குலசேகரபட்டினத்தில் விண்வெளி ஏவுதளம்


ஏமாளிகளாகப் போகிறோமா ? ஏவுதளத்தைத் தமிழகத்தில் அமைக்கப் போகிறோமா ?

குலசைக்கு ஏற்பட்டுள்ள நிர்ப்பந்தம்

பெரியார் ஈ.வே.ரா.வின் வலதுகரமாகத் திகழ்ந்த தெய்வநாயகம் என்பவரைத் தமிழகத்திற்குத் தந்த ஊர் குலசேகரன் பட்டினம். பெயரில் கூட தெய்வம் இருக்கக்கூடாது என்பதற்காகத் தன் பெயரை, S.D.நாயகம் என்று வைத்துக்கொண்டார். பெரியார் தொண்டராக அல்ல தோழராக விளங்கினார். இவரது கல்விப் பணிக்குச் சான்றாக குலசை வள்ளியம்மாள் ஆசிரியைப் பயிற்சிப்பள்ளி, பெண்கள் உயர்நிலைப்பள்ளி, சென்னை குண்டூர் சுப்பையா மகளிர் மேல்நிலைப்பள்ளி, தியாகராயநகர் ஆண்கள் மேல்நிலைபள்ளி போன்றவை இன்றும் சான்றாகத் திகழ்கின்றன. தன் வருவாய் முழுவதையும் கல்விக்காகவும், பொதுப்பணிக்காகவும் செலவிட்டவர் எஸ்.டி.நாயகம். கல்விக்கண் தந்த அவரது பெயரால் குலசைவாழ்ப் பெருமக்கள் இன, மத, மொழி, அரசியல் பேதமின்றி ஐக்கியமானால் ,ஏற்பட்டுள்ள தடைகள் நீங்கி, குலசையில் ஏவுதளம் அமைவது உறுதி.நீர் விளையாட்டுநீர் விளையாட்டுக்கள் நடத்த ஏற்ற இடம் குலசை Continue reading

ராக்கெட் ஏவு தளம் மீண்டும் கோட்டை விடுகிறதா தமிழகம்?

மீண்டும் கோட்டை விடுகிறதா தமிழகம்?

இந்தியாவில் மூன்றாவது ராக்கெட் ஏவு தளம் அமைப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு புவியியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டிலேயே மிகச் சிறந்த இடமாக தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இஸ்ரோ விண்வெளி கமிட்டியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால் திட்டம் கடந்த ஆறு மாதங்களாக இழுபறியில் நிற்கிறது. மேலும், பெரும்பான்மை ஆந்திர அதிகாரிகள் லாபகரமான இத்திட்டத்தை ஆந்திராவுக்குக் கடத்திச் செல்ல தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். Continue reading

நூறு ஏக்கருக்கு… இரண்டே வேலையாள்..

ஏக்கருக்கு 42 மரங்கள். இடுபொருட்களே தேவையில்லை.

களையெடுக்கும் கால்நடைகள்.

காவேரிராஜபுரம்… அரக்கோணம் அருகே உள்ளடங்கி இருக்கும் திருவள்ளூர் மாவட்ட கிராமம். சில பல ஆண்டுகளுக்கு முன்பு கல்லும், கரடுமாக இருந்த ஊரில், இப்போது திரும்பிய பக்கமெல்லாம் மாந்தோப்புகள் விரிந்து கிடக்கின்றன. இந்தப் பருவத்தில் Continue reading

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்:

சென்னை:”தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தையும், திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் வான்வெளி மற்றும் திரவ உந்துவிசை கல்வி நிறுவனத்தையும், அமைக்க வேண்டும்’ என, பிரதமருக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, மன்மோகன் சிங்க்கு அவர் எழுதியுள்ள கடித விவரம்:”இஸ்ரோ’ மூலம், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், இந்திய வான்வெளி தொழில்நுட்ப நிலையம் துவங்கப்பட்டது. இந்நிலையில், வான்வெளி மற்றும் திரவ உந்துவிசை விஞ்ஞானிகள் பற்றாக்குறையை சமாளிக்க, வான்வெளி மற்றும் திரவ உந்துவிசை கல்வி நிறுவனத்தை அமைக்க வேண்டிய கட்டாயம், மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இக்கல்வி நிறுவனத்தை அமைக்க தேவையான நிலம் மற்றும் வசதிகள், திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ளது. குறிப்பாக, வான்வெளி, திரவ உந்துவிசை, அதிவேக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் கட்டுவதற்கு தேவையான தொழில்நுட்பம் இங்கு கிடைக்கும். எனவே, இக்கல்வி நிலையத்தை மகேந்திரகிரியில் அமைக்க வேண்டும்.

இதேபோல், இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை, நெல்லை மாவட்டம், குலசேகரபட்டினத்தில் அமைக்க வேண்டும். இப்பகுதி, ராக்கெட் ஆய்வு நிறுவனங்களுக்கு அருகில் உள்ளது. மேலும், பூகோள ரீதியாகவும், ராக்கெட் ஏவுதளம் அமைக்க உரிய இடம். இங்கு, திறன் வாய்ந்த பணியாளர்களும் இருக்கின்றனர்.தமிழகத்தின் தென் மாவட்டங்களில், இவ்விரு நிறுவனங்களையும் அமைப்பதன் மூலம், தொழில்வளர்ச்சி இல்லாத இம்மாவட்டங்கள் பயன்பெறும். எனவே, முன்னுரிமை அடிப்படையில், இப்பணிகளை மத்திய அரசு செய்ய வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

நன்றி:தினமலர்

நட்பு எல்லைகளையும் நாடுகளையும் கடந்தது -குலசை வின்மணியார் சிந்தனைகள் !

விஞ்ஞானம் வளர வளர மனிதர்களிடம் அன்பு குறைந்து
ரோபோக்களாக மாறி வருகிறோம்.

