ஏலியன்கள் : ‘மறைக்கப்படும்’ உண்மைகள்..!

 

ஏலியன்கள் : ‘மறைக்கப்படும்’ உண்மைகள்..!

“வேற்று கிரகவாசிகளை, இனிமேல் புதிதாய் ஒன்றும் தேடிக்கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவைகள் ஏற்கனவே இருப்பது உறுதி தான்..! அவைகளை ‘சீண்டாமல்’ இருப்பதுதான் மனித இனத்திற்கு நல்லது..!” என்று அடிக்கடி சொல்லுவார், கோட்பாட்டு இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங்..! ஏலியன்கள் இருப்பது உறுதி..! அவர் கூறுவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. 

அதீத ஆர்வம் ஒட்டு மொத்த மனித இனத்தையும் ஆபத்தில் தள்ளினாலும் ஆச்சரிய படுவதற்க்கில்லை. அதேசமயம் ஏலியன்கள் உலகத்தை கண்டு பிடித்து ரொம்ப காலம் ஆகிவிட்டது என்பதற்கு பல தீர்க்கமான ஆதாரங்களும் இருக்கத்தான் செய்கின்றன..!

அப்போலோ 11 
Continue reading

ஜவ்வாது மலை

 

வ்வாதுமலை. வேலூர் – திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் வரும் கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி. இந்த மலையின் மேற்கு பகுதியில் மனதுக்கு குளிச்சி தரும் ஏலகிரிமலை உள்ளது என்றால் கிழக்கு பகுதியில் மனதுக்கு குளிர்ச்சி, வரலாற்று தகவல்கள், பொது அறிவுத்தகவல்கள் புதைந்துள்ள ஒர் சுற்றுலா தலமாக ஜம்னாமத்தூர் பகுதி உள்ளது என்றால் அது மிகையில்லை. 

Continue reading

இவரும் உலக அதிசயம்தான்!

 Tamil-Daily-News-Paper_69026911259

கொஞ்ச நாட்களுக்கு முன்பு பிரபல இதய சிகிச்சை நிபுணர் தணிக்காச்சலம் அவர்களை சந்தித்தேன்
உறவினர் ஒருவருடைய 124 ஸ்லைஸ் ஹார்ட் ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்துக்கொண்டிருந்தார் ் 45 வயதுள்ளவரின் கரோனரி ஆர்ட்டரியில் கொஞ்சம் கால்சிபிகேசன் இருந்தது ் என்னசார் இது ஏதாவது பிரச்சனை தருமா எனக் கேட்டேன்

அவர் இப்போது பார்க்கும் ரிப்போர்ட்களில்அனேகமாக 75 சதவீதம் பேருக்கு ஐம்பது வயதில் இதுபோன்ற லேசான அடைப்புகளை சாதாரணமாகப் பார்க்கிறேன் என்று சொல்லிநான் பார்த்த ரிப்போர்ட்டில் 90 வயதைத் தாண்டியவரில் எந்த அடைப்பும் இல்லாத பக்கா நார்மல் ஹார்ட் ஒருவருக்கு இருந்தது அது கலைஞருடைய இதயம் என்றார்

எனக்கு உண்மையிலேயே மெய் சிலிர்த்தது
சர்க்கரை இல்லை
ரத்தக்கொதிப்பில்லை எப்போதும் இப்பல்லாம்140/90 ஐத் தாண்டுவதில்லையாம்
மன அழுத்தமில்லை
மனச்சோர்வில்லை
உப்பில்லை
லிவர் கிட்னி மூளை எல்லாம் நார்மல்
ஞாபகசக்தி குறையவில்லை
ஆனால் மைக்கில் பேச சிரமப்படுகிறார்
இதுதவிர எந்த உடல் பிரச்சனையும் இல்லாத ஒரு பிஸியான அரசியல்வாதி உலக வரலாற்றில் கலைஞர் ஒருவரே

இவரிடம் நாம் படிக்க வேண்டியது நிறைய உள்ளது ்்்

Continue reading

ஹேர் டை… ஒரு ‘திகீர்’ ரிப்போர்ட்

கறுப்பு வெள்ளை

ஹேர் டை… ஒரு ‘திகீர்’ ரிப்போர்ட்

”ஆறு மாசத்துக்கு முன்ன, தன்னோட  நீளமான தலைமுடியைக் கொஞ்சம் கட் பண்ணிட்டு, ஹேர் கலரிங் அடிச்சுட்டு ஏதோ மாடல்போல வந்து என் முன்ன நின்னா, என் ஃப்ரெண்டு ஒருத்தி. அதப் பார்த்ததும் எனக்கும் ஆசை வந்தது. வீட்டுல கேட்டதும் ‘இப்ப அது ஒண்ணுதான் உனக்கு கொறச்சல்’னு திட்டிட்டாங்க. சரினு நானும் விட்டுட்டேன். திடீர்னு போன வாரம் அவ வீட்டுக்குப் போயிருந்தப்ப ரூமை விட்டு வெளிய வராம அழுதுட்டே இருந்தா. என்னனு கேட்டதும்.. ‘ஹேர் கலரிங் அடிச்சதால அவளுக்கு பிளட் கேன்சர் வந்துடுச்சு’னு அவங்க அம்மா சொன்னதும் ஆடிப்போயிட்டேன். இப்படிலாம்கூட நடக்குமா?”

சென்னையைச் சேர்ந்த நம் தோழி ஒருவர் நம்மிடம் சொன்ன இந்தத் தகவலை, சிலரிடம் பகிர்ந்தபோது, கேட்ட அனைவருமே அதிர்ச்சியை வெளிப்படுத்தத் தவறவில்லை.

இதுகுறித்து, சென்னை, பேட்டர்சன் கேன்சர் சென்டரின் புற்றுநோய் சிறப்பு மூத்த மருத்துவர் எஸ்.விஜயராகவனிடம் கேட்டபோது, ”ஹேர் கலரிங் மட்டுமில்லை, ‘முடி வெள்ளையா இருக்கு’ என்று சொல்லி அடித்துக்கொள்ளும் ‘டை’ கூட, கேன்சர் வருவதற்கு காரணமாகலாம்” என்று அதிர்ச்சியைக் கூட்டியவர், விரிவாகப் பேசினார்.

”இன்று நம் நாட்டில் 18 வயதைக் கடந்தவர்களில் 40 சதவிகிதம் பேரும், 40 வயதைக் கடந்தவர்களில் 10 சதவிகிதம் பேரும் கேசத்துக்கு டை பயன்படுத்துகிறார்கள். இந்தச் செயற்கைச் சாயங்களில் உள்ள கெமிக்கல்கள் காரணமாக ரத்தப் புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறது. இது தவிர தோல் சம்பந்தமான பலவித நோய்களும் வர வாய்ப்பிருக்கிறது என்பது அதிர்ச்சி செய்தி. அதனால்தான் அமெரிக்கா போன்ற நாடுகளில் உணவுப் பொருள் தொடங்கி, ஹேர் டை வரை சில வண்ணங்களைப் பயன்படுத்த தடை உள்ளது.

புற்றுநோய்க்கு காரணமாகும் சாத்தியமுள்ள ரெட்  7, புளூ  4 உள்ளிட்ட அந்த வண்ணங்கள், நம் நாட்டில் எந்தக் கட்டுப்பாடுகளுமின்றி பரவலாக விற்பனை செய்யப்பட்டு, தொடர்ந்து பயன்படுத்தப்பட்டும் வருகிறது. குறிப்பாக, இன்று கடைகளில் கிடைக்கும் பெரும்பாலான டை மற்றும் ஹேர் கலரிங் பொருட்களில் ‘பாரா ஃபினாலைனெனின் டையாமின்’ (para phenylalanine diamine) என்கிற கெமிக்கல் உள்ளது. இதைப் பயன்படுத்துவதால் ரத்தப் புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய் வரக்கூடும் என்று 1980-களிலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், அந்தக் மூலக்கூறில் உருவான ஹேர் டைகள் தடை செய்யப்படாமல் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளன” என்றவர், ஹேர் டை பயன்படுத்தி கேசத்தின் இயல்பை பல வருடங்களாகத் தொடர்ந்து மாற்றுவதால் ஏற்படும் விளைவுகள் பற்றிப் பகிர்ந்தார்.

