டூத் பேஸ்ட்’ எனும் உயிர்க்கொல்லி

‘டூத் பேஸ்ட்’ எனும் உயிர்க்கொல்லி!
குலை நடுங்க வைக்கும் அதிர்ச்சி ரிப்போர்ட்!

பல் நம் உயிரின் முக்கிய ஆதாரம் என்றால் நம்புவீர்களா? நீங்கள் நம்பினாலும் சரி; நம்பவில்லையென்றாலும் சரி அதுதான் உண்மை. மூளை சம்பந்தமான, இதயம் சம்பந்தமான நோய்களில் கூட பற்களுக்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது.  இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பல்லை வைத்து லட்சக்கணக்கான கோடி வர்த்தகம் இந்தியாவில் நடந்து கொண்டிருப்பதுதான் இப்போதுள்ள பகீர் தகவல்.

‘உங்க பேஸ்ட்டுல உப்பு இருக்கா’, ‘உங்க பேஸ்ட்டுல துவர்ப்பு இருக்கா’, ‘தேய்ச்சுக்கிட்டே இருங்க…’ ’உங்க பேஸ்ட்டுல காரம் இருக்கா…” இப்படி அடுக்கடுக்கான விளம்பரங்களை கேட்டு கேட்டு அதில் ஏமாந்து இன்று, கொஞ்சம் கொஞ்சமாய் நம்முடைய பற்களை இழந்துகொண்டிருக்கிறோம்.

பற்களை சுத்தமா வச்சுக்கலனா… உயிருக்கே ஆபத்து என்கிற ரேஞ்சுல பில்டப் கொடுத்து, நமக்கெல்லாம் உயிர் பயத்தைக் காட்டி, இவர்களின் கேடுகெட்ட பற்பசையை நம்மிடம் திணிப்பதன் மூலம் நடக்கும் பிசினஸ் மட்டும் ஆண்டுக்கு 1 லட்சம் கோடிக்கு மேல்.

இதுக்கே இப்படி வாயைப் பிழந்துட்டா எப்படி?

நம்மோட உடம்புல மிக மிக வலுவான எலும்பு எது தெரியுமா? அது பல்தான்.  நாம தேய்க்கிற இந்த கண்ட கண்ட பற்பசையினால, இந்த வலுவான பல்லானது கொஞ்சம் கொஞ்சமா வலுவிலந்து எனாமல் கரையத் தொடங்கும்.  அதற்கு அடுத்தக்கட்டமாக பற்களில் சூத்தை, அடுத்தபடியாக ஈறுகளில் வலு குறைவு இவை அத்தனையும் ஏற்படும்.

வழக்கமா சாக்லேட் சாப்ட்ற குழந்தைங்களுக்குத்தானே சூத்தை வரும்.  ஆனா, இப்போ பெரியவங்களுக்கெல்லாம் சூத்தை வருதே அது எப்படி? நாம் சாக்லேட் சாப்பிட்டாலும், சாப்பிடாவிட்டாலும் சூத்தை வருவதை தவிர்க்கவே முடியாது.  அதுதான் உண்மை.  ஏனெனில் நாம் தேய்க்கும் பற்பசை மூலமாகவும் மிக எளிதாக சூத்தைப் பல் வரும் என்கிறார்கள் சித்த மருத்தவ நிபுணர்கள்.  இன்னொரு விஷயம் தெரியுமா… பல்லுக்கு வலு சேர்க்கும் எந்த ஒரு உட்பொருளும் நாம் விளம்பரங்களைப் பார்த்து வாங்கி பயன்படுத்தும் எந்த ஒரு பற்பசையிலும் இல்லை என்பதுதான் இதில் மறைந்திருக்கும் பேருண்மை.

மாறாக பற்களை கெடுக்கும் அத்தனை வேதிப்பொருளும் கணிசமான அளவில் மேற்க்கண்ட பற்பசைகளில் அடங்கியிருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
ஏங்க இப்படியெல்லாம் பண்றாங்க… இப்படி பற்பசைல கலப்படமும் அளவுக்கதிகமா வேதிப்பொருள் கலக்கறதுனால யாருக்கு என்ன நன்மைன்னுதானே கேட்குறீங்க…
சுத்தி வளைச்சுப் பார்த்தா, பற்பசைங்கற அம்சமே, நம் பற்களை பதம் பார்க்க பல் மருத்துவ முதலாளிகளால் கண்டுபிடிக்கப்பட்டதுதான்.

