2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்!  

2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்!

 
முக மாற்று அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இதய மாற்று அறுவை சிகிச்சை என்று இன்று மருத்துவம் எட்டாத சிகரத்தை எட்டிவிட்டது என்பது நாம் எல்லாம் அறிந்த ஒன்றுதான். ஆனால், இந்த மருத்துவம் சில நூறு ஆண்டுகளுக்கு முன், எப்படி இருந்திருக்கும். இவ்வளவு நவீன வசதிகள் இல்லாத காலத்தில் முறையான மருத்துவக் கல்வியை பெற்றிறாத மக்கள் என்ன செய்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.
பாவம்.. அறுவை சிகிச்சை வசதியில்லாத அந்தக் காலத்தில் நோயாளிகள் இறந்துதான் போயிருப்பார்கள் என்பதுதான் நம்மில் பலரின் நினைப்பாக இருக்கும். ஆனால், அதில் சற்றும் உண்மை இல்லை. கி.மு. 715 ஆம் ஆண்டு. ரோமப் பேரரசின் முக்கியமான நாள் அது. அந்நாட்டு இளவரசி பிரசவ வேதனையால் துடித்தாள். வழக்கமாய் குழந்தை பிறப்பதை விட இளவரசிக்கு விளங்காத ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதாகவே அரண்மனை வைத்தியர் உணர்ந்தார். என்ன செய்வதென்று புரியவில்லை அவருக்கு. மன்னரின் அதிகாரம் ஒரு பக்கம். வயிற்றைக் கிழித்துத்தான் குழந்தையை எடுக்க வேண்டுமோ என்ற தடுமாற்றம் வைத்தியருக்கு. இளவரசிக்கு இதில் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் ஒருபுறம். வேறு வழியின்றி வயிற்றைக் கிழித்துத்தான் குழந்தை எடுக்கப்பட்டது. அந்த குழந்தைதான் ஜூலியஸ் சீசர். இந்தத் தகவல்கள் எல்லாம் அரண்மனையின் அறிக்கை ஏட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு விஷயம் தெரியுமா? நாம் பயன்படுத்தும் சிசரியன் என்ற வார்த்தை கூட சீசர் பிறந்த பிறகுதான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதாம்.
கி.மு.320ஆம் ஆண்டு இந்தியாவில் மௌரியப் பேரரசு ஆண்டு வந்த காலம். சந்திரகுப்த மௌரியரின் மனைவிக்கு பிரசவ வலியால் துடித்தபோது, இயற்கையாக குழந்தை பிறக்கவில்லை. அறுவை சிகிச்சை மூலமே குழந்தை பிறந்தது. அந்த குழந்தைதான் மௌரியப் பேரரசின் மிக முக்கிய அரசரான பிந்துசாரர். ஆனால், எதிர்பாராத விதமாக இந்த சிகிச்சையில் அவரது தாயார் இறந்துபோனார்.
அதேபோல இருபதாம் ஆண்டு தொடக்கத்தில் கூட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் சிசரியன் மூலமே குழந்தை பெற்றுள்ளார்கள். அந்த பிரசவத்தின் போது எந்த வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் மருத்துவ அறிக்கை கூறுகிறது.
அதேபோல 1998 ஆம் ஆண்டு திபெத் நாட்டின் கிங்காய் பகுதி அது. அகழ்வாராய்ச்சி ஆராய்ச்சியாளர்கள், அக்காலத்து மனித நாகரிகத்தை தெரிந்துகொள்வதற்கான தேடலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஆராய்ச்சியாளர்கள் ஒரு பகுதியை தோண்டும்போது நூற்றுக்கணக்கான மண்டை ஓடுகள். ஆராய்ச்சியாளர்களின் முகத்தில் ஏக மகிழ்ச்சி. ஏனெனில் அந்த மண்டை ஓடுகளின் வயதை கணக்கிடும்போது, அந்த மண்டை ஓடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருந்தது. மனித நாகரிகத்தின் அரிச்சுவடியை நாம் இனி எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்று ஆராய்ச்சியாளர்களுக்கு சொல்ல முடியாத உற்சாகம். ஆனால், கிடைத்த மண்டை ஓடுகளில் சில மற்றும் மற்ற மண்டை ஓடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. மண்டை ஓடு விரிந்து பிளக்கப்பட்டு இருந்தது. ஒரு வேளை யாராவது இவர்களை படுகொலை செய்திருக்கலாமோ? என்று ஆராய்ச்சியாளர்களுக்கு குழப்பம். சோதனைக் கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன மண்டை ஓடுகள். சோதனையின் முடிவில் ஆராய்ச்சியாளர்களுக்கு பெருத்த ஆச்சர்யம். ஏனெனில் தலையில் அறுவை சிகிச்சை நடந்ததற்கான தடயங்கள் கிடைத்தது. மற்றொருவரின் மூளையை இன்னொருவருக்கு பயன்படுத்தியிருந்ததும், தலையில் ஏற்படும் ஏதோ சில பிரச்சினைகளுக்க அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தார்கள்.
திபெத்தில் சொகைல் என்ற இந்தியர் திபெத்தில் வசித்து வந்தார். இவர் ஒரு மருத்துவர். இவருடைய திபெத்திய நண்பர் ஒருவருக்கு தீராத தலைவலி. என்னென்னமோ சிகிச்சைப் பெற்றிருக்கிறார். ஆனால், எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை தலைவலி. சொகைல் தனது நண்பரிடம் தலையில் சிறிய அறுவை சிகிச்சை செய்தால் சரியாய்ப்போகும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், நண்பருக்கோ பயம். என்ன செய்வதென்று புரியவில்லை. ஆனால், அறுவை சிகிச்சை செய்யும்போது உயிருக்கு ஏதும் ஆபத்தும் நேரிடக்கூடும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். ஒருபுறம் சொகைல் மீதுள்ள நம்பிக்கை. மற்றொருபுறம் உயிர்மீதுள்ள பயம். அறுவை சிகிச்சை செய்யலாமா? வேண்டாமா? என்று பெரும் மனப் போராட்டத்திற்கு இடையில் தலைவலி இன்னும் அதிகரிக்கவே, உயிரைப் பற்றி கவலைப்படாது, அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார் திபெத் நண்பர். சொகைல், திபெத் மருத்துவ நண்பர்களின் உதவியுடன் மூளை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார். அதற்குப் பிறகு அந்த நண்பருக்கு தலைவலி ஏதும் வரவில்லை. இந்த மாபெரும் அறுவை சிகிச்சை நடந்தது எப்போது தெரியுமா? கிட்டத்தட்ட 2900 ஆண்டுகளுக்கு முன்.
அதுமட்டுமல்லாமல், இந்த அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்ட கத்தி போன்ற ஆயுதங்கள் அனைத்தையும், சொகைல் ஸ்டெர்லைஸ் செய்துதான் பயன்படுத்தியிருக்கிறார். ஏனெனில் அவருடைய மருத்துவக் குறிப்பு ஒன்றில் மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்துவதற்கு முன்பு ஸ்டெர்லைஸ் செய்வதன் முக்கியத்துவம் குறித்து மிக விரிவாக கூறியிருக்கிறார். அத்துடன் அதன் அவசியம் மிக முக்கியமானது என்றும் விளக்கியிருக்கிறார்.
திபெத் பல்கலைக்கழகத்தின் மொழி மற்றும் இலக்கிய ஆராய்ச்சிப் பிரிவு தலைவர் கர்மா த்ரிமோலி. இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில்தான் இத்தகைய அபூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் திபெத்தியர்களின் அறுவை சிகிச்சை மிகவும் விசித்திரமானதும் நுட்பமானதும் ஆகும் என்று தனது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் அறுவை சிகிச்சை நுணுக்கங்கள் அனைத்தும் மிகப் பழமையான திரிபித்தகா என்ற தகவல் களஞ்சியத்தில் (என்சைக்ளோபீடியாவில்) விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும் கர்மா த்ரிமோலி குறிப்பிட்டுள்ளார்.
பண்டைய கால மனிதர்கள் நாகரிகம் அறியாதவர்கள், விஞ்ஞானம் கற்றறியாதவர்கள் என்ற ஆராய்ச்சியாளர்களின் கணிப்புகள் அனைத்தும் திபெத்தில் நடந்த அகழ்வாராய்ச்சி பொய்க்க வைத்தது. அப்படியானால், பண்டைய கால மனிதர்கள் நம்மைவிட நாகரிகத்தில் சிறந்தவர்களா? மருத்துவத்தில், தற்போதுவிட பல நுணுக்கங்களை கற்றறிந்தவர்களா? அப்படியானால், தலைவலியாலும், வயிற்று வலியாலும் சில நூறு ஆண்டுகளுக்கு வைத்திய வசதி இல்லாமல் இறந்துபோனதாக செய்திகள் கூறுகின்றனவே அப்படியானால், இந்த மருத்துவ நுணுக்கங்கள் அப்போது மட்டும் காணாமல் போயிருந்தது எப்படி என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கான பதிலைத்தான் ஆராய்ச்சியாளர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆச்சர்யங்கள் விரியும்.