லஞ்சம் வாங்காமல் வேலை செய்யும் அதிகாரிக்கு
வாய்விட்டு நன்றி சொல்லுங்கள்.

பணத்தை எதிர்பார்த்து பழகும் நண்பர்களை விட அன்பை
எதிர்பார்திருக்கும் நண்பர்களை அருகில் வைத்திருப்பது
நல்லது.

தினமும் படிக்கும் படிப்பும் ஒரு தவம் தான் நன்றாக
செய்து முடித்தால் வெற்றி நிச்சயம்.

ஆட்சிக் காலத்தில் தவறு செய்பபனை வீழ்ச்சி காலத்தில்
இறைவன் தண்டிக்கிறான்.

மது அருந்துபவர் தன்னை மட்டுமல்ல தன் குடும்பத்தினருக்கும்
மிகப்பெரிய துரோகம் செய்கிறார்.

நம் அருகில் இருப்பவர் நம்மை பற்றி குறை கூறினால் அவரிடம்
இருந்து விலகி இருப்பது நமக்கு நன்மையைத் தரும்.

வெற்றியிலும் தோல்வியிலும் ஒரே மனநிலையில் இருக்கப்
பழக வேண்டும். பிறரை குறை கூற கூடாது.

அடுத்தவர் துன்பப்படுவதை பார்த்து மனதுக்குள் வருத்தப்படும்
மனிதன் கோவிலுக்கு செல்ல வேண்டியதில்லை.

பலன் எதிர்பாராமல் சில நேரங்களில் நாம் செய்யும் உதவி
என்றாவது ஒரு நாள் நமக்கு பலனைக் கொடுக்கும்.

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்.

 