”கேசத்தின் நிறம் வெள்ளையாகக் காரணம், தலைப்பகுதியில் உள்ள மெலானோசைட் செல்களின் உற்பத்தி குறைவதுதான். அதனால் ஏற்படும் நரை என்பது, இயற்கையானது. அதைச் செயற்கையாக மறைக்க ரசாயனங்களை நாடும்போது அவை பக்கவிளைவுகளையே ஏற்படுத்தும். மேலும், கேசம் 24 நாட்களுக்கு ஒருமுறை ஒன்றரை இன்ச் அளவுக்கு வளரக்கூடியது. எனவே, ஹேர் டை பயன்படுத்தினாலும் முடியின் வேர் வெள்ளையாகவே வளரும். அப்படி இயல்புக்குப் புறம்பாக தொடர்ந்து ஹேர் டை பயன்படுத்திக்கொண்டே இருப்பதால் பிரச்னைகள் பெருகும். ஒரு வேதிப்பொருளை தொடர்ந்து பல வருடங்களாக நம் தலையில் பயன்படுத்தும்போது வலி, அலர்ஜி உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும்பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்” என கேச சாயங்களின் ரிஸ்க் ஃபேக்டர்களைச் சொன்ன டாக்டர், தற்காலிகத் தீர்வாக நாம் பயன்படுத்தும் வலி நிவாரணிகளும் ரிஸ்க் ஃபேக்டர்களுக்கு உட்பட்டதே என்கிறார்.

”தலை வலி, கால் வலி, முதுகு வலிகளுக்காகப் பயன்படுத்தும் வலி நிவாரணிகள், ஏற்கெனவே உள்ள வலியில் இன்னும் கொஞ்சம் பாதிப்பை உருவாக்குவதால் அது சரியானது போன்ற மாயை ஏற்படும் என்பதே உண்மை. உதாரணமாக, ஒரு சின் னக் கோடு போடுங்கள். பின் அதன் மீது பெரியளவில் கோடு போடுங்கள். இப்போது பார்ப்பதற்கு ஒரு கோடு மட்டுமே தெரியும். அப்படித்தான் நம் வலிகள் சரியாவதும். உட்சபட்சமாக உடலில் தடவும் வலி நிவாரணிகள் மற்றும் கிரீம்களால் 1.5 சதவிகிதம் பேருக்கு சிறுநீரக புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. அதாவது, உடலில் சேரும் கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றுவது சிறுநீரகங்களே. வலி நிவாரணிகள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் போது வீரியமான அந்த மருந்துக் கழிவுகளை தொடர்ந்து வெளியேற்றும் செயல்முறையில் சிறுநீரகச் செல்கள் பாதிப்புக்குள்ளாவதோடு செயல் இழக்கவும் செய்யும். மேலும், இன்று கடைகளில் கிடைக்கும் விதவிதமான ரசாயன குளிர் பானங்கள் குடல் புற்றுநோய்க்கு காரணமாகலாம் என்பதும் அடுத்த அதிர்ச்சி” சுற்றியிருக்கும் ஆபத்துகளை சுட்டிக் காட்டிய டாக்டர்,  ”35 வயதைக் கடந்த ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒருமுறை புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம். வீட்டில் ஏற்கெனவே புற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின், மரபு காரணத்துக்காக அவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியதும் அவசியம். இன்றைய சூழ்நிலையில் யாருக்கு வேண்டுமானாலும் புற்றுநோய் வரலாம். பொதுவாக புற்று நோய் பாதிப்பு வெளியில் தெரியவர 14 – 16 ஆண்டுகள் வரை ஆகும். மேலும் இது எளிதில் குணப்படுத்தக்கூடிய நோயும் அல்ல. இவ்வளவு ஆபத்தான நோயை, விலை கொடுத்து வாங்கி தலையில் வைத்துக் கொள்ள வேண்டுமா என்ன? ஹேர் டைகள், கலர்கள் தவிர்ப்போம்!”

அக்கறையோடு தந்தார் பிரிஸ் கிரிப்ஷன்!

பின்பற்றுவோமா..?!


நரை அழகு!

40 வயதின் அழகு என்பது, நரைதான். எனவே, அதை அப்படியே ஏற்பது சிறந்தது. இளநரையால் பாதிக்கப்பட்டவர்களும்கூட, செயற்கை ஹேர் டைகள் தவிர்த்து, கேசத்துக்கு மருதாணி போன்ற இயற்கைச் சாயங்களைப் பயன்படுத்தலாம்.


11-2-2014 இதழில் வெளியான டிப்ஸ்…

நீங்களே தயாரிக்கலாம் இயற்கை டை!

ன்றைய சூழலில், முப்பது வயதுக்குள் நரை வந்தால், அதை இளநரை என்று சொல்லலாம். இந்த இளநரை வேரிலிருந்தே நரைக்க ஆரம்பித்தால் அதை மாற்றவே முடியாது. ஆனால், டை போடலாம். அதற்கான இயற்கை டை இதோ!

கறுப்பு வால்நட் கொட்டை, நீலி அவுரி இலை, நெல்லி முள்ளி, ஒற்றை செம்பருத்தி பூ, அஞ்சனக் கல்பொடி, பிள்ளையார் குன்றிமணி (இதெல்லாம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்). குறிப்பிட்ட அளவுக்கு இவற்றை எடுத்துக்கொண்டு தனித்தனியாக பொடித்து, அதிலிருந்து சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். முதல் நாள் இரவே பீட்ரூட்டை துருவி எடுத்து, தண்ணீர் விடாமல் அரைத்து சாறு எடுக்க வேண்டும். இந்தச் சாற்றுடன் தயாராக இருக்கும் பொடிகளையும் இரும்பு பாத்திரம் ஒன்றில் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும். இதுதான் இயற்கை ஹேர் டை. அடுத்த நாள் காலை… எண்ணெய், அழுக்கு, பிசுக்கு இல்லாத சுத்தமான தலையில் தடவி இரண்டு மணி நேரம் ஊறவைத்து அலசினால், இயற்கை ஹேர் டையினால் கூந்தல் பளபளக்கும். இந்த டையை 15, 16 வயதினர்கூட உபயோகிக்கலாம். பக்கவிளைவுகள் ஏதுமில்லை!

சா.வடிவரசு

Continue reading

மவுலானா எனும் மகத்தான இந்தியர்

 

 

நவீன இந்தியாவின் சிற்பிகளில் ஒருவரான மவுலானாவைப் பற்றிய நினைவுகூரல்

பிஹாரின் ராம்கர் நகரில் 1940-ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்துப் பேசிய மவுலானா அபுல் கலாம் ஆஸாத், தனது உரையில் இப்படிக் குறிப்பிட்டார்: “நான் ஒரு முஸ்லிம். அதற்காகப் பெருமைப் படுகிறேன். 1,300 ஆண்டு பாரம்பரியமிக்க செழுமையும் புகழும் கொண்ட மார்க்கத்துக்குச் சொந்தக்காரன் நான். அதில் அணுவளவுகூடப் பங்கம் ஏற்படுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். நான் ஒரு இந்தியன் என்பதிலும் அதே அளவு பெருமை கொள்கிறேன்.” ஆம், ஆஸாத் ஒரே நேரத்தில் உண்மையான முஸ்லிமாகவும், சிறந்த இந்தியனாகவும் விளங்கினார்.

பள்ளிப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார் ஆஸாத். 1906-ல் டாக்காவில் நடைபெற்ற முஸ்லிம் லீக் தொடக்க மாநாட்டில் கலந்துகொண்டார். எனினும் முஸ்லிம் லீக்கின் மிதவாதப் போக்கு அவரை ஈர்க்கவில்லை. எனவே, 1907-ல் புரட்சிகரக் கட்சியில் சேர்ந்தார். இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் போராட வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். 1913-ல் ஹிஸ்புல்லா என்ற அமைப்பைத் தொடங்கினார்.

