எளிய முறையில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி?:

passport-350x250தாய் நாட்டைக் கடந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைவரும் பாஸ்போர்ட் பெறுவது அவசியம். பாஸ்போர்ட்களில் நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன.

குடிமக்கள் அனைவருக்கும் சாதாரண பாஸ்போர்ட் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் வழங்கப்படும். பிரதமர், முதல்வர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கு டிப்ளோமேட்டிக் பாஸ்போர்ட் வழங்கப்படும். வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு ஜம்போ பாஸ்போர்ட் வழங்கப்படுகின்றன.

பாஸ்போர்ட் பெறுவதற்கான ஆவணங்கள்

1. இருப்பிடச் சான்றிதழ்

2. பிறப்புச் சான்றிதழ்.

* இருப்பிடச் சான்றாக – குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், குடிநீர் வரி, மின் கட்டண ரசீது, தொலைபேசிக் கட்டண ரசீது, வருமான வரி மதிப்பீட்டுச் சான்றிதழ் போன்றவற்றைக் இருப்பிடச்சான்றாக இணைக்கலாம்.

* பிறந்த நாளுக்கான ஆதாரமாக பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்களையோ, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, அல்லது பதிவுத்துறை வழங்கும் சான்றிதழ்களையோ ஆதாரமாக இணைக்கலாம்.

* ஜனவரி 26, 1989-க்குப் பிறகு பிறந்தவர்கள், வருவாய்த்துறை அல்லது பதிவுத்துறை வழங்கிய பிறப்புச் சான்றிதழ்களையே ஆதாரமாகக் கட்ட வேண்டும்.

* விண்ணப்பத்துடன் மேற்குறிப்பிட்ட இரண்டு சான்றிதழ்களின் நகல்களின் இரண்டு படிகளை இணைக்க வேண்டும். நேரடியாக பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கிறவர்கள் உண்மைச் சான்றிதழ்களை உடன் எடுத்துச் சென்றால், சமர்ப்பித்துள்ள நகல்களுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பார்கள்.

* சொந்த ஊர்விட்டு வெளியூர் சென்று படிப்போர், விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் அப்பகுதிகளிலேயே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது பெற்றோர்கள் வசிக்கும் பகுதியிலும் விண்ணப்பிக்கலாம்.

* அவ்வாறு படிக்கும் இடத்தில் இருந்து விண்ணப்பிப்பவர்கள் தங்கிப்படிக்கும் இடத்தின் முகவரியைத் தற்போதைய முகவரியாக அளிக்க வேண்டும். அதற்கான ஆதாரத்தை அந்தக் கல்வி நிறுவன தலைவர் அல்லது முதல்வரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

* விண்ணப்பத்தில் இருப்பிட முகவரி தெளிவாக இருத்தல் வேண்டும்.

பொதுவாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, அந்த அலுவலகத்திலிருந்து விண்ணப்பத்தை காவல் துறைக்கு அனுப்பி, நீங்கள் அந்தப்பகுதியில்தான் வசிக்கிறீர்களா? நீங்கள் ஏதேனும் கிரிமினல் குற்றம் புரிந்தவரா? அப்படி ஏதும் குற்றங்கள் உங்கள் பெயரில் உள்ளனவா என உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து விசாரித்து நீங்கள் குற்றமற்றவர் என காவல்துறை அறிக்கை பெற்ற பிறகே பாஸ்போர்ட் வழங்குவர்.

சிறுவர்-சிறுமியர்

சிறுவர்-சிறுமியர்களுக்கு (14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு) பாஸ்போர்ட் எடுக்க விரும்பினால், பெற்றோர்கள் பாஸ்போர்ட் இருப்பவராக இருந்தால், காவல்துறை அறிக்கை தேவைப்படாது. பெற்றோர்க்கு பாஸ்போர்ட் இல்லாவிட்டால் அவர்தம் விண்ணப்பங்களும் காவல் துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே பாஸ்போர்ட் அளிப்பர்.

கட்டணம்

பொதுவாக சாதாரண பாஸ்போர்ட் பெற ரூ. 1000/- செலுத்தினால் போதுமானது . ஆனால் ஜம்போ பாஸ்போர்ட் பெற ரூ 1500/- கட்டணம் செலுத்த வேண்டும். சிறுவர்-சிறுமியர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணமாக ரூ. 600 செலுத்த வேண்டும்.

தட்கல் திட்டம்

பொதுவாக, பாஸ்போர்ட் விண்ணப்பங்களை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் செலுத்தி 30 நாள்களில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு விடுகின்றன. அவசரமாக வெளிநாடு செல்பவர்க்கு உதவியாக விரைந்து பாஸ்போர்ட் பெறவும் வகையிருக்கிறது. இதற்கு “தத்கல் திட்டம்” என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் சிறப்புரிமை அடிப்படையில் விரைந்து பாஸ்போர்ட் பெற முடியும்.

காவல்துறை சான்றிதழ் பெற்றவர்கள், காவல்துறைச் சான்று தேவைப்படாத 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர், ஆட்சேபனை இல்லாச் சான்று பெற்ற அரசு ஊழியர்கள், அவர்களது துணைவியர் மற்றும் பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டோர் மட்டுமே தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன் பெற முடியும். அவ்வாறு விரைந்து பாஸ்போர்ட் பெற விழைவோர் ரூ.2500 கட்டணமாக செலுத்த வேண்டும். 3 ஆவணங்கள் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.

புதுப்பித்தல்

பாஸ்போர்ட் பெற்றவர்கள் அதை 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். பிறகு புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்கு ரூ. 1000/- கட்டணம் செலுத்த வேண்டும்.

தொலைந்து போனால்

பாஸ்போர்ட் தொலைந்து போனால் காவல் துறையினரிடம் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் “Non Traceable” சான்றிதழ் தருவார்கள். அதை ஒப்படைத்தால் டூப்ளி கேட் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு ஆர்டினரிக்கு 2500 ரூபாய் மற்றும் தட்கலுக்கு 5000 ரூபாய் கட்டணம்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s