சளித் தொல்லையில்லா மூலிகை கொசுவிரட்டி!

மூலிகைக் கொசுவிரட்டி!

நமது அடுத்த கண்டுபிடிப் பாளர், மரு.அமுதவல்லி. இவர் கொசு விரட்டி தயாரித்துள்ளார். கொசு விரட்டி யைப் பிறகு பார்க்கலாம். இவர், பள்ளியில் ஆசிரியர் பணி புரிந்து விருப்ப ஓய்வில் வெளியே வந்தவர். வள்ளலார் சிந்தனையில் பிடிப்பு கொண்டவர். தொடர்ந்து பல ஆண்டுகளாக மூலிகை சாகுபடி, ஆராய்ச்சி, இவற்றில் இறங்கி யுள்ளார்.

மத்தியப் பிரதேசம், போபால் நகரில், யூனியன் கார்பைடு நிறுவனம் பூச்சிக் கொல்லி தயாரிப்பில் இருபதாண்டுகள் முன்பு ‘டேங்க்’ நள்ளிரவில் வெடித்தது. அதனால் மரணப்பட்டவர்களுக்கும், ஊனப் பட்டவர்களுக்கு இதுவரை இழப்பீடு முழுமை யாகப் போய்ச் சேரவில்லை. ஊனமுற்றவர்கள், இறந்தவர்களின் சுற்றத்தார் நடந்தே டெல்லி வரை போய் பிரதம மந்திரி மன்மோகன் சிங்கை பார்த்து முறையிட்டார்கள். பலன் எதுவும் இல்லை. கம்பெனிக்காரன் கார்பரில் கம்பெனியை இன்னொரு கம்பெனியிடம் (Dow) விற்று விட்டான் என்பதுதான் உலகறிந்த உண்மை.

இன்னொரு புறம் பார்த்தால், கார்பைடு கம்பெனியின் நச்சுக்காற்று நள்ளிரவில் நகர் முழுவதும் பரவியபோது ஒரு குடும்பம் வித்தி யாசமாக ஒன்று செய்தது. அதாவது, அவர்களுக்கு ‘அக்கினி ஹோத்ரா’ செய்யும் பழக்கம் இருந்தது. குறிப்பிட்ட மரத்துக் குச்சிகள், பசுமாட்டுச் சாணியில் தயாரிக்கப்பட்ட விராட்டி, மஞ்சள், முனை முறியாத அரிசி, நெய் அனைத்தையும் பாத்திரத்தில் இட்டுத் தீ மூட்டி மந்திரம் சொல்லி வழிபட்டிருந்தார்கள். நச்சுக்காற்று கசிந்த போதும் ‘அக்கினி ஹோத்திரம்’ செய்து வழிபட் டார்கள். அந்தக் குடும்பம் நச்சுக்காற்றுக் கசிவால் ஊனப்படவும் இல்லை, உயிர் விடவும் இல்லை என்ற செய்திப் பத்திரிக்கைகளிலும் தொலைக் காட்சிகளிலும் வெளியானது பற்றி நீங்கள் கூட அறிந்திருக்கலாம். அந்தச் செய்தி அமுதவல்லியின் மனத்தில் புதிய சிந்தனையை விதைத்தது.

இன்று நாட்டின் பல பகுதியிலும் கொசுக் கடியில் இருந்து தப்பிக்க கொசுவிரட்டி புகைக் கிறார்கள். கொசுவைக் கொல்லும் நஞ்சு… கொசுவோடு போவது இல்லை. கொசுக்கடியைப் பொறுத்துக் கொள்ள முடியாத மனிதர் நலத்தையும் சீரழிக்கிறது. குறிப்பாகக் கொசு விரட்டிப் புகையைத் தொடர்ந்து பயன்படுத் தியவர்களை சளித்தொல்லைத் தொற்றிக் கொண்டதை அமுதவல்லி தொடர்ந்து கவனித்தார்.

இதற்கு மாற்று தேடுவதில் இறங்கினார். மூலிகைத் தோட்டத்தில் அழுதவல்லி நோட்டம் விட்டார். தோட்டத்தில் வளரும் முளைக்கீரை, பொன்னாங்கன்னி போன்ற இலைகளில் பூச்சிகளின் பாதிப்பால் ஓட்டை விழுகிறது. ஆனால், வேம்பு, நொச்சி, நுனா, ஆடாதொடா, ஆடு தின்னாப் பாளை, காட்டாமணக்கு, துளசி, திருநீற்றுப் பச்சிலை, தும்பை, காஞ்சாங்கோரை, துத்தி, பேய்மிரட்டி, மிளகாய்ப் பூண்டு, பப்பாளி, குப்பைமேனி, சீந்தில், செம்பருத்தி, நாகமல்லி, சிறியா நங்கை, குமர், கற்பூரவள்ளி போன்ற மூலிகைகளில் பூச்சிகளின் தாக்கம் காணப்பட வில்லை. இந்த மூலிகைகளைப் பயன்படுத்தி கொசுவிரட்டி தயாரிப்பதில் அமுதவல்லி இறங்கினார்.

செய்முறை

மேலே கண்ட மூலிகைகளில் கிடைத்தவற்றை சேகரித்து வந்து நிழலில் உலர்த்தினார். ஓமவள்ளி, கற்றாழை, பசலை, ஆனை நெருஞ்சி ஆகியவற்றை எடுத்து வந்து இடித்துக் சாறு எடுத்துக் கொண்டார். அடுத்து, வடித்த கஞ்சியுடன் மைதா கஞ்சியையும் கலந்து கொண்டார். தேங்காய் நார்க்கழிவு கொஞ்சம் எடுத்து வைத்துக் கொண்டார்.

ஆல், அரசு, நொச்சி, வேம்பு, நுனா, மருதாணி போன்ற குச்சிகளைத் தேர்வு செய்தார். மூலிகைப் பொடி, தேங்காய் நார்க்கழிவு கலவையை சோற்றுக் கஞ்சி, மைதா கஞ்சி, மூலிகைச்சாறு சேர்த்து பசைபோல் கலக்கினார். மேற்படி சாந்தை பென்சில் தடிமன் கொண்ட குச்சிகளில் அடிப்பாகம் நீங்கலாக மற்ற இடங்களில் பூசி வெயிலில் உலர்த்தினார்

குச்சியைக் கொளுத்திப் புகைய விட்டபோது… தோட்டத்தில் வேலை செய்த பெண்களுக்குக் கொசுவும் கடிக்கவில்லை, மூக்கில் சளியும் பிடிக்கவில்லை என்று பார்த்தார்.

இதை ரகசியமாக வைத்துக் காப்புரிமை வாங்கிப் பணம் குவிக்க நினைக்கவிலை இவர். இவரது தனிப்பெரும் கருணையைப் போற்று வோம்! இந்த மூலிகை மருத்துவரின் முகவரி இதோ. அமுதவல்லி பசுபதி, எம்.ஏ., எம்.எட்., டி.எச்.

மூலிகை ஆராய்ச்சியாளர், 37, கி.திருமஞ்சன வீதி, திருவாரூர்.

தொலைபேசி 04366-224433,

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s