மொட்டை மாடியில் பட்டையை கிளப்பும் மண்ணில்லா விவசாயம்

gallerye_010424168_1189811தமிழகத்தில், விவசாய பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. விவசாய நிலங்கள் எல்லாம், ‘ரியல் எஸ்டேட்’காரர்களிடம் சிக்கி, வீட்டு மனைகளாக மாறிவிட்டன. இதைக்கண்டு உள்ளம் குமுறுவோருக்கு ஆறுதலாக, மண் இல்லா விவசாய முறையை, தனது வீட்டு மாடியில் அமல்படுத்தி சாதித்துகாட்டியுள்ளார் கோவை, சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பேராசிரியர் நாகேந்திரன். Continue reading

டான்சில்

FB_IMG_1440989151690

1. தொண்டையில் ஏற்படும் சதை வீக்கமே ‘டான்சிலைட்டிஸ்‘ என்பதா?
தொண்டையில் சதை வீக்கமடைவதையே, ‘டான்சில்’ என்று தவறாக புரிந்து கொள்கின்றனர். ‘டான்சில்’ என்பது தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சி.
Continue reading

அம்மை நோய்கள் வருவது ஏன்?

 

ஓவியம்: வெங்கி

ஆகஸ்ட் மாதம் முடியப் போகிறது. ஆனால், தமிழகத்தில் இன்னும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. அக்னி நட்சத்திர வெயில் தொடர்கிறதோ என்று எண்ணும் அளவுக்கு வெயிலின் கடுமை நீடிக்கிறது. இதனால் பல நோய்கள் நம்மை நோக்கிப் படையெடுக்கின்றன. அவற்றில் அம்மை நோய்களுக்கு முக்கிய இடமுண்டு. அதிலும் குறிப்பாகச் சின்னம்மை (Chicken pox) நோய் அதிதீவிரத் தொற்றுநோய் என்பதால், இதுதான் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

காரணம் என்ன?

வளிமண்டலத்தில் நிலவும் கடுமையான வெப்பத்தால், உடல் வெப்பம் அடைகிறது. இதுதான் அம்மை வரக் காரணம் என்று பலரும் நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல. உடல் வெப்பத்துக்கும் அம்மை நோய்க்கும் தொடர்பில்லை. கோடை வெப்பத்தால் பூமி சூடாகும்போது, அசுத்தமான சுற்றுச்சூழல் உள்ள இடங்களில் கொட்டிக் கிடக்கிற குப்பை, கூளங்களில் வாழும் பல்வேறு கிருமிகள் உயிர்த்தெழுந்து, காற்று மூலம் பரவுகின்றன. இவற்றில் ஒன்றுதான் ‘வேரிசெல்லா ஜாஸ்டர்’ (Varicella Zoster) எனும் வைரஸ் கிருமி. இதன் மூலமாகத்தான், சின்னம்மை நோய் ஏற்படுகிறது.

யாருக்குப் பாதிப்பு அதிகம்?

சின்னம்மை நோய், குழந்தை முதல் பெரியவர்கள் அனைவரையும் பாதிக்கும். என்றாலும் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் தாக்குவது இதன் இயல்பு. அதிலும் குறிப்பாக மக்கள் அதிகமாக வாழும் இடங்கள், நெரிசல் மிகுந்த இடங்கள், அசுத்தம் நிறைந்த இடங்கள், குடிசைப் பகுதிகள், விடுதிகள் போன்ற இடங்களில் வசிப்போருக்கும், நோய் எதிர்ப்புசக்தி குறைந்தவர்களுக்கும் இந்த நோய் விரைவில் பரவிவிடும். குடும்பத்தில் ஒருவருக்கு இந்த நோய் வந்தால், மற்றவர்களுக்கும் பரவ அதிக வாய்ப்புண்டு.

எப்படிப் பரவுகிறது?

நோயாளியின் அம்மைக் கொப்புளங்களிலும் சளியிலும் இந்த நோய்க் கிருமிகள் இருக்கும். அம்மைக் கொப்புளங்கள் உடைந்து நீர் வெளியேறும்போது இந்த வைரஸ் கிருமிகள் மற்றவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும். குறிப்பாக, நோயாளியோடு நெருக்கமாகப் பழகுபவர்களுக்குச் சின்னம்மை நோய் இந்த வழியில் பரவுகிறது. நோயாளியின் சளியில் இந்த வைரஸ் கிருமிகள் வெளியேறும்போது, காற்று மூலம் பிறருக்குப் பரவுகிறது. அடுத்து, நோயாளி பயன்படுத்திய உடைகள், உணவுத்தட்டுகள், போர்வை, துண்டு போன்றவற்றின் மூலமும் இந்த நோய் அடுத்தவர்களுக்குப் பரவலாம். இதனால்தான் அம்மை நோயாளிகளைத் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

அறிகுறிகள் என்ன?

முதலில் சாதாரணத் தடுமக் காய்ச்சல் போலத்தான் நோய் தொடங்கும். இரண்டாம் நாளில் உடல்வலி, தலைவலி, சோர்வு அதிகமாகும். காய்ச்சல் கடுமையாகும். உடலில் அரிப்பு, நமைச்சல், எரிச்சல் ஏற்படும். வாயிலும் நாக்கிலும் சிறு கொப்புளங்கள் தெரியும். மார்பிலும் முதுகிலும் சிவப்பு நிறத் தடிப்புகள் தோன்றும். அடுத்த 24 மணி நேரத்தில் இவை எல்லாமே நீர் கோத்த கொப்புளங்களாக மாறிவிடும்.

சின்னம்மைக் கொப்புளங்கள் முகம், மார்பு, வயிறு, முதுகு, அக்குள் போன்ற பகுதிகளில் மிக நெருக்கமாகவும் அதிகமாகவும் காணப்படும். முன் கை மற்றும் முன் கால்களில் மிகப் பரவலாகவும் எண்ணிக்கையில் குறைந்தும் தெரியும். இது சின்னம்மைக்கே உரிய முக்கியத் தடயமாகும்.

வழக்கமாக இந்த நோய் தொடங்கிய ஏழாம் நாளில் காய்ச்சல் குறையும். அடுத்த நான்கு நாட்களில் கொப்புளங்கள் சுருங்கி, பொருக்குகள் உதிரும். அம்மைத் தழும்புகள் சில மாதங்களில் சிறிது சிறிதாக மறைந்துவிடும். ஒருமுறை சின்னம்மை வந்து குணமானவருக்கு, அவரது உடலில் இந்த நோய்க்கான எதிர்ப்பு அணுக்கள் உருவாகிவிடுவதால், ஆயுள் முழுவதும் அவருக்கு இந்த நோய் மீண்டும் வராது.

சிகிச்சை உண்டு!

பொதுவாக அம்மை நோய்கள் குறித்து நம் சமூகத்தில் பலவிதமான தவறான கருத்துகளும் மூடநம்பிக்கைகளும் நிலவுகின்றன. ‘அம்மனின் கோபமே அம்மை நோய்’ என்றும், ‘அம்மைக்குச் சிகிச்சை பெற்றால் தெய்வக் குற்றமாகிவிடும்’ என்றும் அஞ்சி, பெரும்பாலோர் சிகிச்சை பெறாமல் இருந்துவிடுகின்றனர்.

கிராமப்புறங்களில், ஏன் நகர்ப்புறங்களில்கூட அம்மை நோய் ஏற்பட்டால் மருந்து, மாத்திரை சாப்பிடக் கூடாது என்ற எண்ணம் மக்கள் மனதில் வேரூன்றி உள்ளது. அம்மைக் கொப்புளங்களில் வேப்பிலை அல்லது மஞ்சளை அரைத்துப் பூசுவது ஒன்றுதான் மருந்து என்று சொல்லி, அதை மட்டுமே தினமும் அரைத்துப் பூசுவார்கள். வேப்பிலைக்கும் மஞ்சளுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டு. ஆனாலும் இந்த நோய்க்கான வைரஸ் கிருமிகளை ஒழிக்க இவை மட்டுமே போதாது.

