மொட்டைமாடி காய்கறி தோட்டம்

 

ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் மொட்டைமாடி காய்கறி தோட்டம்

IMG_15033350132627ஏக்கர் கணக்கில் நிலம், பாசனத்துக்குக் கிணறு, கால்நடைகள்… என இருந்தால் மட்டும்தான், விவசாயம் சாத்தியம்’ என்றுதான் பலரும் நினைக்கிறோம்.

அதனால்தான் ஆரம்பத்திலிருந்தே நகரத்தில் வாழ்பவர்கள்; கிராமங்களில் இருந்து நகர வாழ்க்கைக்கு நகர்ந்தவர்கள்; கிராமத்திலேயே நகரத்தைப் போன்ற வாழ்க்கையைப் பழகிக் கொண்டவர்கள் என்று பலருக்கும் விவசாயம் ஒரு கனவாகவே கடந்து விடுகிறது. ஆனாலும், மொட்டை மாடியையே தோட்டமாக்கி விவசாயக் கனவை நனவாக்கிக் கொள்பவர்களும் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான், ஷிஜி. Continue reading

நாவறட்சி, உடல் வெப்பம் தணிக்கும் அத்திக்காய்

 

அத்தியின் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும். சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீலங்கும். இரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், கீல்வாத நோய்கள், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும்.

அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும். அத்திப்பாலை மூட்டு வலிகளுக்குப் பற்று போட விரைவில் வலி தீரும்.

Continue reading

ஈ.என்.டி. தொல்லை… இனி எப்போதும் இல்லை! மருத்துவ டிப்ஸ்!!

 “ரெண்டு நாளா காது வலியா இருக்கு, எச்சில் கூட முழுங்க முடியலைப்பா… இருமலா இருக்கு… ஏதாவது மாத்திரை, சிரப் இருந்தா கொடு…” இப்படி சுய மருத்துவம் செய்துகொள்பவர்களே அதிகம்.
கண்ணில் பார்வைக் குறைபாடு, மூட்டில் வலி என்றால் உடனடியாக மருத்துவரைப் பார்த்து பரிசோதனை செய்து, மருந்துகளை சாப்பிடுகிறோம். ஆனால், பேசுவதற்கும், ஒலியைக் கேட்பதற்கும், காற்றை சுவாசிப்பதற்கும், உண்ட உணவை விழுங்குவதற்கும் உதவிபுரியும் காது-மூக்கு-தொண்டையில் பிரச்னை ஏற்பட்டால்… அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியமாக விட்டுவிடுகிறோம்.
“ஐம்புலன்களில், முக்கியமான மூன்று புலன்கள் காது – மூக்கு – தொண்டையில் உள்ளன. பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது, உடலின் முக்கியப்பகுதிகளான காது-மூக்கு-தொண்டைதான். இவற்றை ஒழுங்காகக் கவனித்தாலே… உடலின் முக்கியமான பிரச்னைகள் பலவற்றைத் தவிர்க்கலாம்” என்கிற காது மூக்கு தொண்டை மருத்துவர் குமரேசன், அவற்றில் ஏற்படும் பிரச்னைகள், அதற்கான சிகிச்சை முறைகளை இங்கே அடுக்குகிறார். மேலும், மூலிகை மருத்துவர் ஜீவா சேகர் வழங்கியுள்ள இயற்கை மற்றும் மூலிகை வைத்திய முறைகளும், இயற்கைப் ப்ரியன் ரத்தின சக்திவேல் தந்துள்ள பராமரிப்புக் குறிப்புகளும் உங்கள் ஆரோக்கியத்துக்கான அச்சாரம்!
Continue reading

குஷியான மகசூலுக்கு குலசை கத்திரிக்காய்!

 5 சென்ட்… 8 மாதங்கள்… 47 ஆயிரம் ரூபாய்!

குஷியான மகசூலுக்கு குலசை கத்திரிக்காய்!
 1பாரம்பரிய மகசூல்
‘நித்தம் நித்தம் நெல்லுச்சோறு… நெய் மணக்கும் கத்திரிக்கா… நேத்து வெச்ச மீன்கொழம்பு என்னை இழுக்குதய்யா’… ‘முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் மனசுக்குள் கத்திரிக்காய் மணக்காமல் இருக்காது. அசைவம், சைவம் என்று இரண்டு உணவுகளிலுமே இடம்பெறும் காய்களில் கத்திரிக்காய்க்கும் முக்கியமான இடம் உண்டே! வெள்ளைக்கத்திரி, பூனைக்கத்திரி, இலவம்பாடி முள்ளு கத்திரி, மணப்பாறை கத்திரி… என பிரத்யேகமான சுவைகளில் நாட்டுக் கத்திரி ரகங்கள் பல உள்ளன. அந்த வரிசையில்… திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரபலமான நாட்டு ரகம்தான், குலசை கத்திரி.
திருச்செந்தூரில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள குலசேகரன்பட்டினத்தின் சுருக்கம்தான் குலசை. இப்பகுதியில் விளைவதால், இதற்கு குலசை கத்திரி என்று பெயர் வந்துவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜோராக விளைந்து கொண்டிருந்த குலசை கத்திரி, தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. ஒரு காலத்தில் ஊர் முழுவதும் விளைவிக்கப்பட்ட இந்த கத்திரி, இப்போது விரல்விட்டு எண்ணும் அளவிலான விவசாயிகளால் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. இவர்களில் ஒருவரான குலசேகரன்பட்டினம், செல்வராஜை, ‘பாரம்பரிய விதைகள் சிறப்பிதழு’க்காகச் சந்தித்தோம்.