1920-ல் மகாத்மா காந்தியைச் சந்தித்த பின்னர்தான், காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார். ஒத்துழையாமை இயக்கத்திலும், கிலாபத் இயக்கத்திலும் முகம்மது அலி ஜவுகருடன் இணைந்து செயல்பட்டார். இவ்விரு தலைவர்களும் நாட்டு மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டனர். காங்கிரஸ் இயக்கம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் ஆஸாத் பங்குகொண்டார். ஆறு முறை கைது செய்யப்பட்ட அவர், தன்னுடைய வாழ்நாளில் 10 ஆண்டுகள் 7 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தவர்.

நீதிமன்றத்தில் கர்ஜனை

1922-ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தின்போது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் மீது அலிப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. 11.01.1922 அன்று அலிப்பூர் நீதித் துறை நடுவர் முன்னிலையில் ஆஜரான அவர், ஆக்ரோஷமான வார்த்தை களில் வாக்குமூலம் அளித்தார். ஆஸாத் பேசியதிலிருந்து சில வரிகள்:

“நீங்கள் எனக்கு உச்சபட்சத் தண்டனை அளியுங்கள். அது எவ்வளவு பெரிய தண்டனையாக இருந்தாலும் நான் பதற மாட்டேன். தீர்ப்பை எழுதும்போது உங்கள் கரங்கள் நடுங்கலாம். ஆனால், உங்கள் தீர்ப்பைச் செவிமடுக்கும்போது எனது இதயம் நடுங்காது. இது உறுதி. எனக்குக் கிடைக்கவிருப்பது சிறைக்கொட்டடி எனில், உங்களுக்கு நீதித் துறையின் உயர் பதவிகளும் மரியாதைகளும் கிடைக்கும். இதே நிலை தொடர என்னை அனுமதியுங்கள்; நீங்கள் நீதிபதியாகவும் நான் குற்றவாளி யாகவும். இந்த நிலை சில காலம் தொடரும். அதன் பிறகு நாம் மற்றொரு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவோம். அங்கே இறைவனே நீதிபதியாக வீற்றிருந்து தீர்ப்பு வழங்குவான். அதுதான் இறுதித் தீர்ப்பாகும்.” அவரது வாக்குமூலத்தைக் கேட்டு நீதித் துறை நடுவர் நடுநடுங்கிப்போனதாகக் கூறப்படுவதில் ஆச்சரியம் இல்லை.

1942-ல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கலந்துகொண்டதற்காகக் கைதுசெய்யப்பட்டு, அஹமத் நகர் சிறையில் அடைக்கப்பட்டார் ஆஸாத். அவருடன் நேருவும் இருந்தார். 3 ஆண்டுகள் நீடித்த இந்தச் சிறைவாசத்தின்போது அவரது மனைவி சுலைஹா பீவியும், சகோதரி ஹனீபா பேகமும் அடுத்தடுத்த ஆண்டு களில் மரணமடைந்தார்கள். இந்த இருவரின் இறுதிச் சடங்குகளிலும் கலந்துகொள்ள ஆங்கில அரசு அவருக்கு அனுமதி வழங்கவில்லை. 1945-ல் விடுதலை பெற்ற பின்னரே இருவரின் கல்லறைகளுக்கும் சென்று மலர் தூவி ஃபாத்திஹா ஓதினார் ஆஸாத்.

எழுச்சியூட்டும் எழுத்து

மேடைகளில் எழுச்சியுடன் உரையாற்றும் வல்லமை பெற்றிருந்த ஆஸாத் சிறந்த எழுத்தாளரும்கூட. ‘சமந்தார்’, ‘மதீனா’, ‘முஸ்லிம் கெஜட்’, ‘ஹம்தர்த்’ ஆகிய உருது இதழ்களில் ஆங்கில அரசின் கொள்கைகளைக் கண்டித்துக் காரசாரமாக எழுதினார். பின்னர், ‘அல்ஹிலால்’ என்ற பத்திரிகையைத் தொடங்கி, அதில் கட்டுரைகள் எழுதிவந்தார். இந்த இதழைத் தொடர்ந்து நடத்தவிடாமல் ஆங்கில அரசு அவருக்குக் கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்தது. பத்திரிகைக்கு அதிகப் பிணைத்தொகை செலுத்துமாறு அரசு அவருக்கு ஆணையிட்டது. இதே காலகட்டத்தில் ‘அல்பலாக்’ என்ற பெயரில் மற்றொரு பத்திரிகையையும் தொடங்கினார் ஆஸாத். அவரது எழுத்தும் பேச்சும் உணர்ச்சிபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் அமைந்திருந்தது.

பிரிவினையை ஏற்காதவர்

1940-ல் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக ஆஸாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் எம்.என்.ராய்) 1946 இறுதி வரை அப்பதவியில் இருந்தார். இறுதி வரை பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்தார். எனினும், காந்தி உள்ளிட்ட தலைவர்களால்கூடப் பிரிவினையைத் தடுக்க முடியாமல் போனபோது, செய்வதறியாது கை பிசைந்து நின்றார்.

பிரிவினைக்குப் பின்னர் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களில் முஸ்லிம்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள். நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் அவரது இல்லத்திலேயே தஞ்சம் அடைந்திருந்தார்கள். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் பட்டேல் இந்தக் கலவரங்களை ஒடுக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என ஆஸாத் கருதினார். இதுபற்றி தனது மனக்குமுறல்களை ‘இந்திய விடுதலை வெற்றி’ என்ற நூலில் பதிவுசெய்திருக்கிறார் ஆஸாத். அந்தப் புத்தகத்தின் சமர்ப்பணத்தில் இப்படி எழுதியிருப்பார்: ‘நண்பரும் தோழருமான ஜவாஹர்லால் நேரு அவர்களுக்கு’.

பாகிஸ்தான் எதிர்ப்பு

சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞராகத் திகழ்ந்தார் ஆஸாத். ராஞ்சி சிறையில் இருந்தபோது திருக்குர்ஆனை உருது மொழியில் மொழிபெயர்த்தார். பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, ஜின்னாவின் தலைமையின் கீழ் அணி திரண்டிருந்த பெரும்பான்மையான முஸ்லிம்கள் அவரை முஸ்லிம் விரோதி எனத் தூற்றியபோதிலும் அவர் கலங்கவில்லை. தனது பாகிஸ்தான் எதிர்ப்பு நிலைப்பாட்டில் கடைசி வரை உறுதியாகவே இருந்தார்.

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற ஆஸாத், கல்வி முறையில் பல அடிப்படை சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். கிராமப்புற ஏழை மக்களுக்குக் கட்டாய இலவசக் கல்வி வழங்கிட முன்னுரிமை அளித்தார். முதியோர் கல்விக்கு வித்திட்டார்.

பல்கலைக்கழகக் கல்விக்குழு, இடைநிலைக் கல்விக் குழு, பல்கலைக்கழக மானியக்குழு, இந்திய அறிவியல் கழகம், தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவை அவரது பதவிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன. கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாத்து ஊக்குவிக்கும் பொருட்டு சாகித்ய அகாடமி, சங்கீத அகாடமி, லலிதகலா அகாடமி, நாடக அகாடமி ஆகிய அமைப்புகளை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார். தேசிய ஆவணக் காப்பகம் உருவாக்கப்பட்டதும் அவரது பதவிக் காலத்தில்தான்.

2.2.1958-ல் அவர் மரணமடைந்தபோது, அரசு கடனில் வாங்கிய கார் ஒன்றைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும் படியான வேறு எந்தச் சொத்தும் அவரிடம் இல்லை. சொத்துக்கள் என்று அவர் எதையும் விட்டுச் செல்லவில்லை. வங்கிக் கணக்கு இல்லாமல், அசையும், அசையாச் சொத்துக்கள் எதுவும் இல்லாமல் ஆஸாத் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.

