சளித் தொல்லையில்லா மூலிகை கொசுவிரட்டி!

மூலிகைக் கொசுவிரட்டி!

நமது அடுத்த கண்டுபிடிப் பாளர், மரு.அமுதவல்லி. இவர் கொசு விரட்டி தயாரித்துள்ளார். கொசு விரட்டி யைப் பிறகு பார்க்கலாம். இவர், பள்ளியில் ஆசிரியர் பணி புரிந்து விருப்ப ஓய்வில் வெளியே வந்தவர். வள்ளலார் சிந்தனையில் பிடிப்பு கொண்டவர். தொடர்ந்து பல ஆண்டுகளாக மூலிகை சாகுபடி, ஆராய்ச்சி, இவற்றில் இறங்கி யுள்ளார்.

Continue reading

உங்களுக்காக உழைக்க தேனீக்கள் தயாராக இருக்கின்றது

2தேன், ஒரு அதிக ஊட்டச்சத்து நிறைந்த விரும்பத்தக்க உணவாகும். தேனீக்கள், மலர்த்தேனை சேகரித்து, தேனாக மாற்றி, அதை தேன் கூட்டில் சேமிக்கும்.

தேன் மற்றும் அதை சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால், தேனீ வளர்ப்பு ஒரு தொழிலாக முக்கியமடைந்துள்ளது.தேனீக்கள் வளர்ப்பதன் மூலம் வருமானத்தை ஈட்டுவது மட்டுமில்லாமல், மகசூல் உற்பத்தியை அதிகரிக்கலாம். தென்னந்தோப்புகளில், ஆறு அடிக்கு ஒரு பெட்டி வீதம் தேனீ பெட்டிகளை வைத்து வளர்க்கலாம். ஒரு தேனீ பெட்டியில் ஒரு ராணி தேனீ, 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை தேனீக்கள் இருக்கும்.தேனீக்கள், இந்திய தேனீ, மலைத்தேனீ, கொம்பு தேனீ, அடுக்கு தேனீ மற்றும் கொசு தேனீ என பல்வேறு வகைகளாக வளர்க்கப்படுகின்றன. ஒரு பெட்டியில், 750 மி.லி., முதல் ஆயிரத்து 250 மி.லி., வரை தேன் சேகரிக்கப்படுகிறது.

Continue reading

ஏழைகளின் ஏடிஎம் – கால்நடை வளர்ப்பு கத்துக்கலாமா ..?

1சகஜமான ஒன்று விவசாயத்துக்கு மட்டுமல்ல. விவசாயிகளின் அவசரக்கால பணத்தேவைகளுக்கும் துணை நிற்பது கால்நடைச் செல்வங்கள் தான், அதனால் தான் விவசாய அமைச்சகமும், கால்நடைத் துறையும், இவ்விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு, கால்நடை வளர்ப்பை ஊக்குவித்து வருகின்றன.
தமிழ்நாட்டில் கால்நடைகளுக்கென்றே சென்னையில் தனியாக மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே கால்நடைகளுக்கு என்று முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகமும் இதுதான். இதன் துணைவேந்தர் பலராமனைச் சந்தித்து, கால்நடைகள் குறித்த ஆலோசனைகளைக் கேட்டோம்.

Continue reading

கட்டுமானப் பொருட்கள் விலை விவரம்…

1மணல், சிமெண்டு, ஜல்லி, செங்கல், இரும்புக்கம்பி போன்ற கட்டுமானப்பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான சம்பள விவரம் இங்கே இடம்பெற்றுள்ளது.