 
இன்று நாம் பெற்றிருக்கும் சுதந்திரம் நம் முன்னோர்களின்  தியாகத்தால் கிடைத்ததுதான். நாம் பள்ளிக்கூட பாட புத்தகங்களில் சுதந்திரத்திற்க்காக போராடிய சில தலைவர்களைப் பற்றி படித்திருக்கிறோம்.ஆனால் நாம் பள்ளியில் படிக்காத, நமக்கு தெரியாத பலர், சுதந்திர போராட்டத்தில்  ஈடு பட்டு, துன்பப்பட்டு, அதில் சிலர் தங்கள் இன்னுயிரையும் ஈந்துள்ளனர்.
சுதந்திர போராளிகளை அன்று அடைத்து கொடுமைபடுத்திய  இடம் அந்தமான் சிறை. இங்கு போராளிகள் நுகத்தடியில் மாட்டிற்கு பதிலாக விலங்கிடப்பட்டு, செக்கிழுக்க வேண்டும். காலை முதல் மாலை வரை செக்கிழுத்து அன்றைய கணக்குப்படி தினம் 25 பவுண்ட் எண்ணை எடுக்க வேண்டும்.ஓய்வு எடுக்காமல் செக்கு இழுத்தால்தான் இவ்வளவு எண்ணை எடுக்க முடியும். 25 பவுண்டிற்கு  எண்ணை குறைந்தால்  முதுகுத்தோல் கிழியும் அளவிற்கு கசையடி கிடைக்கும். சில சமயம்  படுக்க விடாமல், உட்காரவிடாமல் கை கால்களை அகட்டி வைத்து இரும்பு சங்கிலி மாட்டப்படும்.
புதுச்சேரியில் அரவிந்தாஸ்ரமம் அமைத்த அரவிந்தரை நமக்கு தெரியும்.அவர் ஆஸ்ரமம் அமைத்து, ஆன்மிக  வாழ்வில் ஈடுபடும் முன் வங்காளத்தில் அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். அப்போது அவர் பெயர் அரவிந்த கோஷ். இவர் தீவிரவாதத்தின் மூலமே சுதந்திரம் பெற முடியும் என நினைத்து போராடியவர்.
இவர் மட்டுமல்ல இவரது குடும்பமே, சுதந்திரத்திற்காக போராடிய குடும்பம்தான். அப்போது ஆங்கிலேயருக்கு எதிராக, வங்கத்தில் நடந்த அலிப்பூர் சதியில்  பங்கு பெற்றதற்காக பாரிந்தரர், உல்லாஸ்கர், ஹேமசந்திர  தாஸ் மூவருக்கும் கடும் தண்டனை விதிக்க பட்டது. மூவரும் கொடுஞ் செயல்களுக்கு பெயர் போன  அந்தமான் சிறையில் அடைக்க பெற்றனர். அங்கு நடந்த சித்திரவதை தாங்காமல் உல்லாஸ்கருக்கு பைத்தியம் பிடித்து விட்டது இவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு கீழ்பாக்கம் மன நல மருத்த்துவ மனையில் சேர்க்கபட்டார்
ஆங்கிலேயருக்கு எதிராக போராடியதற்காக பஞ்சாபில் கர்தார்சிங் என்பவருக்கு  தூக்கு தண்டனை வழங்க பட்டது. பொதுவாக தூக்கு தண்டனை விதிக்க பட்டவர்கள் துக்கிலிடுமுன் கவலைப்பட்டு  உண்ணாமல் உறங்காமல் இருந்து  மெலிந்து விடுவார்கள் .ஆனால் இவர் நாட்டிற்காக உயிர் விடுகிறேன் என்பதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 19 தான்.தூக்கிலிடப்ப்படும்வரை  சிறையில் ஆடிப்பாடி சந்தோசமாக இருந்தார். இதனால் இவர் 16.9.1916 அன்று தூக்கிலடப்படும்போது இவர் எடை அப்போதைய  கணக்குப்படி 12 பவுண்ட் கூடி இருந்தது. வாழ வேண்டிய இளம் வயதில் நாட்டுக்காக உயிர் விடுவதில் எத்தனை மகிழ்ச்சி பாருங்கள்.
சிட்டகாங் புரட்சியில் கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்க பட்டவர். சூர்யாசென். இவரை 12/04/1934ல் தூக்கிலிடும்போது வந்தேமாதரம் என முழக்கமிட்டார். வந்தே மாதரம் என சொல்லாதே என சிறை அதிகாரிகள் அவரை அடித்தனர். அவர் மறுத்து, மீண்டும் கோஷமிட ஆங்கிலேய அதிகாரிகள் எல்லோரும் சேர்ந்து அவரை அடித்து, அவர் மயங்க, மயங்கிய நிலையிலேயே தூக்கிலிட்டனர்,
30/10/1928  சைமன் கமிஷன் எதிர்த்து லாகூரில் லாலாலஜபதிராய்.  ஊர்வலம் நடத்தினார். சாண்டர்ஸ் என்ற ஆங்கிலேய அதிகாரி ஊர்வலத்தின் மீது, பயங்கர அடக்குமுறையை ஏவினான். லாலா லஜபதியை சுற்றி நின்று சாண்டர்ஸ் தலைமையில் ஆங்கிலேயர் தாக்கினர்.  இதனால் பலத்த காயமுற்ற லாலா 17/11/1928 ல் மரணமடைந்தார். இதற்கு பழி வாங்கும் விதமாக 17/12/1928,ல் சாண்டர்ஸ் பகத்சிங்கால் சுட்டு கொல்லப்பட்டான்.
சில வருடங்களுக்கு பின் பகத்சிங் கைது செய்யப்பட்டு, 23/03/1931 அன்று தூக்கிLIDAPATTARலிடபட்டார்.அவர் இறந்த உடல் கூட புரட்சியை தூண்டும் என எண்ணிய ஆங்கிலேயர்கள் அவர் உடல் பாதி எரிந்த நிலையிலேயே சட்லெஜ் நதியில் எறிந்து விட்டனர்.
வங்காளத்தில் வைஸ்ராய். ஹார்டிஞ்ச் பிரபு மீது குண்டு வீசியவன் தினநாத் என்பதை அறிந்த ஆங்கிலேயர்கள் அவரை கைது செய்ய முயன்றனர்.ஆனால்  குறிப்பாக அவர் யார் எனத் தெரியவில்லை. ஆகவே தினநாத் என்ற பெயர் கொண்ட எல்லோரையுமே வங்காளத்தில் கைது செய்து அடித்து துன்புறுத்தி விசாரித்தனர். ஒரு கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் தினநாத் என இருப்பதாக அறிந்து  அந்த குடிசையில் சென்று தேடியபோது, ஆண்களே இல்லை.அங்கு இருந்த பெண்ணிடம் தினநாத் எங்கே என கேட்டபோது  இவன் தான் தினநாத் என தன் இடுப்பில் இருந்த ஒரு வயது பையனை காண்பித்தாள். போலிசார் அசடு வழிந்து திரும்பினர்.
இந்தியாவில் ஆன்மிக புரட்சி செய்தவர் சுவாமி விவேகானந்தர். இவரின் தம்பி பூபேந்திரநாத் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து புரட்சி செய்தவர். தமிழ் நாட்டில் சுதந்திர கனல் எழுப்பிய சுதேச மித்திரன்போல் வங்காளத்தில் விடுதலை முழக்கமிட்ட இதழ். “யுகாந்தர் ஆகும். இதன் ஆசிரியர் குழுவில் ஒருவர்தான் விவேகானந்தரின் தம்பி. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக எழுதியதற்காக பூபேந்திரநாத்திற்க்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தது
தமிழ் நாட்டிலும் சுதந்திர போராட்டத்தில் சாதாரண மக்கள் தீவிரமாக ஈடுபட்டனர். வெள்ளையனே வெளியேறு என மதுரை விளக்குதூண் அருகே முழக்கமிட்ட சொர்ணம்மாள், லக்ஷ்மி என்ற இரு பெண்களையும், போலீசார் மிருகத்தனமாக தாக்கி நிர்வாணமாக வீதியில் விட்டனர். இதற்கு முக்கிய காரணமாக இருந்தவன் இன்ஸ்பெக்டர் தீச்சட்டி கோவிந்தன் என்பவன். இதற்குபழி வாங்கும் விதமாக மதுரை  தேசிய தீவிரவாதிகள்  இந்த இன்ஸ்பெக்டரின் முகத்தில் ஆசிட் வீசி அவன் முகத்தை உருக்குலைய செய்தனர்.
