அந்த முகம் தெரியா சோமாலிய சகோதரனுக்கே

101

சென்ற வருடம் இதே நாளில் வெளிவந்த என் பதிவு ஒன்று முக நூலில் வாட்ஸ் அப்பில், மற்றும் இணைய
தளங்களில் ஒருவித தாக்கத்தை, அதிிர்வலையை உண்டு பண்ணியது என்பது உண்மை தான்.
பல நண்பர்கள், முகம் அறியா சகோதர, சகோதரிகள், இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாமிய வழி காட்டு
மையங்கள், Human Rights Organaisation, என 2000 க்கும் மேற்பட்டவர்கள் இதை பகிர்ந்துள்ளார்கள். இந்த
வருடமும் முதல் ரமலானிலிருந்து பலரும் மீள் பதிவாக இதை பகிர்ந்து வருகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றியை கண்கள் கலங்க சமர்ப்பிக்கிறேன்…

இந்த பெருமையும், இவ்வளவு வரவேற்பும் நிச்சயமாக என் எழுத்துக்கோ எனக்கோ அல்ல.
அல்லாஹ் போதுமானவன்.
இந்த பெருமையெல்லாம் அந்த முகம் தெரியா சோமாலிய சகோதரனுக்கே உரித்தானவை.
கேட்டானே ஒரு கேள்வி..இன்றும் என் நெஞ்சை தகர்க்கும் ஒரு கேள்வியை…
ஸஹரும், இஃப்தாரும் இல்லாத எங்களின் நோன்பு இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுமா?/ என்று..
அவனுக்கே அனைத்து பெருமைகளும் போய் சேரட்டும்..

எனது பதிவில் அப்படி ஒன்றும் பெரிதாக சொல்லி விடவில்லை.
யதார்த்தத்தை சொன்னேன்..
உண்மையை சொன்னேன்..
ஆடம்பர ஸஹர், இஃப்தார் வேண்டாமே என்று சொன்னேன்.
இன்றும் அதன்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
ஜகாத், சதக்காவின் முக்கியத்துவத்தை சொன்னேன்..
ஒவ்வொரு ஏழையையும் உங்களோடு இணைத்து கொள்ளுங்கள் என்று வலியுறுத்தினேன்..
இந்த பதிவை படித்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட என் மாற்று மத சகோதரர்கள் அனைவருமே ஒருமித்த
குரலில், நாங்கள் கண் கலங்கினோம்..இனி கண்டிப்பாக தர்மங்கள் செய்வோம் என வாக்குறுதி
அளித்தார்களே..
இதற்கு மேலும் வேறென்ன வேண்டும் எனக்கு..
போதும் இறைவா போதும்..

நானும் ஒரு காலத்தில் ஜகாத் விஷயத்தில் பெரும் பொடும் போக்காக இருந்தவன் தான்.. நல்ல வேலை..கை
நிறைய சம்பளம். வெளி நாட்டு வாழ்க்கை.. ஏதோ வருடா வருடம் பெயரளவில் உறவினர்களுக்கு ஒரு

தொகையை ஜகாத் என வழங்கி வந்தவன்..
ஒரு காலம் வந்தது. தொடர் பொருளாதார சரிவு..என் தவறு சிறிதும் இல்லையென்றாலும் பெரும் இழப்பு..
இழந்தேன்..பெருமளவில் இழந்தேன்..அப்போதும் சிரித்தேன்..இறைவன் நான் வழங்காத ஜகாத்தினை பன்
மடங்கு என்னிடமிருந்து எடுத்துக் கொண்டான்..தண்டனை ..இறை தண்டனை இம்மையிலேயே கிடைத்து
விட்டது..இதன் மூலம் நான் சுத்தமாகி விட்டேன் என நினைத்தேன்..சிரிப்பு வந்தது.

அன்றிலிருந்து ஜகாத்
விழிப்புணர்வு எனும் கொள்கையை ஏந்தி போராடுகிறேன்..வெற்றியும் கிடைத்தது.அல்ஹம்துலில்லாஹ்…
இன்று என் உறவுகள் என்னை சுற்றியுள்ள ஏழை எளிய மக்கள் மட்டுமே..இதை என்னை அறிந்தவர்கள்
அறிவார்கள்..

இறுதியாக ஒரு முக்கிய சேதி! ஆம் நண்பர்களே..என் பதிவின் மூலகர்த்தா என் அந்த ஏழை மகளை இரண்டு
நாட்கள் முன் சந்தித்தேன்..மெய் சிலிர்க்கும் அந்த நிகழ்வினை அடுத்த பதிவில் தருகிறேன் இன்ஷா
அல்லாஹ்..
எனது சென்ற வருட அந்த பதிவை மீள் பதிவாக இங்கு தருகிறேன்..அதை படிக்காத சிலரின் பார்வைக்காக….

‪#‎இதோ‬:
சென்னையில் தலை நோன்பு அன்று..
இப்தார் நேரம் நெருங்கி கொண்டிருந்தது..
தெருவில் பள்ளியை சுற்றி வடை, சமுசா, கட்லெட் என பல கடைகள்..
மக்களால் மொய்க்கப் பட்டிருந்தது..
தெரிந்த ஒரு கடையில் இப்தாருக்காக வடை, சமூசா வாங்க காத்திருக்கும் போது தான் கவனித்தேன் ஒரு பெண், தன் இரு பெண் குழந்தைகளுடன் தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தார்..இடை இடையே கடைக் காரரிடம் கை நீட்டி எதோ கேட்பதும், அவர் வியாபார மும்முரத்தில், இரும்மா தருகிறேன் என எரிச்சல் கலந்த கோபத்தில் பதில் சொல்வதுமாக நேரம் போய் கொண்டிருந்தது..

