இதயத்தை பாதுகாக்கும் உணவு பட்டியல்

Posted Image
 

 

 

 

 

 

 

 

 

கருப்பு பீன்ஸ்: போலேட், ஆண்டியாக்ஸிடண்ட்கள், மெக்னீசியம் நிரம்பிய பிளாக் பீன்ஸ், இரத்த அழுத்தம், இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரை ,மற்றும்  கொழுப்பை  குறைக்கின்றது. பிளாக் பீன்ஸ் சாப்பிடுவதால் இதயம் பாதுகாக்கப்பட்டு பாதுகாப்பான ஒரு மண்டலத்தில் இதயத்தை வைத்திருக்கிறது.  நீங்கள் தகர டப்பாக்களில் அடைத்து தயார் நிலையில் வைக்கப்பட்ட பீன்ஸை உபயோகபடுத்தும் முன் அதனில் அடங்கியுள்ள நீர்ம திரவத்தை  அகற்றி சோடியத்தின் அளவை குறைவாக பயன்படுத்தலாம்.

சல்மான் மீன் மற்றும் சூரை: இவ்விரு மீன்களும் இதயத்தின் முக்கிய வேட்பாளராக பணிபுரியும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள் மற்றும் ஒமேகா  3யை வளமான அளவில்  கொண்டுள்ளது. அதனால் சல்மான் மற்றும் சூரை மீன்கள் உணவில் எடுத்துக்கொண்டால் இதயத்தை பாதுகாக்கலாம்.

அக்ரூட் பருப்புகள்: இதயத்தை பாதுகக்க விரும்புபவர்கள் சாப்பிட வேண்டியவற்றில் இதுவும் ஒன்று. தினமும் சிறிதளவு அக்ரூட்  பருப்புகளை  சாப்பிடுவதன் மூலம்  உடலில் உள்ள கொழுப்பை குறைந்து தமனிகளில் ஏற்பட்டிருக்கும் வீக்கத்தையும் சரிசெய்ய உதவுகிறது. மதிய உணவுக்கு பின்  சிப்ஸ் போன்றவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக அக்ரூட் பருப்புகளை சாப்பிடலாம்.

ஆரஞ்சு: இது கொழுப்புக்கு எதிராக போராடக்கூடிய பெக்டின் கொண்டுள்ளது. ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் நிறைந்து காணப்படுவதால் இரத்த  அழுத்தத்தை கட்டுபடுத்துகிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற ஹெஸ்பெரிடின் குறைந்த இரத்த அழுத்தம் உதவுகின்றது.

கேரட்: இனிப்பு கேரட் நீரிழிவை கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது என்றாலும் கேரட்டில் உள்ள இனிப்பு மாரடைப்பு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில்  இருக்கின்றது. இவை கெட்ட கொழுப்புக்களை அளிப்பதற்கும் உதவிபுரிகிறது.

சர்க்கரை வள்ளி கிழங்கு: சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் கி நிறைந்து காணப்படுகிறது. வெள்ளை நிறமான ஃபைபர் மற்றும் லைகோபீன்  ஆரோக்கியமான மாற்றங்களை உருவாக்குகிறது.

ஓட்ஸ்: ஓட்ஸ் அனைத்து வடிவத்திலும் காணப்படும் கொழுப்புகளை குறைத்து உங்கள் இதயத்தை பாதுகாக்கும்.

ஆளி விதை: நார், பைத்தோகெமிக்கல்ஸ் கிலிகி ஆகியவற்றின் கலவையே ஆளி விதை. இந்த மூன்று பொருட்களும் உடல்நலத்திற்கு தேவையான  ஆற்றலை  தருகிறது. இதை தினமும் தானிய வகைகளுடன் கலந்தோ அல்லது பச்சைகாய்கறி கலவைகளுடன் கலந்தோ ஒரு ஸ்பூன் சாப்பிட்டால்  இதயம்  பலப்படும்.

மிளகாய் தூள்:  இது நம்புவதற்கு கடினமானது என்றாலும் இந்தியாவில் உள்ள சுவைமிக்க மசாலா இதயத்தை பாதுகாப்பதோடு உடலில் உள்ள  இன்சூலின் மற்றும்  நீரிழிவையும் கட்டுபடுத்துகிறது.

காபி: இதை நீரிழிவு2 வகை நோயாளிகள் தவிர்க்க வேண்டியது. உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

நன்றி தினகரன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s