இந்து-முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டுவதில் மிகுந்த அக்கறையும் கவனமும் செலுத்திவந்தவர் ஆஸாத். ‘அல்பலாக்’ இதழில் அவர் இப்படி எழுதினார்: “சுதந்திரம் கிடைப்பதற்குத் தாமதமானாலும் பரவாயில்லை. இந்தியத் தாய்க்கு ஒரு நிமிடம்கூட வேற்றுமையின் பாரத்தைத் தாங்கும் சக்தியில்லை.” சாதி, மத, இன மோதல்கள் இல்லாததும், அறிவில் உயர்ந்து விளங்குவதுமான ஒரு இந்தியாதான் ஆஸாதின் கனவு இந்தியா. அந்த இந்தியாவை நோக்கி நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஆஸாதை நாம் பெருமைப்படுத்துகிறோம்.

– சேயன் இப்ராகிம், அஞ்சல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ஓய்வு).

Continue reading

பெற்றோர்களுக்கு !!

உபயோகமான வரிகள். படித்து பகிருங்கள்

IMG_321476535006551. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், “Good touch”, “bad touch” எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.

2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.
Continue reading

மலப்புழா அணையும் திப்புக் கோட்டையும்

 
 
 
கடவுளின் சொர்க்கம் என அழைக்கப்படும் கேரளா மாநிலத்தில் உள்ளது மலப்புழா. கேரளாவின் அழகான பெண்களைப்போல பச்சை பசேல் என்ற  தென்னமரங்கள், பாக்குமரங்கள், தோப்புகள் சூழந்த பகுதி மலப்புழா என்ற சின்னஞ்சிறய நகரம். அந்நகரத்தில் உள்ளது கம்பீரமான மழப்புழா டேம்.

Continue reading

மும்பையில் ஒரு கேரளா – மலபார் ஹில்

IMG_17285957662299மலபார் என்றதும் நமக்கு நினைவிற்கு வருவது தென்னைமரங்கள்,  இயற்கை கொஞ்சும் கடற்கரையுடன் இணையும் மலையடிவாரங்கள், மற்றும் பசுமை போன்ற அழகிய காட்சிகள், இவை அனைத்தும் கூட நெரிசல் மிகுந்த மும்பையிலும் கிடைக்கும் இடம் மலபார் ஹில். மும்பையில் மேற்கு கடற்கரை ஓரபகுதியில் இயற்கை கொஞ்சும் இந்த கடலுடன் இணையும் சிறிய பசுமை வழியும் மலையை கண்டதும் போர்ச்சுகீஸியர் வைத்த பெயர் மலபார் ஹில். மலபார் ஹில் என பெயர் பெருவதற்கு முன்பு இந்த மலையில் வால்கேஸ்வர் என்ற சைன மத கோவில் இருந்ததால் இது வால்கேஸ்வர் என்று இன்றும் பரவலாக அழைக்கப்படும் . ஆனால் இதன் அடையாள பெயர் மலபார் ஹில்.  பிரபல எஞ்சீன் ஆயில் நிறுவனமான‌ “castrol” ஆரம்பகால தலைமை அலுவலகம் இங்கு இருந்த வெயிட் ஹௌவ்ஸ் என்ற க‌ட்டிடத்தில் தான் செயல் பட்டது. வெயிட் ஹவுஸ¤ம் மும்பை மக்களிடம் மிகவும் பிபலமான ஒரு பெயராகும்.. பங்கன்ஹாரா டேங்க் போன்றவையும் மலபார் ஹில்லில் மிகவும் பிரபலமான இடம் ஆகும்.Continue reading

 ·  வால்பாறை – சின்னதாய் ஒரு பயணம்

IMG_5051564402847கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமானது வால்பாறை. கோவையில் இருந்து 100 கி.மீ. தூரத்திலும், பொள்ளாச்சியில் இருந்து 60 கி.மீ. தூரத்திலும் உள்ளது. தேயிலை தோட்டங்கள், அடர் வனப்பகுதிகள் என ரம்மியமான இடம். இங்கு சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. வாடகை வாகனம் எடுத்துக் கொண்டால் எளிதாக சுற்றிப் பார்க்கலாம். கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக வால்பாறை செல்ல வேண்டும். காலை உணவினை பொள்ளாச்சியில் முடித்து, செல்லும் வழியில் இருந்த ஆழியார் அணையில் வண்டி நின்றது. இங்குதான் கடந்தவாரம் 50 ஆண்டுகளை கொண்டாடிய ஶ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படம் படகாக்கப்பட்ட இடம்.
IMG_5058830930643
அதிகாலையில் பனி மூட்டம் மூடியிருக்கும் வேளையிலும் மழைக்காலங்களில் மேகங்கள் உருவாகி தேயிலைத் தோட்டங்களைத் தழுவிச் செல்லும் காட்சி கண்ணுக்கு விருந்து, நெஞ்சிற்கு சுகம், கற்பனைக்கு ஊற்று. தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே மான் குட்டிகள் துள்ளி ஒடும் காட்சியும் அருமையானது.
IMG_5063954410061
தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே ஓடும் ஒரு நதி, பல திரைப்படங்களில் பாடல் காட்சிகளில் இடம்பெற்ற இடம். சிவாஜி கணேசன், ஜெயலலிதா நடித்த படம் சுமதி என் சுந்தரி படமாக்கப்பட்ட இடம் இங்குதான். பொட்டு வைத்த முகமோ என்று இருவரும் ஆடிப்பாடும் இடம் இதுதான்.இங்குள்ள தோட்டங்களுக்கு இடையே ஒரு பெருமாள் கோயிலும் உண்டு. மலையின் உச்சியில் அழகாகக் கட்டப்பட்டுள்ள அக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்குப் பின்னர் இரண்டு மூன்று மணி நேரம் அமைதியாகக் கழிக்கலாம். இப்பகுதிகளில் நாம் நகரங்களில் காணும் அணில் செந்நிறத்தில் இருப்பதை காணலாம்.
IMG_5071423686982
ஆழியாறை நெருங்குவதற்கு முன்பு வண்டியை நிறுத்துங்கள். அங்கு ஓர் அருவி உள்ளது. குரங்கருவி, மிகச் சிறிய அருவிதான் என்றாலும், அருவிக்கு சற்று முன்னால் குளம் போல நீர் தேங்கி இருக்கும் பகுதியில் அமர்ந்து கொண்டு சுகமாகக் குளிக்கலாம்.காலை நேரத்தில் குரங்கருவிக்கு நீராடச் செல்பவர்களுக்கு குறைந்த விலையில் வீட்டில் சுட்ட இட்லி, தோசை, வடை கிடைக்கும். மிக ருசியாக இருக்கும்.

ஆச்சரியபட வைத்த ஆழியார் அணை :
IMG_5077211870693
தோட்டம் சரியாக பராமரிக்கபடவில்லை என்ற வருத்தத்துடன் உள்ளே உளவினோம். நீண்ட படிகள் ஏறி தண்ணீர் தேக்கத்தை காணச்சென்ற போது அங்கே ஓர் அழகிய ரம்மிய காட்சி காத்திருந்தது. வாழ்வில் மிக ரசித்த காட்சியில் இது மூன்றாம் இடத்தை பிடிக்கின்றது. எல்லா நேரமும் இவ்வளவு அழகான காட்சி இதே இடத்தில் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். மேலெழுந்த சூரியனை மறைத்து நின்ற மேகங்கள். அந்த மேகங்களை எப்படியேனும் தாண்டி வெளியே வரவேண்டும் என்று துடித்த சூரியக்கதிர்கள். அந்த கதிர்கள் தூரத்தே இருந்த மலையில் அடிவாரத்தில் தண்ணீர் மீது பட்டு தெறித்த காட்சி. ஆகா. மீண்டும் கிடைக்குமா?
IMG_5089161235073
அந்தமான் தீவுகள் சென்றிருந்த போது, ஓரு கடற்கரையில் நாங்கள் நால்வர் மட்டும் இருந்தோம். அந்தி சாயும் பொழுது. கண்ணின் பார்வை எவ்வளவு தூரம் தெரியுமோ அவ்வளவு தூரம் கடல். இளநீல நிறத்தில் நீர். இடப்பக்கம் சின்ன மலைக்குன்று. தூரத்தில் சில குன்றுகள். வலப்பக்கம் சூரியன் மறைய காத்திருந்தது. அற்புதம் என்னவெனில் கடலில் அலைகள் ஏதும் இல்லை. முட்டி அளவு தண்ணீர் மட்டுமே சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு. அந்த நேரத்தில் புகைப்படங்களில் ஆர்வம் ஆரம்பிக்காத நேரம். கருவியில் படம்பிடிக்காமல் போனாலும் இன்றும் கண் முன்னே விரிகின்றது.

