மொட்டை மாடியில் பட்டையை கிளப்பும் மண்ணில்லா விவசாயம்

gallerye_010424168_1189811தமிழகத்தில், விவசாய பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. விவசாய நிலங்கள் எல்லாம், ‘ரியல் எஸ்டேட்’காரர்களிடம் சிக்கி, வீட்டு மனைகளாக மாறிவிட்டன. இதைக்கண்டு உள்ளம் குமுறுவோருக்கு ஆறுதலாக, மண் இல்லா விவசாய முறையை, தனது வீட்டு மாடியில் அமல்படுத்தி சாதித்துகாட்டியுள்ளார் கோவை, சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பேராசிரியர் நாகேந்திரன். Continue reading

சங்கரா மீன் (Red snapper)

சங்கரா மீன் (Red snapper)


சங்கரா மீன்கள் (Red Snapper) மீன்களிலேயே பல வகைகள் உண்டு.பார்வைக்கு, கவர்ந்திழுக்கும் தொட்டி மீன்களைப் போன்ற அழகுடன் இளஞ்சிவப்பு நிறத்தை பொதுவான பண்பாக கொண்டிருக்கும் சங்கரா மீன்கள் நம்ம ஊரில் பரவலாய் அதிகம் விரும்பி உண்ணப்படும் மீன் வகைகளில் ஒன்று.
Continue reading

விளை மீன் – Emperor Fish

விளை மீன் – Emperor Fish

மீன் தொடரில் இன்றைக்கு விளை மீனைப் பற்றி பார்ப்போம். வெல மீன் என்று பரவலாய் உச்சரிக்கப்படும் இந்த மீன் வகை தமிழகத்தில் அனேக இடங்களில் ரெகுலராகவே கிடைக்கும். சிலேப்பி(திலேப்பியா) மீனைப் போன்ற அமைப்பில் இருக்கும் இந்த மீன்கள் மிகச் சிறிய அதாவது கிலோவிற்கு இருபது மீன்கள் நிற்கும் அளவிலிருந்து அதிக பட்சமாக ஒரு மீனே இரண்டு மூன்று கிலோ வரை உடைய அளவிலும் கிடைக்கும். இன்னும் பெரிய அளவிலும் இவை வளரும். இங்கே விற்பனைக்கு வருபவற்றில் அதிகபட்சமாக மேற் சொன்ன எடை அளவிலேயே கிடைக்கும்.

 முந்தைய தொடரில் பார்த்த ஊடகம் மீனைப் போன்ற விளை மீன்களும் குழம்பிலும் அசத்தும், வறுவலிலும் பிரமாதமான சுவையில் இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையில் இருப்பது கூடுதல் சிறப்பு. மேலும் சிக்கலான முள் அமைப்பும் கிடையாது.

விளை மீன்களில் பல ரகங்கள் உண்டு. சற்றே சாம்பல் நிறம் கலந்த வெள்ளை நிற விளை மீன்களும், இளஞ்சிவப்பு விளை மீன்களும் இங்கே அதிகமாய் கிடைக்கும் வகைகள். இவை இரண்டையும் ஒப்புமை படுத்தும்போது இளஞ்சிவப்பு விளை மீன்கள் சற்றே கூடுதல் சுவையோடு இருக்கும். ஆனாலும் வெள்ளை நிற விளை மீன்களும் சுவையானவையே, மேலும் அவைதான் பெரும்பாலும் விற்பனைக்கு அதிகமாய் வரும்.

சிவப்பு விளை மீன்களில்கூட சிறு சிறு வேறுபாடுகளுடன் நிறைய வெரைட்டிகள் உண்டு. தோள் தடிமனாய் ஒரு வகை உண்டு. அவை விளை மீன்களின் அடையாளத்தில் இருப்பினும் துடுப்புகள், வடிவம் இவற்றில் வித்தியாசப்படும். அந்த வகை அவ்வளவு சுவையோடு இராது.
விளை மீன்களை அடையாளம் காண கீழே படத்தில் இருக்கும் மீனில் குறிப்பிட்டு இருக்கும் அடையாளங்களை கவனிக்கவும்.

