உங்களுக்காக உழைக்க தேனீக்கள் தயாராக இருக்கின்றது

2தேன், ஒரு அதிக ஊட்டச்சத்து நிறைந்த விரும்பத்தக்க உணவாகும். தேனீக்கள், மலர்த்தேனை சேகரித்து, தேனாக மாற்றி, அதை தேன் கூட்டில் சேமிக்கும்.

தேன் மற்றும் அதை சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால், தேனீ வளர்ப்பு ஒரு தொழிலாக முக்கியமடைந்துள்ளது.தேனீக்கள் வளர்ப்பதன் மூலம் வருமானத்தை ஈட்டுவது மட்டுமில்லாமல், மகசூல் உற்பத்தியை அதிகரிக்கலாம். தென்னந்தோப்புகளில், ஆறு அடிக்கு ஒரு பெட்டி வீதம் தேனீ பெட்டிகளை வைத்து வளர்க்கலாம். ஒரு தேனீ பெட்டியில் ஒரு ராணி தேனீ, 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை தேனீக்கள் இருக்கும்.தேனீக்கள், இந்திய தேனீ, மலைத்தேனீ, கொம்பு தேனீ, அடுக்கு தேனீ மற்றும் கொசு தேனீ என பல்வேறு வகைகளாக வளர்க்கப்படுகின்றன. ஒரு பெட்டியில், 750 மி.லி., முதல் ஆயிரத்து 250 மி.லி., வரை தேன் சேகரிக்கப்படுகிறது.

Continue reading

ஏழைகளின் ஏடிஎம் – கால்நடை வளர்ப்பு கத்துக்கலாமா ..?

1சகஜமான ஒன்று விவசாயத்துக்கு மட்டுமல்ல. விவசாயிகளின் அவசரக்கால பணத்தேவைகளுக்கும் துணை நிற்பது கால்நடைச் செல்வங்கள் தான், அதனால் தான் விவசாய அமைச்சகமும், கால்நடைத் துறையும், இவ்விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு, கால்நடை வளர்ப்பை ஊக்குவித்து வருகின்றன.
தமிழ்நாட்டில் கால்நடைகளுக்கென்றே சென்னையில் தனியாக மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே கால்நடைகளுக்கு என்று முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகமும் இதுதான். இதன் துணைவேந்தர் பலராமனைச் சந்தித்து, கால்நடைகள் குறித்த ஆலோசனைகளைக் கேட்டோம்.

Continue reading

சுய தொழில்கள் -நாப்கின் தயாரிப்பு

IMG_10546341703146பீரியட் நாட்களில் பயன்படுத்தும் நாப்கின்கள் தரமானதாகவும், விலை மலிவாவும் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். எனவே இது போன்று தரமான நாப்கின்கள் தயாரிக்கும் தொழிலை கற்றுக் கொண்டால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை வடவள்ளியில் நாப்கின் தயாரிப்பு தொழில் செய்து வரும் ஸ்ரீமகாலட்சுமி இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் ராஜேஸ்வரி(61). ராசி என்ற பெயரில் நாப்கின் தயாரித்து வரும் அவர் கூறியதாவது: கென்யாவில் ஒரு பள்ளியில் நான் கணித ஆசிரியராகவும், கணவர் பூபதி ஆங்கில ஆசிரியராகவும் 12 ஆண்டாக பணிபுரிந்துள்ளோம். மகன் அமெரிக்காவில் இன்ஜினியர். Continue reading

சுய தொழில்கள் சேமியா தயாரிப்பு

IMG_1805505972810அவசரத்துக்குத் தயார் செய்யலாம் என்பதோடு, எளிதில் ஜீரணமாகும் என்பதால் நகர்ப்புறங்களில் சேமியாவைப் பயன்படுத்துபவர்கள் அதிகம்!

காலை உணவில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டது சேமியா. அவசரத்துக்குத் தயார் செய்யலாம் என்பதோடு, எளிதில் ஜீரணமாகும் என்பதால், நகர்ப்புறங்களில் இதை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

உற்பத்தி நடைமுறை!

சுத்தமான மைதா மாவை கலவை இயந்திரத்தில் கொட்டி, தேவையான அளவுக்குத் தண்ணீர்விட்டு மாவு பதமாக வந்ததும் அதை எடுத்து சேமியாவுக்கான அச்சு இயந்திரத்தில் கொட்டித் தயாரிக்க வேண்டியதுதான். அச்சு இயந்திரத்திலிருந்து வெளிவரும் சேமியாவை இதற்கென உள்ள தாங்கியில் தொங்கவிட்டு, அதை நீராவியில் வேகவைக்கும் இயந்திரத்துக்குள் செலுத்தி, வேகவைக்க வேண்டும். பிறகு அதைச் சூரியஒளியில் காயவைக்க வேண்டும். நவீன வெப்பக் கூடாரம் அமைத்துக்கொண்டால், இன்னும் விரைவாகச் சேமியா உலரும். இப்படிப் பதப்படுத்தப்பட்ட சேமியாவை பாக்கெட்களில் அடைத்து விற்பனைக்கு அனுட்ப்ப வேண்டியதுதான்

இடத் தேவை!

மூலப்பொருள் மற்றும் தயாரான பொருட்களை ஸ்டாக் வைக்க ஓர்  அறை, இயந்திரம் வைக்க ஓர் அறை என இரண்டு அறைகள் போதும். பாய்லர் பெட்டகத்தைக் (நீராவி இயந்திரம்) கட்டடத்துக்கு வெளியில் வைத்துக்கொள்ளலாம். தவிர, சூரிய ஒளியில் உலர்த்த  தளம் வேண்டும். தளத்தில் வெப்பக் கூடாரம் அமைத்தால், சேமியா விரைவாக உலரும்.

தேவையானவை!

மாவு கலக்கும் இயந்திரம்,
சேமியா பிழியும் இயந்திரம்,
நீராவி இயந்திரம் (பாய்லர் பெட்டகம்),
எடை மற்றும் பேங்கிங் இயந்திரங்கள்,
மின்சாரம் 10 ஹெச்பி.
திட்ட அறிக்கை! ()
இடம்: வாடகை (உள்ளூர் நிலவரத்துக்கேற்ப)
இயந்திரம்                 : 3 லட்சம்
சூரிய ஒளிக்கொட்டகை    : 80 ஆயிரம்
மின்சார இணைப்பு         : 1.20 லட்சம்
நடைமுறை மூலதனம்       : 4 லட்சம்
மொத்தம்                : 9 லட்சம்

மானியம்!

பாரதப் பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) மூலம் மானியம் பெற முடியும் என்பது முக்கியமான விஷயம்!

முதலீடு! ()

நமது பங்கு 5%          :  45 ஆயிரம்
மானியம் 25%             :  2.25 லட்சம்
வங்கிக் கடன் 70%       :  6.30 லட்சம்

திட்ட அனுமானங்கள்!

* தினசரி 600 முதல் 1,000 கிலோ வரை உற்பத்தி செய்யலாம். (1 மணி நேரத்துக்குள் 80 – 90 கிலோ வரை தயாரிக்கும் இயந்திரத்தின் மூலம்!)

* உற்பத்தி செய்யும்போது அதிகபட்சமாக 5 சதவிகிதம் இழப்பு ஏற்படும்.

* ஒரு பாக்கெட் 170 கிராம் வீதம் பேக் செய்து 20 பாக்கெட்களைக் கொண்ட பண்டலாக அனுப்பலாம்.

ஒரு பாக்கெட்டின் விலை ரூ.7.50. ஒரு பண்டல் விலை ரூ.150. (20X7.50=150) சில்லறை விற்பனையாளர்கள் ஒரு பாக்கெட் அதிகபட்சமாக ரூ.15 வரை விற்பனை செய்ய வாய்ப்புண்டு.

* பாய்லர் பெட்டகத்துக்கான எரிபொருளாக விறகினைப் பயன்படுத்தலாம். இதற்கான செலவு ஒரு மாதத்துக்கு: ரூ.10,000

பணியாளர்கள்! ()

மேற்பார்வையாளர் : 1X10,000 = 10,000
தொழிலாளர்கள்   : 5X6,000  = 30,000
பேக்கிங் மற்றும்
இதர வேலைகள் : 2X5,000  = 10,000
விற்பனையாளர்     : 2X6000  = 12,000
_______
மொத்தம்           62,000
_______

மொத்த விற்பனை!