சுதந்திர போராட்டத்தில் திருவாடனை பகுதி மக்கள் தீவிரமாக ஈடுபட்டனர். அதற்காக அவர்கள் பெற்ற துன்பமும் அதிகம். இப்பகுதியில் சுதந்திர போராட்டதிற்கு தலைமை வகித்தவர்கள் செல்லத்துரை, முனியப்பன், சிவஞானம் என்ற மூவர். இவர்கள் தலைமையில் திரண்ட மக்கள் கூட்டம், திருவாடனை சிறையை உடைத்து, சின்ன அண்ணாமலை போன்ற வீரர்களை விடுவித்தனர். அதன்பின் இப் போராட்ட கூட்டம் தேவக்கோட்டையை   நோக்கி சென்றது. அங்கு ஆங்கில அரசின் அலுவலகங்கள் அனைத்தும் அடித்து நொறுக்க பட்டன. செய்தி கேட்டு,  வால்ட் என்பவன் தலைமையில் வந்த போலிஸ், மக்களை நோக்கி கண் மூடித்தனமாக சுட்டது. அன்று அங்கு 50 பேர் இறந்தனர், 100 பேர் படுகாயமுற்றனர். நம்மால் மறக்கப்பட்ட தென்னாட்டு ஜாலியன்வாலாபாக் இது.  ஆங்கிலேயர்  சிவஞானத்தையும்,  முனியப்பனையும் சுட்டு கொன்றனர். செல்லத்துரை மட்டும் தப்பி ஓடி தலைமறைவானார். விடுமா ஆங்கிலேய அரசு. அவர் வீட்டை அடித்து நொறுக்கியது. அவருக்கு சொந்தமான நிலங்களில் பயிர்களை, மரங்களை அழித்தது. செல்லத்துரையின் தம்பியை பிடித்து, அவர் உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதைமேல் ஊர்வலம் விட்டது. ஒரு சவர தொழிலாளியை அழைத்து அவருக்கு மொட்டை போட சொன்னது. மறுத்த அவரை தாக்கியது ஆங்கில அதிகாரவர்க்கம், அப்போதும் மறுத்த அந்த தொழிலாளி, அதே சவர கத்தியால் தன் கழுத்தை அறுத்து கொண்டார்.
 இப்பகுதியில் ஒரு   தேச பக்தரை தேடி அவர் வீட்டுக்கு போலிஸ் சென்றது. அவர் தலை மறைவாகி விட்டதால், அவர் மனைவி காளியம்மாளின் கையிலிருந்த குழந்தையை பிடுங்கி வீசினான், விசாரிக்க சென்ற “லவட் என்ற ஆங்கிலேயன். சத்தம் கேட்டு மக்கள் அங்கு வந்தனர். அதில் ஒருவனை அழைத்து அந்த பெண்ணின் சேலையை உருவ சொன்னான்.அவன் மறுத்தான்.அவனுக்கு  அடி கொடுத்தவுடன், அவன் தாங்க முடியாமல் அப பெண்ணின் சேலையை உருவினான். அடுத்து சேலையை உருவினவனையே அப் பெண்ணை கட்டி பிடிக்க சொன்னான் லவட். ஐயா அவள் என் தங்கை முறை என மறுத்தான்.மீண்டும் அவனுக்கு லத்தி அடி. அவன் அடி தாங்காமல் அதையும் செய்தான். அது மட்டுமல்ல அந்த பெண்ணையும் பருவம் அடையும் வயதில் இருந்த அவள்  மகளையும்  காவல் நிலையம் அழைத்து சென்று பல நாள் வைத்திருந்து கெடுத்தான். அந்த லவட் என்ற அயோக்கியன்.
ராமசாமி என்பவர் இப்பகுதி சுதந்திர போராட்ட வீரர். அவரை கைது செய்த அரசு, அதோடு விட்டு விடாமல், கமலாம்பாள், முனியம்மாள் என்ற அவரின் இரு மனைவிகளையும் காவல் நிலையம் அழைத்து வந்தது.  இளையவள் கையில் ஒரு விளக்குமாறு கொடுத்து, அதை சாணி கரைத்த தண்ணீரில் முக்கி, மூத்த மனைவியை அடிக்க சொன்னார்கள்.அவள் மறுக்க அவள் சேலையை உருவ போலிஸ் முற்பட்டது. அதைக்கண்ட மூத்தவள் தன்னை அடிக்குமாறு இளையவளை கேட்டு கொண்டாள். இளையவளும், சாணி கரைத்த விளக்குமாற்றால் மூத்தவளை அடித்தாள். சற்று நேரம் கழித்து, மூத்தவளிடம் அதேபோல் இளையவளை அடிக்க சொன்னார்கள். இருவரும் மாறி மாறி அடிப்பதைக் கண்டு சிரித்தனர், கண்ணியமற்ற ஆங்கிலேய அதிகாரிகள். அதன் பின் சில பெண்களை அடித்து அழைத்து வந்து, அவர்களை வெற்றிலை போட சொல்லி அதன் சாற்றை இருவர் மேலும் துப்ப சொன்னார்கள். பின் இருவரையும் அதே கோலத்தில் வீட்டிக்கு போகச் சொல்லி விரட்டினர்.
இன்னொரு  சுதந்திர போராட்ட வீரரின் குடும்ப பெண்களான சிட்டு, மீனா என்ற  இருவரையும் காவல் துறையினர் ஊர் பொது இடத்திற்கு அழைத்து வந்தனர்.  ஊர் மக்களையும்  மிரட்டி அழைத்து வந்து, அவர்கள் மத்தியில் இரு பெண்களையும் நிற்க வைத்தனர். கூட்டத்தில் ஒருவனை அடித்து அப் பெண்களின் சேலையை உருவச் செய்து, கட்டி அணைக்க வைத்தனர். அந்த மனிதனை அந்த பெண்களின் முதுகில் ஏறச் செய்து ஊரை சுற்ற செய்தனர்.
நாவலர் சோமசுந்தர பாரதியர்ர் என்பவர் ஆங்கிலேய அரசு பணியில் மாதம் அப்போது 1000 ரூபாய் சம்பளம் வாங்கி கொண்டிருந்தார். தூத்துக்குடியில் வ.உ.சி கப்பல் கம்பெனி ஆரம்பித்த உடன் நாட்டு பற்றால் தான் பார்த்த வேலையை ராஜினாமா செய்து கப்பல் கம்பெனியில் மாதம் 100 சம்பளத்திற்கு  மேலாளராக பணியாற்றினார்.
1927ல் பெல்காமில் காங்கிரஸ் மாநாடு நடந்தபோது சோமையாஜுலு என்ற மதுரை தேச பக்தர் சுதந்திர பிரசாரம் செய்து கொண்டு மதுரையிலிருந்து , பெல்காமிற்கு 700 கி.மீ. தூரம் நடந்தே சென்று மாநாட்டில் பங்கு பெற்றார். மாநாடு முடிந்தபின் அதே தூரம் சுதந்திர பிரசாரம் செய்து கொண்டே பெல்காமிலிருந்து நடந்தே  மதுரை வந்தார்.
பாகிஸ்தானின், வடமேற்கு எல்லை மாகாணத்தை சேர்ந்த ஜமீந்தார் ஒருவரின் மகன்  எல்லை காந்தி என அழைக்கப்பட்ட கான் அப்துல் காபர்கான். எல்லா வசதிகளோடும் வாழ வாய்ப்பு இருந்தும் , அவற்றை மறுத்து, தன்னைத்தானே எளிமையாக்கி கொண்டு  சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் அவரை தலைவராக தேர்ந்தெடுக்க 1934 ல் சிலர் ஈடுபட்டபோது தொண்டனாகவே இருக்க விரும்புவதாக கூறி வந்த பதவியை மறுத்தார். தான் வாழ்ந்த வட மேற்கு மாகாணத்தை பாகிஸ்தானோடு சேர்க்க கூடாது , இந்தியாவோடுதான் சேர்க்க வேண்டும் என சொல்லியதால், பாகிஸ்தான் அரசால் 13 ஆண்டுகள் சிறையில் அடைக்க பெற்றார். சுதந்திரத்திற்குபின் இவருக்கு இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்க பட்டது. இதற்காக இந்திய அரசு விமானத்தில் இவரை வரவழைத்தது. இவரை விமான நிலையத்திற்கு வரவேற்க போனவர்களுக்கு அதிர்ச்சி. ஏன் எனில் இவர் தன்னோடு கொண்டு வந்தது ஒரு மாற்று உடை மட்டுமே அவ்வளவு எளிமை. இப்போது இதை யாரிடம் தேடுவது.
ஆஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாவடி அருணாசலத்தை, காவல் நிலைய மேஜையில் கையை விரித்து வைத்து கயிறால் கட்டி, இந்த கைதானே ஆங்கிலேயரை விரட்டுவோம் என தாளில் எழுதி ரத்த கையெழுத்து போட்டது எனக் கூறி, விடாமல் தொடர்ந்து லத்தியால் அடித்ததனர்.. அவர் கை எலும்புகள் அனைத்தும் நொறுங்கி கை முடமாகி விட்டது.
திருச்செந்தூர்-குலசேகரபட்டிணம் பகுதியில் மேகநாதன் என்பவர் தலைமையில் சுத்ந்திர போராட்டம் தீவிரமாக நடந்தது. பெற்றோர் தங்களது ஒரே பையனுக்கு பெண் பார்க்க முயலும் போது சுதந்திரம் வரும் வரை திருமணமே செய்ய மாட்டேன் என மேகநாதன் மறுத்து விட்டார்.சுதந்திரம் வந்தபோது, திருமண வயது கடந்து விட்டதால் திருமணமே செய்யவில்லை.
  