30 வருஷம் முன்னாடி வரைக்கும், இத்தனை பேஸ்ட் வகையறாக்கள் சந்தையில் கிடையவே கிடையாது. மக்கள் கரிச் சாம்பலையும், செங்கல் பொடியிலும்தான் பல் தேய்த்து வந்தார்கள்.  அதற்குப்பிறகு வந்த விளம்பரத்தால்தான் இன்று இச்சமூகம் பல் பலகீனத்தால் சிக்கி சீரழிந்து வருகிறது.

பல் மருத்துவ வர்த்தகம் செழிக்க வேண்டுமென்றால், கோடி கோடியாய் சம்பாதிக்க வேண்டுமென்றால், நோயாளிகள் பெருக வேண்டும். பல் சிகிச்சையைப் பொறுத்தவரையில் அவ்வளவு எளிதாக நோயாளிகள் வரமாட்டார்கள்.  அப்படியானால் நோயாளிகளை உருவாக்கினாலேயொழிய இந்த வர்த்தகம் செழிக்காது என்ற உண்மை கண்டறியப்பட்டதன் வெளிப்பாடுதான், பற்பசை என்கிற விஷயம் பிறக்க காரணமாய் போனது.

ஒரு நேரம் தேய்க்காதீங்க… ரெண்டு நேரம் தேய்ங்க.. அப்போதான் உங்க ஆரோக்கியம் கூடும் என்று அவர்கள் பரப்புகிற விளம்பரத்தை அடிபிசகாமல் பின் தொடர்கிற நம்மவர்கள் பற்பசையை நுறை வரும் அளவிற்கு தேய்த்து கண்ணாடி முன் நின்று பல் வெள்ளையாய் தெரிந்த பிறகே மனம் திருப்தியடைகிறார்கள்.  இவர்களின் திருப்திதான், அவர்கள் வர்த்தகத்திற்கு கிடைத்த வெற்றி. எந்த பற்பசை வச்சு பல் தேய்ச்சா பல் வெள்ளையாகுதோ அதுதான் டாப்பு என்ற நம்முடைய மேதாவித்தனம்தான், அவர்களின் பிசினஸ் தந்திரம்.

அந்த வெள்ளை பற்பசை.. கொஞ்சம் கொஞ்சமாய் நமது எனாமலை கரைக்கத் தொடங்குகிறது. இவையெல்லாம் ஓரிரு வாரத்தில் நடந்துவிடாது.  சில வருடங்கள் ஆகலாம்.. கொஞ்சம் கொஞ்சமாக நமது பல் கூச்சம் ஏற்படும், சூத்தை என்கிற பிரச்சினை ஏற்படும், அதன் விளைவாக பல் மருத்துவரைப் பார்க்க பயணப்படுவோம். அதாவது இது எப்படியென்றால், உங்கள் பல் பிரச்சினைக்கு காரணம் நாம்தானே தவிர, நாம் தேய்க்கும் பற்பசை அல்லவே அல்ல என்று கற்பூரத்தை அடித்து சத்தியம் செய்யும் அளவிற்கு, மெது மெதுவாய் பாதிப்பை ஏற்படுத்தும்.
பல் சார்ந்து ஏற்படும் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் 80 சதவீதம் பற்பசையினால்தான் என்ற பெரிய உண்மை, 100 சதவீதம் நமக்கு தெரியாத வகையில் சந்தேகமே ஏற்படாத வகையில் தயாரிக்கப்பட்ட அற்புத உயிர்க்கொல்லிதான் இந்த பற்பசை.

ஒரு விஷயத்தை கூர்ந்து கவனித்திருந்தால் உங்களுக்கே புரிந்திருக்கும்.  கடந்த ஐந்து ஆண்டுகளாக, பல் மருத்துவமனைகளின் எண்ணிக்கை நகரங்களில் மட்டுமல்லாது கிராமப்புறங்களில் பெருகியிருக்கிறது.  அதுபோல, பெரிய பெரிய கார்போரேட் நிறுவனங்கள் எல்லாம், பல் மருத்துவத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறது என்பதை கூர்ந்து பார்த்தால் நீங்களே உணர்வீர்கள்.

