நான்கு மெழுகுவர்த்திகள்

98

✅ஒரு தடவை படித்து பாருங்கள். பல தடவை யோசிப்பீர்கள்😇😇😇
இந்த கதையை.}

நான்கு 🎍🎍🎍🎍மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு
இருந்தன. மெலிதாய் 💨காற்று வீசிக்கொண்டு
இருந்தது..!!

💨காற்றை கண்டதும்…

‘அமைதி‘ என்ற முதல் 🎍மெழுகுவர்த்தி ‘
ஐயோ காற்று வீசுகின்றது, நான் அணைந்து
விடுவேன் என்று பலவீனமாக சொன்னது.
💨காற்று பட்டதும் அணைந்துவிட்டது.

Continue reading

Advertisements

கூவத்தின் கதை!

 

 ‘கூவத்தைப் பார்த்தீங்களா… எப்படி சுத்தமாகிடுச்சு. இதைச் சுத்தப்படுத்தப் பல ஆயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்கப்போறதா சொன்னாங்க. ஆனா ஒரு பைசா செலவு இல்லாம மழையே சுத்தப்படுத்திட்டுப் போயிடுச்சு’ – பாலங்களின் மேல் இருந்து கூவம் நதியைப் பார்த்து பிரமிக்கிறார்கள் சென்னைவாசிகள்.

இந்த மழை வெள்ளம், கூவம் கரையோரத்தின் பல்லாயிரம் மக்களைப் பரிதவிக்கவிட்டிருக்கிறது. பல உயிர்களைப் பலிகொண்டிருக்கிறது. நதியின் கரையோரங்களில் உடைப்பு ஏற்பட்டு ஊரெல்லாம் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. ஆனால், இதன் மறுபக்கமும் இருக்கிறது. கூவம் நதியில் தண்ணீர், அதன் உண்மையான நிறத்துடன் பாய்ந்துசெல்லும் அதிசயத்தை இந்தத் தலைமுறை இப்போதுதான் பார்க்கிறது. கறுப்பு நிறச் சாக்கடை இல்லை; துர்நாற்றம் நிரம்பிய கழிவுகள் இல்லை. ஒரு பாவத்தைப்போல எல்லாம் அடித்துச் செல்லப்பட்டு, கூவம் மறுபிறப்பு எடுத்திருக்கிறது. அதற்காக தாமிரபரணி தண்ணீர்போலத் தூய்மையாக ஓடுகிறது எனப் பொருள் இல்லை. ஆனால் கூவத்தில் இப்போதுதான் ஒரு நதியின் சாயல் பளிச்சிடுகிறது.

கூவம் மட்டுமல்ல… அடையாறும் அதன் அசல் நிறத்தை மீட்டு எடுத்திருக்கிறது. சென்னை நகருக்குள் பாய்ந்தோடும் பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா ஆகிய மற்ற நீர்வழித்தடங் களிலும் பாய்ந்து ஓடுகிறது நீர். இது எவ்வளவு காலத்துக்குத் தொடரும் என்பதுதான் இப்போது நம் முன்னே இருக்கும் கேள்வி. ‘குறைந்தபட்சம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு இந்த நிலைமை நீடித்தாலே அதிசயம். அதற்குள் மறுபடியும் சாக்கடையையும் கழிவு நீரையும் திறந்துவிட்டு பழைய மாதிரி மாற்றிவிடுவார்கள்’ என்பதுதான் பெரும்பாலானோரின் அச்சம்.

கூவம் நதியின் பிறப்பிடம் தொடங்கி, அது கடலில் கலக்குமிடம் வரையிலும் முற்றிலுமாகத் தூய்மையாகி இருக்கிறது. எந்தெந்த ஆட்சியாளர்களோ திட்டம் போட்டும், எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் செய்ய முடியாத வேலையை இயற்கை ஓரிரு நாட்களில் செய்து முடித்துவிட்டது. இதைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் இப்போது நமக்கு முன் உள்ள சவால்!

Continue reading

வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?

‘மூன்று மாத காலத்தில் பெய்ய வேண்டிய மழை, ஒரு சில நாட்களிலேயே கொட்டித் தீர்த்துவிட்டால் என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தாலும் ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்குவதையும் அதனால் சேதங்கள் விளைவதையும் தவிர்க்க இயலாது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பேசியதைப் படித்தால், ‘நியாயம்தானே’ என்று தோன்றும்!

‘போர் என்ற ஒன்று நடந்தால் மக்கள் இறக்கத்தானே செய்வார்கள்?’ என்று சொன்னவர்தானே இந்த ஜெயலலிதா என்பதை நினைவுபடுத்தி யோசித்தால்தான், ‘எங்களால் என்ன செய்ய முடியும்?’ என்ற சமாளிப்பும், ‘இதெல்லாம் தலைவிதி’ என்ற சால்ஜாப்பும் புலப்படும். ‘எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தைக் குற்றம் சொல்லலாமா?’ என்றால், ‘ஆக்கவும் அழிக்கவும் வல்லது அரசு’ என்பதால் அதுதானே பொறுப்பேற்க வேண்டும்? `நான் உத்தரவிட்டேன், எனது தலைமையிலான அரசு, எனது அரசு’ என்று எல்லாவற்றுக்கும் தானே என்று சொல்லிக்கொள்கிற ஜெயலலிதா, கடந்த ஒரு மாத காலத்தில் இயற்கைப் பேரிடரை எதிர்கொண்ட விதம், ‘எதிர்கொள்ள வேண்டும்’ என்று நினைத்தாரா இல்லையா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது. Continue reading

2015-ன் டாப் 50 வைரல் ஹிட்கள்!

2015-ன் டாப் 50 வைரல் ஹிட்கள்!

’நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்..!’ என்று ரஜினி சொல்வது சோஷியல் மீடியா வைரல்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும். யாரும் எதிர்பாரா சமயம் குபீரென கிளம்புகின்றன வைரல்கள். அதை யார் நினைத்தாலும் உருவாக்க முடியாது, பரபரப்பாக இருப்பதை அடக்கவும் முடியாது. அப்படி 2015-ல் தமிழர்கள் அதிகம் எதிர்கொண்ட வைரல்களில் ‘டாப்-50’ மட்டும் இங்கே…

1. சென்னை வெள்ளம்

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என்ற வார்த்தைகளுக்கு புது அர்த்தம் கொடுத்தது சென்னை வெள்ளம். சென்னை, கடலூர்  உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது ஆர்வலர்கள், உலகெங்கிலுமிருந்து உதவிக்கரம் நீட்ட ஏதுவாயிருந்த சாதனம் சமூக வலைத்தலங்களே. அண்மையில், தரையில் மட்டுமின்றி, சமூக வலைத்தலங்களின் திரையிலும் நிரம்பி ஓடியது தமிழகப்  பெருமழை மற்றும் வெள்ளமே.

Continue reading