ஆழியார் அணையில் சிறிது நேரம் கழித்துவிட்டு, எதிரே இருந்த மீன் காட்சியகத்திற்கு சென்றோம். இங்கு மீன்களும் அழகு, அதனைவிட அழகு நேர்த்தியாக மீன்களுக்கு கீழே அடிக்கி வைத்திருந்த கற்கள். வித வித வண்ணங்களில், வேறு வேறு வடிவங்களில், மிக நேர்த்தி. கண்டிப்பாக இந்த சின்ன காட்சியகத்தை அட இங்க என்ன இருக்க போகுது என்று விட்டுவிடாதீர்கள்.

தேயிலை தோட்ட தேன்:

மலை ஏறத்துவங்கியதும் சின்னதாக ஓரு அருவி இருந்தது. ஆள் நடமாட்டமே இல்லை. இரண்டே நிமிடங்களில் அங்கே நான் முதலில் அருவியில் குளிக்க, அப்பாவும் வாகன ஓட்டுனர் விஸ்வநாதனும் சேர்ந்து கொண்டனர். முந்தைய நாள் கோவை குற்றாலத்தில் குளித்ததை விட நீரின் வெப்பம் சற்று கூடுதலாக இருந்தது. அரை மணி நேரம் அங்கேயே நீரில் அமர்ந்திருந்தோம். பின்னர் இன்னும் பார்க்க நிறைய இருக்கின்றது என வெளியே வந்துவிட்டோம். அப்பா கொஞ்ச நேரம் மரம் நிழலில், அருவின் ஓசையில், மெல்லிய காற்றில் திட்டு ஒன்று உறங்கினார். இந்த சமயம் விசுவின் காதல் கதை வெளிவந்தது. தான் எப்படி தன் மனைவியை காதலித்து கைப்பிடித்தார், பிரச்சனைகள் என்ன, எப்படி இப்போது சமாளிக்கிறார்,குழந்தை, தொழில் என்று பேசிக்கொண்டே இருந்தார். அண்ணா அண்ணா என்று தான் என்னை அழைத்தார். அந்த மனிதனுக்குள் தான் எத்தனை அனுபவம், இவை அனைத்தையும் மூடிக்கொண்டு பேசியபடியே பயணம் முழுக்க வந்தார்.

மொத்தம் நாற்பது ஊசிமுனை வளைவுகள் (Hairpin Bend). மெதுவாக வண்டி ஏறியது. வழியில் எங்கெங்கெல்லாம் அழகான காட்சி தென்படுகின்றதோ அங்கெல்லாம் நின்றது. மற்ற ஓட்டுனராக இருந்தால் சலிப்புற்று போயிருப்பார்கள். வேறு எங்கும் இதுவரை காணக்கிடைக்காத அளவிற்கு எங்கும் தேயிலைத்தோட்டங்கள். வால்பாறையை அடைந்ததும் அப்பாவின் வங்கி கிளைக்கு சென்று எங்கு தங்கலாம் என விசாரித்தோம். மதிய உணவினை முடித்துவிட்டு கொஞ்ச நேரம் உறங்கிவிட்டு சோலையார் அணைக்கு கிளம்பினோம்.

IMG_5103148802663

சோலையார் அணை :

சோலையார் அணை சுமார் 15 கி.மீ தொலைவில் இருந்தது. மெதுவாக வண்டி ஊர்ந்து சென்றது. அணையில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்ததால், மின்சாரம் தயாரிக்கும் இடத்திற்கு செல்ல தீர்மானித்தோம். ஒரு வண்டி மட்டும் செல்லக்கூடிய மண் பாதை. விசு லாவகமாக வண்டி ஓட்டி சென்றார். வழியில் இருவர் வண்டியை வழிமறித்தனர். ஒரு மலையாளகாரர், மற்றொருவர் தமிழர். Fullஆக இருந்தார். “பாத்து போங்க அங்க யானை ஒன்னு இருக்கு..”. ஏதோ சாதாரணமாக, டீ சாப்பிடுகின்றீர்களா என்பது போல சொன்னார். “யானை ஏதாச்சும் செய்யுமா?” என எங்கள் வண்டியில் இருந்து. அவரும் சலிக்காமல். “நேத்து ஒரு பஸ்ஸை வழிமறிச்சி, வெரட்டிடுச்சி. மெதுவா போனா எதுவும் பண்ணாது, பயப்பட வேண்டாம்..” வடிவேலு வேலு திரைப்படத்தில் சொல்லுவார் “பயப்படதாவங்க எல்லாம் பயப்படுறவங்க கிட்ட பயப்படாம போ பயப்படாம போன்னு சொல்றீங்களே”.. வண்டி சீறிக்கொண்டு சென்றது. ஓட்டலை நோக்கி. அருகே இருந்த மார்கெட்டிற்கு சென்று இரவு எங்கு உண்ணலாம் என்று தேடினோம். கண்டுபிடித்தோம். உண்டோம். குடும்ப சபை கூடி முக்கிய அறிவிப்புகள், முடிவுகள் எடுத்து உறங்கினோம்.

IMG_5115850575296

காலை 4 மணிக்கு அப்பா எல்லோரையும் எழுப்பிவிட்டார். வாங்க இரவினை ரசியுங்கள் என்று படாதபாடு படுத்திவிட்டார். மெட்டை மாடிக்கு சென்று நட்சத்திரங்கள் மிக அருகில் இருப்பதை கண்டு, குளிர் தாங்காமல் மீண்டும் போர்வைக்குள் புகுந்தேன். கலைஞரின் கட்டுரைகள் புத்தகத்தை படித்தபடி மீண்டும் தூங்கினேன். தூங்கினோம். ஒழுங்காக காலை ஆறு மணிக்கு எழுந்திருந்தால் நல்ல நடை சென்றிருக்கலாம்.

காலை நேராக ஆணைமுடி சிகரத்திற்கு சென்றோம். வழியில் சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்றோம். அங்கே பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விநாயகர் சிலை அற்புதமாக இருந்தது. அந்த கோவிலில் இருக்கும் பூசாரி ரசிக்கவல்ல மனிதர். எழுபத்தி இரண்டு வயதாகின்றது. An interesting humorous wonderful Personality (இது பாலச்சந்தர், பாரதிராஜா மாதிரி வசனங்கள் நடுவே பீட்டர் விடும் ஒரு முயற்சி ) . விசுவும் அவரும் செம கலக்கல். ஆணைமுடி என்கின்ற கிராமத்தில் தேநீர் அருந்தினோம். அங்கே எங்களோடு சிவா (3092) என்பவர் சேர்ந்து கொண்டார். சிவா உள்ளூர்வாசி. அப்பா காலத்தில் திருநெல்வேலியில் இருந்து இங்கே வந்துவிட்டனர். தொழிற்சாலையில் பணி புரிகின்றார். நாங்கள் சென்ற தினம் விடுமுறையில் இருந்தார். அந்த ஊரைப்பற்றியும் தொழிலாளிகளின் கஷ்டங்களை பற்றியும் சொன்னார். எங்களை ஆணைமுடி சிகரத்திற்கு அழைத்து சென்றார். ஆணைமுடி சிகரம் , தென் இந்தியாவில் மேகக்கூட்டங்கள் வரும் மிக உயர்ந்த சிகரமாம். கலக்கலான இடம். அருகே சின்ன முருகன் கோவிலுக்கு அழைத்து சென்றார். சுயம்பு கோவில்.

