இலுப்பைப் பூ சாப்பிடுங்க ஆண்மை அதிகரிக்கும்..!!!

இயற்கையின் படைப்பில் மலர்கள் மகரந்த சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டவை. இந்த மலர்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. பூக்கள், காயாகி, கனியாகி அதனை மக்கள் உண்பதற்கு இயற்கை கொடுக்கிறது. கனியாக மாறும் வரை காத்திருக்காமல் பூக்களை சாப்பிட்டாலே அதற்குறிய அத்தனை குணங்களும் கிடைக்கும்.
காதுகளைக் காக்கும் மகிழம்
மகிழம் பூவின் நறுமணம் மணம் மயக்கும். இது மற்றப் பூக்களைவிட சற்றே வித்தியாசமானது. காதுகளில் எந்த தொல்லை ஏற்பட்டாலும் மகிழம் பூவை எண்ணெய் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து சற்று நேரம் குளிர வைத்து அதன் பின் குளிர்ந்த நீரில் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தலைவலி நீங்கும்
அகத்திக்கு சிறந்த மருத்துவ குணங்கள் இருப்பது போல அகத்திப் பூவிற்கும் உண்டு. அகத்திக்கீரை, நாம் உண்ணும் உணவு நன்றாகக் ஜீரணிக் உதவுகிறது. நீர்க்கோவைக் காரணமாகத் தோன்றும் தும்மல் போன்று நோய்களுக்கு அகத்திக் கீரையின் சாற்றையும், அகத்திப் பூவின் சாற்றையும் சம அளவு கலந்து மூக்கில் இரண்டொரு சொட்டு விட்டுவந்தால் நோய் நீங்கும். பொதுவாக நீர்கோவைக்கு அகத்தி இலைச்சாற்றுடன் சமஅளவு தேன்கலந்து உள்ளுக்குச் சாப்பீட நல்ல குணம் கிடைக்கும். அடிபட்டு கன்றிப்போன வீக்கங்களுக்கு அகத்திக் கீரையை அரைத்துச் சுடவைத்து பற்றாகப் போட்டால் சிறந்த குணம் கிடைக்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி, அனல் ஆவிபிடிக்கக் கடுமையான தலைவலி நீங்கும்.
தொட்டாச்சிணுங்கி பூக்கள்
தொட்டாச் சிணுங்கி என்ற முள் கொடியில் தொட்டால் சிணுங்கிப் பூ கிடைக்கும். தொட்டவுடன் இந்தக் கொடியின் இலைகள் சுருங்கிவிடும்.தொட்டாச்சிணுங்கி வேர் என்பவற்றிற்கு புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு என்பது சித்த மருத்துவர்களது கூற்றாகும். மனிதர்களுக்கு மட்டுமன்றி கால்நடைகளுக்கும் ஏற்படுகின்ற பல நோய்கள் இப்பூவினால் குணமாகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆண்மை அதிகரிக்கும்
இலுப்பை மரத்திலிருந்து கிடைக்கும் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.மெலிந்த உடலுள்ளவர்கள் இலுப்பை பூக்களை பசும்பால் விட்டு அரைத்து காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்ந்து பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுள் உடம்பு தேறும். இலுப்பை பூவை ஒத்தடம் கொடுத்தால் உடலில் உள்ள வீக்கம் குறையும்.
ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பசும் பாலுடன் இலுப்பைப் பூ கஷாயத்தைச் சேர்த்து பருகினால் ஆண்மைக் குறைபாடு குணம் அடையும். இலுப்பை எண்ணெய்யை உடலின் உறுப்புக்கள் சிலவற்றில் தேய்த்துக் கொள்வது முண்டு. சிலர் அவ்வப்போது உணவிற்காகவும் பயன்படுத்துகின்றனர்.
சளி நீங்கும்
தூதுவளைப் பூ மிகச் சிறந்த மருத்துவ குணம் நிறைந்தது. இந்தப் பூ அதிக அளவில் கிடைப்பது இல்லை. கிடைக்கும் பூவை வதக்கி துவையலாக அரைத்துச் சாப்பிட்டால் சளி, மூக்கடைப்பு குணம் அடையும்.தூதுவளைப் பூவைப் போன்று தூதுவளை இலையையும் துவையல் செய்து சாப்பிட்டால் நல்ல பயன் ஏற்படும். தொண்டை, வயிறு இவைகளில் ஏற்படும் புண்களுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s