சின்னம்மைக்குப் பல காலமாகச் சிகிச்சை இல்லாமல் இருந்தது உண்மைதான். ஆனால், இப்போது இந்த நோய்க்கு அலோபதி மருத்துவத்தில் சிறந்த சிகிச்சைகள் உள்ளன. ‘ஏசைக்ளோவிர்’ எனும் மாத்திரையை மருத்துவரின் ஆலோசனையின்பேரில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்குச் சாப்பிட்டால் விரைவிலேயே சின்னம்மை குணமாகிவிடும். அத்துடன் ‘ஏசைக்ளோவிர்’ களிம்பை அம்மைக் கொப்புளங்களில் தினமும் தடவினால் அரிப்பு, எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகள் கட்டுப்படும்.

உணவுமுறை முக்கியம்!

அம்மை நோயாளிகள் அசைவம் சாப்பிடக்கூடாது என்றும் பத்தியம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறுவார்கள். இதிலும் உண்மையில்லை. இவர்களுக்கான உணவில் எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை. எல்லா உணவையும் வழக்கம்போல் சாப்பிடலாம். பொதுவாக அம்மை நோயாளியின் உடலில் நீரிழப்பு சற்று அதிகமாக இருக்கும் என்பதால் பால், நீர்மோர், கரும்புச்சாறு, இளநீர், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை உள்ளிட்ட பழச்சாறுகள், அரிசிக்கஞ்சி, ஜவ்வரிசிக்கஞ்சி, சத்துமாவு, கூழ், குளுகோஸ், சத்துப்பானங்கள், உப்புச் சர்க்கரைக் கரைசல் போன்ற நீர்ச்சத்து நிறைந்துள்ள உணவை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் வைட்டமின் ஏ சத்து நிறைந்த காரட், பப்பாளி, தக்காளி, பசலைக்கீரை போன்றவற்றையும் சாப்பிட வேண்டும்.

அடுத்து, அம்மை நோயாளிகள் உடலில் கொப்புளங்கள் அனைத்தும் மறைந்த பிறகுதான் குளிக்க வேண்டும் என்று சொல்வார்கள். இதுவும் தவறு. இவர்கள் வெதுவெதுப்பான உப்புநீரைக் கொண்டு காலை, மாலை இரண்டு வேளை வாயைக் கொப்பளிக்கலாம். முகத்தையும் கண்களையும் அடிக்கடி சுத்தமான தண்ணீரில் சுத்தம் செய்துகொள்ளலாம். சுத்தமான பருத்தித் துணியாலான துவாலையைத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்து உடலைத் துடைத்துக் கொள்ளலாம்.

பாதிப்புகள் என்ன?

சின்னம்மை நோய் குழந்தைகளைத் தீவிரமாகத் தாக்கினால், நிமோனியா, மூளைக்காய்ச்சல், எலும்பு சீழ்மூட்டழற்சி, இதயத்தசை அழற்சி, சிறுநீரக அழற்சி போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம். அப்போது குழந்தையின் உயிருக்கு ஆபத்து வரலாம். கர்ப்பிணிகளுக்குச் சின்னம்மை வருமானால், கருவில் வளரும் சிசுவைப் பாதித்துப் பிறவி ஊனத்தை உண்டாக்கலாம். இவை எல்லாமே சின்னம்மை நோய் உள்ளவருக்கு உடனடியாகத் தோன்றுகிற சிக்கல்கள்.

அக்கி அம்மை

அதேநேரத்தில் காலம் கடந்து ஒரு சிக்கல், சின்னம்மை வந்தவருக்கு வருவது உண்டு. அதன் பெயர் ‘அக்கி அம்மை’ (Herpes zoster / Shingles). அதாவது சின்னம்மை நோய் சரியானாலும், இந்த நோய்க் கிருமிகள் உடலுக்குள் மறைந்திருந்து, பல வருடங்களுக்குப் பிறகு, திடீரென்று வீரியம் பெற்று, உடலில் உள்ள புறநரம்புகளைத் தாக்கும்.

இதன் விளைவால், பாதிக்கப்பட்ட அந்த உடல் பகுதிகளில், தோல் அழற்சி பெற்றுச் சிவப்பாகத் தெரியும். இதைத் தொடர்ந்து அந்த இடங்களில் அம்மைக் கொப்புளங்கள் தோன்றும். பத்து நாட்களுக்குப் பிறகு இந்தக் கொப்புளங்கள் காய்ந்துவிடும். பொதுவாக, அக்கி அம்மை வந்த இடங்கள் கடுமையாக வலிக்கும். இது சரியான பிறகும் இந்தப் புறநரம்பு வலி சில மாதங்களுக்கு நீடிக்கும்.

கிராமப்புறங்களில் அக்கி அம்மைக் கொப்புளங்களில் ஒரு வகை மண்ணைத் தடவுவார்கள். இதனால் அவ்வளவு பலன் கிடைப்பதில்லை. பதிலாக ‘ஏசைக்ளோவிர்’ களிம்பை அந்தக் கொப்புளங்களில் தடவினால், வலி உடனே குறையும். ‘ஏசைக்ளோவிர்’ மாத்திரைகளையும் சாப்பிடலாம். அக்கி அம்மை விரைவில் குணமாகும்.

சின்னம்மையைத் தடுப்பது எப்படி?

சின்னம்மையால் இத்தனை துன்பங்கள் வந்து சிரமப்படுவதைவிட, இதை வர விடாமல் தடுத்துக்கொள்வதே புத்திசாலித்தனம்.

l சுய சுத்தம் பேணுவதும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதும் சின்னம்மையைத் தடுக்க உதவும் சிறந்த வழிகள்.

l அம்மை நோய் வந்துள்ளவர்களுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்க்க வேண்டும்.

l அம்மை நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்துவது நல்லது.

l இந்த நோயாளிகள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.

l சின்னம்மை மற்றும் அக்கி அம்மை வராமல் தடுத்துக்கொள்ள, இப்போது தடுப்பூசி உள்ளது. ‘சின்னம்மை தடுப்பூசி’ (Chicken pox vaccine) என்று அதற்குப் பெயர்.

l குழந்தைக்கு 15 மாதங்கள் முடிந்ததும் முதல் தவணைத் தடுப்பூசியும், 5 வயதில் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் போட வேண்டும்.

l ஆரம்பத்திலேயே இத்தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாதவர்கள் 13 வயதுக்குள் இதைப் போடுவதாக இருந்தால், மூன்று மாத இடைவெளியில் இரண்டு தவணைகள் போட்டுக்கொள்ளலாம்.

l 13 வயதுக்கு மேல் ஆகிவிட்டது என்றால், இரண்டு மாத இடைவெளியில் இரண்டு தவணைகள் போட்டுக் கொள்ளவேண்டும்.

l வீட்டில், அடுத்த வீட்டில் அல்லது அலுவலகத்தில் மிகவும் நெருங்கிப் பழகும் ஒருவருக்குச் சின்னம்மை நோய் வந்துவிட்டதென்றால், அவருக்கு நோய் தொடங்கிய மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள் அவரோடு பழகுகிற மற்றவர்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

l ஒரு தவணையை மட்டும் போட்டுக்கொண்டு, அடுத்த தவணையைப் போடாமல் விட்டவர்கள் மீண்டும் ஒரு தவணை மட்டும் போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களுக்குச் சின்னம்மை வராது.

l இங்குக் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அதாவது சின்னம்மை நோய் வந்த பிறகு, இந்தத் தடுப்பூசியைப் போட்டால் பலன் தராது.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

Continue reading

சர்க்கரை நோய்க்கு ஒரு தீர்வு

  • Tamil_News_143963098527
  • சர்க்கரை வியாதி, ஆயுர்வேத நூல்களில் மதுமேகம் என அழைக்கப்பட்டது. மது என்றால் தேன். தேனைப் போன்ற இனிப்புடன் சர்க்கரை நோயாளிகளின் சிறுநீர் இருந்ததால் இவ்வியாதிக்கு மதுமேகம் எனப் பெயர் வந்தது. Continue reading

ஒவ்வொரு நோய்க்கும் செய்ய வேண்டிய முதல் உதவி சிகிச்சை முறை..

FB_IMG_1439883928343

ஒவ்வொரு நோய்க்கும் செய்ய வேண்டிய முதல் உதவி சிகிச்சை முறை..அனைவரும் அறிய அவசியம் பகிர்ருங்கள்..