600 கிலோவுக்கு 5% கழிவுபோக 570 கிலோ உற்பத்தி.

ஒரு பாக்கெட் 170 கிராம் எனில்,  570 கிலோவில் 3,352 பாக்கெட்கள் கிடைக்கும். இதை 20 பாக்கெட்கள் வீதம் பண்டலாக்கினால் 167 பண்டல் கிடைக்கும்.

இதன்படி ஒருநாள் உற்பத்தி வரவு: ரூ.25,050. (167X150 = ரூ.25,050) மாதத்துக்கு 25 வேலைநாட்கள் எனக் கணக்கிட்டால் ஒருமாத விற்பனை வரவு 25Xரூ.25,050 = ரூ.6,26,250.

செலவுகள்!

மூலப்பொருள் செலவு:

மைதா மாவு 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.1,200-க்குக் கிடைக்கும். மொத்தமாக வாங்கினால், விலையைக் குறைத்து வாங்கலாம். (ஒரு கிலோ ரூ.24)

ஒருநாள் உற்பத்தி தோராயமாக 600 கிலோ X ரூ.24 = ரூ.14,400. மாதத்துக்கு 25 வேலைநாட்கள் எனக் கணக்கிட்டால் ஒரு மாத செலவு : ரூ.25Xரூ.14,400 = ரூ.3,60,000

பேக்கிங் செலவு:

ஒரு பாக்கெட்டுக்கு 60 காசு. 20 பாக்கெட்களைக்கொண்ட பண்டலுக்கு ஆகும் பேக்கிங் செலவு ரூ.12. பண்டல் செலவு ரூ.3-ஆக ஒரு பண்டலுக்கான பேக்கிங் செலவு ரூ.15. தினசரி 167 பண்டலுக்கான செலவு 167X15 = ரூ.2505. ஒரு மாதத்துக்கு 25 வேலைநாட்கள் எனக் கணக்கிட்டால் ஒரு மாதத்துக்கான பேக்கிங் மற்றும் பண்டல் செலவு: ரூ.2505X25= ரூ.62,625

10 ஹெச்பி மின்சாரம்: ரூ.10,000

மொத்தச் செலவு! ()

மூலப்பொருள்             :   3,60,000
பேக்கிங்                  :   62,625
மின்சாரம்                :      10,000
வேலையாட்கள்             :      62,000
விற்பனைச் செலவு       :       5,000
மேலாண்மைச் செலவு     :       5,000
இயந்திரப் பராமரிப்பு     :       5,000
எரிபொருள் செலவு       :      10,000
வட்டி 12.5%           :       6,600
தவணை (60 மாதம்)     :      10,500
தேய்மானம்                :       6,250
இதரச் செலவு          :      10,000
மொத்தச் செலவு        :     5,52,975
மொத்த விற்பனை வரவு   :     6,25,000
மொத்த செலவு         :     5,53,000
  ______
லாபம்  (வாடகை தவிர்த்து)       72,000
______

இங்கு நாம் குறிப்பிட்டிருப்பது தினசரி ஒரு ஷிப்ட் வீதம் மாதம் 25 வேலைநாட்களுக்கான வரவு செலவுத் திட்டத்தை மட்டுமே. வேலை நேரத்தைக் கூட்டினால் வருமானமும் அதிகரிக்கும்.


திறமையான மார்க்கெட்டிங் அவசியம்!

எஸ்.கார்த்திக், ஸ்டார் சேமியா, ஈரோடு.

”நான் கடந்த மூன்று வருடங்களாக இந்தத் தொழிலில் இருக்கிறேன். இதற்குமுன் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து இந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டேன். ஆரம்பத்தில் கையில் இருந்த சிறிய முதலீடு மற்றும் கடன் வாங்கித்தான் இந்தத் தொழிலில் இறங்கினேன். அதிக முதலீடுகள் போட்டு பெரிய அளவில் செய்தால் ப்ராண்டடு நிறுவனங்களோடு போட்டிப் போடலாம். ஆனால், சிறிய அளவில் என்பதால் லோக்கல் கடைகளுக்கு மட்டுமே சப்ளை செய்கிறேன். அனைத்து செலவுகளும்போக மாதம் 20 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் வருகிறது. மூலப்பொருளான மைதா மாவை மொத்தமாகக் கொள்முதல் செய்தால் குறைந்த விலைக்கு சப்ளை செய்ய முடியும். இந்தத் தொழிலுக்கு நல்ல திறமையான மார்க்கெட்டிங் அவசியம். நான் எனது ப்ராண்டு தவிர, வேறு ப்ராண்டுகளுக்கும் சேமியா உற்பத்தி செய்து கொடுத்து வருகிறேன்.”

 படங்கள்:  மு.சரவணக்குமார்.

(திட்டவிவரங்கள் உதவி: ராமசாமி தேசாய், திட்ட மேலாளர், தொழில் முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்.

 

 

 

தகுதிகளை வளர்த்துக்கொண்டால்

தகுதிகளை வளர்த்துக்கொண்டால்…
நீங்களும் வெற்றிகரமான தொழில்முனைவோர்தான்!

இன்றைய இளைஞர்களில் பலர் சுயமாகத் தொழில் தொடங்கி சொந்த உழைப்பால் முன்னேற வேண்டும் என்கிற உத்வேகத்துடன் இருப்பது ஆச்சர்யமான விஷயம்தான். இந்த உத்வேகம் மட்டுமே ஒருவருக்கு தொழிலில் ஜெயிப்பதற்கான தகுதி  என்று சொல்லிவிட முடியாது. வேறு சில தகுதிகளும் இருக்கவே செய்கின்றன. இந்தத் தகுதிகள் ஒரு தொழில்முனை வோருக்கு இருக்கும்பட்சத்தில்,  பிசினஸில் நிரந்தரமாக வெற்றிப் பெற முடியும்.

வெற்றி பெறும் தொழில்முனை வோராக ஒருவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும், அந்தத் தகுதிகள் இயற்கையாக இல்லை எனில், அதை எப்படி வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார் கேப்பிட்டல் மார்க்கெட் நிறுவனத்தின் முதன்மை செயல் இயக்குநர் எஸ்.சிவக்குமார். அவர் சொன்ன விஷயங்கள் இங்கே உங்களுக்காக…

“இன்றைய இளைஞர்கள் மனதில் நாமும் தொழில்முனைவோராக வேண்டும் என்கிற எண்ணம் இருப்பதை நான் காண்கிறேன். 
முக்கியமாக, ஈரோடு, நாமக்கல், கோவை, திருச்சி, மதுரை போன்ற தமிழக மாவட்டங்களில் வாழும் பெரும்பாலான இளைஞர்கள் புதுப்புது முயற்சிகளில் தொழில்களைத் தொடங்கி முன்னேற்றத்தைக் கண்டு வருகிறார்கள்.

ஆனாலும், இவர்களில் பெரும்பாலானவர்கள் தகுதிக் குறைவால் சில சமயம் தடுமாறவே செய்கிறார்கள். தொழில் தொடங்க நினைப்பவர்கள், மூலதனம் (Capital), திறன் (Capability), நடத்தை (Character) ஆகிய மூன்று தகுதிகளையும் கட்டாயம் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்!

தொழில்முனைவோர்களுக்கான திறன் என்பது அறிவு, கல்வி, தொழில் மீதான விருப்பம் ஆகிய மூன்றும் சேர்ந்ததாக இருக்க வேண்டும். என்ன தொழில் செய்ய நினைக்கிறோமோ, அந்தத் தொழில் சார்ந்த அறிவும், டெக்னிக்கல் தொழில்நுட்பங்களைத் கையாள்வதற்கானக் கல்வியும், ஆரம்பிக்கும் தொழிலின் மீது ஈடுபாடும் இருப்பது மிக முக்கியம்.

மூலதனம்!

தொழில்முனைவோர்களுக்கு மூலதனம் மிகவும் முக்கியமானது. அறிவு, அனுபவம், கல்வி ஆகிய விஷயங்களை மட்டும் வைத்துக் கொண்டு மூலதனம் இல்லாமல் போனாலோ அல்லது மூலதனத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அறிவு, கல்வி போன்ற விஷயங்கள் இல்லாமல் போனாலோ சுயமாகத் தொழிலை தொடங்க முடியாது.

