இஸ்லாமும் நுகர்வோர் கலாச்சாரமும்

சம்ஷாத் அப்துல் ஹமீத்

நுகர்வோர் கலாச்சாரம் அதன் உச்சத்தில் இருக்கிறது. ஒரு பக்கத்தில் கடுமையான ஏழ்மை –அடிப்படை தேவைகள் கூட கிடைப்பதில்லை. மறுபக்கத்தில் எல்லாமே அபரிமிதமாக இருக்கிறது. மக்கள் ஒரே வகை உணவு உண்பது அலுத்துப்போய் பல்வேறு விதமான உணவகங்களுக்குச் சென்று உண்ணுகிறார்கள். இன்னும் பலர் சலிக்கும் வரை பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள். அத்தனை பொருட்களை வைத்து மக்கள் என்ன தான் செய்வார்கள்? Continue reading

ஹஜ் 1953 சில புகைப்படங்கள் வீடியோவாக ..!

புனித காபா , அரபாத் எனும் இடத்திற்கு செல்லும் படங்கள் ,மினாவில் மக்கள் ,நல்ல ஒரு பதிவு காண தவறதீர்கள் ..!

நபிகளார் மொழிந்தவை:


1. செயல்கள் அனைத்தும்
எண்ணங்களை பொறுத்தே
அமைகின்றன.
2. இறைவன் உங்கள்
உருவங்களையோ, உங்கள்
செல்வங்களையோ
பார்ப்பதில்லை. மாறாக
உங்கள் உள்ளங்களையும்,
செயல்களையும்
பார்க்கின்றான். Continue reading

இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்..!

மனித வாழ்க்கையில் கனவுகள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. நடக்க முடியாததை ஒருவன் எதிர்பார்க்கும் போது ‘பகல் கனவு காணாதே’ என்று கூறுவதும், சட்சிகள் இல்லாமல் நடைபெற்ற காரியத்தை பேசும் போது ‘ஊமை கண்ட கனவு போல்’ என்று உவமை கூறப்படுவதும் கனவுகளின் பாதிப்பை உணர்த்தப் போதுமானதாகும்.

Continue reading

மறுமை வெற்றி யாருக்கு..?

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.  (அல்குர்ஆன் 3:104)
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் குறிக்கோளும் ஒரு வெற்றியை நோக்கியே இருக்கின்றது. அதை நோக்கியே அவன் தனது பயணங்களை அமைத்துக் கொள்கின்றான். அதற்க்காக தனது முழு முயற்ச்சியையும் அர்ப்பணிக்கின்றான். அந்த வெற்றியின் ருசியை கூடிய விரைவில் தான் சுவைக்க வேண்டும் எனவும் ஆவல் கொள்கின்றான். அதை முன்னோக்கியே தனது ஒவ்வொரு செயலையும் அமைத்து கொள்வதை நாம் காண்கிறோம்.

Continue reading

இஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்! – Part 3

கடமையான குளிப்பை நிறைவேற்றும் முறை:
சென்ற தொடரில் குளிப்பைக் கடமையாக்கக்கூடியவ அம்சங்களைப் பார்த்தோம். இப்போது எவ்வாறு குளிக்கவேண்டும் என்பதைப் பார்ப்போம்.
கடமையான குளிப்பு பூரணமாக அமைவதற்குப் பின்வரும் இரண்டு அம்சங்கள் அவசியமாகின்றன.
1) நிய்யத்:
கடமையான குளிப்பை அல்லாஹ்வுக்காக நிறைவேற்றுகிறேன் என்று மனதால் உறுதியாக எண்ணம் கொள்வதே நிய்யத் ஆகும். நிய்யத் இல்லாமல் செய்யப்படுகின்ற எந்த ஒரு வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

Continue reading

வானவர்கள் என்றால் யார் ?

மலக்குகள் (الْمَلَائِكَةَ)வானவர்கள்’மலக்’ என்றால் வானவர் என்பது பொருளாகும்.. இதன் பன்மை ‘ மலாயிக், மலாயிகா என்பதாகும்.’மலக்’ என்ற சொல் குர்ஆனில் பதிமூன்று இடங்களிலும்’மலகைன்’இருமை யாக இருதடவைகளும், ‘மலாயிகா’ என்று பன்மையில் 73 தடவைகளும் பயன் படுத்தப் பட்டுள்ளன.

Continue reading

இஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்! – Part 2

 

 
இஸ்லாத்தைத் தழுவுதல்:
இஸ்லாத்தைத் தழுவும் ஒருவர் குளிக்க வேண்டுமா இல்லையா என்பதில் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவர்களில் ஒரு சாரார் குளிப்பது கடமை எனக் கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸைக் குறிப்பிடுகின்றனர்.
‘கைஸ் பின் ஆஸிம் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்க வந்தபோது அவரைக் குளித்துவிட்டு வருமாறு நபி (ஸல்) அவர்கள் ஏவினார்கள்’(அபூதாவுத், திர்மிதீ, நஸாஈ )
அத்துடன் துமாமா (ரழி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன்னர் குளித்த நிகழ்ச்சியையும் தமது கருத்துக்கு ஆதாரமாக் குறிப்பிடுகின்றனர்.

Continue reading

இஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்! – Part 1

இஸ்லாம் ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம் என்ற வகையில் அது மனிதனுடைய வாழ்க்கையுடன் தொடர்பான அனைத்து விசயங்களுக்கும் வழி காட்டுகிறது. அந்த அடிப்படையில் குளிப்பது பற்றிய பூரண விளக்கத்தையும் இஸ்லாம் தந்துள்ளது. எனவே இத்தொடரில் குளிப்பின் சட்டங்கள் பற்றி விரிவாக நோக்கலாம்.
எப்போது குளிப்பு கடமையாகும்?