எதைச்செய்தாலும் உரிய நேரத்தில், முதலில் செய்ய வேண்டும் என்பார்கள். உதவியும் அப்படித்தான். முதலில் செய்தால்தான் அது பயன் உள்ளதாக இருக்கும். எனவே தான் முதல்- உதவி முக்கியத்துவம் பெற்றுள்ளது. வாய்கிழிய பேசுபவர்களிடம்,வயிற்று வலிக்கு என்ன முதல் உதவி செய்வது என்று கேட்டால், பதில் சொல்ல திணறி போவார்கள். Continue reading

ரத்த அழுத்தமா… கூலா இருங்க

FB_IMG_1439315247946!

‘எனக்கு பிரஷர் இருக்கு… மாத்திரை போட்டுட்டு வந்திடுறேன்’ என்று பரபரப்பவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ரத்த அழுத்தப் பிரச்னை என்றால் என்ன? ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது எப்படி? பயனுள்ள ஆலோசனை சொல்கிறார் இதய நோய் நிபுணர் சி.ஆறுமுகம். Continue reading

அனைத்து நோய்க்கும் தீர்வான அருகம்புல் பற்றி அறிந்துகொள்வோம்… ‘மூர்த்தி சிறிது… கீர்த்தி பெரிது’ என்பார்களே, அது அருகம்புல்லுக்குத்தான் நூற்றுக்கு நூறு பொருந்தும். சிறிய புல்லில், புதைந்து கிடக்கும் மருத்துவ குணங்கள்தான் எத்தனை… எத்தனை? மனிதனின் பிணி நீக்கும் அத்தனை மூலக்கூறுகளும் அருகம்புல்லுக்குள் இருப்பதால்தான் அனைத்து இடங்களிலும் இதை உற்பத்தி செய்து கொண்டேயிருக்கிறது, இயற்கை. எல்லாவிதமான மண்ணிலும் வளரும் அருகு, சல்லிவேர் முடிச்சுகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இனவிருத்தி செய்கிறது. நீரில்லாமல் அருகம்புல் காய்ந்து போனாலும் போகும். ஆனால், பல ஆண்டுகள் கழித்து அந்த இடத்தில் நீர் பட்டால், பட்டென்று செழித்து வளரத் தொடங்கிவிடும் தன்மை அருகுக்கு உண்டு. இந்தப் புல் உள்ள நிலம், மண் அரிப்பில் இருந்தும், வெப்பத்திலிருந்தும் காக்கப்படுகிறது. அதனால்தான் அருகம்புல்லால் வரப்பு அமைத்து நெல் சாகுபடி செய்கின்றனர். புல் வகைகளின் அரசன்! அருகம்புல்லின் அற்புதத்தை எளிதாகப் புரிந்துகொள்ள ஓர் எடுத்துக்காட்டு. மங்கள நிகழ்வுகளின்போது சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அதில் அருகம்புல் செருகி வைப்பதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி புல் செருகப்பட்ட சாணம் காயும் வரை அதில் புழு, பூச்சிகள் உருவாவதில்லை. ஆனால், சாணத்தில் சாதாரணமாக இரண்டு நாட்களிலேயே புழுக்கள் உருவாகிவிடும். புல் வகைகளில் அரசு போன்றது அருகு. அதனால்தான், அந்தக் காலத்தில் மன்னர்கள் பட்டாபிஷேகம் செய்யும்போது, அருகம்புல்லை வைத்து மந்திரம் ஜெபிப்பார்கள். ‘அருகே… புல்களில் நீ எப்படி சிறந்து விளங்குகிறாயோ, அதேபோல் மன்னர்களில் நானும் சிறந்தோன் ஆகுக’ என்று முடிசூடும்போது மன்னர்கள் கூற வேண்டும் என்பதை மரபாகவே வைத்திருந்தார்கள். கிரகண நேரத்தில் குடிக்கும் நீரில் அருகம்புல்லைப் போட்டு வைக்கும் பழக்கம் இன்றைக்கும் நம்மிடம் இருக்கிறது. அது மூட நம்பிக்கையல்ல. கிரகண நேரங்களில் ஊதாக்கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். அதனால், ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவே அருகை நீரில் போட்டு வைக்கிறார்கள். அபார சக்தி கொடுக்கும் அருகு! ‘அருகன்’ என்றால் சூரியன் என்று பொருள். ஒலிம்பிக் வீரர்களுக்கெல்லாம் முன்னோடிகளாகத் திகழும் ஓட்டக்காரர்களான மான் மற்றும் முயல் இரண்டுக்குமான உந்துசக்தி, அவை தினமும் உண்ணும் அருகம்புல்தான். மிருகங்களில் பலமானவையும், வேகமானவையும் பெரும்பாலும் சைவம் உண்ணும் விலங்குகள்தான். யானை, குதிரை, காண்டாமிருகம் அனைத்தும் அருகம்புல் உண்பவை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். விலங்குகளில் நாய், பூனை, கோழிகள்கூட நோய் வந்தால், அருகம்புல்லைக் கடித்துத் துப்புவதைப் பார்க்கலாம். இப்படி கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் நிவாரணியை நிராகரித்துவிட்டு, மருத்துவமனைகளின் நீண்ட வரிசையில் காத்திருப்பதை வழக்கமாகவே வைத்திருக்கிறோம். ‘அருகைப் பருகினால் ஆரோக்கியம் கூடும்’ என்கிறது, சித்த மருத்துவம். அதனால்தான் இதை ‘விஷ்ணு மூலிகை’ என்று அழைத்தார்கள், சித்தர்கள். இதன் மருத்துவத் தன்மைகளை ‘பால வாகடம்’ என்ற நூலில் விளக்கியுள்ளார், அகத்தியர். பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் ஏற்ற மருந்து என்பதால், இதை ‘குருமருந்து’ எனவும் அழைக்கிறார்கள். அருகம்புல் சாறு குடித்தால், அண்டாது நோய்! காணும் இடமெல்லாம் காட்சி தரும் அருகம்புல்லை எடுத்து, நீரில் அலசி சுத்தப்படுத்தி… தண்ணீர் சேர்த்து இடித்தோ, அரைத்தோ சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இது, நீரிழிவு, உடல் பருமன், ரத்த அழுத்தம் ஆகிய நோய் களுக்கு மிகச்சிறந்த மருந்து. அருகு சாறு குடித்தால், இரவில் நல்ல தூக்கம் வரும். இதுமட்டுமா, அருகம்புல் குணப்படுத்தும் நோய்களின் பட்டியல், அதன் வேர்களைப் போலவே நீளமானது. அருகம்புல் சாறு குடித்தால் சோர்வே தெரியாது. வயிற்றுப்புண் குணமாகும். சளி, சைனஸ், ஆஸ்துமா, தோல் வியாதி, மலச்சிக்கல், பல் ஈறு கோளாறுகள், கர்ப்பப்பைக் கோளாறுகள், மூட்டுவலி ஆகியவை நீங்கும் என நீள்கிறது, பட்டியல். புற்றுநோய்க்கும் நல்ல மருந்தாக உள்ளது. இதன் அருமையை நம்மைவிட வெளிநாட்டினர்தான் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஜெர்மனியில், அருகம்புல் சாறு கலந்து ரொட்டி தயாரித்து உண்கிறார்கள். நாமும், தோசை, சப்பாத்தி, ரொட்டி ஆகியவைகளில் அருகம்புல் சாறை சேர்த்து தயாரித்து உண்ணலாம். இலங்கையில் குழந்தைகள் முதன்முதலில் பள்ளிக்குப் போகும்போது, பாலில் அருகம்புல்லை தோய்த்து வாயில் விடுவர். ‘பால் அரிசி வைத்தல்’ என்ற பெயரில் இது அழைக்கப்படுகிறது. இலவசமாக கிடைக்கும் ஊட்டச்சத்து! தினமும் காலையில் குழந்தைகளுக்கு சத்து வேண்டும் என்பதற்காக ஊட்டச்சத்து பானங்களைக் கொடுக்கிறோமே. அதை விட அதிக ஊட்டசத்து மிக்க பானம் அருகம்புல் சாறு. தளிர் அருகம்புல்லைச் சேகரித்து, நீரில் கழுவி, விழுது போல் அரைத்து பசும்பாலில் விட்டு சுண்டக் காய்ச்சி, இரவு படுக்கைக்குப் போகும் முன்பாக உட்கொண்டு வந்தால், எவ்வளவு பலவீனமான உடலும் விரைவில் தேறிவிடும். கிரீன் பிளட்..! அருகம்புல்லை நீரில் இட்டுக் காய்ச்சி, பதமான சூட்டில் குடித்து வந்தால் இதய நோய்க்கு இதமளிக்கும். அனைத்தையும்விட முக்கியமானது அருகம்புல் சாறு… மிகச்சிறந்த ரத்த சுத்திகரிப்பான். இதற்கு இணையாக ரத்தத்தைச் சுத்திகரிக்கும் மருந்து ஆங்கில மருத்துவத்தில்கூட இல்லை எனலாம். அதனால்தான் அருகை, ‘கிரீன் பிளட்’ என அழைக்கிறார்கள், வெளிநாட்டினர். ரத்த மூலம் உள்ளவர்கள், ஒரு கைப்பிடி அருகை அரைத்து, 200 மில்லி காய்ச்சாத ஆட்டுப் பாலில் கலந்து காலைவேளையில் மட்டும் குடித்து வந்தால், மூன்றே வாரங்களில் கட்டுப்படும். இதைத் தொடர்ந்து ஓரிரு மாதங்கள் குடித்து வந்தால், நரம்புத்தளர்ச்சி குணமாவதுடன், ஆண்மைக் குறைபாடு நீங்கும். ‘ஆல்போல் தழைத்து… அருகு போல் வேரூன்றி… ஆரோக்கியமாய் வாழ்வோம்.

