ஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்!

ஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்!

அஸ்ஸலாமு அலைக்கும்.

#ஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்!
என்னுடன் இணைந்து வாழும் என் ஏழை சகோதர சகோதரிகளுக்காகவும், இதயம் அறக்கட்டளையின் ஏழை குழந்தைகளுக்காகவும், அவர்களில் ஒருவனாக உரிமையோடு உதவி கேட்டு உங்களிடம் வருகிறேன்..
எனது இருதய அடைப்பு நீக்கும் அருமருந்து தயாரிப்பு மூலம் கிடைக்கும் சொற்ப லாபமும், எனது உழைப்பிற்கான ஊதியத்தையும் இதயம் அறக்கட்டளை ஏழை குழந்தைகளின் தினசரி உணவுத் தேவைகளுக்காக தருவதாக வாக்களித்து அதன்படி இரு தவணைகளாக கொடுத்து விட்டேன் என்பதையும் ஒரு தகவலாக தருகிறேன்.

அன்புள்ளங்களே! 
அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் என் அன்பு தழுவிய ரமலான் வாழ்த்துக்கள்.
முகநூலில்   உள்ள நம் சகோதரர்கள் அனைவர்களுக்கும் நன்கு அறிமுகமானவன் என்ற உரிமையோடு உங்களிடம் என் ஆதரவற்ற சகோதர,சகோதரிகளுக்காகவும் ஏழை மாணவச் செல்வங்களுக்காகவும் உதவி வேண்டி உங்களிடம் வருகிறேன்.
 ‘இறைநம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்குத் தந்ததிலிருந்து செலவளியுங்கள்’-(குர்ஆன் 2:54)
‘ எந்த செல்வத்திற்கு உங்களைத் தன்னுடைய பிரதிநிதியாக (அல்லாஹ்வாகிய) அவன் ஆக்கினானே அந்தச் செல்வத்திலிருந்து செலவளியுங்கள்’ (குர்ஆன் 57:7)
ஜகாத் என்பது மார்க்கத்தில் கட்டாய கடமையாக்கப் பட்டிருக்கும் ஒரு அமலாகும்.
கட்டாயக் கடமையான ஜகாத்தினை, ஜகாத் பெற தகுதியுள்ளவர்களுக்கு சரியாக பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஜகாத் பற்றிய விழிப்புணர்ச்சியை நம் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இணைய தளம் மூலமாக எனது தாவாப் பணியினைத் துவக்கி அல்ஹம்துலில்லாஹ் அதில் ஒரளவு வெற்றியும் பெற்று விட்டேன்.
yahoo குழுமங்களில், முகநூலில் இருக்கும் உற்ற நண்பர்கள்,சகோதரர்கள் சிலரின் மூலம் கிடைக்கும் ஜகாத் தொகையினை உரியவர்களுக்கு பங்கீட்டு வருகிறேன். இதில்எந்த விதமான தவறும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதாலேயே தனி ஒரு மனிதனாக இதை செய்து வருகிறேன்.
ஜகாத்தினை வசூலிக்க முற்றிலும் தகுதி வாய்ந்தவன் என்ற முழு நம்பிக்கையோடு தொடர்ந்து இப்பணியினை செய்து வருகிறேன்.
ஆகவே அன்பு சகோதரர்களே! தங்களின் ஜகாத் பணத்தில் ஒரு பகுதியையாவது, என் மேல் முழு நம்பிக்கையிருந்தால் மட்டுமே கொடுத்து உதவி இந்த எனது புனித பணியினில் நீங்களும் பங்கெடுக்க உங்களை அன்போடு வேண்டுகிறேன்.
இவ்வருடம் தங்களின் உதவியை எதிநோக்கி காத்திருப்பவர்கள்:
சென்னை புதுப்பேட்டையில் குடும்ப தலைவரை இழந்து வறுமையில் வாடும் ஏறத்தாழ 10 குடும்பங்கள் எந்தவித வாழ்வாதரமுமின்றி இருப்பவர்கள்..