Continue reading

பெண்களின் சுத்தம் (மாதவிடாய்- ஹைளு)

01) மாதவிடாய் (ஹைளு)ஒரு குறிப்பிட்ட கால எல்லையில் பெண்களிடமிருந்து இயற்கையாக வெளிப்படும் இரத்தத்தையே இது குறிக்கின்றது. மாதவிடாயானது ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களது உடல் ஆரோக்கியம், சூழல் ஆகியவற்றுக்கு ஏற்ப மாறுபடலாம்.

(ويسئـلونك عن المحيض قل هواذى فاعـتزلواالنساءفى المحيض ولاتـقربوهن حتى يـتهرن (2:222)

‘இன்னும் மாதவிடாய் பற்றி உம்மிடம் கேட்கின்றார்கள், நீர் கூறும்’அது தூய்மையற்ற நிலை ஆகவே மாதவிடாய் காலத்தில் பெண்களைவிட்டும் விலகி இருங்கள் மேலும், அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்’

Continue reading

ஜின்கள் பற்றி அறிந்துக் கொள்வோம்.

                                                 தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்…!

ஜின்கள் என்று ஒரு படைப்பு இருப்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. அந்த அளவிற்கு ஏராளமான சான்றுகள் அவைப் பற்றி உள்ளன.

எந்த நோக்கத்திற்காக மனிதர்கள் படைக்கப்பட்டார்களோ அதே நோக்கத்திற்காக தான் ஜின்களும் படைக்கப்பட்டுள்ளன.

மனிதர்களையும் – ஜின்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை. (அல் குர்ஆன் 51:56)

இந்த வசனத்தில் இடம் பெறும் வணக்கம் என்பதற்கு அவனுக்கு முழுதும் கட்டுப்பட்டு நடத்தல் என்பதே சரியான பொருள். இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொருப் பொருளும் ஒவ்வொரு உயிரும் அவனை வணங்குகின்றன என்றாலும் வணங்கக் கூடிய இயல்பு இருந்தும் மாறு செய்யக் கூடிய மன நிலை இந்த இரண்டு படைப்புக்கும் இருப்பதால் பிரத்யேகமாக இந்த இரண்டு படைப்புகளை மட்டும் மேற்கண்ட வசனத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Continue reading

ஸஜ்தாவின் சிறப்புககள்…!

                                    தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்…!

தூய்மையான வணக்கங்களுக்குச் சொந்தக்காரனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: இரவு பகல் சூரியன் சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ சந்திரனுக்கோ ஸஜ்தா செய்யாதீர்கள். அவனையே நீங்கள் வணங்கு வோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள் (அல்குர்ஆன் 41:37)

Continue reading

ஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவரைச் சுற்றியுள்ள முஸ்லிகள் உடனே அவருக்கு செய் யவேண்டிய அவசியமான குளிப்பாட்டுதல், கஃபனிடுதல், தொழவைத்தல், அடக்கம் செய்தல்போன்றவற்றை செய்வது கட்டாய கடமையாகும்.

ஆனால் நம் இஸ்லாமியர்களின் பெரும்பாலானவர்களிள் குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அந்த மைய்யத்திற்க்கு செய்ய வேன்டிய கடமைகள் என்ன என்று கூட தெரியாமல் இருக்கின்றார்கள்.

Continue reading

அல்குர்ஆன் கூறும் தேனீ + தேன் ஆராய்ச்சி படிப்பினை..!

                                     தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்…!

(குர்ஆனும் அறிவியலும்)

உடல் இல்லாமல் மனிதன் இல்லை ஒவ்வொரு மனிதனுக்கும் இதயம், கண்கள், கல்லீரல், கணையம் போன்ற விலைமதிக்க இயலாத உறுப்புகளை சரியான இடத்தில் பொருத்தியவன் படைத்த இறைவனாகிய அல்லாஹ் தான். எனவே ஒரு மனிதனுக்கு உடல் ரீதியாக ஏற்படும் நோய்களுக்கு உரிய மருந்தையும் அவனே படைத்துள்ளான் மேலும் நோய்க்கான மருந்து மனிதனுடைய சிந்திக்கும் திறமை மற்றும் கண்டு பிடிக்கும் ஆற்றலை பொருத்தே அமைகிறது. ஆனால் மனிதர்களாகிய நாம்தான் இந்த மருந்துகளை தேடுவதில் ஆர்வம் காட்டுவதில்ல.   இதோ அல்லாஹ் அருள்மறை குர்ஆன் மூலமாக மனிதர்களாகிய நமக்கு மருந்துகளை பற்றி ஆராய்ச்சி செய்ய அழகான வழிவகைகளை போதிக்கிறான் இதை சற்று உண்ணிப்புடன் கவனித்துப் பாருங்கள்.  

Continue reading

பெண்களின் இத்தா என்பது இருட்டறையா..?

                                      தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்…!

இத்தா என்றால் என்ன?
இத்தா என்றால் காத்திருத்தல் அல்லது கணக்கிடுதல் என்பது கருத்தாகும். அதாவது கணவனை இழந்த பெண்கள், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மறுமணம் செய்வதற்காக திருமணம் செய்யாது காத்திருக்கும் காலமாகும்.

Continue reading