 BRAIN DEATH மூளை இறக்குமா? உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யும் டாக்டர்கள்

ih_140919_brain_death_800x600 டாக்டர் A. ஷேக் அலாவுதீன்

MD., (Chin.Med), A.T.C.M (CHINA)

Zhejiang University, Hangzhou, (China)

(Chinese Traditional Medicine).

ஒருவருக்கு உயிர் இருக்கின்றதா? இல்லையா என்பதை

அறிய முதலில் மூச்சு இருக்கின்றதா? என்றுதான்

பார்ப்போம், பாமரர் முதல் படித்தவர் வரை உயிர்

இருக்கின்றதா என்பதை கண்டறிய உலகெங்கும்

உள்ள நடைமுறை இதுதான். Continue reading

சுய தொழில்கள் -நாப்கின் தயாரிப்பு

IMG_10546341703146பீரியட் நாட்களில் பயன்படுத்தும் நாப்கின்கள் தரமானதாகவும், விலை மலிவாவும் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். எனவே இது போன்று தரமான நாப்கின்கள் தயாரிக்கும் தொழிலை கற்றுக் கொண்டால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவை வடவள்ளியில் நாப்கின் தயாரிப்பு தொழில் செய்து வரும் ஸ்ரீமகாலட்சுமி இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் ராஜேஸ்வரி(61). ராசி என்ற பெயரில் நாப்கின் தயாரித்து வரும் அவர் கூறியதாவது: கென்யாவில் ஒரு பள்ளியில் நான் கணித ஆசிரியராகவும், கணவர் பூபதி ஆங்கில ஆசிரியராகவும் 12 ஆண்டாக பணிபுரிந்துள்ளோம். மகன் அமெரிக்காவில் இன்ஜினியர். Continue reading

 ·  வால்பாறை – சின்னதாய் ஒரு பயணம்

IMG_5051564402847கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமானது வால்பாறை. கோவையில் இருந்து 100 கி.மீ. தூரத்திலும், பொள்ளாச்சியில் இருந்து 60 கி.மீ. தூரத்திலும் உள்ளது. தேயிலை தோட்டங்கள், அடர் வனப்பகுதிகள் என ரம்மியமான இடம். இங்கு சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. வாடகை வாகனம் எடுத்துக் கொண்டால் எளிதாக சுற்றிப் பார்க்கலாம். கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக வால்பாறை செல்ல வேண்டும். காலை உணவினை பொள்ளாச்சியில் முடித்து, செல்லும் வழியில் இருந்த ஆழியார் அணையில் வண்டி நின்றது. இங்குதான் கடந்தவாரம் 50 ஆண்டுகளை கொண்டாடிய ஶ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படம் படகாக்கப்பட்ட இடம்.
IMG_5058830930643
அதிகாலையில் பனி மூட்டம் மூடியிருக்கும் வேளையிலும் மழைக்காலங்களில் மேகங்கள் உருவாகி தேயிலைத் தோட்டங்களைத் தழுவிச் செல்லும் காட்சி கண்ணுக்கு விருந்து, நெஞ்சிற்கு சுகம், கற்பனைக்கு ஊற்று. தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே மான் குட்டிகள் துள்ளி ஒடும் காட்சியும் அருமையானது.
IMG_5063954410061
தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே ஓடும் ஒரு நதி, பல திரைப்படங்களில் பாடல் காட்சிகளில் இடம்பெற்ற இடம். சிவாஜி கணேசன், ஜெயலலிதா நடித்த படம் சுமதி என் சுந்தரி படமாக்கப்பட்ட இடம் இங்குதான். பொட்டு வைத்த முகமோ என்று இருவரும் ஆடிப்பாடும் இடம் இதுதான்.இங்குள்ள தோட்டங்களுக்கு இடையே ஒரு பெருமாள் கோயிலும் உண்டு. மலையின் உச்சியில் அழகாகக் கட்டப்பட்டுள்ள அக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்குப் பின்னர் இரண்டு மூன்று மணி நேரம் அமைதியாகக் கழிக்கலாம். இப்பகுதிகளில் நாம் நகரங்களில் காணும் அணில் செந்நிறத்தில் இருப்பதை காணலாம்.
IMG_5071423686982
ஆழியாறை நெருங்குவதற்கு முன்பு வண்டியை நிறுத்துங்கள். அங்கு ஓர் அருவி உள்ளது. குரங்கருவி, மிகச் சிறிய அருவிதான் என்றாலும், அருவிக்கு சற்று முன்னால் குளம் போல நீர் தேங்கி இருக்கும் பகுதியில் அமர்ந்து கொண்டு சுகமாகக் குளிக்கலாம்.காலை நேரத்தில் குரங்கருவிக்கு நீராடச் செல்பவர்களுக்கு குறைந்த விலையில் வீட்டில் சுட்ட இட்லி, தோசை, வடை கிடைக்கும். மிக ருசியாக இருக்கும்.

ஆச்சரியபட வைத்த ஆழியார் அணை :
IMG_5077211870693
தோட்டம் சரியாக பராமரிக்கபடவில்லை என்ற வருத்தத்துடன் உள்ளே உளவினோம். நீண்ட படிகள் ஏறி தண்ணீர் தேக்கத்தை காணச்சென்ற போது அங்கே ஓர் அழகிய ரம்மிய காட்சி காத்திருந்தது. வாழ்வில் மிக ரசித்த காட்சியில் இது மூன்றாம் இடத்தை பிடிக்கின்றது. எல்லா நேரமும் இவ்வளவு அழகான காட்சி இதே இடத்தில் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். மேலெழுந்த சூரியனை மறைத்து நின்ற மேகங்கள். அந்த மேகங்களை எப்படியேனும் தாண்டி வெளியே வரவேண்டும் என்று துடித்த சூரியக்கதிர்கள். அந்த கதிர்கள் தூரத்தே இருந்த மலையில் அடிவாரத்தில் தண்ணீர் மீது பட்டு தெறித்த காட்சி. ஆகா. மீண்டும் கிடைக்குமா?
IMG_5089161235073
அந்தமான் தீவுகள் சென்றிருந்த போது, ஓரு கடற்கரையில் நாங்கள் நால்வர் மட்டும் இருந்தோம். அந்தி சாயும் பொழுது. கண்ணின் பார்வை எவ்வளவு தூரம் தெரியுமோ அவ்வளவு தூரம் கடல். இளநீல நிறத்தில் நீர். இடப்பக்கம் சின்ன மலைக்குன்று. தூரத்தில் சில குன்றுகள். வலப்பக்கம் சூரியன் மறைய காத்திருந்தது. அற்புதம் என்னவெனில் கடலில் அலைகள் ஏதும் இல்லை. முட்டி அளவு தண்ணீர் மட்டுமே சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு. அந்த நேரத்தில் புகைப்படங்களில் ஆர்வம் ஆரம்பிக்காத நேரம். கருவியில் படம்பிடிக்காமல் போனாலும் இன்றும் கண் முன்னே விரிகின்றது.

