சுய தொழில்கள் -நாப்கின் தயாரிப்பு

IMG_10546341703146பீரியட் நாட்களில் பயன்படுத்தும் நாப்கின்கள் தரமானதாகவும், விலை மலிவாவும் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். எனவே இது போன்று தரமான நாப்கின்கள் தயாரிக்கும் தொழிலை கற்றுக் கொண்டால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை வடவள்ளியில் நாப்கின் தயாரிப்பு தொழில் செய்து வரும் ஸ்ரீமகாலட்சுமி இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் ராஜேஸ்வரி(61). ராசி என்ற பெயரில் நாப்கின் தயாரித்து வரும் அவர் கூறியதாவது: கென்யாவில் ஒரு பள்ளியில் நான் கணித ஆசிரியராகவும், கணவர் பூபதி ஆங்கில ஆசிரியராகவும் 12 ஆண்டாக பணிபுரிந்துள்ளோம். மகன் அமெரிக்காவில் இன்ஜினியர்.

திருமணமான மகள், பாங்காக்கில் வேலை பார்க்கிகிறார். எனது ஓய்வுக்காலத்தை சமூக நோக்கில் பணிபுரிய திட்டமிட்டேன். குடிசைத்தொழில் ஏதாவது செய்யலாம் என நினைத்தேன். கோவையில் முருகானந்தம் என்பவர், பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகை யில் குறைந்த செலவில் நாப்கின் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்திருந்தார். இதற்கு, மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்தது. அவரது பார்முலாபடி தொழில் செய்ய மத்திய, மாநில
அரசுகள் ஒத்துழைப்பு அளித்து வருவதை அறிந்தேன்.

நாப்கின் தயாரிக்கும் தொழில் செய்யலாம் என முடிவெடுத்தேன். கட்டமைப்பு இயந்திரங்கள் மற்றும் 3 மாதத்துக்கு தேவையான மூலப்பொருட்களை முருகா னந்தம் விலைக்கு வழங்கினார். நாப்கின் தயாரிக்க பயிற்சியும் கொடுத்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு மாடியில் உள்ள அறையில் தொழிலை துவக்கி னேன். இப்போது தினசரி ஆயிரம் நாப்கின்கள் தயாரித்து வருகிறேன். நாங்கள் தயாரிக்கும் நாப்கின்களை தீயிட்டு எரித்தால் சாம்பலாகிவிடும். மண்ணில் போட்டால் மக்கிவிடும். இவை சுற்றுச்சூழலுக்கும், பயன்படுத்துபவர்களுக்கும் எந்தவித கேட்டையும் விளைவிக்காதவை.

கோவையில் முருகானந்தம் தவிர நான் மட்டுமே இத்தொழிலை செய்து வருகிறேன். அரசு மற்றும் தனியார் மகளிர் கல்லூரி ஸ்டோர், டிபார்ட்மென்டல் ஸ்டோர், தன்னார்வ தொண்டு நிறுவனங் கள், சமூக சேவை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும், வட மாநிலங்களுக்கும் விற்பனை செய்கிறேன். நாப்கின் தயாரிப்பு பயிற்சியும் அளித்து வருகிறேன். ஒரே நாளில் கற்றுக் கொள்ளலாம்.

தயாரிக்கும் முறை

வெள்ளை நிற மரக்கூழை, 8 கிராம், 10 கிராம், 12 கிராம் என நாப்கின் தேவைப்படும் எடை அளவுகளில் தனித்தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். நீர் கசியாத பேப்பரின் மேல் தடவிய பசையின் மீது மரக்கூழை வைத்து இறுக்க வேண்டும். அதை மெல்லிய துணியில் சுற்றி, மூட வேண்டும். நீர் கசியாத பேப் பர் அமைந்த

அடிப்பாகத்தின் மேல் இருபுறமும் லேசான பசை தடவிய பேப்பரை ஒட்டினால் நாப்கின் தயார். பேன்டீஸ் அணியாதவர்களுக்கு பெல்டுடன் கூடிய நாப்கின் தயாரிக்க, பசை

தடவிய பேப்பரை ஒட்டாமல், சன்னமான ரிப்பனில் பெல்ட் பொருத்த வேண்டும். பிரசவமான பெண்களுக்கு அதிக கிராம் கொண்ட திடமான நாப்கின் தயாரிக்க வேண்டும். அதில் பெல்ட் பொருத்த வேண்டும்.