சுதந்திரத்திற்காக முகம் தெரியாத, முகவரி இல்லாத, பலர் உயிர் துறந்து உள்ளனர். பலர் சிறையில் கொடுமைகளை அனுபவித்துள்ளனர் .பலர் சொத்து, சுகம் பதவிகளை இழந்துள்ளனர்.வாழ வேண்டிய வயதில் இளைஞர்கள் பலர்  உயிரை இழந்துள்ளனர். பலர் தங்கள் இளம் வயதை சிறையில் கழித்து உள்ளனர்.தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை இழந்துள்ளனர்.பெண்கள் தங்கள் கணவர்களை இளம் வயதில் இழந்துள்ளனர்.. ஆயிரக்கணக்கான பெண்கள் கற்பை இழந்துள்ளனர், அவமானபடுத்த பட்டுள்ளனர்.
இளைஞர்களே தெரிந்து கொள்ளுங்கள்
சுதந்திரம் ஒன்றும் சும்மா கிடைக்கவில்லை./ தொகுப்பு.குலசை.Aஆ.கந்தசாமி

மணத்தக்காளி:


மணத்தக்காளி:

வாய்ப் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்சனைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும். 100 கிராம் கீரையில் ஈரப்பதம் 82.1%, புரதம் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புகள் 2.1%, மாவுச்சத்து 8.9% உள்ளன.

நோயைக் குணமாக்கி உடலின் கட்டுமானப் பகுதியைப் பார்த்துக் கொள்ள 410 மில்லி கிராம் கால்சியமும், மூளை வளர்ச்சி, மனத்திற்கு சுறுசுறுப்பு ஆகிய அளிக்க 70 மில்லி கிராம் எரியம் (Phosphorus), நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் 11 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’யும் இக்கீரையில் உள்ளன. மூலநோய்க்கும் குடல் பிரச்னைக்கும் இந்த கீரை நல்ல மருந்து.

மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்கு தொண்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும்.

அவற்றைக் குணப்படுத்தியும் விடும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை. சமைத்து சாப்பிடும் போது கசப்பு குறைவாய் இருக்கும். நீர்க்கோவை நோய் மகிச்சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது.

இக்கீரையைக் கசாயமாய் அருந்தலாம். அல்லது பருப்பு சேர்த்து மசியல், பொரியல் என்று சாப்பிடலாம். கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம். மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலும் நீர்க்கோவை நோய் விரைந்து குணமாகும்.

கீரையைப் போலவே பழமும் சக்திவாய்ந்த மருந்தாகும். காசநோயாளிகள் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும். நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது. புதுமணத்தம்பதிகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள இப்பழம் போதும்.

இப்பழம் உடனே கருத்தரிக்கச் செய்யும். உருவான கரு வலிமை பெறவும் இப்பழம் பயன்படுகிறது. பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது. ஆண்கள் தாதுபலம் பெற இப்பழத்தை அவசியம் சாப்பிட வேண்டும். தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம்.

உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப் பெறலாம். நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்தி வரவேண்டும். மணத்தக்காளிக் காயை வற்றல் போடலாம். வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கிறது.

குலசை.A.சாமி

பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்!

பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி! ! ! !

a1

. . . . . . . . . . . .இதனை முழுமையாக படிக்கவும். படித்த பின் இதனை மற்றவர்களுக்கும் அதிகம் தெரியப்படுத்தவும்

1898 ல் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மம்மி 3000 ஆண்டு பழமை மிக்க அன்றைய எகிப்தை ஆண்டு வந்த இரண்டாம் ரம்சீஸ் என்ற ஃபிர்அவ்னின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. தொல் பொருள் ஆராய்ச்சிக்கு தனி முக்கியத்துவம் அளித்து வந்த ஃப்ரான்சு நாடு அந்த உடலை ஆராய்ச்சி செய்வதற்காக எகிப்திடம் கேட்டு வாங்கியது.மருத்துவ அறிவியல் துறை ஆய்வாளரான டாக்டர் மோரிஸ் புகைல் தலைமையிலான குழு அவ்வுடலை ஆய்வுக்கு உட்படுத்தியது. உடலில் படிந்திருந்த உப்பின் துணிக்கைகளை வைத்து இது கடலில் மூழ்கி இறந்தது என்ற முடிவுக்கு வந்தனர். ஆய்வின் முடிவில் அவ்வுடல் மூவாயிரம் ஆண்டு பழமையான எகிப்தை ஆண்ட மன்னனின் உடல் என்று கண்டறியப்பட்டது ! அந்நேரம் பாதுகாக்கப்படுவதாக இறைவன் வாக்களித்திருக்கும் ஃபிர்அவ்னின் உடல் பற்றிய பேச்சு சிந்தனையாளர்கள் மத்தியில் எழ ஆரம்பித்தது. இது பற்றிய செய்தி மோரிஸ் புகையின் கவனத்துக்கும் வந்தது. 1898 ல் கண்டெடுக்கப்பட்ட மம்மியைக் குறித்து 1400 வருடங்களுக்கு முன்பே கூறப்பட்டதா? இது எப்படி சாத்தியமாகும்? என்று சிந்தனை செய்தார் மோரிஸ் புகைல்.

சிந்தனையில் மோரிஸ் புகைல்!

திருக்குர்ஆன் கடலில் மூழ்கி இறந்த பின்னர் ஃபிர்அவ்னின் உடல் பாதுகாக்கப்படும ் என்று பிரகடனம் செய்கிறது. தோரா மற்றும் பைபிளின் பழய ஏற்பாடும் மோசேயின் காலத்தில் இஸ்ரவேலர்களைக் கொடுமைப் படுத்திய பர்வோன் மன்னனைப் பற்றியும் இறுதியில் அவன் கடலில் மூழ்கி இறந்தான் என்றும் கூறுகிறது. இதோ என் முன்னாலிருப்பது அக்காலத்தில் இறந்து விட்ட உடல் அல்லவா? என் ஆராய்ச்சியின் மூலம் நான் அறிந்திருக்கும் முடிவை 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது (ஸல்) எவ்வாறு அறிந்து கொண்டார்கள்? பைபிளில் தேடினார்மோரிஸ் புகைல். பர்வோன் மன்னனின் முடிவைப் பற்றி யாத்திராகமம் இவ்வாறு கூறுகிறது.

ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில்பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. (யாத்திராகமம் 14 :28)

இவ்வுடல் பாதுகாக்கப்படும ் என்பதற்கான எந்தக் குறிப்பையும்பைபிள் வழங்கவில்லை.

ஆய்வுக்குப் பின்னர் பர்வோன் மன்னனின் உடல் விலை உயர்ந்த கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டு தனி மரியாதையுடன் எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மோரிஸ் புகைல் சிந்தனையில் ஆழந்தார்! இவ்வுடல் பாதுகாக்கப்படும ் என்றகுர்ஆனின் செய்தி அவரை சிந்திக்கத் தூண்டியது. இதே வேளையில் தான் சவூதி அரேபியாவில் மருத்துவ அறிவியல் சம்மந்தமான ஒரு மாநாடு நடை பெற்றது. மோரிஸ் புகைல் அதில் கலந்து கொண்ட போது தான் கண்டு பிடித்த உண்மையையும் தண்ணீரில் மூழ்கி இறந்த பின்னர் பாதுகாக்கப்பட்ட உடலைக் குறித்தும் இஸ்லாமிய அறிஞர்களிடம் கலந்துரையாடினார ்.அப்போது அங்கிருந்த அறிஞர்களில்ஒருவர் திருக்குர்ஆனைத் திறந்துகடலைக் கடந்து செல்லும் இஸ்ரவேலர்களைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற ஃபிர்அவ்ன் மன்னன் மூழ்கடிக்கப்பட் டதையும் அவனது உடல் பின்வரும் தலைமுறைக்கு ஓர் அத்தாட்சி என்ற நிலையில் பாதுகாக்கப்படும ் என்றஇறைவனின் பிரகடனத்தை வாசித்துக்காட்டினார். அவ்வசனம்
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள ்”
(அல்-குர்ஆன் 10: 92)

இவ்வசனம் மோரிஸ் புகைல் அவர்களிடம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அங்கு கூடியிருந்தவார் களுக்கு முன்னால் அவர் அறிக்கையிட்டார் ! அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹ்! வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்!
கெய்ரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட மம்மிகளில் ஃபிர்அவ்னின் உடல் மட்டும் வித்தியாசமானதாக உள்ளது. மற்றவை ரசாயன திரவங்களைக் கொண்டும் துணிகளில் பொதிந்தும் வைக்கப்பட்டிருக ்கும் போது ஃபிர்அவ்னின் உடல் மட்டும் அப்படியே பாதுகாக்கப்படுக ிறது! திருக்குர்ஆனின் அறைகூவலை உண்மைப் படுத்திக் கொண்டிருக்கும் இந்த சாட்சியைக்கண்கூடாகக் கண்ட பின்னரும் மக்களில் பெரும்பாலோர் இன்னும் உறங்கிக் கொண்டுதான் உள்ளனர். திருக்குர்ஆனின் கூற்று எவ்வளவுஉண்மை!

”நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப் பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள ்” (அல்-குர்ஆன் 10:92)

Engr.Sulthan

பல் மருத்துவருக்கோர் பாராட்டு!