ஆழியார் அணையில் சிறிது நேரம் கழித்துவிட்டு, எதிரே இருந்த மீன் காட்சியகத்திற்கு சென்றோம். இங்கு மீன்களும் அழகு, அதனைவிட அழகு நேர்த்தியாக மீன்களுக்கு கீழே அடிக்கி வைத்திருந்த கற்கள். வித வித வண்ணங்களில், வேறு வேறு வடிவங்களில், மிக நேர்த்தி. கண்டிப்பாக இந்த சின்ன காட்சியகத்தை அட இங்க என்ன இருக்க போகுது என்று விட்டுவிடாதீர்கள்.

தேயிலை தோட்ட தேன்:

மலை ஏறத்துவங்கியதும் சின்னதாக ஓரு அருவி இருந்தது. ஆள் நடமாட்டமே இல்லை. இரண்டே நிமிடங்களில் அங்கே நான் முதலில் அருவியில் குளிக்க, அப்பாவும் வாகன ஓட்டுனர் விஸ்வநாதனும் சேர்ந்து கொண்டனர். முந்தைய நாள் கோவை குற்றாலத்தில் குளித்ததை விட நீரின் வெப்பம் சற்று கூடுதலாக இருந்தது. அரை மணி நேரம் அங்கேயே நீரில் அமர்ந்திருந்தோம். பின்னர் இன்னும் பார்க்க நிறைய இருக்கின்றது என வெளியே வந்துவிட்டோம். அப்பா கொஞ்ச நேரம் மரம் நிழலில், அருவின் ஓசையில், மெல்லிய காற்றில் திட்டு ஒன்று உறங்கினார். இந்த சமயம் விசுவின் காதல் கதை வெளிவந்தது. தான் எப்படி தன் மனைவியை காதலித்து கைப்பிடித்தார், பிரச்சனைகள் என்ன, எப்படி இப்போது சமாளிக்கிறார்,குழந்தை, தொழில் என்று பேசிக்கொண்டே இருந்தார். அண்ணா அண்ணா என்று தான் என்னை அழைத்தார். அந்த மனிதனுக்குள் தான் எத்தனை அனுபவம், இவை அனைத்தையும் மூடிக்கொண்டு பேசியபடியே பயணம் முழுக்க வந்தார்.

மொத்தம் நாற்பது ஊசிமுனை வளைவுகள் (Hairpin Bend). மெதுவாக வண்டி ஏறியது. வழியில் எங்கெங்கெல்லாம் அழகான காட்சி தென்படுகின்றதோ அங்கெல்லாம் நின்றது. மற்ற ஓட்டுனராக இருந்தால் சலிப்புற்று போயிருப்பார்கள். வேறு எங்கும் இதுவரை காணக்கிடைக்காத அளவிற்கு எங்கும் தேயிலைத்தோட்டங்கள். வால்பாறையை அடைந்ததும் அப்பாவின் வங்கி கிளைக்கு சென்று எங்கு தங்கலாம் என விசாரித்தோம். மதிய உணவினை முடித்துவிட்டு கொஞ்ச நேரம் உறங்கிவிட்டு சோலையார் அணைக்கு கிளம்பினோம்.

IMG_5103148802663

சோலையார் அணை :

சோலையார் அணை சுமார் 15 கி.மீ தொலைவில் இருந்தது. மெதுவாக வண்டி ஊர்ந்து சென்றது. அணையில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்ததால், மின்சாரம் தயாரிக்கும் இடத்திற்கு செல்ல தீர்மானித்தோம். ஒரு வண்டி மட்டும் செல்லக்கூடிய மண் பாதை. விசு லாவகமாக வண்டி ஓட்டி சென்றார். வழியில் இருவர் வண்டியை வழிமறித்தனர். ஒரு மலையாளகாரர், மற்றொருவர் தமிழர். Fullஆக இருந்தார். “பாத்து போங்க அங்க யானை ஒன்னு இருக்கு..”. ஏதோ சாதாரணமாக, டீ சாப்பிடுகின்றீர்களா என்பது போல சொன்னார். “யானை ஏதாச்சும் செய்யுமா?” என எங்கள் வண்டியில் இருந்து. அவரும் சலிக்காமல். “நேத்து ஒரு பஸ்ஸை வழிமறிச்சி, வெரட்டிடுச்சி. மெதுவா போனா எதுவும் பண்ணாது, பயப்பட வேண்டாம்..” வடிவேலு வேலு திரைப்படத்தில் சொல்லுவார் “பயப்படதாவங்க எல்லாம் பயப்படுறவங்க கிட்ட பயப்படாம போ பயப்படாம போன்னு சொல்றீங்களே”.. வண்டி சீறிக்கொண்டு சென்றது. ஓட்டலை நோக்கி. அருகே இருந்த மார்கெட்டிற்கு சென்று இரவு எங்கு உண்ணலாம் என்று தேடினோம். கண்டுபிடித்தோம். உண்டோம். குடும்ப சபை கூடி முக்கிய அறிவிப்புகள், முடிவுகள் எடுத்து உறங்கினோம்.

IMG_5115850575296

காலை 4 மணிக்கு அப்பா எல்லோரையும் எழுப்பிவிட்டார். வாங்க இரவினை ரசியுங்கள் என்று படாதபாடு படுத்திவிட்டார். மெட்டை மாடிக்கு சென்று நட்சத்திரங்கள் மிக அருகில் இருப்பதை கண்டு, குளிர் தாங்காமல் மீண்டும் போர்வைக்குள் புகுந்தேன். கலைஞரின் கட்டுரைகள் புத்தகத்தை படித்தபடி மீண்டும் தூங்கினேன். தூங்கினோம். ஒழுங்காக காலை ஆறு மணிக்கு எழுந்திருந்தால் நல்ல நடை சென்றிருக்கலாம்.

காலை நேராக ஆணைமுடி சிகரத்திற்கு சென்றோம். வழியில் சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்றோம். அங்கே பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விநாயகர் சிலை அற்புதமாக இருந்தது. அந்த கோவிலில் இருக்கும் பூசாரி ரசிக்கவல்ல மனிதர். எழுபத்தி இரண்டு வயதாகின்றது. An interesting humorous wonderful Personality (இது பாலச்சந்தர், பாரதிராஜா மாதிரி வசனங்கள் நடுவே பீட்டர் விடும் ஒரு முயற்சி ) . விசுவும் அவரும் செம கலக்கல். ஆணைமுடி என்கின்ற கிராமத்தில் தேநீர் அருந்தினோம். அங்கே எங்களோடு சிவா (3092) என்பவர் சேர்ந்து கொண்டார். சிவா உள்ளூர்வாசி. அப்பா காலத்தில் திருநெல்வேலியில் இருந்து இங்கே வந்துவிட்டனர். தொழிற்சாலையில் பணி புரிகின்றார். நாங்கள் சென்ற தினம் விடுமுறையில் இருந்தார். அந்த ஊரைப்பற்றியும் தொழிலாளிகளின் கஷ்டங்களை பற்றியும் சொன்னார். எங்களை ஆணைமுடி சிகரத்திற்கு அழைத்து சென்றார். ஆணைமுடி சிகரம் , தென் இந்தியாவில் மேகக்கூட்டங்கள் வரும் மிக உயர்ந்த சிகரமாம். கலக்கலான இடம். அருகே சின்ன முருகன் கோவிலுக்கு அழைத்து சென்றார். சுயம்பு கோவில்.

அங்கிருந்து தேயிலை தோட்ட நடுவே பிருந்தாவனம் போல இடம் ஒன்றுக்கு அழைத்து சொன்றார். ஒவ்வொரு செடியின் மகிமை, இடம் பற்றி, மரம் பற்றி ஏராளமான விஷயம் சொன்னார். மூன்று மகன்கள். அடுத்த முறை செல்லும் போது ஆணை முடியில் ஒரு வீடு எடுத்து கொடுத்து, சமையலுக்கு ஏற்பாடு செய்வதாக வாக்களித்தார். (அடுத்த பயணம் நண்பர்களோடு விரைவில் !!!) ஆரஞ்சு தோட்டத்திற்கு சென்றோம். வால்பாறையினை சுத்தி வந்தோம். மதியம் உணவு முடித்து மீண்டும் கோவைக்கு பயணித்தோம்.

நிச்சயமாக நேரம் போதவில்லை. மேலும் பெற்றோர்களுடன் சென்றதால் அதிக இடங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. நிச்சயம் மூன்று நாட்கள் தங்கி நன்றாக ரசிக்க ஏராளமான இடம் இங்கே இருக்கின்றது.

