சங்கரா மீன் (Red snapper)

சங்கரா மீன் (Red snapper)


சங்கரா மீன்கள் (Red Snapper) மீன்களிலேயே பல வகைகள் உண்டு.பார்வைக்கு, கவர்ந்திழுக்கும் தொட்டி மீன்களைப் போன்ற அழகுடன் இளஞ்சிவப்பு நிறத்தை பொதுவான பண்பாக கொண்டிருக்கும் சங்கரா மீன்கள் நம்ம ஊரில் பரவலாய் அதிகம் விரும்பி உண்ணப்படும் மீன் வகைகளில் ஒன்று.

சங்கரா மீன் பொதுவாக குழம்பிற்கு ஏற்றவை. புளி சற்று தூக்கலாக ஊற்றி ஃப்ரெஷ் சங்கரா மீன் போட்டு வைக்கப்படும் மீன் குழம்பு பெரிய மெனக்கெடல் இல்லாமலேயே அட்டகாசமான சுவையோடு இருக்கும்.வறுவலுக்கும் சுவையாகவே இருக்கும்.பொதுவாக சங்கரா மீன்கள் எளிதில் உடையும் தன்மையோடு இருக்கும் என்பதால் வறுவல் செய்ய வேண்டுமாயின் சற்று பெரிய சைஸ் சங்கராவைத் தேர்வு செய்ய வேண்டும். கிலோவிற்கு மூன்றிலிருந்து நான்கு மீன்கள் நிற்கும் அளவிற்கான சைஸில் இருப்பவை வறுவலுக்கு நல்ல சுவையுடனும் உடையாமலும்  இருக்கும். மிகச் சிறிய அளவிலான மீன்கள் அதாவது நகரை மீன்கள் சைஸில் இருப்பவை சுவையோடு இருப்பினும் அவை எளிதில் உடைந்துவிடும் என்பதால் சாப்பிட ஏதுவாக இராது. குழம்பு நொறுங்கிக் கிடக்கும் முட்களால் விரவிவிடும்  என்பதால் மிகச் சிறிய சைஸ் சங்கரா மீன்களை தவிர்ப்பது நலம். போலவே பல பொடிகள் சேர்த்து வைக்கும் குழம்பில் சங்கராவை தவிர்த்து விடுதலும் நலம். ஏனெனில் விரைவாக வெந்துவிடும் தன்மையுடைய இவை மற்ற வகை மீன்கள் வேகும் நேரத்தில் உடைந்து கரைந்து குழம்பெங்கும் முட்களாய் விரவிவிடும். இம்மீன்களின் இன்னொரு மைனஸ் இதன் வாடை. கவுச்சி வாசம் அதிகம் அடிக்கும் மீன்களில் சங்கராவும் ஒன்று.பொதுவாக மீன்களின் வாடையைப் போக்க சுத்தம் செய்யும் போது மஞ்சள் தூள் சேர்ப்பார்கள், சங்கராவிற்கு சற்று கூடுதலாக மஞ்சள் தூள் சேர்த்து அலச வேண்டியிருக்கும்.

சங்கரா மீன்கள் கிலோ 200 லிருந்து அதிபட்சமாய் கிலோ 300 ரூபாய் வரை விற்பனையாகும். இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு இது சுவையுடைய மீனா என்றால் என்னைப் பொருத்த மட்டில் இல்லை என்பேன். காரணம் இதை விட குறைவான விலையில் கூடுதல் சுவையுடன் கூடிய மீன்கள் வெரைட்டி நிறைய உண்டு. மற்ற மீன்களைப் பற்றி அதிகமாய் தெரியாததாலும், பரவாயில்லை என்று வகையில் இதன் சுவையிருப்பதால் சேஃபர் சைடாகவும் மற்றும் கவர்ந்திழுக்கும் இதன் நிறம் ஒரு காரணமாகக் கூட இவை அதிக மக்களால் வாங்கப்படுகிறதோ என்கிற எண்ணம் உண்டு.

இங்கே முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று, நம்ம ஊரில் கிடைக்கும் சங்கரா வகைகளில் இரண்டு வகை முக்கியமானது. அவற்றில் ஒன்று நல்ல சுவையுடன் இருப்பவை மற்றொரு வகை   சப்பென்று இருக்கும். இந்த இரண்டாவது வெரைட்டி கிலோ 80 ரூபாயிலிருந்து 150 வரை பெரிய மார்க்கெட்களில் கிடைக்கும். ஆனாலும் அவற்றை முதல் தர வெரைட்டியின் விலையில் வித்தியாசம் தெரியாதவர்கள் தலையில் கட்டிவிடுவார்கள்.போலவே நகரை மீன்களையும் அதன்      இளஞ்சிவப்பு நிறத்தை வைத்து சங்கரா எனவும் விற்பார்கள். நகரை சுவையான மீன் எனினும் நகரையை சங்கராவைவிட குறைந்த விலையில் வாங்கலாம்.

மேலே இருக்கும் இரு வகை சங்கராவில் பளிச்சென்று மின்னும் இளஞ்சிவப்பில் மஞ்சள் பார்டர் வயிற்றுப் பகுதியில் இருப்பவை முதல் வகை. சற்றே வெளிர் பிங் நிறத்தில் ஃப்ளோரசண்ட் பார்டர் வயிற்றுப் பகுதியில் தெரிபவை இரண்டாம் வெரைட்டி. சமயத்தில் முதல் வெரைட்டி பழைய மீனாகும் பட்சத்தில் வெளுத்துப் போய் இரண்டாவது வெரைட்டி போன்றே தோன்றும் எனினும் அவையும் வாங்க உகந்ததல்ல. மூன்றாவது படம் நகரை மீன். இளஞ்சிவப்பு பொதுப் பண்பு என்றாலும் நிறைய வேறுபாடுகள் உண்டு நகரைக்கும் சங்கராவிற்கும். நகரை மீன்களைப் பற்றி எழுதியிருந்த கட்டுரையில் இது குறித்து விரிவாக எழுதியிருந்தேன்.

அவ்வப்போது மாற்றுச் சுவைக்கு சங்கரா மீன்களை சுவைக்கலாம். குறிப்பாக சங்கரா மீன்களில் முதல் வெரைட்டியில் பெரிய சைஸ் மற்றும் ஃப்ரெஷ் சங்கரா கிடைத்தால் தயங்க வேண்டியதில்லை.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s