மருத்துவக் காப்பீடு என்ற பெயரில் பல ஆயுள் காப்பீட்டு நிறுவனம் புதிதாக கிளம்பியிருப்பார்கள்.  அவர்களிடம் போய், பல் மருத்துவத்திற்கு காப்பீடு உண்டா என்று கேட்டுப் பாருங்கள், கிடையவே கிடையாது என்பார்கள்.  ஆயிரத்தில் ஒருவருக்கு, லட்சத்தில் ஒருவருக்கு என்று வரும் விபத்திற்கும், உடற் பாகங்கள் இழப்பிற்கும்தான் அவர்கள் காப்பீடு வழங்குவார்களே தவிர (இதில் நடக்கும் சதி இன்னொரு கட்டுரையில்…), இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியாவில் வாழும் ஒவ்வொருவருக்கும் பல் சார்ந்த நோய் என்ற ஒன்று தவிர்க்கவே முடியாது எனும்பட்சத்தில் எப்படி அதற்கு காப்பீடு வழங்குவார்கள்.

பற்பசை என்பது நம்மை சுவைத்து சுவைத்து சாப்பிடும் ’ஸ்லோ பாய்சன்’. இது கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பல்லை சேதப்படுத்தும், உங்கள் ஆயுளோடு விளையாடும் இந்த விளையாட்டிற்கு நீங்கள் அளிக்கப்போதும் தண்டம்தான் மருத்துவ சிகிச்சை என்பது.  சென்னையில் சூத்தைப் பல் சிகிச்சை, மற்றும் ரூட் கெனால் சிகிச்சைக்காக வாங்கப்படும் கட்டணம் ரூ.50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை.

அம்மாடியோவ்… என்றுதானே வாயைப் பிளக்கிறீர்கள்…

நான் கரெக்ட்டா வாக்கிங் போறேன்… பாகற்காய் சூப் தவறாமல் குடிச்சுடுவேன்.. கரெக்ட்டா டயட் கண்ட்ரோல் பண்றேன்.  இருந்தாலும் சர்க்கரை அளவு அவ்வளவா குறையலேயே என்று குறைப்பட்டுக் கொள்பவர்கள், உடனடியாக பற்பசையினால் பல் தேய்ப்பதை நிறுத்திவிட்டு ஆலையும், அல்லது வேம்பையும் வைத்து பல் தேய்த்துப் பாருங்கள் நீங்கள் ஆச்சர்யப்படும் அளவிற்கு சர்க்கரை உங்கள் கட்டுக்குள் வந்திருக்கும்.

இப்படி உங்கள் பற்களை சேதப்படுத்தி, உங்களை பல் மருத்துவமனைக்கு வரவழைத்து அதன் மூலம் மருத்துவம் என்ற பெயரிலும், மருந்து என்ற பெயரிலும் சம்பாதிக்கும் தொகை ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் (இது குறைந்தபட்சம் ஓர் ஆண்டுக்கானது).  இவ்வளவு சிகிச்சைப் பெற்று உங்கள் பல் சரியாகிவிடுமா என்றால், அதுவும் கேள்விக்குறிதான்.
நம் உடல் நலத்தை கெடுக்கும் எமன் வெளியேயோ, சாப்பிட்டிலோ இல்லை, விளம்பரம் என்ற பெயரில் பாரம்பர்யமாய் நாம் செய்துவந்த விஷயத்தை மறந்து செயற்கையாய் தேடிப்போன விஷத்தால் விளைந்ததே என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

அப்போ இதற்கெல்லாம் என்னதான்யா தீர்வுன்னுதானே கேட்குறீங்க…

அடுப்புக்கரிதான்.  இது எனாமலை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.  இது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.  (அதனால்தான் இப்போ உங்க பேஸ்ட்டுல சாம்பல் இருக்கான்னு, புதுசா விளம்பரம் பண்ணிட்டு இருக்காங்க… (அதுக்குள்ளேயும் விஷமம் இருக்கு மறந்துடாதீங்க…))
அடுப்புக்கரி சாம்பல், அல்லது வேம்பு குச்சு, பயோரியா பல்பொடி, அல்லது சித்த மருத்துவரை அணுகினால் நாம் வாழ்வியலோடு குறிப்பாக நம் பல்லுக்கு முழு ஆரோக்கியத்தை தரும் பல்பொடியை எழுதித்தருவார்கள்.  50 ரூபாய்க்கு மூணு மாசம் வரும் அந்த பல்பொடி, உங்கள் பல்லுக்கு 100 சதவீதம் (99 சதவீதமெல்லாம் கிடையாது) பாதுகாப்பு அளிக்கக்கூடியது.

வருங்கால சந்ததி ஆரோக்கியமா இருக்க வேண்டுமா? பற்பசையை கடாசுங்க; பாரம்பர்ய முறையை கடைபிடிங்க.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s