கட்டுமானப்பொருள் விலை

சிமெண்டு

50 கிலோ பை (மொத்த விலை, குறைந்தது 300 பைகள்)* ரூ.310 Continue reading

உடல் நல உணவு

உடல் நல உணவுநம்மில் பலருக்கு, உணவுகள் பற்றியும், உணவுகளின் சிறப்பு பற்றியும், உண்ணும் முறை பற்றியும் தெரியும். இதில் விழிப்புணர்வு வேண்டும். அத்தகைய விழிப்புணர்வும், சத்துணவும் மக்களுக்குக் கிடைத்தால், எங்கும் உடல் நலம் தங்கும். மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய தேவையும் இருக்காது. நாம் உண்ண வேண்டிய உணவின் மொத்த கலோரி சக்தியில், 60 சதவிகிதம் கார்போஹைடிரேட் மூலமும், 30 சதவிகிதம் கொழுப்பு மூலமும் 10 சதவிகிதம் (அல்லது 12) புரதம் மூலமும் இருக்க வேண்டும்.

Continue reading

இயற்கை உணவே இனிய உணவு

முளை தானியம் என்னும் அற்புத உணவு!
மனிதன் பிறந்ததே சாப்பிடத்தான் என்பது போல, இன்றைய தேதிக்கு சைவத்திலும், அசைவத்திலும் வித, விதமான உணவுகள் உலகமெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் ஆரோக்கிய கேடே மண்டிக் கிடக்கிறது.
போதாதற்கு நித்தமும் ஒரு புத்தம் புது உணவைக் கண்டுபிடித்து ஓட்டல்காரர்கள் வாழ்கின்றனர்; மக்கள் நோகின்றனர்.
இயற்கை உணவே இனிய உணவு, ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும், ஒரு வேளையாவது இந்த இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை. Continue reading

உடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை

p84திராட்சையில் 16 சதவிகிதத்துக்கும் குறைவான ஈரப்பதம் உள்ளதையே உலர் திராட்சை என்கிறார்கள். மிகவும் பழைய உலர் திராட்சையை வாங்குவதைவிட நடுத்தரமானதை தேர்ந்தெடுத்து வாங்குவது சிறந்தது. உலர் திராட்சையில் அதிக அளவு ஆற்றல், ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் உள்ளன.  மேலும், இதில் பல ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல், ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது.சத்துக்கள்  பலன்கள்: இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது நீரில் கரையாத சுருங்கிய நிலையில் உள்ள நார்ச்சத்து, வயிற்றுக்குள் சென்றதும் நீரை உறிஞ்சிவிடும்.  இதனால் சிறுகுடலில் தங்கிய உணவுப் பொருட்களை இயற்கையான முறையில் வெளியேற்ற உதவும். நார்ச்சத்தானது வயிற்றில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சுவதால் வயிற்றுப்போக்கு பிரச்னைக்கு இயற்கையான முறையில் தீர்வு அளிக்கிறது.

Continue reading

இதயம் காக்கும் காய்கள்

Posted Image

வெள்ளை நிறம் கொண்ட காய்களை தொடர்ந்து சாப்பிட்டால் இதய நலத்துடன் இருப்பதாகவும், புற்றுநோயைத் தடுக்கும் எதிர்ப்பு சக்தி இவர்கள்  உடலில் அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. காளான் இரத்தத்தில்  கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச்  சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.  இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத்  தடுக்கிறது. வெங்காயத்திலிருந்து கிடைக்கும் அலிசின் என்ற வேதிப்பொருள் கொழுப்பையும், இரத்த அழுத்தத்தையும் குறைக்கும் சக்தி கொண்டது.
Continue reading

இயற்கை தரும் இளமை வரம் சப்போட்டா பழம்!!

 

உடலுக்கு அதிக ஆற்றலை தரும் சப்போட்டா பழம்இறைவன் இப்புவியில் உண்டாக்கிய பலவித பழங்களில் அதிக மருத்துவ குணம் மற்றும் சத்துக்கள் நிறைந்து, எளிமையாக எல்லோருக்கும் கிடைக்கும் படியான ஒரு பழம் என்றால் அது சப்போட்டா தான் ஆகும். `சிக்கு’ என்ற பெயர் நம்மில் பெரும் பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம். 
 