அங்கிருந்து தேயிலை தோட்ட நடுவே பிருந்தாவனம் போல இடம் ஒன்றுக்கு அழைத்து சொன்றார். ஒவ்வொரு செடியின் மகிமை, இடம் பற்றி, மரம் பற்றி ஏராளமான விஷயம் சொன்னார். மூன்று மகன்கள். அடுத்த முறை செல்லும் போது ஆணை முடியில் ஒரு வீடு எடுத்து கொடுத்து, சமையலுக்கு ஏற்பாடு செய்வதாக வாக்களித்தார். (அடுத்த பயணம் நண்பர்களோடு விரைவில் !!!) ஆரஞ்சு தோட்டத்திற்கு சென்றோம். வால்பாறையினை சுத்தி வந்தோம். மதியம் உணவு முடித்து மீண்டும் கோவைக்கு பயணித்தோம்.

நிச்சயமாக நேரம் போதவில்லை. மேலும் பெற்றோர்களுடன் சென்றதால் அதிக இடங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. நிச்சயம் மூன்று நாட்கள் தங்கி நன்றாக ரசிக்க ஏராளமான இடம் இங்கே இருக்கின்றது.

IMG_5123320572715

பார்க்க வேண்டிய இடங்கள்:-

1. சோலையார் அணை
2. நீரணை
3. அதிரம்பள்ளி அருவி (20 கி.மீ) (புன்னகை மன்னன் அருவி)
4. ஆனைமுடி சிகரம்
5. பூஞ்சோலை
6. பாலாஜி கோவில்
7. சித்தி விநாயகர் கோவில்
8. காடம்பறை அணை
9. குரங்கு அருவி (Monkey Falls)

எங்கு தங்குவது:-

ஒரே ஒரு நல்ல விடுதி மட்டும் இருக்கின்றது. தங்கலாம் !!! : Green Hill Hotels P.Ltd, StateBank Road, Valparai Ph: 044523- 222861 . மின்னஞ்சல் : greenhillhotel@hotmail.com

எப்படி செல்வது:-

கோவை, பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு பஸ் வசதி உள்ளது. வால்பாறை – டாப்சிலிப் 3 நாள் பேக்கேஜ் டூரில், வால்பாறையில் இருந்து டாப்சிலிப் வரை சுற்றி பார்க்கலாம். பொள்ளாச்சியில் இறக்கி விடுவார்கள். 8 பேர் செல்லும் வாகனத்துக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை ஆகும். வால்பாறையில் தங்குமிடங்கள், ஓட்டல்கள் உள்ளன. கோவையில் இருந்து பொள்ளாச்சி சென்று அங்கிருந்து பேருந்தில் செல்லலாம். வால்பாறையில் ஜீப்புகள் கிடைக்கின்றது. அல்லது கோவையில் இருந்தே ஒரு வண்டி வைத்துக்கொண்டு போகலாம், வழியில் நின்று ஆற அமர ரசிக்கலாம்.

உணவு:

வெளியூருக்கு செல்லும் போது இந்த உணவு பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கும். வால்பாறையில் எங்கு விசாரித்ததிலும் ஒரே ஒரு ஓட்டலில் மட்டும் சாப்பிட சொல்லி பரிந்துரைத்தார்கள். உணவு நன்றாக கிடைக்கும். லட்சுமி செட்டிநாடு மெஸ். ஐந்து சகோதரர்கள் நடத்துகின்றார்கள். இவர்களை விசாரித்தால் கூட எங்கெல்லாம் செல்லலாம் என்று உதவுவார்கள்.

வால்பாறை போன்ற இடங்களில் இங்கு தான் அழகாக இருக்கும் என்று சொல்ல முடியாது, அவரவர் ரசனைக்கேற்றவாரு எங்கும் நின்று ரசிக்கலாம். இதுவரை வால்பாறையை சிற்றுலா தளமாக தமிழக அரசு அறிவிக்கவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், அப்படி அறிவிக்காத்தால் இன்னும் இந்த அழகு கெடாமல் பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றது என்பதில் ஆனந்தம்.

பார்க்க வேண்டிய இடங்கள்:

பாலாஜி கோயில் பூங்கா:

வால்பாறையில் இருந்து கருமலை வரை வாகனத்தில் சென்று, அங்கிருந்து அரை கி.மீ. நடந்து சென்றால் பாலாஜி கோயில். கோயிலை சுற்றி பூத்து குலுங்கும் மலர்கள் கண்களை கவரும். சிறுவர் பூங்கா ரம்மியமானது. வால்பாறையில் பளிங்கு கல்லால் உருவாக்கப்பட்ட சித்தி விநாயகர் கோயில், திருப்பதி போலவே மலையில் கருமலை பாலாஜி கோயில் ஆகியவை உள்ளன. இதன் அருகே அழகிய பூங்கா, இறைச்சல்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. வால்பாறையில் மே 31-ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு கோடை விழா நடக்கிறது.

அக்காமலை புல்வெளி:

பாலாஜி கோயிலில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. பச்சை பட்டாடை உடுத்தியதுபோன்ற அழகிய புல்வெளி. இதை காண வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். முகவரி: வனத்துறை அலுவலகம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை. வெள்ளமலை குகை: கருமலையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் சிறுகுன்றா சாலையில் அமைந்துள்ளது. சின்னக்கல்லார் அணையில் இருந்து மலையை குடைந்து 4 கி.மீ. தூரம் அமைக்கப்பட்ட குகை, கால்வாய் ஆகியவற்றை காணலாம்.

சின்னக்கல்லார் நீர் வீழ்ச்சி + சின்னக்கல்லார் அணை:

வெள்ளமலை குகையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது. வெள்ளமலை குகையின் நுழைவாயில் இங்கு உள்ளது. அணையில் இருந்து நீர் குகைக்குள் செல்வதை பார்க்கலாம். சின்னக்கல்லார் நீர் வீழ்ச்சி: சின்னக்கல்லார் அணையில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. மர தொங்கு பாலம் வழியாக செல்ல வேண்டும். தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என பெயர் பெற்றது. அருவிக்கு செல்ல கட்டணம் ஒரு நபருக்கு ரூ.115.

கீழ்நீராறு அணை:

சின்னக்கல்லார் நீர் வீழ்ச்சியில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ளது. அடர் வனப்பகுதிக்குள் அமைந்த அணை.

கூழாங்கல் ஆறு:

கீழ்நீராறு அணையில் இருந்து 8 கி.மீ. தூரம். இருபுறமும் தேயிலை தோட்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த ஆறு கூழாங்கற்கள் நிறைந்தது. இங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் வால்பாறையை அடையலாம்.

வில்லோனி பள்ளத்தாக்கு:

வால்பாறையில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உருளிக்கல் ரோட்டில் உள்ளது. ஆங்கிலேயர்கள் வால்பாறைக்கும் வில்லோனிக்கும் இடையில் விஞ்ச் அமைத்து பயணித்துள்ளனர். வில்லோனியில் விஞ்ச் அமைத்ததற்கான தடயங்கள் இப்போதும் உள்ளன. இங்கிருந்து வால்பாறைக்கு செல்லும் வில்லோனி குதிரைப்பாதை காணலாம். அதற்குள் செல்ல அனுமதி இல்லை.

மானாம்பள்ளி நீர் மின் உற்பத்தி நிலையம்:

வில்லோனியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள உருளிக்கல் பகுதியில் உள்ளது. சோலையார் அணையில் இருந்து பரம்பிக்குளம் அணைக்கு கொண்டு செல்லப்படும் நீர் இங்கு மின்சாரம் உற்பத்தி செய்து வெளியேற்றப்படுகிறது. இங்கிருந்து வெளியேறும் நீர் மீன்பாறை ஆறாக பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது. மானாம்பள்ளி நீர் மின் உற்பத்தி நிலையம், மீன்பாறை செல்ல வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். போன்: 04259&235385.
சோலையார் அணை: மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 20 கி.மீ. தூரம். ஆக்டோபஸை போல் 75 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள அணை.

தமிழகத்திலேயே உயரமானது (345 அடி). அணையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ஆற்று பள்ளத்தாக்கு ரம்மியமானது. இங்கு மீன் சாப்பாடு பிரசித்தம்.