  •  மீனின் நடுவில் ஒரு நீண்ட கோடு அமைப்பு இருக்கும்.(வேறு சில மீன் வகைகளிலும் இந்த கோடு இருக்கும், ஆனாலும் அந்த மீன்களின் வடிவம் வேறு விதமாய் இருக்கும். விளை மீனின் அமைப்பில் இருக்கும் கறி மீன், சிலேப்பி மற்றும் சில ஏரி கெண்டை மீன்கள் ஆகியவற்றிலிருந்து வேறுபடுத்திக்கொள்ள இந்த கோடு அமைப்பு உதவும்)
  • மேற்பகுதில் டைமண்ட் ஷேப் தெரிவதைப் போன்ற செதில் அமைப்பு இருக்கும்.
  •  வட்டமிட்டு காட்டியிருக்கும் இடங்களில் இருப்பது போன்றே உடலின் மேல் ஆங்காங்கே Bold செய்தது போல செதில்களின் கோடுகள் அழுத்தமாய் தெரியும். சில மீன்களில் போல்ட் செய்யப்பட்ட அமைப்பு சிக்சாக் வடிவத்தில் தெரியும்.
விளை மீன்களில் சில வகைகள் கீழே:
 (நம்ம ஊரில் அதிகமாய் கிடைக்கும் ரகம்)
 (அவ்வப்போது கிடைக்கும் ரகம் முதல் தர சுவையுடையது)
சென்னையில் கிலோ ரூ.200 லிருந்து ரூ.300 வரை விற்கப்படும் இந்த விளை மீன்கள் மற்ற இடங்களில் கிலோ ரூ.150 லிருந்து ரூ.200 வரை கிடைக்கும். விளை மீன்கள் சற்றே பழைய மீனாய் இருந்தாலும் சுவையில் பெரிய வித்தியாசம் இருக்கும். புது மீன்,பழைய மீன் என பார்த்த உடன் அடையாளம் காணுவது விளை மீன்களில் கடினம். செவுள் சிவப்பு நிறத்தில் தெரிந்தால் மட்டும் வாங்கவும்.
 விளை மீன்களை வறுவல் செய்யும் போது சற்று டீப் ஃபிரை செய்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும். மேலும் சதைப்பற்றுடன்  இருக்கும் இந்த விளை மீன்கள் டீப் ஃபிரை செய்யும்போதே உள்ளே இருக்கும் சதையும் நன்றாக வெந்து சுவை கூடும். இல்லையெனில் உள் பக்கம் வேகாதது போன்று ஒரு வித பச்சை வாசத்துடன் சுவையும் மாறுபடும். குழம்பில் தேங்காய் அதிகமாய் சேர்த்துவிடாமல் பார்த்துக் கொள்ளவும். தேங்காய் இல்லாமல் வைத்தாலும் சுவையோடவே இருக்கும்.

காரப்பொடி (Ponyfish)

காரப்பொடி (Ponyfish)

பொதுவாக மீன் பிரியர்கள் வஞ்சிரம்,வாவல்,ஷீலா,கொடுவா என்று ஒரு பட்டியல் வைத்திருப்பார்கள். பெரும்பாலும் இந்த பட்டியலைத் தாண்டி வேறு மீன்களை வாங்க மாட்டார்கள். இவற்றைவிட விலை குறைவாக, அதே வேளையில் வஞ்சிரம் வாவலுக்கு சுவையில் ஈடு கொடுக்கும் எத்தனையோ மீன் வகைகள் உண்டு. இவற்றைக் குறித்து தெரிவதில்லை என்பதால் எதற்கு ரிஸ்க் என்று பழகிய மீன் லிஸ்ட்டிலேயே நின்றுவிடுகிறார்கள்.

