அனீமியா (ரத்தசோகை) வகைகள்

உலகெங்கும், குறிப்பாக நம் இந்தியாவை மிக வாட்டும் ஒரு நோய் அனீமியா என அழைக்கப்படும் `ரத்தசோகை’. இந்த சோகை என்னும் சொல்லியே ஒரு சோகம் ஒளிந்திருப்பதை கவனிக்கவும். வளம் குறைந்த நலிந்த சிவப்பு அணுக்கள் தேவையான அளவு பிராண வாயுவை திசுக்களுக்கு கொண்டு செல்ல முடியாத ஒரு சோகமே அனீமியா எனப்படும்.
 
இதன் அறிகுறிகள் என்னென்ன?
 
தளர்ச்சி, தோல் வெளுத்துப்போதல், இதய துடிப்பு அதிகமாதல், அடிக்கடி மூச்சு வாங்குதல், தலை சுற்றல், தலைவலி, கை,கால் ஜில்லிட்டுப் போதல். நோயின் கடுமை யைப் பொருத்து மேற்கூறிய அறிகுறி களின் தாக்கம் அமையும். மேற்கூறிய வற்றுள் ஏதேனும், தொடர்ந்து இருந்து வந்தால் டாக்டரை உடனே ஆலோ சிப்பது மிகவும் முக்கியம்.

 
ஒரு எளிய ரத்தப் பரிசோதனை மூலம் இதை உடனே கண்டு பிடி த்து சிகிச்சை அளிக்க முடியும். ரத்தத்தில் இருக்கும் ப்ளாஸ்மா, சிவப்பு, வெள்ளை அணுக்கள், சத்துப் பொ ருள்கள், வைட்டமின் கள் பற்றி பார்த்தோம். சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையான அல்லது ஹீமோ க்ளோபினின் அளவோ குறைவதால் அனீமியா ஏற்படுகி றது.
 
இவை உற்பத்தியாகும் இடம் எலும்பு மஜ்ஜை. வலு குறைந்த சிவப்பணு க்கள் மரிக்கையில், மேலும் மேலும் இதுபோன்ற செல்களையே உடலின் எலும்பு மஜ்ஜை உற்பத்தி செய்யும் நிலை ஏற்பட்டு, நோய் கடுமையாகிறது. (உரமிடாத நிலத் தில் தொடர்ந்து பயிரிடும் போது, அடு த்து வரும் பயிர்கள் வளம் குறைந்து விளைவது போல!) இவைகளால் அதிக அளவில் பிராணவாயுவைச் சுமக்க முடியாததால் திசுக்கள் வலு விழந்து சோர்வு ஏற்படுகிறது. இப் போது அனீமியாவின் வகைகளைப் பார்ப்போம்.
 
1. இரும்புச்சத்து குறைவால் வரும் ரத்த சோகை:
ஐந்தில் ஒருவர் என்ற கணக்கில் பெண்களை வாட்டுவது இது. எலும்பு மஜ்ஜை ஹீமோக்ளோ பினை உற்பத்தி செய்ய இரும்புச் சத்து மிகவும் தேவையான ஒன்று. சிவப்பு அணுக்கள் இறக்கும் போது (ஒரு ஆரோக்கியமான சிவப்பணு சுமார் 90-120 நாட்களு க்கு உயிர் வாழும், நம் உடம்பில்) அதில் இரு க்கும் இரும்பு சத்து மீண்டும் புதிய செயல்களுக்கு பயன்படுகிறது.
 
மாதவிலக்கு அதிகமாகப் போகும் பெண்கள், குடல் புண் எனச் சொல்லப்படும் அல்ஸர் நோய், குடல் புற்றுநோய் போன்ற நோய்க ளால் ரத்தம் உடலில் இருந்து வீணாகும் பொது இந்த வகை ரத்த சோகை ஏற்படும். இரும்புசத்து குறைந்த உணவாலும் ரத்த சோகை ஏற்படும்.  கர்பமுற்ற காலத்தில் வள ரும் கருவும் தாயின் ரத்தத்தில் இரு ந்து இரும்புச்சத்தை எடுத்து கொள் வதாலும் இது வரும்.
 