சப்போட்டா என்று நன்கு அறியப்பட்ட பழத்தின் மற்றொரு பெயரே `சிக்கு’ என்று அழைக்கப்படுகிறது. சப்போட்டா பழத்தில் பல தரப்பட்ட சத்துக்கள் நிறைந்துக் காணப்படுவதற்கு நன்றி கூறுவதோடு மட்டுமல்லாமல், நல்ல சுவை நிறைந்த பழமான இது பெருமளவிலான சுகாதார நன்மைகளை தரும் பழங்களில் ஒன்றாகும். 
 
இந்த பழம் எளிதாக செரிமானமாவதோடு மட்டுமல்லாமல், அதில் அதிக அளவு குளுக்கோஸ் இருப்பதன் காரணமாக நம் உடலுக்கு அதிக ஆற்றலை வழங்கி நிறைவாக்குகிறது. இப்போது சப்போட்டாவின் பல்வேறு சுகாதார நலன்கள் பற்றிப் பார்ப்போமா.  Continue reading

முள்ளங்கி மகத்துவம்

ஈரப்பதம் மிகுந்து, கொழுப்பு, புரதசத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து, இரும்புசத்து, பாஸ்பரஸ், கால்சியம், ஆகிய சத்துக்கள் மிகுந்த முள்ளங்கியின் பூர்வீகம் ஆப்பிரிக்கா.
காடுகளில் மானாவாரியாகப் புதைந்துகிடந்த முள்ளங்கியைக் கண்டு, அதன் மகத்துவம் அறிந்து ஆப்பிரிக்கப் பழங்குடிகள்தான் மனிதர்களின் உணவாக மாற்றினர்.
குதிரைமுள்ளங்கி, காட்டுமுள்ளங்கி, மலைமுள்ளங்கி என பலவகைகள் உண்டு. நாம் சாப்பிடுவது மலைமுள்ளங்கி. வெண்முள்ளங்கியைவிட மருத்துவ குணம் அதிகமுள்ளது சிவப்பு முள்ளங்கிதான்.

Continue reading

கோயில் ஆகிறது பரப்பன அக்ரஹாரா சிறை!

ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட முதல் மூன்று நாட்கள் பரப்பன அக்ரஹாரா நெரிசலில் சிக்கித் தவித்தது. நாட்கள் ஆக ஆக கூட்டமும் குறைய ஆரம்பித்துள்ளது. 

ஓவர் டு பரப்பன அக்ரஹாரா…

சைரன் வைத்த காரில் தம்பிதுரை!

அமைச்சர்கள் பெரும்பாலும் பெங்களூருவில் உள்ள ஸ்டார் ஹோட்டல்களில் தங்கியுள்ளனர். அவர்களில் ஒருசிலர் தினமும் காலை 10 மணிக்கு பரப்பன அக்ரஹாராவுக்கு வருகின்றனர். அமைச்சர்களுக்காக அவர்களது உதவியாளர்கள் பிளாஸ்டிக் சேர்களை எடுத்து வருகிறார்கள். அந்த சேர்களை மரத்தடியில் போட்டு உட்கார்ந்து கொள்பவர்கள், மதியம் வரை பேசியபடியே இருக்கிறார்கள். அங்கேயே மதிய உணவு வருகிறது. மரத்தடியில் அமர்ந்தபடியே மதிய உணவு சாப்பிடுகிறார்கள். சிலர் அங்கிருந்து சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு கிளம்பிவிடுகிறார்கள். மாலை 6 மணி ஆனதும், கொசு அதிகம் இருப்பதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்கள். 4-ம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சைரன் வைத்த காரில் சிறை வளாகத்துக்கு வந்தார். ஜெயலலிதாவை சந்திக்க மனு கொடுத்துவிட்டு நீண்ட நேரம் உள்ளே காத்திருந்தார். ஆனால், ஜெயலலிதாவிடம் இருந்து பதில் இல்லை. அதனால் மதியம் 2 மணியளவில் அங்கிருந்து கிளம்பிவிட்டார். மீண்டும் அன்று மாலை 6 மணிக்கு ஜெயிலுக்குள் சென்று திரும்பினார் தம்பிதுரை.

மண்டை உடைக்கும் போராட்டம்!

