ஹஜ் உம்ரா விளக்கம்_10

IMG_2180406515916உங்களுடன் எடுத்தச் செல்ல வேண்டிய சில முக்கியமான பொருள்கள்

1. கறுப்புக் கண்ணாடி (Sun Glass) மற்றும் குடை – வெயிலை சமாளிக்க

2. கெட்டில் (Electric Kettle) – டீ, பால் மற்றும் வெந்நீர் போடுவதற்கு தேவைப்படும். Stainless Steel Kettle மிகவும் உகந்தது.

3. உதட்டிற்க்கு போடும் தைலம் (Lip Balm, Vaseline) – வெயில் மற்றும் பனியினால் ஏற்படும் உதடு வெடிப்பு மற்றும் உதடு காய்ந்து போவதிலிருந்து காக்கும். Vaseline காலில் எற்படும் வெடிப்புகளுக்கும் மற்றும் உதட்டிற்க்கும் மிகவும் பயனுள்ளாதாக இருக்கும்.. 

4. தேவையான மாத்திரை மருந்துகள் – காய்ச்சல், தலைவலி, சளி, இருமல், வயிற்றோட்டம்.

5. சக்கர வண்டி (Wheel Chair) – நடக்க முடியாதவர்கள் சக்கர வண்டி எடுத்துச் செல்லலாம். சக்கர வண்டி “ஸயி” மற்றும் “தவாஃப்” செய்யும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சக்கர வண்டி மற்றும் Electric Wheel Chair யை இலவசமாகவும் ஹரத்தில் பெற்றுக் கொள்ளலாம். Electric Wheel Chair யை சொந்தமாக யாருடைய உதவியின்றி நீங்களே இயக்கி கொள்ளலாம்.

6. கைத் தொலைபேசி (Cell Phone) – வழி தவறிவிட்டால் உதவியாக இருக்கும். SIM Cardஐ ஜித்தா அல்லது மக்காவில் வாங்கி கொள்ளலாம். தயவுசெய்து திரைப்பட பாடல்களை RingTone வைத்து இருந்தால் மாற்றிக்கொள்ளவும். ஒவ்வொரு முறையும் ஹரத்தில் நுழையும் முன்பு ஞாபகத்துடன்  Ring Tone ஐ Silent Mode அல்லது Vibratator Modeக்கு மாற்றிகொள்ளவும்.

7. Sweater, Sox, Monkey Cap, Ear Cap போன்றவை குளிரை சமாளிக்க உதவும்.

8. Scissiors, Nail Cutter, Shaving set – இஹ்ராம் கட்டுவதற்க்கு முன் உடலில் உள்ள தேவையற்ற முடிகளை, நகங்களை நீக்க.

IMG_2188445805045

குறிப்புகள்

1. ஹரத்தில் உள்ளே எல்லா இடங்களிலும் ஸம்ஸம் தண்ணீர் கேன்கள் இருக்கும். சில கேன்கள் குளிரூட்டப்பட்டதாகவும் மற்றும் குளிரூட்டப்படாததாகவும் (NOT COLD) என்று எழுதி) இருக்கும்.

2. ஹரத்தில் நிறைய வாயில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வாயிலுக்கும் வாயில் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எந்த வாயில் வழியாக உள்ளே நுழைந்தோம் என்று ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். வழி தவறிவிட்டால் உதவியாக இருக்கும்.

ஹரத்திற்க்கு உள்ளே இருந்து வெளியே செல்வதற்கு வாயில்களின் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

3. ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்க்கு பஸ்ஸில் அல்லது டாக்ஸியில் செல்வதாக இருந்தால் மலம் ஜலம் கழித்து ஒழு செய்துவிட்டு செல்வது நல்லது. கூட்டம் மற்றும் டிராபிக் அதிகமாக இருப்பதால், சில நேரங்களில் ஒரு மணிநேரம் அல்லது அதற்கு அதிகாம வாகனத்திலேயே இருக்கும்படி நேரலாம்.

4. அதிக தூரம் நடக்கவேண்டிய சூழ்நிலைகள் வரும். குளுகோஸ் (e.g. Glucon-D) எடுத்து சென்றால் அதிகம் நடக்கவேண்டிய நேரங்களில் சோர்வு ஏற்படும்போது உதவியாக இருக்கும்.

5. பணம், டிக்கெட், மருந்துகள் ஆகியவற்றை கையில் கொண்டு போகும் பெட்டியில் வைக்கவும். ஏனென்றால் லக்கேஜூகள் வெவ்வேறு வண்டிகளில் ஏற்றப்படுவதால் நம்முடைய அவசர தேவைக்கு அவை கிடைக்காமல் தாமதம் ஏற்படும்.