மீன்கள் வாங்கும் போது எல்லா வகை மீன்களும் குழம்பிற்கும் வறுவலுக்கும் உகந்ததாக இருக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெரிய சைஸ் மீன்கள் வாங்கும்போது பெரும்பாலும் அந்த மீனின் தலை,வயிறு மற்றும் வால் பகுதிகளை குழம்பிற்கும் மற்றவற்றை வறுக்கவும் பயன்படுத்துவார்கள். எடுத்துக்காட்டாக வஞ்சிரமோ, வாவலோ வறுவலில் இருக்கும் சுவை குழம்பில் இருக்காது. கிலோவிற்கு  500 ரூபாய் கொடுத்து இம்மாதிரி பெரிய மீன்களை வாங்கும்போது குழம்பிற்கென்று ஒரு ஐம்பது ரூபாய்க்கு காரப்பொடி, நகரை, சுதும்பு, பன்னா போன்ற பொடி மீன்களை வாங்கிவிட வேண்டும். பெரிய மீன்களைவிட பொடி மீன்களே குழம்பிற்கு சுவை கொடுப்பவை. சாப்பிடவும் ருசியாக இருக்கும். இந்த பொடி மீன்கள் சில நேரங்களில் எல்லா மீன்களும் கலந்த மாதிரியும் கிடைக்கும். அப்படி கிடைக்கும் போது தவற விடக்கூடாது. இப்படி கலந்து கிடைக்கும்  மீன்களை பல பொடி என்பார்கள். பல பொடிகளைப் போட்டு வைக்கும் குழம்பிற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது எனலாம்.

பொடி மீன்களில் ஒன்றான காரப்பொடியைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

காரப்பொடியில் பெரிய சைஸ் மீனே அதிகபட்சமாக 200 கிராம் எடை உள்ளதாக இருக்கும். இந்த பெரிய சைஸ் காரப்பொடி கிலோ 150 வரை கிடைக்கும். சிறிய சைஸ் கிலோ 60லிருந்து 100 வரை சைஸிற்கு ஏற்றவாறு கிடைக்கும்.

இன்று டெல்லிக்கு நாளை சென்னைக்கு..!

105

இந்தியாவின் தலை நகரான டெல்லி, இந்த கடுங்குளிரிலும் தகிக்கிறது.

காரணம், மாநிலத்தில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு அரசு மற்றும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் உஷ்ணம் தான்.

உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள அளவை விட 10 மடங்கு அதிக மாசு நிறைந்த காற்றை அங்குள்ள மக்கள் சுவாசித்தால் எப்படி சும்மா இருக்க முடியும்? அதுதான் மக்களையும், சமூக ஆர்வலர்களையும் கொதித்தெழ செய்தது. Continue reading

புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து.!

104
புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும், சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை, வேரோடு சாய்த்து விடும் தன்மை. 
இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டு பிடித்து, குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

Continue reading

நகரை மீன்

நகரை மீன் – red mullet – goat fish

செந்நகரை,நவரை ,கல் நகரை என்று பலவாறு அழைக்கப்படும் நகரை மீன்கள் சிறிய வகை மீன்களில் ஒன்று. பொதுவான பண்பாக சிவப்பு நிறத்தை கொண்டிருந்தாலும் நகரை மீன்களில் சிறு சிறு வேறுபாடுகளுடன் பல வகைகள் உண்டு. எனினும் சுவையில் ஒன்று போலவே இருக்கும். சிறிய வகை மீன் என்ற போதும் சதைப்பற்றுடன் இருக்கும். கீழே படத்தில் இருப்பவை நகரைகளில் சில வகை.

Continue reading

ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி ! ( 1964 ம் ஆண்டு டிசம்பர் 23 )

3

50 ஆண்டுகளுக்கு முன் ஆழிப்பேரலைக்குள் மூழ்கிப்போன தனுஷ்கோடி நகரம் இன்றும் அதன் மிச்சசொச்சங்களுடன் நினைவு சின்னமாக திகழ்ந்து வருகிறது.

இந்திய நாட்டின் தென்கோடி எல்லைப்பகுதி தனுஷ்கோடி. வரலாற்றில் இடம் பிடித்திருக்கும் தனுஷ்கோடி இன்றுவரை மனிதர்கள் வசிக்க தகுதியற்ற பகுதியாகத்தான் அரசால் கூறப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் 1964ஆம் ஆண்டில் ஏற்பட்ட கோரப்புயல்தான். Continue reading

சுனாமியும் அண்மை வெள்ளமும்!