முதலீடும் லாபமும்

கட்டமைப்பு இயந்திரங்களுக்கு ரூ1.5 லட்சம். ஒரு மாத உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள் மற்றும் உற்பத்திக்கூலி (4 தொழிலாளர்கள்), இட வாடகை, மின்சாரம் உள்பட ரூ50 ஆயிரம். மாதம் 25 நாளில் 25 ஆயிரம் நாப்கின்கள் தயாரிக்கலாம். ஒரு நாப்கின் தயாரிக்க அதிகபட்ச செலவு ரூ2. மொத்தமாக விற் பனை செய்யும்போது குறைந்தபட்சம் ஒரு நாப்கினுக்கு 50 காசு முதல் அதிகபட்சம் ரூ1.50 என குறைந்தபட்சம் ரூ12,500 முதல் அதிகபட்சம் ரூ37,500 வரை லாபம் கிடைக்கும். மொத்த ஆர்டர் கிடைத்தால் லாபம் இன்னும் அதிகமாகும்.சுகாதார விழிப்புணர்வு காரணமாக நாப்கின் பயன்பாடு அதிகரித்து வருவதால், இத்தொழிலுக்கு சந்தை வாய்ப்பு அதிகரித்து வருகிறது. அக்கம்பக்கத்தில் உள் ளவர்களுக்கு வாடிக்கையாக விற்க தொடங்கினால் அதிக லாபம் கிடைக்கும்.

நிரந்தர வருவாய்

‘நாட்டில் பெண்கள் சுகாதார நலத்தை மேம்படுத்த மத்திய அரசு கிராமப்புற பெண்களுக்கு இலவசமாக நாப்கின் வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவை யான நாப்கின்களை தனியார் மூலம் தயாரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் பல்வேறு தொழில்முனைவோர் மூலம் நாப்கின்களை தயாரிக்க ஆலோசித்து வருகிறது.
இத்தொழிலில் ஈடுபட உள்ளவர்களுக்கு நிரந்தர வர்த்தக வாய்ப்பு
உள்ளதால், இத்தொழில் வரும் காலத்தில் செழிக்கும் வாய்ப்புள்ளது’ என்கிறார் ராஜேஸ்வரி.

கட்டமைப்பு தேவைகள்

நாப்கினுக்கு தேவையான மரக்கூழை பஞ்சு போல் ஆக்கும் டீபைப்ரேஷன் மெஷின்.

நாப்கினில் இடம்பெறும் மரக்கூழின் அளவுகளை எடைபோட எலக்ட்ரானிக் எடை மெஷின்.

தேவைப்படும் நீள, அகலத்தை அமைக்க கோர் டை என்ற உலோக சட்டங்கள் 15.

நீர் கசியாத பேப்பரின் மேல் மரக்கூழ் ஒட்டவும், இறுக்கம் கொடுக்கவும் தேவையான கோர் ஃபார்மிங் மெஷின்.

தயாரான நாப்கினை சுத்தம் செய்ய அல்ட்ரா வயலட் எலக்ட்ரிக் டிரே. பேக்கிங் செய்ய சீலிங் மெஷின்.

நாங்களும் தொழிலதிபர்தான் நாப்கின் தயாரிப்பில் கலக்கும் சகோதரி

1c

சுய உதவிக்குழு ஆரம்பித்தால் பணம் எல்லாம் கொடுப்பாங்க…வட்டிக்கு கொடுத்து பெருக்கலாம். பங்கு போட்டு பிரித்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் தான் 12 பேருடன் இதை துவக்கினோம். இப்போது நாங்கள் 16 பேர் சகோதரிகள்(சுய உதவி குழுவின் பெயரும் சகோதரி தான்). ஆனால் இப்போது எங்களாலும் பெரிய தொழிலதிபராக முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது என்கிறார் ஜெயந்தி. ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த ஜெயந்தி, சுய உதவிக்குழு துவங்குவதற்கு முன் சொந்தமாக தையல் தொழில் செய்து வந்தார்.

சுய உதவிக்குழு தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் சொந்த தொழில் தொடங்கி ஒவ்வொரு உறுப்பினரும் கை நிறைய ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க தொடங்கியுள்ளனர். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சகோதரியை பெரிய நிறுவனமாக மாற்றுவதே எங்கள் லட்சியம் என 16 பேரும் உறுதி பூண்டுள்ளனர். மகளிர் சுய உதவிக்குழுவினர் பெரும்பாலானோர் மெழுகுவர்த்தி உற்பத்தி, மசாலா உற்பத்தி, பொம்மைகள் தயாரிப்பு, கைவினை பொருட்கள் தயாரிப்பு, எம்ப்ராய்டரி டிசைனிங், ஆடை தயாரிப்பு என பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டனர்.