திருவண்ணாமலையில் இருந்து வந்திருந்த அ.தி.மு.க-வினர் சிலர், ‘நாங்க அம்மாவை பார்த்தே ஆகணும்!’ என்று செக்போஸ்டில் இருந்த போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‘இப்போ நீங்க போகலைன்னா நாங்க அடிச்சு விரட்ட வேண்டியிருக்கும்’ என்று போலீஸார் எச்சரித்தனர். கடுப்பாகிப்போன அ.தி.மு.க-காரர் ஒருவர், ”வீரப்பன் இல்லாமல் உங்களுக்குக் குளிர்விட்டுப் போச்சு. வீரப்பன் இருந்திருந்தா இந்த நேரம் நீங்க அம்மாவை உள்ளே வெச்சுருக்க முடியுமா… அம்மா மட்டும் வெளியில வரட்டும் அப்புறம் நாங்க யாருன்னு காட்டுறோம்!” என்று கோபப்பட்டார். அதற்கு அங்கிருந்த போலீஸ்காரர், ”வீரப்பனை சுட்டுக் கொன்றதே உங்க அம்மாதானே!” என்றதும், அ.தி.மு.க பார்ட்டி  கப்சிப் ஆனார். செங்கம் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல், இளங்கோ, பிரகாஷ், இம்தியாஸ் ஆகியோர் சிறைக்கு எதிரே உட்கார்ந்து தலையை மொட்டை அடித்துக் கொண்டனர். குளித்துவிட்டு வந்து, சிறையை நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டு கன்னத்தில் போட்டுக்கொண்டனர்.

மொட்டை போட்ட அதே குழுவினர் மறுநாள் ஒரு தேங்காய் மூட்டையுடன் சிறை செக்போஸ்ட் அருகே வந்தனர். ”அம்மாவை வணங்கி இங்கே தேங்காய் உடைக்கப் போகிறோம்!” என்று சொல்லிவிட்டு, ஜெயிலை நோக்கி கும்பிட்டுவிட்டு தேங்காய்களை ரோட்டில் உடைக்க ஆரம்பித்தனர். போலீஸார் பதறியபடி ஓடி வந்து தேங்காய்களைப் பறிமுதல் செய்ய முயற்சித்தனர். ”தேங்காய் உடைக்கிறதை தடுத்தீங்கன்னா உங்க மண்டையை உடைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்!” என்று அவர்கள் ஆக்ரோஷமாகக் கத்தினார்கள். அதனால் போலீஸார் அமைதியாக… 101 தேங்காய்களையும் ரோட்டில் உடைத்துவிட்டு மீண்டும் அங்கேயே விழுந்து பயபக்தியுடன் வணங்கினார்கள்.

‘பெயில் கேட்டு அலைவது வேஸ்ட்!’

சிறை வளாகத்துக்கு வெளியே ஜெராக்ஸ் பேப்பர்களோடு சுற்றித் திரிந்த நாகராஜ் என்ற ஜோதிடர், ”அம்மாவுக்கு இந்த தண்டனை கிடைக்க முக்கிய காரணம், அவர் 16.5.2011 அன்று பதவியேற்றதுதான். அந்த நாளும் நேரமும் சரியில்லை. அதனால்தான் இந்த சிறைத் தண்டனை கிடைத்துள்ளது. இதை அம்மா பதவியேற்ற மறுநாளே நான் இமெயில் மூலம் கார்டனுக்கு அனுப்பிவிட்டேன். அதற்கான அத்தாட்சிதான் இது. எவ்வளவு முயற்சி செய்தாலும் அம்மாவுக்கு 19-ம் தேதிதான் பெயில் கிடைக்கும் என்று கட்டம் சொல்லுது.  இவங்க பெயில் கேட்டு அலைவது வேஸ்ட். ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு முன்பைவிட வேகமாகச் செயல்படுவார். அவர் பிரதமர் ஆகும் நாளும் வெகுதூரத்தில் இல்லை!” என்று ஜோதிடம் சொல்லிக்கொண்டு இருந்தார். அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்தது. ஜெயலலிதாவுக்கு ஆருடம் சொன்னவர், ஒருகட்டத்தில் அங்கே வந்தவர்களுக்கும் ஜோதிடம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

‘அப்போ காவிரி… இப்போ சேர்!’