2

தமிழக மக்களை, 2004 டிசம்பர் 26,காலை 8.30 மணி செய்தி மிரட்டிக் கொண்டிருந்தது. கடல்பொங்கி மக்கள் ஓட்டம் என்பது தான் அந்த செய்தி.ஆந்திரா, கேரளா, லட்சத் தீவு, அந்தமான், பாண்டிச்சேரி மற்றும் தமிழகம் என ஐந்து மாநிலங்களை சுனாமி தாக்கினாலும், பாதிப்பு தமிழகத்திற்கே அதிகம். உயிரி ழப்பு சுமார் 8 ஆயிரம், காணாமல் போனவர் பற்றிய விவரம், தொடர்ந்து ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. இலங்கை,கிழக்கு கடலோர மாவட்ட மக்களை, பாது காத்தது, ஏனென்றால், இலங்கையிலும், பாதிப்பு அதிகம்.தமிழகத்தின் சென்னை, கடலூர்,நாகை, குமரி ஆகிய 4 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டாலும், நாகையில் 6 ஆயிரத்திற்கும் மேலான எண்ணிக்கையில், மக்கள்உயிரைப் பறித்திருந்தது. வேளாங் கண்ணி மாதா கோவில் பக்தர்கள் பலஆயிரம் பேர், கடலில் மூழ்கி உயிரிழந் திருந்தனர். 3 தினங்கள் கழித்து அந்தமக்களின் உடல்களை, இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட சிலஅமைப்பினர் அப்புறப்படுத்திக் கொண்டு இருந்தனர். Continue reading

நலம் தரும் சிவப்பரிசி

11
 சிவப்பரிசி ஓர் அற்புதமான அரிய உணவு.
இதன் மருத்துவ குணங்களைப் பற்றி கி.மு.400-லேயே நிறைய சொல்லப்பட்டு இருக்கிறது.
சீனாவில் 3 ஆயிரம் ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது.
ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது.
கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

Continue reading

ஊடான் மீன்

ஊடகம் – ஊடான்

 ஊடகம் மீன், சிறிய வகை மீன் இனத்தில் ஒன்று. இதன் பெரிய அளவு என்பது கால் கிலோ அளவிற்கு எடை கொண்டதாக இருக்கும். குழம்பு, வறுவல் என இரண்டிற்கும் ஏற்ற வகை மீன்களில் ஊடகம் குறிப்பிடப்பட வேண்டிய மீன். பொதுவாக குழம்பு,வறுவல் என இரண்டிற்கும் ஏதுவான மீன்களில் வறுத்த மீன்களைவிட குழம்பு மீன் சற்று மட்டுப்பட்ட சுவையிலேயே இருக்கும். ஆனால் ஊடகத்தில் பட்டி மன்றமே வைக்கலாம் அந்த அளவிற்கு குழம்பு,வறுவல் என இரண்டிலுமே வேறு வேறு விதமான சுவைகளில் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பது போல பிரமாதமாய் இருக்கும்.

Continue reading

ஓசோன் மண்டலத்தை பாதுகாக்கும் துளசி…!

101
நீங்க மரத்த நட வேண்டாம் , இந்த துளசியைவாது நடுங்க !!!

சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் ஓசோன் படலத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எதிர்கொண்டு அதனை பாதுகாக்க வீடுகள்தோறும் துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும்.

ஓசோன் படலத்தைப் பாதுகாக்க மரம் வளர்க்க வேண்டும் என்ற கருத்து பரவலாக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
Continue reading

நான்கு மெழுகுவர்த்திகள்

98

✅ஒரு தடவை படித்து பாருங்கள். பல தடவை யோசிப்பீர்கள்😇😇😇
இந்த கதையை.}

நான்கு 🎍🎍🎍🎍மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு
இருந்தன. மெலிதாய் 💨காற்று வீசிக்கொண்டு
இருந்தது..!!

💨காற்றை கண்டதும்…

‘அமைதி‘ என்ற முதல் 🎍மெழுகுவர்த்தி ‘
ஐயோ காற்று வீசுகின்றது, நான் அணைந்து
விடுவேன் என்று பலவீனமாக சொன்னது.
💨காற்று பட்டதும் அணைந்துவிட்டது.

Continue reading

கூவத்தின் கதை!

 

 ‘கூவத்தைப் பார்த்தீங்களா… எப்படி சுத்தமாகிடுச்சு. இதைச் சுத்தப்படுத்தப் பல ஆயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்கப்போறதா சொன்னாங்க. ஆனா ஒரு பைசா செலவு இல்லாம மழையே சுத்தப்படுத்திட்டுப் போயிடுச்சு’ – பாலங்களின் மேல் இருந்து கூவம் நதியைப் பார்த்து பிரமிக்கிறார்கள் சென்னைவாசிகள்.

