஹஜ் செய்யலாமா?” என்று கேட்டார். (அதற்கு) ”ஆமாம் நீ அவருக்காக ஹஜ் செய்! உன்னுடைய தாய் மீது கடனிருந்தால், அதை நீ தீர்ப்பாயல்லவா? அல்லாஹ்வுடைய கடனைத் தீருங்கள். நமது வாக்கை நிறைவேற்றித் தர அல்லாஹ்வே மிகவும் அருகதையானவன் என்று நபி(ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள். இதை இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம் புகாரி

735 ”எவர் சிறுவராக இருக்கும் போது ஹஜ் செய்து விட்டாரோ, அவர் இளமையடைந்து விட்டாரோ, அவர் இளமையடைந்து விட்டால் மற்றொரு ஹஜ் செய்ய வேண்டும். எவர் அடிமையாக இருக்கும் போது ஹஜ் செய்து விட்டாரோ, அவர் விடுதலையடைந்து விட்டால் மற்றொரு ஹஜ் செய்ய வேண்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார். இப்னு அபீ ஷைபா, பைஹக்கீ

இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள் இது மர்ஃபூஃ எனும் தரத்தில் உள்ளதா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. மவ்கூஃப் எனும் தரமே இதில் மேலோங்கியள்ளது.

736 ”எந்த ஒரு பெண்ணுடனும் அவளை மணம் புரிவது தடை செய்யப்பட்ட ஒருவர் இல்லாமல் அவளுடன் எவரும் தனித்திருக்க வேண்டாம். இன்னும் எந்த பெண்ணும் திருமண பந்தம் தடை செய்யப்படாத ஓர் ஆணுடன் தனித்துப் பயணம் செய்ய வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்த நான் கேட்டுள்ளேன். அப்போது ஒருவர் எழுந்து ”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னுடைய மனைவி தனியாக ஹஜ் செய்யச் சென்றுள்ளார். நானோ இன்ன இன்ன யுத்தங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளேன்” என்று கூறினார். அதற்கு, ”நீ சென்று உன்னுடைய மனைவியுடன் ஹஜ்ஜை மேற்கொள்!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

இங்கு முஸ்லிமுடைய வாசகம் இடம் பெற்றுள்ளது.

737 ஒரு மனிதர் (ஹஜ் செய்யும் போதும்), ”ஷுப்ருமாவின் சார்பாக நான் ஆஜராகியள்ளேன்… என்று சொல்வதை செவியுற்ற நபி(ஸல்) அவர்கள், ”ஷுப்ருமா யார்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் ”என்னுடைய சகோதரன்” என்றோ, ”எனக்கு நெருக்கமானவர்” என்றோ கூறினார். (அதற்கு) ”முதலில் உனக்காக ஹஜ் செய்து கொள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பா!(ரலி) அறிவிக்கிறார். அபூதா¥த், இப்னு மாஜா

இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மவ்கூஃப் எனும் தரமே மேலோங்கியள்ளதாக அஹ்மதில் உள்ளது.

738 நபி(ஸல்) அவர்கள் ஒருமுறை எங்களுக்கு உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது, ”அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கியள்ளான்” என்று கூறினார்கள். அப்போது அக்ரஉ இப்னு ஜாபிஸ்(ரலி) எழுந்து நின்று ”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இது ஒவ்வொரு வருடமுமா?” என்று கேட்டார். (அதற்கு) ”நான் அப்படிச் சொன்னால் அது கடமையாகி விடும். ஹஜ் என்பது ஒருமுறை தான். அதற்கு மேல் செய்வது உபரியாகி விடும்” என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத்,அபூ தா¥த், நஸாயீ, மற்றும் இப்னுமாஜா

739 இதன் (738வது ஹதீஸின்) மூலம் அபூஹுரைரா(ரலி) வாயிலாக முஸ்லிமிலும் உள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s