செக்போஸ்ட்டுக்கு எதிர்புறத்தில் உள்ள மரத்தடியில் ஒருவர் ‘தமிழ்நாடு புரட்சித்தலைவி பசுமை தமிழகம்’ என்ற ஃப்ளெக்ஸ் கட்டி அதற்கு கீழே சேர் போட்டு உட்கார்ந்திருந்தார். அவரிடம் பேச்சு கொடுத்தோம். ”என் பேரு சுந்தரராஜன். தமிழ்நாடு புரட்சித் தலைவி பசுமை தமிழகத்தின் நிறுவனர். காலையில என்னோட ரூம்ல உண்ணாவிரதம் தொடங்கிட்டுதான் கிளம்பினேன். அம்மா வெளியில வரும் வரைக்கும் தொடர் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டிருக்கேன்” என்றார். சரியாக மதியம் 3 மணிக்கு சுந்தரராஜன், ‘நான் தற்போது யூரின் செல்ல வேண்டியிருப்பதால் இங்கிருந்து கிளம்புகிறேன்’ என்று அறிவித்துவிட்டுப் புறப்பட்டார். திரும்பி வந்தவரின் சேரை காணவில்லை. ”கன்னட வெறிபிடித்தவர்கள் காவிரியையும் விடவில்லை. எங்க அம்மாவையும் விடவில்லை. இப்போ என்னோட சேரையும் விடவில்லை!” என்று கத்திவிட்டு, யாருக்கோ போன் செய்தார். அவரது உதவியாளர் ஒரு சேரை எடுத்துக்கொண்டு வந்தார். ”இனி என்னோட சேர்ல யாராவது கை வெச்சுப்பாருங்க…” என்று உரக்கச் சொல்லிவிட்டு உட்கார்ந்துகொண்டார். இரவு 7 மணிக்கு, ”எனக்கு ஹோட்டல்ல ரூம் இருக்கு. நான் அங்கே போய் உண்ணாவிரதத்தைத் தொடரப் போறேன்!” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார் சுந்தரராஜன்.

‘அது நம்ம பொண்ணு!’

கர்நாடகத்தின் மண்டியா மாவட்டம் மேலக்கோட்டை பகுதியில் ஜெயலலிதாவின் முன்னோர்கள் வாழ்ந்தனர். அதன் அருகே உள்ள ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர்தான் முன்னாள் பிரதமர் தேவகவுடா. தேவகவுடாவுக்கு ஜெயலலிதா மீது எப்போதும் தனிப்பாசம் உண்டு. கடந்த தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்றபோது, ‘அது நம்ம பொண்ணு!’ என்று சந்தோஷத்துடன் சொன்னவர் தேவகவுடா. ஜெயலலிதாவை சிறையில் சந்திக்க முயற்சி செய்தவர்களில் இவரும் ஒருவர். ஆனால், அது முடியவில்லை என்றதும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ”தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே இருக்கின்ற நல்லுறவைப் பேணி காக்க வேண்டும். ஜெயலலிதாவின் உடல் நிலை, பாதுகாப்புப் பிரச்னைகளைக் கருத்தில்கொண்டு கர்நாடக சிறையில் இருந்து தமிழ்நாட்டுக்கு அவரை மாற்ற வேண்டும். இதுபற்றி நான் கர்நாடக அரசிடமும் முறையிடப் போகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கொடுத்தாலும் விடமாட்டோம்!