 தொழில் ஆரம்பிப்பவர்களிடம் தொழில் ஆரம்பிப்பதற்கான மொத்த மூலதனம் இல்லை என்றாலும் தங்களின் குறைந்தபட்ச முதலீடாக 15-20% மூலதனம் இருக்க வேண்டும். இந்த முதலீடு இல்லாமல் வங்கியில் யாரும் கடன் பெற முடியாது.

எங்களிடம் குறைந்தபட்ச முதலீடுகூட இல்லை. ஆனால், மற்ற அனைத்துத் தகுதிகளும் இருக்கிறது என்பவர்கள் வெஞ்சர் கேப்பிட்டல் போன்ற நிறுவனங்களிடம் குறைந்தபட்ச முதலீட்டை அவர்களின் தொழில் மீதான முதலீடாகப் பெறலாம்.

இந்த முதலீடு கேட்டவுடன் கிடைத்துவிடாது. வெஞ்சர் கேப்பிட்டல் முதலீட்டாளர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொல்லி, அவர்கள் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றால் மட்டுமே இந்த முதலீடு கிடைக்கும். இந்த முதலீட்டாளர்கள் முதலீட்டுடன் அருமையான பிசினஸ் யோசனை களையும் சொல்வார்கள். இந்த யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் அவசியம் இருக்க வேண்டும்.

புதுமை அவசியம்!

செய்யும் தொழிலில் புதுமை, படைப்புத் திறன், கற்பனைத் திறன் ஆகிய மூன்றும் தொழில் தொடங்கு பவர்களுக்குக் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதேபோல, ஆரம்பிக்கப் பட்ட தொழிலில் ஓரளவு வளர்ச்சி கண்டபிறகு அதை இன்னும் பல மடங்காகப் பெருக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். இதையே ஆங்கிலத்தில் ‘Scaling Up’ என்பார்கள். இதற்குத் தொழில் முனைவோரிடம் கடின உழைப்பு இருக்க வேண்டும்.

கடன் பெறும் தகுதிகள்!

சுயமாகத் தொழில் செய்ய நினைப்பவர்கள் வங்கியை அணுகும் போது அங்குக் கேட்கப்படும் கேள்வி களுக்குச் சரியான பதிலை சொல்லும்படி யாக இருப்பது அவசியம். தொழில் திட்டம் சரியாக இருந்து, அதை முறை யாக நீங்கள் முன்வைத்தாலே போதும், உங்கள் மீது வங்கி அதிகாரிகளுக்கு நம்பிக்கை பிறந்துவிடும். இதன்பிறகு உங்கள் தொழிலுக்கான கடனை எளிதாகப் பெறமுடியும்.

மார்க்கெட்டிங்!

தொழில்முனைவோருக்குத் தேவையான தகுதிகளில் மிக முக்கியமான ஒன்று, மார்க்கெட்டிங் திறன். தான் உற்பத்தி செய்யும் பொருட்களை எங்கே, எப்படி, யாரிடம் மார்க்கெட்டிங் செய்வது என்ற விஷயங்களில் தொழில்முனைவோர் தெளிவுடன் இருக்க வேண்டும்.

எந்தவிதமான தொழிலில் இறங்கப் போகிறோம், அதற்கான மார்க்கெட்டிங் உத்திகள் என்னென்ன, நமக்குள்ள போட்டியாளர்கள் யார்,  நமது போட்டியாளர்களை நாம் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்கிற கேள்விகளுக்கு சந்தை ஆய்வு மூலம் விடை கண்டுபிடித்து அதற்குத் தேவையான தகுதிகளைத் தொழில் முனைவோர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.  இந்த விவரங்களை தெளிவாக அறிந்துகொண்டபின் தொழிலில் இறங்கும்போது நிச்சயம் வெற்றியைப் பெற முடியும்.

 

நடத்தை (Character)!

தொழில்முனைவோர்களின் நடவடிக்கைகள் நேர்மையானதாகவும் உண்மையானதாகவும் இருக்க வேண்டும். கடன் வாங்கும் வங்கிகளில் மட்டும் நேர்மையாக நடந்துகொண்டால் போதும் என்று நினைக்காமல், வாங்கிய கடன்களை முறையாகப் பயன்படுத்துவதிலும், அந்தக் கடன்களை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தாமல் இருப்பதிலும் உண்மைத்தன்மை யுடன் நடந்துகொள்ள வேண்டும். மேலும் உற்பத்தி, விற்பனை போன்ற நடவடிக்கைகளிலும் தரத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பது  முக்கிய தகுதியாகும். மொத்தத்தில் நம்மை மற்றவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாகக் காட்டும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆக, ஒரு தொழிலை ஆரம்பிக்க கடன் வாங்குவதென்பது 20%, மார்க்கெட்டிங் சார்ந்த விஷயங்கள் 30%, மீதி இருக்கும் 50 சதவிகிதத்தில்தான் டெக்னிக்கல், உற்பத்தி செலவுகள், உற்பத்தித் திறன் போன்ற பல விஷயங்கள் அடங்குகிறது. இந்தத் தகுதிகள் அனைத்தையும் ஒரு தொழில்முனைவோர் கொண்டிருப்பார் எனில், அவர் ஆரம்பிக்கக் கூடிய தொழிலில் நிச்சயம் பெரிய அளவிலான வெற்றி கிடைக்கும்” என்று முடித்தார் சிவக்குமார்.

புதிய தொழில்முனைவோர்கள் இதைக் கவனிக்கலாமே!

Continue reading

வான்கோழிகள் வளர்ப்பு! தொழில் முனைவோருக்கு உபயோகமான தகவல் !

 turkeyபிராய்லர் கோழிகள் மிக மெதுவாக அறிமுகமாகி இன்றைக்கு இறைச்சி என்றால் பிராய்லர் தான் என்றாகி விட்டது. இது போல் இன்னும் குறுகிய காலத்தில் வான்கோழி இறைச்சியும் இறைச்சி பிரியர்களிடம் குறிப்பிடத்க்க இடத்தை பிடிக்கும் என்று கருதப்படுகிறது. எனவே பண்ணை தொழிலில் கவனம் செலுத்துபவர்கள் வான்கோழி வளர்ப்பை இப்பொழுதே தொடங்கினால் சந்தையை தக்க வைத்துக் கொள்ளலாம். வான்கோழிகளை வளர்க்கும் முறை குறித்தும், அதன் லாபம் பற்றியும் தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் டாக்டர்கள் பூவராஜன், உமாராணி மற்றும் பண்ணை முருகானந்தம் ஆகியோர் விவரிக்கிறார்கள்.

Continue reading

வண்ணக்கோழி வளர்ப்பு !!

 Untitled-1 copyசிறிய இடம் இருந்தால் கூட அதில் ஒரு லாபகரமான தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள முடியும். வண்ணக் கோழி வளர்ப்பு இத்தகைய ஒரு தொழில் வாய்ப்பு ஆகும். நாட்டுக் கோழி இனத்தில் இருந்து கால்நடை பல்கலைக் கழகத்தால் புதிதாக உருவாக்கப்பட்ட இனத்தை தான் வண்ணக் கோழிகள் என்று அழைக்கிறார்கள். நந்தனம் 1 மற்றும் 2, கிரிராஜா, கிரிராணி, வனராஜா, சுவர்ணதாரா என பல்வேறு இனக் கோழிகள் கால்நடை பல்கலை கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.

Continue reading

சிறு தொழில் தொடங்குவோருக்கு சில ஆலோசனைகள்!

அப்படிப்பட்டவர்களுக்கு மாவட்ட தொழில் மையம் சிறந்த வழிகாட் டியாக இருந்து தொழிலை தொட ங்க உதவுகிறது. தொழில் தொடங்க ஆர்வமாக இருப்பவர்க ளுக்காக, U.Y.E.G.P. திட்டத்திலி ருந்து சில ஆலோசனைகளை கேள்வி பதில் வடிவில் பார்ப் போம் .
கேள்வி: லோடு ஆட்டோ வாங்க இந்த திட்டத்தில் கடன் கிடைக்குமா?

பதில்: சிறு வாகன கடன் என்பது சேவைப்பிரிவைச் சார்ந்தது. இதில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட முதலீடு ரூ.3 இலட்சம். மீதமுள் ள தொகையை பயனாளிகள் சொந்த முதலீடாக செய்வதாக இருப்பின், இந்த திட்டத்தில் பயன்பெற அடிப்படையான நலிவுற்றோர் என்ற தகுதி இல்லாமல் போய்விடும். மேலும் வாகன கடன் கேட்டு விண்ணப் பிப்பதற்கு செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம், வில்லை ஆகியன அவசியம்.
கேள்வி: U.Y.E.G.P. திட்டத்தில் கடன் பெற்றால் வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படுமா?

