அந்த முகம் தெரியா சோமாலிய சகோதரனுக்கே

101

சென்ற வருடம் இதே நாளில் வெளிவந்த என் பதிவு ஒன்று முக நூலில் வாட்ஸ் அப்பில், மற்றும் இணைய
தளங்களில் ஒருவித தாக்கத்தை, அதிிர்வலையை உண்டு பண்ணியது என்பது உண்மை தான்.
பல நண்பர்கள், முகம் அறியா சகோதர, சகோதரிகள், இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாமிய வழி காட்டு
மையங்கள், Human Rights Organaisation, என 2000 க்கும் மேற்பட்டவர்கள் இதை பகிர்ந்துள்ளார்கள். இந்த
வருடமும் முதல் ரமலானிலிருந்து பலரும் மீள் பதிவாக இதை பகிர்ந்து வருகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றியை கண்கள் கலங்க சமர்ப்பிக்கிறேன்…

Continue reading

இறைவனிடம் நாம் பிராத்திப்போம்.

இறைவனிடம் நாம் பிராத்திப்போம்.

யா அல்லாஹ்!

சிறந்த வேண்டுகோளையும்

சிறந்த பிரார்த்தனையையும்

சிறந்த வெற்றியையும்

சிறந்த அமலையும்

சிறந்த நன்மையையும்

சிறந்த உயிர்வாழ்வையும்

சிறந்த மரணத்தையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.

(யா அல்லாஹ்!)

Continue reading

ஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்!

ஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்!

அஸ்ஸலாமு அலைக்கும்.

#ஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்!
என்னுடன் இணைந்து வாழும் என் ஏழை சகோதர சகோதரிகளுக்காகவும், இதயம் அறக்கட்டளையின் ஏழை குழந்தைகளுக்காகவும், அவர்களில் ஒருவனாக உரிமையோடு உதவி கேட்டு உங்களிடம் வருகிறேன்..
எனது இருதய அடைப்பு நீக்கும் அருமருந்து தயாரிப்பு மூலம் கிடைக்கும் சொற்ப லாபமும், எனது உழைப்பிற்கான ஊதியத்தையும் இதயம் அறக்கட்டளை ஏழை குழந்தைகளின் தினசரி உணவுத் தேவைகளுக்காக தருவதாக வாக்களித்து அதன்படி இரு தவணைகளாக கொடுத்து விட்டேன் என்பதையும் ஒரு தகவலாக தருகிறேன்.

நபிகள் நாயகம் பற்றிய முன்னறிவுப்பு கொண்ட பைபில்

85

உண்மை உலகத்திற்க்கு வெளியாகி விட்டது ஆம் நபிகள் நாயகம் பற்றிய முன்னறிவுப்பு கொண்ட பைபில்
*அதாவது ஈஸா (அலை) அவர்களுடன் நெருங்கி இருந்த பர்னபாஸ் என்பவர் எழுதிய சுவிசேம் கிடைத்து அதனை மிகப் பெரிய கிருஸ்தவ மதகுருமார்கள் சாமானிய கிருஸ்தவர்களுக்கு தெரியாமல் மறைத்து வைத்து இருந்தனர்.
ஆனால் அது உலகத்திற்க்கு தெரிய வந்துள்ளது. இதனால் இனிமேல் அல்லாஹ்வின் நாட்டப்படி அதிகமான கிருஸ்தவர்கள் இனி இஸ்லாத்தை தங்கள் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொள்வார்கள் Continue reading

‎இறைத்‬ தூதர் என்ற மாமனிதர்

#‎இறைத்‬ தூதர் என்ற மாமனிதர்,
– கட்டுரை: பி. ஏ. கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர், (தமிழ் தி ஹிந்து)

69

சில ஆண்டுகளுக்கு முன்னால் சைனாய் பாலைவனத்தில் இருக்கும் புனித காதரீன் துறவியர் இல்லத்துக்குச் சென்றிருந்தேன். 1500 வருடங்கள் பழமையானது. இங்கு இருக்கும் ஆவணங்களில் ஒன்று, நபிகள் நாயகம் அவரது காலத்தில் அங்கிருந்த துறவிகளுக்கு எழுதிய கடிதம். அதில் அளிக்கப்பட்டிருக்கும் பல சலுகைகளில் முக்கியமானது கிறித்தவர்கள் தங்கள் மதத்தைப் பின்பற்ற முழு அனுமதி அளித்திருப்பது. கடிதம் இன்னொன்றும் சொல்கிறது. ஒரு கிறித்தவப் பெண், இஸ்லாமியரை மணம் புரிந்திருந்தாலும் அவர் கிறித்துவ வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லை. Continue reading