அதிரப்பள்ளி அருவி:

சோலையார் அணையில் இருந்து சாலக்குடி செல்லும் ரோட்டில் 50 கி.மீ. தூரத்தில் உள்ளது. புன்னகை மன்னன் படத்தில் இடம் பெற்ற அருவி. அருவியும், அருவிக்கு முன்பாக நீண்ட சமவெளி ஆறும் பிரமிக்க வைப்பவை. நல்லமுடி பூஞ்சோலை: சோலையார் அணையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் முடீஸ் ரோட்டில் உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இடம். பள்ளத்தாக்கில் யானைகள், காட்டெருமைகளை காணலாம்.

ஹைபாரஸ்ட் நம்பர்பாறை காட்சி முனை:

நல்லமுடி பூஞ்சோலையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. அந்த காலத்து தமிழக, கேரள சமஸ்தான எல்லை சின்னங்களை காணலாம். இங்கிருந்து கேரளா மலைவாழ் குடியிருப்பு மற்றும் விவசாய பகுதிகள், இடைமலையாறு, இடைமலையாறு அணை ஆகியவற்றை காணலாம்.

புதுத்தோட்டம்:

வால்பாறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் பொள்ளாச்சி ரோட்டில் அமைந்துள்ளது. காட்டெருமைகள், காட்டு பன்றிகள், சிங்கவால் குரங்குகள், மான்கள் கடந்து செல்லுமிடம்.

கவர்க்கல்:

வால்பாறை & பொள்ளாச்சி மலைப்பாதையில் உயர்வான பகுதி. வால்பாறையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது. இப்பகுதி பெரும்பாலும் அடர்த்தியாக பனி சூழ்ந்திருக்கும். வாகனத்தில் விளக்கை எரிய விட்டு பாதுகாப்பாக ஓட்டிச் செல்ல வேண்டும். யானைகள் கடக்கும் பகுதி.

வாட்டர்பால்ஸ்:

வால்பாறை & பொள்ளாச்சி மலைப்பாதையில் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. குளிக்க வசதியில்லை. பார்த்து ரசிக்கலாம். இங்கு நறுமணம் மிக்க ஜகருண்டா வகை மலர்கள் பூத்துக்குலுங்கும். ஒரிஜினல் டீ கிடைக்கும்.

டைகர் காட்சி முனை:

வால்பாறை & பொள்ளாச்சி மலைப்பாதையில் 22 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து பார்த்தால் வனப்பகுதிக்குள் அமைந்த காடம்பாறை கிராமம், ஆதிவாசி குடியிருப்புகளை காணலாம்.

லோம்ஸ் வியூ:

வால்பாறை & பொள்ளாச்சி மலைப்பாதையில் மொத்தமுள்ள 41 ஹேர்பின் வளைவுகளில், கீழிருந்து மேலாக உள்ள 9வது வளைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து ஆழியார் அணையையும், பொள்ளாச்சி வரை தெரியும் பசுமையையும் காணலாம்.

மங்கி ஃபால்ஸ்:

இங்குதான் பகலில் ஒர் இரவு படத்தில் வரும் பாடல் இளமை எனும் பூங்காற்று, ஶ்ரீதேவியின் பாடல் படமாக்கப்பட்ட இடம். வால்பாறை & பொள்ளாச்சி மலைப்பாதையில் 40 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு குளிக்க அருகேயுள்ள வனத்துறை செக்போஸ்ட் அலுவலகத்தில் டிக்கெட் வாங்க வேண்டும். நபருக்கு ரூ.15, கேமரா கட்டணம் ரூ.25. அருவியில் குரங்குகள் அதிகம்.

ஆழியார் அணை:

வால்பாறை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. 120 அடி உயரமுள்ள அணை. ஆண்டு முழுவதும் 100 அடிக்கு குறையாமல் நீர் இருக்கும். அணைக்கட்டில் பூங்கா உள்ளது. படகு சவாரியும் செய்யலாம். சுடச்சுட பொரித்த மீனை இங்கு சுவைக்கலாம். அணையின் எதிரே உள்ள மீன்காட்சியகத்தில் வெளிநாட்டு மீன்கள் உள்ளன. அணையை ஒட்டி வேதாத்ரி மகரிஷியின் அறிவுத்திருக்கோயில் உள்ளது.

மாசாணியம்மன் கோயில்:

பொள்ளாச்சியில் இருந்து டாப்சிலிப் செல்லும் வழியில் ஆனைமலை ஊர் உள்ளது. இங்குள்ள மாசாணியம்மன் கோயில் பிரபலமானது.

டாப்சிலிப்:

தமிழக – கேரள எல்லையில் உள்ள டாப் ஸ்லிப்பை நோக்கி. இந்திராகாந்தி தேசியப் பூங்கா என்று அழைக்கப்படும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு உட்பட்டது டாப் ஸ்லிப். இங்குள்ள பெரிய மரங்களை வெட்டி உருட்டிவிடுவார்களாம். தடையேதும் இன்றி அந்த கட்டைகள் மலையடிவாரத்திற்கு வந்து விழுமாம். அதனால் டாப் ஸ்லிப் என்று பெயர் வந்தது.

இவ்விடத்தின் உண்மை பெயர் வேட்டைக்காரன் புதூர். இங்கு பிளாஸ்டிக் பொருட்களோ, இரைச்சல் போடும் இசைக் கருவிகளுக்கோ, போதைப் பொருட்களுக்கோ அனுமதி இல்லை. மறைத்துக் கொண்டு போய் சிக்கனால் சிறைதான்.

டாப் ஸ்லிப்பின் நுழைவுப் பகுதியிலேயே மிக விசாலமான புல் வெளியைக் காணலாம். அங்குள்ள தமிழ்நாடு வனத்துறையின் விருந்தினர் மாளிகைகளில் தங்கும் வாய்ப்பு கிடைத்தால் இரவில் உலவ வரும் கரடியில் இருந்து சிறுத்தை வரை எல்லாவற்றையும் பார்க்கலாம்.

டாப் ஸ்லிப்பில் இருந்து காட்டிற்குள் சென்று சுற்றிப்பார்க்க யானை சவாரி வசதி உள்ளது. இங்கிருந்து மேலும் சிறிது தூரம் சென்றால் கேரள எல்லை. கேரள எல்லைப் பகுதிக்குள் போகும் அந்த சாலையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் வாகனத்தில் சென்றால் தமிழகமும், கேரளமும் இணைந்து நிர்வகித்து வரும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் வரும் 3 அழகிய அணைக்கட்டுகளைப் பார்க்கலாம்.

ஒன்று பெருவாரிப்பள்ளம், மற்றொன்று தூணக்கடவு, எல்லாவற்றுக்கும் மேல் இறுதியாக அந்த சாலையின் முடிவாக மலையின் உச்சியில் பரம்பிக்குளம் தண்ணீரை தேக்கி வைக்க கட்டப்பட்டுள்ள பரம்பிக்குளம் அணை. 2700 அடி உயரத்தில் இந்த அணை உள்ளது.

இப்பகுதி மிக அருமையான பொழுதுபோக்கிடமாகும். மலையும், நீரும், பறவைகளின் ஒலியும், காற்றும் சுகமான அனுபவங்கள்.

வேட்டைக்காரன் புதூரில் இருந்து பரம்பிக் குளம் அணை வரை செல்லும் பாதையில் ஆங்காங்கு நிறுத்தி அடர்ந்த வனப்பகுதியை ரசித்துப் பார்க்கலாம்.

இரண்டு நாட்கள் போதும். ஒரு நாள் வால்பாறை, மறுநாள் டாப் ஸ்லிப். மனதுக்கு இதம் தரும் இனிய சுற்றுலாவாக இருக்கும்.

பொள்ளாச்சியில் இருந்து 15 கி.மீ. சமதளத்திலும், 13 கி.மீ. மலைப்பாதையிலும் சென்றால் டாப்சிலிப்பை அடையலாம். கடல்மட்டத்துக்கு மேல் சுமார் 450 மீட்டர் உயரத்தில் உள்ளது. டாப்சிலிப்பில் யானை சவாரி செல்லலாம். 4 பேருக்கு கட்டணம் ரூ.400. வனத்துறையின் வாகனத்தில் சுற்றி பார்க்க ஒரு நபருக்கு கட்டணம் ரூ.25. இங்கு மூலிகை பண்ணையும் உள்ளது.

