ஏலியன்கள் : ‘மறைக்கப்படும்’ உண்மைகள்..!

 

ஏலியன்கள் : ‘மறைக்கப்படும்’ உண்மைகள்..!

“வேற்று கிரகவாசிகளை, இனிமேல் புதிதாய் ஒன்றும் தேடிக்கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவைகள் ஏற்கனவே இருப்பது உறுதி தான்..! அவைகளை ‘சீண்டாமல்’ இருப்பதுதான் மனித இனத்திற்கு நல்லது..!” என்று அடிக்கடி சொல்லுவார், கோட்பாட்டு இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங்..! ஏலியன்கள் இருப்பது உறுதி..! அவர் கூறுவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. 

அதீத ஆர்வம் ஒட்டு மொத்த மனித இனத்தையும் ஆபத்தில் தள்ளினாலும் ஆச்சரிய படுவதற்க்கில்லை. அதேசமயம் ஏலியன்கள் உலகத்தை கண்டு பிடித்து ரொம்ப காலம் ஆகிவிட்டது என்பதற்கு பல தீர்க்கமான ஆதாரங்களும் இருக்கத்தான் செய்கின்றன..!

அப்போலோ 11 


விண்கலம் : நிலாவில் முதல் காலடியை வைக்க சென்றபோது, வினோதமான பறக்கும் பொருள் ஒன்று தங்களை மிக அருகாமையில் கடந்து சென்றதாக தகவல் கூறினர் – பஸ் ஆல்ட்ரின்..!

பண்டைய கால தடயங்கள் : 


பழங்கால எகிப்தியரின் சித்திர வடிவ எழுத்துக்களில், பறக்கும் இயந்திரங்கள் இருப்பது ஏலியன் உலகை வந்தடைந்து பல நூறு ஆண்டுகள் ஆகின்றது என்பதை நிரூபிக்கின்றன..!

 

ஏலியன் சார்ந்த தொடர்பு : 


மாவீரன் நெப்போலியனின் மண்டை ஓடுக்குள் ஒரு ‘மைக்ரோ சிப்’பை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.


ஜூலை 1794-களில், பல நாட்கள் நெப்போலியன் எங்கு போனார் என்ற தகவலே இல்லாததற்கும், இதற்கும், ஏதோ ஏலியன் சார்ந்த தொடர்பு உள்ளது நம்பப்படுகிறது..!

அதிகாரப்பூர்வ நம்பிக்கை :


பிப்ரவரி 24, 1942 ஆம் ஆண்டு, லாஸ் ஏன்ஜலஸில் வெளிப்பட்ட யூஎப்ஓ (UFO) என்று கூறப்படும் பறக்கும் தட்டு, வேற்று கிரகவாசிகளை பற்றிய அதிகாரப்பூர்வமான நம்பிக்கையை உண்டாக்கியது என்று கூறலாம்..!

தேள் போன்ற உருவம் கொண்ட உயிரினம் : 


வீனஸ் கிரகத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை ஆராய்ந்த ரஷ்ய விஞ்ஞானி ஒருவர், இது அண்டத்தில் வாழக்கூடிய ஒரு தேள் போன்ற உருவம் கொண்ட உயிரினம் என்று கூறியுள்ளார்..!

வாவ் சிக்னல் : 

ஒருமுறை, 220 மில்லியன் ஒளி ஆண்டுகள் கடந்து பூமிக்கு ஒரு சிக்னல் கிடைத்தது, அதை ‘வாவ் சிக்னல்’ (WOW SIGNAL) என்று கூறுகிறார்கள்.இதை  பற்றி அறிய  <<இங்கே>> சுட்டவும்…

அதிநவீன தொழில்நுட்பம் இன்றி, எப்படி எந்த தடையும் இன்றி, இந்த சிக்னல் வந்திருக்க முடியும்..?! ஆக, ஏலியன்கள் இருப்பதை உறுதி செய்கிறது – வாவ் சிக்னல்..!
புதைப்படிவம் : 


சமீபத்தில் அன்டார்டிக்கா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதைப்படிவம், கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் புதையுண்டதாம்..! சிலர் இதை ஏலியன்களின் உபயோக பொருள் என்கின்றனர்..!
கதிர்வீச்சை தாங்கும் நுண்ணுயிர் : 


எந்த ஒரு நுண்ணுயிரும் தாக்குப்பிடிக்க முடியாத கதிர்வீச்சை எளிமையாக தாங்கும் நுண்ணுயிர் ஒன்றை, 2002-ஆம் ஆண்டு ரஷ்ய விஞ்ஞானி ஒருவர் கண்டுப்பிடித்தார். அது வேற்றுகிரக வாச நுண்ணுயிர் என்று நம்பப்படுகிறது..!