ஏறத்தாழ 6 ஏழை மாணவிகள் கல்லூரியில் சேர நம் உதவியை நாடி காத்திருக்கிறார்கள்.
இரண்டு மாணவர்கள் பாலிடெக்னிக்கில் சேர பண வசதியின்றி காத்திருக்கின்றனர்.
குலசை, உடன்குடி,சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த உயர் நிலைப் பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு(தனியார் பள்ளியில் பயிலும்) ஒரு வருட பள்ளிக் கட்டணம்,யூனிஃபார்ம்,போன்ற தேவைகளுக்காக ஒரு ஆளுக்கு ரூ,2200-ரூ2500 வரை தேவை படுகிறது.
சென்ற வருடமும் குழுமத்திலும், முகநூலிலும் உள்ள பல சகோதரர்கள் தங்களின் ஜகாத் தொகையினை வழங்கி உதவி செய்தீர்கள்.
இந்த வருடமும்  உங்களின் மேலான உதவியினை எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள்.
இவர்கள் அனைவருமே நன்கு பரிசீலிக்கப் பட்டு ஜகாத் பெறத் தகுதியுள்ளவர்கள் தான் என தேர்வு செய்யப் பட்டவர்கள்.
ஸதக்கத்துல் ஜாரியா எனும் நிரந்தர நன்மையினை அடைய இவர்களின் கல்விக்காகவும், அன்றாட அவசிய உணவு, உடை தேவைகளுக்காகவும் முடிந்த உதவியினைச் செய்ய வேண்டுகிறேன்.
உங்களின் ஜகாத் தொகையினில் ஒரு பகுதியை இவர்களுக்காக வழங்குங்கள் என அன்புடன் உங்களிடம் வேண்டுகிறேன்.
நீங்கள் தருவதை உரிய முறையில் உரியவர்களிடம் சேர்ப்பது எனது கடமை. அதனை நியாயமான,நேர்மையான முறையில் செய்வேன்(இன்ஷா அல்லாஹ்) என இறைவன் மேல் ஆணையாக உறுதி கூறுகிறேன்.
ஜகாத் அனுப்ப விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட வங்கி கணக்குக்கு அனுப்பி விட்டு எனக்கு தகவல் தெரிவிக்கவும். சிறு தொகையாக இருப்பினும் சரியே.
எனது நோக்கம், ஜகாத் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், ஜகாத் பெறத்தகுதியுடையவர்களுக்கு மட்டும் அவை சேர வேண்டும் என்பதே..
என் மேல் பூரண நம்பிக்கையுள்ள சகோதரர்கள் ஜகாத் தொகையை முன்கூட்டியே அனுப்பி தந்தால் சிரமமின்றி உரியவர்களுக்கு சேர்க்க வசதியாக இருக்கும்..
இதில் எனது தேவைகள் எதுவும் இல்லை என்பதை இறை மேல் ஆணையாக உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்..
 கீழ்கண்ட எனது தனிப்பட்ட வங்கி கணக்குக்கு அனுப்பவும்.
வங்கி விபரம்:
H.Mehar sultan
A/C.no;SB 414362020
Indian Bank
Athiththanar Salai Branch
IFS Code:IDIB000A090
Chennai-2 
தங்கள் சகோதரன்,
Engr.Sulthan
குறிப்பு: மேற்கொண்டு விபரங்கள் தேவைப் பட்டால் என்னை 91-9962060353 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்..அல்லது என் இன்பாக்ஸில் தொடர்பு கொள்ளவும் …
(தயவு செய்து நண்பர்கள் இதனை மறக்காமல் share செய்து உங்களின் நண்பர்களுக்கும் இதனை கொண்டு சென்று இதில் கிடைக்கும் நன்மையில் நீங்களும் பங்கு பெறுங்கள்)

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s