Continue reading

நாட்டுக் கோழி வளர்ப்பு

வேளாண்மை

பிரபலமாகி வரும் நாட்டுக் கோழி வளர்ப்பு
1
நம் கிராமங்களில் நடைபெறும் அசைவ விருந்துகளில் நாட்டுக் கோழி கறிக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. பிற அசைவ உணவுகளில் காண முடியாத தனிச் சிறப்பான அதன் ருசியே இதற்கு காரணம். அது மட்டுமின்றி உடல் நலம் குன்றியவர்களை வலுப்பெறச் செய்யும் வகையில் அவர்களுக்கு உணவாக மட்டு மின்றி, மருந்தாகவும் நாட்டுக் கோழி உணவுகள் திகழ்கின்றன.

தற்போது மக்களிடையே பாரம்பரிய உணவு வகைகளான கம்பு, சோளம், கேழ்வரகு போன் றவை பிரபலமடைந்து வருகின்றன. அந்த வகையில் நாட்டுக்கோழி இறைச்சியும், நாட்டுக்கோழி முட்டைகளும் பிரபலமடைந்து வருவதாகக் கூறுகிறார் சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பண்ணையின் உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ.சுந்தரேசன்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: “நாட்டுக்கோழிகள் பாரம்பரியமாக குறிப்பாக கிராமப்புறங்களில் இன்றும் வளர்க்கப் படுகிறது. பெண்கள்தான் பெரும் பாலும் இதை பராமரிக்கின்றனர். பெண்கள் குறைந்த அளவில் 10 முதல் 20 நாட்டுக் கோழிகளை வளர்த்து, அவற்றில் கிடைக்கும் நிலையான வருமானத்தை சிறுவாட்டுக் காசு என்னும் சிறு சேமிப்பாக சேர்த்து குடும்பத் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

வீட்டில் திடீரென்று ஏற்படும் செலவினங் களுக்கு தங்களிடம் உள்ள நாட்டுக்கோழிகளை விற்று பயன்படுத்துவதால் நாட்டுக் கோழிகளுக்கு “நடமாடும் வங்கி” என்ற பெயர் பொருத்தமான முறை யில் அழகு சேர்க்கிறது.

கிராமப்புற மக்களுக்கு நிரந்தர வருவாய், குறைவான முதலீடு, எளிதானப் பராமரிப்பு போன்றவை நாட்டுக் கோழி வளர்ப்புக்கு சாதகமான அம்சங்களாக உள்ளன. கலப்புத் தீவனம் மட்டும் அல்லாமல், காய்கறி கழிவுகள் மற்றும் புல், பூண்டு போன்றவற்றை உண்பதால் தீவன செலவு குறையும்.

அதிக நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் நீண்ட காலம் உயிர் வாழும் தன்மை கொண்டவை. குறைந்த கொழுப்பு சத்து கொண்ட நாட்டுக் கோழியிறைச்சி வயதானவர்களுக்கும் ஏற்றது. கிராம மக்களின் புரதத் தேவையை நாட்டுக்கோழி இறைச்சியும், முட்டைகளும் பூர்த்தி செய்கின்றன.

நாட்டுக்கோழிகளில் நான்கு முக்கியத் தூய இனங்கள் உள்ளன. அவை, அசீல், கடக்நாத், சிட்டகாங் மற்றும் பஸ்ரா முதலியனவாகும். நாட்டுக்கோழிகளை தீவிர முறை வளர்ப்பு, புறக்கடை வளர்ப்பு மற்றும் குறைந்த எண்ணிக்கையிலுள்ள நாட்டுக் கோழிகள் வளர்ப்பு என பராமரிப்பு வசதிகளுக்காக வகைப்படுத்திக் கொள்ளலாம். தீவிர முறை வளர்ப்பில் அசில் மற்றும் அசில் கலப்பினங்களும், புறக்கடை வளர்ப்புக்காக நந்தனம் கோழி – 1 மற்றும் 2 மற்றும் மற்ற மாநிலங்களில் உருவாக்கப்பட்ட வனராஜா, கிரிராஜா, கிராமப்பிரியா போன்ற ரகங்களும் ஏற்றவை.

நாட்டுக் கோழி வளர்ப்பு என்பது பாரம்பரியமான முறைதான். அதையே அறிவியல் ரீதியிலான பராமரிப்பு முறைகளைக் கையாண்டு வளர்க்கும்போது அதனால் கிடைக்கும் வருவாய் பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது” என்கிறார் சுந்தரேசன்.

மேலும் விவரங்களுக்கு: 94426 34411.
தி இந்து

இன்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைக்குமா?

ஒரு அலெர்ட் மெசேஜ்

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, பொறியியல் படிப்பு என்பது அடைய முடியாத பெருங்கனவு. இன்றோ… நகரம் மற்றும் கிராமங்களின் வீதிகள் தோறும் பொறியாளர்கள் நிறைந்திருக்கின்றனர். நம் ஊரில், தெருவில், குடும்பத்தில்… எங்கெங்கு காணினும் பொறியாளர்கள். ஆனால், அவர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்த பொன்னுலகம் அவர்களுக்குக் கிடைத்துவிட்டதா? ‘இன்ஜினீயரிங் படிச்சிட்டா போதும்… கை நிறையச் சம்பாதிக்கலாம்; வாழ்க்கையில் செட்டில் ஆகிடலாம்’ என்ற எண்ணம் ஈடேறியதா? இது விடை தெரியாத கேள்வி அல்ல.

பல லட்சங்கள் செலவழித்து இன்ஜினீயரிங் படித்துவிட்டு, 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்குக்கூட வேலை கிடைக்காமல் திண்டாடும் எத்தனையோ பொறியாளர்களை நமக்குத் தெரியும். ஃபைனான்ஸ் கம்பெனியில் பணம் கட்டி ஏமாந்தவர்களைப் போல, அவர்களின் முகங்களில் எதிர்காலம் குறித்த அச்சம் உறைந்திருக்கிறது. எப்படியாவது, ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்துவிடத் துடிக்கிறார்கள். யதார்த்தம், அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறதா?

பொறியியல் மோகம்!

தமிழ்நாட்டில் மட்டும் 498 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 2,36,417 பேர் படித்து வெளியில் வருகின்றனர். மொத்த இந்தியாவையும் கணக்கிட்டால், நாடு முழுவதும் உள்ள 4,469 பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 16,03,012 பேர் படித்து வெளியில் வருகின்றனர். இது, 2011-12ம் ஆண்டின் கணக்கு. இதற்கு முந்தைய ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை சற்றுக் குறைவாக இருக்கலாம். எப்படி இருப்பினும், ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய பொறியாளர்கள் உருவாகிக்கொண்டே வருகின் றனர்.

இது தொடர்பான பல்வேறு புள்ளிவிவரங்களில், ஒரு தகவல் நம்மை ஆச்சரியப்படுத்தியது. ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்கா மற்றும் சீனாவில் எவ்வளவு பொறியாளர்கள் உருவாகிறார்களோ… அதைவிட அதிகமான எண்ணிக்கையில் இந்தியாவில் பொறியாளர்கள் உருவாக்கப் படுகின்றனர். பொருளாதாரரீதியாக நம்மைவிட வலுவாக உள்ள நாடு மற்றும் பரப்பளவிலும், மக்கள்தொகையிலும் நம்மைவிட பெரிய நாடு… இந்த இரண்டுக்கும் தேவைப்படுவதைவிட, நம் நாட்டுக்கு அதிக பொறியாளர்கள் தேவைப்படுகின்றனரா?

”உண்மையில் இப்படிப்பட்ட எந்தக் கணக்கும் இந்திய அரசிடம் இல்லை. இந்தியாவின் பல்வேறு துறைகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் எத்தனை பொறியாளர்கள் தேவை எனக் கணக்கிட்டு அதற்கேற்ப கல்லூரிகளில் கல்வியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதைவிட அதிகமான இடங்களுக்கு அனுமதி தரக் கூடாது. ஆனால், இந்திய அரசிடமே அப்படி ஒரு கணக்கீடு இல்லை என்பதால், விருப்பம் போல கல்லூரிகளுக்கும் கல்வியிடங்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. விளைவு, பொறியியல் கல்லூரிகள் மழைக்கால ஈசல்களைப் போல பெருகியிருக்கின்றன” என்கிறார் ஐ.டி. துறையில் பணிபுரியும், சேவ்-தமிழ்ஸ் அமைப்பைச் சேர்ந்த இளங்கோவன்.