இலுப்பைப் பூ சாப்பிடுங்க ஆண்மை அதிகரிக்கும்..!!!

இயற்கையின் படைப்பில் மலர்கள் மகரந்த சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டவை. இந்த மலர்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. பூக்கள், காயாகி, கனியாகி அதனை மக்கள் உண்பதற்கு இயற்கை கொடுக்கிறது. கனியாக மாறும் வரை காத்திருக்காமல் பூக்களை சாப்பிட்டாலே அதற்குறிய அத்தனை குணங்களும் கிடைக்கும்.
காதுகளைக் காக்கும் மகிழம்
மகிழம் பூவின் நறுமணம் மணம் மயக்கும். இது மற்றப் பூக்களைவிட சற்றே வித்தியாசமானது. காதுகளில் எந்த தொல்லை ஏற்பட்டாலும் மகிழம் பூவை எண்ணெய் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து சற்று நேரம் குளிர வைத்து அதன் பின் குளிர்ந்த நீரில் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

காற்றிலிருந்து குடிநீர் உற்பத்தி செய்யும் புதிய இயந்திரம்

 

IMG_4659087898070இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், காற்றிலிருந்து குடிநீர் உற்பத்தி செய்யும் புதிய இயந்திரம் ஒன்று  தயாரிக்கப்பட்டுள்ளது. ‘ஜீனியஸ் ஹீட் எக்ஸ்சேஞ்சர்’ என்ற இந்த இயந்திரத்தை ‘வாட்டர்-ஜென்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இதன்மூலம் தற்போது ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.15 செலவாகும் நிலையில், வெறும் ரூ.1.50 காசுகளில் ஒரு லிட்டர் சுத்தமான குடிநீரை உற்பத்தி செய்ய முடியும். இந்த எந்திரம் இயங்கும் செயல்முறை பற்றி சி.என்.என். தொலைக்காட்சிக்கு விளக்கிய நிறுவனத்தின் சி.இ.ஓ. கோகவி கூறுகையில், ”இயந்திரத்திலுள்ள ‘ஜீனியஸ் ஹீட் எக்ஸ்சேஞ்சர்’ வழியாக காற்று செலுத்தப்படுகிறது. அப்போது சுத்தமான காற்றில் இருக்கும் ஈரப்பதம் அகற்றப்படுகிறது. பிறகு நீராவியானது திரவ வடிவமாக மாறி காற்றிலிருந்து நீரானது பிரிகிறது. அந்த நீர் இயந்திரத்திற்குள் இருக்கும் சிறிய டேங்க் மூலமாக சேகரிக்கப்படுகிறது. அதன்பிறகு, இறுதியாக சேகரிக்கப்பட்ட நீர் ‘எக்ஸ்டென்சிவ் வாட்டர் பில்ட்ரேஷன் சிஸ்டம்’ வழியாக ரசாயனம் மற்றும் நுண்ணுயிர் கிருமிகள் வடிகட்டப்பட்டு சுத்திகரிக்கப்படுகின்றது. வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை பொறுத்து இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு நாளைக்கு 250 முதல் 800 லிட்டர்கள் வரை குடிநீரை உற்பத்தி செய்ய முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.  Continue reading

ஹஜ் உம்ரா விளக்கம்_9

 

#பிறருக்காக_ஹஜ்_செய்தல்

IMG_1411377046383ஒவ்வொருவரும் தத்தமது செயலுக்குப் பொறுப்பாளியாவார். ஒருவரது சுமையை இன்னொருவர் சுமக்க முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை என்றாலும் ஒரு சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஒருவர் இன்னொருவருக்காக ஹஜ் செய்ய ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

‘ஹஸ்அம்’ கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை ஒட்டகையின் முதுகில் அமர இயலாத முதிய வயதுடையவராக இருக்கும்போது ஹஜ் எனும் அல்லாஹ்வின் கடமை ஏற்பட்டு விட்டது” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவருக்காக நீ ஹஜ் செய்” என்று அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். Continue reading