சுனாமியும் அண்மை வெள்ளமும்!

2

தமிழக மக்களை, 2004 டிசம்பர் 26,காலை 8.30 மணி செய்தி மிரட்டிக் கொண்டிருந்தது. கடல்பொங்கி மக்கள் ஓட்டம் என்பது தான் அந்த செய்தி.ஆந்திரா, கேரளா, லட்சத் தீவு, அந்தமான், பாண்டிச்சேரி மற்றும் தமிழகம் என ஐந்து மாநிலங்களை சுனாமி தாக்கினாலும், பாதிப்பு தமிழகத்திற்கே அதிகம். உயிரி ழப்பு சுமார் 8 ஆயிரம், காணாமல் போனவர் பற்றிய விவரம், தொடர்ந்து ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. இலங்கை,கிழக்கு கடலோர மாவட்ட மக்களை, பாது காத்தது, ஏனென்றால், இலங்கையிலும், பாதிப்பு அதிகம்.தமிழகத்தின் சென்னை, கடலூர்,நாகை, குமரி ஆகிய 4 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டாலும், நாகையில் 6 ஆயிரத்திற்கும் மேலான எண்ணிக்கையில், மக்கள்உயிரைப் பறித்திருந்தது. வேளாங் கண்ணி மாதா கோவில் பக்தர்கள் பலஆயிரம் பேர், கடலில் மூழ்கி உயிரிழந் திருந்தனர். 3 தினங்கள் கழித்து அந்தமக்களின் உடல்களை, இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட சிலஅமைப்பினர் அப்புறப்படுத்திக் கொண்டு இருந்தனர்.

அண்மையில் பெய்த பெருமழை வெள்ளப் பாதிப்புகளில் இருந்து மக்களைமீட்பதில், நிவாரணம் வழங்குவதில், பணியாற்றிய இளைஞர்கள், ஐடிஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் போல், அன்றும் கடற்கரையில் வாகனங் கள் குவிந்தன. நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். கடலோடிகளான மீனவர்கள், மற்ற பகுதி மக்களுடன் நெருக்கமாக இருப்பதில்லை. ஆனால் சுனாமி பாதிப்பு, பிறருடனான நட்பு ஏற்பட, அவர்களுக்கு ஒரு துவக்கமாக இருந்தது. சுனாமி குடியிருப்புகள் கட்டப்படும் அளவிற்கு நிவாரணப் பணிகள் நடந்தன. பன்னாட்டு அரசு சாரா நிறுவனங்கள் வரை களத்தில் நின்றார்கள். அவை அனைத்தும் உளமார்ந்த பாராட்டு பெற்ற செயல் கள். அதற்காக எவ்வளவு நன்றிக் கடன் வேண்டுமானாலும் செலுத்துவோம் என,

இளைஞர்கள் பேசிய வார்த்தைகளில், இன்னும் ஈரம் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது. அதை நிரூபிக்கவும் செய் தார்கள். ஆனாலும் சிலர் தங்களின் செயலை, வந்த நிதி குறித்த விவரங்களை சமூக தணிக்கைக்கு உட்படுத்த வில்லை. அது இன்று வரை கேள்விகளை யும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

அரசு என்ன செய்தது?

அன்றைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்ட அதிகாரம் கொண்டவர்கள், மீனவர்கள் கடற்கரையில் இருந்து அப் புறப்படுத்தப் பட வேண்டும். குறைந்தது 1000 மீட்டர்களுக்கு அப்பால் குடியிருப்பு கட்டப்பட வேண்டும்“ என்றனர் ஒரு கி.மீ தூரம் கடற்கரை அப்படியே இருக்குமா? என்ற கேள்விக்கு, அங்கு ரிசார்ட்டுகள் (ஓய்வில்லங்கள்) கட்டப்படும் என்றனர். ஓய்வில்லங்களிலும் மனிதர்கள் தானே தங்குவர், அவர்களைக் காக்க செய்யும் ஏற்பாடுகளை, ஏன் மீனவர்களைக் காக்க செய்திடக் கூடாது போன்ற கேள்விகளை, அதிகப் பிரசங்கித் தனம் என்றனர்.சுனாமி வந்த போது, கடலூர் சிப்காட் பகுதிகளில் இருந்து மருந்து உற்பத்தித் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டு மருந்துகள், வேதியியல் பொருட்கள் கடலில் கலந்தன. நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் இறால் பண்ணைகளின் காரணமாக, கிராமங்கள் கடலால் சுற்றிவளைக்கப்பட்டன.