எனவேதான் ஜனவரி – 2011 நிலவரப்படி 98 லட்சமாக இருந்த இந்திய வேலையில்லா பொறியாளர்களின் எண்ணிக்கை, 2013-ல் 1.8 கோடியாக அதிகரித்துள்ளது.

பெற்றோர்களின் சுமை!

வேலை கிடைக்கவில்லை என்பது மாணவர்களைவிட பெற்றோர்களுக்கே அதிக மன உளைச்சலைத் தருகிறது. ஏனெனில், அவர்கள்தான் சொத்துகளை விற்று, நகைகளை விற்று, சொந்த-பந்தங்களிடம் கடன் வாங்கி பிள்ளைகளைப் படிக்கவைக்கின்றனர். படித்து முடித்ததும் நல்ல வேலை கிடைக்கும்; சம்பளம் கிடைக்கும்… அதைக்கொண்டு கடனை அடைத்துவிடலாம் என்பது அவர்களின் நம்பிக்கை. அது பொய்க்கும்போது யதார்தத்தை எதிர்கொள்ள மிகவும் சிரமப்படுகின்றனர். கடன் மேல் கடன் வாங்கி ஓட்டாண்டியான குடும்பங்கள் எத்தனையோ. ‘தொழிற்கல்வி’ என்ற பெயரில் பொறியியல் கல்லூரிகள் கல்வியைத் தொழிலாக நடத்த, தொழில் நடத்திய பல பெற்றோர்கள் சொத்துகளை இழந்து கடனாளிகளாக நிற்கின்றனர்.

இன்னொரு பக்கம் கல்விக் கடன். லட்சக்கணக்கான இளைஞர்கள், கல்லூரியைவிட்டு பொறியாளர்களாக மட்டும் வெளியேறவில்லை… கடன்காரர்களாகவும் வருகின்றனர். ஆனால், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமோ கல்விக் கடனை ஒரு புரட்சிகரத் திட்டம் போலவே அறிவித்து வருகிறார். சொந்தக் குடிமக்களுக்குத் தரமான கல்வியை இலவசமாகத் தர வழியற்ற அரசு, லட்சக்கணக்கான நடுத்தரவர்க்கக் குடும்பங்களை கடனாளிகளாக மாற்றியிருப்பது எப்படி புரட்சிகரத் திட்டமாகும்? நாடு முழுவதும் புற்றீசல் போல திறக்கப்பட்டுள்ள தனியார் கல்வி முதலாளிகளின் கொள்ளை லாபத்தை உத்தரவாதப்படுத்தவே, இந்தக் கல்விக் கடன்கள் உதவுகின்றன. அந்தப் பக்கம் கடன் தந்துவிட்டு, இந்தப் பக்கம் அதைக் கல்வி வியாபாரிகளின் கல்லாவில் வாங்கிப் போடுகிறார்கள். ஆனால், மாணவர்களோ… படிப்பு முடிந்த முதலாம் ஆண்டு முடிவில் இருந்து வட்டியுடன் கடனைத் திருப்பிச் செலுத்தியாக வேண்டும்.

”நான் திருப்பூர் அருகே உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் கல்விக் கடன் பெற்றுதான் படித்தேன். ஒருமுறை நான் வங்கி சென்றிருந்தபோது ஒரு மாணவன், இரண்டாவது தவணை கல்விக் கடனைப் பெறுவதற்காகப் பெற்றோருடன் வங்கிக்கு வந்திருந்தான். அவனது தேர்வு மதிப்பெண் அட்டையை வாங்கிப் பார்த்த வங்கி மேலாளர், மதிப்பெண்கள் குறைவாக இருந்ததால், அவனைக் கடுமையாகத் திட்டியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். ஒழுங்காகப் படிக்கவில்லை என்றால், ஆசிரியர் திட்டுவார், பெற்றோர் திட்டுவார்கள். ஆனால், ஒரு வங்கி மேலாளர் திட்டியதைக் கண்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது” என்கிறார் தற்போது சென்னையில் பணிபுரியும் பாரதிதாசன்.

ஒரு பக்கம் குடும்பக் கடன், கல்விக் கடன், வேலை கிடைக்காத சூழல், குடும்பத்தின் நெருக்கடி… என்று படித்த இளைஞர்களின் மனம், பெரும் பாரத்தைச் சுமக்கிறது. இன்னொரு பக்கம், இந்தியாவின் வேலைவாய்ப்புச் சந்தை ஒவ்வோர் ஆண்டும் பலவீனமாகி வருகிறது.

குறையும் வேலைவாய்ப்பு!

இந்தியாவின் வேலைவாய்ப்பு சதவிகிதம் 2004-2005ம் ஆண்டில் 42 சதவிகிதமாக இருந்தது. இது 2009-10ம் ஆண்டில் 36.5 சதவிகிதமாகவும், 2011-12ம் ஆண்டில் 35.4 சதவிகிதமாகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த          10 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு சதவிகிதம் குறைந்துகொண்டே வருகிறது. மாறாக, ஒவ்வோர் ஆண்டும் இந்தியப் பொறியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதாவது, தேவையைவிட அதிக உற்பத்தி. தேவைப்படாதபோது ஒரு பொருளை உற்பத்தி செய்வதால் பொருள் வீணாவது மட்டுமல்ல… அதை உருவாக்கச் செலவிடப்பட்ட பணம், நேரம், மனிதவளம் அனைத்தும் வீணாகின்றன. இது எளியோர்களுக்கான கணக்கு. முதலாளிகளின் உலகத்தில், இந்த மிகை உற்பத்தியும் தந்திரமாக லாபமாக்கப்படுகிறது.

நாட்டின் தொழில் துறை வளர்ச்சி விகிதத்துக்கு எவ்வளவு பொறியாளர்கள் தேவையோ… அதற்கேற்ற எண்ணிக்கையில் கல்லூரிகளும் கல்வியிடங்களும் இருக்க வேண்டும். மாறாக, நம் ஊரில் பொறியியல் கல்லூரிகள் ஏராளமாகப் பெருகிவிட்டன. ‘பொறியியல் படிப்பதுதான் கௌரவம். அதுதான் எதிர்காலம்’ என்ற ஆசை உருவாக்கப்பட்டு, மாணவர்கள் அதில் சேர்க்கப்படுகின்றனர். ஆனால், இவர்கள் அனைவருக்கும் வேலை கொடுக்கும் அளவுக்கு இந்தியத் தொழில் துறையில் வளர்ச்சி இல்லை. இதனால் இந்தியப் பொறியாளர்கள், மிகவும் சவாலான வேலைவாய்ப்புச் சந்தையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

ஐ.டி. நிறுவனங்களின் கூட்டமைப்பான ‘நாஸ்காம்’ வெளியிட்ட தகவலின்படி, 2013-ம் ஆண்டில் 50 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளைப் பெற, சுமார் 10 லட்சம் பொறியாளர்கள் போட்டியிட்டனர். இப்படிக் குறைந்த எண்ணிக்கையிலான வேலைகளுக்கு அதிக எண்ணிக்கையிலானோர் போட்டியிடும்போது, இயல்பாகவே ஊதியம் குறைக்கப்படுகிறது!

மிகை உற்பத்தி… மிகை லாபம்!

”இதில் நுணுக்கமாக ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். தேவைக்கு அதிகமான பொறியியல் கல்லூரிகளைக் கட்டி, அதில் லட்சக்கணக்கான மாணவர்களைப் படிக்க வைத்து, நம் குடும்பங்களின் வாழ்நாள் சேமிப்பை உறிஞ்சுகின்றனர். அந்தக் கல்லூரிகளின் மூலம் தேவைக்கு அதிகமான பொறியாளர்களை உற்பத்தி செய்து, அவர்களை குறைந்த கூலியில் வேலைக்கு எடுத்து, நம் இளைஞர்களின் உழைப்பை உறிஞ்சுகின்றனர். அதிலும் லாபம்; இதிலும் லாபம்” என்கிறார் ஐ.டி. துறையில் பணிபுரியும் செந்தில்.