6. வங்கிகளில் கொடுக்கபடும் Debit Card வைத்து இருப்பவர்கள் சவுதி அரேபியாவில் உள்ள ATM மூலம் சவுதி ரியால் பணம் எடுத்து கொள்ளலாம்.

7. சாலைகளின் போக்குவரத்து முற்றிலும் வித்தியாசமானது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது சாலையை கடக்கும் போது இடதுபக்கத்திலிருந்து வாகனங்கள் வருகின்றனவா என்பதை கவனித்து செல்லவேண்டும். இந்தியாவில் நாம் வலதுபக்கத்தை கவனிக்கின்றோம்.

8. உங்களுடைய பொருள்களை அடையாளமிட்டு கொள்ளுங்கள்.

9. உங்களுடன் தங்குபவர்களிடம் உங்களுடைய தீராத நோய்களை (எ.கா. இனிப்பு வியாதி Diabetes) பற்றி விபரங்கள் சொல்லி கொள்ளுங்கள். ஆபத்தில் உதவியாக இருக்கும்.

10. மினாவில் அனைத்து கூடாரங்களும் ஒரே வடிவத்தில் இருப்பதால் ஹாஜிகள் தங்கள் கூடாரங்களிலிருந்து வழி தவறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. மினாவில் ஒவ்வொரு பகுதியிலும் கூடாரங்களில் எண்கள் எழுதப்பட்டிருக்கும். எனவே ஹாஜிகள் ஒவ்வொருவரும் தங்கள் கூடாரங்களின் எண்ணையும் அந்த பகுதியின் எண்களையும் அறிந்திருப்பது அவசியமாகும்.

11. ஒளு முறிந்தால் கூட்ட நெரிசலில் திரும்பவும் ஒளு செய்ய போக முடியாது சூழ்நிலை ஏற்படும் பொழுது தயம்மும் செய்து கொள்ளுங்கள்.

முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) – நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்; தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை – ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான். அல்குர்ஆன் 5:6

12. ஹரத்தில் கிட்டதட்ட ஒவ்வொரு வக்து தொழுகைக்குபின்னும் ஜனாஸா தொழுகை நடக்கும். ஆகையால்  ஜனாஸா தொழுகை எப்படி தொழுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஜனாஸா தொழுகை தொழும் முறை

ஜனாஸா தொழுகைக்கு நான்கு தக்பீர்கள் கூற வேண்டும். முதல் தக்பீர் கூறிய பிறகு ஸூரத்துல் ஃபாத்திஹா ஓத வேண்டும். இரண்டாவது தக்பீரில் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும். மூன்றாவது நான்காவது தக்பீரில் மய்யித்திற்காக துஆ செய்ய வேண்டும். பிறகு இரண்டு புறமும் ஸலாம் கூற வேண்டும்.

முதல் தக்பீருக்கு பின்

ஜனாஸா தொழுகை முதல் தக்பீருக்குப் பின் ஸூரத்துல் ஃபாத்திஹாவை (அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்…..) ஓத வேண்டும்.

இரண்டாவது தக்பீருக்கு பின்

நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும்.

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம, வஆலா இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பராக்த அலா இப்ராஹீம, வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத். (புகாரி)

மூன்றாவது நான்காவது தக்பீருக்கு பின்

மய்யித்திற்காக வேண்டி தூய மனதுடன் பிரார்தனை செய்யவேண்டும்

அல்லஹும்ம ஃபிர்லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரீம் நஸுலஹு வவஸ்ஸிஃ மத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைதஸ் ஸவ்பல் அப்யழ மினத்தனஸ் வ அப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்ஹில்ஹுல் ஜன்னத வஅயித்ஹு மின் அதாபில் கப்ரி வமின் அதாபின்னார்  (முஸ்லிம், நஸயி)

அல்லஹும்மஃபிர் லிஹய்யினா, வமய்யிதினா  வஷாஹிதினா, வகாயிபினா, வஸகீரினா, வகபீரினா, வதகரினா, வஉன்ஸானா,  அல்லஹும்ம மன் அஹ்யைதஹு மின்னா ஃபஅஹ்யிஹி அலல் இஸ்லாம். வமன் தவஃபைதஹு மின்னா ஃபதவஃப்பஹு அலல் ஈமான்.  (நஸயி, அஹ்மத்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s