காரணம் இறால் பண்ணைகள் கட்டப்பட்ட விதமும், உயரமும் ஆகும். அதேபோல் கடலூர் தொழிற்சாலைகள் காரணமாக, தேவனாம்பட்டினம் பெரும் பாதிப்பை சந்தித்தது. அதாவது உயரமான நிறுவனங்கள் கடல்அலையைத் தாங்கி, தண்ணீரை அருகில் இருந்த குடியிருப்புகளை நோக்கி வேகமாக திருப்பி அனுப்பியது.இங்கு தொடர்ந்து நாம் எழுப்பும் கேள்வி, நிறுவனங்களை ஏன் குடியிருப்புகள் அருகில் அமைக்க அனுமதிக்கிறீர்கள்? சுனாமிக்குப் பிறகு மக்கள் அப் புறப்படுத்தப்பட வேண்டும் என்றால், நச்சுத் தன்மை கொண்ட வேதியியல் பொருள்களும், இறால் பண்ணை கழிவு களும் கடலில் கலப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஏன் கவலை கொள்ளவில்லை? அது சுற்றுப்புறத்தை மட்டு மல்ல, கடல் உயிரினங்களையும் அழிப்பதுகுறித்து, ஏன் கவலை கொள்ளவில்லை என்பதாகும்.

சலுகைகள் மட்டுமல்ல, வாழ்விடங்களும் பறிக்கப்படும்

நிறுவனங்களுக்கு நமது அரசுகள்அழிக்கும் சலுகைகள் குறித்து, இடதுசாரிகள் தொடர்ந்து குரல் எழுப்பு கின்றனர். இயற்கைப் பேரிடர்களைப் பயன்படுத்தி, மக்களின் நலன் என்றபெயரில் வாழ்விடங்களைப் பறிக்கும்செயலை அரசு செய்கிறது. உதாரணத் திற்கு, கடலூர் நிறுவனங்கள் தேவனாம்பட்டினம் மீனவர்கள் 700 பேரின் உயிரைப் பறித்தன, என மதிப்பிடாமல், நிறுவனங்களுக்கு எதுவும் ஆகவில்லை;வலுவற்ற கட்டிடங்களில் வாழ்ந்த மீன வர்கள் இறந்தனர் என மதிப்பிடப்பட்டது.ஏற்கனவே சென்னை மாமல்லபுரம் கடற்கரைச் சாலையில், மீனவர்கள் தங்கள் பிழைப்பாதாரம் கடல் என்பதில் இருந்து, வேறு தொழிலுக்கு மாற்றிக் கொண்டனர். இதனால் உத்தரவாதமான வருமானத்தை மீனவ இளைஞர்கள் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலையில் வரிசையாக அமைக்கப்பட்ட ரிசார்ட்டுகள் இதற்கு காரணம். மீனவர் குடியிருப்பு, ஆக்கிர மிப்பு என்றால், விஜிபி தங்க கடற்கரையில் ஆக்கிரமிப்பு இல்லையா? இன்னும் பல நிறுவனங்கள் எந்த பட்டா நிலத்தில் செயல்படுகின்றன என்பதை அரசுகள் பகிரங்கமாக வெளியிடுவதில்லை.சுனாமியின் போது அதிமுக ஆட்சியில் இருந்தது. அதன்பின் வந்த திமுக ஆட்சி, மத்திய அரசின் கடலோர மேலாண்மை சட்டத்தில், கருத்துக்கள் எதையும் வெளிப்படையாக கூறவில்லை. மாறாக தமிழக மின்சாரத் தேவையை தீவிரமாக பேசியது. செய்யூர், பரங்கிப்பேட்டை, நாகை மாவட்டத்தின் பிள்ளைபெருமாள் நல்லூர் உள்ளிட்டவை, உடன்குடி ஆகிய முன்மொழிதல்கள் இதன்தொடர்ச் சியே ஆகும். இது மின்சாரத் தேவைக்கு தீர்வுகாணும்; வேலைவாய்ப்பு அளிக்கும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் இருக்கும் வேலை வாய்ப்பை அழிக்கும், இயற்கை வளங்களைச் சேதப் படுத்தும் என்பதையும் இணைத்தே பார்ப்பதன் மூலம்தான் உண்மையான தீர்வை காணமுடியும். தமிழக அரசியல் வரலாற்றில் அதிமுக, திமுக ஆட்சிகள் மக்கள் நலனை முன்னுறுத்துவதாக கூறிய திட்டங்கள் பயனளித்ததில்லை.