IMG_5123320572715

பார்க்க வேண்டிய இடங்கள்:-

1. சோலையார் அணை
2. நீரணை
3. அதிரம்பள்ளி அருவி (20 கி.மீ) (புன்னகை மன்னன் அருவி)
4. ஆனைமுடி சிகரம்
5. பூஞ்சோலை
6. பாலாஜி கோவில்
7. சித்தி விநாயகர் கோவில்
8. காடம்பறை அணை
9. குரங்கு அருவி (Monkey Falls)

எங்கு தங்குவது:-

ஒரே ஒரு நல்ல விடுதி மட்டும் இருக்கின்றது. தங்கலாம் !!! : Green Hill Hotels P.Ltd, StateBank Road, Valparai Ph: 044523- 222861 . மின்னஞ்சல் : greenhillhotel@hotmail.com

எப்படி செல்வது:-

கோவை, பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு பஸ் வசதி உள்ளது. வால்பாறை – டாப்சிலிப் 3 நாள் பேக்கேஜ் டூரில், வால்பாறையில் இருந்து டாப்சிலிப் வரை சுற்றி பார்க்கலாம். பொள்ளாச்சியில் இறக்கி விடுவார்கள். 8 பேர் செல்லும் வாகனத்துக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை ஆகும். வால்பாறையில் தங்குமிடங்கள், ஓட்டல்கள் உள்ளன. கோவையில் இருந்து பொள்ளாச்சி சென்று அங்கிருந்து பேருந்தில் செல்லலாம். வால்பாறையில் ஜீப்புகள் கிடைக்கின்றது. அல்லது கோவையில் இருந்தே ஒரு வண்டி வைத்துக்கொண்டு போகலாம், வழியில் நின்று ஆற அமர ரசிக்கலாம்.

உணவு:

வெளியூருக்கு செல்லும் போது இந்த உணவு பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கும். வால்பாறையில் எங்கு விசாரித்ததிலும் ஒரே ஒரு ஓட்டலில் மட்டும் சாப்பிட சொல்லி பரிந்துரைத்தார்கள். உணவு நன்றாக கிடைக்கும். லட்சுமி செட்டிநாடு மெஸ். ஐந்து சகோதரர்கள் நடத்துகின்றார்கள். இவர்களை விசாரித்தால் கூட எங்கெல்லாம் செல்லலாம் என்று உதவுவார்கள்.

வால்பாறை போன்ற இடங்களில் இங்கு தான் அழகாக இருக்கும் என்று சொல்ல முடியாது, அவரவர் ரசனைக்கேற்றவாரு எங்கும் நின்று ரசிக்கலாம். இதுவரை வால்பாறையை சிற்றுலா தளமாக தமிழக அரசு அறிவிக்கவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், அப்படி அறிவிக்காத்தால் இன்னும் இந்த அழகு கெடாமல் பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றது என்பதில் ஆனந்தம்.

பார்க்க வேண்டிய இடங்கள்:

பாலாஜி கோயில் பூங்கா:

வால்பாறையில் இருந்து கருமலை வரை வாகனத்தில் சென்று, அங்கிருந்து அரை கி.மீ. நடந்து சென்றால் பாலாஜி கோயில். கோயிலை சுற்றி பூத்து குலுங்கும் மலர்கள் கண்களை கவரும். சிறுவர் பூங்கா ரம்மியமானது. வால்பாறையில் பளிங்கு கல்லால் உருவாக்கப்பட்ட சித்தி விநாயகர் கோயில், திருப்பதி போலவே மலையில் கருமலை பாலாஜி கோயில் ஆகியவை உள்ளன. இதன் அருகே அழகிய பூங்கா, இறைச்சல்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. வால்பாறையில் மே 31-ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு கோடை விழா நடக்கிறது.

அக்காமலை புல்வெளி:

பாலாஜி கோயிலில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. பச்சை பட்டாடை உடுத்தியதுபோன்ற அழகிய புல்வெளி. இதை காண வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். முகவரி: வனத்துறை அலுவலகம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை. வெள்ளமலை குகை: கருமலையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் சிறுகுன்றா சாலையில் அமைந்துள்ளது. சின்னக்கல்லார் அணையில் இருந்து மலையை குடைந்து 4 கி.மீ. தூரம் அமைக்கப்பட்ட குகை, கால்வாய் ஆகியவற்றை காணலாம்.

சின்னக்கல்லார் நீர் வீழ்ச்சி + சின்னக்கல்லார் அணை:

வெள்ளமலை குகையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது. வெள்ளமலை குகையின் நுழைவாயில் இங்கு உள்ளது. அணையில் இருந்து நீர் குகைக்குள் செல்வதை பார்க்கலாம். சின்னக்கல்லார் நீர் வீழ்ச்சி: சின்னக்கல்லார் அணையில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. மர தொங்கு பாலம் வழியாக செல்ல வேண்டும். தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என பெயர் பெற்றது. அருவிக்கு செல்ல கட்டணம் ஒரு நபருக்கு ரூ.115.

கீழ்நீராறு அணை:

சின்னக்கல்லார் நீர் வீழ்ச்சியில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ளது. அடர் வனப்பகுதிக்குள் அமைந்த அணை.

கூழாங்கல் ஆறு:

கீழ்நீராறு அணையில் இருந்து 8 கி.மீ. தூரம். இருபுறமும் தேயிலை தோட்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த ஆறு கூழாங்கற்கள் நிறைந்தது. இங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் வால்பாறையை அடையலாம்.

வில்லோனி பள்ளத்தாக்கு:

வால்பாறையில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உருளிக்கல் ரோட்டில் உள்ளது. ஆங்கிலேயர்கள் வால்பாறைக்கும் வில்லோனிக்கும் இடையில் விஞ்ச் அமைத்து பயணித்துள்ளனர். வில்லோனியில் விஞ்ச் அமைத்ததற்கான தடயங்கள் இப்போதும் உள்ளன. இங்கிருந்து வால்பாறைக்கு செல்லும் வில்லோனி குதிரைப்பாதை காணலாம். அதற்குள் செல்ல அனுமதி இல்லை.

மானாம்பள்ளி நீர் மின் உற்பத்தி நிலையம்:

வில்லோனியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள உருளிக்கல் பகுதியில் உள்ளது. சோலையார் அணையில் இருந்து பரம்பிக்குளம் அணைக்கு கொண்டு செல்லப்படும் நீர் இங்கு மின்சாரம் உற்பத்தி செய்து வெளியேற்றப்படுகிறது. இங்கிருந்து வெளியேறும் நீர் மீன்பாறை ஆறாக பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது. மானாம்பள்ளி நீர் மின் உற்பத்தி நிலையம், மீன்பாறை செல்ல வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். போன்: 04259&235385.
சோலையார் அணை: மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 20 கி.மீ. தூரம். ஆக்டோபஸை போல் 75 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள அணை.

தமிழகத்திலேயே உயரமானது (345 அடி). அணையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ஆற்று பள்ளத்தாக்கு ரம்மியமானது. இங்கு மீன் சாப்பாடு பிரசித்தம்.

அதிரப்பள்ளி அருவி:

சோலையார் அணையில் இருந்து சாலக்குடி செல்லும் ரோட்டில் 50 கி.மீ. தூரத்தில் உள்ளது. புன்னகை மன்னன் படத்தில் இடம் பெற்ற அருவி. அருவியும், அருவிக்கு முன்பாக நீண்ட சமவெளி ஆறும் பிரமிக்க வைப்பவை. நல்லமுடி பூஞ்சோலை: சோலையார் அணையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் முடீஸ் ரோட்டில் உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இடம். பள்ளத்தாக்கில் யானைகள், காட்டெருமைகளை காணலாம்.

ஹைபாரஸ்ட் நம்பர்பாறை காட்சி முனை:

நல்லமுடி பூஞ்சோலையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. அந்த காலத்து தமிழக, கேரள சமஸ்தான எல்லை சின்னங்களை காணலாம். இங்கிருந்து கேரளா மலைவாழ் குடியிருப்பு மற்றும் விவசாய பகுதிகள், இடைமலையாறு, இடைமலையாறு அணை ஆகியவற்றை காணலாம்.

புதுத்தோட்டம்:

வால்பாறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் பொள்ளாச்சி ரோட்டில் அமைந்துள்ளது. காட்டெருமைகள், காட்டு பன்றிகள், சிங்கவால் குரங்குகள், மான்கள் கடந்து செல்லுமிடம்.