ஆனால் இவர்களது இலக்கு குறைந்த முதலீடு, எளிதான வியாபாரம், கை நிறைய சம்பாத்தியம் என்பது தான். பெண்களை சார்ந்த வர்த்தகமாக இருந்தால், சந்தைப்படுத்துவதற்கும் எளிதாக இருக்கும் என நம்பினர். அதன் வெளிப்பாடு தான் நாப்கின் தயாரிப்பில் இறங்கியது. இதுபற்றி சகோதரி மகளிர் சுய உதவிக்குழு ஊக்குநர் மலர்கொடி, பிரதிநிதிகள் ஜெயந்தி, அமராவதி, உறுப்பினர் இந்திரா ஆகியோர் கூறியதாவது:

புதுக்கோட்டை யில் மகளிர் சுயஉதவிக்குழுவின ருக்கு பல்வேறு தொழி ல்கள் துவங்குவதற்கான பயிற்சியும், அதற் கான இயந்திரங்களையும் மானிய விலையில் வழங்கவும், அதற்கு தேவையான நிதியை வங்கியில் இருந்து கடனாக பெற்று தருவதாகவும் மகளிர் திட்ட அலுவலர் உறுதியளித்தார். அதன்படி எங்களது சுய உதவிக்குழுவில் இருந்து 3 நபர்களை பயிற்சி பெற்று வருவதற்காக அனுப்பி வைத்தோம். சானிடரி நாப்கின்களுக்கு எப்போதும் வரவேற்பு உள்ளதால் அவற்றை உற்பத்தி செய்வது தொடர்பான பயிற்சியை பெறுவது என முடிவு செய்தோம்.

அதன்படி சானிடரி நாப்கின் தயாரிப்பது எப்படி என்பது குறித்து எங்கள் குழுவை சேர்ந்த 3 பெண்களும் பயிற்சி பெற்று வந்தனர். அவர்கள் மூலம் மற்ற உறுப்பினர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடிந்ததும் புதுக்கோட்டையில் இருந்தே சானிடரி நாப்கின் தயாரிப்பதற்கான இயந்திரத்தையும் வழங்கினர். சானிடரி நாப்கின் தயாரிப்பு தொழில் துவங்க ரூ.2.5 லட்சம் வங்கியிலிருந்து மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டது. கிடைத்த தொகையில் ரூ.1.98 லட்சம் செலவில் புதிதாக சானிடரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரமும், நாப்கின் தயாரிப்பதற்கான லேசான துணியையும், பஞ்சு போன்ற உபபொருட்களையும் வாங்கினோம்.

இந்த இயந்திரம் மூலம் ஒரே அச்சு மூலமாக 10 நிமிடத்தில் 15 பேடுகளை தயார் செய்ய முடியும். ஒரு மணி நேரத்தில் 100 பேடு வரையிலும் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு 2 பேர் மட்டுமே போதுமானது. இப்போது அனைவருக்கும் தொழில் தெரியும். உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் போக மீதி 14 பேரும் சந்தைப்படுத்துதலில் ஈடுபடுகிறோம். நாங்களே நேரடியாக சென்று ஆர்டர் பிடிப்பதால் இதில் உள்ள கஷ்ட, நஷ்டங்களை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுகிறோம். நாங்கள் எதிர்பார்த்தபடியே நல்ல வர்த்தக வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

முன்பெல்லாம் வங்கியில் இருந்து வாங்கும் கடனை எப்படி தவணை மாறாமல் கட்டுவது என்ற கவலை எங்களுக்கு இருக்கும். இப்போது நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு தொழிலதிபர்களாக உணர்வதாலும், சொந்த காலில் நிற்பதாலும் தன்னம்பிக்கை அதிகரித்திருக்கிறது. எனவே சானிடரி நாப்கின் தயாரிப்பு தொழிலை விரிவுப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும், ஆர்வமும் அதிகரித்திருக்கிறது. எப்படியும் ஒரு நாள் நாங்களும் இந்த தொழிலில் முத்திரை பதிப்போம். இவ்வாறு நம்பிக்கையுடன் கூறினர்.

இவர்களது இலக்கு குறைந்த முதலீடு, எளிதான வியாபாரம், கை நிறைய சம்பாத்தியம் என்பது தான். பெண்களை சார்ந்த வர்த்தகமாக இருந்தால், சந்தைப்படுத்துவதற்கும் எளிதாக இருக்கும் என நம்பினர். அதன் வெளிப்பாடு தான் நாப்கின் தயாரிப்பில் இறங்கியது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s