வெள்ளப் பாதிப்புகள் தரும் பாடம் ஏழைகளுக்கு மட்டுமா?

சுனாமியோ அண்மை வெள்ளப்பாதிப்போ, ஏழை பணக்காரர் என்ற வேறுபாடு பார்க்கவில்லை. அனைவரையும் பாதித்துள்ளது. சேமிப்பு இல்லாததால் அன்றாடம் காய்ச்சிகள் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது சென்னை உயர்நீதிமன்றம் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என கூறியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு சிரம் மேற்கொண்டு தீவிரமாக பணியாற்றுவது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளது. அரசு ஆக்கிர மிப்புகளான, பேருந்து நிலையங்கள், நீதிமன்றங்கள் ஆகியவை என்னவாகும் என்பது தெரியவில்லை.சென்னை புறநகர் பகுதிகளில் கூவம் ஆற்றங்கரையிலும், சில ஏரிகளை ஆக்கிரமித்தும் கட்டப்பட்டுள்ள கல்லூரிகள் என்னவாகும்? இரண்டு தினங்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றம் ஸ்ரீராமச் சந்திரா மருத்துவக் கல்லூரி ஆக்கிரமித் துள்ள ஏரி நிலத்திற்கு வாடகை வாங்க வேண்டியதில்லை, மாறாக ஏரியாக இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதே 1992ல் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி போரூர் ஏரியில் கட்டப்பட்டுள்ளதால், கல்லூரி தனியார் முதலீட்டில் கட்டப் பட்டது என்ற வாதத்தை நிராகரிக்க வேண்டும் என, இந்திய மாணவர் சங்கம் வழக்கு நடத்தியது. அன்று வழக்கு வெற்றிபெற வில்லை. இன்று இந்திய மாணவர் சங்கத்தின் கருத்து, அங்கீகாரம் பெற் றுள்ளது.

சதுப்பு நிலத்தின் அருமை

சதுப்பு நிலத்தின் அருமை எந்தள விற்கு மக்களை சென்றடைந்துள்ளது? என்பது விவாதிக்கப்படவில்லை. மிக அரிதான சதுப்பு நிலம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று, இதுகுறித்து குறைந்தபட்ச அக்கறையை அரசுகள் வெளிப் படுத்தவில்லை. உதாரணம் சென்னை வேளச்சேரியில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம். இதுவும் ஐ.டி மற்றும் கல்லூரிகள் போன்ற நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் வெள்ளத்தால், ஏற் படும் மண் அரிப்பை தடுக்கும் சக்தி சதுப்புநிலத்திற்கு உண்டு பல்லுயிர் வளப் பெருக்கத்திற்கு உறுதுணை புரியும் திறன்கொண்டது, இயற்கையான மாசு சுத்தி கரிப்பு இயந்திரமாக செயல்படக் கூடியது. இத்தகைய குணங்களைக் கொண்ட இயற்கைக் கொடையான, சென்னை நகரின் சதுப்பு நிலத்தை தனியார் கொள்ளையடிக்க துணைபோகலாமா? ஆற்றங்கரையில், ஏரியோரத்தில் வழியில்லாத காரணத்தால் குடியிருக்கும் மக்களை அப்புறப்படுத்துவதில் வீரம் காட்டும் தமிழக அரசு, மேற்குறிப்பிட்ட நிறுவனங்களை அகற்றுவதற்கு முன்னுரிமை தந்து, இயற்கை மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க வேண்டும். அதுவே பேரிடர்களில் இருந்து மக்களை காக்கும் செயலாகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s