பலமான ரேடியோ சிக்னல்கள் :


 2004 – ஆம் ஆண்டு பூமிக்கு வந்த சில பலமான ரேடியோ சிக்னல்கள், வேற்று கிரகவாசிகள் நம்மை தொடர்பு கொள்ள நினைக்கிறார்கள் என்பதை ‘அப்பட்டமாக’ வெளிப்படுத்தியது என்றே கூறவேண்டும்..!

க்ராப் சர்க்கில்ஸ் : 
க்ராப் சர்க்கில்ஸ் :
1970-களில் இருந்து வயல் வெளிகளில் ஏற்படும் இந்த க்ராப் சர்க்கில்ஸ்கள் ஏலியன்களால் உருவாக்கப்படுவது தான் என்று நம்பப்படுகிறது..!

எவ்பர்ரி பயிர் வட்டத்தில் பறக்கும் தட்டு.

இங்கே 2012 ஆகஸ்ட் மாத ஆரம்பத்திலிருந்து பல சிக்கலான் பயிர்வட்டங்கள் தோன்றி வந்தன.

 
அவை காண  <<இங்கே>> சுட்டவும்…
 
தொடர்பை இழந்து பின் : 
செய்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட க்யூரியாசிட்டி விண்கலம் செய்வாய் கிரகத்தில் இறங்கி ஆய்வு செய்து கொண்டிருக்கும் போது, சில நிமிடங்கள் தொடர்பை இழந்து பின் இயல்பு நிலைக்கு திரும்பியது..!

இந்த க்யூரியாசிட்டி விண்கலம் ‘ஷட்-டவுன்’ வேலையை ஏலியன்கள் செய்திருக்க கூடும் என்று பலர் நம்புகின்றனர்..!

மச்சு பிச்சு : 
 
15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ‘மச்சு பிச்சு’வின் அபாரமான கட்டமைப்பு, நிச்சயம் சாதாரண மனிதர்களால் கட்டமைக்கப்படவில்லை என்று இன்றும் நம்பப்படுகிறது..!
மேலும் அறிந்து கொள்ள    <<இங்கே>> சுட்டவும்…
பெர்முடா முக்கோணம் :
 பெர்முடா முக்கோணத்தின் மேல் பறந்து போன போது காணாமல் போன விமானங்களையும், கடலில் மூழ்கி போன கப்பல்களையும் கணக்கு போட்டு ‘மாள’ முடியாது.

இந்த புதிரான பெர்முடா முக்கோணம், ஏலியன்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் இடம் என்றும் நம்பப்படுகிறது..!

பெர்முடா முக்கோணம் பற்றி முழு தகவல் அறிய <<இங்கே>> சுட்டவும்…
 
ஏலியன்கள் பங்கு : 
ஏலியன்கள் பங்கு :
கிழக்கு தீவுகளில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த 887 மனித வடிவ சிற்பங்களும் பிரமாதமான விகிதாசாரத்தில் கட்டபட்டுள்ளனவாம், இதில் ஏலியன்கள் பங்கு நிச்சயம் உண்டாம்..!

  ‘ஈஸ்டர் தீவு’ (Easter Island) பற்றி  மேலும் அறிந்து கொள்ள    <<இங்கே>> சுட்டவும்…
 
பிரமிட்கள் : 
பிரமிட்கள் மாபெரும் மனித சக்தி கொண்டு கட்டப்பட்டது என்று நம்புவதற்கு இணையாக இதை கட்டியது ஏலியன்கள் தான் என்றும் நம்பப்படுகிறது..!

மலேசிய விமானம் 370 கடத்தப்பட்டு விட்டது : 
காணாமல் போன 370 மலேசிய விமானம், ஏலியன்களால் கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோட்பாட்டினை இன்றும் பலர் முன் வைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்..!
SOME RELATED ARTICLES
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s