இந்த மழை வெள்ளம், கூவம் கரையோரத்தின் பல்லாயிரம் மக்களைப் பரிதவிக்கவிட்டிருக்கிறது. பல உயிர்களைப் பலிகொண்டிருக்கிறது. நதியின் கரையோரங்களில் உடைப்பு ஏற்பட்டு ஊரெல்லாம் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. ஆனால், இதன் மறுபக்கமும் இருக்கிறது. கூவம் நதியில் தண்ணீர், அதன் உண்மையான நிறத்துடன் பாய்ந்துசெல்லும் அதிசயத்தை இந்தத் தலைமுறை இப்போதுதான் பார்க்கிறது. கறுப்பு நிறச் சாக்கடை இல்லை; துர்நாற்றம் நிரம்பிய கழிவுகள் இல்லை. ஒரு பாவத்தைப்போல எல்லாம் அடித்துச் செல்லப்பட்டு, கூவம் மறுபிறப்பு எடுத்திருக்கிறது. அதற்காக தாமிரபரணி தண்ணீர்போலத் தூய்மையாக ஓடுகிறது எனப் பொருள் இல்லை. ஆனால் கூவத்தில் இப்போதுதான் ஒரு நதியின் சாயல் பளிச்சிடுகிறது.

கூவம் மட்டுமல்ல… அடையாறும் அதன் அசல் நிறத்தை மீட்டு எடுத்திருக்கிறது. சென்னை நகருக்குள் பாய்ந்தோடும் பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா ஆகிய மற்ற நீர்வழித்தடங் களிலும் பாய்ந்து ஓடுகிறது நீர். இது எவ்வளவு காலத்துக்குத் தொடரும் என்பதுதான் இப்போது நம் முன்னே இருக்கும் கேள்வி. ‘குறைந்தபட்சம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு இந்த நிலைமை நீடித்தாலே அதிசயம். அதற்குள் மறுபடியும் சாக்கடையையும் கழிவு நீரையும் திறந்துவிட்டு பழைய மாதிரி மாற்றிவிடுவார்கள்’ என்பதுதான் பெரும்பாலானோரின் அச்சம்.

கூவம் நதியின் பிறப்பிடம் தொடங்கி, அது கடலில் கலக்குமிடம் வரையிலும் முற்றிலுமாகத் தூய்மையாகி இருக்கிறது. எந்தெந்த ஆட்சியாளர்களோ திட்டம் போட்டும், எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் செய்ய முடியாத வேலையை இயற்கை ஓரிரு நாட்களில் செய்து முடித்துவிட்டது. இதைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் இப்போது நமக்கு முன் உள்ள சவால்!

Continue reading

வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?

‘மூன்று மாத காலத்தில் பெய்ய வேண்டிய மழை, ஒரு சில நாட்களிலேயே கொட்டித் தீர்த்துவிட்டால் என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தாலும் ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்குவதையும் அதனால் சேதங்கள் விளைவதையும் தவிர்க்க இயலாது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பேசியதைப் படித்தால், ‘நியாயம்தானே’ என்று தோன்றும்!

‘போர் என்ற ஒன்று நடந்தால் மக்கள் இறக்கத்தானே செய்வார்கள்?’ என்று சொன்னவர்தானே இந்த ஜெயலலிதா என்பதை நினைவுபடுத்தி யோசித்தால்தான், ‘எங்களால் என்ன செய்ய முடியும்?’ என்ற சமாளிப்பும், ‘இதெல்லாம் தலைவிதி’ என்ற சால்ஜாப்பும் புலப்படும். ‘எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தைக் குற்றம் சொல்லலாமா?’ என்றால், ‘ஆக்கவும் அழிக்கவும் வல்லது அரசு’ என்பதால் அதுதானே பொறுப்பேற்க வேண்டும்? `நான் உத்தரவிட்டேன், எனது தலைமையிலான அரசு, எனது அரசு’ என்று எல்லாவற்றுக்கும் தானே என்று சொல்லிக்கொள்கிற ஜெயலலிதா, கடந்த ஒரு மாத காலத்தில் இயற்கைப் பேரிடரை எதிர்கொண்ட விதம், ‘எதிர்கொள்ள வேண்டும்’ என்று நினைத்தாரா இல்லையா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது. Continue reading