எனினும், இந்த வேலைகூட கிடைப்பது இல்லை என்பதுதான் இன்றுள்ள யதார்த்தச் சூழல். இதனால், பொறியியல் படித்த லட்சக் கணக்கானோர் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு பி.பி.ஓ., டெஸ்ட்டிங் என்று ஐ.டி. துறையில் வந்து சரணடைகிறார்கள். இந்த வேலைகளும் உறுதியானவையோ, நிரந்தரமானவையோ அல்ல. இவை அனைத்தும் இந்தியாவின் குறைந்த சம்பளத்தைக் கணக்கில்கொண்டு அவுட்சோர்ஸ் செய்யப்படுபவையே. இதைவிட குறைவான சம்பளத்துக்கு வேறொரு நாட்டில் பணியாளர்கள் கிடைக்கும்போது, அவுட்சோர்ஸ் வேலைகள் அங்கு பறந்துவிடுகின்றன.

2014-ம் ஆண்டு பிப்ரவரியில் புகழ்பெற்ற கணினி நிறுவனமான ஐ.பி.எம்., குறைந்துவிட்ட தனது லாப விகிதத்தைச் சமப்படுத்த, உலகம் முழுவதும் உள்ள கிளைகளில் இருந்து 13,000 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியது. இந்த நிறுவனத்தின் பெங்களூரூ கிளையில் ஒரே நாளில் 50 பேர் திடீரென்று நீக்கப்பட்டனர்!

கை கொடுக்காத கேம்பஸ்!

புறச்சூழல் இத்தகைய நெருக்கடிகளுடன் இருப்பது, கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் தெரிகிறது. இதனால் எப்படியாவது ‘கேம்பஸ் இன்டர்வியூ’ எனப்படும் வளாக நேர்முகத் தேர்விலேயே ஒரு வேலையைப் பெற்றுவிட வேண்டும் என்று அவர்கள் துடியாகத் துடிக்கின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வளாக நேர்முகத் தேர்வு நடத்தவரும் நிறுவனங் களின் எண்ணிக்கையும், அவர்கள் தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துவிட்டன. காரணம், உலக ளாவியப் பொருளாதார நெருக்கடி. ஏற்கெனவே கேம்பஸில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கே அவர்களால் வேலை தர முடியவில்லை. புகழ் பெற்ற மும்பை ஐ.ஐ.டி-யில் 2012-13வது கல்வி ஆண்டில் 1,501 மாணவர்கள் கேம்பஸில் தேர்வானார்கள். ஆனால், அவர்களில் 1,005 பேருக்கு மட்டுமே வேலை கொடுக்கப்பட்டுள்ளது. இதே கல்லூரியில், கடந்த ஆண்டு 1,389 பேர் கேம்பஸில் தேர்வு செய்யப்பட்டு, 1,060 பேருக்கு மட்டுமே வேலை அளிக்கப்பட்டது.

வளாக நேர்முகத் தேர்வில் வேலை கிடைக்காவிட்டால், அது மன அழுத்தமாக மாறி சில நேரம் தற்கொலையில்கூட முடிகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த ஷாகில் முகமது என்கிற மாணவர், வளாக நேர்முகத் தேர்வில் வேலை கிடைக்கவில்லை என்று கடந்த ஆண்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

எனில், பொறியியல் படிப்பது வீண் செயலா? பொறியியல் படித்தால் வேலை கிடைக்காதா? இப்படி ஒரு முடிவுக்கு வருவது இல்லை இந்தக் கட்டுரையின் நோக்கம், ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாட்டில் சுமார் இரண்டு லட்சம் பேர் பொறியியல் படிப்புப் படித்து வெளியில் வருகின்றனர் என்றால், அதில் குறிப்பிடத்தகுந்த பேருக்கு வேலை கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. அடியோடு அது வீண் என்று சொல்வதற்கு இல்லை. அதே நேரம் ‘பொறியியல் படிக்கும் அனைவருக்கும் நல்ல சம்பளத்தில் வேலை உறுதி’ என்ற நிலை இன்று இல்லை.

இந்த நிலையில் கல்வியாளர்களின் பரிந்துரைதான் என்ன? அது எப்போதும் சொல்வதுதான். பிள்ளைகளின் ஆர்வம் எதில் இருக்கிறதோ, அந்தப் படிப்பில் சேர்த்துவிடுங்கள். ‘இதற்குத்தான் எதிர்காலம் இருக்கிறது’ என்று ஊதிப் பெருக்கப்பட்ட மாயைக்கு இரையாகாதீர்கள்!


அனிஷ்குமார், மெக்கானிக்கல் இன்ஜினீயர்: ”என்னோட 1.20 லட்ச ரூபாய் கல்விக் கடன், இப்போ 1.40 லட்சமா இருக்கு. வேலைத் தேடிப்போற இடத்துல எல்லாம், ‘டிப்ளமோ படிச்சிருந்தா வேலை தர்றோம். இன்ஜினீயரிங்னா வேண்டாம்’ங்கிறாங்க. ஏன்னா, டிப்ளமோவா இருந்தா அதிக வேலை வாங்கிட்டு கம்மி சம்பளம் தரலாம். இன்ஜினீயரிங்னா அது முடியாதே… 10 லட்சம் செலவு செஞ்சு இன்ஜினீயரிங் படிச்சதுக்கு 10 ஆயிரம் சம்பளத்துல வேலை கிடைக்கிறதே பெரும்பாடா இருக்கு!”

திராவிடத் தம்பி, கம்ப்யூட்டர் சயின்ஸ்: ”படிப்பு முடிச்சு அஞ்சு வருஷமா பி.பி.ஓ. வேலைதான் பார்க்கிறேன். இப்போ ஐ.டி. வேலைக்கு இன்டர்வியூ போனா, ‘உங்களுக்கு டச் விட்டுப்போச்சு. வேற ஃபீல்டுக்குப் போயிட்டீங்க… வேண்டாம்’ங்கிறாங்க. இந்த வேலையைப் பார்க்கிறதுக்கு எதுக்கு லட்சம், லட்சமா செலவழிச்சு நாலு வருஷம் படிக்கணும்?”

ரிஸ்வான், பி.டெக். ஐ.டி.: ”2007-ல் படிப்பு முடிச்சேன். ஏழு வருஷம் ஆச்சு. மூணு வருஷம் வாத்தியார் வேலை பார்த்தேன். டேட்டா என்ட்ரி, டீச்சிங் எதுக்குப் போனாலும் 7,000, 8,000 தான் சம்பளம் தர்றாங்க. யாரும் வேலை தர்றது இல்லை. ஆனா, எல்லாரும் எக்ஸ்பீரியன்ஸ் கேட்கிறாங்க. வேலையே கொடுக்காம எக்ஸ்பீரியன்ஸுக்கு எங்கே போறது?”

மீண்டும் வங்கிப்பணி மோகம்!

ந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் புதிய வேலைவாய்ப்புகளின் உருவாக்கம் ஒவ்வோர் ஆண்டும் குறைந்துகொண்டே வருகிறது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட சுமார் 250 முன்னணி நிறுவனங்களில் ‘எக்கனாமிக் டைம்ஸ்’ ஒரு சர்வே நடத்தியது. அதன்படி 2011-வது நிதியாண்டில் 2.02 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இது, 2012-ல் 1.91 லட்சமாகவும், 2013-ல் 1.23 லட்சமாகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது, 2011-ம் நிதியாண்டில்         6.4 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பு வளர்ச்சி, 2012-ல் 5.7 சதவிகிதமாகவும், 2013-ல் 3.5 சதவிகிதமாகவும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதனால், 20 வயதில் இருந்து 30 வயது வரையிலான பொறியியல் பட்டத்தாரிகளில்         74 சதவிகிதம் பேர் வங்கி தொடர்பான வேலைகளில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டார்களாம். வருங்காலத்தில் வங்கி தொடர்பான வேலைவாய்ப்புகள் லட்சக்கணக்கில் அதிகரிக்க இருக்கும் நிலையில், பெரும்பாலான பொறியியல் பட்டதாரிகள் வங்கித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதாகச் சொல்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று!