2. வைட்டமின் குறைவால் வரும் அனீமியா: 
போலேட் பி.12 வைட்டமின்கள் வலுவான சிவப்பு அணுக்கள் உரு வாகத் தேவையா னவை. உணவில் மூலமே இவை நமக்கு கிடை க்கின்றன. சிறுகுடலில் உறிஞ்சப் படும் இந்த வைட்டமின்கள், குடல் நோ யால் அவ்வாறு நிகழாமல், இவ்வகை அனீமியா வருகி றது.
 
3. நீண்டகால நோய்களால் வரும் அனீமியா:
புற்றுநோய் ருமடாய்ட் அர்த்ரைடிஸ் என் னும் எலும்பு முடக்கு நோய், க்ரோன்ஸ் நோய் எனப்படும் குடல் கணக்கம், காச நோய் இன்னும் பல நீண்டகால நோய்கள், சிவப்பு அணுக்கள் உற்பத் தியை பாதிக்கி ன்றன. இந்த நோய்களுக்காக கொடுக்கப் படும் மருந்துகளின் விரீயத்தாலும் இது நிகழும்.
 
4. ஏப்ளாஸ்டிக் அனீமியா:
எலும்பு மஜ்ஜை தன் சக்தியை இழப்பதால் ஏற்படும் இவ்வகை சோகை உயிருக்கே உலை வகைக் கும் மிகக்கொடிய நோய்! இது ஒரு வகையான ஆட்டோ இம்யூன் நோய் அதாவது உடலே தனக்கு தானே ஒரு எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ளும். சில வகை யான மருந்து வகைகளும் இதனை உண்டாக் கலாம். முக்கி யமாக புற்றுநோய் மருந்துகள். இது எல்லாவகையான ரத்தசெல் களையும் பாதிக்கும்.
 
5. எலும்பு மஜ்ஜை நோயால் வரும் அனீமியா:
லுகீமியா, மைலோ டிஸ்ப்ளே மல்டி யில் மைலோமா லிம்போமா போன்ற நோய்கள் எலும்பு மஜ்ஜையைத் தாக்கி ரத்த உற்பத்தியை தடுக்கும். இவையெ ல் லாம் புற்றுநோய் வகையைச் சார்ந்த வை. நம் திரைப்படங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ப்ளட் கேன்ஸர் என்பது இதுதான்.
 
6. ஹிமோலைக் அனீமியா:
எலும்பு மஜ்ஜை உற்பத்தி செய்யும் அள வைவிட அதிக அளவில் சிவப்பு அணுக் கள் மரிக்கும்போது, தேவையான வேகத் தில் இவை களை அனுப்ப முடியாமல் போகும் நிகழ்வுக்கு இப்பெயர். ஆட்டோ இம்ம்யூன் நோய்களும் பல மருந்து வகை களும் இதற்கு காரணங்கள். இந்நிலை யில் உடல் மஞ்சள் நிறமாக மாறி மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.
 
7. சிக்கில் செல் அனீமியா:
ஹீமோக்ளோபினில் ஏற்படும் ஒரு மாறுதலால் வரும் இந்நோய் ஆப் பிரிக்க, அரேபிய இன மக்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. வளைந்த அரிவாள் வடிவில் சிவ ப்பு அணுக்கள் உருமாறி, அதிகம் பிராணவாயுவை எடுத்து செல்ல முடியாமல் போய் உடலைப் பாதி க்கும். சில சமயம் உயிருக்கே ஆபத்தாயும் முடியும்.
 
இன்னும் பல வகையான அனீமியாக்கள் இருக்கின்றன. இவை மிக வும் அரிதானதால் சொல்லாமல் விடுகிறேன் என்கிறார் டாக்டர் எம்.எஸ்.திவ்யா.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s