பஞ்ச ரோடு

216

திருச்சியில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு இன்னொரு பெயர் இருக்கு உங்களில் யாருக்காவது தெரியுமா … ???
—————
… பஞ்ச ரோடு ….. என்று சொல்லுவார்கள் …!!!
————–
பஞ்ச ரோடு –என பெயர் வர காரணம் என்ன தெரியுமா .?
————-


1895 ஆம் ஆண்டு நம் நாட்டில் ஏற்ப்பட்ட கடுமையான பஞ்சத்தின்பொது அப்போதைய வெள்ளைக்காரன்
தோராய கணக்குப்படி சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல்
பசியால் மட்டுமே இறந்துவிட்டனர் …
————
அந்த நேரத்தில் வெள்ளைக்காரன் பஞ்சத்தை போக்க எவ்வளவோ முயற்சிகளை எடுத்துக்கொண்டானாம் …
———–
வெளிநாடுகளில் இருந்து கப்பல் கப்பலாய் உணவு தானியங்களை கொண்டுவந்து இறக்கியும் பஞ்சம் தீரவில்லை
———–
எங்கு பார்த்தாலும் பசி பட்டினி … மரண ஓலங்கள் …
———–
அந்த நேரத்தில்தான் வெள்ளைக்காரன், உணவு தானியங்களை விரைவாக பல ஊர்களுக்கு எடுத்துச்செல்ல, பஞ்சத்தால் வாடும் மக்களை வைத்தே அந்த சாலையை அமைத்தானாம்
———–
ரோடு போட போறவங்களுக்கு கூலியாக ஒரு குவளை
அரிசி கஞ்சி குடுப்பானாம் …
————
என்னுடைய தாத்தா சிறுவயதில் அவங்க அப்பாகூட போயி
ரோடு போடும் இடத்தில் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து இருப்பாராம் அவங்க அப்பா ரோடு வேலை செஞ்சுட்டு கூலியா அந்த அரிசி கஞ்சிய வாங்கி என் தாத்தாவுக்கு குடுத்துட்டு தானும் குடித்துவிட்டு வீட்டுக்கு மீதியை எடுத்துவருவாராம் …
———–
அதனாலதான் அந்த (திருச்சி – சென்னை) ரோட்டுக்கு
…. பஞ்ச ரோடு …. அப்புடின்னு பேரு வந்துச்சாம் ….
———-
அப்போதைய மக்கள் தொகை பதினேழு கோடி மட்டுமே …
இப்போ நூத்தி இருபது கோடிக்குமேல், அதே பஞ்சம் இப்போ வந்தா என்ன ஆகும் … ???
———-
அப்போ இருந்த வெள்ளைக்காரன் வெளிநாடுகளில்
இருந்து தானியங்களை கொண்டுவந்து இறக்கினான் …
———-
இப்போ உங்களுக்கு எந்த நாட்டுக்காரன் தானியம் குடுப்பான் …
———-
சீனா காரன் காசு வாங்கிகிட்டு பிளாஸ்டிக் சாமான் குடுப்பான்
———-
அமேரிக்கா காரன் காசு வாங்கிகிட்டு கோகோ கோலா குடுப்பான்
———
யாராவது அரிசி குடுப்பானுங்களா …. ???
———
முகநூலில் நண்பர்கள் எல்லாரும் பசி பட்டினி பஞ்சம்
என்றால் சோமாலியாவைதான் சுட்டி காட்டுகின்றனர் …
———-
வெளிநாட்டுகாரன் … பசி, பட்டினி, ஏழை, பஞ்சம் ….
இவைகளுக்கு இந்தியாவை மட்டுமே உதாரணமாக
சொல்கிறான் …என்பது உங்களுக்கு தெரியுமா … ???
———-
இப்போது உங்கள் கண்களுக்கு கோமாளிகளாக தெரியும்
விவசாயிகள் ஒவ்வொருவரும் தெய்வமாக தெரிவார்கள்
———
அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை
மனதில் வைக்கவும் …
————
நம் நாட்டில் பசுமை அழிக்கப்படுகிறது என்று சொல்வதைவிட
நம் நாடு அழிக்கப்படுகிறது என்றே சொல்லலாம் ….
———
அரசு விதிமுறைகளின்படி குறிப்பாக தஞ்சை மாவட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படக்கூடாது. அப்படியே மாற்றினாலும், வீட்டு மனைகளாக மாற்றப்படும் நிலங்கள் ஒன்றுக்கும் உதவாத தரிசு நிலங்களாக பல வருடங்கள் விவசாயத்துக்காக பயன்படுத்தப்படாமல் இருந்திருக்கவேண்டும் …
———-
அப்படி இருக்கையில், சென்ற வருடம் நெல், கரும்பு, எள்,
வாழை, உளுந்து முதலியன சாகுபடி செய்யப்பட விவசாய
நிலங்கள் திடீரென வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ள …
இதே நிலை நீடித்தால் அடுத்த பஞ்சத்தின்போது
பசி பட்டினியால் சாகும் மக்களின் எண்ணிக்கை
பத்துகோடியாக இருக்கும் …

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s