டான்சில்

FB_IMG_1440989151690

1. தொண்டையில் ஏற்படும் சதை வீக்கமே ‘டான்சிலைட்டிஸ்‘ என்பதா?
தொண்டையில் சதை வீக்கமடைவதையே, ‘டான்சில்’ என்று தவறாக புரிந்து கொள்கின்றனர். ‘டான்சில்’ என்பது தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சி.

2. ‘டான்சில்’ என்றால் என்ன?
‘டான்சில்’ என்பது ஒரு நிணநீர்ச் சுரப்பி. அது, வாய்க்குள் மூன்று இடங்களில் உள்ளது. தொண்டையில் உள்நாக்குக்கு இருபுறமும் உள்ள, ‘டான்சில்,’ நாக்கு அடியில் உள்ள ‘டான்சில்’, மூக்குக்குப் பின்னால் உள்ள, ‘டான்சில்’ என, மூன்று வகைகள் உள்ளன. 

3. ‘டான்சிலின்’ பணி என்ன?
நாம் சாப்பிடும்போதும், தண்ணீர் குடிக்கும் போதும் கிருமியோ அல்லது புதிதாக ஒரு பொருளோ உடலின் உள்ளே செல்லும்போது, அவற்றை பற்றிய குறிப்புகளை மூளைக்கு தெரிவிக்கும் வேலையை, தொண்டையில் உள்ள, ‘டான்சில்’கள் செய்கின்றன. 

4. ‘டான்சில்’ வீங்குவது ஏன்?
உணவுகளின் மூலம் உட்புகும் கிருமிகள் சக்தி வாய்ந்தவையாக இருந்தால், முதலில், ‘டான்சில்’கள் பாதிக்கப்படும். காய்ச்சல், சளி பிடிக்க துவங்கும் முன், தொண்டை வலிப்பது இந்த காரணத்தால் தான். ஒட்டுமொத்த, ‘டான்சில்’களும் அந்த கிருமிகளோடு போராடும் போது, ‘டான்சில்’கள் மொத்தமாக வீங்கிவிடும். இதைத்தான் ‘டான்சிலைட்டிஸ்‘ என்பர்.

5. எந்த வகை கிருமிகளால், ‘டான்சில்’கள் பாதிக்கப்படுகின்றன?
‘பீட்டா ஹீமோலைட்டிக் ஸ்ட்ரெப்டோகாகஸ், அடினோ வைரஸ், ப்ளூ வைரஸ், டிப்தீரியா, பாக்டீரியா’ போன்ற கிருமிகளின் தாக்கத்தால் ‘டான்சில்’கள் பாதிக்கப்படுகின்றன.

6. ‘டான்சிலைட்டிஸ்‘ யாருக்கெல்லாம் வரும்?
பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு,‘டான்சிலைட்டிஸ்‘ பாதிப்பு அதிகம் வரும். அடிக்கடி சளி, காய்ச்சல், ‘சைனஸ்’ நோயால் அவதிப்படுவோர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோர், ஊட்டச்சத்து குறைந்தோர், சுகாதாரமில்லாத பகுதியில் வசிப்போருக்கு ‘டான்சிலைட்டிஸ்‘ ஏற்படும்.

7. குளிர்ச்சியான பொருட்களை சாப்பிட்டால், ‘டான்சிலைட்டிஸ்‘ ஏற்படுமா?
ஐஸ்கிரீம், குளிர்பானம், குளிர்ச்சியான தண்ணீர் போன்றவை, ‘டான்சிலைட்டிஸ்‘ வீக்கத்திற்கு உதவி செய்யும். மிகவும் குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடும் போது, அந்த குளிர்ச்சியானது ‘டான்சில்’ ரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்யும். இந்த செயலானது, ‘டான்சிலைட்டிஸ்‘களின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும்.

8. ‘டான்சிலைட்டிஸ்‘ வகைகள் உள்ளனவா?
‘டான்சிலைட்டிஸ்‘ இரண்டு வகைப்படும். ஒன்று, திடீர் வீக்கம்; மற்றொன்று, நாள்பட்ட வீக்கம். முதல் வகையில், தொண்டை வலி, காய்ச்சல், தலைவலி, உடல்வலி, குமட்டல், வாந்தி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்படும். சிலருக்கு கழுத்தில் நெரி கட்டும். இதற்கு நோய் எதிர்ப்பு மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலே போதுமானது.

9. நாள்பட்ட ‘டான்சிலைட்டிஸ்‘ பாதிப்புகள் என்ன?
நாள்பட்ட, ‘டான்சிலைட்டிஸ்‘ பாதிப்பினால் நோய் எதிர்ப்பு சக்தியானது நிரந்தரமாகவே குறைந்துவிடும். கிருமிகளின் பாதிப்பும் நிரந்தரமாகி விடும். இதனால் காய்ச்சல் அடிக்கடி வரும். வலி நிரந்தரமாகி விடும். ‘டான்சிலில்’ சீழ்பிடித்து வாய் நாற்றம் ஏற்படும். இதனால் மற்ற உடல் உறுப்புகளும் பாதிப்படையும். காது கேட்கும் திறன் குறைய வாய்ப்புள்ளது.

10. ‘டான்சிலைட்டிஸ்‘க்கு சிகிச்சை என்ன?
‘டான்சிலைட்டிஸ்‘ வீக்கத்திற்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து சரிபடுத்திவிடலாம். நாள்பட்ட, ‘டான்சிலைட்டிஸ்‘க்கு அறுவை சிகிச்சை தான் பலன் கொடுக்கும். 

– அ.ஜேசுதாஸ், 
காது, மூக்கு, தொண்டை நிபுணர்,
பேராசிரியர் மற்றும் துறை தலைவர்,
சென்னை மருத்துவ கல்லூரி,
மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்,
திருச்சி.
94431 55513

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s