நான் அந்த பெண்ணிடம் நோன்பா என்றேன்..ஆம், இந்த இரு குழந்தைகளும் நோன்பு தான். பள்ளியில் கஞ்சி வாங்கி விட்டேன்..புள்ளைங்க வடை வேணும்னு கேக்குறாங்க..அதான் தூள், உடைந்தது என ஒதுக்கப்படும் வடைகள் இலவசமாக தருவார்..அதற்காக தான் காத்திருக்கிறேன் என்றார்…
பிள்ளைகளின் முகத்தில் சோர்வும், கண்களில் பசியின் தாக்கமும் தெரிந்தது..
ஒரு முடிவுக்கு வந்தவனாக நான் கையில் வைத்திருந்த வடை பார்சலை அந்த பெண்ணிடம் கொடுத்து விட்டு, கடைக்காரரிடம் இந்த மாதம் முழுவதும் நான் வாங்கும் அயிட்டங்களை இந்த பெண்ணுக்கு கொடுத்து விடுங்கள்..நான் காசு மொத்தமா தந்து விடுகிறேன் என சொல்லி விட்டு, அந்த பெண்ணிடம் தினமும் வந்து வாங்கி கொள் என சொல்லி வீட்டுக்கு திரும்பும் போது அந்த பெண், வாப்பா நீங்க ஒன்னும் வாங்காம போறீயளே என ஒரு ஆதங்கத்துடன் கேட்டதும், அந்த…அந்த பரிவு நிறைந்த வாப்பா என்ற வார்த்தை என்னை கலங்கடித்தது.. இல்லேம்மா அப்புறமா வாங்கி கொள்கிறேன் என நடையை கட்டினேன்.

வீட்டில் வெறுங்கையுடன் வரும் என்னைப் பார்த்து, மனைவி, ஏங்க நோன்பு திறக்க ஒன்னும் வாங்காம வந்துட்டீங்க என்றாள்..
வாங்கினேன், என்று சொல்லி முடிக்கும் போதே அப்போ எங்கே மறந்து வச்சுட்டு வந்தீங்க? என்று எதிர் கேள்வி கேட்டவளிடம், வாங்கி இன்னொரு மகளிடம் கொடுத்து விட்டேன்.என்று சொல்லி முடிக்கும் முன்பே கண்களில் என்னை அறியாமலே
கண்ணீர்..உள்ளம் உடைந்து விம்மி விம்மி அழுகிறேன்..மனைவியும் நடந்த விஷயங்களை ஓரளவு யூகித்து கொண்டு சரி சரி விடுங்க..
கஞ்சியும், ஜூசும் இருக்கு அது போதும்..எண்ணை அயிட்டங்கள் உங்களுக்கு ஒத்துக்காது தானே..என்றாள்..நானும் மீதியுள்ள நாட்களிலும் இதையே கடை பிடிப்போம்..கஞ்சியும் ஜூசும் போதும் என்றேன்..

நினைத்து பார்த்தேன்..அந்த சோமாலி சகோதரன் கேட்ட கேள்வி நெஞ்சில் சம்மட்டியாய் தாக்கியது..
“சஹரும் இஃப்தாரும் இல்லாத எங்களின் நோன்பு இறைவனால் ஏற்றுக் கொள்ளப் படுமா?” என்றானே..அதை நினைத்தேன் அது தான் அந்த அழுகை..
நம்மை சுற்றிலும் எத்தனை எத்தனை சோமாலிய குடும்பங்கள்..
சஹருக்கும் இப்தாருக்கும் வழியின்றி..
இதை பெருமைக்காகவோ, அனுதாபத்தை தேடியோ எழுதவில்லை..
என் ஒருவன் வாயைக் கட்டி இன்னொரு குடும்பம் வாழ வழி செய்யலாமே..

என்னோடு இணைந்திருக்கும் 11 ஆதரவற்ற குடும்பத்தில் புதிய வரவாக மேலே சொன்ன பெண்மணியின் குடும்பமும் சேர்ந்து கொண்டது..குடும்பத் தலைவனின்றி, தவிக்கும் கொடுமை, வருமானத்திற்கே வழி இல்லாத நிலை..
இவர்கள் தான் இன்று என் உலகம். அந்த மிகச் சிறிய உலகத்தில் என்னை நான் முடக்கி கொண்டேன் எனலாம்..முடிந்த வரை பகிர்ந்து உண்கிறோம்..அவர்களின் சுக துக்கங்களில் அவர்களில் ஒருவனாக இருக்கிறேன்..இந்த வாழ்க்கையும் எனக்கு நிம்மதியாகத் தான் இருக்கிறது..

இதை இங்கு சொல்வதற்கு காரணமே, ஆடம்பர இப்தார், சஹர் உணவுகளை முடிந்தளவு, வீணாக்காமல் குறைத்து இன்னொரு ஏழை குடும்பத்தை வாழ வைப்போமே!

நான் செய்கிறேன், ஆகவே நீங்களும் இது போல் செய்யுங்கள் என்று, யாரையும் நான் கட்டாயப் படுத்தவில்லை..
அந்த சோமாலிய சகோதரரின் கேள்வி என்னை ரெம்பவும் பாதித்து விட்டது..அதன் வெளிப்பாடே இந்த பதிவு..
என்ன நான் சொல்வது சரி தானே??

‪#‎எளியவர்‬ ஏற்றம் பெற இறைஞ்சுகிறேன் யா அல்லாஹ்!!.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s