கவர்க்கல்:

வால்பாறை & பொள்ளாச்சி மலைப்பாதையில் உயர்வான பகுதி. வால்பாறையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது. இப்பகுதி பெரும்பாலும் அடர்த்தியாக பனி சூழ்ந்திருக்கும். வாகனத்தில் விளக்கை எரிய விட்டு பாதுகாப்பாக ஓட்டிச் செல்ல வேண்டும். யானைகள் கடக்கும் பகுதி.

வாட்டர்பால்ஸ்:

வால்பாறை & பொள்ளாச்சி மலைப்பாதையில் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. குளிக்க வசதியில்லை. பார்த்து ரசிக்கலாம். இங்கு நறுமணம் மிக்க ஜகருண்டா வகை மலர்கள் பூத்துக்குலுங்கும். ஒரிஜினல் டீ கிடைக்கும்.

டைகர் காட்சி முனை:

வால்பாறை & பொள்ளாச்சி மலைப்பாதையில் 22 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து பார்த்தால் வனப்பகுதிக்குள் அமைந்த காடம்பாறை கிராமம், ஆதிவாசி குடியிருப்புகளை காணலாம்.

லோம்ஸ் வியூ:

வால்பாறை & பொள்ளாச்சி மலைப்பாதையில் மொத்தமுள்ள 41 ஹேர்பின் வளைவுகளில், கீழிருந்து மேலாக உள்ள 9வது வளைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து ஆழியார் அணையையும், பொள்ளாச்சி வரை தெரியும் பசுமையையும் காணலாம்.

மங்கி ஃபால்ஸ்:

இங்குதான் பகலில் ஒர் இரவு படத்தில் வரும் பாடல் இளமை எனும் பூங்காற்று, ஶ்ரீதேவியின் பாடல் படமாக்கப்பட்ட இடம். வால்பாறை & பொள்ளாச்சி மலைப்பாதையில் 40 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு குளிக்க அருகேயுள்ள வனத்துறை செக்போஸ்ட் அலுவலகத்தில் டிக்கெட் வாங்க வேண்டும். நபருக்கு ரூ.15, கேமரா கட்டணம் ரூ.25. அருவியில் குரங்குகள் அதிகம்.

ஆழியார் அணை:

வால்பாறை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. 120 அடி உயரமுள்ள அணை. ஆண்டு முழுவதும் 100 அடிக்கு குறையாமல் நீர் இருக்கும். அணைக்கட்டில் பூங்கா உள்ளது. படகு சவாரியும் செய்யலாம். சுடச்சுட பொரித்த மீனை இங்கு சுவைக்கலாம். அணையின் எதிரே உள்ள மீன்காட்சியகத்தில் வெளிநாட்டு மீன்கள் உள்ளன. அணையை ஒட்டி வேதாத்ரி மகரிஷியின் அறிவுத்திருக்கோயில் உள்ளது.

மாசாணியம்மன் கோயில்:

பொள்ளாச்சியில் இருந்து டாப்சிலிப் செல்லும் வழியில் ஆனைமலை ஊர் உள்ளது. இங்குள்ள மாசாணியம்மன் கோயில் பிரபலமானது.

டாப்சிலிப்:

தமிழக – கேரள எல்லையில் உள்ள டாப் ஸ்லிப்பை நோக்கி. இந்திராகாந்தி தேசியப் பூங்கா என்று அழைக்கப்படும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு உட்பட்டது டாப் ஸ்லிப். இங்குள்ள பெரிய மரங்களை வெட்டி உருட்டிவிடுவார்களாம். தடையேதும் இன்றி அந்த கட்டைகள் மலையடிவாரத்திற்கு வந்து விழுமாம். அதனால் டாப் ஸ்லிப் என்று பெயர் வந்தது.

இவ்விடத்தின் உண்மை பெயர் வேட்டைக்காரன் புதூர். இங்கு பிளாஸ்டிக் பொருட்களோ, இரைச்சல் போடும் இசைக் கருவிகளுக்கோ, போதைப் பொருட்களுக்கோ அனுமதி இல்லை. மறைத்துக் கொண்டு போய் சிக்கனால் சிறைதான்.

டாப் ஸ்லிப்பின் நுழைவுப் பகுதியிலேயே மிக விசாலமான புல் வெளியைக் காணலாம். அங்குள்ள தமிழ்நாடு வனத்துறையின் விருந்தினர் மாளிகைகளில் தங்கும் வாய்ப்பு கிடைத்தால் இரவில் உலவ வரும் கரடியில் இருந்து சிறுத்தை வரை எல்லாவற்றையும் பார்க்கலாம்.

டாப் ஸ்லிப்பில் இருந்து காட்டிற்குள் சென்று சுற்றிப்பார்க்க யானை சவாரி வசதி உள்ளது. இங்கிருந்து மேலும் சிறிது தூரம் சென்றால் கேரள எல்லை. கேரள எல்லைப் பகுதிக்குள் போகும் அந்த சாலையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் வாகனத்தில் சென்றால் தமிழகமும், கேரளமும் இணைந்து நிர்வகித்து வரும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் வரும் 3 அழகிய அணைக்கட்டுகளைப் பார்க்கலாம்.

ஒன்று பெருவாரிப்பள்ளம், மற்றொன்று தூணக்கடவு, எல்லாவற்றுக்கும் மேல் இறுதியாக அந்த சாலையின் முடிவாக மலையின் உச்சியில் பரம்பிக்குளம் தண்ணீரை தேக்கி வைக்க கட்டப்பட்டுள்ள பரம்பிக்குளம் அணை. 2700 அடி உயரத்தில் இந்த அணை உள்ளது.

இப்பகுதி மிக அருமையான பொழுதுபோக்கிடமாகும். மலையும், நீரும், பறவைகளின் ஒலியும், காற்றும் சுகமான அனுபவங்கள்.

வேட்டைக்காரன் புதூரில் இருந்து பரம்பிக் குளம் அணை வரை செல்லும் பாதையில் ஆங்காங்கு நிறுத்தி அடர்ந்த வனப்பகுதியை ரசித்துப் பார்க்கலாம்.

இரண்டு நாட்கள் போதும். ஒரு நாள் வால்பாறை, மறுநாள் டாப் ஸ்லிப். மனதுக்கு இதம் தரும் இனிய சுற்றுலாவாக இருக்கும்.

பொள்ளாச்சியில் இருந்து 15 கி.மீ. சமதளத்திலும், 13 கி.மீ. மலைப்பாதையிலும் சென்றால் டாப்சிலிப்பை அடையலாம். கடல்மட்டத்துக்கு மேல் சுமார் 450 மீட்டர் உயரத்தில் உள்ளது. டாப்சிலிப்பில் யானை சவாரி செல்லலாம். 4 பேருக்கு கட்டணம் ரூ.400. வனத்துறையின் வாகனத்தில் சுற்றி பார்க்க ஒரு நபருக்கு கட்டணம் ரூ.25. இங்கு மூலிகை பண்ணையும் உள்ளது.

பரம்பிக்குளம் அணை:

பரம்பிக்குளம் அணை கேரளாவில் இருந்தாலும், அணை நிர்வாகம் தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சோலையார் அணையில் இருந்து வரும் நீர் இங்கு தேக்கமாகிறது. டாப்சிலிப்பில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ளது. கேரள எல்லையில் இருந்து கேரள வனத்துறை வாகனத்தில் பரம்பிக்குளம் அணை வரை வன உலா செல்லலாம். நபருக்கு கட்டணம் ரூ.140.

Continue reading

ஹஜ்_உம்ரா_விளக்கம்_4

IMG_3484191246579ஸபா_மர்வா எனும் குன்றுகளுக்கிடையே ஓடுவது

தவாபுல் குதூம் எனும் இந்த தவாஃபை நிறைவேற்றி, இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு ஸபா, மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓடவேண்டும். நபி (ஸல்) அவர்கள் தமது தவாஃபை முடித்த பிறகு ‘ஸபா’வுக்கு வந்து அதன் மேல் ஏறினார்கள். அங்கிருந்து கஃபாவைப் பார்த்து தமது கைகளை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். அவர்கள் பிரார்த்திக்க நினைத்ததெல்லாம் பிரார்த்தித்தார்கள். Continue reading

ஹஜ் உம்ரா விளக்கம்-1

#உம்ரா_ஹஜ்_விளக்கம் #பகுதி -1

ஹஜ்ஜின் சிறப்புகள் 

IMG_3673929481086ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள். அல்குர்ஆன் 2:196

(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலகமக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.

Continue reading