ரூ300 செலவில் மூலிகைத் தோட்டம்

IMG_15033350132627“வெறும் ரூ.300 செலவில் வீட்டில் அமைக்கும் மூலிகைத் தோட்டத்தால் இந்த உடல் உபாதைகளுக்கு நாமே தீர்வு காணலாம் திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த அல்லிராணி.

மரக்கன்றுகளைப் பரிசாகத் தருவது பரவலாகிவரும் சூழ்நிலையில், தனக்குத் தெரிந்தவர்களுக்குப் பயன்மிக்க மூலிகைச் செடிகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த அல்லிராணி.

Continue reading

உங்கள் மொபைல் போன் பேட்டரியை நீங்கள் எவ்வாறு பராமரிக்கிறீர்கள்?

IMG_13246252702607நமது வாழ்வில் மொபைல் போன் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.

அதன் தேவைகளும், அதன் மூலம் பெறப்படும் பயன்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இருப்பினும் மொபைல் போன் என்றாலே அனைவருக்கும் ஒவ்வொரு தேவைகள் இருக்கும். Continue reading

தமிழர் இழந்து வரும் கருவிகள்

தமிழர்களின் வாழ்விலிருந்து பிரிக்கமுடியாத பல பொருட்கள் இருந்தன. உலக்கை, திருகை, சொளவு, உரல், அம்மி போன்ற பொருட்கள் அன்றாட வாழ்வின் அங்கமாக இருந்த காலங்களும் உண்டு. இன்று அவை பல வீடுகளில் காணப்படவில்லை. ஒரு காலகட்டத்தில் கணவன் வீட்டுக்கு வாழ வரும் புதுப்பெண் கொண்டு வரும் சீர் பொருட்களில் இவையெல்லாம் தவிர்க்க முடியாத அம்சங்களாக இருந்தன. இன்று அவற்றின் இடத்தை மிக்சி, கிரைண்டர் போன்றவை ஆக்கிரமித்துக் கொண்டன. இன்று நகரத்தில் மட்டுமல்ல சிறு நகரங்களில் வாழும் பெண்களுக்கு இவற்றை பயன்படுத்தத் தெரியாது. பலர் அதைப் பார்த்திருக்கக்கூட மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம். பாரம்பரியப் பொருட்களை மனிதர்கள் கையாண்டு வந்தனர். இன்று அவற்றை மின்சாரம் கையாளுகிறது. பண்டைய பொருட்கள் பருப்பு, சிறுதானியம் போன்றவற்றில் இருந்த சத்துக்களை தக்கவைத்துக் கொண்டன என்ற தமிழர் உணவியல் பண்பாட்டு ரகசியம் இன்றைய தலைமுறை தமிழர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இவைகளை இழந்ததால் நாம் எதை இழந்தோம்?
பாரம்பரிய கருவிகளை மறந்த பெண்கள் வீட்டு வேலைகளையும், பிள்ளைகளையும் வேலைக்காரியிடம் ஒப்படைத்து விட்டு காலையில் ஐந்து மணிக்கெல்லாம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை, கொழுப்பு ஆகியவற்றை குறைப்பதற்காக நடைப்பயிற்சி செய்வதற்கு வரிசை வரிசையாக செல்வதை இன்று காண்கிறோம். இவர்களைப் போன்றே ஆண்களும் நடைப்பயிற்சிக்கு செல்வதைக் காணலாம். மனைவி சிறிது கறிவேப்பிலை வாங்கி வாருங்கள் என்று சொன்னவுடன் தெருவின் மூலையில் இருக்கும் காய்கறிக் கடைக்கு சென்று அதை வாங்குவதற்கு மோட்டார் சைக்கிளை எடுக்கும் ஆண்கள் ஏராளம். ஒரு பேருந்து நிறுத்தத்தில் உள்ள பேரங்காடிக்கு செல்ல குடும்பமே ஓட்டோவில் செல்வதைக் காணலாம். நடந்து சென்றால் உடற்பயிற்சிதானே.
maபாட்டுப்பாடி மாவிடித்தல் ஒரு கலை
அன்றைய காலகட்டங்களில் கூட்டமாக பெண்கள் கூடி மா இடிப்பது வழக்கம். உரலில் ஊறிய அரிசியைக் கொட்டி, உலக்கையால் குத்தி மா இடிப்பார்கள். அவர்கள் மா இடிக்கும் காட்சி போவோர் வருவோரை ஈர்க்கும் தன்மையை உடையது. மூன்று நான்கு பேர் சேர்ந்து உலக்கை போடுவார்கள். அதில் ஒருவர் உலக்கை போடும் போது மற்றவர் உலக்கை போட்டு விடக்கூடாது. அதைத் தவிர்ப்பதற்காக அவர்கள் “மழை வருது மழை வருது நெல்லை வாருங்கோ, மூணுபடி அரிசி குத்தி முறுக்கு சுடுங்கோ”, “வீதியிலே கல் உரலாம், வீசி வீசி குத்துறாளாம்”, “தங்க அரிசி குத்தி தனிப்பாலம் சுத்தி வந்தேன்” போன்ற பாடல்களை பாடியபடி உலக்கை போடுவார்கள். உரல் இடிப்பது ஒரு கலையாகவே இருந்தது. உலக்கை போடுவதால் பெண்களுக்கு மார்பகம் பெருக்கும், நெஞ்சம் விரிவடையும், கைகள் வலுவேறும் என்பதும் அறிய வேண்டிய செய்தியாகும். உலக்கை போடும் போது பாடும் பாட்டுகள் உலக்கை விழும் வேகத்தை ஒழுங்குபடுத்துவதுடன், அவர்களுடைய உடல் அலுப்பையும் மறக்கடிக்கும். ஆடிப்பாடி வேலை செஞ்சால் அலுப்பிருக்காது என்ற தமிழ்ப்பாடலே இதற்குச் சான்று
காரைத்தீவில் உயிர்த்திருக்கும் உரல்
வரலாற்றுப் பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது வைகாசிப் பொங்கல். இங்கே அம்மனுக்கு படைக்கும் வைகாசிப் பொங்கலுக்காக பெண்கள் மடிப்பிச்சை மூலம் வீடு வீடாகச் சென்று நெல்லை சேகரிக்கிறார்கள். இப்படிச் சேகரித்த நெல்லை உரலில் இடித்து பிறகு புடைத்து பெறப்பட்ட அரிசியிலிருந்தே பொங்கலிட்டு அம்மனுக்குப் படைக்கிறார்கள் ஈழத் தமிழ்ப்பெண்கள். காரைத்தீவு அம்மனுக்கான வழிபாட்டு முறையாக உரல் இடித்தல் இன்றும் ஈழத்தில் உயிர்ப்புடன் இருக்கிறது.

இரண்டு கிலோ எடை கொண்ட மாங்கனி விளையும் அதிசயம்..

 

IMG_6964285191605மத்திய குஜராத்தில் விளையும் மாங்கனி இரண்டு கிலோ எடை கொண்டதாக இருப்பது விஞ்ஞானிகளையும், விவசாயிகளையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இது மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விளைந்ததல்ல மாறாக நாட்டின் ஒரு பகுதியில் இயற்கையாகவே இவை விளைந்து வருவது குறிப்பிடத்தக்கது. Continue reading