பரம்பிக்குளம் அணை:

பரம்பிக்குளம் அணை கேரளாவில் இருந்தாலும், அணை நிர்வாகம் தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சோலையார் அணையில் இருந்து வரும் நீர் இங்கு தேக்கமாகிறது. டாப்சிலிப்பில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ளது. கேரள எல்லையில் இருந்து கேரள வனத்துறை வாகனத்தில் பரம்பிக்குளம் அணை வரை வன உலா செல்லலாம். நபருக்கு கட்டணம் ரூ.140.

Continue reading

பழங்களின் நிறமும் அதன் குணமும்

1இயற்கை நமக்களித்த கொடைகளுள் பழங்களும் ஒன்று. பழங்களை சமைக்காத உணவு என்பர் நம் முன்னோர்கள். உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும், புத்துணர்வையும் ஒருசேர தரவல்லது பழங்களே. பழங்களை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. தினமும் ஏதாவது ஒரு பழத்தை உண்டு வந்தால் நீண்ட ஆரோக்கியம் பெறலாம். நோயுற்றவர்கள் உடல் நலம் தேற மருத்துவர்கள் பழங்களையே பரிந்துரை செய்வார்கள்.
நம்மில் சிலர் பழங்களை சாறு எடுத்து அருந்துவார்கள். சிலர் சாறு எடுக்கப்பட்டு பாட்டில்களில் ரசாயனம் சேர்த்து பதப்படுத்தப் பட்டிருக்கும் பழச்சாறுகளை விரும்பி அருந்துவார்கள். பழங்களை சாறு எடுத்து அருந்துவதை விட அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அல்லது சாறு எடுத்த உடனேயே அருந்துவது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள நார்ச்சத்துக்கள் அழியாமல் உடலுக்குக் கிடைக்கும். இந்த நார்ச் சத்துக்கள் மலச்சிக்கலைத் தீர்க்கும். சீரண சக்தியை அதிகரிக்கும். மேலும் சில வைட்டமின் சத்துக்கள், தாதுக்கள் உடலுக்கு நிறைய கிடைக்கும்.
பழங்களில் பல நிறங்கள் உள்ளன. அனைத்துப் பழங்களும் சத்துக்கள் நிறைந்தவை. இப்பழங்களின் நிறத்துக்குத் தகுந்தவாறு அதன் சத்துக்கள் இருக்கின்றன.

Continue reading

‘குட்டி இங்கிலாந்து’ நுவரெலியா !!

அழகு கொட்டிக்கிடக்கும் இடம் ‘குட்டி இங்கிலாந்து’ நுவரெலியா !!

 IMG_1022536017486உலகில் எத்தனையோ அழகான இடங்கள் இருந்தாலும், நம்மூரில் இருக்கின்ற அழகினை ரசிப்பதில் இருக்கின்ற சுகமே தனிதான். அப்படி அழகு கொட்டிக்கிடக்கும் இடம்தான் நுவரெலியா.(இலங்கை

எங்கும் பசுமை விரிந்து கிடக்கின்ற, இயற்கையில் அழகிய படைப்பது. பனி விழும் பொழுதில், பச்சைப் பசேலென்ற அழகிய மலைகளுக்கிடையில் கிடைக்கின்ற மன நிம்மதி, நுவரெலியாவில் மட்டுமே நம்மால் அனுமானிக்க முடியும். ‘குட்டி இங்கிலாந்து’ என்று செல்லமாக அழைக்கின்ற இயற்கையின் கைக்குழந்தை, நுவரெலியாவில் ரசிப்பதற்கு ஏராளமான இடங்கள் இருக்கின்றன. Continue reading

உலகை புரட்டிப் போட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் -4

IMG_8094250000974. பொருட்கள் மேலிருந்து கீழே விழும் வேகம் குறித்த விதி (The Law of falling objects)

கண்டுபிடித்தவர்: கலிலியோ கலிலி (Galileo Galilei)
கண்டுபிடித்த ஆண்டு: 1598

எடை அதிகமுள்ள பொருட்கள் வேகமாகவும், எடை குறைந்த பொருட்கள் மெதுவாகவும் விழும் என்ற முந்தைய நம்பிக்கைகளை உடைத்தெறிந்ததால் மட்டும் கலிலியோவின் இந்த விதி நூற்றில் ஒன்றாகக் கருதப்படவில்லை. அவரது கண்டுபிடிப்பு அடுத்தடுத்து நியூட்டனின் அசைவு விதிகள், புவியீர்ப்பு விதி மற்றும் இன்றைய இயற்பியல், விண்ணியல் ஆராய்ச்சிக்கு வித்திட்டதாகவும் இருந்ததால் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகின்றது. Continue reading

மொரிஷியஸ், ஓர் அழகிய தீவு !!

 இந்தக் குட்டித் தீவிலே இருபத்திரண்டு மொழிகள் பேசப்படுகின்றன என்றால் நம்புவீர்களா?

 M-boatsமொரிஷியஸ், ஓர் அழகிய தீவு. இஃது ஆபிரிக்காக் கண்டத்திற்கு அருகிலே, மடகஸ்கர் என்ற மிகப் பெரிய தீவுக்கு அருகில் உள்ளது. இலங்கையிலிருந்து தென்மேற்காக, 3370 கி.மீ தொலைவிலே இந்தச் சிறிய தீவு அமைந்திருக்கிறது.

உலகப் படத்தை உற்று நோக்கினால் தான் இந்தச் சிறிய புள்ளியை நாம் அடையாளம் காண முடியும். இந்தத் தீவின் நீளம் 65 கி.மீ, அகலம் 45 கி.மீ இதன் கடற்கரையின் நீளம் 160 கி.மீ, மொத்த நிலப்பரப்பு 2045 சதுர கி.மீ.

வரலாறு

இந்தத் தீவில் 16ஆம் நூற்றாண்டு வரை யாரும் இருந்ததற்குச் சான்றுகள் இல்லை. 16 ஆம் நுற்றாண்டுக்குப் பிறகே இங்கு மக்கள் வரத் தொடங்கினர். முதன் முதலாகப் போர்த்துக்கேயர், இந்தத் தீவைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர்.

அவர்களைத் தொடர்ந்து, டச்சு நாட்டவரும் இங்கே ஆட்சி செய்தனர். பின் பிரான்ஸ் தேசத்தின் கீழ் இந்தத் தீவு வந்தது. கடைசியாக, இந்தத் தீவை பிரித்தானியர்கள் கைப்பற்றினர். அவர்களிடமிருந்து இந்தத் தீவு 1968 மார்ச் 12ம் திகதி சுதந்திரம் பெற்றது.

Continue reading

நைல் நதி உருவாகும் ஏரியை பற்றி உங்களுக்கு தெரியுமா?

1எத்தியோப்பியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அழகிய பாகிர் தார் நகரில் உள்ளது அந்த பிரம்மாண்ட ஏரி. ‘தானா ஏரி’ என்று அழைக்கப்படும் அந்த ராட்சத ஏரியின் பரப்பளவு சுமார் 3,600 சதுர கிலோ மீட்டர்கள். இந்த ஏரிக்குள் 37 தீவுகள் உள்ளன. இவை அனைத்தையும் விட முக்கியமான விஷயம், இந்த பிரம்மாண்ட ஏரியில் இருந்துதான் உலகின் நீளமான நைல் நதி உற்பத்தியாகிறது.

Continue reading

இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள்

banner•இந்தியாவின் மிக உயர்ந்த விருது ‘பாரத ரத்னா’

  • 1 கோடி பரிசுத்தொகை கொண்ட விருது – காந்தி அமைதி விருது
  • அமைதிக்கான மிக உயர்ந்த விருது – அசோக் சக்ரா விருது
  • மிக உயர்ந்த இலக்கிய விருது – பாரதீய ஞானபீட விருது
  • மிக உயர்ந்த சர்வதேச நட்புறவு விருது – நேரு சமாதான விருது
  • மிக உயர்ந்த பத்திரிகையாளர் விருது – பி.டி.கோயங்கா விருது
  • Continue reading