புன்னகையை தொலைத்த எனக்கு

புதிய முகம் தந்ததினால்-

அன்னையானாய் நீ எனக்கு!

பல் போனால் சொல் போகும்!

என் தமிழ் சொல் காத்த

பழநீ(யின்) குமரா!

விதியென்று வரவில்லை

வேறு வழியின்றி வரவில்லை

நீண்ட வழி கடந்து

அறிந்தே வந்தேன்!- உன்

ம(ரு)கத்துவம் தெரிந்தே வந்தேன்!

என் சாண் உடம்பின்

அழகு முத்துப் பந்தல்

தோரண வாயில்-சீர் படுத்தி

எனை சிரிக்க வைத்த கலைஞனே!

நற் பிறப்பின் நாயகனே!- எங்கள்

பற்களின் காவலனே! நீ வாழி!

ஊருக்கு உழைப்பதில் துணை நிற்கும்

உன் துணைவி! எழில் மகள்! தமிழ்

குல மகள் வாழியவே!

என்ன தவம் செய்தார் இவன் தந்தையென

நாடு போற்ற நீடு வாழ வாழ்த்துகிறேன்!

எங்கள் பல்லாண்டு (பல்+ஆண்டு ) -நீ

பல்லாண்டு வா!ழ்க! வளமுடன்!

என்றும் எந்தன் சிரிப்பினில்

தெரிவதெல்லாம் உன் முகமே!

குலசை சுல்தான்

 

கண்ணீர் பூக்களால் ஓர் கவிதாஞ்சலி

 

பாரதி இல்லம் விட்டு

பறந்து போனது பாசப் பறவை!

படைத்தவன் மடி தேடி!

மஹாராணி உன் ஊர்க்கோலம்…

மல்லிகைத் தேர்க் கோலம்..

காணாமல் போனவன் நான்!

அரை நூற்றாண்டு ஆகியும் கூட

நேற்று வாழ்ந்தாற் போல்

நெஞ்சில் சில நினைவுகள்

நிழலாடுகின்றன இன்றும்….

 

உயிர் தந்த உறவே!.

உன் பெருமை ஒரு வரியில்

சொல்ல இயலுமோ!

என் கவியில் உனை வடிக்க

வார்த்தைகள் இல்லை என்னிடம்!

 

கவிக்கு இலக்கணம் பொய்யுரை!-

என் கவிதாஞ்சலி

இலக்கணம் மறந்த மெய்யுரை!

 

தாய் எனும் மந்திரச் சொல்

இல்லையெனில்

என்றும் என் கவிதை சூனியந்தான்!

 

எந்த தாய் மறைந்தாலும்– என்

இதயம் அழுகிறதே?.ஆம்

எல்லாமே என் தாய் தானே!

 

காணிக்கை கேட்காத

தெய்வம் நீ!

உன் தோட்டத்தில் தான்

எத்தனை மலர்கள்?

எத்தனை நிறங்கள்?

எத்தனை குணங்கள்!

 

தாய் போல் அரவணைக்க

தரணியில் யாருண்டு!

தடைக்கல்லில் இடறுகையில்

படிக்கல்லாய் நீ இருந்தாய்!

 

’அ’ படிக்கும் முன்னே

அம்மாவை படித்தவன் நான்!

உயிர் எழுத்தின்

உண்மைப் பெயர் அம்மா!!

அம்மாவின் கருவறை-நான்

இன்னொரு முறை வாழத்-

துடிக்கும் புனித அறை!

 

என் நினைவில் வந்து வந்து

போகுதம்மா உன் முகம்!

இமைகளில் சிறை பிடிக்க

இயலவில்லை-சிதறி

விழுகிறது என் கண்ணீர்!

 

தும்பை பூ சேலை கட்டி

தூயவளே நீ படைத்த

அமுதுண்டு மகிழ்ந்தவன் நான்!

 

பாசமெனும் ஒற்றை சொல்லுக்காக

பல படிகள் ஏறி தோற்றவன் நான்!

என் நிலை அறிந்து ஆறுதல் கூற

யாருமில்லை இன்று எனக்கு!!

 

மரணம் ஓர் மாயச் சொல்!

மரணத்தை படித்தவன் நான்!

மரணம்…

காலத்தின் ஞானம்!

தூக்கத்தின் தொடர்ச்சி…

மரணம்…

ஒரு வழிப் பாதை…

முக்காலம் சொல்லித் தரும்

சமதர்ம தத்துவம்!

மரணம்…

மன்னிக்க முடியாத

இயற்கையின் தண்டனை..

 

இன்று நீ!!…-நாளை??

காத்திருக்கும் பட்டியலில்

நாங்கள்?? -இது

இறைவனின் நியதி!

 

சுவர்க்கத்தின் வாயினில்

துயில் கொள்ளும் அன்னையே!

காத்திரு தாயே! காத்திரு!

நிச்சயம் நான் அங்கு வருவேன்

ஏனெனில்…

தாயின் காலடியில் தான்

என் சொர்க்கம்!!

கண்ணீர் பூக்களால்

ஆயிரம் கோடி அர்ச்சனைகள்!

வேரின் பெருமையை-இனி

விழுதுகள் பேசட்டும்!

 (நண்பரின் அம்மா மறைவுக்கு எழுதியது)

அன்பு மகன்,

குலசை சுல்தான்.

 

அம்மா!

அறுபது வயதுக் குழந்தை ஒன்று
அழுகிறது உனைத்தேடி
உன் உயிர் தந்து
என்னுயிராகிவிட்ட தாயே !
அன்று உன்னருகிருந்து
இன்று உனையும்
இழந்து தனிமரமாய்
குளிருக்குள் உன் வடு
தேடும் பறவையானேன் !