‘கெம்பா’ கார்த்திகேயன், மனிதவள நிபுணர்:

”தற்போதைய நிலையில், வேலை கிடைக்காத பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது உண்மைதான். அதே நேரம் கடந்த சில ஆண்டுகளாக பெரும் நிறுவனங்கள் நல்ல ஊதியத்தில் பொறியாளர்களை வேலைக்கு அமர்த்தி வருவதும் உண்மை. அதனால் பொறியியல் படிப்பு குறித்து அடியோடு அவநம்பிக்கை கொள்ளத் தேவையில்லை. பொறியியல் கல்லூரிகள் அதிகமாக இருப்பதோ, தேவையைவிட அதிக பொறியாளர்கள் உருவாக்கப்படுவதோ ஒரு பிரச்னை இல்லை. உருவாகிவரும் பொறியாளர்களின் பெரும்பகுதியினர் திறனற்றவர்களாக இருப்பதுதான் பிரச்னை. இதற்கு, தனிநபர்களைக் குற்றம் சொல்ல முடியாது. முதலில் நாம் நமது கல்லூரிகளை, அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளும் கொண்டவையாக மாற்ற வேண்டும். உள் கட்டமைப்பு என்றால், வெறும் கட்டடங்கள் அல்ல; மாணவர்களின் தனித்திறனையும் ஆற்றலையும் வளர்க்கும் கல்விமுறை, திறமையான ஆசிரியர்கள்… என்பதில் இருந்து அதைத் தொடங்க வேண்டும். இது, உடனடி பலன் அளிக்காது; எனினும், நீண்டகால நோக்கில் நிச்சயம் பலன் அளிக்கும்!”

Continue reading

கூலி வேலைக்கு நடுவே குஷியான வருமானம்

மனிதனின் ஆரம்பக்காலப் பொருளாதாரமே, ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள்தான். இவற்றைப் பெருக்கித்தான் காலகாலமாக தங்களின் பொருளாதாரத்தை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கின்றனர் கிராமப் புற மக்கள். இதை உணர்ந்தே கால்நடைகள்தான் கிராமப்புறப் பொருளாதாரத்தின் காவலன் என்று நீண்ட நெடுங்காலமாக விவசாயப் பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனை சொல்லி வருகின்றனர். இது, நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளனர் கோயம்புத்தூர் மாவட்டம், சுல்தான்பேட்டை அடுத்துள்ள நகரகளந்தை பகுதியில் வசிக்கும் வேலுச்சாமி- செல்லம்மாள் தம்பதி! சொந்தமாக நிலம் ஏதும் இல்லாத வயது முதிர்ந்த இந்தத் தம்பதியர், தனியார் ஒருவரின் தென்னந்தோப்பில் தங்கி, கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையிலும் தளர்ந்து விடாமல் ஆடு, கோழி, புறா ஆகியவற்றை வளர்த்து தன்னிறைவான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். Continue reading

அள்ளிக் கொடுக்கும் ஆட்டுப்பண்ணை!

ஆசை இருக்கு அரசாள.. அதிர்ஷ்டம் இருக்கு ஆடு மேய்க்க என்று கிண்டலாகச் சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு அரசாள்வதைவிட… இது மேல் என்று சொல்லும் அளவுக்கு மரியாதைக்குரிய மற்றும் லாபம் கொழிக்கும் தொழிலாக மாறிவிட்டது ஆடு மேய்த்தல். Continue reading

வித்தியாசமான சிந்தனை… வெற்றிக்குப் பாலம்!

 ‘வித்தியாசமான சிந்தனை இருந்தால், எளிதில் வெற்றி பெறலாம்’ என்பதற்கு உதாரணம், மதுரையைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி. பூக்கள் சிரிக்கும் ‘பொக்கே’ பார்த்திருப்போம்… இவர் செய்வதோ, ‘சாக்லேட் பொக்கே’!

தன் தொழிலைப் போலவே, இனிக்க இனிக்கப் பேசுகிறார் ராஜராஜேஸ்வரி…

”எனக்கு சொந்த ஊர் சிவகங்கை. மதுரையில் செட்டிலாகி ரொம்ப வருஷமாச்சு. ஒன்றரை வருஷத்துக்கு முன்ன, சென்னையில் இருந்து பிரசவத்துக்காக தாய் வீடு வந்திருந்த பக்கத்து வீட்டுப் பெண் ஒருத்தவங்ககிட்ட, சாக்லேட் செய்யக் கத்துக்கிட்டேன். ரெண்டே மணி நேரத்தில் கத்துக்கிட்டதை வெச்சே, தொழில் பண்ணலாம்னு தைரியமா  முடிவெடுத்து களத்துல இறங்கினேன். சாக்லேட்டுகள் செய்து, கவர்ச்சிகரமான ரேப்பர்கள்ல சுத்தி, பாக்ஸில் வெச்சு… பேக்கரி, மால், காலேஜ் கேன்டீன்னு கொடுக்க ஆரம்பிச்சேன்.

ஆரம்பத்தில் வீட்டு ஃப்ரிட்ஜில் இருந்து சாக்லேட்டுகளை டூ-வீலரில் வெயிலில் எடுத்துப் போய், கடையில் உள்ள ஃப்ரிட்ஜில் வைக்கறதுக்குள்ள உருகிடும். அப்புறம்தான் மாலை நேரங்கள்ல டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சேன். இப்படி இந்தத் தொழிலில் அடிபட்டு அடிபட்டே அடிப்படைகளைக் கத்துக்கிட்டேன். தொழில் நல்லா போகும் நேரத்தைவிட, டல்லாகும் சமயங்கள்ல தளரவிடாமல் என் அம்மா யசோதாவும், தம்பி முரளிகிருஷ்ணனும் பக்கபலமா இருந்தாங்க” என்றவரின் சாக்லேட்டுகள், ஊர் தாண்டி இப்போது விற்பனை ஆகின்றன.

”என் சாக்லேட்டோட தரமும் ருசியும் வாய்மொழி விளம்பரமா பரவ, அதை பயன்படுத்தி நானும் முயற்சிகள் எடுக்க, இப்போ சென்னை, விருதுநகர், சிவகாசி போன்ற ஊர்கள்ல இருந்தெல்லாம் எனக்கு ஆர்டர்கள் கிடைக்குது. குறிப்பா, சென்னையில் மால்கள், பெரிய ஸ்வீட் ஸ்டால்கள்னு விற்பனை ஆகுது. கடைகள் தவிர, காலேஜ் ஸ்டூடென்ட்ஸ் மத்தியிலயும் சாக்லேட்டுக்கு நல்ல வரவேற்பு இருக்கு” என்றவர், சாக்லேட் பிசினஸில் இருந்து, சாக்லேட் பொக்கே பிசினஸ் பிக்-அப் ஆன கதையைச் சொன்னார்.

”ஒரு முறை என் தோழியோட விசேஷத்துக்காக ஒரு ஃப்ளவர் பொக்கே வாங்க நினைச்சேன். அப்போதான், இந்த சாக்லேட் பொக்கே செய்யும் யோசனை வந்துச்சு. இதுக்கு முன்ன இப்படி எதுவும் நான் கேள்விப்படலங்கறதுக்காக தயங்கல. இந்த புது முயற்சிக்கு நிச்சயம் பாராட்டு கிடைக்கும்னு நம்பிக்கையோட இறங்கினேன். பல நூறு ரூபாய்கள் செலவழிச்சு வாங்கும் பொக்கே மலர்கள், இரண்டொரு நாளில் வாடிடும். ஆனா, சாக்லேட் பொக்கே, வீணாகாம எல்லாராலயும் விரும்பிச் சாப்பிடப்படுமே! உடனடியா சாக்லேட் பொக்கே ரெடி செய்து, தோழிக்குக் கொடுத்தேன். விசேஷத்துக்கு வந்திருந்தவங்க ஆச்சர்யமா பார்த்து, பாராட்டினாங்க. அந்த உற்சாகத்துல இதையும் தொழிலா எடுத்துச் செய்ய ஆரம்பிச்சு, இப்போ மூணு மாசமாகுது.