பெண்களுக்கு பாதுகாப்பளிக்கும் இஸ்லாம்………

tyy455

அன்று நூஹு(அலை) அவர்கள் சமுதாயத்தை ஒழுக்கப்பண்புடைய வாழ்வுக்கே வழிகாட்டினார். புத்தரும் மக்களை ஒழுக்கமாக வாழவே வழிகாட்டினார். அவர் தமது அரச மாளிகையில் இடம் பெற்ற பெண்களின் ஆபாச நட னங்களையும், தீய இசையையும் கண்டு மனம் வருந்தினார். அவர் பெண்கள் ஆபாசமான முறையில் உடையணிவதை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. ஒழுக்கமுடைய குடும்ப வாழ்வுக்கே வழிகாட்டினர். Continue reading

ஒற்றுமையும் தமிழக முஸ்லிம் இயக்கங்களும்!

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்!

முன்னுரை:
“… இந்த மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள்; பிரிந்து விடாதீர்கள் …” (அல்குர்ஆன் 42:13). அல் குர்ஆன் மார்க்கத்தை – இஸ்லாத்தை நிலைநிறுத்துமாறு முஸ்லிம்களுக்குக் கட்டளையிடுகிறது. அவர்களின் அன்றாட வாழ்வில், பொருளாதாரத் தேடலில், சமூகப் பங்களிப்புகளில், ஒழுக்கவியலில் இஸ்லாமியக் கோட்பாடுகள் மிளிர வேண்டும். நபி(ஸல்) அவர்கள் உருவாக்கிய சத்திய சஹாபாக்கள் – நபித் தோழர்கள், இஸ்லாத்தை எவ்வளவு உறுதியாக நிலைநிறுத்தினார்களோ, Continue reading

உண்மை முஸ்லிம்

 நயவஞ்சகம் கொள்ளமாட்டார்

உண்மை முஸ்லிம் நயவஞ்சகம், ஏமாற்றுதல், வஞ்சப் புகழ்ச்சி போன்ற தன்மைகளை விட்டும் விலகியிருப்பார். அவரது மார்க்க போதனை இத்தகைய ஆபத்திலிருந்து அவரைப் பாதுகாக்கும். அதிகமான மக்கள் வஞ்சப் புகழ்ச்சியில் சிக்கிக் கொண்டு தங்களை அறியாமலேயே நயவஞ்சகம் என்ற அழிவில் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம் பனூ ஆமிர் என்ற கூட்டத்தினர் புகழ்ச்சியாகக் கூறினர்: ”நீங்கள் எங்களது தலைவர்.” உடனே நபி (ஸல்) அவர்கள் ”தலைவன் அல்லாஹ் மட்டுமே” என்று கூறினார்கள். அக்கூட்டத்தினர், ”நீங்கள் எங்களில் மிகவும் சிறப்புக்குரியவர், மகத்தான அந்தஸ்துடையவர்” என்று கூறியபோது நபி (ஸல்) அவர்கள் ”உங்களது இந்த வார்த்தைகளை முழுமையாகவோ, அதன் ஒரு பகுதியையோ கூறிக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் ஷைத்தானுக்கு துணை போகாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் என்னை எந்த அந்தஸ்தில் படைத்துள்ளானோ அதைவிட மேலாக நீங்கள் என்னை உயர்த்துவதை நான் விரும்பவில்லை. நான் முஹம்மது இப்னு அப்துல்லாஹ், அல்லாஹ்வின் அடியாரும், அவனது தூதருமாவேன்” என்று கூறினார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா) Continue reading

ஓதுவோம் வாருங்கள் திருக் குரான்

அல்குர்ஆன் அல்லாஹ்தஆலாவுடைய வார்த்தையாகும். ரஸுல் (ஸல்) அவர்களின் இறுதித் தூதுத்துவத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் மனித சமுதாயத்தை இருளில் இருந்து ஒளியின்பால் அழைக்கக்கூடிய ஒளிவிளக்காகவும் இறக்கிவைத்தான். இதனை சூறா இப்றாஹீமின் ஆரம்ப வசனம் இப்படிக் கூறுகின்றது: ‘அலீப்.லாம். றா. இது மக்களை இருளில் (ஜாஹிலியத்தில்) இருந்து (சத்தியம் எனும் நேர் வழிகாட்டலாகிய ஒளியின் பால் அழைக்கக் கூடியதாக நாம் இந்த வேதத்தை இறக்கிவைத்தோம்.’ Continue reading

தன்னந்தனியே தனித்து நிற்கும் நாள்

73:14. அந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்ககளாகிவிடும்.