சிறைக்குச் செல்லும் செக்போஸ்ட்டில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மூன்று வேளையும், வாட்டர் பாட்டில், டீ, காபி, மற்றும் மதிய உணவு வாங்கிக் கொடுப்பது அங்கே வரும் அ.தி.மு.க-வினர்தான். போலீஸ்காரர்களை எப்படியாவது நட்பாக்கி ஜெயில் வளாகத்துக்குள் நுழைந்துவிட வேண்டும் என்று படாதபாடு படுகிறார்கள். அவர்கள் கொடுக்கும் அனைத்தையும் மறுக்காமல் வாங்கிக்கொள்கிறார்கள் போலீஸார். ஆனால், யாரையும் உள்ளே மட்டும் அனுமதிப்பது இல்லை. பரப்பன அக்ரஹாராவுக்கு வரும் தொண்டர்கள் கறுப்பு சட்டை அணிந்து வருகிறார்கள். பலர் பெங்களூருக்கு வந்துதான் கருப்புச் சட்டை வாங்குகிறார்கள். இதனால், அங்கே கறுப்புச் சட்டைக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

– வீ.கே.ரமேஷ

விகடன்

க்

கொழுப்பு கூடிருச்சா? உங்களுக்கான சூப்பர் உணவுகள்

IMG_9551396963209கொழுப்பு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், ஆரோக்கியமான உணவின் மூலம் அதனை குறைக்கலாம்.

* பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண்ணுதல், கொழுப்பின் அடர்த்தியை குறைக்கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. Continue reading

இதயத்தை பாதுகாக்கும் உணவு பட்டியல்

Posted Image
 

 

 

 

 

 

 

 

 

கருப்பு பீன்ஸ்: போலேட், ஆண்டியாக்ஸிடண்ட்கள், மெக்னீசியம் நிரம்பிய பிளாக் பீன்ஸ், இரத்த அழுத்தம், இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரை ,மற்றும்  கொழுப்பை  குறைக்கின்றது. பிளாக் பீன்ஸ் சாப்பிடுவதால் இதயம் பாதுகாக்கப்பட்டு பாதுகாப்பான ஒரு மண்டலத்தில் இதயத்தை வைத்திருக்கிறது.  நீங்கள் தகர டப்பாக்களில் அடைத்து தயார் நிலையில் வைக்கப்பட்ட பீன்ஸை உபயோகபடுத்தும் முன் அதனில் அடங்கியுள்ள நீர்ம திரவத்தை  அகற்றி சோடியத்தின் அளவை குறைவாக பயன்படுத்தலாம்.
Continue reading

பார்வை கூர்மைக்கு அப்ரிகாட்

1சூரியனின் தங்க முட்டை என்று கிரேக்க மொழியில் அழைக்கப்படும் ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் நிறைந்த பழம் அப்ரிகாட். பழத்துக்கு எந்த பாதிப்பும் இன்றி நீர்ச்சத்து மட்டும் வெளியேற்றப்படுகிறது.

சத்துக்கள்  பலன்கள்:  கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, சி உள்ளிட்ட சத்துக்கள் இதில் நிறைவாக உள்ளன. இதில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளதால், ரத்த அணுக்கள் உற்பத்திக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது. இது  ரத்த சோகையை வராமல் தடுக்கும்.  ரத்த சோகை வந்தவர்களுக்கு அருமருந்தாகவும் அப்ரிகாட் இருக்கிறது.  எனவே, பெண்கள் மாதவிலக்கு நேரத்தில் இந்தப் பழத்தை எடுத்துக்கொள்வது பெரிதும் பயனளிக்கும். குடலில் தேவையற்ற பொருட்கள் தங்குவதை வெளியேற்றி செரிமான மண்டலத்தைத் தூய்மைப்படுத்துகிறது.

வாழைத்தண்டு வசீகரம்!

1cவாழைத்தண்டினை சுற்றியிருக்கும் கடுமையான பாகத்தை எடுத்துவிட்டு, வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும். நூல் நூலாக வரும் நாரை  எடுத்துவிட்டு வட்டமாக நறுக்கியதை பொடியாக வெட்டி சமையலுக்கு உபயோகிக்கும் வரை, சிறிது தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் வெண்மை  மாறி கருக்காமல் இருக்கும். அதை நறுக்கி, நாரெடுத்து, சுத்தம் செய்தால் 8 சுவை உணவுகளைச் சட்டென செய்யலாம்.

Continue reading