இந்தத் தொழிலின் ஆரம்ப முயற்சிகள்ல என் ஃப்ரெண்ட் ரேவதி, சரவணன் ரொம்ப உதவினாங்க. கிஃப்ட், பொக்கே இதெல்லாம் கல்லூரி மாணவர்களோட ஏரியாங்கறதால, சாக்லேட் பொக்கேவை கல்லூரி விழாக்கள்ல டிஸ்பிளே செய்தோம். அடுத்ததா அபார்ட்மென்ட்கள்ல அறிமுகப்படுத்தி வாய்ப்புகள் கேட்டோம். இப்போ திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள், விசேஷங்கள்னு ஆர்டர்கள் வர ஆரம்பிச்சுருக்கு. சிங்கப்பூர், மலேசியா நாடுகள்ல இருந்தெல்லாம், மூங்கில் கூடை சாக்லேட் பொக்கேவை பூக்கள் இல்லாமலேயே கேட்கறாங்க. ராமநாதபுரத்தில் ஒரு விழாவுக்கு கலெக்டரை வரவேற்க, நான் தயாரிக்கற சாக்லேட் பொக்கே வாங்கிட்டுப் போனதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்!” என்று பூரித்த ராஜராஜேஸ்வரி,

”பொக்கேவில் அதிகமா ஹார்ட் மாடலைதான் விரும்பி வாங்கிட்டுப் போறாங்க. குழந்தைகளோட பிறந்தநாளுக்கு டெடிபியர், பறவைகள், பழ வடிவங்கள்னு சாக்லேட் செய்வேன். சீர்தட்டில் வைக்க, விசேஷங்களில் வரவேற்பில் வைக்க எல்லாம் இப்போ இந்த பொக்கேவை ஆர்டர் கொடுக்கறாங்க. இதுக்குத் தேவையான ரேப்பர்களை மும்பையிலிருந்து ஆர்டர் செய்து வாங்குறேன். மூங்கில் கூடைகளை பரமக்குடியில் ஆர்டர் செய்றேன். மோல்டுகளைப் பொறுத்தவரை சிலிக்கான் மோல்டு, ஸ்டூடென்ட் மோல்டு மற்றும் பிராண்டட் மோல்டுகள் கடைகள்ல கிடைக்கும். சிலிக்கான் மோல்டை நல்லா வளைக்கலாம். அதில் சாக்லேட்டை ஊற்றினா, சுலபமா வந்துடும். ஸ்டூடென்ட் மோல்ட்ல சாக்லேட்டை தட்டி எடுக்கணும். பிராண்டட் மோல்டுகள் நீண்டநாள் உழைக் கும். கோகோ பவுடர், மில்க் பவுடர், பாதாம், முந்திரி, பிஸ்தா எல்லாவற்றையும் கலந்து டிசைன் மோல்டுகளில் ஊற்றி ஃப்ரீஸரில் வெச்சா… சாக்லேட் ரெடி. அவசரத்துக்கு சாக்லேட் (டார்க், பிரவுன், வொயிட்) பார்கள் வாங்கியும் தயாரிப்பேன்.

பெரும்பாலும் டார்க் பிரவுன் சாக்லேட்டை நட்ஸோடு சேர்த்துதான் பொக்கே செய்வேன். அப்போதான் டேஸ்ட்டாவும் ரிச்சாவும் இருக்கும். மூணு மாதங்கள் வரை இந்த பொக்கே சாக்லேட்டை வெச்சுருந்து உபயோகிக்கலாம். நட்ஸ் சாக்லேட்னா… ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம். ஃப்ரிட்ஜில வெச்சா… நீண்ட நாள் உபயோகிக்கலாம்” என்று தகவல்களைத் தந்ததோடு… சாக்லேட் பொக்கே தயாரிக்கும் முறையையும் சொன்னார் (பார்க்க: பெட்டிச் செய்தி).

நிறைவாக, ”சாக்லேட் கைப்பக்குவமும், பொக்கே செய்யும் ஆர்வமும் இருந்தா… இந்தத் தொழில்ல அவரவர் திறமையை வைத்து, நிறைவா சம்பாதிக்கலாம்!” என்று புதுவழி காட்டினார் ராஜராஜேஸ்வரி!


‘பொக்கே’ ரெடி பண்ணலாம் வாங்க..!

”பொக்கே தயாரிக்க முதலில் பலூன் ஸ்டிக் தயாரிக்க வேண்டும். தடிமனான ஸ்ட்ராவின் மேல், செலோடேப்பை நன்கு சுற்றிக்கொள்ள வேண்டும் (வொயிட், ப்ளூ, பிங்க், ரெட், கோல்டு என கலர் கலரான செலோடேப்கள் கிடைக்கின்றன. ஸ்டிக்கின் மேல் வைக்கும் ரேப்பருக்கு ஏற்றவாறு செலோடேப் கலரைத் தேர்ந்தெடுக்கலாம்).

 ஸ்டிக்கின் மேல் பிளாஸ்டிக் புனலை வைத்து, தயாரித்த சாக்லேட்டை அதன் மீது வைத்து, அதன் மேல் சில்வர் அல்லது கோல்டு ரேப்பரை சுற்றி செலோடேப் கொண்டு ஒட்ட வேண்டும். பிறகு, டபுள் ரேப்பரை முக்கோணமாக மடித்து ஸ்டிக்கின் மேல் V ஷேப்பில் வைத்து ஒட்ட வேண்டும். தேவைப்பட்டால், இன்னொரு டபுள் ரேப்பரை முக்கோணமாக மடித்து பூ மாடலில் ஒட்டலாம். பூ டிசைனில் ரேப்பரை ஒட்டினால், பார்க்க அழகாக இருக்கும். ரேப்பர் எல்லா நிறங்களிலும் கிடைக்கும். கோல்டன் ரேப்பர், பார்க்க ரிச்சாக இருக்கும். டபுள் ரேப்பர் காஸ்ட்லியானது… பார்க்க ஷைனிங்காக, அழகாக இருக்கும். இதுபோல 15 ஸ்டிக்குகள் அல்லது அதற்கு மேல் பொக்கேவின் விலைக்கு ஏற்றவாறு தயாரித்து, செலோடேப் கொண்டு ஒட்ட வேண்டும்.

 மூங்கில் கூடை பொக்கே செய்வதற்கு, மூங்கில் கூடையின் அடியில் தெர்மாகோல் ஸீட்டை வைத்து, அதில் சாக்லேட்டுகளை நிரப்பி, அதன் மேல் பலூன் ஸ்டிக், ரோஜாப்பூ, கிறிஸ்துமஸ் இலையை தெர்மாகோல் ஸீட்டில் குத்தி, கூடையின் மேல ரேப்பரால் சுற்றி பொக்கே தயாரிக்கலாம்.

பின்பு ரோஜாப்பூ, டேலியா பூ, கிறிஸ்துமஸ் இலை (சவுக்கு இலை), சோளத்தட்டை (காய்ந்தது) இவற்றை சாக்லேட்டின் மேல் வைத்து செலோடேப்பால் ஒட்ட வேண்டும். காம்புகளை சரிசமமாக கத்தரிக்கோல் மூலம் கட் செய்ய வேண்டும். ஃப்ரெஷ் ஃப்ளவர் பொக்கே என்றால் பூக்களும், கிறிஸ்துமஸ் இலையும் வைக்கலாம். ஆர்ட்டிஃபிஷியல் என்றால், சோளத்தட்டை வைக்கலாம்.

 பிறகு, வொயிட் கலர் ரேப்பரை பாதியாக மடித்து (இரண்டு முனைகளும் சரிசமமாக இருக்கக் கூடாது), அதில் இவற்றை வைத்துச் சுற்றி டேப் கொண்டு ஒட்ட வேண்டும். பிறகு, கீழ்ப்பகுதியில் கோல்டன் ரேப்பரை ஒட்டி, அதில் ரிப்பனைக் கட்டினால்… பொக்கே தயார்.

“ஜன்னலிலும் வளர்க்கலாம் காய்கறி..!”

வீட்டின் புறக்கடையில் தோட்டம் அமைத்து, குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளை வளர்ப்பது, நாம் காலகாலமாக செய்துவந்த ஒன்று. ஆனால், வீடுகள் சுருங்கி அடிக்குமாடி குடியிருப்புகளாக மாறிவரும் இன்றைய சூழலில் வீட்டுத்தோட்டம் என்பதே அருகி வருகிறது. Continue reading

சானிட்டரி நாப்கின்ஸ், சிசேரியன் பெட் போன்றவை தயாரிப்பு

”இதெல்லாம் ஒரு தொழில்னு…”
ஆஷாவை உயர வைத்த அக்கம்பக்கத்து கேலி!

 

”வாழ்க்கையில் முன்னேறணும்னு வேகம் இருக்கற பெண்கள், விமர்சனங்கள் பற்றி கவலைப்படக் கூடாது!”

– மன உறுதி வார்த்தைகளில் தெறிக்கிறது… திருச்சி பெண், ஆஷா சுல்தானாவுக்கு. சானிட்டரி நாப்கின்ஸ், சிசேரியன் பெட் போன்றவை தயாரிப்பதில் முன்னிலை வகுக்கும் ஆஷா, இன்று ஒரு லாபகரமான தொழில் முனைவோர். Continue reading