82:1. வானம் பிளந்து விடும்போது

82:2. நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-

82:3. கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,

82:4. கப்றுகள் திறக்கப்படும் போது, Continue reading

ஹஜ் உம்ரா விளக்கம்_10

IMG_2180406515916உங்களுடன் எடுத்தச் செல்ல வேண்டிய சில முக்கியமான பொருள்கள்

1. கறுப்புக் கண்ணாடி (Sun Glass) மற்றும் குடை – வெயிலை சமாளிக்க

2. கெட்டில் (Electric Kettle) – டீ, பால் மற்றும் வெந்நீர் போடுவதற்கு தேவைப்படும். Stainless Steel Kettle மிகவும் உகந்தது.

3. உதட்டிற்க்கு போடும் தைலம் (Lip Balm, Vaseline) – வெயில் மற்றும் பனியினால் ஏற்படும் உதடு வெடிப்பு மற்றும் உதடு காய்ந்து போவதிலிருந்து காக்கும். Vaseline காலில் எற்படும் வெடிப்புகளுக்கும் மற்றும் உதட்டிற்க்கும் மிகவும் பயனுள்ளாதாக இருக்கும்..  Continue reading

ஹஜ் உம்ரா விளக்கம்_9

 

#பிறருக்காக_ஹஜ்_செய்தல்

IMG_1411377046383ஒவ்வொருவரும் தத்தமது செயலுக்குப் பொறுப்பாளியாவார். ஒருவரது சுமையை இன்னொருவர் சுமக்க முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை என்றாலும் ஒரு சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஒருவர் இன்னொருவருக்காக ஹஜ் செய்ய ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

‘ஹஸ்அம்’ கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை ஒட்டகையின் முதுகில் அமர இயலாத முதிய வயதுடையவராக இருக்கும்போது ஹஜ் எனும் அல்லாஹ்வின் கடமை ஏற்பட்டு விட்டது” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவருக்காக நீ ஹஜ் செய்” என்று அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். Continue reading

ஹஜ் உம்ரா விளக்கம்_7

IMG_1997236256772#தவாபுல்_விதஃ

மினாவில் கல்லெறிந்து முடிந்ததும் ஹஜ்ஜின் எல்லாக் கிரியைகளும் நிறைவுறுகின்றன. ஆயினும், இறுதியாக தவாபுல் விதாஃ என்று கூறப்படும் தவாபைச் செய்ய வேண்டும். விதாஃ என்றால் விடை பெறுதல் என்பது பொருள். விடை பெற்றுச் செல்லும் நேரத்தில் இந்த தவாப் செய்யப்படுவதால் இது தவாபுல் விதாஃ என்று கூறப்படுகின்றது.  Continue reading

ஹஜ் உம்ரா விளக்கம் 6

#மினாவில்_செய்ய_வேண்டியவை

IMG_2375056366095IMG_2382710791932இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனது கட்டளைப்படி தன் மகனைப் பலியிட முன்வந்த போது ஷைத்தான் அவர்களுக்குக் காட்சி தந்தான். ஜம்ரதுல் அகபா என்ற இடத்தில் அவன் மீது ஏழுதடவை சிறுகற்களால் எறிந்தார்கள். அதன்பிறகு ஜம்ரதுல் உஸ்தா எனும் இடத்தில் மீண்டும் காட்சி தந்தான். அங்கேயும் ஏழுதடவை கற்களால் எறிந்தார்கள். அதன்பிறகு ஜம்ரதுல் ஊலா எனுமிடத்தில் காட்சி தந்தான். அங்கேயும் ஏழுதடவை சிறுகற்களால் எறிந்தார்கள். பைஹகீ, ஹாகிம், இப்னு குஸைமா ஆகிய நூல்களில் இந்த விபரம் இடம் பெற்றுள்ளது. Continue reading