சிறு பிள்ளை தன் தாயிழந்த
துயர் எனை வாட்டுகிறது
கோழிக் குஞ்சுகளாய்
உன்னுள் நானிருந்த
நாட்களைத் தேடுகிறேன் !
இறுதி வரை உன் முகம்
காணாது போனதற்காய்
ஏங்குகிறேன்,! .

எனக்காக உன்னலமிழந்து
எனைக்காத்த தாயே !
நீ இருக்கும் வரை எனை
அணுகா வாழ்வின் துயர்
இன்று என்னிருப்பும் கேள்வியாகி
சுமையாகிப் போனது!
என் சோகங்களின்
சுமை தாங்கி நீ

எப்புத்தகத்திலும் அச்சிலில்லை
உன்னிடம் நான் கற்றவைகள்
உன்னுள் உருகிப்போனது
என் கனவுகள்
உடல் கூடாய் உலவுகிறேன்
உன் நினைவில்!

உன் இனிய கனவுகளை
என்னால் நிஜமாக்க முடியவில்லை
இருப்பினும் நீயும் உன்
நினைவுகளும் என்னுடன் அம்மா.
உன் உள்ளம் வேண்டி
நிற்கிறேன் தாயே!– இன்றும்
அறுபது வயதுக் குழந்தை ஒன்று
அழுகிறது உனைத்தேடி!

வேண்டும்…..

வேண்டும்…..

கவிதை ஒன்று வேண்டும் – தமிழ்க்
கவிதை ஒன்று வேண்டும் – நான்
செவிமடுத்து மனம் சிலிர்க்கும் வண்ணமொரு
சின்ன கவிதை வேண்டும்!

சோலை ஒன்று வேண்டும் – அங்கு
தூய தென்றல் வேண்டும் – இளங்
காலை தோறும் தமிழ்ப்பண் வழங்கி

எனைக் கருணை செய்ய வேண்டும்!

குலசை சுல்தான்

நான் யார்? நான் யார்?

நான் யார்? நான் யார்?
எனக்குக் கீழே இருப்பவர்கள் மட்டுமே
என்மேல் பொறாமைப்பட முடியும்,
அல்லது என்னை வெறுக்க முடியும்.
என்னை யாரும் வெறுத்ததுமில்லை,
என்மேல் யாரும் பொறாமைப்பட்டதுமில்லை.
நான் யாருக்கும் மேலே இல்லை.

எனக்கு மேலே இருப்பவர்கள் மட்டுமே
என்னைப் புகழ முடியும்,அல்லது இகழ முடியும்.
என்னை யாரும் புகழ்ந்ததுமில்லை,
என்னை யாரும் இகழ்ந்ததுமில்லை.
நான் யாருக்கும் கீழே இல்லை.
அவன் ஒருவனைத் தவிர.அகிலத்தின்
ஏகத் தலைவன் அவனைத் தவிர!

கனவுகளும் ஆசைகளும் இல்லாத
மிகச் சிறந்த மனிதனாக
இருப்பதைக் காட்டிலும் நான்
கனவுகளும்அவற்றை அடைய
ஆசைகளும் கொண்ட மிகச்
சாதாரண மனிதனாக இருப்பேன்.
ஒவ்வொரு மனிதனும் இரண்டு மனிதர்கள்.
ஒருவன் இருளில் விழித்திருக்கிறான்.
இன்னொருவன் வெளிச்சத்தில் உறங்குகிறான்.

வீழ்வதில் வெட்கப்படாதவன் -மீண்டு
எழுவதில் வெற்றி காண்பவன்.- தன்
தனித்துவத்தை இழக்காதவன் – தனி
மனித நேயத்தை காப்பவன்.
அலைகளின் பேரோசையில்
அமைதியைத் தேடுபவன்.
அழகினிலும் அழகை ரசிப்பவன்.
நாத்திகனாய் இரு(ற)ந்தவன் – இன்று
நாயனை நம்புபவன்..
படைப்பினங்களை வணங்காமல்
படைத்தவனை தொழுபவன்.
தாயை நேசிப்பவன் -தமிழை சுவாசிப்பவன்

உயிர் உறவு தந்த பெற்றவரை மதிப்பவன்
உறவாட வந்த இவ்வுலகை மறப்பவன் -மறு
உலக வாழ்வை எதிர் பார்ப்பவன்.

கவிச் சோலையில் கானம் பாடுபவன்
காற்றினிலும் கவிதைத் தேடுபவன்.
உன்னால் முடியும் என்பதில் உயிரானவன்.

நான் கற்றவைகள் சில இதோ

உலகம் என்னை புடம் போட்டது- விலையாய்
உயிரைக் கேட்பது. விந்தை தான்.
வஞ்சனை எப்போதாவது
வெற்றி பெறுகிறது ஆனால்
எப்போதும்
தற்கொலை செய்து கொள்கிறது.

எங்கெல்லாம் நீ உன் சிந்தனைகளை
திருப்புகின்றாயோ அங்கெல்லாம் உன்
தனித்துவத்தை நிலைநாட்டுவதற்கு
நீ விரும்புகின்றாய்…..

குலசை சுல்தான்

குலசையில் ஒரு ஆறு!

karumeni river2

கருமேனி ஆறு

 

கருமேனி ஆறு குலசை வழியாக தவழ்ந்து மணப்பாடு அருகே கடலில் கலக்கிறது. இது தாமிரபரணி ஆற்றின் கிளை நதியாகும்.

Kulasai Railway

Kulasai Railway
??????????
This rare photo showing the Railway Time table of Tisayanvilai – Tiruchendur Route via Kulasekhara patnam in 1933.

Time tables of extinct Narrow Gauge lines in South India from Bradshaw 1933. Kulasekharapatnam Light Railway and KPM Central-Udangudi Branch. Interesting to note that the Kulasekharapatnam Light Railway had a branch line too.

K.P.M means Kulasekhara pattinam.
During my child hood at the age of 7 to 9 yrs old, I have seen the old railway track near kulasai beach(200 mts from my house).

Informations from Kulasai sulthan.